12.11.08 தேதியிட்ட குமுதத்தின் இக்கட்டுரையை நண்பர் அருணின் இப்பதிவில் பார்த்தேன். நேர்மறை எண்ணங்கள் கொண்ட செந்தில்குமார் உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தி கமலஹாசனை எனக்கு நினைவுபடுத்துகிறார். உள்ளூர் மக்களுக்கோ அவரைப் பார்த்தால் சிவாஜி ரஜனியை பார்ப்பது போல இருக்கிறது.
உடனே அருணுக்கு போன் செய்து அக்கட்டுரையை எனக்கு மின்னஞ்சல் செய்யச் சொன்னேன். அவரும் பிராம்ப்டாக அனுப்பி விட்டார். இப்போது இந்த வலைப்பூவிலும் அப்பதிவு. அருணுக்கு என் நன்றி. ஓவர் டு குமுதம்.
படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...
பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.
`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.
விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?
முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.
பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.
வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.
``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.
``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.
2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!
கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.
அப்புறம் பள்ளிக்கூடம்.
கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.
கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.
இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.
நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.
இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.
செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..
- இரா.கார்த்திகேயன்
படங்கள் : சுதாகர்
நன்றி குமுதம்
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
26 comments:
//செந்தில்குமார் உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தி கமலஹாசனை எனக்கு நினைவுபடுத்துகிறார்//
மனிதநேயம் வாழ்கிறது.
அவரது தன்னலமற்ற பொதுநலப் பணி சிறக்க வாழ்த்துவோம்.
க்ளாசிக் டச்.
உன்னால் முடியும் தம்பி - கமல்ஹாசன் படத்துக்காகக் காசு வாங்கிக்கொண்டு நடித்தார்.
இவர் மனிதநேயத்துக்காக வாழ்வைத் தருகிறார்.
அருமையான கட்டுரை.
சுட்டதுக்கும், சுட்ட இடத்தைக் கூறியதற்கும் நன்றி
I liked that attitude!
Once a person takes care of his family, things can move on this direction.
I didnt find more info in Kumudam on this chap, where he worked in US etc.
ஒரு நல்லவரை, இங்கு நானும் படிக்குமாதிரி செய்ததற்கு மிக்க நன்றி.
//Sharepoint the Great said...
க்ளாசிக் டச்.
உன்னால் முடியும் தம்பி - கமல்ஹாசன் படத்துக்காகக் காசு வாங்கிக்கொண்டு நடித்தார்.//
1.நடிகர்களில் கமல் கொஞ்சம் வித்தியாசமானவர்.
2.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்.
3.இலங்கை தமிழர்மேல் உள்ளார்ந்த அன்புடையவர்
4.போலிக் கொள்கைகள் இல்லாதவர்.
5.பிரச்ச்னை எழுப்பாத பேச்சு வன்மை உள்ளவர்
6.பலலட்சங்கள் கொடுப்பாதாய் செய்திகள் வலம் வந்தபோதும் அரசியல் ஆசை இல்லாதவர்
7.நவின உலக பாரதி
8.பொதுடைமை புரட்சிப் பூங்கா
9.சிந்தனைச் சிற்பி
10.பண்பாளர்
நவம்பர் மாதம் 7ம் நாள் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து
தமிழ் இன உணர்வோடு தமிழ்கமெங்கும் ஓட்டப்பட்டுள்ள சுவொரொட்டி அவரது தூய மனதை இந்த உலகுக்கு பறை சாற்றுகிறது.
Hindi film SWADES கதாநாயகனை நினைவுபடுத்துகிறது. செந்தில்குமாரைப் போன்ற தன்னலம் கருதாத இளைஞர்கள் தான் இன்றையத் தேவை. வளரட்டும் அவரது தொண்டு.
பலருக்கு இதுபோன்ற ஆர்வம் இருந்தாலும் துணிந்து இறங்க தயங்கிக்கொண்டு இருப்பார்கள்.
தேவையான அளவு காசு சேர்த்துக்கொண்டு ( இது முக்கியம் என்று நினைக்கிறேன்) இது போன்று பல இளைஞர்கள் இதுபோன்ற இறங்கினால்தான் அரசியலை கூட நாம் சுத்தப்படுத்த முடியும்
கொசுறு
தகவலை பகிர்ந்ததற்கு நன்றி.
I am happy atleast / atlast a magazine like Kumudam comes out with such good articles.
I salure Senthil Kumar for his social service.
வாருங்கள் முத்து தமிழினி. குழந்தை எப்படியிருக்கிறாள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லா இருக்கா..நம்பர் கொடுங்க..நான் மொபைல் எடுத்துட்டு வரலை....
My mobile number remains the same at 09884012948.
Regards,
Dondu N. Raghavan
நல்ல பதிவு. செந்தில் குமார் ஒரு சிறந்த முன் மாதிரி.
இந்த 100% காப்பி/பேஸ்ட் பண்ணி போடுவது தப்பு, ஆனா, இங்க இருக்கும் சங்கதிக்கு வாய்தா கொடுக்கலாம்.
புல்லரிக்குது. எனக்கெல்லாம் இந்த 'உந்துதல்' ஏன் வரமாட்டேங்குதுன்னு தெரியல.
இதெல்லாம், 'தானா' வருமோ?
Well; this is the first time I'm commenting here. Don't you guys think you are glorifying something which is against the basic idea of 'governance'?
We pay taxes people. Why do we do that? So that the thugs in parliament can do something useful with that money. Whatever this computer guy is doing in that village, the government is supposed to do that. Not the people.
Our duty begins with paying taxes and ends with maintaining the status quo. It is the 'duty' of our so called leaders to put our tax money to good use.
By doing such things, you are sending just one message to the government. You can loot our money, get stinky rich, and screw the country. We'll just take care of ourselves.
Think.
நல்ல பதிவு. செந்தில் குமார் ஒரு சிறந்த முன் மாதிரி.
Inspiring post. Hats off to Senthil Kumar.
but Mr.Krishnan's comment too is very relevant. Good governance :
வறுமையை ஒழிக்க மூன்று அம்சங்கள் தேவை :
1.Free Markets
2.Welfare state
3.Good Governance
இதில் முதல் இரண்டை பற்றி போதிய விவாதங்கள், ஆய்வுகள் உள்ளன. சமீபத்தில் தான் மூன்றாவது விசியமான நல்லாட்சி பற்றி விரிவாக அனைவரும்
பேசுகிறார்கள். சட்டம் ஒழுங்கு, நேர்மை, ஊழல் இல்லாத நிலை, திறமையான நிர்வாகம், நியாயமான சட்டதிட்டங்கள் மற்றும் நேர்மையான, ஊழலற்ற delivery
mechanism for govt welfare programs.
இது இல்லாமல் ஒன்றும் பிரயோசனம் இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் வறுமைக்கு இது தான் முக்கிய காரணி...
இறுதியாக இந்த ஒரு சுட்டியை மட்டும் பார்க்கவும் :
Ethics, Corruption, and Economic Freedom
http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html
இந்திய அளவில் பாராட்ட வேண்டிய மனிதர்.
தமது நாட்டில் நமக்கு நாமே திட்டம் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?
அது எந்த அளவுக்கு மக்களை சென்றிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?
செந்தில்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும்.
கட்டுரையில் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வேலையைத் திடீரென்று உதறிவிட்டு திரும்பச்செய்த உந்துசக்கியாக எது இருந்தது என்பதைப் பற்றிக் குறிப்பிடவேயில்லையே.
நன்றி.
//வற்றாயிருப்பு சுந்தர் said...
செந்தில்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும்.
கட்டுரையில் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வேலையைத் திடீரென்று உதறிவிட்டு திரும்பச்செய்த உந்துசக்கியாக எது இருந்தது என்பதைப் பற்றிக் குறிப்பிடவேயில்லையே//
பெங்களூரு மற்றும் பலநகரங்களில் "இஸ்கான்" ஆலயத்தில்
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நகரங்களில் பெற்றுவந்த பல லடசங்கள் வருமானத்தை உதறிவிட்டு கடவுளை போற்றிப்பாடும்
HARE
KRISHANA
HARE
KRISHNA
KRISHNA
KRISHNA
HARE
HARE
HARE
RAMA
HARE
RAMA
RAMA
RAMA
HARE
HARE
ஆன்மிகப் பணியிலும்,ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவளிக்கும் அன்னதானத் திட்டத்திலும்,ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்வதிலும், கிரமா மக்களின் கல்விப் பணியிலும் ஈடுபடுகிறனர் படித்த இளைஞர்கள் (குறிப்பாக மென்பொருள் வல்லுனர்கள்) பலர்.
இதே போல் கோவை சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் ஈசா யோகமையத்திலும் உள்ளது.
அவர்களுக்கு கிடைக்கும் ஒரு ஆத்ம திருப்தி,மன நிம்மதி,பிறருக்கு உபயோகமாய் நாமும் இருக்கிறோம் என்ற உன்னத உணர்வு ,இன்னும் பலப் பல
இதற்கு முழுமையான விரிவான விளக்கம் டோண்டு ஐயாதான் சொல்லமுடியும்.அவரது அனுபவத்திலிருந்து பதில் சொல்வார்
More details about this article (copy & paste the following links in the browser)
http://www.payir.org/Home.html
http://ashauflorida.wikispaces.com/file/view/Ram's+2007+TripReport.pdf
http://picasaweb.google.com/payirindia/ThenurVillageHospitalInauguration#
http://payirtalk.blogspot.com/2007/07/payir-newsletter-no-4.html
Dear Sir,
I am also from Trichy. I am planning to goto Trichy on February. I am interested to meet him. Can you give his contact?
Thanks,
Mahesh
@மஹேஷ்:
இந்த உரலுக்கு சென்றால் செந்திலை தொடர்பு கொள்ள தேவையான விவரங்கள் கிடைக்கும்.
பார்க்க: http://www.payir.org/Home.html
அங்கிருந்து வேறு உரல்களுக்கு செல்லலாம்.
இதைத் தந்த அருண்குமாருக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த அளவுக்கு மனசு ரொம்ப பெரிசுங்க, பாராட்டுர தகுதி எனக்கெல்லாம் இருக்கான்னு தெரியல.
செந்தில் குமாருக்கு எனது வாழ்த்துக்கள் விகடனில் வந்த இன்னொரு சமூக சேவை முயற்சியை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...சாரலின் உறுப்பினன் என்பதில் பெருமையும் அடைகிறேன்..
விகடன் கட்டுரை:
''மகிழ்ச்சி வெள்ளம், குதூகலக் குற்றாலம்னெல்லாம் நம்ம உற்சாகத்தைப் பகிர்ந்துக்க என்னென்னவோ எழுதுவோம், பேசுவோம். ஆனா, பிறந்ததில் இருந்து சந்தோஷத்தோட சாரல்கூட படாதவங்களைப் பத்தி எப்பவாவது யோசிச்சிருக்கோமா?'' சின்னப் பெண்ணாகத் தெரிந்த அலேக்யாவிடம் இருந்து இத்தனை பெரிய கேள்வி!
ஜாலி, கேலி, அரட்டை, டேட்டிங் இத்யாதிகளுக்கான இணைய ஸ்பாட் ஆர்குட். ஆனால், இந்த சோஷியல் நெட் வொர்க்கிங் வெப்சைட்டை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அலேக்யா.
''வாழ்க்கையில் சந்தோஷ மழைக்காக ஏங்கிக்கிடப்பவர்களுக்கு எங்களோட சின்ன உதவி சாரலாக இது இருக்கட்டுமேன்னுதான் 'சாரல்' என்கிற பேரையே என் கம்யூனிட்டிக்கு வெச்சேன்!'' என்கிறார் அலேக்யா.
ஆர்குட்டில் 'ஒபாமா'வில் ஆரம்பித்து 'ஓசி டீ' வரைக்கும் பலப் பல விஷயங்களுக்கு 'கம்யூனிட்டி'கள் எனப்படும் ரசிகர் வட்டங்கள் இருக்கும். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்ற அரட்டை கம்யூனிட்டிகளுக்கு மத்தியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அலேக்யா உருவாக்கிய சாரல் கம்யூனிட்டியில் இப்போ 4,495 உறுப்பினர்கள்!
''எங்க குடும்பத்தில் பிறந்த நாள், திருமண நாள் மாதிரி சந்தோஷங்களை ஆதரவற்றோர் இல்லங்களில்தான் கொண்டாடுவோம். ஆர்குட்டில் யார் வேண்டுமானாலும் கம்யூனிட்டி ஆரம்பிக்கலாம்னு வாய்ப்பு கிடைச்சப்போ, என் சின்னக் கனவான சாரலை ஆரம்பிச்சேன். இது போன்ற கம்யூனிட்டியில் சேர ஆர்வம் காட்டுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா, ஆரம்பிச்சதுமே ஆயிரக்கணக்கில் ஹிட் அடிச்சிருச்சு சாரல். இப்போ அதில் இருந்து 60 உறுப்பினர்கள் சேர்ந்து, 'சாரல்' என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பைத் தொடங்கியிருக்கோம். ஒன்றரை வருஷங்களா ஈரமான இதயங்களின் இணைய இல்லமா இருக்கு சாரல்!'' என்று பூரிக்கும் அலேக்யாவின் வயது இருபத்து நாலு. இன்ஜினீயரிங் முடித்துவிட்டு எம்.பி.ஏ., படிப்பதற்காககக் காத்திருக்கிறார்.
''ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாத்தணும்னு ஆர்வமா இல்லங்கள் ஆரம்பிக்கிறவங்க கையில் காசு இருக்கிற வரை சமாளிச்சுடுவாங்க. அப்படி முடியாதபோது ஒழுகுகிற கூரை, ரெண்டு வேளை சாப்பாடுனு அந்த குழந்தைங்களுக்கு இன்னமும் சோகம் சேர்ந்துடும். அப்படி நிதி வசதி இல்லாம திண்டாடுகிற இல்லங்கள்தான் சாரலின் இலக்கு. இப்போதைக்கு நான்கு இல்லங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டுக் கொடுத்திருக்கோம். இரண்டு இல்லங்களைச் சேர்ந்த 85 குழந்தைகளுக்கு இந்த வருடத்திலிருந்து படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு இருக்கோம்.
சாரல் கம்யூனிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் படிக்கிற, வேலை பார்க்கிற இளைஞர்கள்தான். உசிலம்பட்டிப் பக்கம் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கட்டாயமா வேலைக்கு அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டோம். அந்தப் பெற்றோர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் கொடுத்துவிட்டு, குழந்தைகளைப் பள்ளிக்குஅனுப்பும்படி கேட்கப்போறோம். இன்னொரு சந்தோஷமான விஷயம், அப்துல் கலாமுடைய 'இந்தியா விஷன் 2020' திட்டத்தில் சாரலும் இணைந்து செயல்பட பரிந்துரை செய்யப்பட்டு பரிசீலனையில் இருக்கு. அவங்களோட இணையும் வாய்ப்பு கிடைச்சா, இன்னும் எங்கள் பணி வேகமா நிறையப் பேரைப் போய்ச் சேரும். நல்ல நோக்கமும் நண்பர்களும்தான் 'சாரல்' உருவானதற்குக் காரணம். இன்னும் நிறைய வேலைகள் காத்திருக்கு எங்களுக்கு... இல்ல நமக்கு!'' என்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது அந்தக் கனிவான ஓவியம். அலேக்யா என்றால் ஓவியா என்று அர்த்தம்!
Orkut Community Link:
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339
Really inspiring post which I had read in kumudam. Thanks for posting the link to his website Payir.
I have a blog called "Inspire Minds' in which I highlight successful stories to inspire others. Click the link to visit my blog.
http://changeminds.wordpress.com/
I intend to request senthil kumar to write his story to inspire our friends.
Thanks a lot for sharing this story.
A.Hari
Post a Comment