10/15/2009

அப்பாடி, ஒரு வழியாக மடிக்கணினி வாங்கி விட்டேன்

நான் பலமுறை பல இடங்களில் கூறியது போல என்னை எனது கணினியின் அருகாமையிலிருந்து பலவந்தமாக இழுத்துக் கொண்டுதான் என் வீட்டம்மா கோவில்கள் டூருக்கு அழைத்து செல்வார். நானும் நடுவில் வரும் ஊர்களில் ஏதேனும் உலாவி மையங்களை தேடிச் செல்வேன்.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு புது வாடிக்கையாளர் என்னை ஒரு மாதகாலத்துக்கு ஹைதராபாத் வந்து அங்கு மொழிபெயர்ப்பு/துபாஷி வேலை செய்யவியலுமா எனக் கேட்டதற்கு நோ சான்ஸ் எனக் கூறிவிட்டேன். ஏனெனில் எனது மற்ற வாடிக்கையாளர்களது வேலையை புறக்கணிக்க இயலாது அல்லவா? அப்போதுதான் நான் ஏன் ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளக் கூடாது என யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அது மட்டும் போதாதே, இணைய இணைப்பும் நான் செல்லுமிடத்திலெல்லாம் இருக்க வேண்டுமே. அதற்குத்தான் டேட்டா கார்ட் வாங்கிக் கொள்ளலாம் என எனது கணினி குரு முகுந்தன் கூறினான்.

பல நாட்கள் யோசித்த பிறகு போன சனியன்றுதான் காம்பாக் மடிக்கணினியும் ரிலையன்ஸ் டேட்டா கார்டும் வாங்கினேன். மடிக்கணினி மொத்தமாக 34000 ரூபாய் ஆயிற்று. டேட்டா கார்ட் ரூபாய் 3500. மடிக்கணினியை செட் செய்வதில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. விண்டோஸ் எக்ஸ்.பி. மீடியா செண்டரை அதில் ஏற்ற இயலவில்லை. கடையில் போய் கேட்டால் ஏதோ பயாஸில் ஒரு ஆப்ஷனை செயலிழக்கச் செய்ய வேண்டும் எனக் கூறி அதை செய்தும் காட்டினார்கள். மீதியை முகுந்தன் பார்த்து கொண்டான். ஆனால் அதெல்லாம் செவ்வாயன்றுதான் நடந்தது. அதற்குள் டேட்டா கார்டும் செயலாக்கப்பட்டது.

இப்போது அமர்க்களமான வேகத்தில் இணையத்தில் உலாவ முடிகிறது. ஸ்கைப்பும் போட்டுக் கொண்டேன். அதற்காக மேஜை கணினியை விட்டு விட முடியுமா. அதையும் பராமரிக்கிறேன். இப்போது எனது கோப்புகள் இரு கணினிகளிலும் ஏற்றப்படுகின்றன. இதுவே நல்ல Backup ஆகவும் ஆகிவிட்டது. இப்போது என்னிடம் மூன்று இணைய இணைப்புகள் உள்ளன, டாட்டா இண்டிகாம், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் டேட்டாகார்ட். சரியான முன்ஜாக்கிரதை முத்தண்ணா என்று வேண்டுமானாலும் கூறிக் கொள்ளுங்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் 2002-ல் நான் டெஸ்க்டாப் வாங்கியபோது அதன் விலை கிட்டத்தட்ட 35,000 ரூபாய். அப்போது மடிக்கணினி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்கள், எனக்கு தெரிந்து டேட்டா கார்டுகள் லேது. வெறுமனே தொலைபேசி இணைப்புகள்தான் பெரும்பாலும். நவம்பர் 2002-ல்தான் டிஷ்னெட் போட்டுக் கொள்ள முடிந்தது. அதற்கு அப்போதைய செலவு 32,000 சொச்ச ரூபாய்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரு வேளை வரவேண்டும் என நினைக்கிறேன். 2000 ஆண்டில்தான் எனது மிகப்பெரிய வாடிக்கையாளரை தில்லியில் பிடித்தேன். 2001-ல் சென்னைக்கு வந்தபிறகும் அவரது வேலைகளால்தான் முதல் மூன்று ஆண்டுகளுக்கு சென்னையில் குப்பை கொட்ட முடிந்தது. இப்போது சென்னையிலும் நல்ல பிக்கப் ஆகிவிட்டது. இனிமேல் எங்கு சென்றாலும் கவலையில்லை என்னும் நிலைதான். எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்தான். ஆகவே 2000 ஆண்டுக்கு முன்னால் வந்திருந்தால் வாடிக்கையாளரை பிடிப்பதில் பிரச்சினையாக இருந்திருக்கும்.

பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன் செய்யும்போது கடசியில் மூடாது சிஸ்டம் தொங்குகிறது. நானும் சரியான வழிமுறைகளையே உபயோகித்தாலும் அப்படித்தான் நடக்கிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் பவர் ஸ்விட்ச் மூலம்தான் அணைக்க நேரிடுகிறது.

மறுபடியும் சிஸ்டத்தை ரீலோட் செய்ய வேண்டும் என முகுந்தன் அபிப்பிராயப்படுகிறான். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஏனெனில் மிகவும் சள்ளை பிடித்த வேலை. எனது ஏவிஜி, அட்அவேர், பிராக்டிகௌண்ட் & இன்வாய்ஸ் ஆகிய மென்பொருட்களை மீண்டும் நிறுவ வேண்டும். அவற்றில் பலவற்றுக்கு பல இற்றைப்படுத்தல்களும் செய்ய வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பிக்கும் பல இற்றைப்படல்கள் தேவைப்படும்.

நண்பர்கள் யாரேனும் ஆலோசனை த்ரவியலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

35 comments:

Radhakrishnan said...

மடிக்கணினி வாங்கியதற்கு வாழ்த்துகள். முழுவதும் மூடாமல் hibernate எனும் ஆப்ஸனை அழுத்தி விடுங்கள். வாரம் ஒருமுறை நேரடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

Technology Buff, Entrepreneur said...

Dondu sir, if you dont fix the problem, chances are one of these days, your system wont boot up, and you would anyway have to reinstall... why let yourself at the mercy of your laptop...

My suggestion is to listen to your computer guru...

ரவி said...

just close the laptop and it will hibernate by himself. then open and press power on button again. then it will come up from hibernated stage.

மு.இரா said...

வணக்கம் டோண்டு... Labtop என்ன Configuration-ல வாங்கி இருக்கீங்க...
Vista install பண்ணிக்க வேண்டியதுதானே...
நான் அண்மையில் 27000ரூபாய்க்கு Desktop வாங்கினேன்.
Configuration:
Processor: Intel Quad Core
Mother Board: Intel (8 gp Supported)
Ram: 2 gp
Graphics card: 1 gp
OS: Windows 7 ultimate
Monitor: Samsung 22 inch
எப்படி?
வேகமாக Shutdown பண்ண பல Softwares இருக்கு... தேடி பாருங்க கிடைக்கலனா? சொல்லுங்க... என்னுடைய www.pulimagan.com - ல ஒரு பதிவு போட்டறேன்.

அறிவிலி said...

வாழ்த்துகள்.

dondu(#11168674346665545885) said...

@மு.இரா.
விஸ்டா வேண்டாம் என்பதில் முகுந்தன் மிகவும் உறுதியாக இருந்தான். எனக்கும் அது பிடிக்கவில்லை. நிண்டோஸ் எக்ஸ்பி மீடியா செண்டர் எனது மேஜை கணினியில் உள்ளது. அதுவும் ஒரிஜினல், பைரேட்டட் இல்லை.

அதையே மடிக்கணினிக்கும் போட்டு கொண்டேன். வேகமாக ஷட் டௌன் செய்ய பதிவு போடுவதாக இருந்தால் இப்பதிவில் அதை பின்னூட்டமாக தெரிவிக்கவும். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சூர்யா ௧ண்ணன் said...

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று பாருங்கள், இது உங்கள் கணினி பிரச்சனைக்கு தீர்வாக அமையலாம்.
http://suryakannan.blogspot.com/2009/03/windows-xp-shut-down.html

சூர்யா ௧ண்ணன் said...

ஷட் டவுன் செய்யும்பொழுது 'Updating Windows' செய்தி ஏதாவது வருகிறதா?
அப்படி வந்தால், Start->Run சென்று MSCONFIG என டைப் செய்து என்டர் கொடுங்கள். இனி திறக்கும் டயலாக் பாக்ஸில், Services டேபிற்கு சென்று 'Automatic Update' என்பதை எடுத்து விட்டு முயற்சித்து பாருங்கள்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
சூர்யா கண்ணன்

மாயவரத்தான் said...

//அதுவும் ஒரிஜினல், பைரேட்டட் இல்லை.

அதையே மடிக்கணினிக்கும் போட்டு கொண்டேன்.//

So the one you've installed in your laptop is a PIRATED one, right?! :)

மாயவரத்தான் said...

http://www.winutility.com/qsd/

Raju Viswanathan said...

Hello sir,
After a long time, I am seeing you using your favourite " en appan magara nedunguzhai nathan"..... Glad to see.........

Raju.

Anonymous said...

sir, . you can try this... Press ctrl alt del. an option will appear in the screen.. in the right corner of the screen, you will see the button to shut down..

Hariprasad G

வால்பையன் said...

//பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன் செய்யும்போது கடசியில் மூடாது சிஸ்டம் தொங்குகிறது. நானும் சரியான வழிமுறைகளையே உபயோகித்தாலும் அப்படித்தான் நடக்கிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் பவர் ஸ்விட்ச் மூலம்தான் அணைக்க நேரிடுகிறது.//

இது சரியல்ல!
கோப்புகள் சரியாக சேமிக்கமால் விட வாய்ப்புண்டு!

ஆவன செய்யுங்கள்!

Venkat said...

Dondu Sir,

In my opinion, one of the application is not able to safely close itself and is looking for some information. To identify this,

Open Start menu, Run option and type msconfig and hit Enter. Go to the startup tab. All programs that start during startup will be listed with a tick mark. Uncheck anything that appears like an application and restart the PC. When the machine has fully come up, logon to it. Once logged on, wait for 1-2 mins and shutdown/restart the machine. Observe if this is faster. If it is faster, go to the same startup option and enable one by one and repeat the same steps.

If it is not faster, you may have to check the Task Manager for individual processes.

But one thing, you cannot have this problem and keep powering-off forcefully. Like Mr. VV Thevan mentioned, one day (and that will be sooner), XP will crash and it will make you reinstall.

Please let me know if it helps.

Thanks

Venkata Raghavan R

உங்கள் தோழி கிருத்திகா said...

neenga re-install panidarathu nallathu sir...sila nerangalil ippadi oru prachana varum...unga nanbar solratha kelungalen :)
madikanini vaangiyatharku vazhthukkal

Anonymous said...

வாழ்த்துக்கள்.

இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்

Vijay said...

வாழ்த்துக்கள் ராகவன் சார். மடிக்கணின் டெஸ்க்டாப்பை விட பல வகையில் உகந்தது. காம்பேக் வாங்கியும் இவ்வளவு பிரச்னையா. பேசாமல் அதில் லினக்ஸ் ஏற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மற்ற மென்பொருட்கள் ஓடுமா தெரியவில்லை.
தமிழில் டைப் செய்ய வேண்டுமானால் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

இணையதளம் போய் அங்கு டைப் செய்து காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

Krishnan said...

Congrats Sir on getting laptop. Can you please tell me the Compaq model # and its configuration details ? I am contemplating buying one soon.

dondu(#11168674346665545885) said...

நண்பர்களுக்கு மிக்க நன்றி. செயற்கையாக பவர் ஸ்விட்சை உபயோகித்து மூடுவது சரியல்ல என்பதை நானும் உணர்ந்ததால்தான் இப்பதிவே.

பல யோசனைகள் கிடைத்துள்ளன.

நாளை முகுந்தன் வரும்போது அவனிடம் அவை ஒவ்வொன்றாகக் காட்டி முயற்சிக்க சொல்கிறேன். அதுவரை மடிக்கணினியை ஓப்பன் செய்ய வேண்டாம் என வைத்திருக்கிறேன்.

இப்போதுதான் சேட்டில் முகுந்த வந்தான். அவனிடமும் உங்கள் ஆலோசனைகளை கூறினேன், இப்பதிவின் சுட்டியையும் அனுப்பியுள்ளேன். அதற்குள் அவனே நேற்றுவரைக்கான பின்னூட்டங்களை பார்த்துள்ளான்.

CMOS செட்டிங்ஸ்களில் சில மாற்றம் தேவைப்படலாம் என கருதுகிறான். பார்ப்போம். இப்போதைக்கு மேஜை கணினிதான்.

மீண்டும் எல்லோருக்கும் நன்றி. வேறு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அனுப்புங்கள். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//வேறு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அனுப்புங்கள்.//

பெரிய தொட்டியில் ஒரு கிலோ சர்ஃப் போட்டு மடிகணிணியை ஊறவைத்தால் அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்கும்!

Krishnan said...

இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்.

ILA (a) இளா said...

Click to open Power Options.

On the Select a power plan page, click Choose what closing the lid does.

On the Define power buttons and turn on password protection page, next to When I close the lid, choose what you want your mobile PC to do, both for when it is running on battery and when it is plugged in.

Tip
To save battery power and quickly resume working, select Sleep. When you wake your mobile PC, Windows restores your work session within seconds.

Click Save changes.

---------------------------
Use Windows Help Itself..

வஜ்ரா said...

திறந்த மூல மென்பொருட்கள் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்னவென்று ஏற்கனவே கூறியிருந்தீர்கள். விண்டோஸை விட்டு விலகி, ஏதாவது ஒரு திறந்த மூல மென்பொருளை உபயோகிக்கலாமே ? ஆரம்பிக்கும் போதே செய்தால் தான் முடியும். பிறகு, கோப்புக்கள் அதிகம் சேர்ந்துவிடும், மாற முடியாது.

எ.கா., ரெட் ஹாட், உபுண்டு, என்று எக்கச்செக்கமாக இருக்கிறது.

நீங்கள் பயன்படுத்தும் பிரத்தியேக மொழி பெயர்ப்பு சாஃப்ட்வேர் விண்டோஸில் மட்டும்தான் வேலை செய்யுமா ? அதற்கு திறந்த மூல வடிவம் கிடைக்காதா ? அப்படி இல்லையென்றால், உபுண்டுவில் VMware என்று ஒன்றை நிறுவிக்கொண்டு விண்டோஸ் சாஃப்ட்வேர்களை native application பேல் நிறுவி வேலை செய்யவைக்கலாம். இதற்கெல்லாம் நீங்கள் ராக்கெட் சைண்டிஸ்ட் ஆக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

மற்றபடி, உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு என்று எந்தத் தனி மென்பொருளும் நிறுவிக்கொள்ளவேண்டியதில்லை.

பெசொவி said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Anonymous said...

டோண்டு சார்,

உங்கள் வளர்ச்சியை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது உங்கள் மனைவி உங்களை எந்த ஊர் கோவிலுக்கு நாட்கணக்கில் இழுத்துக்கொண்டு போனாலும், மடிக்கணினியும் கூடவே செல்லும் இல்லையா?

தீபாவளி வாழ்த்துகள்.

யூ.எஸ்.தோழி

குப்பன்.யாஹூ said...

congrats and wishes for laptop purchase and data card purchase.

Better u go for Vista its better than XP

வஜ்ரா said...

அடுத்தவாரத்திற்கான கேள்வி.

இந்திய ஊடகங்களில் பெரும்பாலும் பேசப்படாமல் போன Goldstone report பற்றியது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக தனது வாக்கைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவுடன் சேர்ந்து, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பஹ்ரின், கத்தார், சவுதி அரேபியா, போன்ற ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளது.

குறைந்த பட்சம், இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளைப்போல் வாக்களிக்காமல் இருந்து நடுநிலமையை நாட்டிக்கொண்டிருக்கலாம் அல்லவா ?

இந்தியா இப்படி இஸ்ரேலுக்கு விரோதமாகச் செல்வதனால் diplomatic recourse ஆக, இஸ்ரேல் நமக்குக் கொடுக்க வேண்டிய தளவாடங்களில் விளையாண்டால், நாம் என்ன செய்ய முடியும் ?

ARV Loshan said...

மடிக்கணினி வாங்கியதற்கு வாழ்த்துகள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வால்பையன் said...
//வேறு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அனுப்புங்கள்.//

பெரிய தொட்டியில் ஒரு கிலோ சர்ஃப் போட்டு மடிகணிணியை ஊறவைத்தால் அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்கும்
//

வைரஸ் மற்றும் பார்ட்டீரியாக்களை நீக்குவதற்கு கொஞ்சம் டெட்டால் போடு ஊறவைக்க வேண்டும். கிருமி நாசினி க்லோரக்ஸ் கூட போட்டுக் கழுவலாம்.

:)))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஷட் டவுன் பண்ண முடியவில்லையென்றால்,

கீழ் கண்டவற்றை முயற்சிக்க வேண்டாம்.

மடி கணினியை முதலில் ஷட் செய்யவும்(மூடவும்). பின்னர் டவுன் செய்யவும்(கீழே வைக்கவும்)

அவ்வளவு தான்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வால்பையன் said...
//பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன் செய்யும்போது கடசியில் மூடாது சிஸ்டம் தொங்குகிறது. நானும் சரியான வழிமுறைகளையே உபயோகித்தாலும் அப்படித்தான் நடக்கிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் பவர் ஸ்விட்ச் மூலம்தான் அணைக்க நேரிடுகிறது.//

இது சரியல்ல!
கோப்புகள் சரியாக சேமிக்கமால் விட வாய்ப்புண்டு!

ஆவன செய்யுங்கள்!//


கோப்புகளைப் வைத்தும் ஆவணங்களை உருவாக்கலாம்.

ஆவணங்களை வைத்தும் கோப்பு தயாரிக்கலாம்.

கோப்புகளை சேமித்து வைத்தால் அரசாங்கம் முடங்கிப் போகாதா?

வேகமாக கோப்புகளை நகர்த்தவேண்டும். அதுதான் அழகு!

:)))

பெசொவி said...

http://ulagamahauthamar.blogspot.com/2009/10/blog-post_17.html

படித்துக் கருத்து கூறுங்கள்

Jackiesekar said...

வாழ்த்துக்கள் இனி பதிவர் சந்திப்பு முடிந்ததும் அடுத்த கனமே அந்த நிகழ்வை வலையேற்றிவிடுவீர்கள்....

ramachandranusha(உஷா) said...

ரிலையன்ஸ் டேட்டா கார்ட்டா? வாழ்த்துக்கள். எதுக்கு சொத்து பத்திரம் இருந்தால் எடுத்து வைத்துக்
கொள்ளவும். சூரத்தில் வாங்கிய டேட்டா கார்ட்டு மூலம், கோவை சென்னையில் இணைய உலா
வந்ததற்கு மொய் 8000/= ரூபாய். பயந்துப் போய் "சேவை" யை கட் செய்துவிட்டோம். ஒருவேளை
தமிழ்நாட்டில் மட்டும் என்றால் அவ்வளவு பில் வராது என ம.நெ.கு. காதனை வேண்டிக் கொள்ளுங்கள் :-)

Anonymous said...

இந்த மடிக்கணினி பிரச்சினை குடுத்தால், இதை என்னை மாதிரி ஒரு நல்லவனுக்கு கிப்ட்-ஆக குடுத்துட்டு வேறு ஒரு நல்ல மடிக்கணினி வாங்கிக் கொள்ளவும். சிம்பிள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது