என்ன டோண்டு ராகவனுமா இப்படி என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில், ஆம் அதனாலென்ன?
அவன் வலைப்பூவை ஆரம்பித்ததே இந்த வலைப்பூவைப் பார்த்து தன்னாலும் இம்மாதிரி எழுத இயலுமா என கேட்டு கொண்டுதானே. இந்த அழகில் அப்பதிவில் நான் முதலில் பின்னூட்டம் இட்டது ஆங்கிலத்தில்தான். நான் பிறந்து 23 வயது வரை வாழ்ந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலை உள்ளடக்கிய திருவல்லிக்கேணியும், எட்டு ஆண்டுகள் படித்த ஹிந்து உயர்நிலைப் பள்ளியுமே எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகளில் முக்கியமானவை. ஒரு 18 ஆண்டுகால இடைவெளி எங்களுக்குள் இருந்தாலும் இருவருக்குமே இந்த இரண்டு விஷயங்களை பற்றி பசுமையான நினைவுகள் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது.
நாளை உலகம் அழிந்தால் என்ன செய்வீர்கள் என்றும் இன்னும் பல கேள்விகளும் கேட்ட நாட்டாமைக்கு பதில் சொன்னால் என்ன என என்னை நானே கேள்வி கேட்டு, அதே தலைப்பில் பதிவு ஒன்று போட்டேன்.
ஒரு சமயம் பலருடன் சேர்ந்து டோண்டு ராகவனும் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா என்று மனதில் யோசித்து கொண்டிருந்த கேள்விக்கான பதிலாகவும் ஒரு பதிவைப் போட்டேன். அதுவரை ஒருவித குழப்பத்தில் கேள்விகளுடன் இருந்த என் மனதின் கேள்விகளுக்கும் இதே பதிவு பதிலாக அமைந்தது.
ஆ ஊ என்றால் பாப்பான் என திட்டுகிறார்களே ஏன் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்விக்கு யோசித்து போட்டது இப்பதிவு.
சமீபத்தில் 1971-ல் என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்று கிழமையும் என்னைக் கண்டு எல்லோரும் ஏன் ஓடுகிறார்கள் என்று நான் என்னை நானே கேட்டு கொண்ட கேள்வியின் விளைவுதான். என்ன, அக்காலக் கட்டத்தில் பதிவுகள் ஏதும் இல்லாமல் போனதால் அப்பதிவு சற்றே தாமதமாக சுமார் 34 ஆண்டுகள் கழித்து வந்தது.
இம்மாதிரியே சொல்லிக்கிட்டு போகலாம். ஐயோ இதுவே போதும், இதுக்கு மேலே வேண்டாம்னு கத்தறான் முரளி மனோஹர்.
மேலும், இந்தப் பதிவே முரளி மனோஹரின் கேள்விக்காக போட்டதுதான். அவன் கேட்கிறான், “ஏம்பா டோண்டு ராகவா, ஒன்னோட கேள்வி பதில்கள் எல்லாமே நமக்கு நாமே திட்டம்னு பலர் பார்வையில் படறதா கூறுகிறார்களே?
அது சரி இந்தப் பதிவை இப்ப ஏன் போடறேன்னு கேட்டா அதுக்கு பதில் இன்றுதான் நான் பதிய ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன என்பதுதான். முதல் பதிவு 08.11.2004 அன்று போடப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை: மேலும், மூன்று லட்சம் ஹிட்டுகள் மற்றும் நான்காம் ஆண்டு பூர்த்தி ஆகியவை ஒரே நாளில் வந்தது யதேச்சையாக இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
32 comments:
வாழ்த்துக்கள் டோண்டு சார் :)
நன்றி அருண்குமார்.
மூன்று லட்சம் ஹிட்டுகள் மற்றும் நான்காம் ஆண்டு பூர்த்தி ஆகியவை ஒரே நாளில் வந்தது யதேச்சையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான்கு வருடங்கள் என்பது பெரிய விஷயம்தான்.. வாழ்துக்கள் டோண்டு சார்!! :-)
கால இடைவெளியோ நான்கு ஆண்டுகள்
வந்து பார்த்தவர்களோ 60,278
வந்தவர்களோ 3,00,280
பதிவுகளோ 610
இன்று இரட்டை சந்தோஷம்.
அடுத்த வெற்றி இலக்கு ?
நான்கு வருடங்கள்!
வாழ்த்துக்கள்!
சார்!
வாழ்த்துக்கள் ஐயா....
//நான் பிறந்து 23 வயது வரை வாழ்ந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலை உள்ளடக்கிய திருவல்லிக்கேணியும், எட்டு ஆண்டுகள் படித்த ஹிந்து உயர்நிலைப் பள்ளியுமே எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகளில் முக்கியமானவை. ஒரு 18 ஆண்டுகால இடைவெளி எங்களுக்குள் இருந்தாலும்.
//
இதில் நான் மூன்று இடத்தில் மட்டும் மாறுபடுகிறேன்...!!! (23=25, ஹிந்து=கெல்லட், 18=25)!!!
வணக்கம் ஐயா!,உங்களைப் போன்றவர்களின் பதிவுகளைப் பார்த்து,ஆர்வப்பட்டதால், சமீபத்தில் உள்ளே நுழைந்து பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல்,எழுதவும்(?!!!!!) (இந்த வார்த்தை தகாது! :) ) விரும்பியதால் ஒரு வலைப்பூவை ஆரம்பித்தவன் நான் (வால்பையனின் தூண்டுதலாலும்).என்னைப் போன்றவர்களுக்கு தூண்டுதலாய் இருந்தமைக்கு நன்றி!.வாழ்க, சொல்ல வயதில்லையாதலால் வாழ்த்தி வணங்குகிறேன்!.கலைஞர் அவர்களே!ஓ....மன்னிக்கவும் ..டோண்டு அவர்களே!(இதுதான் சார் அதிகமா முரசொலி படிக்கக் கூடாதங்கறது! :) )
வாழ்த்துக்கள். மூன்று லட்சம் பார்வைக்காக மட்டும் அல்ல..நெஞ்சில் பட்டதை உள்ளபடி சொல்லும் அந்த துணிச்சலுக்காக
Congratulations Dondu Sir. It is no mean achievement. I am glad to be part of those who have regularly visited your blog and partook your posts.
நான்கு ஆண்டு, 3 லட்சம் வாழ்த்துக்கள்
ச்சின்னப்பையன் அவர்களே, திருவல்லிக்கேணியில் எங்கு ஜாகை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முதலில் வாழ்த்துக்கள்
தம்பிக்கு கல்யாணம் அதனால
ஊருக்கு போறேன்.
நாளைக்கு இருக்கு உங்களிடம் வாதம்
ஐயா, 25 வருஷம் திருவல்லிக்கேணிதான்... இப்போ உங்க ஊருதான் ( நங்கநல்லூர்). ஆனா வேலை விஷயமா இப்போ மூணு வருஷமா அமெரிக்கா....
///இன்றுதான் நான் பதிய ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன என்பதுதான். முதல் பதிவு 08.11.2004 அன்று போடப்பட்டது.//
வாழ்த்துகள் !
ச்சின்னப்பையன் அவர்களே,
இந்தப் பக்கம் வந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும். திருவல்லிக்கேணி, நங்கநல்லூர் விஷயமாக பேசலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி கோவி. கண்ணன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான்கு ஆண்டுகள் தொடர்ந்து எழுதியது மகிழ்ச்சிக்குரியது.
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
நாலு முடிஞ்சு அஞ்சுக்கும் மூணு லட்சத்துக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
இந்த மகிழ்ச்சியை இனிமையாக் கொண்டாடுங்க.
ஐந்தாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்!
ஒருநாள் முன்பாக பதிவெழுத தொடங்கியிருந்தால் உங்கள் மனதுக்கு பிடித்த நடிகரான கமல்ஹாசனின் பிறந்தநாளோடு சேர்த்து கொண்டாடியிருக்கலாம் :-)
வாழ்த்துக்கள் !!!!!
என்னுடைய சமீபத்திய பதிவை பார்க்கவும்...
உங்கள் பதிவுகளை பற்றிய விமர்சனத்தை வைத்துள்ளேன்...
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...!!!
வாழ்த்துகள்! * 2
:)
நன்றி லக்கிலுக், துளசி, நக்கீரன் பாண்டியன், அ. நம்பி.
@செந்தழல் ரவி.
உங்கள் பதிவில் பின்னூட்டம் போட்டு விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களின் பேராற்றலை பாராட்டி அனைவரையும் கவரும் கவிதை பூமாலை
//Muse (# 5279076) said...
Respected Dondu Sir,
Instead of my earlier comment in your blog, please put the following as my comment:
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு
பலகோடி ஹிட் பெற்று டோண்டு ப்ளாக் வாழ்கவே
பன்மொழி வித்தகர் உமை கண்டு
எட்டுத் திக்கும் வெல் என்ற பழமொழி உண்டு
பலமொழி சுவையறிய பல்கும் தமிழர் வாழ்கவே !
மனம் திறக்க மடி கொண்டார் மறையவும்
மனவெறிக்கு மடிதிறப்பார் அழியவும்
மதம் மாநிலம் மக்கட்மொழி சுவருடைத்து
மனிதமும் உறவும் உயர்வென்னும்
உதிர் மயிர் ஒக்கும் மனிதருள் ஜாதியென்னும்
தமிழ்வலைப்பதிவின் வேந்தர்
முதலாம் நரசிம்ம டோண்டு வாழ்க வாழ்கவே !
கேள்வி பதில் :-
இரா. சாந்தகுமார், சென்னை49
கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்?
ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவிடாது.
வெ. கிருஷ்ணன், இடைப்பாடி
கே : "சகோதர யுத்தத்தால் பலவீனப்பட்டு விட்டோம்' – என்று
விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளது பற்றி?
ப : ஒரு விதத்தில் பார்த்தால் இது உண்மையே. "நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள்; எங்களிடையே நடக்கிற சண்டையில் அன்னியர்களான இந்தியர்கள் தலையிடத் தேவையில்லை' என்று முன்பு விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். ஆகையால், இப்போது நடக்கிற சிங்களவர்கள் – புலிகள் சண்டை, சகோதர யுத்தம்தான். அதுதான் இலங்கைத் தமிழர்களை நெடுங்காலமாகப் பலவீனப்படுத்தி வருகிறது, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு, தங்கள் சகோதரர்களுடன் (நிஜமான) பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினால், இந்தப் பலவீனம் மாறும்.
மு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல்1
கே : விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழர் கருணா, இலங்கை அரசில் எம்.பி. பதவி பெற்றிருக்கிறாரே, அவர் இப்போது தமிழர்களின் எட்டப்பனா? விபீஷணனா?
ப : முன்பு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் கைகோர்த்து, உதவிகள் பல பெற்று, இந்தியாவைப் பிரபாகரன் எதிர்த்தாரே – அப்படி சிங்கள அரசின் உதவியைப் பெற்ற பிரபாகரன் அப்போது தமிழர்களின் எட்டப்பனா, அல்லது விபீஷணனா என்பதை
முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதே முடிவை கருணா விஷயத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.
என். சண்முகம், சேலம்1
கே : "விடுதலைப் புலிகளிடம் சிக்கிய ஈழத் தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினாலே போதுமானது' என்று தமிழ் ஐக்கிய விடுதலை
முன்னணி (டி.யூ.எல்.எஃப்.) தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளது – எதைக் காட்டுகிறது?
ப : ஆனந்த சங்கரி, டி.யூ.எல்.எஃப். தலைவராக இருந்து, இலங்கைத் தமிழர்களிடையே பணியாற்றி வருபவர். பலமுறை அவர்களால் வெவ்வேறு அமைப்புகளுக்கு – பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்குள்ள புலிகள் ஆதரவாளர்கள், ஆனந்த சங்கரியைக் கூட தமிழராக ஏற்க மாட்டார்கள். "புலிகளை ஆதரிக்காதவர்களின் கருத்து நிராகரிக்கத்தக்கது; அவதூறுக்கு உள்ளாக்கத்தக்கது' என்பது, தமிழகத் தலைவர்களின் கருத்து.
கே.என். பாலகிருஷ்ணன், சென்னை91
கே : ஒருவேளை தமிழ் ஈழம் அமைவதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது அங்கே ஜனநாயகம், சர்வாதிகாரம் இரண்டில் எது கோலோச்சும்?
ப : தனி ஈழம் அமைகிறது என்று வைத்துக்கொண்டால் – அங்கே
விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான சர்வாதிகாரம்தான் நடக்கும். தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்பதை, அவர்கள் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.
ஆர்.வி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை44
கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?
ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
– "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.
ஜி. லட்சுமி வாசுதேவன், சென்னை42
கே : "இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவால் கூற முடியாது. பிற நாட்டு விவகாரங்களில் நாம் தலையிட முடியாது' – என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகிறாரே?
ப : அவர் கூறியுள்ளது சரிதான். "காஷ்மீரில் ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; தனது ராணுவ நடவடிக்கையை இந்தியா உடனே நிறுத்த வேண்டும்' என்று பாகிஸ்தானோ, வேறு ஒரு நாடோ நிர்பந்திக்க முடியுமா? முடியாதல்லவா? நமக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா?
ஜி. சாந்தி, பனங்கோட்டூர்
கே : முரண்பட்ட கொள்கையை உடைய கட்சிகள் கூட்டணி அமைத்தால் ஏற்படும் விளைவுகளை அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் இலங்கைப் பிரச்சனையில் சந்திக்கத் தொடங்கியுள்ளதே? இதனால் அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நினைக்கிறீர்களா?
ப : இலங்கை விஷயத்தில் முரண்பட்ட கொள்கையையுடைய தி.மு.க.வும்,
காங்கிரஸும் சேர்ந்தே இருப்பது போல – ம.தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் கூட்டணியைத் தொடர்ந்தாலும் தொடரலாமே!
ஏ. முகம்மது மைதீன், சிவகங்கை
கே : "இந்தியாவில் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால், புலிகள் மீதான தடை
நீக்கப்பட்டு, பிரபாகரனின் உதவியை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'
– என்று பால்தாக்கரே கூறியுள்ளாரே?
ப : வன்முறையாளர், வன்முறையாளரை ஆதரிப்பதில் வியப்பில்லை.
பி. பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி
கே : மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, கலைஞர் வாபஸ் பெறும் அளவிற்கு துணிச்சல்காரரா என்ன?
ப : மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வருகிற ஆதரவு வாபஸ் ஆகும் போலத் தெரிகிறது – என்று ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினாலே, அவருக்கு கடும் கோபம் வருகிறது. "எப்படிச் சொல்லலாம் இப்படி? நானாவது, மத்திய அரசை மிரட்டுவதாவது? இது வேண்டுமென்றே செய்யப்படுகிற சதி!' என்றெல்லாம் கோபித்துக் கொள்கிறார். நிலைமை இப்படியிருக்க, ஆதரவாவது, வாபஸாவது?
ஒரு துணிவு அவருக்கு உண்டு. "எம்.பி.க்கள் ராஜினாமா' என்று சொல்லிவிட்டு, "இல்லை. மத்திய அரசுக்கு இன்னமும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது
– ஆகையால் எம்.பி.க்கள் ராஜினாமா இல்லை' என்று ஒரு பல்டி அடிக்கிற துணிவு அவருக்கு உண்டு.
எஸ். பக்கிரிசாமி, திருவாரூர்1
கே : "விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டத்திற்குப் புறம்பான வன்முறையில் ஈடுபடுகின்றனர்' – என்று ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் குறிப்பிட்டுள்ளது பற்றி?
ப : ராம் கூறியதில் என்ன தவறு? விடுதலைப் புலிகளைக் கண்டனம் செய்து "ஹிந்து' பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரைக்கு – எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் இறங்கி, கோயம்புத்தூரில் ஹிந்து பத்திரிகையின் அலுவலகத்தில் "தாக்குதல்' நடத்தினர். ராம் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
தாங்கள் ஏற்காத கருத்தைக் கூறுபவர்கள் தாக்குதலுக்கு உரியவர்கள் என்கிற ஆபத்தான அணுகுமுறை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி சட்ட விரோதப் போக்குகளை வளர விடுவது ஆபத்து. என்னைப் பொறுத்தவரையில் "ஹிந்து' கட்டுரை முழு ஏற்புக்குரியதே.
எம். சம்பத், வேலாயுதம்பாளையம்
கே : இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில், இந்தியாவின் அணுகுமுறை சரிதானா?
ப : இதுவரை பழுது காண இடமில்லை.
வாழ்த்துக்கள். தங்கள் இணைய பயணம் மேன்மேலும் மெருகேறி பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
பலப்பல போராட்டங்களைத் தாண்டி வெற்றிநடை போடும் தங்களின் இந்த இணைய பங்களிப்பின் தொடர்ச்சியே ஒரு சாதனை, ஆயின் தொடரும் உங்கள் பதிவுகளோ தமிழ்கூறும் பதிவுலகின் மகுடப் பதக்கம்.
நன்றி
ஜயராமன்
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துகள் திரு. ராகவன்.
////நானே கேள்வி நானே பதில் - டோண்டு ராகவன் ஸ்டைலில்
என்ன டோண்டு ராகவனுமா இப்படி என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில், ஆம் அதனாலென்ன? //
வரவேற்கிறேன் ஐயா.
வாழ்த்துகள், ராகவன் சார் !
நெஞ்சில் பட்டதை உள்ளபடி சொல்லும் அந்த துணிச்சலுக்காகவும் :)
Post a Comment