11/04/2008

துபாஷி வேலையில் தமாஷ்

இதுவும் ஒரு மீள்பதிவே. முதலில் இது நவம்பர் 2004-ல் வந்தது. மா.சிவகுமார் அவர்கள் இட்ட இந்தப் பதிவுதான் அதற்கு தூண்டுதல் என்பதைக் கூற இந்த அறுபது வயது இளைஞன் கடமைப்பட்டுள்ளான். இப்போது பதிவுக்கு வருகிறேன்.

நான் தில்லியில் வசித்த போது ஒரு பிரெஞ்சுக்காரருக்கு துபாஷியாகச் செயல்பட நேர்ந்தது. அவர் ஒரு உள்ளூர் நிறுவனத்துக்கு வேலையாக வந்திருந்தார். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி அகர்வால் பிரெஞ்சுக்காரரிடம் இந்தியில் பேச ஆரம்பித்தார். நான் இருவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராகச் செயல் பட்டேன்.

பிரெஞ்சுக்காரர் வந்ததும் அகர்வாலும் அவரும் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொண்டனர். கம்பெனியின் முக்கிய அதிகாரிகள் குழுமியிருக்க பேச்சு ஆரம்பமாயிற்று. தொழில் நுட்பப் பேச்சு (DU & DI relays). உங்களுக்கு போர் அடிக்கும். ஆகவே அது பற்றி இங்கு மேலே ஒன்றும் கூறவில்லை.

பிறகு டீ, பிஸ்கட் வந்தன. அப்போது அகர்வால் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

அகர்வால்: "ராகவன், அவரிடம் கேளுங்கள், அவருக்கு இன்று மாலை காபரே நடனம் பார்க்க விருப்பமா என்று."
பிரெஞ்சுக்காரர்: "நன்றி ஐயா, தேவையில்லை என்று அகர்வாலிடம் கூறிவிடுங்கள்.
அகர்வால்: "இல்லை ராகவன், மறுபடியும் கேளுங்கள்"
பிரெஞ்சுக்காரர்: (பொறுமையிழந்து): "நான் வேண்டாம் என்று கூறி விட்டேனே, ராகவன்? ஏன் அகர்வால் படுத்துகிறார்?"

உண்மையில் அகர்வாலுக்குதான் அதில் விருப்பம். விருந்தாளியைச் சாக்கிட்டுத் தானும் காபரே பார்க்க ஆசை. அதை வெளிப்படையாகக் கூற முடியுமா? ஆகவே அவர் கூறினார்:

அக்ர்வால்: "ஒன்றுமில்லை ராகவன், பாவம் மனிதன் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். மனைவி அவருடன் வரவில்லை. ஆகவே அவருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படாதா? அவருக்கு ஒரு வடிகால் வேண்டாமா?"
நான்: (இந்தியில்). பிரச்சினையைக் கண்டு சோர்வடையாமல் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் அது தீர்ந்துப் போய் விடுமே?"

அவ்வளவுதான். அங்குக் குழுமியிருந்த அத்தனை இந்தியர்களுக்கும் இடிச் சிரிப்புத்தான். ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக் கொண்டோம், (கையைத்தான் ஐயா).

பிரெஞ்சுக்காரருக்குத் திகைப்பு. என்னைப் பார்த்து என்ன விஷ்யம் என்றுக் கேட்டார். நான் அகர்வாலிடம் கூறியதை அப்படியே பிரெஞ்சில் கூற, அவரும் முகம் சிவக்க ஒரு அவுட்டுச் சிரிப்பை வெளியிட்டார்.

இதில் விசேஷம் என்னவென்றால், தமிழில் நான் இங்கு எழுதியது அப்படியே வார்தைக்கு வார்த்தை இந்தியிலோ அல்லது பிரெஞ்சிலோ மொழிப் பெயர்த்தாலே சம்பந்தப்பட்ட மொழிகளில் அருமையான மொழிப் பெயர்ப்பாகி விடும். அதுவே ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளுக்கும் பொருந்தும். (ஆக, எனக்கு 6 மொழிகள் தெரியும், ஹி ஹி ஹி).

பிரெஞ்சுக்காரர் சிரிப்பு அடங்கியதும் கூறினார். "எய்ட்ஸ் வராமல் தடுக்க அருமையான வழி."

அதை நான் இந்தியில் மொழி பெயர்த்தேன் என்று கூறவும் வேண்டுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

enRenRum-anbudan.BALA said...

Raghavan,
Fantastic timing sense and great humour!
----BALA

குசும்பன் said...

கலக்கிட்டீங்க சார்!!!

kulakkodan said...

Danke Dondu!

Bitte schreiben Sie weiter.

dondu(#11168674346665545885) said...

Bitte sehr, Kulakkodan,

Natürlich macht dieser 60 Jahre jung Dondu Raghavan weiter.

Mit freundlichen Grüßen,

Dondu N.Raghavan

Muse (# 01429798200730556938) said...

Bien que je l'aie lu plus tôt, j'ai apprécié les nouveaux calembours.

dondu(#11168674346665545885) said...

Cher Muse,

Après tout, il n’y a qu’un calembour dans cette histoire, et où reste le mouveau calembour, s’il y en a?

Salutations,
Dondu N.Raghavan

Muse (# 01429798200730556938) said...

(கையைத்தான் ஐயா).

dondu(#11168674346665545885) said...

"கையைத்தான் ஐயா"

அட, ஆமாம். நான் கவனிக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெண்பூ said...

நல்ல நகைச்சுவை சார்.. டைமிங் அற்புதம்...

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...

dondu(#4800161) said... //

please explain

mouse test( elikkuddi sothanai)

வால்பையன் said...

ம்ம்ம்ம்
பயங்கர குறும்பு தான் உங்களுக்கு

Anonymous said...

டோண்டு,

நீங்கள் சொல்லுவதற்கு மாறாக பத்ரி சொல்லுகிறார்.

தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு இப்போது எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை, அவர்கள் அச்சத்தோடு வாழவில்லை என்று பத்ரி கூறுகிறார்.

http://thoughtsintamil.blogspot.com/2008/11/blog-post_04.html

எனவே, இனிமேல் நீங்கள் தொடர்ந்து பொய் சொல்ல முடியாது.

dondu(#11168674346665545885) said...

//எனவே, இனிமேல் நீங்கள் தொடர்ந்து பொய் சொல்ல முடியாது//

அனானி, உங்களுக்கு ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். பிரச்சினை யாருடையதாக இருந்தாலும் சரி, கையில் எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் தீர்ந்து விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//பிரச்சினை யாருடையதாக இருந்தாலும் சரி, கையில் எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் தீர்ந்து விடும்.//

:))))

Anonymous said...

//பிரச்சினை யாருடையதாக இருந்தாலும் சரி, கையில் எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் தீர்ந்து விடும்.//

பிரச்சினை என்றால், கையில் எடுத்துக்கொள், பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறீர்கள்.

ஆனால், நரம்பு தளர்ச்சி வந்துவிடும், சீக்கிரம் விட்டுவிடும் பலகீனம் வந்துவிடும் என்கிறார்களே?

கையில் எடுப்பதால் எத்தனை பிரச்சினைகள் பாருங்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது