எபிசோட் - 32 (10.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(இசைதமிழ் தளத்தில் இந்த எபிசோட் காட்டப்படவில்லை. ஆகவே முதல் சுட்டி இல்லை).
சாம்பு சாஸ்திரிகள் தான் வெளியே போகப் போவதாக அசோக்கிடம் கூறுகிறார். அவர் மனைவி சனிபிரதோஷத்துக்காக கோவில் போயிருப்பதாகவும் கூறுகிறார். அசோக்கோ தான் கோசாலைக்கு போக எண்ணீயதாகக் கூறுகிறான். மேலே விசாரித்ததில் சாம்பு பக்கத்து கோவிலில் ப்ளே செய்யும் ருத்ரம் சிடி தேய்ந்து போனதால் வேறு புதிதாக வாங்கவே தான் வெளியே செல்ல நினைத்ததாகக் கூற, தானே கோசாலைக்கு சென்று திரும்பும்போது அந்த சிடியை வாங்கி சாம்பு சாஸ்திரிகள் கொடுக்கச் சொன்னதாகக் கூறி கோவிலில் அதை தருவதாக ஆஃபர் செய்ய, சாம்புவும் அவனிடம் சிடிக்கான பணம் தருகிறார்.
ருத்ரம் என்பது வேதத்தின் ஒரு பகுதி, அதையெல்லாம் இப்படி சகட்டுமேனிக்கு எல்லா இடங்களிலும் சிடியாக ப்ளே செய்வது தவறு என சோ கூறுகிறார். காரில் போகும்போது போட்டு கேட்பது, வீட்டில் எல்லா சப்தங்களுடன் சேர்த்து போடுவது போன்ற எதுவுமே செய்யத் தக்கவை இல்லை என்றும் கூறுகிறார். வேதம் என்பதை எழுதவே கூடாது, ஆகவேதான் அதை எழுதாக்கிளவி எனப் பெயரிட்டு அழைக்கின்றனர் என்றும் கூறுகிறார். இருப்பினும் இப்போதைய காலகட்டத்தில் அதை காம்ப்ரமைஸ்தான் செய்து கொள்ள வேண்டியுள்ளது எனவும் கூறுகிறார்.
சிடி வாங்க ஆடியோ கடைக்கு வரும் அசோக்கை பிரியா சந்தித்து பேசுகிறாள். வக்கீல் அனந்தராமன் புதிதாக சிந்தித்ததில் தன் பேரனை அசோக்கிடம் அனுப்ப வேண்டாம் என முடிவு செய்ததாக செய்தி சொல்கிறாள். அவனிடம் அவர் மன்னிப்பு கேட்பதாகவும் அவள் சொல்ல, அசோக் அதற்கெல்லாம் தேவை இல்லை என கூறிவிடுகிறான். அவர் வீட்டு வாசல் வரைக்கும் வந்த வேதமாதா இப்போது திரும்பச் செல்வதைத்தான் அவன் உணருகிறான் என்றும் அவன் சொல்கிறான். பிறகு பிரியா அசோக்கின் பெற்றோர்தான் சீனியர் லாயரிடம் பேசி அவர் மனதை மாற்றினார்கள் எனக்கூற, அவரவருக்கு சுய சிந்தனை வேண்டும் என்பதையும் அசோக் சொல்கிறான். வக்கீல் தரப்பிலிருந்து அவனது முயற்சிக்கு சிறு நன்கொடை தர பிரியா முயற்சிக்கும்போது அவன் அதை மிருதுவாக மறுக்கிறான்.
கோவிலில் சாரியார் முதலியாரின் இரு மகள்களையும் பார்க்கிறார். இளையவள் அவரது மருமகள். மூத்தவள் பார்வதி நர்ஸ், அவளுக்கு புற்றுநோய். அவள் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் பற்றி சாரியார் அவளிடம் பேசுகிறார். பார்வதிக்கு மனத்தெம்பு கிடைக்கிறது.
நாதனும் வசுமதியும் வேறுவீட்டுக்கு குடிபோக ஏற்பாடுகள் செய்கின்றனர். ஏன் இந்த முடிவு என சிங்காரம் கேட்க பழைய வீட்டில் வாஸ்து சரியில்லை என வசுமதி கூறுகிறாள்.
அதென்ன வாஸ்து என நண்பர் கேட்க, வாஸ்தோபதி பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளவையையும், வாஸ்து புருஷன் பற்றி ஆகமவிதிகள் கூறப்ப்ட்டுள்ளவற்றையும் சோ உதாரணங்களுடன் விளக்குகிறார்.
புது வீட்டுக்கு பால் காய்ச்சி சாப்பிடும் தினத்தை நாதன் தீர்மானிக்கிறார். அதன் பிறகு ஒரு 5-ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி தரவேண்டும் என்றும் தீர்மானிக்கின்றனர். பேச்சு இப்படியெல்லாம் உற்சாகமாகச் சென்றாலும் அசோக்கின் நினைப்பு அவ்வப்போது அவர்களை வாட்டுகிறது.
(தேடுவோம்)
எபிசோட் - 33 (11.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சமையற்கார மாமியிடம் சிங்காரம் பல விஷயங்கள் பற்றி பேசுகிறான். சமையற்கார மாமி அவனிடம் பல விஷயங்கள் பற்றி கேட்க, அவனும் பிடி கொடுக்காமலேயே பேசுகிறான். ஒருவருக்கொருவர் வம்பு பேசுவதில் சளைத்தவர்கள் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
நாதன் வீட்டுக்கு பிட்சை கேட்டு ஒரு பெண் பைராகி வருகிறார். அவருடன் வசுமதி பேச்சு கொடுக்கிறாள். நாதனின் முன்னோர்களில் ஒருவர் பைராகிக்கு பிட்சை போட மறுத்ததால், இப்போது நாதனின் மகன் பிட்சை கேட்டு செல்லும்போது பிட்சை மறுக்கப்படுகிறது என அவர் கூற வசுமதி கண்கலங்குகிறாள். அவள் அன்னதானம் செய்வது நலம் என பைராகி கூற வசுமதி அதை ஏற்கிறாள்.
பிறகு இது பற்றி நாதனிடம் பிரஸ்தாபிக்க அவர் முதலில் சீறுகிறார். தான் ஏதேனும் தவறு செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்கத் தயார் எனவும், ஆனால் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு தான் எப்படி பொறுப்பு என கோபத்துடன் கேட்கிறார். அதானே என சோவின் நண்பர் கேட்க, தாத்தாவின் சொத்துக்கு மட்டும் ஆசை ஆனால் முன்னோர்களின் செயலுக்கு பொறுப்பு இல்லை என்றால் எப்படி என கேலி செய்கிறார். மகாபாரதத்தில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதையும் அவர் உதாரணங்களுடன் கூறுகிறார்.
பிறகு வசுமதி ரொம்பவும் மனம் கலங்குவதால் மனமிளகி அன்னதானம் செய்யலாம், ஆனால் அதை ஏதேனும் கோவிலில் வைத்து செய்து கொள்ளட்டும் என அனுமதி தருகிறார்.
ரமேஷ் உமா வீட்டில் ஏதோ எரியும் வாசனை புலப்பட அவனும், அவன் அன்னையும் எங்கு எரிகிறது என்பதை தேடுகின்றனர். தோட்டத்தில் உமா சில காகிதங்களை எரித்து கொண்டிருக்கிறாள். அவள் என்ன காகிதங்களை எரிக்கிறாள் என ரமேஷும் அவள் அன்னையும் கேட்க அவள் பதில் தர மறுக்கிறாள். ரமேஷாக ஏதேதோ கற்பனையெல்லாம் செய்து கொண்டு அவளையும் அசோக்கையும் சம்பந்தப்படுத்தி அவர்களது காதல் கடிதங்களை எரிக்கிறாளா என்றெல்லாம் கேட்க உமாவின் கோபம் அதிகரிக்கிறது. பிறகு உமாவின் மாமனார் வந்து தங்களாத்துக்கு கடந்த நாட்களில் வந்து சேர்ந்த பல உத்திரக்கிரியை சம்பந்தப்பட்ட தகவல் கார்டுகளைத்தான் அவள் எரிக்கிறாள் என்ற உண்மையை போட்டு உடைக்க ரமேஷ் அசடு வழிகிறான்.
உத்திரக்கிரியை கார்டுகளை அவற்றை பார்த்ததும் எரிக்க வேண்டும் என்பது சாத்திரத்தில் கூறியுள்ளதா என சோவின் நண்பர் கேட்க, இல்லையென்கிறார் சோ. இருப்பினும் அமங்கல விஷயங்கள் அதிகம் கண்ணீல் பட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்ற எண்ண ஓட்டமே இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்.
முக்கியமாக எரிக்க வேண்டியது ரமேஷின் இந்த தகாத சந்தேகத்தை என உமா கூறிவிட்டு அப்பால் செல்கிறாள். சந்தேகம் என்பது பெரிய வியாதி அது வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என கூறிவிட்டு சோ அவர்கள் அதற்கு எடுத்துக் காட்டாக மகாபாரதத்தில் பீஷ்மர் சாந்தி பர்வத்தில் யுதிஷ்டிரருக்கு சொன்ன போதனைகள் சமயத்தில் சொன்ன கதையையும் அவர் கூறுகிறார்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
13 comments:
இன்னும் எத்தனை எபிசோடு வரும்?
கடைசி எபிசோடிலாயவது பிராமணன் கிடைப்பானா?
http://valpaiyan.blogspot.com/2010/02/1411.html
உங்களையும் விட்டு வைக்கல பின்னூட்டத்துல!!
sometime, I miss episode.. then read ur page for continuity. thanks keep posting on this topic.
இந்த வாரம் கேள்விகள் இல்லையா!?
//Anonymous said...
http://valpaiyan.blogspot.com/2010/02/1411.html
உங்களையும் விட்டு வைக்கல பின்னூட்டத்துல!!//
தேங்காய் இல்லாம பூஜையா!?
//Anonymous said...
இன்னும் எத்தனை எபிசோடு வரும்?
கடைசி எபிசோடிலாயவது பிராமணன் கிடைப்பானா?//
இன்னும் எத்தனை பார்ட் வரும்னு கேட்டிருக்கனும்!
@வால்பையன்
டோண்டு பதில்கள் பதிவுகளை நிறுத்தி விட்டேன்.
எத்தனை எபிசோடுகள் சோவின் சீரியல் வரும் என்பது எனக்கும் தெரியாது. வரும் வரைக்கும் எனது ரிவ்யூக்கள் வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//@வால்பையன்
டோண்டு பதில்கள் பதிவுகளை நிறுத்தி விட்டேன்.//
எதாவது மோசமான அனுபவம் ஏற்பட்டு விட்டதா!?
அப்படியாயின் அதற்காக வருந்துகிறேன்!
//எத்தனை எபிசோடுகள் சோவின் சீரியல் வரும் என்பது எனக்கும் தெரியாது. வரும் வரைக்கும் எனது ரிவ்யூக்கள் வரும்.//
உங்கள் ரசிகர்களின் வேண்டுகோளும் அது தானே!
எனக்கு தான் அதில் நாட்டமில்லை!
இடையிடையில் இந்த ஸ்பெஷல் மொக்கைகள் தவிர்த்து சாதா மொக்கைகள் எழுதவும்!
@வால்பையன்
மோசமான அனுபவம் எல்லாம் இல்லை. எனக்கே அலுத்துவிட்டது. ஆகவே நிறுத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மோசமான அனுபவம் எல்லாம் இல்லை. எனக்கே அலுத்துவிட்டது. ஆகவே நிறுத்தி விட்டேன்.//
கொஞ்ச நாள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கலாம்!
நடக்கப் போவதை யார் அறிவார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
// வால்பையன் said...
//மோசமான அனுபவம் எல்லாம் இல்லை. எனக்கே அலுத்துவிட்டது. ஆகவே நிறுத்தி விட்டேன்.//
கொஞ்ச நாள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கலாம்!
February 12, 2010 9:42 PM
dondu(#11168674346665545885) said...
நடக்கப் போவதை யார் அறிவார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
February 12, 2010 9:43 PM//
let us hope for the best.
dondu's questions answers published on thursday has got very good response and received more comments than any other postings.
May I request our dondu sir to post the dondu's questions and answers atleast monthly once.He can edit & select questions and can have restriction of magic 60 questions.
Post a Comment