பிளாக்கர் விஷயம் ஒன்று புதுசா
தனிப்பட்ட முறையில் நமது பதிவுகளை ஒவ்வொன்றாக காட்சிப்படுத்தும்போது பதிவின் கீழே மூன்று பட்டன்கள் காணப்படும். அவை இடமிருந்து வலமாக முறையே அடுத்த பதிவு, இல்லம் மற்றும் முந்தைய பதிவு ஆகும். இந்த மூன்று பட்டன்களில் எதன் மேல் எலிக்குட்டியை வைத்தாலும் க்ளிக் செய்ய ஏதுவாக கை சின்னம் தெரியும் (காங்கிரஸ் கட்சிச் சின்னத்தைக் கூறவில்லை முரளி மனோகர், நன்றி).
அங்கு க்ளிக் செய்தால் அதது காட்டும் பக்கங்களுக்கு செல்லலாம். ரொம்ப நாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அதாவது அவ்வாறு கிளிக் செய்து முந்தைய பதிவுக்கு செல்ல முடிந்தது, இல்லத்துக்கும் செல்ல முடிந்தது. ஆனால் அடுத்த பதிவுக்கான பட்டனின் மேல் எலிக்குட்டியை வைத்தால் கை ஒன்றும் தெரியவில்லை. மற்றவர்களது வலைப்பூக்களில் இப்பிரச்சினையை பார்க்கவில்லை. என்னுடையதில் மட்டுமே அது தென்பட்டது.
இது குறித்து ஒரு நாள் பத்ரிக்கு தொலைபேசி கேட்டேன். அவர் எந்த வலைப்பூவில் எல்லா பட்டன்களும் செயலாக இருக்கின்றனவோ அதன் வார்ப்புருவை என்னையும் பாவிக்க சொன்னார். ஆனால் நான் சோம்பலில் அதை செய்யாது விட்டு விட்டேன். ஆனால் என்ன ஆச்சரியம் இன்று பார்த்தால் மேற்சொன்ன மூன்று பட்டன்களும் செயலாக உள்ளன. என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. பிளாக்கர் டெம்பிளேட்டில் ஏதேனும் பிழை இருந்து அதை இப்போது சரி செய்திருப்பார்களா?
வடிவேலு - சிங்கமுத்து விவகாரம்
இவர்கள் ஒருவரை ஒருவர் காலை வாருவது சினிமாவில் பார்க்க நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை வாழ்க்கையில் பார்க்க சகிக்கவில்லை. சிங்கமுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு கூறுகிறார். அவரை நம்பி இவர் நிலம் வாங்கினாராம். சிங்கமுத்து என்ன ரியல் எஸ்டேட்டில் நிபுணரா? அதற்கெனவே பிரத்தியேக தொழில்காரர்கள் இருப்பார்களே. அவர்களை விட்டுவிட்டு தொழில்தகுதி இல்லாதவர்களையெல்லாம் நம்பினால் இப்படித்தான் ஆகும்.
அதை விடுங்கள், அது அவர்கள் சொந்தப் பிரச்சினை. அவர்களே பார்த்து கொள்வார்களாக இருக்கும். ஆனால் காமெடி என்னும் பெயரில் பல எதிர்மறை என்ணங்களை விதைப்பதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உடல் ஊனத்தை கேலி செய்யும் காட்சிகள் கோபத்தையே வரவழைக்கின்றன.
சில தொழில்களை கேவலமாக காமெடி செய்வதும் நடக்கிறது. வெற்றிக்கொடி கட்டு என்னும் படத்தில் இந்த சீனை கவனியுங்கள். உங்களுக்கே புரியும்.
ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - ஜயா ஜேட்லி
எப்படி இருந்த ,மனிதர் இப்படி ஆகிவிட்டார். அல்சீமர் வியாதி யாருக்கும் மரியாதை தருவதில்லை. தாட்சர், ரீகன் வரிசையில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் சேர்ந்துள்ளார். ஒரு சமயத்தில் அவரது ஒரு சொல்லில் மும்பை முழுக்க வேலைநிறுத்தம் பந்த் ஆகியவற்றை உருவாக்கியவர். அவருக்கு இப்போதைய நிலைமையா, மனம் கனமாகிறது.
இதுவரை அவரை கண்டுகொள்ளாமல் இருந்த அவரது உறவுக்கூட்டம் இப்போது வந்து மொய்க்கிறது. 26 ஆண்டுகளாக அவருக்கு துணையாக இருந்த ஜெயா ஜேட்லியை ஓரம் கட்டியுள்ளது. ஜெயா ஜேட்லிக்கு அநியாயம் நடக்கிறது என்று கூறுவதைவிட ஜார்ஜுக்குத்தான் அநியாயம் நடக்கிறது என்பேன் நான்.
என்ன செய்வது, பிணம் கிடக்கும் இடத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் வட்டமிடும், பணம் கிடைக்கும் இடத்தில் சொந்தம் என்னும் பேரில் பணந்தின்னிக் கழுகுகள் வட்டமிடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Newer Post பட்டன் பிரச்சினை என்னுடையதிலும், வேறு சிலருடைய பதிவுகளிளுமே கூட இருந்தது.
தவிர, ஒரு கட்டத்தில் என்னுடைய பதிவுகளில் பின்னூட்டமிட என்னாலேயே முடியவில்லை, இதே விஷயத்தை வேறு சிலருடைய பதிவுகளிலுமே கூடப் பார்த்தேன்.
கமெண்ட்ஸ் தனி பாப் அவுட்டாக செட்டிங்ஸில் மாற்றிய பிறகு, என்னுடைய பதிவுகளில் பின்னூட்டங்களில் பதில் எழுதும் வசதி திரும்பக் கிடைத்தது.
நாமிருவரும் ஒரே டெம்ப்ளேட்டைத் தான் பயன்படுத்துகிறோம்.
ப்ளாக்கர் படுத்தும் பாடு!
Dear Sir,
Jaya Jetly is married to Mr. George Fernandes... I do not think they are married.
She has taken possession of a property which was donated to Mr. George Fernandes by a Mumbai Mazdoor Union.
Do you think it is right? She could have donated it to any other charity or for some social cause.
This is my view.
Regards
Rangarajan
//Jaya Jetly is married to Mr. George Fernandes... I do not think they are married.//
Is she married to him or not? Make up your mind.
Regards,
Doncu N. Raghavan
from Tamilish Support
reply-to support@tamilish.com
to raghtransint@gmail.com
date Sun, Feb 14, 2010 at 3:37 PM
subject Made Popular : நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 13.02.2010
mailed-by u15347499.onlinehome-server.com
hide details 3:37 PM (4 hours ago)
Hi Dondu,
Congrats!
Your story titled 'நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 13.02.2010' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th February 2010 10:07:03 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/185432
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Thanks Tamilish team.
Regards,
Dondu N. Raghavan
Post a Comment