10/20/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 20.10.2009

சூட்சுமம் புரியும் வரைதான் பிரமிப்பும்
தில்லியில் இருந்தவரை நான் கணினியை தொட்டுக்கூட பார்த்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஐ.டி.பி.எல்.லில் முதன் முறையாக கணினிகள் வர ஆரம்பித்தன. எனது காட்ஃபாதர் ஜலானி அவர்கள்தான் அதற்கு இன்சார்ஜ். அப்போது கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் என்ன செய்வது, அலுவலக அரசியல் கூத்துக்களால் என்னால் அது செய்ய முடியாது போயிற்று.

பிறகு 1993-ல் வீ.ஆர்.எஸ். வாங்கி முழுநேர மொழிபெயர்ப்பு ஆரம்பித்தபோது கணினியின் விலை கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய்கள். அவ்வளவு பணம் செலவழிக்க மனம் இல்லை. மேலும் மொழிபெயர்ப்புகளை கையாலேயே எழுதி, ஜாப் டைப்பிஸ்டுகளிடம் தந்து தட்டச்சு செய்வித்து கொண்டதால் அதன் அவசியமும் புலப்படவில்லை.

ஆனால் ஒன்று. எனது மொழிபெயர்ப்புகளை ஏஜென்சிக்காரர்கள் கணினியில் தட்டச்சு செய்யும்போது ஆச்சரியத்துடன் பார்ப்பேன். எலிக்குட்டியை அடிக்கடி நகர்த்தி, க்ளிக் செய்து என்றெல்லாம் எனக்கு அச்சமயம் புரியாத விஷயங்களை செய்த வண்ணம் இருப்பார்கள். அதுவும் டெக்ஸ்ட் பாக்ஸ் விவகாரம் மிகவும் பிரமிப்பூட்டியது.

மொத்தத்தில் கூறப்போனால் இப்போது நான் அனாயாசமாக, தன்பாட்டுக்கு செய்யும் கணினி ஆப்பரேஷன்கள் அப்போது எனக்கு பிடிப்படாதவை என்பதே நிஜம். ஆனால் இப்போது கூட என்னால் அந்த நிலையை கற்பனை செய்ய இயலும். என்ன, இப்போது அவற்றில் பல விஷயங்களை நானே போகிறபோக்கில் செய்வதால் பிரமிப்பு போயிந்தி.


ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ்
இப்பெயரைத் தெரியாதவர்கள் ஆங்கில புத்தகங்கள் படிப்பவர்களில் மிகச்சிலரே இருப்பார்கள். அவரது துணைவர் மருத்துவர் வாட்ஸனும் ஒரு மறக்கவியலாத பாத்திரம். ஒவ்வொரு முறையும் தர்க்க சாஸ்திர முறைப்படி ஹோம்ஸ் தனது கண்டுபிடிப்புகளைக் கூற, அவற்றுக்கான பிரமிப்பை வெளிப்படுத்துபவர் வாட்ஸன். இப்படித்தான் ஒரு புது வாடிக்கையாளர் வந்த போது, அவரிடம் ஹோம்ஸ் புது வாடிக்கையாளர் பற்றி தான் அதுவரை ஊகித்த விஷயங்களைக் கூற, அவர் எங்கோ ஊசியால் குத்தப்பட்டது போல துள்ளி எழுந்து எப்படி கண்டுபிடித்தார் ஹோம்ஸ் இவற்றையெல்லாம் என அரற்ற, ஹோம்ஸ் சாவகாசமாக விளக்குகிறார். “ஓ, அவ்வளவுதானா, இப்போ பார்த்தால் ரொம்ப சுலபமாகத்தானே தெரிகிறது என வாடிக்கையாளர் சூள் கொட்ட, ஹோம்ஸ் வாட்ஸனிடம், “இதனால்தான் நான் எப்போதுமே விஷயங்களை எவ்வாறு கண்டுபிடித்தேன்” எனக்கூற விரும்புவதில்லை என்கிறார்.

எதற்கு சொல்கிறேன் என்றால், விஷயம் தெரியும் வரைக்குத்தான் மதிப்பு. தெரிந்தபிறகு சப்பென்று ஆகிவிடுகிறது. பார்த்திபன் கனவு கதை கல்கியில் வாராவாரம் வெளியானபோது, அந்தச் சிவனடியார் யார் என்பதைக் குறித்து பலரும் பலமுறையில் தலை பிய்த்துக் கொண்டார்கள். ஒரு வாசகர் படகோட்டி பொன்னன்தான் அது என்ற தனது ஊகத்தை வெளியிட்டார்.

ஆனால் அதே கதை படமாக்கப்பட்டபோது சிவனடியார் யார் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது. அந்த அளவுக்கு சுவாரசியம் போகிறது. ஆகவேதான் சிவனடியார் சிலரிடம் தனது வேடத்தைக் களையும்போது, கேமரா நகர்ந்து அவரது முகத்தை மறைப்பதை பார்வையாளர்கள் கேலிச் சிரிப்புடன் எதிர்கொண்டனர். திரையாக்கம் வேறு, கதை வேறு என்பதை டைரக்டர் உணராததாலேயே இந்த தடுமாற்றம் வந்தது.

நானும் உஜாலாவுக்கு மாறுகிறேன்
பலர் செய்வது போலவே நானும் ஒரு பலான ஜோக்குடன் இந்த பஞ்சாமிர்தத்தை முடிக்கிறேன்.

அவன் கட்டிளங்காளை, அவள் திமிறும் பருவஎழிலுடன் கூடிய மங்கை. இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தேன் நிலவுக்கு ஊட்டிக்கு செல்கின்றனர். முதலிரவும் அங்கேதான். இதற்கெனவே பல புத்தகங்கள் படித்து, நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறான் காளை. கன்னியின் படிப்பும் இந்த விஷயத்தில் சோடை போகவில்லை.

ஆயிற்று, திருப்தியுடன் ஒரு முறை உறவு. பிறகு ஒரு மணி நேரம் இளைப்பாறலுக்கு பின்னால் இன்னொரு முறை, அதன் பிறகு மூன்று மணி நேர இடைவெளிக்கு பின்னால் மூன்றாம் முறை உறவு கொள்கின்றனர். அதற்கு மேல் அவனால் முடியவில்லை. இருவரும் தூங்க ஆரம்பிக்கும்போதுதான் கவனிக்கின்றனர், பக்கத்து அறையில் இருக்கும் ஆணும் பெண்ணும் விடாது கும்மாளம் போடுவதை. “இந்த முறை வலது பக்கம்” என ஆண்குரல் கூற, “இல்லை இடது பக்கம்தான்” என பெண்ணின் குரல் எதிர்க்க, சில நொடிகளுக்கு பிறகு ஒரே சிரிப்பு, கைத்தட்டல் ஆகிய கலாட்டாக்கள். இம்மாதிரியே இரவு முழுவதும் வலது, இடது என மாறிமாறி கலாய்ப்பு நடக்கிறது.

இளைஞனுக்கு ஒரே திகைப்பு. “சே நாமும் இருக்கிறோமே, அத்லெட்டிக்கான உடம்பு என்றுதான் பெயர், ஆனால் மூன்று முறையிலேயே ஆட்டம் க்ளோஸ். ஆனால் இங்கே பாருடா, ராத்திரி முழுக்க வலது இடது என மாறி மாறி போடறாங்க” என்று வியக்கிறான்.

அடுத்த நாள் காலையில் இளைஞனும் இளைஞியும் அறைக்கு வெளியே வருகின்றனர். பக்கத்து அறையிலிருந்து ஒரு எண்பது வயது வயது கிழவனும், எழுபத்தைந்து வயது கிழவியும் வெளியே வருகின்றனர். இளையவயதினர் இருவருக்கும் மூச்சே நின்றுவிட்டது. இளைஞன் கிழவனாரை தன்னுடன் அழைத்து சென்று காப்பி வாங்கிக் கொடுத்து பேச்சு கொடுக்கிறான். பல விஷயங்கள் பேசிய பிறகு அவரிடம் கூறுகிறான், “ சார் நான் இளைஞன், என்னாலேயே மூன்று முறைக்குமேல் உறவு கொள்ள இயலவில்லை. அதெப்படி நீங்கள் இரண்டு பேரும் ராத்திரி முழுக்க பஜனை செய்ய முடிந்தது”?

கெக்கே கெக்கே என சிரித்த கிழவர், “அடே பையா, நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. நான் என்ன பண்ணுவேன் என்றால் மல்லாக்க படுத்து கொள்வேன். கிழவி என்னுடையதை பிடித்து மத்து கடைவது போலக் கடைவாள். விறைப்பு வந்ததும் அதை விட்டுவிடுவாள். ஒரு நொடி நின்று விட்டு அது தொப்பென்று கீழே விழும். அப்போது இடதுப் பக்கம் விழுமா, வலதுப் பக்கம் விழுமா என்பதில் நாங்கள் பந்தயம் வைப்போம் அவ்வளவுதான்” என்றார்.

ஆக, சூட்சுமம் புரியும் வரைதான் பிரமிப்பும் எனபது மீண்டும் உண்மையாகிறதல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Anonymous said...

இது ஒரு பழைய ஜோக். அவ்வளவு சுவராஸ்யம் இல்லாத ஜோக். ”நறுக்” என்று இருக்கிற மாதிரி அடுத்த பஞ்சாமிர்தத்தில் சேருங்கள்

வால்பையன் said...

அந்த ஜோக் ஏற்கனவே கேள்வி பட்ட ஒன்று!

சமீபத்தில் எங்கோ பார்த்தேன்!
கேபிளாராக இருக்கும் அல்லது ஜாக்கியாக இருக்கும்!

மாட்டுக்கு ஜோடி சேர்க்க காளை மாட்டுக்கு உசுபேத்தி விடும் டெக்னிக்கை தெரிந்து கொள்ளும் பாட்டி இரவெல்லாம் தாத்தாவை நோண்டி கொண்டே இருக்கும் கதை!

அதில் இன்னும் சுவாரஸ்யம் அதிகம்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

டோண்டு blogல் இப்படிப்பட்ட கதைகள் தேவை இல்லை என்பது என் மேலான கருத்து.

Anonymous said...

நீங்களும் ஏன் இப்படி கெட்டு அழிகிறீர்கள்? நல்ல விஷயங்கள் எழுத எவ்வளவோ இருக்கும் போது பலான விஷயங்கள் தேவையா?

மூத்த பதிவர், ஜெயா டிவில பேட்டி குடுத்த பதிவர் இப்படி பதிவிடுவது வெட்கக்கேடு.

நீங்கள் உண்மையாகவே சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் இந்தப் பதில் கேவலமாக உள்ள பலான பகுதிகளை நீக்கவும். இல்லை என்றால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் இதைப் படிக்கச் சொல்லவும்.

Questionnaire said...

//இளைஞனுக்கு ஒரே திகைப்பு. //

Why not his wife felt the same disappointment?

Why only the young man?

Anonymous said...

Dondu sir....We do not expect such posts in your blog...I am asking all my friends to read your blog more from point of content and frankness...Not on these lines...Humble suggestion...Choice is yours...

Anonymous said...

THIRD..FOURTH RATE...TO SEE HERE..

ram said...

This is the first time I visited your Blog page. I wish it should be my last, because of the joke which should have been avoided.

Anonymous

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது