12/31/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 11)

எபிசோட் - 11 (30.12.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
(முதல் சுட்டி சில நொடிகள் கழிந்த பின்னரே ஆரம்பிக்கிறது).
வசுமதியின் சோர்வான பேச்சு தொடர்கிறது. தெய்வமே கல்லாகப் போனபின்னர் அதை ஏன் வணங்க வேண்டும் என பேசுகிறாள். அடாடா இவர்கள் நாத்திகர்களாகி விட்டார்களே என சோவின் நண்பர் அங்கலாய்க்க, மனம் அதைரியப்படும்போது இவ்வாறெல்லாம் பேசுவது சகஜமே என சோ கூறுகிறார். ராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்திரஜித் மாய சீதையை கொன்ற போது லட்சுமணன் வசுமதி பேசுவதை விட கடவுளையும் தர்மத்தையும் கச்சாமுச்சா என திட்டுகிறான். பிறகுதான் விபீஷணன் வந்து அது மாயசீதையே என தெளிவுபடுத்துகிறான். ஆக, வசுமதி பேசுவது விரக்தியின் காரணமே, அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் இல்லை என சோ கூறுகிறார்.

வசுமதி நாதன் பேச்சு தொடர்கிறது. அசோக் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என வசுமதியும் நாதனும் அலசுகிறார்கள். கோவிலில் இருப்பான், அங்கு நடை சாத்தினால் நடைபாதையில் படுப்பான், அங்கிருந்தும் அவனை போலீஸ் பிடித்து போகலாம் என்றெல்லாம் பேச்சு வருகிறது. மனம் வெறுத்துப்போகும் நாதன் தான் ஒரு நாள் இதயநோயால் தெருவிலேயே கீழே வீழ்வது உறுதி எனக்கூற, வசுமதி பதறிப் போகிறாள். பிறகு சாதாரணமாக் பேச ஆரம்பிக்க்றாள்.

ஆனாலும் அன்று அசோக்குடன் மல்லுக்கட்டியிருக்க வேண்டாம் எனவும் அபிப்பிராயப்படுகிறாள். நாதனுக்கும் இது குறித்து சற்றே குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.

பாகவதர் வீட்டில் காலைநேர அமர்க்களம். ஆஃபீசுக்கு செல்லும் அவசரத்தில் சிவராமனும் ராஜியும், காலேஜுக்கு செல்லும் அவசரத்தில் ராம்சுப்பு. நடுவில் பாகவதர் வேறு தனது பகவத்கீதை புத்தகத்தை அவர்கள் பார்த்தார்களா எனக்கேட்டு வெறுப்பேர்றுகிறார். நாதன் வேறு வரப்போவதாக இருக்கிறார் என்று அவர் கூற, உடனே வீட்டைவிட்டு புறப்பட ராஜியின் அவசரம் அதிகரிக்கிறது.

வீட்டுக்கு வெளியே காரில் ஏறப்போகும் சந்தர்ப்பத்தில் நாதன் வந்து சேருகிறார். சிவராமனையும் ராஜியையும் சுருக்கமாக விசாரித்து விட்டு உள்ளே செல்கிறார். பாகவதருடன் முதலில் பொதுவான லௌகீக விஷயங்கள் பேசுகிறார். பிறகு அசோக் பற்றி பேச்சு திரும்புகிறது. அசோக்குடன் தான் வாதம் நடத்தியபோது பாகவதரும் இருந்ததை நினைவுபடுத்திவிட்டு நாதன் அன்றைக்கென பார்த்து நிகழ்ச்சிகள் நூல்பிடிகணக்காக ஒரு இறுதியான முடிவுக்கு சென்றன என பாகவதரை கேட்கிறார்.

அவரோ அசோக்கை கடற்கரையில் சந்தித்தது தெய்வாம்சம் பொருந்தியவராகத்தான் இருக்க வேண்டும், அசோக்குக்கு வேம்பு சாஸ்திரிகள் சவால் விட்டது தெய்வ நிர்ணயம், நாதன் தான் செய்த தானதர்மங்களை பட்டியலிட்டது தெய்வத்தின் திருவிளையாடல், அசோக் தன்னை யாருக்கு நாதன் தானமாக கொடுக்கப் போகிறார் எனக்கேட்டது லீலா வினோதம், நாதன் அவனை வேதபாடசாலைக்கு தானமாக கொடுப்பதாக கூறியது அடியார் மூலம் ஆண்டவன் தரும் அசரீரி என்று கூறுகிறார்.

இவ்வாறெல்லாம் தெய்வம் பேசவைக்குமா எனக்கேட்டதற்கு ஆம் என பதில் கூறும் சோ கும்பகர்ணன் நித்யத்துவத்தை வேண்டி வரம் கேட்க நினைக்க, சரஸ்வதி அவன் நாவில் அமர்ந்து விளையாடியதால் நித்ரத்துவத்தை அவன் கேட்டு வைக்க அவ்வாறே அவன் பெரும் உறக்கக்காரனானான்.

இதெல்லாம் தனக்கு ஏன் நடக்கிறது என நாதன் கேட்க, இதுதான் அவரது முந்தையப் பிறவிகளின் கர்மபலன் என பாகவதர் விடை தருகிறார். நாதன் திகைக்கிறார்.
(தேடுவோம்)

எங்கே பிராமணன் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

அக்னி பார்வை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Naveena Bharathi said...

Dear Dondu Sir,

Wish You , Your Family, Friends and your blog readers a Very Happy New Year 2010!!

Anonymous said...

07-01-2010 பதிவுக்கான 32 கேள்விகள்

1.தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி வந்தால் இளைய சமுதாயம் முன்னேறுமா?
2.அதில் புத்தக சுமை குறைய வாய்ப்புள்ளதா?
3.வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?
4.அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளியின் தரத்திற்கு உயருமா?
5.கல்வியை ஒரு சிலரால் வியாபாரம் ஆக்கியுள்ள தன்மை மறையுமா?

Anonymous said...

6.தற்கால சூழ்நிலையில் (குழந்தை நலம்)பெண்கள் வேலைக்குப் போவதால் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?
7.இன்றைய அரசியலில் பல நிலைகளிலும் ஊழல் பெருக காரணம் என்ன?
8.இளம் பெண்களைக் கவர, இந்த ஆண்கள் படும் பாடு?
9.இந்தியாவில் படிக்காத பெண்கள்,ஏழை பெண்கள் கறுப்பாக உள்ள பெண்களுக்கு திருமணமாவது கஷ்டமாகி வருகிறதே?
10.வழக்கத்தில் கன்னித்தன்மையோடு உள்ள பெண்ணை, ஆங்கிலத்தில், "வெர்ஜின்' என்று சொல்கிறோம். அதே போலுள்ள ஆணை, எவ்விதம் அழைப்பது?

RV said...

Sorry to post unrelated stuff here - but Dondu sir, you may like this article.

http://www.tnr.com/article/world/the-goldstone-illusion?page=0,0

This is about the Israeli army's moral code

thiruchchikkaaran said...

Dondu Sir,

This is an article related to the subject.

http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/17/is-cho-the-jagath-kuru-now/

ட‌ய‌ம் கிடைக்கும்போது வ‌ந்து பார்த்துட்டு, உங்க‌ க‌ருத்தையும் ப‌திவு ப‌ண்ணுங்க்கோனு கேட்டுக்க‌ரேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது