10/29/2009

டோண்டு பதில்கள் - 29.10.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?



எம். கண்ணன்

1. விக்ரம் புத்தி எனும் பர்டியூ யுனிவர்சிடி மாணவர்(முன்னாள் ஐஐடி) 2006ல் புஷ்ஷுக்கு எதிராக இணையத்தில் எழுதினார் என்பதற்காக அவர் செய்தது 'குற்றம்' என தண்டிக்கப்பட உள்ளார். கடந்த 3 வருடங்களாக சிறை. (சுமார் 30 வருடம் சிறை என தீர்ப்பு வரலாம் என பேச்சு.. நவம்பரில் தீர்ப்பு வரும்). அப்படியென்றால் தமிழ் பதிவுலகில் பலரும் இந்திய / தமிழக / அமெரிக்க ஆளுவோர்களை எதிர்த்து எழுதும் கன்னா-பின்னா பதிவுகளுக்கும் தண்டனை சாத்தியமா ?
பதில்: விக்ரம் செய்தது கொலைமிரட்டலில் வரும். மற்றப்படி புஷ் ஒரு முட்டாக்கூ.. என்ற ரேஞ்சில் எல்லாம் எழுதியிருந்தால் அமெரிக்காவில் பிரச்சினை இருந்திருக்காது.

2. அக்டோபர் முடியப் போகிறது. ஆனாலும் வெயில் இப்படி வறுத்தெடுக்கிறதே ? ஆந்திர / கர்நாடக வெள்ள நீரை பாலாற்றில் திருப்பி விட்டிருக்கக் கூடாதா?
பதில்: அதற்கு தோதாக வடிகால்கள் வேண்டுமே. அவை ஓவர் நைட்டில் வரக்கூடியவையா?


3. ஆனந்த விகடன் 'நிருபன்' பகுதி கட்டுரைக்காக புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பற்றிய செய்திக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறதே ? விகேஷ் விவகாரத்தின் நீட்சியோ ?
பதில்: தவறான செய்தி என்பது வெளிப்படையாக தெரியும் நிலையில் இதைச் செய்வதைத் தவிர விகடனுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?

4. உங்களைப் போல மொழிபெயர்ப்பு வேலை தவிர வீட்டிலிருந்தபடியே கணினி / இணையம் மூலம் சுமாராக (Rs.10000 pm) சம்பாதிப்பதற்கு என்ன என்ன வழிகள் (சென்னையில் / தமிழ்நாட்டில் வசிப்பவருக்கு) உண்டு ? இந்த மாதிரி வேலைகள் தேடுவதற்கு சுட்டிகள் உண்டா ?
பதில்: முதலில் மொழிகளில் ஆர்வம் வேண்டும். அவற்றை முறையாக கற்க வேண்டும். அந்த வேலை செய்ய பொறுமை வேண்டும். வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டும். ஆரம்ப பின்னடைவுகளை தாங்கும் மன உறுதி வேண்டும், இத்தொழிலில் நிலைக்கும் வரை வேறுவகை வருமானம் வேண்டும். ப்ரோஸ்.காம் போன்ற மொழிபெயர்ப்பு தலைவாசலில் உறுப்பினராக வேண்டும். அதற்கு கட்டணம் ஏதுமில்லை.


ஓ, மன்னிக்க வேண்டும். கேள்வியைச் சரியாக பார்க்கவில்லை. வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் சம்பாதிக்க பலவழிகள் உள்ளன. ப்ரிண்ட் அவுட்டுகள் எடுத்துத் தரலாம். ஸ்கேனிங் செய்து தரலாம். மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் வேலை செய்யலாம். டேட்டா எண்ட்ரி வேலை செய்யலாம். கதை எழுதலாம்.


எல்லாவற்றையும் விட வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் குறித்து எழுதியுள்ளதையும் பார்க்கலாம். நான் மொழிபெயர்ப்பு துறையில்ருந்தே உதாரணங்கள் தந்தாலும் அவற்றில் கூறப்பட்டவை எல்லா ஃப்ரீலேன்சர்களுக்கும் பொருந்தும்.

5. விவேக்குக்கு விகடன் குரூப் மேல என்ன கோபம் ? தினமலரை விட அதிகமாக விகடன் மீது பொங்கி எழுந்துள்ளாரே ?
பதில்: ஏதாவது உள்விவகாரமோ? எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று, கலைஞர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆகவே பலர் பேசுவதில் அர்த்தமே இருக்காது.

6. கமல் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் டைட்டிலில் இரா.முருகன் பேர் போடாவிட்டாலும் குமுதம், கல்கி போன்றவை முருகனாரிடம் கட்டுரை வாங்கி போடச்செய்து அவர் தான் 'ரைட்டர் சார்' என்பதை வெளிப்படுத்தி விட்டதே ? அதிலும் குமுதம் அவரை 'சிற்றிலக்கிய இதழ்' எழுத்தாளர்கள் வரிசையிலேயே இன்னும் வைத்திருக்கிறது போல - தீபாவளி 'இலக்கிய'ச் சிறப்பிதழில் அவரது உபோஒ கட்டுரை ?? (இதிலும் நமீதா மீது இடிக்காத குறையை விடமாட்டேனென்கிறாரே :-)) (விகடன் ஏன் முருகனை இன்னும் ஒதுக்கி வைத்திருக்கிறது ?)
பதில்: டைட்டிலில் ஏன் போடவில்லை? நீங்கள் போஸ்டர்களை சொல்கிறீர்களா? மற்றப்படி திரைப்படத்தில் டைட்டில்ஸ்கள் போடும்போது கண்டிப்பாக அவர் பெயர் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். விகடன் அவரை ஒதுக்கி வைத்திருப்பதாக நினைக்கவில்லை.

7. நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) பிரச்னை சிக்கலாகிக் கொண்டிருக்கிறதே ? அரசு (மற்றும் ப.சிதம்பரம்) என்ன செய்ய வேண்டும் - உங்கள் கருத்துப்படி ?
பதில்: கடுமையான நடவடிக்கைகள் தேவை. அதே சமயம் அபிவிருத்தித் திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும்.

8. உச்சநீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல்களான ஹரீஷ் சால்வே, நாரிமன், பராசரன், ராம் ஜெத்மலானி போன்றோர் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சார்ஜ் செய்வார்கள் ? ரூ.25000 ? அம்பானி, மாநில அரசுகள் என பலருக்கும் வாதாடுகிறார்களே ? அரசுக்காக வாதாடும் போது பணம் சரியாக பைசல் ஆகுமா ?
பதில்: பல சமயங்களில் கோர்ட்டுகளே வக்கீல் வசதி பெறமுடியாத குற்றவாளிக்காக வக்கீலை நியமிக்கும். ஆனால் அது அடிமாட்டு விலைதான். மற்றப்படி ஜெத்மலானி போன்றவர்கள் பெறும் சம்பளங்கள் பெரிய ஸ்கேலில்தான் இருக்கும். எனது சுவிஸ் வாடிக்கையாளருடன் வக்கீலை சென்று பார்த்தபோது கன்சல்டேஷன் மற்றும் வக்கீல் நோட்டீஸ் வழங்க 1500 ரூபாய் ஆயிற்று. சும்மா சொல்லக் கூடாது வக்கீலும் எங்களுடன் போலீஸ் அதிகாரிகளை எல்லாம் வந்து பார்த்தார். கிட்டத்தட்ட 4 மணி நேர வேலை.


நீங்கள் சொல்வதும் உண்மைதான். அரசால் நியமிக்கப்பட்டு வாதாடும் வெளி வக்கீல்களுக்கு பணம் வாங்க பல சிரமமான விதிமுறைகள் உண்டுதான். ஆனால் முழுநேர அரசு ஊழியராக இருக்கும் வக்கீல்களுக்கு சம்பளம் அதுபாட்டுக்கு வந்துவிடும். ஆக, அரசால் நியமிக்கப்படுபவர்கள் அந்த வேலையை ஏற்க பல வேறுகாரணங்களும் உண்டு. அது சம்பந்தப்பட்டவர்களை பொருத்த விஷயம்.

9. சமையல் கேஸ் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லையே ? இதில் ஸ்டீல் சிலிண்டர் வேறு அறிமுகப்படுத்துகிறார்களாமே ?
பதில்: சமையல் கேஸ் தட்டுப்பாடு தீரவில்லைதான். மணலி கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தொழிலாளிகள் பிரச்சினை. மேலும் அளவுக்கு அதிகமாக சப்டிசைஸ் செய்யப்பட்ட சிலிண்டர்களை பெறுவதற்காக தகாத முறையில் அதிக பணம் கொடுப்பவர்களால் ஏற்படும் பிரச்சினைகள், இது போதாது என்று கூறுவதுபோல இலவச கேஸ் அளிப்பு ஆகிய அரசியல் ஸ்டண்டுகள் ஆகியவை இருந்தால் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும். ஸ்டீல் சிலிண்டர்களா? இப்போது எந்த உலோகத்தில் அவற்றை செய்கிறார்களாம்?


10. மடிக்கணினி வாங்கியதற்கு வாழ்த்துக்கள். ஏன் காம்பேக் வாங்கினீர்கள் ? டெல், மற்றும் இன்ன பிற இந்திய நிறுவனங்களில் மடிக்கணினிகள் நல்ல மாடல் குறைந்த விலையில் நன்றாக இருக்கிறதே ?
பதில்: எனக்கு அது பற்றியெல்லாம் என்ன தெரியும்? முகுந்தனை கூட அழைத்து சென்றேன். அவன் வாங்கிக் கொடுத்தான். 2002-லும் அவனது ஆலோசனைதான். இதுவரை பிரச்சினைகள் அதிகம் இல்லை. அப்படியே வந்தாலும் அவன் ஆலோசனைகளை பெற்று அவற்றை சந்தித்திருக்கிறேன். இப்போதைக்கு மடிக்கணினி மற்றும் டெஸ்க் டாப் இரண்டையுமே உபயோகிக்கிறேன். தரவுகள் இருகணினிகளிலும் உள்ளன. நல்ல backup ஆயிற்று. ஊர்களுக்கு செல்வதில் பிரச்சினை இனிமேல் இருக்காது. வேறு என்ன வேண்டும்?




துபாய் நாரா

1. டி.வி.யில் நிகழ்ச்சி வரும் போது இருக்கிற ஒலியின் அளவு விளம்பரம் வரும் போது தானாகவே கூடி அலறுகிறதே ஏன் ? இந்த அக்கிரமத்தை அரசு கண்டுகொள்ளாது இருப்பதேன் ?

பதில்: விளம்பரங்கள் ஏற்கனவேயே ரிகார்ட் செய்யப்பட்டவை. நிகழ்ச்சிகள் பிற்பாடு ரிகார்ட் செய்யப்படுகின்றன அல்லது லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றன. ஆகவேதான் இந்த வேறுபாடு தெரிகிறது. மேலும் விளம்பரங்கள் பலத்த ஒலியுடன் வந்தால்தான் மக்களை சென்றடைய இயலும் என்ற தவறான கன்ணோட்டம் வேறு உள்ளது.


2. தமிழுக்கு மாநாடு நடப்பது போல் வேறு எதேனும் மொழிக்கு நடக்கிறதா ?

பதில்: நடக்கிறது, எனக்கு தெரிந்து பிரெஞ்சுக்கு.

3. விவேக் சாதியைச் சாடி இனியும் காமெடி பண்ணுவது சாத்தியமா.(சாதி சங்க ஆலோசனை கூட்டத்தில் எல்லாம் கலந்து கொள்கிறார். இந்தவார கழுகு ஜீ.வி பார்க்கவும்)
பதில்: நடிப்பு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு.




ரமணா:
1. இந்தத் தடவை கலைஞரின் செல்லம் சிபிஐ பிடியிலிருந்து தப்புவது சாத்யமில்லை போலுள்ளதே?
பதில்: அவரும் ராசாவை டிஃபண்ட் செய்வது போல தோன்றவில்லையே?

2. இதில் ராகுலின் தலையீடு உண்டா?

பதில்: இருந்தால் வியப்படைய ஒன்றுமில்லை.

3. எமர்ஜன்சி தண்டனைகளை மீண்டும் திமுக பெறும் போலுள்ளதே?(மிசா மஹானுபவங்கள்)

பதில்: அதற்கு இன்னொரு அவசரநிலை சட்டம் வரவேண்டும். தற்போது அது சாத்தியமில்லை.

4. 2010 ல் உங்கள் கணிப்பு (திமுகவுக்கு குட்பை) நிறைவேறும் போலுள்ளதே?

பதில்: அப்படியாவது தமிழகத்துக்கு நல்லது நடக்கட்டுமே.

5. தொலைபேசி/தகவல் தொடர்புத்துறைக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த மீண்டும் தயாநிதி ?

பதில்: திமுக முதலில் மத்திய மந்திரி சபையில் நீடிக்கிறதா என்பதை பார்ப்போம்.




அனானி (26.10.2009 காலை 06.25-க்கு கேட்டவர்)
1. ராமதாஸ் எப்படியிருக்கிறார்?
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளார். திமுகாவோ அதிமுகாவோ எக்கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் அவரது கட்சியின் நிலை ஐயோ பாவம்தான்.


2. 2010ல் தமிழக அரசியல்?
பதில்: தேர்தல் சமயத்தில் கவர்னர் ஆட்சி வருவது நலம்.



3. காங்கிரஸின் முயற்சி சூரியாவிடம் பலிக்கவில்லையா?
பதில்: எந்த சூர்யா? ஜோதிகா நாயகனா? அவரது தந்தையின் அறிவில் சிறிதளவேனும் அவரிடம் இருந்தாலும் சூர்யா மாட்டிக் கொல்ளாமல் இருக்கலாம்.

இல்லை, எஸ்.ஜே. சூர்யாவை சொல்கிறீர்களா? காங்கிரசுக்கு ஏன் இந்த விபரீத ஆசை?


4.ஆதவன் -பேராண்மை ஒரு ஒப்பீடு?
பதில்: இவ்விரு படங்களில் ஒன்றைக்கூட நான் பார்க்கவில்லையே. ஆதவன் துரத்தல் காட்சி க்ளிப்பிங் மட்டும் பார்த்தேன். அயன் படத்தை நினைவுபடுத்தியது.


5. சென்னையில் தண்ணீர் தண்ணீர் சொல்ல வேண்டுமா?
பதில்: வடகிழக்கு பருவ மழையே துணை.


6. ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் ?
பதில்: சீக்கிரம் முடிந்தால் தேவலை. அவரை போன்று ஊழலில் ஈடுபட்ட எல்லோருக்குமே தண்டனைகள் கிடைத்தால்தான் மற்ற அரசியல்வாதிகள் பயப்படுவார்கள்.


7. பா.ம.க. விலகலால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு?
பதில்: இப்போதைக்கு இல்லை. பாமகவின் நம்பகத்தன்மை குறைந்து போய்விட்டது.


8. சீனா மறுபடி வாலாட்டத் தொடங்கிவிட்டதா?
பதில்: இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.


9.‘வெங்கி’ ராமகிருஷ்ணன் அவ்ர்களின் நோபல் பரிசுக்குப் பின் பேச்சுகள்-உங்கள் விமர்சனம்?
பதில்: இயல்பாகவே இருக்கிறார். நம்மவர்கள்தான் ரொம்பவும் அவர் மேல் விழுந்து பிறாண்டி விட்ட்டார்கள்.


10. இலங்கைக்கு இந்தியப் பாராளுமன்றக் குழு திக் விஜயம் பற்றி?
பதில்: ராஜபக்சேவுக்கு ஜால்ரா அடித்தலில்தான் முடிந்துள்ளது.


11. இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை-திமுக தலைவரின் கோரிக்கை-காங்கிரசுக்கு எச்சரிக்கையா?
பதில்: அப்படியெல்லாம் செய்தால் கருணாநிதியின் கல்லாதானே காலியாகும். ஆகவே அதையெல்லாம் கூட்டணி இருக்கும்போது செய்ய மாட்டார். அவரை காங்கிரஸ் கழற்றிவிட்டால் அப்போது செய்யலாம், அதுவும் மீண்டும் காங்கிரசுடன் ஒட்டிக் கொள்ளவே இயலாது என்னும் நிலை வந்தால்தான்.


12. சீனா, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு விசா கொடுப்பது-விஷமம் அல்லவா?
பதில்: இதில் என்ன சந்தேகம்? ஆனால் சீனா நமது எதிரி. அப்படித்தான் செய்யும். அதை மறந்து நாம் செயல்படுவது நமக்குத்தான் ஆபத்தை வரவழைக்கும்.



13. டாஸ்மார்க் சரக்குகள் தீபாவளி விற்பனை 220 கோடியாமே? குடிமகனே போற்றி போற்றி?
பதில்: குடி பற்றி ஏதும் அறியாத ஒரு தலைமுறைக்கே குடியை அறிமுகப்படுத்தினார் சமீபத்தில் 1972-ல் கலைஞர். அவர் ஆட்சிதானே இப்போதும் நடக்கிறது. ஆக இதில் என்ன வியப்பு?


14. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்கிறதா?
பதில்: ஜாம் ஜாம் என தொடர்கிறது.


15. ஐஐடி 80 % மார்க் விவகாரம் மந்திரியின் அந்தர் பல்டி?
பதில்: கபில் சிபலையா குறிப்பிடுகிறீர்கள்? ஓட்டு அரசியல் பாதிக்கும் என்ற நிலை வந்தால் அதைத் தவிர்க்க எத்தனை பல்டி வேண்டுமானாலும் அடிக்கப்படும். இதிலெல்லாம் உச்சவரம்பு கிடையாதாக்கும்.


16. வாரணம் ஆயிரம் சூர்யா- ஆதவன் சூர்யா?
பதில்: இந்த இரண்டில் ஒரு படத்தைக்கூட பார்க்கவில்லை. அப்புறம் என்ன கருத்து கூறுவது இதற்கு?





மீண்டும் அடுத்த வாரம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?



அன்புடன்,
டோண்டு ராகவன்



34 comments:

Nara said...

//பதில்: எஸ்.ஜே. சூர்யாவை சொல்கிறீர்களா? காங்கிரசுக்கு ஏன் இந்த விபரீத ஆசை?//

ரசிக்கும் படி இருந்தது.

அவரை கம்யூனிஸ்ட்கள் சேர்த்துக் கொள்ள வேண்டுமென நான் கோரிக்கை வைக்கிறேன்.

Nara said...

//வெங்கி’ ராமகிருஷ்ணன் அவ்ர்களின் நோபல் பரிசுக்குப் பின் பேச்சுகள்-உங்கள் விமர்சனம்?
பதில்: இயல்பாகவே இருக்கிறார். நம்மவர்கள்தான் ரொம்பவும் அவர் மேல் விழுந்து பிறாண்டி விட்ட்டார்கள்//

மிக எளிமையானவராக இருக்கிறார்
விளம்பரத்தில் அவருக்கு இஷ்டம் கிடையாது என்பதெல்லாம் பாரட்டத்தக்க அரிய விஷயங்கள்

இந்தியர்கள் வாழ்த்து அனுப்பியது எல்லாம் வேண்டாத வேலை.

ஆனால் அதை ஒரிரு நாள் தொந்தரவாக கருதி அவர் விடாமல் (ஏன் விடனும் என்பது தான் உங்களுடைய கருத்து என நினைக்கிறேன்)அவர் தான் ஒட்டு மொத்த இந்தியர்களையும் பிறாண்டினார்.

திரையில் ஹீரோ வில்லனை அடிக்கும் போது,அனியாயத்தை தட்டிக் கேட்கும் போது ஏதோ தாங்களே அதைச் செய்வது போல் சாரசரி ரசிகன் சந்தோஷப்படுவது போல தான் இதுவும்.

ஒபமா ஜெயித்தற்கு கென்யா-வில் லீவு விட்டு கொண்டாடினார்கள். நல்ல வேளை அவர்களை ஒபமா திட்டவில்லை.


திடீர் பணக்காரர்கள் எழை சொந்தக்காரர்களைப் பார்த்து விலகுவது போல இருந்தது அவர் பேச்சு.

அதனால் தான் இங்கே கத்துக்குட்டிகள் கூட அவருக்கு பயிப்பு இருக்க அளவுக்கு பம்பு இல்ல என்று கூவினார்கள்.

Anonymous said...

//கமிஷனர் ஜாங்கிட் பற்றிய செய்திக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறதே ? விகேஷ் விவகாரத்தின் நீட்சியோ ?
பதில்: தவறான செய்தி என்பது வெளிப்படையாக தெரியும் நிலையில் இதைச் செய்வதைத் தவிர விகடனுக்கு வேறு என்ன வழி இருக்கிறது//

அந்த செய்தியை படிக்கும் போதே, ஜாங்கிட் அப்படிபட்டவரல்ல என்ற எண்ணம் தான் எழுந்தது. இத்தனை பவர்புல்லான பதவியில் இருப்பவரைப் பற்றியே இப்படி அவதூறு எழுதுகிறார்களே ! இவர்களுக்கு சாதரணமானவர்கள் எம்மாத்திரம்.

குப்புக் குட்டி

வால்பையன் said...

//அக்டோபர் முடியப் போகிறது. ஆனாலும் வெயில் இப்படி வறுத்தெடுக்கிறதே ? ஆந்திர / கர்நாடக வெள்ள நீரை பாலாற்றில் திருப்பி விட்டிருக்கக் கூடாதா?//

பாலாற்றில் வெள்ளம் வந்திருந்தாலும் இந்த வெப்பம் இருந்திருக்கும்!, மாறிவரும் பருவநிலை மாற்றத்திற்கு காரணம் மனிதர்கள் மட்டுமே!

சீனு said...

//டி.வி.யில் நிகழ்ச்சி வரும் போது இருக்கிற ஒலியின் அளவு விளம்பரம் வரும் போது தானாகவே கூடி அலறுகிறதே ஏன் ? இந்த அக்கிரமத்தை அரசு கண்டுகொள்ளாது இருப்பதேன் ?//

உங்களுடையது எந்த டி.வி. என்று தெரியவில்லை. என்னுடைய ஸோனி வேகாவில் "Intelligence Sound" என்று ஒரு அமைப்பு உள்ளது. அதை "On" செய்ய வேண்டும்...

வால்பையன் said...

//விளம்பரங்கள் பலத்த ஒலியுடன் வந்தால்தான் மக்களை சென்றடைய இயலும் என்ற தவறான கன்ணோட்டம் வேறு உள்ளது.//

உங்களை கவருவதே நோக்கம் என்ற பின் அது எவ்வாறு தவறான கண்ணோட்டம் ஆகும்!

வால்பையன் said...

//இந்தத் தடவை கலைஞரின் செல்லம் சிபிஐ பிடியிலிருந்து தப்புவது சாத்யமில்லை போலுள்ளதே?
பதில்: அவரும் ராசாவை டிஃபண்ட் செய்வது போல தோன்றவில்லையே? //

கேள்வியே தவறு!

ராசா, கலைஞரின் செல்லத்துக்கு செல்லம்!

வால்பையன் said...

//இதில் ராகுலின் தலையீடு உண்டா?
பதில்: இருந்தால் வியப்படைய ஒன்றுமில்லை.//

நிச்சயமாக இருக்கும்!
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்ப்பதே ராகுலின் நோக்கமாக இருக்கிறது!

வால்பையன் said...

//பா.ம.க. விலகலால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு?
பதில்: இப்போதைக்கு இல்லை. பாமகவின் நம்பகத்தன்மை குறைந்து போய்விட்டது.//

அ.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருக்குன்னு இன்னும் நம்புறிங்களா!?

வால்பையன் said...

//சீனா, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு விசா கொடுப்பது-விஷமம் அல்லவா?//

நீ மட்டும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கேக்குறேன்னு நம்பளை கேப்பான்!

ரெண்டுமே தப்பு தான்!

வால்பையன் said...

// டாஸ்மார்க் சரக்குகள் தீபாவளி விற்பனை 220 கோடியாமே? குடிமகனே போற்றி போற்றி?//

அந்த கடலில் நான் இட்ட சிறு(நீரும்)துளிகளும் உண்டு!

வால்பையன் said...

இந்த வாரம் நிறைய அரசியல் கேள்விகள்!

மணியன் said...

//நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) பிரச்னை சிக்கலாகிக் கொண்டிருக்கிறதே ? அரசு (மற்றும் ப.சிதம்பரம்) என்ன செய்ய வேண்டும் - உங்கள் கருத்துப்படி ?
பதில்: கடுமையான நடவடிக்கைகள் தேவை. அதே சமயம் அபிவிருத்தித் திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும்.//

'விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்குமான' கட்சி என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் ஆளும் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் புரட்சி செய்வது முரணான விதயம். அரசியல்வாதிகளின் நேர்மையற்ற,கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட, ஊழல் மலிந்த ஆட்சியும் காவலர்/தோழர்கள் அடாவடியும் தான் முதற்காரணங்கள். கடுமையான நடவடிக்கை என்பது அரசியல் முழக்கமாக அமையலாமே தவிர தீர்வாக அமையாது. அமைப்புப் பிழைகளைத் திருத்திக் கொள்ளாமல் வெறும் காகிதத்தில் மட்டும் காணும் அபிவிருத்தி திட்டங்களும் பயன்தராது.

மற்றொரு தளத்தில்,இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண மமதா விடுவாரா?

ஒரு பழைய வலைப்பதிவர் said...

துபாய் நரா,

அவருக்கு கேட்கப்பட்ட கேள்வியை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் கூறிய பதிலை மட்டும் வைத்து பயிப்பு இருக்கு பம்பு இல்லை என்று முடிவுகட்டிவிட்டனர். போதாத குறைக்கு அவர் பார்ப்பானர் என்று தெரிந்ததுமே சும்மா மெல்லும் வாய்க்குள் அவல் வுழுந்த மாதிரி ஆகிவிட்டது.

ரீடிஃப் காரரிடம் அவர் அப்படிக்கூறுவதற்குக் காரணம். வெகுஜனம் அவருக்கு மெயில் அனுப்பியது அல்ல. அதை அவர் ஒரு நாள் அவஸ்தையாக எண்ணி மறந்திருக்கக் கூடும்.

1. அண்ணாமலை உனிவர்சிடி பிசிக்ஸ் வாத்தி ஒருத்தர் அவருக்கு பிசிக்ஸ் கத்துக்கொடுத்ததாக பீத்திக்கொண்டு பேட்டி அளித்ததும்,

2. இதுவரை அவரை அனுகாத பல பழைய நண்பர்கள் புதிய நட்பு பாராட்டி (பலர் இந்தியர்கள்) மெயில் அனுப்பியது தான்.

அவருக்கு பம்பு இருக்கா இல்லையா என்று தீர்மானிப்பதை விட்டு உங்கள் ப்ம்பை பழுது பார்த்து சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.

dondu(#11168674346665545885) said...

ஓடும் காரிலிருக்கிறேன். வாடிக்கையாளரின் முக்கிய வேலைக்காக மடிக்கணினியை திறக்க வேண்டியிருக்கிறது. இப்போது பின்னூட்டங்களை வெளியிட மட்டும் செய்கிறேன். 3 மணி நேரத்தில் சென்னை அடைவேன். இப்போது எனது கார் நெய்வேலியை தாண்டியுள்ளது. பிறகு பதிலளிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Nara said...

//ஒரு பழைய வலைப்பதிவர்
போதாத குறைக்கு அவர் பார்ப்பானர் என்று தெரிந்ததுமே சும்மா மெல்லும் வாய்க்குள் அவல் வுழுந்த மாதிரி ஆகிவிட்டது.//


கலைஞர் அடி கொஞ்சம் அதிகமானா நான் கீழ் சாதியில் பிறந்ததால் தான் என்னை இப்படி சொல்றிங்க என்பார் அதுக்கும் உங்கள் அழுகைக்கும் எந்த வித்தியாசமும் இல்ல !!!

என்ன விஷயம் அது மட்டும் பேசுங்க "பழசு"

கிராமத்தில தான் டேய் நம்ம ஆள அடிச்சிட்டாங்க என்றதும் ஏன் எதற்கு என்று கேட்காமல் அடிதடிக்கு கிளம்புவார்கள் என்றில்லை இங்கேயும் உண்டு.

எனக்கு ஜாதி ஆதரவு/எதிர்ப்பு இரண்டுமே அலர்ஜி !! அறுவையானதும் வாய்சொல் வீரர்களுக்குமான டாபிக் அது

//அதனால் தான் இங்கே கத்துக்குட்டிகள் கூட அவருக்கு பயிப்பு இருக்க அளவுக்கு பம்பு இல்ல என்று கூவினார்கள்//

அட பாவமே !! இதில இருக்கிற அங்கதம் புரியலயே உமக்கு !! பழைய பதிவரா இருக்கதால பரவாயில்ல !!

இந்த வரிக்கு சரியாய் அர்த்தம் புரியலை அதுக்குள்ளே சாத்திய தூக்கிட்டு வந்திடரங்கப்பா !!

Nara said...

//சீனு said... உங்களுடையது எந்த டி.வி. என்று தெரியவில்லை. என்னுடைய ஸோனி வேகாவில் "Intelligence Sound" என்று ஒரு அமைப்பு உள்ளது. அதை "On" செய்ய வேண்டும்...//

என்னுடையதும் ஸோனி தான் அப்படி ஏதும் இருக்கான்னு துலாவிப் பார்க்கிறேன்

Anonymous said...

1.பொதுவாய் மனிதன் தடுமாறுவது எப்போது?ஏன்?
2.அயல்நாடுகளுக்கு நிகராக நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துக்கள் எதை உணர்த்துகின்றன?
3.தர்மம் செய்பவருக்கும், உண்மை பேசுபவருக்கும் இந்த காலத்தில் மதிப்பு எப்படி உள்ளது?
4.வாழ்க்கையில் உயரும் போது, எதை அவசியம் மனிதன் கடை பிடிக்க வேண்டும்?
5.பிரச்னைகளே இல்லாமல் வாழ்வது
சாத்யமா?
6.காதலிக்கும் போது இருக்கிற கிளுகிளுப்பு கல்யாணத்திற்குப் பின் குறைவதேன்?
7.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது.மக்கள் என்ன செய்தால் இது மாறும்?
8.குறை களை சுட்டி காட்டி, நட்பை இழக்க நேரிடும் நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?விளக்கவும்?
9.பொதுவாய் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடல் தொடர்பில்லாமல் நட்புடன் பழகமுடியுமா?
10.குடும்பம் நடத்த இக்காலத்தில் எவ்வளவு பணம் தேவை ஒருமாததிற்கு?
11.கஷ்டங்களைக் குறைக்க என்ன வழிகளாய் கற்றுள்ளீர்கள்?
12.வாழ்க்கைக்கு வரையறுத்த நெறிமுறைகள் எவை எவை?
13.உண்மையே பேசி கஷ்டப்படுவதைவிட, சமயத்திற்கு தகுந்தாற்போல பொய் பேசி வாழலாம் என எண்ணம் வலுக்கிறதே?
14.செய்யும் வேலையில் கடமை தவறாமல் பணியாற்றுபவர்கள் எங்கேயாவ்து உள்ளார்களா?எத்தனை விழுக்காடு?
15. ஒரு முறைக்கு, நூறு முறை சிந்தித்து செய்த செயலும்கூட தோல்வி பெறுவது எதனால்?
16.டீன்-ஏஜ் பெண்களுக்கு, செக்ஸை விளக்கி கூறுவதால், அவள் தற்காத்து கொள்வாளா ? இல்லை?

4,

Raj said...

Dondu Sir,

Can you please add this link in your website so that everyone can vote for this good cause.

http://www.petitiononline.com/SSMN/petition.html

-Raj Sadagopan

ரவிஷா said...

25000 ரூபாயெல்லாம் கமல்ஹாசன் அப்பா காலத்தில் இருந்திருக்கும்! நான் +2 படித்தபோது கூட படித்தவனின் அப்ப சென்னையில் ஒரு லீடிங் கிரிமினல் லாயர்! ராபின் மெயின் கேசுக்காக ஒரு முறை ராம்ஜெத்மலானி சென்னை வந்திருந்தபோது அதைப் பற்றி அவனிடம் கேட்டேன்! அவர் ஒரு மணிநேரத்துக்கு இரண்டு லட்சமெல்லாம் வாங்குவார் என்றான்! அது எண்பதுகளில்!

Anonymous said...

எம்.கண்ணன்

கேள்விகள்:

1. இண்டியன் ஸ்டைல் கழிவறையை ஏன் அமெரிக்காவில் இண்டியன் ஜான் எனவும் இந்தியாவில் அந்த பீங்கானை ஒரிசா கம்மோடு எனவும் சொல்லுகிறார்கள் ? ஒரிசாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? http://www.tradeindia.com/fp367567/Orissa-Squatting-Pan.html

2. இரட்டையர்கள் தவிர லட்சுமணன் என்ற பெயரை பெரும்பாலும் நகரத்தார் சமூகத்தில் மாத்திரம் குழந்தைகளுக்கு வைக்கிறார்களே (வைத்தார்களே). லட்சுமணன் (லெட்சுமணன்) நகரத்தார் என்ன கனெக்ஷன் ?

3. ஒருவர் இறந்த பிறகு, அவரது வலைப்பதிவுகள், மெயில் போன்றவை என்ன ஆகும் ? அதுவும் அவரது வீட்டாருக்கோ வாரிசுகளுக்கோ அவரது இணைய / மெயில்/blogger ஐடிக்கள், பாஸ்வர்டு தெரியாத நிலையில் ? பதியப்பட்ட பதிவுகளில் உள்ள content யாருக்குச் சொந்தம் ?

4. சில வாரங்களாக பலமான வெயிலால் குறைந்திருந்த பன்றிக்காய்ச்சல் பரவல் - மழை / குளிரால் மீண்டும் அதிகரிக்குமா? நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சலாமே ? (குஜராத்தில் மழை இல்லாத போதே) ரஷ்யாவிற்கு சென்று வந்ததாலா ?

5. தேவர் நினைவு தினத்தன்று மாலை மரியாதை செய்வதால் மட்டும் அரசியல் கட்சிகளுக்கு தேவர் சமூக ஓட்டுக்கள் கிடைத்துவிடுமா ? எந்த நம்பிக்கையில் எல்லா கட்சிகளும் சிலைகளுக்கு முன் வரிசையாக நிற்கின்றனர் ?

6. தேவர் மகன் படம் வெற்றி அடைந்ததற்குக் காரணம் - திரைக்கதையா, வசனமா ? கமல் மற்றும் சிவாஜியின் நடிப்பா ? இல்லை கதை தொட்ட ஜாதீய கருவா ?

7. இளையராஜாவின் எவர் கிரீன் பாடல்களை ஏன் இன்னும் யாரும் டிஜிட்டலில் மல்டி டிராக்கில் ரீ ரெக்கார்ட் செய்ய வில்லை ? பழைய கர்நாடக இசை கச்சேரிகளை பலரும் டிஜிட்டலில் கொண்டு வருவதைப் போல ஏன் செய்யவில்லை ?

8. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் மனைவி தமிழ் ஐயங்காராமே ? இதற்காகவும் ஒரு போராட்டம் நடக்குமா ?

9. வீரமணி தனது மகனை பொறுப்பில் கொண்டு வைத்திருப்பதைப் பற்றி பத்திரிக்கைகள் அதிகம் மூச்சுவிடக் காணோமே ? (ஒன்றிரண்டு தவிர)

10. கேள்வி பதில் பதிவுகள் போல வாரம் ஒரு நாள் பிரெஞ்சும், ஜெர்மனும் (வெவ்வேறு நாட்களில்) கற்றுக் கொடுங்களேன் - சின்ன சின்ன வார்த்தைப் பிரயோகங்கள், தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சொற்கள், ஜெர்மனி அல்லது பிரான்ஸ் செல்லும் தமிழ் மக்களுக்கு உபயோகமாக இருக்குமே ? உங்கள் பாணியில் கற்றுக் கொடுத்தால் எல்லோருக்கும் இலகுவாக புரியும் (இணையத்தில் படித்து கற்றுக் கொள்வதை விட). (நிச்சயம் உங்களுக்குப் போட்டியாக யாரும் மொழிமாற்ற வேலையில் இறங்கிவிடமாட்டார்கள் :-))
French / German for dummies என்பது போல சுமார் 25 பதிவுகள் பிரெஞ்சுக்கும் 25 பதிவுகள் ஜெர்மனிக்கும் போடலாம். அல்லது ஒரே பதிவில் - அதே தமிழ்/ஆங்கில சொற்களுக்கு பிரெஞ்சில் என்ன, ஜெர்மனில் என்ன என கட்டம் கட்டி சொல்லித் தரலாம்.

ரமணா said...

1.அரசின் தொலைபேசி கொள்கையின் படி தனியார் கம்பெனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை( அரசுக்கு ஒரு லட்சம் கோடி நஷ்டம்-) கட்டாமல் உள்ளது போல் வரும் செய்திகள் பற்றி?
2.தனியார்மயம்,தாராள மயம் எல்லாம் வல்லான் பொருள் குவிக்கும் பகல் கொள்ளைக்குத்தானா?
3.மத்திய,மாநில தலைவர்கள் மெளனம் என்ன சொல்கிறது?
4.கூட்டணி என்பதே கூட்டுக் கொள்ளை என்றாகிவிடும் போலுள்ளதே?
5.எல்லோரும் சேர்ந்து(சில சுயநல அரசியல் கட்சிகள்,நியாயம் தவறும் சில முதலாளிகள்,காலம் மாறியதை உணராத ஊழியர்களில் ஒரு பகுதியினர்,கண்ணை மூடிக்கொண்டு வாழ்க எனக் கோஷம் போடும் முதலாளித்துவ ஜால்ராக்கள் அனைவரும் ) நல்லமுறையில் இயங்கும் அரசுத்துறைகளுக்கும் மங்களம் பாடிவிடுவார்கள் என வரும் செய்திகள்?

பெசொவி said...

//6. ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் ?
பதில்: சீக்கிரம் முடிந்தால் தேவலை. அவரை போன்று ஊழலில் ஈடுபட்ட எல்லோருக்குமே தண்டனைகள் கிடைத்தால்தான் மற்ற அரசியல்வாதிகள் பயப்படுவார்கள்.//

ஊழலில் ஈடுபட்ட?

பேஷ், நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டிய ஒன்றை நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் போல் இருக்கிறது.

Anonymous said...

17.உலகிலேயே மிகப் புனிதமான உன்னதமான பணி?
18.தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகளா?
19.வாழும் காலத்தில் சவுகரியமாக, சந்தோஷமாக வாழ வழிகள்?
20.காதல் திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஓடு காலி என்ற பட்டத்தை இந்த சமூகம் கொடுப்பது நியாயமா?
21.வாங்கிய கடனை திரும்பக் கேட்பதை விரும்பவர் யார்?
22.இந்த பூலோகத்தில் மிகவும் எளிதானது எது?
23.இந்த பூலோகத்தில் மிகவும் கடினமானது எது?
24.இன்பம் - துன்பம் எங்கே பிறக்கிறது?
25. பரம ஏழைக்கும், அதீத பணக்காரனுக்கும் வித்தியாசம்?
26.பொதுவாய் பேச்சில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?
27.கணவன் - மனைவி இருவரும் அரசாங்க வேலையில் இருந்தும் மாதக் கடைசியில் ?
28.திருமணத்திற்கு பின் வேலைக்கு போகும் பெண்ணின் மகிழ்ச்சி குறைகிறதா இல்லை?
29.கொரியாவின் இமாலாய முன்னேற்றத்துக்கு காரணம் என்ன?
30.விளம்பரங்கள் இல்லாத பத்திரிகைகள்?
31.தமிழ் நாட்டில் ஆண்களை விட, படிப்பில் பெண்கள் சிறந்து விளங்குவது எப்படி?
32.மன அமைதிக்கு வழிகள்?

Anonymous said...

அதிரடியாக உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டால் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்?
1.கர்நாடக மாநில பிஜேபியில் நடக்கும் தள்ளுமுள்ளு?
2.நக்சல் பிரச்சனை ?
3.முல்லைப் பெரியாரில் மற்றுமொரு அணை?
4.தொலைபேசித்துறை டெண்டர்/லைசென்ஸ்/கட்டணக் குறைப்பு விவகாரங்கள்?
5.கலைஞர்-ராகுல் கண்ணாமூச்சி?
6.ஸ்விஸ் வங்கி கறுப்புப் பண கசமுசா?
7.ஸ்டாலின் - அழகிரி பதவிப் போட்டி?
8.சன் டீவி-கலைஞர் டீவி புதுப்பட டீல்?
9.இலங்கை தமிழர் மறு வாழ்வு இந்தியாவில்?
10.சீனா/பாகிஸ்தான்/இலங்கை ராணுவ அத்துமீறல்கள்?


கந்தசாமி

Anonymous said...

கேள்வி பதிலுக்கு

1) வெண்ணை போன்ற வழுக்கும் இடையும், பந்துகிண்ணம் போன்ற வட்டமான அழகான மார்பும், கிறங்கடிக்கும் கண்களும், விஜய், ரஜினி, விக்ரம் என முன்னணி ஸ்டார்களுடன் நடித்திருந்தாலும் ஸ்ரேயா தமிழில் பெரிய அளவில் முன்னுக்கு வராததற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள் ?

2) வீட்டு வசதி வாரிய நிலம் விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதே ? அவர் அவ்வளவு ஏழையா ? இல்லை நாட்டுக்கு ஏதேனும் தொண்டு புரிந்துள்ளாரா ?

3) சமீபத்தில் சென்று வந்த கோயில் உலா பற்றிய விரிவான பதிவுகள் வருமா ?

எஸ்.குமார்

வால்பையன் said...

//வெண்ணை போன்ற வழுக்கும் இடையும், பந்துகிண்ணம் போன்ற வட்டமான அழகான மார்பும், கிறங்கடிக்கும் கண்களும்,//

இப்படியெல்லாம் ஸ்ரேயாவை ரசிக்கனும்னா எப்படியும் உங்களுக்கு ஒரு 45/50 வயசாவது ஆயிருக்கும்!

அவ மூஞ்ச பார்த்தாலே ”எந்திரிச்சி” நிக்கிறவன் கூட தடுக்கி விழுந்துருவானே!

Anonymous said...

வால் அண்ணா ,

எதோ சிலேடையா சொல்றீங்க போல !! எனக்கு புரியலை .

அண்ணா என்று விளித்ததுக்கு கோச்சுக்கிடாதியங்க !!! நான் குட்டிப் பையன் என் பேரில கூட "குட்டி" இருக்கு பாருங்க

குப்புக் குட்டி

Anonymous said...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=940:2009-10-25-22-56-23&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

Anonymous said...

>>>> ஒரு கிறிஸ்தவ நிறுவனம், ஒரு இந்து நிறுவனம் தனது அடிப்படைக் கொள்கைகளுக்கு உழைப்பதில் 10 சதவிகிதம் கூட பெரியார் நிறுவனங்கள் உண்மையாக உழைப்பதில்லை.

ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் விவேகாநந்தா கல்லூரிகளைப் பாருங்கள். அவற்றால் உருவாக்கப்படுபவர்கள் இறுதிவரை ஆர்.எஸ்.எஸ் காரனாக வாழ்கிறார்கள். புதுடெல்லியில் ஐ.ஏ. எஸ்க்கான முதன்மைத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கும் நேர்காணலுக்கு வரும் மாணவர்களுக்கும் தனிப் பயிற்சி அளித்து அவர்களை வெற்றி பெறச்செய்து, அவர்களை முன்னாள் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அலுவலர்களுடன் ஒருங்கிணைத்து ஒரு மிகப்பெரிய ஆர்.எஸ்.எஸ் அதிகார மைய வலைப்பின்னலை உருவாக்கியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். சாரதா மடங்களைப் பாருங்கள். இந்து சமய மறுமலர்ச்சிக்கு அவர்கள் எப்படி தனது பொருளாதார வளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நேரில் காணுங்கள். உண்மையில் மேற்கண்ட நிறுவனங்களை உன்னிப்பாக் கவனித்திருக்கிறேன். தி.க வின் நிறுவனங்களையும் கவனித்திருக்கிறேன்.
>>>>>>

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=940:2009-10-25-22-56-23&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

வால்பையன் said...

//அண்ணா என்று விளித்ததுக்கு கோச்சுக்கிடாதியங்க !!! நான் குட்டிப் பையன் என் பேரில கூட "குட்டி" இருக்கு பாருங்க //

வால் என்று அழைத்தால் போதுமானது தல!

நானும் குட்டி குட்டி பையன் தான்!

சிலேடைக்கு அடைப்பு குறி இருக்கு பாருங்க!

Anonymous said...

//
ஒரு கிறிஸ்தவ நிறுவனம், ஒரு இந்து நிறுவனம் தனது அடிப்படைக் கொள்கைகளுக்கு உழைப்பதில் 10 சதவிகிதம் கூட பெரியார் நிறுவனங்கள் உண்மையாக உழைப்பதில்லை.
//

முற்றிலும் சரி,
பெரியாரே, தன் கொள்கைகளை பிறருக்கு உபதேசிவிட்டுத் தான் மட்டும் இருப்பத்தி சொச்சம் வயதுக் கட்டுடல் கன்னியைக் கபளீகரம் செய்யத் துணிந்தார் தன் எழுவதாவது வயதில்..

பிறகு இவர்கள் எப்படி இருப்பார்கள் ?

சும்மா, பாவ்லா காட்டுவது, பின்னர் பொதுமேடையில் அடுக்கு மொழியில் பேசிவிட்டு, நைட் ரூம் போட்டு, ஏதாவது ரூட்டைக் கரக்ட் செய்வது...பின்னர் மனைவி, துணைவி, துணைவிக்கு உப துணைவி என்று ஊருக்கு ஒன்று வைத்துக்கொள்வது தான் நடக்கும்.

இணையத்திலும் பாருங்கள்...

பெரியார் பாசறைக்குத்தான் அதிக வலைப்பதிவுகள்...வலைத்தளங்கள். இதிலெல்லாமே, பிறகுக்கு உபதேசிப்பது தான் நிரைந்து காணப்படும். அவர்கள் இதுவரை சமூகத்திற்கு ஆற்றிய ஆக்கப்பூர்வப் பணிகள் என்று பார்த்தால்...

விரல் விட்டு எண்ணிவிடலாம்...

நமது உடலில் ரத்தத்தை உரிஞ்சும் அட்டைப்பூச்சிகள் போல், இவர்கள் சமூகத்தின் ரத்தத்தை உரிஞ்சும் அட்டைப் பூச்சிகள்...
இவர்களால் நமக்கு நோய் தான் வரும்...


இந்து அமைப்புகளும் சரி கிருத்தவ அமைப்புகளும் சரி, அவர்கள் கொள்கையை மற்றவர்களுக்கு மட்டும் என்று வாழ்வதில்லை. தாங்கள் உபதேசிப்பதைப் போலவே அவர்கள் வாழ்கின்றனர்.
ஆகவே, அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு அதிகம். (அவர்கள் உபதேசிக்கும் விஷயங்களைப் பற்றி இங்கே விமர்சனம் வேண்டாம்).

Anonymous said...

இப்படியெல்லாம் ஸ்ரேயாவை ரசிக்கனும்னா எப்படியும் உங்களுக்கு ஒரு 45/50 வயசாவது ஆயிருக்கும்!

அவ மூஞ்ச பார்த்தாலே ”எந்திரிச்சி” நிக்கிறவன் கூட தடுக்கி விழுந்துருவானே!

வாலு இது டூ மச்

Anonymous said...

சமீபத்திய குமுதம் சிநேகிதி இதழில் 'நவதிருப்பதி' பகுதியில் - தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் பற்றி 2 பக்கங்கள் சிறப்புக் கட்டுரை

FYI

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது