திருக்குறள் காவ்யா
திருக்குறளின் வாரிசாக திருக்குறள் காவ்யா என்னும் சுட்டிப் பெண்ணின் சாதனை பற்றி படித்ததில் மிக்க மகிழ்ச்சி. அப்பதிவில் கூறியபடி,
“திருவள்ளுவர் தவமாய் தவமிருந்து எழுதிய அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி நம்மை மூக்கில் விரல்வைக்க வைக்கிறார், இவர். பார்வையாளர்கள் பகுதியிலிருந்து இந்தக் குறள் வருவது எந்த அதிகாரத்தில்? குறள் எண் 412 எப்படி துவங்குகிறது? "இகலின் மிகலினி" என்று துவங்கும் குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது? அதன் குறள் எண் என்ன? "முயங்கப்பெறின்" என்று முடியும் குறள் எத்தனையாவது குறள்?.....இப்படிப் படபடவென பார்வையாளர்கள் வினாக்களை விசிறியடித்து வாய் மூடும் முன் வாய் திறக்கிறார் மிகச்சரியான விடையுடன்!
திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் இவரையே தன் வாரிசாக அறிவித்திருப்பார்.
யாரிந்தப் பெரும்புலவர் என்று உங்கள் புருவம் சற்றே விரிகிறதா? ஒரு சிறுமி என்றால் வியந்து விரியாமல் என்ன செய்யும்? இன்னும் இதில் வியப்பு என்னவென்றால், தாய்த் தமிழகத்தில் அன்றாடம் தமிழ் பேசி வளர்ந்த சிறுமியல்ல;தும்மினால் ஆங்கிலம்; இருமினால் ஆங்கிலம் என்ற அமெரிக்க மண்ணில் வளர்ந்த சிறுமி என்பது தெரிந்தால் பெருவியப்பே ஏற்படும் அல்லவா?
சிகாகோ தமிழ் பள்ளிகள் இணைந்து நடத்திய விழாவில் அசைந்தாடி மேடையேறிய அந்தச் சின்னஞ்சிறு சிறுமி,"தன் நினைவிலூறிய திருக்குறள்களைப் பாடலாகப் பாடி, தனக்கு பிடித்த குறள்களைக் கூறி, அதன் அதிகாரங்கள் கூறி, கூடி இருந்தவர்களைக் கவர்ந்தார்”.
சாதனை செய்ய என ஒருவர் வந்தால் அவரை சோதனை செய்ய ஆட்களுக்கு பஞ்சமில்லைதானே. அந்த சோதனைகளையும் வெற்றி கொண்டு அனைவரின் மனத்தையும் கவர்ந்துள்ளாள் இந்த சுட்டிப்பெண். மேல் விவரங்களுக்கு ரிச்மண்ட் தமிழ் சங்கம் வலைப்பூவின் அப்பதிவைப் பார்க்கவும். தமிழுக்கு அணி சேர்க்கும் இந்த சாதனைப் பெண் மேல்மேலும் முன்னேற்றம் பெற என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.
ஜ்யோவ்ராம் சுந்தர் தாக்கப்பட்ட விவகாரம்
இந்த நிகழ்வை பற்றி படித்ததிலிருந்து கலக்கமாக உள்ளது. சம்பந்தப்பட்ட இருவருமே எனக்கு தெரிந்தவர்கள். சில நாட்களுக்கு முன்னால் ரோசா வசந்த் நங்கநல்லூருக்கு வருகையில் என் வீட்டுக்கும் வந்திருந்தார். அடிப்படையில் நல்ல மனிதர் சில பெக்குகள் போட்டால் இவ்வாறு மாறிவிடுவது கவலைக்குரியது. ஜ்யோவ்ராம் சுந்தரோ குழந்தை மாதிரி. சிறுகதை பட்டறையில் நான் மதிய உணவுக்குப் பிறகு சென்று விட்டதை நோட் செய்து, ஏதேனும் மனவருத்தத்தில் அவ்வாறு செய்தேனா என அக்கறையாக எனக்கு மின்னஞ்சல் செய்து கேட்டவர்.
என்னதான் மனவேறுபாடு இருந்தாலும் அதை கைகலப்பாக மாற்றக் கூடாது என்ற கருத்தில் ஒரு சமாதானமும் செய்து கொள்ள முடியாது. அந்த வகையில் ரோசா வசந்தின் காரியம் கண்டனத்துக்குரியதே. இது பற்றி பதிவர் ப்ரூனோவுடன் செல்பேசினேன். சும்மா சொல்லப்படாது மனிதர் சரியான நேரத்தில் மருத்துவரீதியிலும், மருத்துவமனை நிர்வாக ரீதியாகவும் செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததில் அவரது செயல்பாடு பாராட்டுக்குரியது. அவருடன் பேசும்போது கூட இது பற்றி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இருப்பினும் இந்த சண்டை மனப்பான்மையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காக இங்கு பதிவு செய்கிறேன்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டோண்டு ராகவன்
ஸ்விட்சர்லாந்திலிருந்து வந்திருந்த அப்பெண்மணி மனித முடிகளை இறக்குமதி செய்து டோப்பாக்கள் தயாரிப்பவர். அவரை உள்ளூர்க்காரர் ஏமாற்றியிருக்கிறார். மனித முடிகளை ஏற்றுமதி செய்வதாக ஆர்டர் பெற்று அப்பெண்மணி வங்கி மூலம் பணத்தை அவரது கணக்குக்கு மாற்றியதும் காணாமல் போய் விட்டார். அவருக்கு ஆங்கிலமோ தமிழோ தெரியாது. ஆகவே நான் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டேன்.
அவரது வங்கி கணக்கு இருக்கும் கிளையில் விஷயத்தைச் சொல்லி அவரது முகவரியைக் கேட்டால் தர மறுத்து விட்டார்கள். பிறகுதான் கமிஷனர் ஆஃபீசுக்கு அவரை அழைத்து வந்தேன். முதல் தடவை சென்றபோது மணி பிற்பகல் 3 ஆகிவிட்டது. கமிஷனரை சந்தித்து நேரில் புகார் தரும் நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் 11 மணி வரைக்கும்தானாம். நடுவில் எனக்குத் தெரிந்த வக்கீலிடம் அவர் கேட்டுக் கொண்டதற்கேற்ப அழைத்து சென்றேன்.
அடுத்த நாள் காலை முதல் ஆளாக கமிஷனர் அலுவலகத்தில் நின்றோம். புகாரை எழுத்து வடிவம் மூலம் கொடுத்தபின் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். இரண்டு ஆய்வாளர்கள் தனித்தனியே விசாரிக்கிறார்கள். அவர்களது கேள்விகளும் புகார் விவரத்தை இன்னும் அதிக அளவில் எடுக்கும் அளவிலேயே இருந்தன. இருவரும் கேஸ் சுருக்கத்தை தத்தம் வழியில் எழுத்தில் பதிவு செய்கின்றனர். 12 மணி வாக்கில் கமிஷனர் ராஜேந்திரன் வந்தார். எங்கள் கேசைத்தான் முதலில் கூப்பிட்டார்கள். அவரிடம் இரு ஆய்வாளர்களும் வாய்மொழியாக புகாரின் சுருக்கத்தைக் கூறினர். பிறகு அப்பெண்மணியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அவர்றை நான் பிரெஞ்சில் மொழிபெயர்க்க, அப்பெண்மணி பதிலளித்ததை தமிழில் மொழிபெயர்த்தேன். கமிஷனரும் சரி, மற்ற ஆய்வாளர்களும் சரி முதலில் நான் யார், அங்கு ஏன் வந்தேன் என்றுதான் முதலில் கேள்வி கேட்டனர். அவர்களிடம் எனது துபாஷி வேலையை பற்றிச் சொன்னதும் சமாதானமடைந்தனர்.
இங்கு இவற்றையெல்லாம் எழுதக் காரணமே கமிஷனர் அலுவலகத்தில் மெதாடிக்கலாக செயல்படும் முறையை சிலாகிக்கவே. இப்போதைய கமிஷனரும் சரி அவரது உதவியாளர்களும் சரி பொறுமையாகவே மக்களைக் கையாளுகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
6 hours ago
10 comments:
//சில பெக்குகள் போட்டால் இவ்வாறு மாறிவிடுவது கவலைக்குரியது. //
இதெல்லாம் முடுக்கு வாதம்!
நான் சனி,ஞாயிறு ஒரு நாளைக்கு ஃபுல்லுக்கு மேல அடிக்கிறேன்!
ஒவ்வொரு நாளும் யாரையாவது அடிச்சிகிட்டா இருக்கிறேன்!
ரோசாவுக்கு மூளை பிசகிகிச்சுன்னு சொல்லுங்க நம்புறேன், மப்புல அடிச்சார்ன்னு சொல்லாதிங்க!
what is your instant comment for this ?
http://tamilniruban.blogspot.com/
vaalpaiyan yenna sollukiraar
for this
(nadikar vivek and press reporters)
http://tamilniruban.blogspot.com/
kathiravan
டோண்டு அவர்களே, இனிமேல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்புகளுக்குச் செல்லும் போது சுயபாது காப்பிற்கு ஆயுதம் (கத்தி, துப்பாக்கி) எடுத்துச் செல்லுமாறு பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எந்தப் புற்றில் எந்தப்பாம்பு இருக்கும் என்று யார் கண்டது ?
1.இவர் நல்ல நகைச்சுவை நடிகர் .பாடவும் தெரியும்.ஆனால் வாய் கொழுப்பால் சினிமா வாய்ப்பை இழந்து,சினிமா தயாரித்து வறுமையில் இறந்தார் யார் இவர்?
2..இவர் நல்ல நகைச்சுவை நடிகர் .ஆடவும் தெரியும்.தன் பையன் திரையுலகில் பிரகாசிக்க முடியாமல் போன வருத்ததிலும்,பையனின் குடி பழக்கத்தாலும் நொந்து இறந்தார் யார் இவர்?
3..இவர் நல்ல நகைச்சுவை நடிகர்.ஆனால் பஞ்ச் டயலாக் விட்டு இப்போது பஞ்சரய் உள்ளார்.யார் இவர்?
4.இவர் நல்ல நகைச்சுவை நடிகர்.ஒரு பெரிய நட்சத்திரத்தோடு மோதி ஒரு வழி
ஆனார் யார் இவர்?
5.இவர் நல்ல நகைச்சுவை நடிகர்.பிறருக்கு உதவி செய்து நலிந்தார்.தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்பது புரியாத இவர் யார்?
6.புகழின் உச்சியில் இருந்த போது குடியால் அழிந்த நகைச்சுவை நடிகர் யார்?
7.எம்ஜிஆரின் காலில் அரசியல் பொதுக்கூட்டங்களில் விழுந்தே பேர் பெற்ற ந.நடிகர் யார்?
8.திறமை இருக்கு ஆனால் விருத்தி இல்லா நகை.நடிகர் யார்?
9.60 வருடங்களுக்கு முன்னால் திரைப்பட நகைச்சுவைக்கும் இன்றைய தற்கும் என்ன வேறுபாடு?
10.மேலே சொல்லப்பட்டவர்கள் தவிர நகைச்சுவையில் பிற பிரபலமானவார்களாய் யார் யார் உங்கள் நினைவில் நிழலாடுகின்றனர்?
பின்னூட்டத்தில் அண்டா அண்டாவா "கட் அண்ட் பேஸ்ட்" செய்தே கலவரப் படுத்தும் பதிவர்(?!) யார் ?
அப்படியிருந்தும் அவரை விடாமால் சீண்டுவதேன் ? நிஜமாவே அந்த பின்னூட்டங்களை வெளியிடுவதற்கு முன் படிப்பீர்களா ?
ஆம் எனில் பொறுமைக்கு ஏதேனும் நோபல் பரிசு இருந்தால் அதை தங்களுக்குத் தர பரிந்துரைக்கலாமா ?
சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார் ? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று பிதற்றவும் செய்வார் ? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு , யார் அவர் ?
அடுத்த தரப்பு நியாங்களை கேட்காமல் கருத்து சொல்லாத நாட்டமை யார் ?
தமிழ் தேசிய உணவின் பெயரில் குழுவா கும்மியடிக்கும் பதிவு எது ?
சிரங்கூன் ரோடு என்.ஆர்.ஐ பதிவரின் கருத்துக்களை பிடிக்குமா ? ( இந்த தொழில் அதிபருங்கோ தொல்லை தாங்கலைப்பா)
உங்க பதில்களை இப்படி விடுகதை ரேஞ்சுக்கு வாசகர்கள் இட்டு செல்வார்கள் என்று நினைத்தீர்களா ?
குப்புக் குட்டி
1.தமிழக நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் சொந்தக் காசு செலவழித்து இலங்கை சென்றது உங்களுக்கு எப்படி படுறது?
2.இதற்கு முதல்வர் கருணாநிதி அவ்ர்களின் வழக்கமான சமாளிப்பு எப்படி?
3.இதுக்கு ஜெ.ன் ரியாக் ஷன் என்ன?
4.நெல்லையில் துணை(மிகச் சிறிய எழுத்துகளில் -நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற விளம்பரம் போல) முதல்வர்( மெகா சைஸ் எழுத்துகளில்)சாலையில் இருமருங்கும் 5 அல்லது 10 அடிக்கு இடை வெளிவிட்டு -ஸ்டாலின் புகழாரம் கலர் பேனர்கள்-நாம் எங்கே போகிறோம்?
5.ஸ்டாலினை கருணாநிதியால் திட்டம் போட்டு திமுகவில் திணிக்கபட்ட தலைவர் என்று சொல்லி (மாவட்டம் முழுவதும் அன்று வை கோபால் சாமியோடு எதிர்த்த பெருந்தலைகள் இன்று ஸ்டாலின் துதுபாடும் செயல் பார்த்து அண்ணா ( அவருக்கு பாவம் ஒரே ஒரு பேனர்)வின் ஆத்மா என்ன நினைக்கும்??
6.இந்த வரலாறு காணாத( கருணாநிதியை மிஞ்சிய)வரவேற்பிக்குபின்னால் தென்மண்டலச் செயலர் அழகிரியின் நடவடிக்கை மாறுமா?
7.மீண்டும் அரசியல் சாணக்கியர் தில்லை அரசர் ஜெ யுடனா?
8.இலங்கை வாழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சட்டம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா?
9.சுவிஸ் பண விவகாரம் என்னவாச்சு?
10.வடஇந்தியாவில் ஒரு சில பகுதிகளில் கொடுரமான தீவிரவாதச் செயல்கள் மீண்டும். எதிரி நாடுகளின் சித்து விளையாட்டா?
Breaking News:
Maharashtra, Haryana & Arunachal polls: Low turnout
வடக்கு அரசியல் வியாதிகள் பண விநியோகத்தில் ரொம்ப வீக் போலிருக்கே ! இதுக்கு மட்டுமாவது தெக்கத்தி ஆட்களிடம் அவுட் சோர்சிங் விட்டிருக்கலாம் இல்லையா ?
குப்புக் குட்டி
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் மொத்தம் ஏழு பேர்.
அவற்றில் தமிழர்கள் மொத்தம் மூன்று பேர்.
அந்த மூன்று பேருமே பிராமணர்கள்.
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
நாம வேணுமின்னா தமிழன் பிராமணன் -நு சொல்லிக்கிட்டு திரியலாம் அவங்க நம்மில் ஒருவராய் அடையாள படுத்திக் கொள்ள கண்டிப்பாக விரும்ப மாட்டர்கள்
குப்புக் குட்டி
Post a Comment