Jo Amalan Rayen Fernando என்னும் காமெடி பீஸ்
கலையுலகில் நடக்கும் உள்குத்துக்கள் பற்றி உண்மைத் தமிழன் இட்ட இப்பதிவு மனதுக்கு இதமாக இருக்கிறது.
சோவின் துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் அவர் கனைத்துக் கொண்டே “கலைஞர்” என பேச்சை ஆரம்பிக்கும்போதே பார்வையாளர்கள் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விடுகிறோம். அதுவும் கலைஞரது தனது புகழ்ச்சிக்காக தானே எல்லோரையும் ஏற்பாடு செய்து வாரத்துக்கொருதரம் நிகழ்ச்சிகளை நடத்தச் செய்வது அதனுள்ளேயே ஒரு காமெடியை வைத்திருக்கிறது. ஏதோ ஒரு முறை புகழலாம், சில முறைகள் புகழலாம் ஆனால் நித்தம் நித்தம் புகழ வேண்டுமென்றால் இப்படி இருப்பவர் காமெடி பீசாகத்தான் இருக்க வேண்டும்.
உண்மை தமிழனின் அப்பதிவில் Jo Amalan Rayen Fernando என்னும் பதிவர் செய்யும் காமெடிகளோ கலைஞரின் காமெடிக்கு எவ்வகையிலும் குறைவானதல்ல என்றுதான் கூற வேண்டும். அவரது ஓப்பனிங் கருத்தை இங்கே சாம்பிளுக்கு தருகிறேன். மீதியை அப்பதிவிலேயே படித்து அவரது காமெடியின் முழுவீச்சை புரிந்து கொள்ளவும்.
“தொழிற்சங்கம் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும்போது ஒவ்வொரு உறுப்பினரும் கலந்த்துதான் தீரவேண்டும். ஏதாவது காரணத்தினால் இயலாதெனின், அதை முறையாகத் தலைவரிடம் சொல்லி விடுப்புக்கேட்டுவிடலாம்.
காரணமே இல்லாமல் வராமலிருப்பது தவறு. எனக்கு கருணானிதியைப்பிடிக்கவில்லை, இச்சஙகத்தினரின் செயல் பிடிக்கவில்லை என்றால் சங்கத்திலிருந்து விலகிக்கொள்ளலாம்.
பாராட்டு விழாவுக்கு வந்தவர்களெல்லாம் கருணாநிதி தங்களுக்குப் பிடிக்குமென வரவைல்லை. பின் ஏன் வந்தார்கள்? பொதுநலம் கருதி. தொழிலாளர்களின்.
தொழிற்சங்கம் மிரட்டத்தான் செய்யும். எல்லாத்தொழிற்சங்கங்களும் இப்படித்தான்.
மிரட்டல் பிடிக்ககவில்லயெனறால் விலகிக்கொள். ஏன் உள்ளேயிருந்துகொண்டே குழி தோண்டுகிறாய்! இதுதான் கேள்வி”.
ஐயா அமலன் ஃபெர்னாண்டோ, தொழிற்சங்கம் எல்லாம் சரிதான். அது தொழிலாளர்களின் நலனுக்காக நடத்தும் போராட்டங்களுக்குத்தான் நீங்கள் சொல்வது பொருந்தும். தகுதியற்ற ஒருவரை வாரத்துக்கொருமுறை புகழும் நிகழ்ச்சிகள், அதுவும் சங்க நிர்வாகிகளது சுயநலனுக்காக நடத்தப்படுவைக்கு நீங்கள் சொல்வது பொருந்தாது. இஷ்டம் இருந்தால் இரு இல்லாவிட்டால் வெளியில் போ என சொல்வதற்கு சங்கம் அவர்களது அப்பன் வீட்டு சொத்து அல்ல. அஜீத்துக்கு மாஸ் அப்பீல் இருப்பதால்தான் அவரை வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அவரும் ஒன்ஸ் ஃபார் ஆல் இந்த காமெடி விஷயத்தைன் முடித்து கொள்வோம் என்றே வந்தார், பேசினார். அடுத்த முறை அவரை மட்டுமல்ல ரஜினியை அழைக்கும்போதும் அழைப்பை கட்டாயப்படுத்த யோசிப்பார்கள்.
இதில் உள்ளிருந்துகொண்டே யார் குழி தோண்டுகிறார்களாம்? அஜீத்தும் தன்மையாகத்தானே வர இயலாமையை கூறினார். அப்படி நீ வரவில்லை என்றால் நீ காலி என சொல்பவர்களை வேறு எப்படித்தான் எதிர்கொள்வதாம்? அஜீத் நினைத்ததைத்தான் எல்லோரும் நினைக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அவருக்கு அங்கேயே எழுந்த கைத்தட்டல்களே சாட்சி. சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கைதட்டினார். பூனைக்கு மணி கட்டுவதற்கு அஜீத் தேவைப்பட்டிருக்கிறது அவ்வளவே. நடிகர் சங்க நிர்வாகிகள்தான் சங்கத்துக்கு குழி தோண்டுகின்றனர் என்று கூற வேண்டும்.
ஷாகுல் என்னும் பதிவரின் பின்னூட்டத்தையும் அதற்கு உண்மை தமிழனின் பதிலும் கீழே தருகிறேன்.
[[[ஷாகுல் said...
ஐயா பெர்னாண்டோ அவர்களே!
அஜீத் எப்போ கருனாநிதிய எதிர்ப்பதாகக் கூறினார். சங்க நிர்வாகிகளைப் பற்றிதான் கூறினார். அவர் கூறியது சிலரால் திரிக்கப்பட்டு கருணாநிதியை எதிர்க்கிறார் என கோத்து விடப்பட்டது இப்போது நீங்கள் எழுதியிருப்பதைப் போல். இது போல திசை திருப்புவதற்க்கென்றே சிலர் அலைகிறார்கள். அதை தொடர்ந்தே கருணாநிதியை சந்திதார். தமிழன் என்று கூறிக் கொள்வோர் மூடிக் கொண்டுதானே இருந்தான். இந்த ரவுடிகளை கேள்வி கேட்க முடியாமல். இந்த சங்க நிர்வாகிகளுகு மானம் ரோஷம் இல்லையென்றால், அதே போல சங்க உறுப்பினர்களிடம் எதிர்ப்பார்த்தால் முடியுமா சார்.]]]
ஷாகுல்.. உங்களுடைய காட்டம் கண்டு எனக்கும் அதிர்ச்சிதான்..
கலைஞரை வாழ்த்துவதற்கு அஜீத்திற்கு மனமில்லை என்று சொல்வதைப் போல் கதையைத் திரித்ததால்தான் அஜீத் கலைஞரை சந்தித்தார்.. அதன் பின்பும் தனி மனிதத் தாக்குதல்கள் தொடர்வதன் பின்னணியைப் பார்த்தால்தான் தாத்தா மேல் சந்தேகம் வருகிறது..!
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறாரோ என்று..!!!
டோண்டு ராகவனான எனக்கும் அப்படித்தான் படுகிறது. பை தி வே உண்மை தமிழனின் அப்பதிவையும் அதற்கு வந்த நூர்றுக்கும் அதிகமான பின்னூட்டங்களையும் படிப்பதே உசிதம்.
கவிப்பாடகனான அரசன்
கிரேக்க அரசன் ஒருவன் இருந்தானாம். தான் ஒரு பெரிய கவிஞன் மர்றும் பாடகன் என்னும் பிரமை அவனுக்கு. அவன் ஒரு பாட்டை இயற்றி அதை பாடினான். அதை எல்லோரும் கேட்டு கருத்து சொல்ல வேண்டும் என்று வேறு பிடிவாதம் பிடித்தான். அவனது அவையினர் ஆகா நல்ல பாட்டு, நல்ல குரல் என்றெல்லாம் சிலாகித்தார்களாம். அப்போது அவனுக்கு கெட்ட காலம் வந்ததால் அரசவைக்கு உண்மையான கவிஞன் மற்றும் பாடகன் ஒருவன் வந்தானாம். அரசனும் அவனிடம் பாடலை இயர்றியது யார் எனக் கூறாது பாடிக் காட்டினானாம். காதை பொத்திக் கொண்ட அக்கலைஞன் இவ்வளவு கேனத்தனமான வரிகளை யார் எழுதியது என கேட்க, அரசன் துணுக்குறானாம். சுதாரித்து கொண்டு, பாடல் வரிகள் இருக்கட்டும், எனது குரல் எப்படி என கேட்டானாம். அதற்கு அவன் “ஐயா ஜலதோஷம் இருக்கும்போது பாடினால் அப்படித்தான் சுருதியில்லாது இருக்கும் கவலைப்படாதீர்கள்” என கூறினானாம். அரசன் மிகுந்த கோபம் அடைந்து அவனுக்கு பத்தாண்டுகள் சிறையில் கல் உடைக்கும் தண்டனை அளித்தானாம். சிறையில்தான் கலைஞனுக்கு தான் செய்த தவறு புரிந்ததாம்.
பத்தாண்டுகள் கழித்து அவன் விடுதலை ஆனதும் அவனை மீண்டும் அரசவைக்கு வரவழைத்த அரசன் தான் அப்போதுதான் இயற்றியிருந்த இன்னொரு பாடாலை ராகத்துடன் பாடிக் காட்டினானாம். கலைஞன் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து அகல ஆரம்பித்தானாம். அது பற்றி அரசன் அவன் எங்கு செல்கிறான் என கேட்டதற்கு “கல் உடைக்கப் போகிறேன்” என்றானாம்.
இக்கதை திடீரென ஞாபகத்துக்கு வந்தது. ஒரு மாதிரி ஹைப்பர்லிங் என வைத்து கொள்வோமா? பின்னே? வேறு எப்படித்தான் வைத்துக் கொள்வதாம்? நான் சொல்வது புரியறதோ?
கிருபானந்த வாரியார்
மிமிக்ரி கலைஞரகள் மிகவும் விரும்புவது இவரைத்தான், முக்கியமாக இவரது குரலைத்தான். நாயகனில் வரும் “நிலா அது மேகத்தின் மேலே, பலானது ஓடத்தின் மேலே, ஒய்யா ஓஓ ஒய்யா” என்னும் பாடலுக்கு அவரது கருத்துரையாக சொல்லி மயில்சாமி மிமிக்ரி செய்த டேப்பை பல முறை கேட்டிருக்கிறேன். இப்போது கிருபானந்தவாரியாரின் குரலை மனதில் கொள்ளவும்.
“எம்பெருமான் முருகப்பெருமான் வானத்தில் மலைமேலே ஓடத்தில் இருக்கிறான். அவனுடன் கூட இருக்கிறார்கள் வள்ளியும் தெய்வயானையும். அதைத்தான் “நிலா அது மேகத்தின் மேலே, பலானது ஓடத்தின் மேலே” என்று சொகிறார்கள். “ஒய்யா ஓஓ ஒய்யா” என்றால் வேல்முருகா வேல்முருகா என்று பொருள்”.
பலர் அவரிடம் இந்த மிமிக்ரி விஷயங்களை குறித்து கேட்டதற்கு இதனால் மிமிக்ரி கலிஞர்கள் மகிழ்ந்தால் தனக்கும் மகிழ்ச்சி என்று கூறிவிட்டார். இது அவரது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் அவ்வளவு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. தேவர் எடுத்த துணைவன், தெய்வம் ஆகிய படங்களில் முக்கிய பாகம் எடுத்து நடித்து வந்த படங்கள் மிகவும் பிரபலமாகி ஹிட் ஆயின. ஆனால் குன்னக்குடி வைத்தியநாதன் தயாரித்த, கிருபானந்தவாரியாரால் திரைக்கதை எழுதப்பட்ட கந்தர் அலங்காரம் என்னும் படம் படுத்து விட்டது. அதற்கு முக்கிய காரணமே திரைக்கதையின் சொதப்பல்களே. அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் அவர் மட்டும்தான். ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா? குன்னக்குடி வைத்தியநாதன் தன்னிடம் சொல்லாமலே தன்னை தூரத்திலிருந்து படம் எடுத்து ஏமாற்றி விட்டதாக தனது ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.
இன்னொரு முறை அவர் ஒரு ஊருக்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றபோது நடந்த ஒரு சந்தர்ப்பம். ரயிலடியில் அவர் இறங்கியபோது ஸ்டேஷனில் ஒருவர் மட்டும்தான் இருந்திருக்கிறார். இவராவது அந்த மனிதரை கேட்டிருக்கலாம், அந்த மனிதராவது இவரிடம் இவர்தான் கிருபானந்தவாரியாரா என கேட்டிருக்கலாம். இருவருமே ஒன்றும் சொல்லாது 15 நிமிடங்கள் கடந்த பிறகு இவராக ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு வண்டி ஏதாவது ஊருக்குள் செல்ல கிடைக்குமா என கேட்க, அப்போது அந்த நபர் தான் அவரை அழைத்து செல்லவே வந்ததாக கூற இருவரும் வண்டியில் சென்றிருக்கின்றனர். சில தூரம் வந்தபிறகு அவருக்கு ஆகாரம் செய்வித்து வரச்சொன்னதாக தன் முதலாளி கூறியதாகவும், அதை தான் மறந்து விட்டதாகவும் அவர் கூறி கிருபானந்தவாரியாரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருக்கிறார். முதலாளியிட்ம் இதை சொல்ல வேண்டாம் எனவும் வேண்டிக் கொண்டுள்ளார்.
ஆனால் கிருபானந்தவாரியாரோ முதலாளியின் வீட்டுக்கு சென்றவுடனேயே அவரிடம் எல்லாவற்றையும் கூறி அவர் அனுப்பித்தவரின் சொதப்பல்கள் பற்றி புகார் செய்திருக்கிறார்.
மேலே நான் எழுதியது எல்லாமே கிருபானந்தவாரியாரே ஒரு பத்திரிகையில் (தினமணி கதிர்?) கட்டுரையாக எழுதியதுதான். நான் கேட்கிறேன், வந்தவருக்குத்தான் அறிவில்லை, இவருக்குமா? ஸ்டேஷனில் ஒரே மனிதர் நிற்கும்போது என்ன ஏது என விசாரித்திருக்க வேண்டாமா? அதை விடுங்கள், தன்னிடம் மன்னிப்பு கேட்டவரை போட்டுத்தந்தது அவரைப் போன்று ஆன்மீக சொற்பொழிவாற்றுபவர்களுக்கு அழகல்ல.
இப்போ கொஞ்சம் லைட் சப்ஜெக்டா பேசுவோம். கிருபானந்தவாரியாரை பர்றி நான் இங்கே எழுத வந்ததற்கு காரணமே ஹைப்பர் லிங்குதான். முதற்கண் எதற்கெடுத்தாலும் அப்பன் முருகனை பேசும் உண்மை தமிழனை படித்த, எதற்கெடுத்தாலும் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை இழுக்கும் டோண்டு ராகவன் ஆகியோரது கூட்டில் கிருபானந்தவாரியார் வராவிட்டால்தான் வியப்பளிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Read more: http://truetamilans.blogspot.com/2010/02/blog-post_22.html#ixzz0gKKFFjpF
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
14 comments:
I thank you for bringing my comments to your blog.
மறுபடியும் மொதல்ல இருந்தா ! அவ்வ்வ்வவ்வ்வ்
அப்படினா கிருபானந்த வாரியாரும் காமெடி பீஸா!?
ஐயா டோண்டு அவர்களே,
S.V. Sekar செய்த துரோகத்திற்கு பாராட்டு, கிருபானந்தவாரியாருக்கு குட்டு என்றால் உங்கள் பற்று எதன் மேல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
எனது பதிவுக்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றிகள் ஸார்..!
இங்கு மட்டும் ஜோ அடக்கமாக ஒரேயொரு பின்னூட்டத்தோடு நிறுத்திக் கொண்டதற்கு ஏதேனும் ஸ்பெஷல் காரணங்கள் உண்டா..?
வாரியாரை எதுக்குத் தேவையில்லாம இப்போ போய் இழுக்குறீங்க..?
திரு டோண்டு அவர்களே
இதுவே கிருபானந்த வாரியார் ஒரு ரங்க்காச்சாரிவோ அல்லது ராமையர்ராகவோ இருந்தால் இப்படி எழுதுவீர்களா?அனைவரிடமும் குறைகள் உள்ளன்.தன் குரலாலும் ,நகைச்சுவை பேச்சாலும் எத்தனையோபேர்களை பக்தியின் பக்கம் இழுத்தவர்.மேலும் தற்ப்போது உயிருடன் இல்லை.இந்நேரத்தில் இந்த கருத்து தேவைதானா?நீங்க்கள் பெருமைப்படும் ஜீயர்களிடம் குறைகளே இல்லையா? காம கேடீ சங்கராசாரிகளைவிட வாரியார் எந்தவித்த்தில் குறைந்துவிட்டார்?.சார் கொஞ்சமாவ்து திருந்துங்க சார்
//இங்கு மட்டும் ஜோ அடக்கமாக ஒரேயொரு பின்னூட்டத்தோடு நிறுத்திக் கொண்டதற்கு ஏதேனும் ஸ்பெஷல் காரணங்கள் உண்டா..?//
அப்படியெல்லாம் இல்லை. நான் பொதுவாக டோண்டுவைப்படிப்பதில்லை. எப்போதாவது உண்டு.
இங்கு என்பெயரை முதலில்போட்டுப் பதிவிட்டதால் எட்டிப்பார்த்தேன்.
என்னைக் காமெடி பீஸூ எனச்சொல்ல டோண்டுவுக்கு முழு உரிமையுண்டு. அது அவ்ர் பார்வை. யார் கேட்க முடியும்.
உ.தவில் பதிவில் என்னிலை pro karunanithi and anti-ajit. உங்களிருவர் நிலை எதிர்பக்கம்.
ஆக நாமிருவரும் இரு எதிர்பார்டிகள். ஒருவரை இன்னொருவர் ஜட்ஜ் பண்ணமுடியாது. மூன்றாமவரே ஜட்ஜ்.
இதை நான் உ.தவின் ப்திவிலே சொல்லியிருந்தேன்.
‘என் பின்னூட்டங்கள் இங்கே போடப்பட்டிருக்கின்றன. உ.தவின் பதிலக்ளும் இருக்கின்றன. இவையிரண்டும் மூன்றாமவர்கள் படித்து முடிவெடுப்பதற்காக’
இங்கே எதிர்பார்ட்டியான டோண்டு என்னை ஜட்ஜ் பண்ணுகிறார்.
இதுவே என் பின்னூட்டம்.
அடுத்தது...
அடுத்தது;
டோண்டுவின் பதிவில் உள்ள மற்ற கருத்துக்கள் பற்றி:
படித்தேன் இப்போது முழுமையாக். முதலில் முதல் பத்தியைமட்டும் படித்து ஆங்கிலப்பின்னூட்ட்மிட்டேன்.
கிரேக்க கதை நன்றாக இருந்தது. இப்படி கதைகள் சொல்லி பதிவிடுவது வயதானவர்கள் பழக்கம். சுப்பையா என்பவ்ரும் இப்படி எழுதுவார்.
கி.வாரியார் பற்றி.
பெயர் சொல்ல விருமபா நணபரிட்ட பின்னூட்டக்கருத்து எனக்கு ஒவ்வாத்தது.
இறந்தவர் ஒரு தனிநபர் என்றால், அவரைப்பற்றி எழுத்வதை Dont talk ill of the dead என்று சொல்லி தடுக்கமுடியும்.
இற்ந்தவர் பொதுவாழ்க்கையில் வாணாள் முழுக்க ஈடுபட்ட்வராயின், டோண்டு போல குறை குற்றம் சொல்லி எழுதுவது தவறொன்றுமில்லை.
தவறென்றால், காந்தி, நேரு, ஹிட்லர், அண்ணா போன்றவர்களைப்பற்றி குறை நிறை காட்ட முடியாது.
பெரியாரைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள் குற்றம் சொல்லி. டோண்டுவும் அதிலுண்டு என்றறிவேன். அப்பொது இந்த பின்னூட்டக்காரர் எங்கே சென்றிருந்தார்?
இறந்த்வர் மீது குற்றம்சொல்லி பதிவிடலாமா என்று ஏன் கேட்கவில்லை?
ஆக, எங்கேயும் பாரபட்சம்தான். டோண்டுவிடம் மட்டுமல்ல. எல்லாரிடமும் இருக்கிறது.
அடுத்தது:
//அவரைப் போன்று ஆன்மீக சொற்பொழிவாற்றுபவர்களுக்கு அழகல்ல.//
இது டோண்டுவின் கருத்து.
இங்கு என் உ.தவின் தோழர் உ.வே.வப்பற்றிய பதிவில் நான் போட்ட பின்னூட்ட்த்தில் சொல்லியிருந்தேன். ‘கம்யூனிஸ்டு என்றால் மனதிடம் மிக்கவர் என்று முதலிலேயே முடிவெடுத்துவிடலாமா?’
அதேதான் இங்கு.
ஆன்மிகச்சொற்பொழிவாளரென்றால், மாசற்ற மனதினராய் இருப்பார் என்று முடிவெடுத்துவிடலாம?
ஆனால், அது ஒரு பாமரனின் stock opinion.
stock opinions என்றால் ஏற்கனவே மற்றவர்கள் சிந்த்த்து பரப்பிய கருத்துக்கள் நம் மனது நம்மையறியாமலே ஆராயாமல் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களே.
டோண்டு போட்டது அப்படிப்பட்ட stock opinion.
சதுர்வேதி என்றொரு ஆன்மிகச்சொற்பொழிவாளர். நாலாயிரத்திவ்ய பிரபந்த்த்தில் தேர்ச்சி. ஆற்றோழுக்காக ஆழ்வார் பாசுரமழையில் நனைய வைப்பார். ஆனால் இன்று சிறையில். ஒருவர் தன் மனைவையும் மகளையும் வைத்துக்கொண்டார் எனப்புகார் செய்தபின் சொற்பொழிவாளரின் வண்டவாளம் வெளிவந்த்து.
கி.வா வைப்ப்ற்றி நான் அப்படிச்சொல்ல்வைல்லை. டோண்டுவின் ஒபினியன் ஒரு stock opinion என்ற்தான் சொல்கிறேன்.
கி.வாவைப்பொறுத்த் வரை, கந்தபுராணம், கந்தசஸ்டி போன்ற இந்துக்கள் நூல்கள செய்யமுடியாததை கிவா செய்தார். முருகனுக்கு நிறைய பக்தர்களைத் தேடிக்கொடுத்தது.
இது ஒரு மகத்தான் சாதனை. இதற்கு முருகபக்தர்கள் என்றென்றும் கடன்ப்டுவார்கள் என்பது என் நம்பிக்கை.
நான் டோண்டு பதிவில் பின்னூட்டங்கள் போடாக்காரணம் என் மாற்றுக்கருத்துககள் தாங்கும் சக்தி அவருக்கு இல்லை. ‘பொத்திக்கிட்டு போ’ என்ற ஆபாச சொற்களை வீசுவார். உ.த ‘நான் யார் தெரியுமா>’ என்ற மிரட்டலோடு சரி. டோண்டு சொல்லால் அடிப்பார்.
இப்பின்னூட்டங்கள் உ.த கேட்டுக்கொண்டதற்காக போடப்பட்டன.
//‘பொத்திக்கிட்டு போ’ என்ற ஆபாச சொற்களை வீசுவார்.//
அது உங்கள் கருத்து நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. மற்றவர்கள்தான் கூறவேண்டும். ஆனால் நான் எங்கே அவ்வாறு சொற்களை வீசினேன் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
மர்றப்படி காமெடி பீசுடனெல்லாம் என்ன கோபம் கொள்ளவியலும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thanks Mr Dondu, for responding.
Bye
Post a Comment