ஆக வீரமணி அவர்களும் ஜோதியில் கலந்து விட்டார். தனது மகன் அன்புராஜை தடாலடியாக தனக்கடுத்த நிலையில் உள்ள தலைமை நிலைய செயலாளராக ஒரு நாடகத் தன்மையுடன் நியமித்துள்ளார். இதற்காகவே கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
இந்த விஷயம் அதுவரை ஒரத்தநாடு குணசேகரன், அடுத்த கைத்தடிகளான நெய்வேலி ஜெயராமன், மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித்குமார் ஆகியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது (ஜூனியர் விகடன், 18.10.2009 தேதியிட்ட இதழ்). “இந்த அறிவிப்புக்கு எதிராக என்ன விமரிசனங்கள், பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த வீரமணி தயாராக இருக்கிறான்னு சொல்லி அமர்ந்து விட்டார்” என ஜூ.வி. மேலே எழுதுகிறது.
அரங்கத்தில் இதை ஆதரித்து எல்லோரும் எந்திருச்சு கைதட்டணும்னு மாநில துணை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கேட்டுக் கொண்டதற்கு ரெஸ்பான்ஸ் சுத்தமாக லேது. அதை புரிஞ்சுகிட்டு கூட்டத்தை உடனே முடிச்சுக்கிட்டாங்க. வீரமணியும் அவசரமா வெளியே போயிட்டாரு.
திராவிடர் கழக்ப் பொதுச்செயலாளர் கலிபூங்கன்றனிடம் தொலைபேசி மூலம் கருத்து கேட்ட குமுதம் ரிப்போர்டருக்கு “அன்புராஜ் சம்பந்தமாக நான் எதுவும் பேச முடியாது. தலைவர்தான் பேச வேண்டும் என்றவர்” “அவரும் உங்களிடம் பேச மாட்டார்” என்று கூறி தொலைபேசித் தொடர்பை துண்டித்தாராம்.
எப்படி ஐயா இப்போதே பேசுவார்? சரியான சாக்குபோக்குகள் உருவாக்கிக் கொள்ள வேண்டாமா? தமிழ் ஓவியா ஆகியோருக்கு ஓவர்டைம் வேலைதான் இவற்றைக் கண்டுபிடிப்பதில்.
இதில் பெரியாரின் நினைவ்களுக்கு என்ன மரியாதை என்பவர்களுக்காக: தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காகவே மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டது, மணியம்மையார் தனது உயிலில் வீரமணியை வாரிசாக நியமித்தது ஆகியவற்றின் தொடர்ச்சியாகத்தான் வீரமணியும் நடந்துள்ளார் என்று பார்த்தால், அவர் பெரியாரின் வழிப்படி நடப்பவரே எனலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
6 hours ago
16 comments:
எல்லாவற்றையுமே தன்னுடைய சொத்தாக நினைப்பதால் வரும் வினை இது! இவர்களை காலம் தான் திருத்த வேண்டும்!
டோண்டு அய்யா,
பாவம் பழநி ஓவியா அய்யா.அவரும் விசுவாசமாய் மாங்கு மாங்கு என்று கேவலமான கட் அண்ட் பேஸ்ட் வேலையை பல்லைக் கடித்துக் கொண்டு செய்து வந்தார்.ஆனால் சூரமணி இவருக்கு போட்டது பட்டை நாமம்.
என்ன செய்வது.பாசறை எச் ஆர் பாலிஸி பிரகாரம் ஒரு ஆள் குறைந்தது 26 வருஷம் பியூன் வேலை செய்தா தான் அடுத்த லெவெல் அதாவது சீனியர் பியூன் பொசிஷனுக்கு ப்ரோமஷனில் வர முடியும் என்பது இந்த பிரியாணி குஞ்சுகளுக்கு தெரியாது போலும்.
ஒவியா மேலும் பல வருஷங்கள் சிரத்தையோடு கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்து வர வாழ்த்துக்கள்.
பாலா
அரசியல் பதவி நோக்கில் கட்சி நடத்தாமல், கடவுள் விற்காமல் (அதற்கு ஆபோசிட்டை விற்று) ஒருவர் ஐந்தும் பத்துமாய் நன்கொடை பெற்று (அவர் கூட போட்டோ எடுக்க கூட பணமாமே) , இவ்வளவு சொத்து சேர்த்தது எனக்கு மிகப்பெரிய விஷயமாக படுகிறது. அதை இவ்வளவு கட்டுகோப்பான நிறுவனமாக இன்று வரை நடத்தி வருவது பெரிய விஷயம். எது எப்படியோ, பெரியாரும் வீரமணியும் எனக்கு மிகப்பெரிய நிர்வாகிகளாக தெரிகிறார்கள்.
Seriously, there should be management case studies on the Periyar institutions...
சொத்தை கட்டிக்காக்க தான் மணியம்மையை மணம் செய்தார் என்றால் என்ன சார் தப்பு? சொத்துக்கள் அப்படியே சீரழிந்து போக சொல்கிறீரா?வீரமணி அவர் மகனுக்கு கொடுப்பதால் மணியம்மை மகளிர் பள்ளிக்கூடமும் கல்லூரியும் தொழிற்கல்வி கூடமும் ஒழுங்காக நடக்குமென்றால், so be it..
வீரமணியோ அன்புராஜோ புறங்கையை நக்கிவிட்டு போகட்டும். தேன் ஓரளவுக்கு இன்டாக்டாக அதன் benificiary-க்கு போய் சேர்கிற வரையில்..
நட்ராஜை வழிமொழிகிறேன்..!!!!
இலங்கைத்தமிழர் இன்னல் களைய இலங்கை சென்று வந்த தூதுக்குழுவின் பேட்டிகளை நாடு கேட்ட பிறகு, இலங்கைத் தமிழர் நலம் காக்கும் தலைவர் கலைஞர் ஒருவர்தான் என்பதை இந்த ஊருக்கும் உலகுக்கும் உணர்த்தியது கண்டு தமிழின விரோதிகள் இனி என்ன சொல்லுவார்கள்?
வாழ்க கலைஞர்!
வெல்க சூரியக் குடும்பம்!
இனமானம் காக்கும் தளபதி ஸ்டாலின் புகழ் ஓங்குக!
wait. i will bring popcorn.
one more doubt. how do they select the next sangaracharys? who selects the? committee?
//
சொத்தை கட்டிக்காக்க தான் மணியம்மையை மணம் செய்தார் என்றால் என்ன சார் தப்பு? சொத்துக்கள் அப்படியே சீரழிந்து போக சொல்கிறீரா?
//
தப்பே இல்லை தலைவா..
அந்த சொத்து என்ன சுயமாக ஒழச்சு சம்பாதிச்சதா ? நன்கொடைகள் தானே...
அதை டிரஸ்ட் அமைத்து நிர்வகிக்க வேண்டும்.
சுயமாக சம்பாதித்த சொத்து என்றால் வரி எக்கச்செக்கம் வரும்.
வரிகளை குறைக்கவும், தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கைக்கு இணங்கியும் தான் உழைத்துச் சேர்த்த சொத்தின் பங்கை தர்ம காரியங்களுக்காக ஒதுக்குகின்றனர். அதை பல டிரஸ்டுகள் பெயரில் மாற்றி சந்ததியினர்களே டிரஸ்டுகளை நிர்வகிக்கின்றனர். டிரஸ்டுகள் மூலம் பல தர்ம காரியங்களும் செய்கின்றனர்.
ஆனால் இங்கே நடப்பது என்ன ?
கட்சி நிதியை சொந்த சொத்தாக மாற்றிக்கொண்டிருக்கிறார் கீ.வீரசூரமணி.
கட்சியின் மேல் எவ்வளவு நம்பிக்கையிருந்தால், அதிலிருக்கும் எவனையும் நம்பாமல் தன் மகனை/மனைவியைத் தலைவர் ஆக்குவார் ஒருவர் ?
கட்சியில் தன்னைத்தவிர அனைவருமே அடி முட்டாள்கள் என்று நம்பும் ஒரு மாபெரும் அறிவாளியால் தான் இப்படி முடிவெடுக்க முடியும்.
இதற்கெல்லாம் முடிவு கட்ட ஒரே வழி.
கட்சியில் இப்படி வாரிசுகளை இறக்கு பவர்கள் கட்சியே தன் சொத்தாக நினைப்பதால் தானே ?
அந்தச் சொத்துக்கு அவர்கள் வருமான வரி கட்ட வைக்க வேண்டும். அது போதும்.
ஒரு தலைவனும் கட்சியில் மகனை தனக்குப் பின் தலைவனாக்க மாட்டான்.
தி.க என்ற கட்சியின் செயல்பாடு பற்றி எனக்கு அவ்வளவா தெரியாது. ஆனால், சவுத் சைடில் அவர்கள் நிறுவனங்கள் (esp திருச்சி, தஞ்சாவூர் ஏரியா) செய்கின்ற பெண்கள் கல்விப்பணி மகத்தானது, அது engg காலேஜோ, தையல் பள்ளியோ...
எண்பதுகளில் பெண்களுக்கென்றே ஒரு பொறியியல் கல்லூரியை visualize செய்து ஆரம்பித்து நடத்துவது என்பது சாதரண விஷயம் அல்ல.
89-ம் ஆண்டு "என் பொண்ண பையன்களோட படிக்க வெக்க மாட்டேன்" என்று எங்கள் தஞ்சாவூர் ஹவுஸ் ஓனர் கலியபெருமாள் 1102 மார்க் வாங்கிய தன் மகளை பெரியார் மணியம்மை பெண்கள் engg காலேஜில் மட்டுமே சேர்க்க அனுமதித்தார். இன்று அந்த பெண் ஒரு MNC-யில் VP. இது ஒரு உதாரணம் தான்.
பெரியார் அரசியல் கட்சிகளையே வெறுத்ததாக படித்த மாதிரி ஞாபகம்!
மாலனின் புதிய தலைமுறை படித்தீர்களா. இதழ் நன்றாக இருக்கிறதா. எனக்கு சிறுவர்மலர் போல தெரிகிறது. லட்சகணக்கில் செலவழித்து விளம்பரம் செய்கிறார்களே. மாலனுக்கு எப்படி இவ்வளவு பணம்.
மதராஸ் பல்கலைக்கழகப் புதிய துணை வேந்தர் திருவாசகம் அவர்கள் தான் பெரியார்-கலைஞர் வழிப்பிறந்தவன் என்று மார்தட்டி அறிவிப்பு விடுத்துள்ளார். ஆகையால் இனி அவர் செயலாற்ற இருக்கும் பட்டியலில்:
1)சாதி அடிப்படையில் மாணவர் சேர்ப்பு, ஆசிரியர் பதவிச் சேர்ப்பு இன்ன பிற சிறப்பாக நடந்தேறும்.
2)பெரியார் வழியில் தனக்குப் பின் தன் மகனோ மகளோ தான் மதராஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி வகிக்கவேண்டும் என்று உயில் எழுதுவார்
என்று எதிர்பார்க்கலாம்.
***என்ன செய்வது.பாசறை எச் ஆர் பாலிஸி பிரகாரம் ஒரு ஆள் குறைந்தது 26 வருஷம் பியூன் வேலை செய்தா தான் அடுத்த லெவெல் அதாவது சீனியர் பியூன் பொசிஷனுக்கு ப்ரோமஷனில் வர முடியும் என்பது இந்த பிரியாணி குஞ்சுகளுக்கு தெரியாது போலும்.***
ஐயா பாலா,
மற்ற பிரியாணி குஞ்சுகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் தமிழோவியா அவர்கள் ஏற்கெனவே பாசறை வரலாற்றில் முதல் தடவையாக 10 ஆண்டுகளுக்குள் ப்ரோமசன் பெற்று சாதனை படைத்தவர்.
ஆம்;இவர் 10 அண்டுகள் பழனி சுவர்களில் போஸ்டர் கட் செய்து பேஸ்ட் செய்தவர்.அந்த போஸ்டர்களில் எந்த முகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மூன்று ம்கங்கள் கண்டிப்பாக ஆஜர் ஆகியிருக்கும்.அவையாவன;
1)அறிவுக்களை சொட்ட சொட்ட அனைவரையும் உற்றுப் பார்த்தப்டி இருக்கும் பெரியாரின் முகம்.
2)குரூரப் புன்முறுவல் பூத்தபடி இருக்கும் ஆசிரியரின் முகம்
3)அட்டகாச வில்லன் சிரிப்பு சிரித்தப்டி இருக்கும் இனமான தலைவரின் முகம்.
சில சமயங்களில் வில்லன் முகத்திற்கு பதிலாக சமூக நீதி காத்த வீராங்கனையின் முகம் இருக்கும்.
இவரை வி,ட ஒரு சின்ன சுருக்கம் கூட இல்லாமல் சுவர்களில் போஸ்டர் ஒட்டிய பாசறை தோழர் இல்லையென்பதால் பாசறை எச் ஆர் இவருக்கு கணிணி கட் அண்ட் பேஸ்ட் பியுன் லெவலுக்கு ப்ரோமசன் கொடுத்தது.இது பிடிக்காமல் தான் பாரிஸ் தோழர் எதிரி பாசறைக்கு கட்சி மாறினார் என்பது நாடே அறிந்த விஷ்யம்.
ஒபாமாவின் மகனைத்தான் அடுத்த குடியரசு கட்சி தலைவராக்க வேண்டுமென்று முன்மொழிகிறேன்
//
ஒபாமாவின் மகனைத்தான் அடுத்த குடியரசு கட்சி தலைவராக்க வேண்டுமென்று முன்மொழிகிறேன்
//
குடியரசுக்கட்சி என்ன பாசறை நடத்தும் "குடியரசு" நாளிதழ் என்று நினைத்தீரா ?
தி.க பேச்சில் தான் "குடியரசு" செயலில் "குட்டிச்சுவரரசு"
@அனானி & வஜ்ரா
ஒபாமா இருப்பது ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment