10/21/2009

விமரிசனத்தை நேருக்கு நேர் நின்று கொண்டு எதிர் கொள்ளும் கமலஹாசன் - 2

இப்பதிவின் முதற்பகுதி இங்கே.

சம்பந்தப்பட்ட மரைக்காயர் பதிவில் பேட்டியின் அடுத்தப் பகுதியும் வந்துள்ளது. முழுமை கருதி இங்கும் அது சுட்டப்படுகிறது. அதன் வரிகளை முதலில் பார்ப்போம்.

மக்கள் உரிமை: செப்.11, 2001 (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் மீது உலகளாவிய ஒடுக்குமுறை ஏவப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத்தால் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லிம்கள்தான். எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களே! என்ற கருத்து பரப்பப்படுகிறது. வலுவான குரலில்லாத முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்கள் ஒடுக்குவது சரியா?

கமல்: விவாதம் செய்வது என்று தொடங்கி விட்டால், விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் போகும். என்னைப் பொறுத்தவரை எல்லா சமுதாயங்களிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் நல்லவர்கள் என்றோ, குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் கெட்டவர்கள் என்றோ சொல்ல முடியாது. ஆர்.எஸ்.எஸ். பரப்பி வருகின்ற கருத்தான 'எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்'' என்ற கருத்தில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

'உன்னைப் போல் ஒருவன்' படம் பிடிக்காத பத்து முஸ்லிம் இளைஞர்கள் என் வீட்டின் மீது கல் வீசினால் அந்த பத்து பேர் மீது பத்து நாளைக்கு நான் கோபப்படலாம். ஆனால் அந்தக் கோபம் முஸ்லிம் சமுதாயமே இப்படித்தான் என்று திரும்பிவிடக் கூடாது. ஆனால் நடைமுறையில் அதுதான் நடக்கிறது. யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பொறுப்பாக்குவது மிகத் தவறானது.(அருகிலிருந்த இயக்குநர் அமீரை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக) இவர் ஒரு கொலையே செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அவர்தான் பொறுப்பு. அவர் சார்ந்திருக்கும் மதம் அவரது செயலுக்கு பொறுப்பாகாது. பயங்கரவாதத்தை மதத் தோடு சம்பந்தப்படுத்துவது தவறு. இன்றுகூட (9.10.2009) மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலரும் பலியான செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. அவர்களை மதத்தோடும், இனத்தோடும் சம்பந்தப்படுத்துவதில்லை. அவர்கள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் உரிமை: உன்னைப் போல் ஒருவன் படம் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தைத் தந்திருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் காணப் போகிறீர்கள்?

கமல்: முஸ்லிம்களைக் காயப்படுத் துவது என்பது என் நோக்கமல்ல. முஸ்லிம் களைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கமல்ல. நானும் இவரும் (அமீர்) இணைந்து சமுதாயத்திற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. இவர் (அமீர்) என்றால் இவருக்கு சமய நம்பிக்கை உள்ளது. எனக்கு இல்லை.

முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி படத்தில் தவறான செய்திகளைத் தந்துவிட்டு பிறகு, தெரியாமல் 'அறியாமையில் அவ்வாறு செய்துவிட்டேன்' என்று அறி யாமையை சிலர் கேடயமாக்கிக் கொள்ள லாம். ஆனால் நான் அறியாமையைக் கேடயமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. மேலும் நான் என்னைத் தற்காத்துக் கொள்ளவும் பேசவில்லை. படம் நன் றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை எதிர்த்து ஏதாவது செய்தால் அது ஒருவகையில் படம் மேலும் விளம்பரமாவதற்கு உதவும். மனக்காயப்பட்டிருந்தால் அந்தக் காயத்தை நான்தான் ஆற்றவேண்டும். அதை வெறும் விவாதங்களின் மூலம் செய்ய விரும்பவில்லை. செயல்பாடுகளின் மூலம் சரிசெய்ய விரும்புகிறேன்.

'நாம் மீண்டும் சந்தித்துப் பேசுவோம்'' என்று புன்னகையோடு பேட்டியை நிறைவு செய்தார்.


உன்னைப் போல் ஒருவன் படம் குறித்த 'கூர்மையான விமர்சனக் கணைகளை பிரதியெடுத்து கமலிடம் வழங்கினோம்.
நமது நியாயங்களை உணர்ந்து கமல் என்ன செய்யப் போகிறார்...? பொறுத்திருந்து பார்ப்போம்.


மீண்டும் டோண்டு ராகவன். நான் முன்பு சொன்னதுபோலத்தான். அதாவது, கமலஹாசனை எனக்கு நல்ல நடிகர் என்னும் முறையில் மிகவும் பிடிக்கும். மற்றப்படி அவரது தனி அபிப்பிராயங்கள் மற்றும் அவரது சொந்த வாழ்க்கை பற்றி நான் அலட்டிக் கொண்டதில்லை. அவரே ஏற்கனவே பலமுறை பல இடங்களில் கூறியது போல அவை முழுக்க முழுக்க அவரது சொந்த விஷயங்கள். எனது பார்வை கமல் என்னும் நடிகருடன் முடிந்து விடுகிறது. அதற்கு மேல் சென்றதில்லை.

இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்ப்பேனா என்றும் தெரியாது. ஆகவே அது பற்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியோ அவற்றுக்கான எதிர்வினை பற்றியோ எனது கருத்துகள் முன்முடிவு ஏதும் இல்லாமல்தான் இருக்கும். நான் இங்கு பார்ப்பது கமல் என்னும் கலைஞர் விமரிசனங்களை எவ்வாறு கையாளுகிறார் என்பது பற்றியே. பார்த்தவரை நன்றாகவே எதிர்வினையாற்றியுள்ளார்.

தீவிரவாதிகள் அனைவருமே இசுலாமியர் என்ற உணர்வு வருதலுக்கு முக்கியக் காரணமே, தாங்கள் நிகழ்த்திய ஒவ்வொரு தீவிரவாத நிகழ்வுக்கு பிறகும் அல்கொய்தா, தாலிபான் போன்ற அமைப்புகள் அந்த நிகழ்வை ஒரு புனிதப் போராகவே வர்ணிப்பதுதான் என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

33 comments:

Anonymous said...

மலேகோன் மற்றும் கோவாவில் வெடிச்சது யார் வாய்த்த குண்டு என்று முதலில் விளக்கவும்

வால்பையன் said...

நானும் படித்தேன்!

அனானியின் கேள்விக்கு என்ன பதில் என்று காத்து கொண்டிருக்கிறேன்!

dondu(#11168674346665545885) said...

@வால் பையன்
நிஜமாகவே அந்த குண்டுவிஷயங்கள் எனக்கு சரியாகத் தெரியாது. நீங்களே பதில் சொல்லுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஒரு பழைய வலைப்பதிவர் said...

தீவிரவாதச் செயல்கள் மதத்தின் பெயரால் நிகழ்த்துபவர்களை அந்த மதக்காரர்கள் முதலில் அவர்கள் மதத்தைவிட்டு ஒழிக்கவேண்டும்.

இஸ்லாமைச் சேர்ந்தவர்கள் சில உலகறிந்த தீவிரவாதிகள், சர்வாதிகாரிகளைக் கொண்டாடுகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் பெயர்கள் சூட்டுகின்றனர். இதனால் இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதிகள் என்ற எண்ணம் வலுப்பெறத்தான் செய்யும்.


மலேகாவ் குண்டுவெடிப்பு நிகழ்த்தியது இந்துக்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நோக்கம் என்ன என்பதை கண்டறியவேண்டும்.

ஒவ்வொறு முறை ஜிஹாதிகள் குண்டு வைக்கும் போது, இது இஸ்லாமுக்காக என்று தானே சொல்கிறார்கள் ? அவர்களை இதுவரை எந்த இமாமும் சமூகத்தைவிட்டு விலக்கிவைத்ததாகச் சரித்திரமே இல்லை.

kavirimainthan said...

அன்பு நண்பருக்கு,

கமல் மிகச்சிறந்த கலைஞர் -
மிக மிக புத்திசாலி - எந்தவிட சந்தேகமும் எனக்கும் இல்லை.

ஆனால் -


என் வலைத்தளத்தில் கமல் தொடர்புடைய சில இடுகைகள் வந்துள்ளன. நீங்கள் அவற்றைப் பார்த்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டுகிறேன் -

அறிஞர் கமல் !- 31/08/2009
கமலின் உன்னைப்போல் ஒருவன் -30/09/2009
கமலின் கொடை - 01/10/2009

http://www.vimarisanam.wordpress.com

அன்புடன் - காவிரிமைந்தன்

Anonymous said...

How long are we going to pretend like this?
There is good and bad in every religion.
When there are 1000 incidents involving Muslims happen for 1 incident involving Hindus/Christians and other religions, which are the ones are we going to be talking about? Hide behind the 1 incident and pretend that the other 1000 did not happen?
Cure for the disease can be found only when we recognize that there is a disease.

அச்சுதன் said...

அனானியே
இரண்டு இடங்களில் குண்டு வைத்ததை 2000 இடங்களுட-
ன் ஒப்பிடுகிறாயே.... கோவையில் காவலாளியை வெட்டிக்
கொன்றவது யார்... இரு வருடங்களுக்கு முன் மும்பையில்
தொடர் குண்டு வெடிக்க வைத்தது யார்... சென்ற வருடம்
பெங்களூரில் பொது இடங்களில் தொடர் குண்டு
வைத்தது யார்... பிறகு தாஜ் மற்றும் பார்சி குடியிருப்பில்
நுழைந்து மக்களைக் கொன்றது யார்... வருடாவருடம் அமர்நாத்
பனி லிங்கக் கோயில் தரிசனத்தின் போது வரும் பக்தர்களைக்
கொல்வது யார்.... சமீபத்தில் கூட தென்காசியில் ஹிந்து
முன்னணி பிரமுகர்களைக் கொன்றது யார்...


இந்தியாவில் நடக்கும் நூற்றுக்கணக்கான குண்டு வெடிப்புகள்
யாரால் நிகழ்கின்றன......

பாபர் மசூதி பாபர் மசூதி என்கிறார்களே... அது இடிக்கும்
முன் அங்கு ராமர் வழிபாடு தான் நடந்து கொண்டிருந்தை-
த அறிவீர்களா... அந்த மசூதியும் கைவிடப்பட்ட மசூதியாக-
த் தான் இருந்தது என்பதை அறிவீர்களா... அதை மசூதி
என்று கூறக் கூடாது ... அந்த கட்டிடம் கட்டப்பட்ட பிறகு
தொழுகைகள் நடைபெற வில்லை என்பதை அறிவீர்களா...


வடஇந்தியாவிலும் ஆந்திராவிலும் பெரும்பாலான கோயில்களை இடித்து மசூதியைக் கட்டியது யார்...

முதலில் உண்மையான இஸ்லாமியன் பிற மதத்தவறோடு
இயைந்து வாழவே முடியாது.

சும்மா மத சார்பிண்மை பேசி பேசி ஒன்னும் ஆகப்
போறதில்லை.

Venkat said...

My 2 cents. Every religion is making people behave non-sense. Because religion comes under belief system. Once we start supporting things/people/action under just belief and not backed by facts, we will go to any level to do the same and not be ashamed about it.

Having said that, it is unfortunate that certain violent sections in Islamic community have chosen the destruction route. Every time after committing a crime, these criminals quote from holy book and they claim they did such an act according to that. At that stage, clerics, religious heads will have to strongly condemn such incidents and have to counter the arguments of such criminals. Instead there is a dead silence on the part of the such so called religious elite (or media does not show those things).

Let us take an example of a school in Chennai/TN. The school is known for noteriety like school students messing up with the public. No matter how high the head master/school teacher talks before the public how great the school is about and what curriculum they teach etc, no one will even want to listen to that talk since proof of the school is demonstrated by student behavior in public. All anyone will say is - first teach discipline to the kids at school and let them demonstrate - let us discuss anything else after that.

In the interest of Islam religion - Muslim religious heads should come forward and try to modernise and make it current to follow. What changes they have to make - is completely up to them (people who follow a given faith).

Another important thing - The religion should be treated just as code of conduct but cases where law of land and religion crosses - law of land is utmost important. Period. Young people, rational thinkers in that religion should come forward and make such amends and make it a better place for them to live.

For poeple who claim Babri Masjid demolition triggered this and that - take the example of Sikhs. Congress sent troops inside Golden Temple angering sikhs. Are Sikhs still claiming the same and create ruckus on the day (every year) the troops were sent? I am not justifying babri masjid demolition. We have to move forward, living in the past does not take us forward...

All I am mentioning is - all of us individually have a bottom line in taking care of self, family and raising kids in a rational way/environment. Looking back is not going to help - look forward and keep moving. During my childhood days, I have played with my muslim friends, ate at their house, slept too. Can we imagine such instances for next generation kids.... Why we (all people) have to hang on with religion and fight each other...

Suresh Ram said...

செய்திக்கான சுட்டி ஏதேனும்?
http://timesofindia.indiatimes.com/slideshow/5125843.cms?imw=460

http://timesofindia.indiatimes.com/world/us/Obama-seeks-light-and-knowledge-from-Diwali/articleshow/5125834.cms

Anonymous said...

கேள்வி

கமல்ஹாசனின் பர்சனல் விஷயங்களை (அவரது நண்பிகள்/மனைவி என) பேச விருப்பமில்லை என்கிறீர்கள். பெரியாரின் பர்சனல் விஷயங்களில் மட்டும் ஏன் நுழைகிறீர்கள் ? அவருடைய கருத்துக்கும் பர்சனல் வாழ்வுக்கும் முடிச்சுப் போட்டு பல பதிவுகள் எழுதலாம். ஆனால் கமல்ஹாசன் பற்றி (அவரது பர்சனல் வாழ்க்கை) கருத்து சொல்ல மாட்டீர்கள், ஏனென்றால் அவரும் ஓர் பார்ப்பணர். ஐயங்கார். இதுதானே அந்த சலுகைக்குக் காரணம் ?

malar said...

இதில் குஜராத பம்பாய் கலவரத்தை பற்றி கோதர ரயில் விபத்து குஜராத்தில் இன்னும் சிறு பான்மையருக்கு எதிராக அநியாயங்கள் நடக்கிறது இதை பற்றிய நியாய அநியாயங்கள் விளங்கவில்லை

நல்லடியார் said...

//தீவிரவாதிகள் அனைவருமே இசுலாமியர் என்ற உணர்வு வருதலுக்கு முக்கியக் காரணமே, தாங்கள் நிகழ்த்திய ஒவ்வொரு தீவிரவாத நிகழ்வுக்கு பிறகும் அல்கொய்தா, தாலிபான் போன்ற அமைப்புகள் அந்த நிகழ்வை ஒரு புனிதப் போராகவே வர்ணிப்பதுதான் என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? /


டோண்டு ராகவன்,

அல்கொய்தா, லஷ்கரே தொய்பா, ஜெய்ஸே முஹம்மத், தாலிபான்கள் போன்ற இஸ்லாமியப் பெயரில் இயங்கும் தீவிரவாதிகள், விஸ்வ இந்து பரிசத், சிவசேனா, பஜ்ரங்தள், சனாதன் சான்ஸ்தா போன்ற இந்து தீவிரவாத அமைப்புகளைவிட சற்று நேர்மையானவர்கள்!:-)

மறக்காமல் இன்னின்ன குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் நாங்கள்தான் என்று ஒப்புக் கொள்கிறார்கள். (தீவிரவாதிகள் எதற்காக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்ள வேண்டும்? ஜனாதிபதி விருதா கிடைக்கப்போகிறது?)

கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு முதல் சமீபத்தில் நடந்த கோவா குண்டுவெடிப்புகள்வரை கைதானவர்கள் தாங்களே குண்டு வைத்தோம் என்று ஒப்புக்கொண்டு 'தேசபக்தி'யைக் காட்டாமல் இருப்பதை உங்களைப் போன்ற உயர்தர நடுநிலையாளர்கள் கண்டிக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்யாததால்தான் இஸ்லாமியப் பெயரில் நடத்தப்படும் தாக்குதல்களால் "தீவிரவாதிகள் அனைவருமே இசுலாமியர் என்ற உணர்வு" உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

காந்தி 'தற்கொலை' செய்து கொண்டது, 'இந்து தேசபக்தரான' மாவீரன் கோட்சேயை குற்றவாளியாக்க நடந்த சதி என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Anonymous said...

எம்.கண்ணன்

கேள்விகள்:

1. விக்ரம் புத்தி எனும் பர்டியூ யுனிவர்சிடி மாணவர்(முன்னாள் ஐஐடி) 2006ல் புஷ்ஷுக்கு எதிராக இணையத்தில் எழுதினார் என்பதற்காக அவர் செய்தது 'குற்றம்' என தண்டிக்கப்பட உள்ளார். கடந்த 3 வருடங்களாக சிறை. (சுமார் 30 வருடம் சிறை என தீர்ப்பு வரலாம் என பேச்சு.. நவம்பரில் தீர்ப்பு வரும்). அப்படியென்றால் தமிழ் பதிவுலகில் பலரும் இந்திய / தமிழக / அமெரிக்க ஆளுவோர்களை எதிர்த்து எழுதும் கன்னா-பின்னா பதிவுகளுக்கும் தண்டனை சாத்தியமா ?
http://economictimes.indiatimes.com/news/politics/nation/Indian-student-languishes-in-US-jail-alleges-abuse/articleshow/5135042.cms

2. அக்டோபர் முடியப் போகிறது. ஆனாலும் வெயில் இப்படி வறுத்தெடுக்கிறதே ? ஆந்திர / கர்நாடக வெள்ள நீரை பாலாற்றில் திருப்பி விட்டிருக்கக் கூடாதா ?

3. ஆனந்த விகடன் 'நிருபன்' பகுதி கட்டுரைக்காக புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பற்றிய செய்திக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறதே ? விகேஷ் விவகாரத்தின் நீட்சியோ ? http://www.vinavu.com/2009/09/04/spy/

4. உங்களைப் போல மொழிபெயர்ப்பு வேலை தவிர வீட்டிலிருந்த படியே கணினி / இணையம் மூலம் சுமாராக (Rs.10000 pm) சம்பாதிப்பதற்கு என்ன என்ன வழிகள் (சென்னையில் / தமிழ்நாட்டில் வசிப்பவருக்கு) உண்டு ? இந்த மாதிரி வேலைகள் தேடுவதற்கு சுட்டிகள் உண்டா ?

5. விவேக்குக்கு விகடன் குரூப் மேல என்ன கோபம் ? தினமலரை விட அதிகமாக விகடன் மீது பொங்கி எழுந்துள்ளாரே ? http://www.sivajitv.com/events/Film-Artistes-Protest-Rally-Part-2.htm

6. கமல் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் டைட்டிலில் இரா.முருகன் பேர் போடாவிட்டாலும் குமுதம், கல்கி போன்றவை முருகனாரிடம் கட்டுரை வாங்கி போடச்செய்து அவர் தான் 'ரைட்டர் சார்' என்பதை வெளிப்படுத்தி விட்டதே ? அதிலும் குமுதம் அவரை 'சிற்றிலக்கிய இதழ்' எழுத்தாளர்கள் வரிசையிலேயே இன்னும் வைத்திருக்கிறது போல - தீபாவளி 'இலக்கிய'ச் சிறப்பிதழில் அவரது உபோஒ கட்டுரை ?? (இதிலும் நமீதா மீது இடிக்காத குறையை விடமாட்டேனென்கிறாரே :-)) (விகடன் ஏன் முருகனை இன்னும் ஒதுக்கி வைத்திருக்கிறது ?)

7. நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) பிரச்னை சிக்கலாகிக் கொண்டிருக்கிறதே ? அரசு (மற்றும் ப.சிதம்பரம்) என்ன செய்ய வேண்டும் - உங்கள் கருத்துப்படி ?

8. உச்சநீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல்களான ஹரீஷ் சால்வே, நாரிமன், பராசரன், ராம் ஜெத்மலானி போன்றோர் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சார்ஜ் செய்வார்கள் ? ரூ.25000 ? அம்பானி, மாநில அரசுகள் என பலருக்கும் வாதாடுகிறார்களே ? அரசுக்காக வாதாடும் போது பணம் சரியாக பைசல் ஆகுமா ?

9. சமையல் கேஸ் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லையே ? இதில் ஸ்டீல் சிலிண்டர் வேறு அறிமுகப்படுத்துகிறார்களாமே ?

10. மடிக்கணினி வாங்கியதற்கு வாழ்த்துக்கள். ஏன் காம்பேக் வாங்கினீர்கள் ? டெல், மற்றும் இன்ன பிற இந்திய நிறுவனங்களில் மடிக்கணினிகள் நல்ல மாடல் குறைந்த விலையில் நன்றாக இருக்கிறதே ?

Anonymous said...

//
பெரியாரின் பர்சனல் விஷயங்களில் மட்டும் ஏன் நுழைகிறீர்கள் ? அவருடைய கருத்துக்கும் பர்சனல் வாழ்வுக்கும் முடிச்சுப் போட்டு பல பதிவுகள் எழுதலாம். ஆனால் கமல்ஹாசன் பற்றி (அவரது பர்சனல் வாழ்க்கை) கருத்து சொல்ல மாட்டீர்கள், ஏனென்றால் அவரும் ஓர் பார்ப்பணர். ஐயங்கார். இதுதானே அந்த சலுகைக்குக் காரணம் ?
//

ஈ.வெ.ரா பெரிய பருப்பு மாதிரி அடுத்தவர் பெர்சனல் விஷயங்களில் நுழைந்து, அவர்களுக்கு குடுமி வெட்டி, பூனுல் அறுத்து அழகு பார்த்திராவிட்டால், அவர் 10 பொண்டாட்டி கட்டி எயிட்ஸ் வந்து சீரழிந்திருந்தாலும் எந்த நாயும் ஏன் என்று கேட்காது.

அவர் நாயக்கர் என்பதால் இந்த சலுகை என்று நினைப்பீர்களா ?

வஜ்ரா said...

//
கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு முதல் சமீபத்தில் நடந்த கோவா குண்டுவெடிப்புகள்வரை
//

இந்தியாவின் முதல் பிரதமர் யார் ?

பதில் தர ஒரு குளு: அவரது பெயரின் முதல் எழுத்து "நே" கடைசி எழுத்து "ரு". நடுவில் ஒன்றுமே இல்லை.

நன்றி: கிரேசி மோகன்

சீனு said...

//.(அருகிலிருந்த இயக்குநர் அமீரை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக) இவர் ஒரு கொலையே செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அவர்தான் பொறுப்பு. அவர் சார்ந்திருக்கும் மதம் அவரது செயலுக்கு பொறுப்பாகாது.//

அது எந்த நோக்கத்திற்காக கொலை செய்கிறார் என்பதை பொருத்து. சொத்துக்காக கொலை செய்தால் மதத்தை இழுக்க முடியாது தான். ஆனால், "அல்லாவே உண்மையான கடவுள். அவருக்காக ஜிகாத்" என்று சொல்லி கொலை செய்பவரை என்னவென்று அழைக்க?

சீனு said...

//அனானியே
இரண்டு இடங்களில் குண்டு வைத்ததை 2000 இடங்களுட-
ன் ஒப்பிடுகிறாயே.... கோவையில் காவலாளியை வெட்டிக்
கொன்றவது யார்... இரு வருடங்களுக்கு முன் மும்பையில்
தொடர் குண்டு வெடிக்க வைத்தது யார்... சென்ற வருடம்
பெங்களூரில் பொது இடங்களில் தொடர் குண்டு
வைத்தது யார்... பிறகு தாஜ் மற்றும் பார்சி குடியிருப்பில்
நுழைந்து மக்களைக் கொன்றது யார்... வருடாவருடம் அமர்நாத்
பனி லிங்கக் கோயில் தரிசனத்தின் போது வரும் பக்தர்களைக்
கொல்வது யார்.... சமீபத்தில் கூட தென்காசியில் ஹிந்து
முன்னணி பிரமுகர்களைக் கொன்றது யார்...//

இதுக்கு வால், தலையை காட்டுவாரா?

Eswari said...

இந்திய மக்கள் தொகையில் 90% மேல் இந்துக்கள். முஸ்லிம் மக்கள் 5% சதவிகிதத்துக்கும் குறைவே (சரியாய் தெரியலை).

இந்த குறைந்த மக்கள் தொகையில் அதிகமான வெடிகுண்டுகளை வெடிக்க செய்து பல மக்களை பலி வாங்கி அதை புனிதம் என்று பெருமை படுத்தினால் அவர்களை........

விஜயன் said...

நல்லடியார் என்ற பெயரில் உள்ள கெட்ட அடியாரே!!
விஸ்வ இந்து பரிசத், சிவசேனா, பஜ்ரங்தள், சனாதன் சான்ஸ்தா
இவர்கள் யாரும் குண்டு வைக்கக் கற்றுத் தருவதில்லை. எதிரி
இப்படி இருக்கிறான். கவனம் என்று தான் கூறுகின்றனர்.

என்னமோ உத்தம புத்திரர்கள் போன்று குண்டு வைப்பதை
ஒப்புக் கொள்கிறார்களாம். ............................. பொது மக்களுக்கு
அசவுகரியம் செய்யும் எந்த ......... கடவுள் செய்யச் சொன்னா-
ன் என்று கூறுவது எவ்வளவு பெரிய மடத்தனம்.

அதிலும் செய்வதைச் செய்து விட்டு புனிதப் போர் மயிறு
போர் என்று வேறு கூறுவது நாகரீக மனிதன் செய்யும்
செயல் அல்லவே.

துப்பாக்கியும் கையுமாக வந்து ரயில் நிலையத்தில் பொதுமக்-
களையும் மற்றவர்களையும் சுட்டுக் கொன்றவனை மாட்டுக்
கறி கொடுத்து சீராட்டிக் கொண்டிருக்கிறதே இந்த அரசு -
அவன் இன்னும் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாக-
த் தெரியவில்லையே

உயர்தர நடுநிலையாளர்கள் கண்டிக்க வேண்டுமாம்....
என்னவோ தீவிரவாதம் செய்வது எமது பிறப்புரிமை என்பது
போல செய்து கொண்டிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளைக்
கண்டியுங்கள் முதலில்.

ஒரு சாமான்யன் இஸ்லாமிய குடியிருப்புக்குள் நுழையத் தயங்-
குவதும் அந்த குடியிருப்புகளில் தீவிரவாதிகள் மற்றும்
அவர்களுக்கு உதவுபவர்களைத் தங்க வைப்பதும் நடந்து
கொண்டுதானே இருக்கிறது.

மகாத்மாவைக் கொன்றது கூட ஒரு இந்து தான். அவன் ஓடிப் போய்
விடவில்லை. தண்டனையை ஏற்றுக் கொண்டான்.

இப்போதுள்ள கோவை சிறையில் கோவை குண்டு வெடிப்புத்
தீவிரவாதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்களா.... கேட்டால்
அப்பீல் செய்துள்ளோம் என்பார்கள்......

முதலில் இஸ்லாமியர் என்ற உணர்வு இஸ்லாமியர்
அனைவரிடமும் இருந்தால் அவனால் மற்ற மதத்தினரோடு
இயைந்து வாழவே முடியாது என்பதை வழிமொழிகிறேன்.

இறைவா எங்களை ஏசுவிடமிருந்து காப்பாற்று
அல்லாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

dondu(#11168674346665545885) said...

@விஜயன்
நல்லடியார் எனது நண்பர். சற்றே மரியாதையுடன் அவரை விளிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
இந்திய மக்கள் தொகையில் 90% மேல் இந்துக்கள். முஸ்லிம் மக்கள் 5% சதவிகிதத்துக்கும் குறைவே (சரியாய் தெரியலை).
//

இந்துக்கள் 80%
முசுலீம்கள் 14%
கிருத்தவர்கள் 2%
சீக்கியர்கள் 2%
மற்றவர்கள் 2%

ஆதாரம்:
விக்கிபீடியா

Anonymous said...

எனக்கு தெரிந்து பாகிஸ்தான் போரில் வென்றாலும், கிரிக்கெட்டில் இந்தியாவைத் தோற்கடித்தாலும் அதை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நேரடியாக பார்க்கவேண்டுமென்றால், கீழக்கரை போய் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் விடுதியில் டிவி முன் அமர்ந்து டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கும் போது கைதட்டிப்பார். உன் கை அங்கேயே வெட்டப்படும்.

இங்கே உள்ள பல வலைப்பதிவர்கள் போலி மதச்சார்பின்மையையும், தேசிய ஒருமைப்பாட்டையும் போட்டு குழம்பியுள்ளார்கள் ஆனால் என்னைப்பொருத்தவரை கமல் இதில் தெளிவாக உள்ளார்.

Arun Kumar said...

என்னை பொருத்தவரை கமல் ஒரு வியாபாரி + சுயநலவாதி .அதை தன் வாழ்ககையில் பல முறை நிருபித்தவர்.

Angles and daemons சுட்ட தசாவதாரத்தை தன் சொந்த கதை என சொல்லும் போதே சம்ம காமேடியாக இருந்தது.

அவரு அறிவாளி போல தன்னை காட்டி கொள்ள ஆசை படுகிறார். அவ்வளவு தான்

வால்பையன் said...

//இதுக்கு வால், தலையை காட்டுவாரா? //

மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் செய்யும் கொலைகளை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது!
அது குல்லா போட்ட அல்லாவாகயிருந்தாலும் சரி, பூணூல் போட்ட பெருமாளாக இருந்தாலும் சரி!

ரமேஷ் கார்த்திகேயன் said...

//Arun Kumar said...

என்னை பொருத்தவரை கமல் ஒரு வியாபாரி + சுயநலவாதி .அதை தன் வாழ்ககையில் பல முறை நிருபித்தவர்.

Angles and daemons சுட்ட தசாவதாரத்தை தன் சொந்த கதை என சொல்லும் போதே சம்ம காமேடியாக இருந்தது.

//
அதே வேலையை தான் நீங்களும் செய்துகொண்டு இருக்கிறீர்கள் . software engineer யாரோ உருவாகிய technology -i உங்கள்ளுக்கு தேவையானதாக மாத்துகின்றீர்கள்

//
அவரு அறிவாளி போல தன்னை காட்டி கொள்ள ஆசை படுகிறார்.
அவ்வளவு தான் //


நீங்க ஆசை படவில்லையா
இங்கே உங்களை புத்திசாலியாக காட்டி கொள்ள

dondu(#11168674346665545885) said...

//அதே வேலையை தான் நீங்களும் செய்துகொண்டு இருக்கிறீர்கள் . software engineer யாரோ உருவாகிய technology -i உங்கள்ளுக்கு தேவையானதாக மாத்துகின்றீர்கள்//

ஆனால் நம்ம அருண்குமார் அந்த மென்பொருள் தன்னுடையது என சொல்லிக் கொள்ளவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
//அதே வேலையை தான் நீங்களும் செய்துகொண்டு இருக்கிறீர்கள் . software engineer யாரோ உருவாகிய technology -i உங்கள்ளுக்கு தேவையானதாக மாத்துகின்றீர்கள்//

ஆனால் நம்ம அருண்குமார் அந்த மென்பொருள் தன்னுடையது என சொல்லிக் கொள்ளவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

கமல் காப்பியடித்து வெற்றி பெற்ற படங்கள்:

தெனாலி: What about bob (அப்படியே காப்பி)
அவ்வை ஷன்முகி: Mrs. Doubtfire (அப்படியே காப்பியடிக்கப்பட்ட கதை)
பஞ்தந்திரம்: Very bad things (தழுவல்)

மணிப்பக்கம் said...

I Love Arunkumar & vijayan here!

// நல்லடியார் என்ற பெயரில் உள்ள கெட்ட அடியாரே!!// by vijayan

// அவரு அறிவாளி போல தன்னை காட்டி கொள்ள ஆசை படுகிறார். அவ்வளவு தான் // by Arun kumar

நெத்தியடி முஹம்மத் said...

"எல்லா ஹிந்துக்களும் ஆர.எஸ்.எஸ்.காரர்கள் அல்லர். ஆனால், எல்லா ஆர.எஸ்.எஸ்.காரர்களும் பயங்கரவாதிகளே..!" ----- இதில் கமலை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அவர் மூன்றும் சேர்ந்த கலவையாக மாறிவிட்டார்.

Anonymous said...

///காந்தி 'தற்கொலை' செய்து கொண்டது, 'இந்து தேசபக்தரான' மாவீரன் கோட்சேயை குற்றவாளியாக்க நடந்த சதி என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?///

wow..! Super, Nalladiyaar..!

Anonymous said...

/////தென்காசியில் ஹிந்து
முன்னணி பிரமுகர்களைக் கொன்றது யார்...////

oh! my dear poor, achudan..1
Don't you know the murdurers were arrested and now in jail...? They are all nothing but the same RSS group people who put bomb to RSS office..! As it became a boomarang news, it did not come in all news papers and in one or two that also in the middle somewhere in smaal letters in few lines. This is called secularism in our India.

siruthai said...

இனம் இனத்தை சேரும் என்பது தமிழர் வாக்கு!.. இதில் பொய் என்று ஏதும் இல்லை..ஈழ தமிழர்களுக்காக 16 தமிழ் உறவுகள் தீக்குளித்த போது வடநாட்டான் எவனும் கண்டு கொள்ளவில்லை.. காரணம் அவன் வேறு ரத்தம்.. அவர்களுக்காக தமிழ்நாட்டில் நாம் அழ வேண்டுமாம்..அட சீ..

அதே ஆரிய பிம்பம் கமல் மூலமாக குண்டு வெடிப்பைவைத்து இந்தி தேசிய குப்பையை மீண்டும் தமிழர் நாட்டில் வளர்க்க பார்க்கிறது.. உன்னை போல ஒருவன் ..பேராண்மை என்று படங்கள் வருவதையும்.. நான்கே நாட்களில் ஈழதமிழர்களுக்கு விடு'தலை' வாங்கி தந்தையும் கூட்டி கழித்து பார்த்தால் தமிழ் இளைஞர்களிடையே இன்று வளர்ந்து வரும் தமிழ் தேசிய விடுதலை உணர்வை மழுங்கடிக்கும் ரோவின் செயலாகவே இது எனக்கு படுகிறது..

வஞ்சமில்லா said...

When there is a bomb blast we would never know who was behind the blast. Even the same nation's secret agencies can blast the bomb and put the blame on any body to get bigger benefits, thinking they are doing it for the nation. This is not new in Politics. This is very old technique in politics right from BC.

Everybody here left their comments with the strong assumption that its the whole (atleast majaority of) Muslim population in india that gathered and planned the bombings that happened through out history. This is not true as for the obvious reasons.

Our thought process is totally based on the movies we see and the heresay stories that are baseless and logic less.

How can one be critical and cry about bunch of frustrated, corrupted men in sucidal mentality, but not about the people who planned, orchestrated and executed happenings/riots of Guarat, Mumbai, Mangalore, Coimbatore, Ayodhi, Bilwandi etc? When the whole city is looting, raping, killing muslim men, women and children and no body would care of whats happening to fellow men and nothing would happen to those rapers or looters or killers afterwards, even the title of terrorists, how about that?

The terrorists who trigger the bomb (we dont know for sure if he is doing it for money or if its the secret agencies themselves behind it or if he is really a muslim first o all) is really cruel.

But the fact that, hundreds of thousands of people from one community gathering together and gang raping and killing and looting is the most cruel and horrible act. Its the most barbaric, its the most terrorising thing in this world.

How many of you are really ready to talk about that without coming up with excuses or being biased.

How many movies they have taken about that? If Kamal Hassan can show the pain of Muslims in this ground as well, then we can see him as a real artist with social welare in mind. Otheriwse he is one more selfish or racist who is using the opportunity for his own selfish goals, thats all.

If some body's wife can be killed because he has three wives (certainly ther will be less than 1% muslims in India who has more than one wife), and if some body is showing it in a movie with whatever character portrayal it be and trying to jutify it, you think its so perfect? Even Kamal has more than one wife. He has more than one daughter. He has more than one sister/cousin. Is it ok...?

Lets try to be really unbiased if we claim to be.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது