நேற்று மாலை (25.11.2008) முதல் இன்று இன்னேரம் (முற்பகல் 11.00) வரை மழை விடவில்லை. எங்கள் ஏரியாவில் நல்ல வேளைஆக மழைநீர் வடிகால்கள் சரிவர அமைக்கப்பட்டிருப்பதால் பிரச்சினை இல்லை. சும்மா சொல்லக்க்கூடாது, நகராட்சி ஊழியர்கள் அங்கங்கு தடை ஏற்படும் வடிகால்களை தூர் எடுத்த வண்ணம் இருந்தனர்.
காலை வழக்கமான ஐந்தரை கிலோமீட்டருக்கான வேக நடைக்கு எல்லா பாதுகாப்புகளுடனும் - அதாவது, பர்ஸ் செலஃபோன் பேப்பருக்குள், கடிகாரம், செல்பேசி லேது - குடையின்றி மழையில் இறங்கினேன். இந்த பிராம்மணனுக்கு மூளையும் லேது, இப்படி மழையில் இறங்குகிறதே என்ற முகபாவத்துடன் வீட்டம்மா வழியனுப்பினார்.
எங்கள் வீட்டிலிருந்து தெருவில் மேற்கே நடந்து பக்தவத்சலம் நகர் தெருவில் வலது பக்கம் திரும்பி நேரே நடந்தால் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தை ஒட்டிய தெரு பின்னி இஞ்சினியரிங் அருகில் ரயில்வே பாதைக்கு, மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் வந்து முடியும். இதற்கு நடை நேரம் 15 நிமிடங்கள். சப்வே கட்டுவதால் சற்றே ஜாக்கிரதையாக நடந்து லைன் கிராஸ் செயய வேண்டும். பிறகு ஜி.எஸ்.டி. சாலையை பிடித்து வலது புறம் திரும்பி சென்றால் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் ஹோட்டல் ட்ரைடண்டுக்கு முன்னால் உள்ள தெருவில் வலது பக்கம் திரும்பி நடந்தால் பழவந்தாங்கல் சப்வே வரும். சாதாரண தினங்களில் வேகமாக நடை போடும் நான் இன்று சாலையில் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் சற்றே ஜாக்கிரதையாக நடக்க வேண்டியிருந்தது. ஏதேனும் கண்ணுக்கு தெரியாத பள்ளங்களுக்கு மட்டும் தயங்க வேண்டியிருக்கிறதுதானே. சுமார் அரை மணி நேர நடைக்கு பிறகு வரும் மீன்ம்பாக்கம் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்திருந்த போர்டில் அதிகபட்ச வெப்பம் 29.2 டிக்ரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பம் 25.2 டிகிரி செல்சியஸ், ஈரப்பதம் 82%, மழையளவு 1.6 மிமி என்று காணப்பட்டது. அவ்வளவு மழை கொட்டுகிறது, மழைமானி இவ்வளவுதான் காட்டுகிறதா? இது என்ன புதுக்கதை? பழைய செய்தியாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் ஈரப்பதம் 82% என்பதும் நம்பும்படியாக இல்லை. மழைமானியில் அவ்வளவு குறைந்த அளவு காட்டுவதை பார்த்ததும் கல்கியில் சமீபத்தில் 1966-ல் படித்த ஜோக் நினைவுக்கு வந்தது. அதையும் பார்த்து விடுவோமே.
அதிகாரி: என்னய்யா இவ்வளவு மழை பெஞ்சிருக்கு, இவ்வளவு குறைச்சலா கருவி காட்டறதே?
ஊழியர்: ஹி, ஹி சார், நாந்தான் தாகம் தாங்கமுடியாமல் அதில் இருந்த தண்ணீரையெல்லாம் குடிச்சுட்டேன்.
இந்த ஜோக்கையும் கூடவே மற்ற கல்கி ஜோக்குகளையும் அக்காலக் கட்டத்தில் நண்பர்களிடம் கூற “இனிமேல் கல்கி ஜோக் சொல்லுவியா, சொல்லுவியான்னு உன்னை உன் நண்பர்கள் போட்டு அடிச்சாங்களே அதையும் சொல்லுடா டோண்டு ராகவா” என்று போட்டுக் கொடுக்கும் முரளி மனோஹர் தயவு செய்து அமைதி காக்கவும்.
சாலையில் இருந்த செம்மண் மழைநீருடன் கலந்து முகம் சிவந்து ஓடியது. அது எனக்கு இந்தப் பாடலை நினைவுபடுத்தியது. இது குறுந்தொகையில் வருவதாக அறிகிறேன்.
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
"உன் தாய்க்கும் என் தாய்க்கும் என்ன தொடர்பு? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர்கள்? நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் பார்த்து கொண்டது இல்லையே. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன" என்பது இப்பாடல். செம்புலம் என்பது பாலை, செம்மண் என்ற இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. மணலில் தண்ணீர் சிந்திப் பார்த்ததுண்டா நீங்கள்? தண்ணீர் விழுவதும் அதை மணல் உறிஞ்சிக் கொள்ளலும் கண்ணிமைக்கும் நொடிகளில் நிகழும். அதைப் போல பிரித்தறிய முடியாத கணங்களில் உள்ளங்கள் கலந்தன என்றும் கொள்ளலாம். செம்மண்ணில் புழுதியும் வாசனையும் கிளப்பியடி பெய்யும் மழை நீர் மண்ணோடு கலந்த வினாடியில் சுயமிழந்து தானும் செந்நிறம் கொள்வதுபோல நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்தன என்றும் கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை நான் சமீபத்தில் 1962-63 காலக் கட்டத்தில் புதுக்கல்லூரியில் பியுசி வகுப்பு படிக்கையில் இப்பாடல் எங்கள் பாடத்தில் வந்தது. அதில் செம்மண் என்ற பொருளில்தான் செம்புலம் கூறப்பட்டது. எதுவான போதிலும் கண்டதும் காதல் என்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு இந்த பாடல் மறக்க முடியாததாக இருக்கும் என்பது வெள்ளிடைமலை.
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வரிகளைத்தான் “பொன் விலங்கு” என்னும் நாவலில் நா. பார்த்தசாரதி அவர்கள் கதைத் தலைவன் சத்தியமூர்த்திக்கும் தலைவி மோகனாவுக்கும் இடையே வந்த காதலை விளக்க உபயோகப்படுத்தினார்.
"நீரும் செம்புலச் சேறும் கலந்தது போல கலந்தோம் நாமே" என்ற வரிகளை இன்னும் மறக்க இயலவில்லை.
இதையெல்லாம் நினைத்து கொண்டே போனதில் பழவந்தாங்கல் சப்வே வந்து விட்டது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. தெருவில் நடமாட்டமே இல்லை. சப்வே தாண்டி, காலேஜ் சாலை தாண்டி காதர் தோட்டம் அருகில் வருகையில் ஒரு பெரிய கும்பல் குடையுடன் நின்று கொண்டிருந்தது. பொங்கி வரும் மழை நீரை சரியான வழியில் ஒதுக்கி விடும் சிறப்பான பணியை அது செய்து கொண்டிருந்தது. நடுமையமாக நின்று கொண்டு இருந்தவர் உள்ளூர் கவுன்சிலர் என்பதை அறிந்து வியந்தேன்.
எம்ஜிஆர் ரோடை அங்கிருந்து பிடித்து அதில் நடந்து வீட்டுக்கு போன போதும் மழை. ஆக ஐந்தரை கிலோமீட்டர் தூரம் செல்ல எடுத்து கொண்ட கிட்டத்தட்ட 55 நிமிடங்களும் அடை மழைதான். மிகவும் ஜாலியான அனுபவம். மெரினா கடற்கரையில் பதிவர் மீட்டிங்கிற்கு செல்லும்போது இதே போல கொட்டும் மழையில் அலைகளில் நிற்பது போன்ற அனுபவம் போலவே இதுவும் இருந்தது.
இவ்வாறு செல்லும்போது கவனிக்க வேண்டிய சில பாதுகாப்புகளை மறக்கலாகாது. உடல், உடை நனைவது பொருட்டில்லை என்றாலும் அதற்காக பணமும் நனையலாம் என்று விட முடியாதல்லவா? ஆகவே பர்சை செலஃபோன் தாளில் வைத்து சுற்றிக் கொள்ள வேண்டும். கைகடிகாரம், செல்பேசி ஆகியவை இருக்கக் கூடாது. அதே போல பர்சில் உங்கள் விசிட்டிங் கார்ட் இருப்பதும் நலம். ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தாலும் வீட்டிற்கு தகவல் தெரிவிக்க மற்றவர்களுக்கு உபயோகப்படும் அல்லவா? (நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது)
அதே போல தெருக்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தால் ஜாக்கிரதையாக இருப்பது நலம். பள்ளங்களில் காலைவிடும் அபாயம் உண்டு. சுற்று முற்றும் பார்வை இருந்த வண்ணமே இருக்க வேண்டும். எங்கேனும் எலெக்ட்ரிக் ஒயர்கள் தொங்கிக் கொண்டு இருந்தால் அது வேறு பிரச்சினை.
இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மழையில் நடப்பது ஒரு சுகானுபவம்.
மழையில் நடப்பது சம்பந்தமாக எனது முரட்டு வைத்தியம் - 5 பதிவில் கூறியதை இங்கு மீண்டும் கூற விரும்புவேன்.
“சென்னை வந்ததும் இதை (நடைப்பயிற்சி) பல முறை ஆரம்பித்து பாதியில் விட்ட நான் இப்போது என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் கடந்த 2 மாதங்களாக செய்து வருகிறேன். சாதாரணமாக சில தினங்கள் வரிசையாக மழை பெய்து எனது உறுதியைக் குலைக்கும். இம்முறை அதையும் மீறியுள்ளேன். கையில் கடிகாரம் இல்லாது, செல்பேசி எடுத்து கொள்ளாது, பணத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துகொண்டு கொட்டும் மழையில் பலமுறை சென்று விட்டேன். உடலுக்கு ஒரு கெடுதலும் வரவில்லை. ஆக, மழையால் வேலை கெட்டது என்று இனிமேல் இருக்காது. இதில் என்ன வேடிக்கை என்றால் போடா ஜாட்டான் என மழையை ஒதுக்கியது மேலும் உற்சாகத்தையே அளிக்கிறது. நம் கட்டுப்பாட்டிலேயே எல்லா விஷயங்களும் உள்ளன என்ற எண்ணமே மகிழ்ச்சியை வரவழைக்கிறது”.
கடவுள் அருளால் இதுவரை ஜலதோஷம், ஜுரம் என்று எதுவுமே இதனால் வரவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
13 hours ago
36 comments:
உண்மையில் பாராட்ட பட வேண்டிய கவுன்சிலர் தான். விசாரித்துப் பாருங்கள் ஏதேனும் சுயேட்சையாய் இருப்பார். அரசியில் கட்சியில் இருந்தால் பொது நலன் கிலோ என்ன விலை என்றெல்லவா கேட்பார்கள்.
treadmill ஒன்னு வாங்கறதுக்கு என் நண்பர் விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் கொட்டேஷன் வாங்காத கடையே கிடையாது. அவர் கடைசியா ரொம்ப நாளைக்கு முன்னால (அக்டோபர் ௨008-ல்) வாங்கி விட்டார். அவர் வீட்டுக்கு சென்ற வாரம் சென்ற போது எப்படிப்பா நல்ல நடக்கிறாயா என்றேன். அவர் மனைவி முந்திக் கொண்டு அதை வாங்கறதுக்கு இதல நடக்கிறதை விட இத வாங்கறதுக்கு நடந்த நடை தான் அதிகம், ஆமா வாரத்துக்கு ஒரு 10 நிமிடம் நடக்கிறார் என்றார். மெசினில் என்ன இருக்கு எல்லாம் மனசில தானே இருக்கு.
வெள்ளிகிழமைக்கு,
சில பிளாக்குகளில் பிளாக்கராக இருந்தால் மட்டும் தான் பின்னூட்டம் இட முடியும் போலிருக்கே, எழுதற ஆட்கள் தங்களுக்குள்ளேயே பரிமாறிக் கொள்வார்களோ ? சில நாட்களுக்கு முன்னால வால் பையனோட பதிவைப படிச்சுட்டு வால்-த்தலாமேன்னு பார்த்தா பிளாக்கர் ஐடி இல்லங்கறதால விட்டுவிட்டேன்.
** "ஜாட்டான்" -க்கு தமிழில் விளக்கம் தரவும். நான் இப்போது தான் இது மாதிரி வார்த்தைப் பிரயோகத்த பார்கிறேன். சாத்தான் என்பதின் திரிபா? இல்லை காட்டான் என்பது மாதிரியா ? அந்த வார்த்தையின் வெயிட் தெரிந்து கொள்ளலாமா ?
குப்பு குட்டி
பிபாசுக -ன் முற்போக்கு எழுத்தாளர் ஆவதற்கு 30 வழிகள் படித்தீர்களா ?
குப்புக் குட்டி
இந்த பதிவில் சொல்ல வரும் கருத்து தான் என்ன?
புரிந்து கொள்வதற்க்குள் எனக்கு தாவூ தீருகிறது
//"செம்புலப் பெயல் நீர்போல"//
இடையில் வரும் இந்த ஒரு சீனுக்காகவா இந்த முழு படமும்,
பாக்குரவங்க டவுசர் என்னாவுறது?
//சில நாட்களுக்கு முன்னால வால் பையனோட பதிவைப படிச்சுட்டு வால்-த்தலாமேன்னு பார்த்தா பிளாக்கர் ஐடி இல்லங்கறதால விட்டுவிட்டேன். //
இதுவும் என் வீடு மாதிரி தான்,
இங்கேயும் என்னை வாழ்த்தலாம்.
நன்றி வாழ்த்துக்கு
//ஜாட்டான்" -க்கு தமிழில் விளக்கம் தரவும்.//
எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் அல்லது எஸ்.ஏ.பி.யைத்தான் கேட்க வேண்டும். அவர்களில் ஒருவர் எழுதிய ஒரு தொடர்கதையில் இந்தச் சொல்லை சமீபத்தில் 1978 வாக்கில் பார்த்தேன். பிடித்து விட்டது. உடனே சுட்டு விட்டேன். ஜாட்டான் என்றால் எடுபட்டப்பயல் அல்லது உதவாக்கரைப் பயல் என்று பொருள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@வால்பையன்: இதில் புரிந்து கொள்ள ஒன்றுமே இல்லை. மழையில் நடக்கலாம் என ஆசையுடன் கிளம்பும்போது பல முறை அது அடுத்த சில நிமிடங்களில் நின்று வெறுப்பு காட்டியுள்ளது. இம்முறை முழுதூரமும் அதனடியேலேயே நடந்திருக்கிறேன். சிறந்த அனுபவம். தெருக்கள் வெறிச்சோடி இருக்கும். நாம்தான் ராஜா. முயற்சி செய்து பார்க்கலாம் மன உறுதி இருந்தால்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//முயற்சி செய்து பார்க்கலாம் மன உறுதி இருந்தால்.//
டவுசரை காப்பாற்றி கொள்ளும் நிலை என்றால் எல்லோருக்கும் மன உறுதி வந்துவிடும்.
எனக்கு மழையில் கால்பந்து விளையாடுவது பிடிக்கும்.
பிளாக் ஆரம்பிச்சு எழுதலாமா என்று யோசனையில் இருந்தேன். ஆனா பிபா-சுக -வின் பதிவைப் படித்ததும் "எழுதினால் சுவையோடு எழுதுக இல்லாவிட்டால் பின்னூட்டம் இட்டு பின் செல்க" என்ற கொள்கை முடிவு எடுத்து விட்டேன். பிளாக் எழுதமா சும்மா ஒரு பிளாக் அக்கவுன்ட் உண்டாகிட்டு, வால் குட்டி உங்க வீட்டுக்கு வந்தே வாழ்த்துறேன். (நகைச்சுவை நல்லா வருது உங்களுக்கு).
குப்புக் குட்டி
அன்பே,
நீயும் நானும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்.
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட...
என்று துவங்கும் கவிஞர் மீராவின் (ஊசிகள்) புதுக்கவிதை கேள்விப்பட்டதுண்டா?
(முழுக்கவிதையும் எனக்கு நினைவுக்கு வரவில்லை)
- சிமுலேஷன்
டோண்டு சார்,
இதே வரிகளை தான் வைரமுத்து 'நருமுகையே' பாடலில் சொல்லி(காப்பி)யிருப்பாரு..
நானும் நேற்று (இரவு 8.14-8.45)மழையில் நனைந்தேன். அனேகமா எல்லாரும் ஏடிஎம், டீக்கடை, பஸ் ஸ்டாப்-னு கிடைச்ச இடத்துல ஒதுங்கிட மழைல நனைஞ்ச என்னை எல்லாரும் கொஞ்சம் குருகுருனு பாத்ததுதான் வேடிக்கை..
அப்பறம் முதல் பின்னூட்டமிட்ட அனானி மாதிரியே எனக்கும் கொஞ்சம் சந்தேகங்கள்..
போடா ஜாட்டன்...
அடியப் புடிடா பாரத பட்டா..
இதில், அடியை பிடித்தல், பாரதபட்டா, ஜாட்டன் இவற்றுக்கு விளக்கம் தேவை...
குறிப்பு: இந்த மாதிரியான உங்கள் வரிகள் இப்போது ஆ.வி. உடன் வரும் குட்டி ஆ.வி. யின் எழுத்துக்களை ஒத்திருப்பதாக தோன்றுகிறது..
ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு!!
(ஆ.வி - ஆனந்த விகடன்)
//
வால்பையன் said...
எனக்கு மழையில் கால்பந்து விளையாடுவது பிடிக்கும்.
//
எனக்கு மழையில் கிரிக்கெட் விளையாடுவதுதான் பிடிக்கும்... ஆனால்... புக் நனைந்துவிடுமேன்னு பாக்கறேன்...
ஹிஹி. நான் சொன்னது புக் கிரிக்கெட்.... :-))
தங்கள் பணிகளை செவ்வனச் செய்யும் மாநகராட்சிப் பணியாளர்கள்.
மக்கள் நலப் பணியில் தன்னார்வத் தொண்டராய் மாநகராட்சி மன்ற உறுப்பினர்.
இந்தச் செய்தி அபூர்வமான ஒன்று.
இந்த தங்க மனதுக்காரார்களால்தான்
சென்னை மாநகரில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மகிழ்கிறதோ!
தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
//எனக்கு மழையில் கிரிக்கெட் விளையாடுவதுதான் பிடிக்கும்... ஆனால்... புக் நனைந்துவிடுமேன்னு பாக்கறேன்...
ஹிஹி. நான் சொன்னது புக் கிரிக்கெட்.... :-)) //
அது எப்படி விளையாட வேண்டுமென்று விளக்க பதிவு தேவை
காலையில் பார்த்தபோது மீனம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்த நிலை அதிகபட்ச வெப்பம் 29.2 டிக்ரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பம் 25.2 டிகிரி செல்சியஸ், ஈரப்பதம் 82%, மழையளவு 1.6 மிமி. அப்போது மணி கிட்டத்தட்ட காலை 9. இன்று மாலை ஐந்தரை மணியளவில் பார்த்த நிலை அதிகபட்ச வெப்பம் 29.2 டிக்ரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பம் 22.2 டிகிரி செல்சியஸ், ஈரப்பதம் 95%, மழையளவு 111.6 மிமி. மழையளவு காலை எட்டரை மணியிலிருந்து என்று கூறினார்கள். ஆக இன்று நான் பார்த்தவரை 9 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 111.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதாவது நான்கு அங்குலத்துக்கும் மேல். பேஷ், நல்ல மழைதான். மாலை வாக்கிங்போது மழை சதி செய்து விட்டது. விட்டு விட்டுத்தான் பெய்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வால் குட்டி உங்க வீட்டுக்கு வந்தே வாழ்த்துறேன். (நகைச்சுவை நல்லா வருது உங்களுக்கு).
குப்புக் குட்டி//
welcome to kuppu kutti saar
//111.6 மிமி. மழையளவு காலை எட்டரை மணியிலிருந்து என்று கூறினார்கள். ஆக இன்று நான் பார்த்தவரை 9 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 111.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதாவது நான்கு அங்குலத்துக்கும் மேல். பேஷ், நல்ல மழைதான். மாலை வாக்கிங்போது மழை சதி செய்து விட்டது. விட்டு விட்டுத்தான் பெய்தது.//
sennai mithakkuthunnu ( chennai floats) seythi varuthu.
puyal karaiyai kadukkum pothu
meendum mazhai varaalam-
vanilai vallunar
ramanan
solvathu pola
kanamazhaiyo, idiyudan kudiya mazhaiyo varalaam
naalaiyum nanaiyalaam dondu sir
நான் காலையில் வீட்டுக்கு பேசியபோது, ஏற்கனவே தில்லை கங்கா நகர் சப்வே நிரம்பி விட்டதாக சொன்னார்கள்...
அது போல் மத்த சப்வேக்களும் நிரம்பியிருக்கும்னு நினைக்கிறேன்...
வால்,
ஓகே... புக் கிரிக்கெட் பதிவு போட்டுடறேன்...
பழவந்தாங்கல் சுரங்கப் பாதையில் தண்ணீர் எதுவும் தேங்கவில்லை என்பதை நானே நேரில் பார்த்தேன். இன்று காலை ஒரு முறை மாலை ஒரு முறை அதை கிராஸ் செய்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மழையில் நடக்க கூடிய நிலைமையில் நங்கநல்லூர் முன்னேற்றம் அடைந்திருப்பதை படிக்க சந்தோஷமா இருக்கின்றது. இரண்டு, மூன்று நல்ல ஆத்மாக்கள் அரசாங்கத்தில் வேலை செய்கின்றார்கள் போல் இருக்கின்றது. வாழ்க,வளர்க.. இராகவன், நைஜிரியா (ரொம்ப குழம்பி போயிடாதீங்க.. May 2008 வரை நான் மடிப்பாக்கம் வாசியாக்கும்)
இவர்களுக்கிடையே நேற்றைய/இன்றைய /நாளைய உறவுகளில் இணக்கமான நல்லுணர்வு /இறுக்காமான சூழ்நிலை/முழு மோதல் காரணங்களை
பட்டியலிடவும்.
1.தாத்தா -பேரன்கள்(DMK-FAMILY-BUSINESS))
2.அண்ணா-தம்பி(DMK-POLITICAL- HEIR)
3.தோழிகள்(ADMK)
4.ரஜினி-ரசிகர்கள்(FANS ASSOCIATION- entry in politics)
5.வலது-இடது பொது உடைமைக் கட்சி.(ALLAIANCE FOR NEXT ELECTION- sri lankan issue)
6.தமிழக காங்கிரஸ் தலைவர்கள்( TO FORM KAMARAJ RAJ IN TAMIL NADU)
7.வை.கோ-இலங்கைப் பிரச்சனை(விடுதலைப் போராளிகள்)
8.பணவீக்கமும்-gdp வளர்ச்சியும்( இந்தியாவில்)
9.பங்கு வணிகத் தரகர்களும் -முதலீட்டாளர்களும்.(ஹர்சத் மேத்தாக்கள்).
10.டோண்டு ராகவன் ஐயாவும்- எதிர்ப்பாளர்களும் (அரசியல்,உலக நடப்பு,பொருளாதாரம்,ஜாதி மதம் சார்ந்த கருத்துக்கள்)
//கடவுள் அருளால் இதுவரை ஜலதோஷம், ஜுரம் என்று எதுவுமே இதனால் வரவில்லை.//
எல்லாம் தென்திருப்போரையானின் கருணை
//Anonymous said...
//கடவுள் அருளால் இதுவரை ஜலதோஷம், ஜுரம் என்று எதுவுமே இதனால் வரவில்லை.//
எல்லாம் தென்திருப்போரையானின் கருணை//
அப்போ எதாவது வந்துச்சுன்னா தென்திருப்போரை நம்ம மேல காண்டுல இருக்காருன்னு நினைச்சிகிறதா!
:)
**மும்பை சம்பவத்திற்கு பிறகாவது பொடா தேவை என்று ஒத்துக் கொள்வார்களா? இல்லை மனித உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று கிரிமினல் சட்டங்களையே தூக்கி விடுவார்களா?
** புல்லட் ப்ரூப் அணிந்த பிறக்கும் எப்படி ஏ.டி.எஸ் தலைவருக்கு குண்டு பாய்ந்தது ?
** இத்தனை அதிகாரிகள் , கமேண்டோக்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள், இந்நிலையில் பிடிபட்டவர்களுக்கு மரண தண்டனை (நம்ம கோர்ட் இதை விசாரிச்சு, முடிச்சு பெரியமனது பண்ணி ) கிடைத்தால், அதை நிறைவேற்றுவார்களா ? இல்ல அப்சல் குருவுக்கு துணைக்கு வைப்பார்களா ?
** அப்பாவிகளை இப்படி கொல்வதில் என்ன சாதிக்கிறார்கள் இந்த அறிவிலிகள் ?
** எத்தனை பேருடைய வாழ்க்கை ஒரு சில நிமிடத்தில் சூன்யமாகி விடுகிறது ? பொடா வேண்டாம் என்றவர்கள் இப்போது எங்கே போய்விடார்கள்?
குப்புக் குட்டி
இந்த நாட்டுக்கு சேஷன் மாதிரி எதற்கும் அடங்காத ஒரு சர்வாதிகாரியின் தேவை இப்போ ரொம்ப அவசியம்.
***எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தீவிரவாதம் பேசினா, வாய் -லேயே
சுடுறதுக்கு
*** வறுமை தான் காரணம் அது தான் காரணம் இது தான் கராணம் என்று சப்பைக் கட்டுக் கட்டிய அத்தனை அறிவுஜீவிகளின் கைகளையும் உடைப்பதற்கும் (௨0 வருடத்துக்கு கணக்குப் பார்த்து).
*** ஊழல் செய்து சேர்த்த பணம் என்று தெரிந்தால் விசாரணையே இல்லாமல் பிடுங்க
*** பஞ்சாப் -ல் பயங்கரவாதிகளா ஒழித்த கில் போல அதிகாரிகளை நாடு முழுதும் நிரப்ப
இது போல ஒரு சர்வாதிகாரி வேணும்னு என் நண்பர் விரும்புறார், நீங்க இப்படி ஒரு சர்வாதிகாரி வந்தால் ஒத்துக்கொள்வீர்களா ?
குப்புக் குட்டி
கொஞ்சம் சந்தேகங்கள்..
போடா ஜாட்டன்...
அடியப் புடிடா பாரத பட்டா..
இதில், அடியை பிடித்தல், பாரதபட்டா, ஜாட்டன் இவற்றுக்கு விளக்கம் தேவை...
////
pls clear my doubt young man
***படகுல வந்துட்டாங்க என்று சாதாரணமா சொல்றங்களே ! நம்ம கடல் எல்லையை பலவீனமா வ்ச்சுருக்கோமா ?
*** இது மாதிரி உங்க நண்பன் இஸ்ரேலுக்கு நடந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? சவடால் அறிக்கை கொடுக்கிற பழக்கம் அங்கே உண்டா ?
***பச்சப் புள்ளையை அடிக்கிற மாதிரி இத்தனை பெரிய நாட்டை அடித்து விட்டார்களே ! நம்ம ஐ.பி. மற்றும் ரா என்கிற அமைப்புகள் என்ன தான் பண்ணுது.
உளவுத் துறைய உள் நாட்டு அரசியலுக்கு தான் பயன் படுத்துவங்க்களா ?
குப்புக் குட்டி
ஐ.பி மற்றும் ரா இரண்டும் உபயோகமில்லை அப்படின்னு நம்ம பிரதமர் இரண்டு நாளைக்கு முன்னதான் பேசினாரே.. இப்ப போய் அவுங்கள பத்தி கேள்வி கேட்கிறீங்களே? ஹோம் மினிஸ்டர்ன்னு ஒருத்தர் எதுக்கு இருக்கார்ன்னு புரியவே மாட்டேங்குது. ஹோம் மினிஸ்டரை (இந்தியாவின் ஹோம் மினிஸ்டர்) பற்றி உங்கள் கருத்து என்ன?
@வாழவந்தான்
ஜாட்டானுக்கான பொருளை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.
அடியைப்பிடிடா பாரத பட்டா என்றால் எல்லாவற்றையும் மறுபடியும் முதலிலிருந்து செய்வது அல்லது கூறுவது. இரண்டாவதற்கான உதாரணம் எனது நீதிக்கதை பற்றிய பதிவுதான். பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/blog-post_18.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இது போல ஒரு சர்வாதிகாரி வேணும்னு என் நண்பர் விரும்புறார், நீங்க இப்படி ஒரு சர்வாதிகாரி வந்தால் ஒத்துக்கொள்வீர்களா ?//
இதுக்காகவெல்லாம் சர்வாதிகாரி வேணும்னு சொல்வது முட்டாள்தனம். அப்படி நடந்துட்டா இம்மாதிரி பிளாக்கெல்லாம் போட முடியாது, உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னுதான் நிக்கணும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கும் கூட அதுல உடன்பாடு கிடையாது. சர்வாதிகாரி நினைத்ததை எல்லாம் செய்தா அவ்வளவு தான். ஆனா திருவாளர் சோ சொல்ற மாதிரி, (எப்ப சொன்னார் எதில என்றால் என்னிடம் சுட்டி எல்லாம் லேது ) பத்திரிக்கைகளுக்கும் தனி மனிதர்களுக்கும் அளவுக்கு அதிகமா சுதந்திரம் இருக்கதைக் கட்டுபடுத்த வேண்டியது ரொம்ப அவசியம். பிளாக் -ஐ அவ்வளவு சீரியசான விஷயமா பார்கிறீங்களா ? அப்படி பிளாக் பண்ணினா போடா ஜாட்டான் என்று போவீர்கள் என்றெல்லவா நினைத்தேன் !
குப்புக் குட்டி.
என்னது, சென்னையில் மழையா?! அக்னி நட்சத்திரத் தாக்கம் இன்னும் நீடிப்பதாக அல்லவா கேள்விப்பட்டேன்?
@எல்லே இளங்கிளியே
மழை பெய்தது போன நவம்பரில் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த மாதிரி படிக்க சுவையாக எழுதினால் நன்றாக இருக்கும் சார். எனக்கு இப்படி எல்லாம் எழுதத்தெரிவதில்லை. அது எப்படி சார், சோஷியல், காமிக்கல், லிட்டரரி,ரொமாண்டிக்,நஸ்டால்ஜிக் போஸ்ட் இப்படி அனாயாஸமா எழுதறீங்க? சூப்பர். நானும் கொட்டும் மழையில் மெரீனாவில் இருந்து போரூர் என் வண்டியை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறேன். மறக்க முடியாத அனுபவம். நீங்க சொல்றாப்புல உடம்புக்கெல்லாம் ஒண்ணும் வரலை. இன்னும் ஃப்ரெஷா தான் இருந்தது. :)
@அநன்யா
உங்கள் அன்னை பற்றிய பதிவு அபாரம். பிறகு அப்படியே பின்னால் ஸ்க்ரால் செய்து கொண்டே பதிவு பதிவாகப் போனேன்.
உங்கள் நடை மனதுக்கு இதமாகவே உள்ளது. உங்கள் தோழியின் குழந்தை காரின் முன்சீட்டிலிருந்து மீண்டும் மீண்டும் கீழே குதித்துக் கொண்டே பயணம் செய்தது எனது மனக்கண்ணீல் அற்புதமான காட்சியாக விரிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment