இன்று சில மொக்கைகள் மின்னஞ்சல் வாயிலாக வந்தன. அவற்றில் சிலவற்றை ஏற்கனவே படித்திருக்கலாம். எனக்கு பிடித்திருந்தன. ஏதோ நம்மால் ஆனது இங்கு உங்களுடன் ஷேர் செய்து கொள்கிறேன்.
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார்! மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!
இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க? நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?
பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!
அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்டேங்கறான்! சிக்கினா செத்தான்!!
மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?
டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி அதுங்களை நடக்க வைக்கிறேன்!!
விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!
கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
17 comments:
நல்ல தொகுப்பு,தொடருங்கள்
படித்து இருந்தால் என்ன..?
நல்ல ஜோக்கை எப்பொது கேட்டாலும்
சிரிப்பு வருதே..!
டோண்டு அவர்களே,
கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டில் நான் எடுத்த உங்கள் புகைப்படம் பாருங்கள்.
www.kaveriganesh.blogspot.com
ஹா..ஹா...
Cool & கூல். நல்ல நகைச்சுவைத் தோரணங்கள். நன்றி.
launghed well
even if you dont add tamilish button you can add a link to tamilish page.
now i want to vote but dont have time to go to tamilish and search for your article link.
if you give that at the end of the article i will click and go to tamilish then vote.
this applies to all viewers.
//எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.//
//தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.//
//ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?//
அருமை ஐயா. நன்றாகத்தான் சிந்திக்கிறார்கள்!
"உங்களுக்கு ஏ.வைத்தியநாதய்யரைத் தெரியுமா?”
”எங்களுக்கு கே.வைத்தியநாதய்யர்வாளைத்தான் தெரியும். அதுவும் முரசொலி மு.கருணாநிதிப் பிள்ளைவாள் மூலம்”
-இந்த மொக்கை எப்படி?
சூப்பர் தல! கலக்குறீங்க. போட்டுத்தாக்குங்க.
அய்யோ, அம்மா!
இந்த அநியாயத்தை கேக்க யாருமேயில்லையா!
(கிருஷ்ணமூர்த்தி சார் வந்து, எந்த அம்மான்னு கேப்பார் பாருங்க!)
வால்ஸ்! எந்த அம்மான்னு நீங்களே தெளிவாகக் குழப்பிய பிறகு நான் வேறு தனியாகக் கேட்க வேண்டுமா என்ன :-))
எந்த அம்மான்னு கேட்கலை!
யாரோட அம்மா?
//எந்த அம்மான்னு கேட்கலை!
யாரோட அம்மா? //
மேரி மாதா!
///எந்த அம்மான்னு கேட்கலை!
யாரோட அம்மா? //
மேரி மாதா!
வால்ஸ்! நீங்கள் சொன்னது
தப்பான விடை! கேள்வியை இன்னுமொருதரம் படித்து விட்டு அப்புறம் பதிலை சொல்ல முயற்சிக்கவும்!
சார் ரொம்ப இளமையா இருக்கு.
மேரிமாதா யாரோட அம்மா!
மிகவும் அருமை !
Post a Comment