ட்விட்டரில் மேயும் போது உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமலஹாசன் இசுலாமியருக்கு எதிர்ப்பு நிலையை கொண்டதாக அவர் மேல் பல இசுலாமியர் விமரிசனம் வைத்தனர் என்றும், அவர்களில் சிலர் இயக்குனர் அமீர் வழியாக சென்று கமலஹாசனை கேள்விகள் கேட்டனர் என்றும் அறிந்தேன். அப்பதிவிலிருந்து சிலவரிகளை முதலில் பார்ப்போம்.
இதற்காக கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரான திரைப்பட இயக்குநர் அமீரிடம் நமது கண்டனத்தைக் கூறி கமல்ஹாசனிடம் தெரிவிக்கக் கூறினோம். அதற்கவர் கமல்ஹாசன் இந்துத்வா சிந்தனை கொண்டவரில்லை. நீங்களே அவரை சந்தித்து விவாதியுங்கள் என்று கூறி கமல்ஹாசனுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் 09.10.2009 அன்று திரைப்பட விருது நிகழ்ச்சி, முதலமைச்சருடன் சந்திப்பு, மாலை அமெரிக்க பயணம், எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த நிலையிலும், நமக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒதுக்கித்தந்தார் கமல். வழக்குரைஞர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் ஜி.அத்தேஷுடன் 'முஸ்லிம் சமுதாயத்தின் மீதான ஊடக வன்முறை, உன்னைப் போல் ஒருவன் படம் தந்துள்ள பாதிப்பு'' ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினோம். அந்த உரையாடலின் சில பகுதிகள்...
கேள்வி: உள்நாட்டு அளவிலும், உலகளாவிய அளவிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், அமைதியைக் குலைப்பவர்களாகவும் சித்தரிக்கும் மதவாத செயல்கள் முழுவீச் சில் நடந்து வருகின்றன. திரைப்படத் துறையில் ஒரு மேதையாகவும், நியாயவானாகவும் அறியப்படுகின்ற நீங்கள் இந்த அநீதிக்குத் துணை போகலாமா?
கமல் : உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் முஸ்லிம்களை கொச்சைப்படுத்துவதோ, பயங்கரவாதத்தோடு அவர்களை மட்டும் சம்பந்தப்படுத்துவதோ என் உள்நோக்கம் அல்ல. நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. குறிப்பாக முஸ்லிம்களுக்கு நான் எதிரி அல்ல என்பதை என்னோடு பழகியவர்கள் அறிவார்கள்.
''வெட்னஸ்டே'' என்ற வெற்றிப் படத்தை தமிழில் தயாரித்தால் பெரும் வெற்றிபெறும் என்று என்னை அணுகினார்கள்.
வெட்னஸ்டே படத்தின் கதாநாயகன் நஸ்ரூதீன் முஸ்லிம் என்பதாலும், ஆரிஃப் என்ற ஒரு நல்ல முஸ்லிம் அதிகாரி காட்டப்படுவதாலும், இந்திப்பட உலகில் இப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதாக பார்க்கப்படவில்லை.
நான், ஆரிஃப் என்ற பாத்திரத்தை நல்லவராகக் காட்டுவது மட்டும் போதாது என்று மேலும் பல மாற்றங்களைச் செய்தேன். அதற்குப் பிறகும் கூட இது முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறுவது ஆச்சர்யம்தான்.
நான் 'ஹேராம்' படம் எடுத்தபோது முஸ்லிம்களின் தரப்பைக் கூறுவதற்கு ஏகப்பட்ட இடங்களைத் திட்டமிட்டு உருவாக்கினேன். திரைப்பட வர்த்தகர்கள் ஹேராமில் எத்தனைப் பாட்டு, எத்தனை சண்டை? என்று கேட்டபோது, காந்தியை இந்துத்துவ தீவிரவாதி சுட்டுக்கொல்வதுதான் உச்சக்கட்ட சண்டை என்றேன்.
'ஹேராம்' முஸ்லிம்களுக்கு எதிரானபடம் என்றார்கள் சிலர். ஆனால் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம். மறக்கடிக்கப்பட்ட மாபெரும் போராளியான யூசுப்கானின் வரலாற்றை 'மருதநாயகம்' என்ற பெயரில் படமாக எடுக்கத் துணிந்தவனும் நான்தான். முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல.
கேள்வி : நீங்கள் முஸ்லிம்களுக்கு இணக்கமானவர்தான். ஆனால் உங்கள் படம் காயப்படுத்தும் வகையில் தானே அமைந்துள்ளது. உதாரணத்திற்கு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டுவைப்பது போல் கூறியிருக்கிறீர்கள் இப்படி வரலாற்றைத் திரிப்பதால்தானே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. 2002ல் நடந்த சம்பவம் 1998ல் நடந்த சம்பவத்துக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?
கமல்: வரலாறு முன்பின்னாகத் திரிவடைந்து மொத்தமாகவே குழப்பி இருக்கிறது. நடந்ததை மட்டும் சொல்வதுதான் வரலாறு. நடந்த சம்வத்தின் மீது தன் கருத்தையும், பார்வையையும் கூறுவது வரலாற்றாசிரியனின் வேலை அல்ல. அதனால் ஹிந்தியில் இதிஹாஸ் (இவ்வாறு நடந்தது) என்று குறிப்பிடுகிறார்கள்.
நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டிவிட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டும் என்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை! அந்தப் பகுதி இதுதான்.
முகலாயர் படையெடுப்பு என்றும் வெள்ளையர் என்றும் நாம் பாடம் சொல்லித் தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து, இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனைகளைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.
ஆனால் ஆங்கிலேயேர்கள் இங்கு வளங்களைச் சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டைத் தம் நாடாக ஒரு போதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பஹதூர் 'இந்த நாட்டில் தன் உடலைப் புதைக்க ஆறுகெஜ நிலம் கிடைக்க வில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார். (அந்த உருது கவிதையை கமல் மனப்பாடமாகவும் சொன்னார்.
இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லாம் என்பது தான் நான் வைத்த விவாதம்.
கேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.
கமல் : நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார் கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.
தலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வதுதான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தானில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.
கேள்வி : அப்போது பிரதமர் நரசிம்மராவைக்கூட சந்தித்தீர்களே?
கமல் : பம்பாய் கலவரத்தின் (1993) கொடுமைகளை நேரில் பார்த்து என்னால் மனம்தாள முடியாமல் அங்கேயே அழுது விட்டேன். உடனே சென்று திரைப்படப் பிரமுகர்களுடன் பிரதமர் நரசிம்மராவை சந்தித்தேன். நடந்த சம்பவங்கள் குறித்துக் கேட்டேன். மஹா ஆரத்தி பற்றி எதுவுமே தெரியாது என்றார். என்னுடன் வந்த நண்பர் இதைக்கேட்டு கேலியாக சிரித்து விட்டார் (அவர் முஸ்லிம் நண்பர்) இதனால் அவருக்கு கொஞ்சம் கோபம்.
கலவரங்களின் போது மகாத்மா காந்தி வீதியில் இறங்கி நடந்துள்ளார். வாருங்கள், நாங்கள் உங்களோடு வருகிறோம். பம்பாய் வீதிகளில் நடந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம் என்றேன்.
அது எனக்குப் பாதுகாப்பானதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கிறார்கள் என்றார்.
பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் சாதாரண பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? என்றேன்.
சற்று கோபமாக முறைத்த நரசிம்மராவ் நினைத்த உடன் கிளம்புவதற்கு இது ஒன்றும் சினிமா 'ஷுட்டிங் இல்லை என்றார். நீங்கள் நினைப்பது போன்றதல்ல சினிமா 'ஷுட்டிங். அதற்கும் ஏராளமான முன் திட்டங்கள் வேண்டும். மக்களைச் சந்திப்பதற்காக எங்களுடன் வரமுடியுமா? என்றேன்.
நிலைமையின் வளர்ச்சியைப் பார்த்து முடிவு செய்யலாம்'' என்றார்.
உடனே நான் இந்த நிலைமை மேலும் வளர அனுமதிக்கப் போகிறீர்களா?'' என்றேன்.
உடனே கோபமான அவர், எனக்கு நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறீர்களா?
Do you teach me english? என்றார். வேறெதுவும் கேட்க வேண்டுமா? என்று வேறுபக்கம் பார்த்துக் கொண்டு கேட்டார்.
பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு வெளியேறினோம். அப்போது ஆனந்த விகடன் இதழில் இச்சம்பவம் விரிவாக வந்திருந்தது.
கேள்வி : மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்தக் கலவரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அந்தப் படமும் முஸ்லிம்களை வன்முறையாளர் களாகத்தானே சித்தரித்தது?
கமல்: இதை நான் அப்போதே எதிர்த்தேன்.
(முஸ்லிம்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாக சித்தரிப்பது தவறானது மணிரத்னத்தின் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் பம்பாய் படம் குறித்து பேட்டியளித்திருந்தார்) இவ்வளவுக்கும் மணிரத்னம் எனது உறவுக்காரர். அவருக்கு எங்கள் பெண்ணைக் (மணிரத்தினம் மனைவி சுஹாசினி கமலின் அண்ணன் மகள்) கொடுத்திருக்கிறோம். அவர் எனக்கு மாப்பிள்ளை முறை, ஆனாலும் கூட நியாயத்தை நான் கூறினேன். அவரது படத்தின் விளைவாக எதாவது விபரீதம் நடந்திருந்தால், எங்கள் பெண்ணுக்குதானே பாதிப்பு...
கேள்வி : செப்-11, 2001 சம்பவத்திற்குப் பிறகு (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) ரஹழ் ர்ய் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது உலகளாவிய அளவில் ஒடுக்கு முறை ஏவப்பட்டுள்ளது. நம் நாட்டில் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப்பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத் தால் பாதிக்கப்படுவர்களும் முஸ்லிம்கள்தான்.
எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற கருத்து பரப்பப் படுகிறது. ஊடகங்களிலும் வலுவான குரலற்ற (Voiceless Community) சமுதாயமாக உள்ள முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள் மேலும் ஒடுக்குவது சரியா?
கேள்வி : பயங்கரவாதிகள் ஏன் உருவாகிறார்கள்?
கேள்வி : உன்னைப் போல் ஒருவன் உருவாக்கிய காயத்தை எப்படி ஆற்றப் போகிறீர்கள்?
போன்ற கேள்விகளுக்கு கமலின் பதில்கள் தொடரும்........ இன்ஷாஅல்லாஹ்
மீண்டும் டோண்டு ராகவன். கமலஹாசனை எனக்கு நல்ல நடிகர் என்னும் முறையில் மிகவும் பிடிக்கும். மற்றப்படி அவரது தனி அபிப்பிராயங்கள் மற்றும் அவரது சொந்த வாழ்க்கை பற்றி நான் அலட்டிக் கொண்டதில்லை. அவரே ஏற்கனவே பலமுறை பல இடங்களில் கூறியது போல அவை முழுக்க முழுக்க அவரது சொந்த விஷயங்கள். எனது பார்வை கமல் என்னும் நடிகருடன் முடிந்து விடுகிறது. அதற்கு மேல் சென்றதில்லை.
இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்ப்பேனா என்றும் தெரியாது. ஆகவே அது பற்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியோ அவற்றுக்கான எதிர்வினை பற்றியோ எனது கருத்துகள் முன்முடிவு ஏதும் இல்லாமல்தான் இருக்கும். நான் இங்கு பார்ப்பது கமல் என்னும் கலைஞர் விமரிசனங்களை எவ்வாறு கையாளுகிறார் என்பது பற்றியே. பார்த்தவரை நன்றாகவே எதிர்வினையாற்றியுள்ளார். இனிமேல் வரும் பகுதிகளையும் பார்ப்போமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
6 hours ago
19 comments:
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அண்ணா
ஆஹா... ஆரம்பிச்சுட்டேளா??
உன்னைப்போல் ஒருவன் ஒரு படத்திற்காகவே, பதிவுகளில் உளுத்தம்பருப்பை வறுப்பது போல வறுத்துக் கொண்டிருந்தார்கள்!
வேறு யாரை? இந்த மாதிரிப் பதிவுகளுக்கு வந்து படித்தவர்களைத் தான்!
இப்போது நீங்கள் உங்கள் கைங்கரியமாக, "கமல்ஹாசன் இந்துத்வா சிந்தனை கொண்டவரில்லை" என்ற இயக்குனர் அமீரின் சான்றிதழோடு தொடங்கி கடுகு தாளிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்!
கலைஞர் பாணியில் கமலுக்கு சப்பைக் கட்டுக் கட்ட இன்னொரு காரணம்!
கமலுடைய தந்தை அந்த நாள் காங்கிரஸ்காரர். சுதந்திரப்போராட்டத்தில் சிறைக்கெல்லாம் போயிருக்கிறாராம்!சிறையில் சினேகிதமான யாகூப் ஹாசன் என்ற நண்பரின் நினைவாகத் தன்னுடைய மூன்று மகன்களுக்கும் வரிசையாக சந்திரஹாசன், சாருஹாசன், கமல் ஹாசன் என்று பெயர் வைத்தாராம்!
பிறந்ததில் இருந்தே அவர் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல என்பதை நிரூபிக்க இதைவிடப் பெரிய சான்று இன்னும் வேண்டுமோ:-))
தாளிப்பதில், ஏதோ நம்மால முடிஞ்சது!!
டோண்டு அய்யா,
இந்த நேர்காணல் கமல் தன்னை மாமேதையாக நினைத்துக் கொண்டிருக்கும் அகம்பாவத்தை தான் காட்டுகிறது.நரசிமம ராவ் ஒரு சிறு குழந்தை பூ (boo) என்று சொன்னாலே பதறியடித்து ஓடுபவர்;அவரிடம் சென்று பம்பாய் ரையட்ஸ் பற்றி பேசினாராம்.என்ன வீரம்?
இப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சன்,ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது செய்தது என்ன?திரைப்பட கும்பல் சேர்ந்து போட்ட கூட்டத்தில் உளறி விட்டு வந்ததை த்விர?
மன்மோகன் சிங்கிடம் சென்று பேச தைரியம் இருந்ததா?போகட்டும், அதை விடுங்கள்.அன்றாடம், தான் ஜ்ல்லியடித்து,துதி பாடும் மஞ்ச துண்டிடம் சென்று வற்புறுத்த முடிந்ததா இவரால் "ஏன் இன்னும் ஆட்சியில் இருக்கிறீர்கள்?" என்று.
இவர் பம்பாய் முஸ்லீம்களுக்கு உருகுவாராம் ஆனால் தமிழர்களுக்கு உருக மாட்டாராம்.கோவையில் குண்டு வைக்கப்பட்ட போது 100 பேர் மடிந்தார்களே;தீவிரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க முடிந்ததா?
கமலும், ரம்ஜானுக்கு குல்லா போட்டுக்கொண்டு,தாடி வைத்துக்கொண்டு சுன்னி கஞ்சி(பார்க்கவும், ஷியா கஞ்சி அல்ல) குடிக்கும் சீப் ஆசாமி, தன் ஆசான் மஞ்ச துண்டு போல.ஆசானைப் பொலவே இவரும் சினிமா/ அரசியல் வியாபாரி.ஒரு கீழ்த்தரமான சூடோ செக்யூலரிஸ்ட்.டிபிகல் திராவிட கருப்பு சட்டை அரசியல் செய்யும் ஜாதி வெறியன்.அவ்வளவே.
பாலா
There is no need for Kamal to explain himself like an accused. தேவையற்ற ஒரு உளறல் பேட்டி இது, அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.
பாலா,
வீனா ஏன் கமல் மேல கடுப்பாகுறீங்க ?
கோவை குண்டு வெடிப்பிற்கு யார் காரணம் ? அதில் பாதிக்கப்படு உயர் இழந்தவர்கள் தான் காரணம் , அவர்களே குண்டு வைத்துக் கொண்டு இறந்து போனார்களா எனபது தானே உண்மை ! அதை ஏன் இப்படி மறைக்க நினைக்கிறீர்கள்.
நீங்கள் குற்றம் சாட்டும் மதத்திற்கும் தீவிர வாதத்திற்கும் எப்போதாவது சம்பந்தம் உண்டா ? குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடுமே இல்லை என்று.
அதிகாரிகளின் சதியால் அவர்கள் கைது செய்யபடுகிறார்கள், அதற்காக அவர்களைக் குறை கூறுவது நல்லாவா இருக்கு !!
இனிமேலாவது இறந்தவர்களே செய்தார்கள் என்று சொல்லப் பழகுங்கள், அது தானே தமிழ் பண்பாடு , இந்திய கலாச்சாரம், சமத்துவ சமதர்ம வழிமுறை. செய்யாத ஒன்றை ஒரு இனத்தின் மீது சுமத்தாதீர்கள்
எப்பதான் உங்களை மாதிரி ஆட்களை எல்லாம் திருத்துவதோ ?
அசாத்தியன்
உண்மையான செக்யூலரிஸ்ட்
//நரசிமம ராவ் ஒரு சிறு குழந்தை பூ (boo) என்று சொன்னாலே பதறியடித்து ஓடுபவர்;அவரிடம் சென்று பம்பாய் ரையட்ஸ் பற்றி பேசினாராம்.என்ன வீரம்?//
அப்படிபட்டவர் ஏன் பிரதமாரக வேண்டும், இந்தியநாட்டு பிரச்சனையை இந்திய பிரதமரிடம் பேசாமல் அமெரிக்க அதிபரிடமா பேச வேண்டும்!
வால் சார்
கமல் சொல்வது நம்பற மாதிரி இல்லை என்பதே இங்கு அதற்குப் பொருள். இந்தியப் பிரதமர் எவ்வளவு வீக்கானவராக இருந்தாலும் இப்படி அவரிடம் பேச முடியுமா ? தெயரியலை.
எதை வேணுமின்னாலும் தமிழன் படிப்பான் கேட்பான்னு ஆயிடுத்து இல்ல
கனகசபை வள்ளியப்பன்
வால் பையன் அய்யா,
//அப்படிபட்டவர் ஏன் பிரதமாரக வேண்டும்,//
சஞ்சய் காந்தி அய்யாவிடம் தான் கேட்கவேண்டும்.எப்படியும் காந்தி ஃபாமிலியிலிருந்து இன்னொரு வாரிசு தலையெடுக்கும் வரை காங்கிரசுக்கு பிரதமர் பதவியில் அமர்த்த ஒரு டம்மி தேவை;அந்த வகையில் நரசிம்மராவ் ஒரு நல்ல டம்மியாக காட்சியளித்திருக்கலாம்.தற்போது, மன்மோகன் சிங் அந்த தேவையை பூர்த்தி செய்திருக்கிறார்.
இருந்தாலும், நரசிம்மராவின், ஆட்சியில் தான், இந்தியப் பொருளாதாரம், முந்தைய காங்கிரஸ் அரசுகளின் முறை கேடுகளையும் மீறி ஓரளவுக்காவது முன்னேற்றப் பாதையில் நடக்கத் தொடங்கியது என்பது வேறு விஷயம்.
// இந்தியநாட்டு பிரச்சனையை இந்திய பிரதமரிடம் பேசாமல் அமெரிக்க அதிபரிடமா பேச வேண்டும்//!
அமெரிக்க அதிபரிடம் பேசாமல் வேறு யாரிடம் பேச வேண்டும் என்கிறீர்கள்?ஹூ ஜின்டாவிடமா,ஜர்தாரியிடமா,?நம்ம பிரதமரே, 26/11,மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி அமெரிக்க அதிபரிடம் தானே பேசுகிறார்,மன்றாடி கேட்டுக் கொள்கிறார்.
பாலா
//There is no need for Kamal to explain himself like an accused. //
Dear Bala,
You are wrong. Of course, there is a powerful reason for kamal to feel agitated and make every effort to appease the tribe, that is accusing him of Hindutva leanings.
Over the last few years, kamal has invested enormous time and effort, in making himself appear as a ,so called secular rationalist, which means that, from time to time, he had to resort to unreasonable hindu bashing and molly coddle hard line Islam;it also meant that in tamilnadu he had to wear a black shirt and sing songs about EVR, louder than even Suuramani and tamil oviya;this also meant that he had to be seen to be praising yellow towel to the hilt and some times even Stalin and Thirumaa.
He did all this, to gain admission into this club of cozy pseudo secularists and anti nationalists; and now he is shocked that the same club members are accusing him of not being secular.How can he stomach this?He has to defend himself and retain his membership in this club ,without which one cannot do business anywhere in India,;in Tamil Nadu you cannot even think of doing business without appearing to be a DK black shirt and yellow towel jaalra and drinking sunni stew during Ramzaan.
bala
//நம்ம பிரதமரே, 26/11,மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி அமெரிக்க அதிபரிடம் தானே பேசுகிறார்,மன்றாடி கேட்டுக் கொள்கிறார்.//
முதுகெலும்பற்ற மூடர்கள்!
துப்பாக்கியோடு ரயில்நிலையத்தில் சுத்தி கொண்டிருந்ததற்கு வீடியோ, புகைபட ஆதாரங்களை வைத்து கொண்டே இன்னும் கசாப்பிற்கு சொறிந்து கொடுத்து கொண்டிருக்கிறார்கள்!, இவர்களால் தீவிரவாதத்தின் மயிரை கூட பிடுங்க முடியாது!
உண்மையில் இந்தப்படத்தில் கமல் முஸ்லீம்களுக்கு சொரிந்து கொடுத்து இந்துக்களை கிள்ளிவிடும் வேலையைத்தான் பார்த்திருக்கிறார். இவரும் ஒரு போலி செக்யூலரிச வாதிதான். காஷ்மீரில் இந்து பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக கொலைசெய்யப்பட்டு அவர்களின் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு துரத்தப்பட்ட போது இந்த கமலஹாசன் யாரைப் போய் சந்தித்து இந்துக்களைக் காப்பாற்றச் சொன்னார்? காஷ்மீரில் பனிலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கு நிலத்தை குத்தகைக்கு கூட கொடுக்கக்கூடாது என்று கலவரம் செய்த முஸ்லீம்களுக்கு எதிராக என்ன அறிக்கை விட்டார். எந்த பிரதமரைப் பார்த்தார்? குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி உருக்க்கமாகப் பேசி நடித்தவர் அதற்கு காரணமான கோத்ரா ரயில் எருப்பு சம்பவத்தில் கருகிச் செத்துப்போன பெண்களுக்காக ஏன் உருகவில்லை. இந்த சந்தர்ப்பவாதியின் பேச்சையெல்லாம் ஒரு விஷயமாக போட்டு இந்துக்களின் மனதை புன்படுத்துகிறீர்கள். ஆயிரம் இந்துக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு முஸ்லீம் குற்றவாளி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே இன்றைய ஆளும் அரசாங்கங்களின் கொள்கை என்பது மும்பை குற்றவாளிகளுக்கு பிரியானி போட்டு வளர்த்துவிடுவதிலேயே தெரியவில்லையா? அரசாங்கமே இப்படி இருக்கும் போது கமல் ஜல்லியடிப்பதில் ஆச்சரியம் இல்லை.
//ஆதாரங்களை வைத்து கொண்டே இன்னும் கசாப்பிற்கு சொறிந்து கொடுத்து கொண்டிருக்கிறார்கள்!, இவர்களால் தீவிரவாதத்தின் மயிரை கூட பிடுங்க முடியாது!//
வால் பையன் அய்யா,
மிகவும் சரி.இந்த மூஞ்சிகளால் தீவிரவாதத்தின் ஒரு சிங்கிள் மயிரைக் கூட பிடுங்க முடியாது.அதனால் தான் தீவிரவாதம், அடர்ந்த தாடியோடு,மண்டை முடியும் அசுரத்தனமாக வளர்ந்து டாலிபான் சைசுக்கு வந்து விட்டது.என்ன செய்ய?
பாலா
//வால் பையன் அய்யா,//
அண்ணே ரெண்டு அடி கூட அடிச்சிருங்க!
இப்படி அய்யாவெல்லாம் போட்டு டரியலாக்காதிங்க!
வால்னு கூப்பிட்டாலே போதுமானது! நான் ரொம்ப சின்னப்பையன்!
//
வால்னு கூப்பிட்டாலே போதுமானது! நான் ரொம்ப சின்னப்பையன்!
//
பையன் மட்டும் தான் சிரிசு, வால் ரொம்ப ரொம்பப் பெரிசு.
கமலும், ரம்ஜானுக்கு குல்லா போட்டுக்கொண்டு,தாடி வைத்துக்கொண்டு சுன்னி கஞ்சி(பார்க்கவும், ஷியா கஞ்சி அல்ல) குடிக்கும் சீப் ஆசாமி, தன் ஆசான் மஞ்ச துண்டு போல.ஆசானைப் பொலவே இவரும் சினிமா/ அரசியல் வியாபாரி.ஒரு கீழ்த்தரமான சூடோ செக்யூலரிஸ்ட்.டிபிகல் திராவிட கருப்பு சட்டை அரசியல் செய்யும் ஜாதி வெறியன்.அவ்வளவே.
//கமலும், ரம்ஜானுக்கு குல்லா போட்டுக்கொண்டு,தாடி வைத்துக்கொண்டு சுன்னி கஞ்சி(பார்க்கவும், ஷியா கஞ்சி அல்ல) குடிக்கும் சீப் ஆசாமி,//
ஷியாகிட்ட கஞ்சி இருக்காதா!?
இல்ல அவுங்ககிட்ட இருக்குறதெல்லாம் ரொம்ப பெருசா பாத்திரம்!,
வயது ஏற ஏற கமல் கனிந்து கொண்டே வருகின்றார்.
Whatever his inclinations are, I have not seen Hindus approaching him and asking him why are you against Hindutuva or anything like that!!!
Post a Comment