10/23/2009

இன்னும் அதிக புதிர்கள்

போன புதிர்கள் பதிவிலிருந்து இன்னும் விடையளிக்கப்படாத கேள்விகள் இங்கே முதல் மூன்று கேள்விகளாக வருகின்றன.

1. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?

2. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்? இத்தனைக்கும் அவங்க சாப்பிட்டது ஒரே ஒரு பழம்தான்.

3. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?

4. கண்ணப்பர் அந்த 26 மாடி கட்டடத்தின் மேல் மாடி ஜன்னலிலிருந்து பார்க்கிறார். ஒரே போர் அடிக்கிறது. ஜன்னல் கதவைத் திறந்து அதன் வழியே குதிக்கிறார். செங்குத்தான கட்டிடம். கீழே மெத்தை போன்று ஒன்றையும் காணோம். அப்படியும் கீழே விழுந்தும் கண்ணப்பருக்கு அடி ஏதும் படவில்லை. அவர் பாரச்சூட்டும் உபயோகிக்கவில்லை. என்ன நடந்தது?

5. இரண்டு கார்கள் மலைப்பாதையில் வளைந்து வளைந்து வந்து அந்த பூங்காவின் வாசலில் வந்து நிற்கின்றன. ஏழு பேர் இறங்கி பார்க்கில் செல்கின்றனர். திடீரென மழை ஆறு பேரிடம் குடை எல்லாம் இருந்தன. ஏழாமவரிடம் அது ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஆறுபேர் நனைந்து விடுவோமா என அஞ்ச, ஏழாமவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. அந்த ஆறு பேர் சொட்டச் சொட்ட நனைகின்றனர் ஆனால் ஏழாமவர் நனையவேயில்லை. இது எங்கனம்?

6. கோவிந்தசாமி கொலைக்குற்றச்சாட்டுக்கு இலக்காகி தூக்கு தண்டனை கிடைக்கிறது. கண்டம் செல்லிலிருந்து தப்பித்து ஓட்டம் எடுக்கிறான் அவன். கைவசம் ஒரு துப்பாக்கி வேறு. ஒரு விமானத்தில் திருட்டுத்தனமாக ஏறி, அதையும் ஹைஜாக் செய்கிறான். பிறகு துப்பாக்கி முனையில் எல்லோரையும் பயமுறுத்தி 5 லட்சம் ரூபாய் பணமும் ஒரு பாரச்சூட்டும் கேட்டு பெறுகிறான். துப்பாக்கி முனையில் பைலட்டை பயமுறுத்தி பிளேனை ஓட்டச் செய்கிறான். பிளேன் சிறிது தூரம் பறந்ததும் பாரச்சூட் துணையுடன் கீழே குதிக்கிறான். ஆனால் பணத்தை மறதியாக பிளேனிலேயே விட்டு விடுகிறான். பிறகு விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி பணத்தை மட்டும் எடுத்து அரசு கஜானாவில் செலுத்தி விட்டு, கேஸ் அவ்வளவுதான் என்கிறார். தப்பிய குற்றவாளியை பிடிக்க வேண்டாமா?

7. ஒருவன் திநகர் பனகல் பார்க்கிலிருந்து ஜெமினி வரை நடக்கிறான். பட்டப் பகல் வேளை. தெருவெல்லாம் கும்பல். இருப்பினும் அவ்வாறு நடந்து செல்லும்போது ஒருவரையும் அவன் பார்க்கவில்லை. வேறு யாரும் அவனைப் பார்க்கவும் இல்லை. எவ்வாறு?

8. ஒரு ஐந்து கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலம். அது பத்தாயிரம் கிலோகிராமுக்கு மேல் ஒரு கிராம் கூட அதிகம் பாரம் தாங்காது. ஒரு லாரி, அதன் எடை சரியாக 10,000 கிலோகிராம், பாலத்தில் விரைந்து செல்கிறது. பாலத்தின் நடுவில் ஒரு சிறுபறவை முப்பது கிராம்தான் எடையிருக்கும். அது பறந்து வந்து லாரியின் மேல் உட்காருகிறது. அப்போதும் பாலம் உடையவில்லை? ஏன்?

9. ஒரு தந்தை தன் பெண்ணிடம் கூறுகிறார். “நீ அன்னிக்கு ரொம்ப லேட்டாக விடியற்காலை மூன்று மணிக்குத்தான் வந்தாய். உனக்காக நானும் உன் அம்மாவும் ரொம்பக் கவலையுடன் காத்து கொண்டிருந்தோம். இனிமேலும் இம்மாதிரி நடக்கவே கூடாது என விரும்புகிறேன்” கண்டிப்பாக அம்மாதிரி நடக்க சான்ஸே இல்லை அப்பா” என பெண் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறாள். அவள் எப்படி அதை அவ்வளவு நிச்சயமாகக் கூறினாள்?

10. ஒரு குறிப்பிட்ட நாட்டின் அரசு தனது ஒரு துறையில் வேலை செய்பவர்களுக்கு தினம் இலவசமாக பிஸ்கட்டுகள் தருகிறது. அவை அவர்கள் சாப்பிட அல்ல, பாதுகாப்புக்காக வழங்கப் படுகிறது. என்ன நடக்கிறது இங்கே?

அன்புடன்,

டோண்டு ராகவன்





73 comments:

குப்பன்.யாஹூ said...

டோண்டு சார், இன்டர்நெட் கூகிள் காலத்திலும் புதிர் போட்டிகள் அவசியமா

dondu(#11168674346665545885) said...

@குப்பன் யாஹூ
சரி, அப்படியாவது விடையை சொல்லுங்களேன். யார் உங்களை தடுத்தது?

போன பதிவிலிருந்து மூணு கேள்விகள் போல கேரி ஓவர் செய்ய வேண்டியிருந்தது என்பதை மறக்காதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குரு said...

7. நடப்பது பூச்சி OR எறும்பு?

8. லாரி வேகமாக செல்லும்போது அதன் எடை 10,000 கிலோ விற்க்கும் குறைவாக இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

@குரு
தவறான விடைகள்.

நடப்பது மனிதனே. அவன் பெயர் வாசுதேவன் என்று கூட வைத்து கொள்ளலாம்.

பாலத்திலும் செல்லும் லாரியின் எடைதான் கூறப்பட்டுள்ளது என வைத்து கொள்ளலாம். விடை வேறு எங்கோ இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

10. தங்க பிஸ்கட்

மாயவரத்தான் said...

4. உள் பக்கமா குதிச்சா எப்படி வலிக்கும்?

மாயவரத்தான் said...

6. கடல்ல குதிச்சு ஆள் அவுட்

மாயவரத்தான் said...

9. (திருட்டுக்) கல்யாணம் முடிஞ்சிடுச்சா?

Unknown said...

1. Those two are Mortuary van.

dondu(#11168674346665545885) said...

@மாயவரத்தான்
4-ஆம் கேள்விக்கான விடை மட்டும் சரி. மீதி தவறான விடைகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

http://eegarai.darkbb.com/-f42/-t9763.htm

மீனு பதில் சொன்ன அப்புறம் நானும் சொல்றேன்.

Unknown said...

நீ மனமிரங்கி "நாயே" என்றுருப்பானோ???

மாயவரத்தான் said...

1. அவுட்டுன்னா என்ன ஆள் காலின்னு தானே அர்த்தம் பண்றீங்க?

மாயவரத்தான் said...

2. தூக்கு தண்டனை

மணிப்பக்கம் said...

@1
எதிர் எதிரா வந்தது மோதல அப்போ? ஒரே சைடுல போன 2 காரா?

Ilan said...

hello ,
for the number eight and the noun night

in english

eight--night

in french

huit--nuit

in german

acht--nacht

seems interesting ..no?

dondu(#11168674346665545885) said...

//1. அவுட்டுன்னா என்ன ஆள் காலின்னு தானே அர்த்தம் பண்றீங்க?//
ஆமாம்.

//தூக்கு தண்டனை//
அது நடந்ததுதான். அதற்கு உடனடியாக முன்னால் என்ன நடந்தது என்றுதான் கேட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@கமல்
அவை சவ ஊர்திகள் அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

5. கல்லறைக்குக் கொண்டு செல்கின்றனர். ஏழாமவர், பிணமாக இருக்கிறார். சவப்பெட்டியில்.

6. பணத்தை மறந்தவன் பாராசூட்டையும் மறந்திருப்பான்.

10. மோப்ப நாய் டிபார்ட்மென்ட்.

dondu(#11168674346665545885) said...

5. கல்லறைக்குக் கொண்டு செல்கின்றனர். ஏழாமவர், பிணமாக இருக்கிறார். சவப்பெட்டியில்.
சரியான விடை

6. பணத்தை மறந்தவன் பாராசூட்டையும் மறந்திருப்பான்.
இல்லை, மறக்கவில்லை. சரியாகப் படியுங்கள்

10. மோப்ப நாய் டிபார்ட்மென்ட்.
தவறு. இன்னும் கொஞ்சம் மோப்பம் பிடியுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

நல்லா பாருங்க. நான் தூக்கு தண்டனைன்னு சொன்னது 2-ம் கேள்விக்கு.

வரதராஜலு .பூ said...

6. பாராசூட் வேலை செய்யவில்லை. கீழே விழுந்து ஆள் காலி

dondu(#11168674346665545885) said...

//நல்லா பாருங்க. நான் தூக்கு தண்டனைன்னு சொன்னது 2-ம் கேள்விக்கு.//
நான் மூன்றாம் கேள்வியுடன் குழப்பிக் கொண்டேன். மன்னிக்கவும்

அப்படியானால் மிகவும் தவறான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணிப்பக்கம் said...

6. நல்ல பாராசூட்டா கொடுத்துருப்பாங்க?

dondu(#11168674346665545885) said...

@மணிப்பக்கம்
சரியான விடை. ஆகவே வரதராஜுலு சொன்னது போல நடந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கனகராசு சீனிவாசன் said...

9. அப்பெண்ணின் பிறந்த தினம்!

மணிப்பக்கம் said...

// @1
எதிர் எதிரா வந்தது மோதல அப்போ? ஒரே சைடுல போன 2 காரா?

October 23, 2009 4:30 PM //

இது??????

வஜ்ரா said...

6. குற்றவாளிக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை வழங்கிவிட்டது நீதி மன்றம். வீணாக கேஸ் போட்டு இழுத்தடிப்பதைவிட அவனைப்பிடித்து பழைய கேசிலேயே உள்ளே தள்ளி தூக்கிலிடச்சொல்லியிருக்கும் நீதிமன்றம்.

7. அது ஒரு ஊர்வலம். யாரும் யாரையும் பார்க்கமாட்டார்கள். ஒரே கூட்டமாக இருக்கும்.

8. அப்போது லாரி பாலத்தைக் கடந்துவிட்டது, அல்லது பாலத்தின் மேல் லாரி அந்த சமயத்தில் இல்லை.

dondu(#11168674346665545885) said...

@கனகராசு சீனிவாசன்
சரியான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

7. ரோட்டிலயா நடந்தான்?

மாயவரத்தான் said...

1. அந்த ரெண்டு காரும் மோதிக்கலை. ஆனா வேர எது மேலயாச்சும் மொதியிருக்கலாமே?!

மாயவரத்தான் said...

8.லாரியிலே ஐஸ் கட்டி போயிருக்குமோ?

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
ஆறாம் கேள்விக்கான விடை ஏற்கனவே வந்து விட்டது.

7 மற்றும் 8-க்கான விடைகள் தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//1. அந்த ரெண்டு காரும் மோதிக்கலை. ஆனா வேர எது மேலயாச்சும் மொதியிருக்கலாமே?!//
காருங்க எதுமேலேயுமே மோதல்லை. இது நிஜமாக நடந்த ஒரு நிகழ்ச்சி.

//8.லாரியிலே ஐஸ் கட்டி போயிருக்குமோ?//
ஐஸ் கட்டி உருகியிருந்தா கூட லாரியிலேயேதான் இருந்திருக்கும். அப்படிய்நே பாலத்தில் விழுந்திருந்தாலும் அதுக்கும் எடை உண்டு. ஆனால் சரியான திசையில் செல்கிறீர்கள். இன்னும் யோசியுங்கள்.

//7. ரோட்டிலயா நடந்தான்?//
யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இன்னும் அதே திசையில் யோசியுங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sridhar Narayanan said...

7. அவன் நடந்து சென்றது பாதாள சாக்கடை வழியாக.

8. லாரியில் ஆவியாகும் பொருள் 10000 கிராம். பாலத்தில் பாதி தூரம் செல்கையில் லாரியின் எடை குறைய, பறவை வந்து அமர சமன் ஆகிவிட்டது.

வரதராஜலு .பூ said...

1. இரண்டு காரிலும் உடல் நலம் சரியில்லாதவர்கள் சென்று, உடல்நலம் கெட்டு இறந்திருக்கலாம்.

7. அவன் திருடன். மொட்டை மாடி வழியாக நடந்திருப்பான்.

மணிப்பக்கம் said...

8.டயர்-ல காத்து குறைந்து விட்டதோ?

மணிப்பக்கம் said...

1. ambulance..?!

வரதராஜலு .பூ said...

8. பாலத்தில் ஏறிய வேகத்தில் லாரியின் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது கழன்று விழுந்திருக்கும். அதனால் எடை 10000 கிலோவை தாண்டியிருக்காது

வரதராஜலு .பூ said...

10. அப்பிஸ்கெட்கள் ஏதாவது விலங்குகளிடமிருந்து (அ) கிருமிகளிடமிருந்து பாதுக்காக வழங்கப்பட்டிருக்கும்.

dondu(#11168674346665545885) said...

//7. அவன் நடந்து சென்றது பாதாள சாக்கடை வழியாக.
சரியான விடை

//8. லாரியில் ஆவியாகும் பொருள் 10000 கிராம். பாலத்தில் பாதி தூரம் செல்கையில் லாரியின் எடை குறைய, பறவை வந்து அமர சமன் ஆகிவிட்டது//.
அது என்ன பொருள்? சரியாக யோசியுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்படிக்கு அன்புடன் said...

8. லாரி செல்ல செல்ல டீசல் அளவு குரைந்து விடும். ஆக அதன் எடையும் குரைந்து விடும். குருவி உட்காரும் போது, 10000 கிலோ கிராமுக்கும் குரைவாகவே இருக்கும். சரியா?

dondu(#11168674346665545885) said...

@மணிப்பக்கம்
அவை ஆம்புலன்ஸ்கள் இல்லை. சாதாரண கார்கள். பயணம் செய்தவர்களும் ஆரோக்கியமானவர்களே. எதிரும் புதிருமாக வந்த அந்த இரு கார்களும் மோதிக் கொள்ளவில்லை. இன்னும் என்ன க்ளூ தேவை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//8. லாரி செல்ல செல்ல டீசல் அளவு குரைந்து விடும். ஆக அதன் எடையும் குரைந்து விடும். குருவி உட்காரும் போது, 10000 கிலோ கிராமுக்கும் குரைவாகவே இருக்கும். சரியா?//
சரியான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//10. அப்பிஸ்கெட்கள் ஏதாவது விலங்குகளிடமிருந்து (அ) கிருமிகளிடமிருந்து பாதுக்காக வழங்கப்பட்டிருக்கும்.//
கம் ஆன் இன்னும் யோசியுங்கள். வின்னர் படம் பார்த்திருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணிப்பக்கம் said...

1.அறுந்து விழுந்த மின் கம்பி?!

வரதராஜலு .பூ said...

நாய்களுக்கு தீனி கொடுக்கிறார்கள். சரியா?

வரதராஜலு .பூ said...

கேள்வி எண்ணை குறிப்பிட மறந்து விட்டேன். 10.

dondu(#11168674346665545885) said...

//1.அறுந்து விழுந்த மின் கம்பி?!//
தவறான விடை.

//நாய்களுக்கு தீனி கொடுக்கிறார்கள். சரியா//
எந்த நாய்களுக்கு, ஏன் தர வேண்டும்? அது என்ன துறை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//கேள்வி எண்ணை குறிப்பிட மறந்து விட்டேன். 10//
பிரச்சினையில்லை. எனது கடைசி க்ளூவை கவனிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வரதராஜலு .பூ said...

கால்நடை பராமரிப்புத் துறை? பிஸ்கெட் மயக்கமருந்தாக இருக்கலாம். நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செயவதற்கு முன்பு கொடுக்கிறார்கள்? சரியா?

மணிப்பக்கம் said...

1.ஒரே தெருவில மோதிக்கலை, வெவ்வேறு தெருவில மோதிடுச்சி?!

dondu(#11168674346665545885) said...

//கால்நடை பராமரிப்புத் துறை? பிஸ்கெட் மயக்கமருந்தாக இருக்கலாம். நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செயவதற்கு முன்பு கொடுக்கிறார்கள்? சரியா?//
இல்லை. நாய்களுக்கு கருத்தடை எல்லாம் இல்லை. மேலே யோசியுங்கள்.

//1.ஒரே தெருவில மோதிக்கலை, வெவ்வேறு தெருவில மோதிடுச்சி?!//
மோதிக்காமலேயே இரண்டு கார்களும் ஒன்றை ஒன்று எதிரும் புதிருமாக ஒரே தெருவில் ஒரே நேரத்தில் கடந்து சென்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

3. hang him not forgive him
:-)))

வெண்பூ said...

2. அவங்க சாப்பிட்டது பலாப்பழம். ஒரு பழத்தை ரெண்டு பேரே சாப்பிட்டு செத்துபோயிட்டாங்க? :)

3. is the answer in english?

வால்பையன் said...

//அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?//



இந்த கேள்விக்கான விடை ஏற்கனவே உண்க்களது பதிவில் ஒருமுறை சொன்னீர்கள், எந்த பதிவு என்று தான் ஞாபகமில்லை!

வால்பையன் said...

//கண்ணப்பர் அந்த 26 மாடி கட்டடத்தின் மேல் மாடி ஜன்னலிலிருந்து பார்க்கிறார். ஒரே போர் அடிக்கிறது. ஜன்னல் கதவைத் திறந்து அதன் வழியே குதிக்கிறார். செங்குத்தான கட்டிடம். கீழே மெத்தை போன்று ஒன்றையும் காணோம். அப்படியும் கீழே விழுந்தும் கண்ணப்பருக்கு அடி ஏதும் படவில்லை. அவர் பாரச்சூட்டும் உபயோகிக்கவில்லை. என்ன நடந்தது? //


கண்ணப்பர் கனவு கண்டார்!

வால்பையன் said...

//விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி பணத்தை மட்டும் எடுத்து அரசு கஜானாவில் செலுத்தி விட்டு, கேஸ் அவ்வளவுதான் என்கிறார். தப்பிய குற்றவாளியை பிடிக்க வேண்டாமா?//

கோவிந்தசாமிக்கு பாராசூட் விரிக்க தெரியாது, அதனால் ஆள் அவுட்!

வஜ்ரா said...

10. ஏதாவது சோசியலிச நாட்டில் ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தும் அரசு, சம்பளம் வழங்கத் துப்பில்லாமல் தயாரிக்கும் ரொட்டிகளையே சம்பளமாக வழங்குகிறது...?! அதை விற்று அவர்கள் கஞ்சி குடிப்பார்கள் பாவம்.

dondu(#11168674346665545885) said...

To sum up:
Questions 1 to 3 are yet to be answered. All the replies proposed till now are wrong.
Question 10 too remains to be answered.

Buck up and try again.

Regards,
N. Raghavan

JesusJoseph said...

4 ) கண்ணப்பர் குதித்தது முதல் மடியிலிரிந்து

10 )நாய் பிடிக்குற வேலை

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

பெசொவி said...

4. he is a window cleaner. He jumped into the floor from outside.

7. he crossed through sewage channel.

பெசொவி said...

10. It is Polic Department. and the biscuits are for Sniffer Dogs.

வஜ்ரா said...

1. கார்கள் தெருவில் நடந்து சென்றவர்கள் மீது மோதி சாகடித்துள்ளன. ஒவ்வொரு காரும் முறையே ஒருவரை காவு வாங்கியுள்ளன.


2. துக்க மாத்திரை ?

dondu(#11168674346665545885) said...

To sum up once again:
Questions 1 to 3 are yet to be answered. All the replies proposed till now are wrong.
Question 10 too remains to be answered.
10-ஆம் கேள்வி சம்பந்தமாக: நாய் பிடிப்பவர்கள் துணிந்த கட்டைகள். பிஸ்கெட்டுகள் அவர்களுக்கு தேவைப்படாது. நான் சொல்பவர்கள் வேறு துறையை சேர்ந்தவர்கள். நிச்சயம் போலீஸ் துறை இல்லை.

Buck up and try again.

Regards,
N. Raghavan

கனகராசு சீனிவாசன் said...

1. கார்ல இருந்து இறங்கி போய் கிரிக்கெட் வெளையாடி அவுட் ஆனாங்க???

dondu(#11168674346665545885) said...

@கனகராசு சீனிவாசன்
தவறான விடை. ரெண்டு பேரும் அவுட்டுன்னா செத்துட்டாங்கன்னுதான் இங்கே அர்த்தம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Nara said...

// dondu(#11168674346665545885) said...
5. கல்லறைக்குக் கொண்டு செல்கின்றனர். ஏழாமவர், பிணமாக இருக்கிறார். சவப்பெட்டியில்.
சரியான விடை//

ஒரு மனிதன் இறந்ததும் எல்லா மொழியிலும் அஃறினையாகவே அறியப்படுவான்.

மனிதன் என்ற நிலை போய் பாடி/பூத உடல் என்கிற நிலை வந்து விடும்.

புதிர் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது என்று சொல்லக் கூடாது, மிஸ் லீடிங்க் க்ளு கூடாது

ரமணா said...

1.இந்தத் தடவை கலைஞரின் செல்லம் சிபிஐ பிடியிலிருந்து தப்புவது சாத்யமில்லை போலுள்ளதே?
2.இதில் ராகுலின் தலையீடு உண்டா?
3.எமர்ஜன்சி தண்டனைகளை மீண்டும் திமுக பெறும் போலுள்ளதே?(மிசா மஹானுபவங்கள்)
4.2010 ல் உங்கள் கணிப்பு (திமுகவுக்கு குட்பை)நிறைவேறும் போலுள்ளதே?
5.தொலைபேசி/தகவல் தொடர்புத்துறைக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த மீண்டும் தயாநிதி ?

dondu(#11168674346665545885) said...

காத்திருந்தது போதும், விடை அளித்து விடலாம் என நினைக்கிறேன்.
1. ஒரே தெருவில் ஒரே சமயத்தில் எதிரெதிரே இரண்டு கார்கள் வந்த நேரத்தில் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு முந்திரிக்கொட்டை காரின் வலது பக்க சீட்டிலிருந்து கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தது. ணங்கென்று இரு மண்டைகளும் மோதி ஸ்பாட்டிலேயே கபால மோட்சம். இது நிஜமாக நடந்த விபத்து ஆகும்.

2. அந்த தம்பதியினர் ஆதாம் மற்றும் ஏவாள். கடவுளின் ஆணையை மீறி பகுத்தறிவு என்னும் பழத்தை இருவரும் உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதுவரை மரணமில்லாமல் இருந்த அவர்கள், மரணத்துக்கு உட்பட்டார்கள் எனக் கூறுவது விவிலியத்தின் பழைய ஏற்பாடு.

3. ஆங்கில மன்னன் அரசவைக் கோமாளியும் ஆங்கிலம்தானே பேசுவான்? அரசன் அவனுக்கு இனிமேல் சிலேடை பேசாதிருந்தால் தூக்கு தண்டனை கிடையாது எனக்கூற, அந்தக் கபோதியால் இங்கும் சிலேடையை தவிர்க்க இயலவில்லை. “No noose is good News" என்று அவன் கூற அவன் உடனே தூக்கிலிடப்பட்டான்.

10. ஊழியர்களிடம் தினமும் கொடுக்கப்படும் பிஸ்கெட்டுகள் நாய் பிஸ்கட்டுகள். அவற்றைப் பெறுபவர்கள் தபால்காரர்கள். வீட்டு நாய்களின் முக்கிய எதிரி தபால்காரர்கள்தான் என்பது தெரிந்ததே. இது நடக்கும் நாடு டென்மார்க்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Raman said...

1. ஒவ்வொரு காரிலிருந்தும் ஒவ்வருவர் அவுட். அதாவது காரிலிருந்து வெளியே வருகிறார்கள். அவ்வளவு தான்.

2. தம்பதிங்க சாப்பிட்டது கடவுளால் தடை செய்யப்பட ஆப்பிள். தம்பதிகள் ஆதாம் ஏவாள் மூப்பு காரணமாக இறந்தார்கள்.

3. மன்னா உங்களால் என்னைத் தூக்க முடியாது. நான் ரொம்ப வெயிட் என்று மன்னரிடம் சிலேடை பேசினான்.

4.கண்ணப்பர் குதித்தது மேல் மாடியில் உள்புறம் பார்த்த ஜன்னல். அவர் மேல் மடியில் அடுத்த அறைக்குள் குதித்தார்.

5. ஏழாமவர் இறங்கிய இடத்தில் பார்க்கின் வாசல் பகுதிக் கூரை இருந்தது. அவர் நடக்காமல் இறங்கி நின்றார்.

6. குற்றவாளி parachute கிழிந்து செத்துவிட்டார். பணம் கிடைத்தபின் கேஸ் பாக்கி இல்லை.

7. நடந்தவன் பர்தா போட்ட குருடன்.

8. பாலத்தின் மத்திக்கு லாரி செல்லும் போது அது செலவழித்து விட்ட எரிபொருள் எடை குருவியின் எடையைவிட அதிகம். எனவே பாலம் உடையாது.

9. கடந்து போன நாள் மீண்டும் வராது எனவே அது நடக்க வாய்ப்பில்லை.

10. பணக்கார அரசு தங்க பிஸ்கெட் கொடுக்கிறது. சாப்பிட அல்ல. எதிர்கால பாதுகாப்புக்கு சேமிக்க.

dondu(#11168674346665545885) said...

நீங்க ரொம்பவுமே லேட்டஸ்டாக வந்துள்ளீர்கள் ராமன்!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
2. அந்த தம்பதியினர் ஆதாம் மற்றும் ஏவாள். கடவுளின் ஆணையை மீறி பகுத்தறிவு என்னும் பழத்தை இருவரும் உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதுவரை மரணமில்லாமல் இருந்த அவர்கள், மரணத்துக்கு உட்பட்டார்கள் எனக் கூறுவது விவிலியத்தின் பழைய ஏற்பாடு.
//

அவனவன் சைன்டிபிக்காக இங்கன மண்டையப் பிச்சிக்கிட்டு இருக்கான், நீங்க என்னடான்னா விவிலியம், பழைய ஏற்பாடுன்னுகிட்டு.

கெட்ட கோவம் வருது, இது கொஞ்சம் கூட சரியில்லை. ஆமா சொல்லிட்டேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது