10/07/2009

La provocation policière

பிரெஞ்சில் இருக்கும் தலைப்பைப் பார்த்து பயப்பட வேண்டாம். போலீசாரால் தூண்டப் பெற்ற குற்றங்கள் என்றுதான் அதற்கு பொருள் கொள்ளப்படுகிறது. இந்தத் தலைப்பில் சமீபத்தில் 1979-ல் ஒரு புத்தகம் படித்தேன். குற்றவாளிகளை பிடிக்க பாடுபடும் போலீசார், சில சமயம் வேண்டுமென்றே மெனக்கெட்டு இவர்களாகவே குற்றம் புரியும் சூழ்நிலையை உருவாக்கி, சிலரை ஆசைக்காட்டி அழைத்து வந்து, அவர்களை அக்குற்றங்களைச் செய்வித்து பிறகு பிடித்து மெடல் வாங்கும் பல நிகழ்ச்சிகள் அதில் உண்மையான உதாரணங்களுடன் சித்தரிக்கப்பட்டிருந்தன. போலீஸ் என்றாலே உலகம் முழுக்க அப்படித்தானா என்ற ஏக்கமும் வந்தது.

நம்மூரில் கூட பார்த்திருக்கலாம். போக்குவரத்து போலீசார் ஹால்ட் & கோ என்று இருக்கும் போர்டுகளுக்கு சற்று தள்ளி மாருதி ஜிப்சியுடன் ஒளிந்திருப்பார்கள். ஏதேனும் கார்க்காரன் தெனாவெட்டாக அதை கடக்கும் போது பின்னால் துரத்திச் சென்று பிடிப்பார்கள். அப்போதுதானே கேஸ் கிடைக்கும், மாதக் கடைசி தொல்லையும் இல்லாதிருக்க இயலும்?

இதெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன்? நடிகை புவனேஸ்வரியை போலீசார்களே போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து அவரை வரவழைத்து பிடித்த நிகழ்ச்சி முதல் பார்வையிலேயே provocation policière என அறிய முடிகிறது. எழுபதுகளில் சோ அவர்களது நாடகம் யாருக்கும் வெட்கமில்லை பற்றி நான் எழுதிய இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

“கதாநாயகி பரிமளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.

இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அதில் ஒரு காட்சி.

முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ரங்கநாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.

அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:

"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கநாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"

நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.

இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.

ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (வேண்டுமென்றே?) பதிலளித்தார்.

கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிப்பதில்லை?"

பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"

வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது என நினைக்கிறேன். இவ்வாறு யாராவது ரிட் பெட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப்பது”?

“இதே நாடகத்தில் இன்னொருக் காட்சி நினைவுக்கு வருகிறது. கதாநாயகி நீதிமன்றத்தில் வைத்துக் கூறுவார்:"என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை இங்கு இருப்பதைக் காண்கிறேன். நாளைக்கும் அவர் வந்தால் அவர் யார் என்பதைப் பகிரங்கமாகக் கூறிவிடுவேன்"

அடுத்த நாள் பார்த்தால் வேறு நீதிபதி வந்திருப்பார்”.


அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

இங்கே புவனேஸ்வரி விவகாரம், இந்தப்பழங்கதையை எல்லாம் தாண்டி வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து விட்டதே, அதைக் கவனிக்கவில்லையா?

மணிக்கு இத்தனை ரேட் என்று பேசிக் கலைச் சேவை செய்யும் தொண்டு உள்ளங்களுக்காகக் கச்சை கட்டிக் கொண்டு நடிகர் சங்கம், முதல்வருக்கு மனுக் கொடுத்திருக்கிறதே!

மானாட மயிலாட என்று கலைச் சேவை செய்பவர் எவராய் இருந்தாலும் இங்கே முதல்வரின் விசேஷ கவனிப்புக்கு ஆளாகிவிட முடிகிறதே!

எய்தவர் எவரோ! அம்பை நொந்து என்ன பயன்?

Anonymous said...

நடிகையின் பெயரை திருத்தவும்.

"சோ" வின் நடக்கக் காட்சிகள் அருமை .

நிதிபதி மாறி இருப்பது "நச்"

குப்புக் குட்டி

Anonymous said...

http://www.dnaindia.com/india/report_teacher-raped-in-delhi-as-police-bicker-over-jurisdiction_1295676

Delhi's status as the crime capital of the nation was reaffirmed when a 20-year-old computer teacher was allegedly raped by five men in the city on Tuesday evening. Her male colleague, who came to the rescue, was beaten up.

The incident took place near a private computer institute in Sultanpuri (West Delhi) at around 8.30 pm. The victim had stepped out of the institute with colleague Satya Prakash when three men started teasing her.

When Prakash objected, he was brutally beaten up and she was forcibly carried away in a car to a railway track nearby. There, the teasers were joined by another two men and they took turns to rape her.

Although Prakash was quick to alert the police, tracing the victim took time because of a dispute over jurisdiction between officers of Nangloi and Sultanpuri police stations.
When finally the girl was found, it was too late. She was lying near the tracks in a bruised condition.

"The girl stays in the same locality (Sultanpuri)," a senior police officer said, adding, "Medical examination has confirmed rape." The victim and her colleague are undergoing treatment at Sanjay Gandhi Hospital, he said.

வால்பையன் said...

விபச்சாரம் ஏன் தண்டிக்கபட வேண்டிய குற்றம்!?

எனகென்னவோ அதுவே கேனதனமா இருக்கு!

ஒருவேளை வர்ற வருமானத்தில் வரி கட்டினால் விட்டுவிடுவார்களோ!

பெண்ணை போல் ஒருவன் said...

//விபச்சாரம் ஏன் தண்டிக்கபட வேண்டிய குற்றம்!?//

போதை மருந்து விற்பனை ஏன் தண்டிக்கப்படவேண்டிய குற்றம்?

வார்னிஷ் சாராயம் விற்பது ஏன் தண்டிக்கப்படவேண்டிய குற்றம்?

கொள்ளை அடிப்பது ஏன் தண்டிக்கப்படவேண்டிய குற்றம்?

இப்படியே இன்னும் கேள்வி கேட்டு கிட்டே போங்களேன்?

இவை போன்ற அனைத்திலும் வரும் வருமானத்தில், அரசாங்கத்துக்கு வரி கட்டி விட்டால் அந்த குற்றவாளிகளையும் விட்டு விடலாமே?

அது சரி, இதுக்கெல்லாம் morality, values, ethics அப்படீன்னு எல்லாம் இருக்கறவங்கதான் கவலை படணும், இல்லையா?

dondu(#11168674346665545885) said...

//அது சரி, இதுக்கெல்லாம் morality, values, ethics அப்படீன்னு எல்லாம் இருக்கறவங்கதான் கவலை படணும், இல்லையா?//
வாடிக்கையாளரை சுதந்திரமாகச் செல்ல அனுமதித்து பெண்ணை மட்டும் தண்டிக்கும் சட்டம் பற்றித்தான் பேசுகிறோம். ஆணுக்கு கட்டுப்பாடு தேவையில்லைன்னு ரங்கநாதன்கள் சொல்லறதுதான் ஒழுக்கமான விவகாரம் அப்படீங்கறீங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெண்ணை போல் ஒருவன் said...

//வாடிக்கையாளரை சுதந்திரமாகச் செல்ல அனுமதித்து பெண்ணை மட்டும் தண்டிக்கும் சட்டம் பற்றித்தான் பேசுகிறோம். ஆணுக்கு கட்டுப்பாடு தேவையில்லைன்னு ரங்கநாதன்கள் சொல்லறதுதான் ஒழுக்கமான விவகாரம் அப்படீங்கறீங்க.//

அப்படி எங்கே சொன்னேன்? வாடிக்கயாளர்களையும் பிடித்து உள்ளே போட்டுவிட இப்போதும் சட்டம் உள்ளது. அது எங்கும் போய்விட வில்லை.

வாடிக்கையாளர்களை போலீஸ் பிடிக்கவில்லை என்பதற்காகவே, விபச்சார தடுப்பு சட்டமே தேவை இல்லை என்று சொன்னதற்க்குதான், நான் comment செய்தேன்.

Please do not twist my comments or try to answer like minister Bharadwaj in the TV interview referred by you.

dondu(#11168674346665545885) said...

//Please do not twist my comments or try to answer like minister Bharadwaj in the TV interview referred by you.//
Sorry, the law is clear. Only the prostitute and her pimp are punished for soliciting. The clients are not covered by the SITA. They go scotfree after testifying that the prostitute solicited their patronage.

No amount of your whitewashing the act and the actual practice will stand strict scrutiny.

Regards,
Dondu N. Raghavan

பெண்ணை போல் ஒருவன் said...

//Only the prostitute and her pimp are punished for soliciting.//

That is because the police is unable to prove before law that the customer was also a party to the immoral act.

// They go scotfree after testifying that the prostitute solicited their patronage.//

It is not after 'testifying' but 'proving'. As far as my knowledge goes, even the customer, if proved beyond reasonable doubts, will be found guilty as per the law as it stands today.

//No amount of your whitewashing the act and the actual practice will stand strict scrutiny.//

I didn't try to whitewash or color wash any thing or any one. On the contrary, you are the one who is supporting irresponsible comments which wants the Immoral Traffic itself to be legalised. Is it the case of Pot calling the Kettle Black?

I reiterate once again that I have no sympathy to such people who go to prostitutes. I fully agree with your contention that even the customers should be brought to justice. No second opinions on that.

dondu(#11168674346665545885) said...

// I fully agree with your contention that even the customers should be brought to justice. No second opinions on that.//
Thanks for the understanding. But the reality is bleak and the law is noticeably silent on that aspect.

Till such time a proper punishment is meted out to all the parties, the law will stand exposed to such attacks.

Regards,
Dondu N. Raghavan

M Arunachalam said...

1. நடிகை புவனேஸ்வரியின் செயலுக்கும், மருத்துவரின் அரசியல் flip-flop க்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?

2. நடிகர் வடிவேலுவின் விஜயகாந்துக்கு எதிரான வீராப்பு பேச்சும், பின்பு தேர்தல் சமயத்தில் அதே வடிவேலு பேச்சு, மூச்சே இல்லாமல் போனதற்கும், திருமா, குருமா போன்றவர்களின் இலங்கை வீராப்பு பேச்சுகள் சமயம் வரும்போது (தேர்தல் சமயம்) சத்தமின்றி மறந்து போய் அதுவரை எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டு வைப்பதற்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?

Suresh Ram said...

"Prostitution" means engaging in or agreeing or offering to engage in sexual conduct with another person under a fee arrangement with that person or any other person.

Where is discrimination?

//வாடிக்கையாளரை சுதந்திரமாகச் செல்ல அனுமதித்து பெண்ணை மட்டும் தண்டிக்கும் சட்டம் பற்றித்தான் பேசுகிறோம்.//
//நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது என நினைக்கிறேன்.//
Sec (7)Prostitution in or in the vicinity of public place .—(1) Any person who carries on prostituion and the person with whom such prostitution is carried on, in any premises..
http://ncpcr.gov.in/Acts/Immoral_Traffic_Prevention_Act_(ITPA)_1956.pdf

""person with whom such prostitution is carried on""

***************************
http://www.sexwork.com/coalition/whatcountrieslegal.html
What countries have legal prostitution?"

வால்பையன் said...

//பெண்ணை போல் ஒருவன்//

வித்தியாசமான பெயர்!
சரி அதை விடுங்க!

விபச்சாரம் என்பது உடலுறவை தானே குறிக்கிறது! போதை பொருள் உபயோகத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்!, உடலுறவு நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றா!?

அரசே சரக்கு மட்டும் விற்கலாமா!?

Anonymous said...

//மானாட மயிலாட என்று கலைச் சேவை செய்பவர் எவராய் இருந்தாலும் இங்கே முதல்வரின் விசேஷ கவனிப்புக்கு ஆளாகிவிட முடிகிறதே!//

இதெல்லாம் இங்கே ஜகjam.!

அட்ரா சக்கை அட்ரா சக்கை கேசுதான்!

Anonymous said...

//நடிகையின் பெயரை திருத்தவும்.

"சோ" வின் நடக்கக் காட்சிகள் அருமை .

நிதிபதி மாறி இருப்பது "நச்"

குப்புக் குட்டி//

மீண்டும் தங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்!

பெண்ணை போல் ஒருவன் said...

//விபச்சாரம் என்பது உடலுறவை தானே குறிக்கிறது! போதை பொருள் உபயோகத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்!, உடலுறவு நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றா!?//

Very innocent question (!) நாட்டுல இப்பிடிப்பட்ட அப்பாவிகளா? ஐயோ பாவம்.

விபசாரம் என்பது உடலுறவு மட்டும் அல்ல; அது "பணத்துக்காக உடலுறவு கொள்வதை அல்லது விற்பதை" குறிக்கிறது. அது சட்டத்தால் இந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றே.

சில மருந்து வகைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு "போதை மருந்து" என்று குறிப்பிட படும் சில கெமிக்கல்கள் கலந்து இருக்கலாம். இவற்றை மருத்துவர்கள் அறிவுரைப்படி நோயாளிகளுக்கு வழங்க எந்த தடையும் அரசாங்கம் விதிக்க வில்லை. ஆனால், முறையின்றி அல்லது குறிப்பிட்ட அளவினை தாண்டி உபயோகபடுத்தப்படும் சில போதை வஸ்துக்களுக்கு (பணத்துக்கு உடலுறவு கொள்வதை போல) சட்டம் தடை விதித்துள்ளது.

விபச்சாரத்தை (பணத்துக்கு உடலை விற்பதை) போல சட்டம் போதை மருந்து உபயோகத்துக்கும் தடை விதித்துள்ளது. விபசாரத்துக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் போதை மருந்துக்கு அடுத்து வக்காலத்து வாங்க வேண்டியதுதானே?

Hope next you will not come out with another gem of yours asking "கொள்ளை அடிப்பதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? கொள்ளை அடிப்பது என்பது இல்லாதவன், இருப்பவனிடம் இருந்து எடுப்பதுதானே?"

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது