2/27/2010

கேரள தொழிலாளர்களை பிச்சைக்காரர்களாக மாற்றிய இடதுசாரி இயக்கம்

ஜெயமோகனின் கடற்கேரளம் தொடரின் மூன்றாம் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்.

“கேரளத்துவிடுதிகளைப்பற்றி எழுதப்போனால் அது இன்னொரு கொடுமை. பொதுவாகவே அங்கே விடுதிவாடகை அதிகம். சாலக்குடியிலேயே வாடகை சென்னையைவிட அதிகம். ஆனால் சேவை என்பதற்கும் கேரள விடுதிகளுக்கும் சம்பந்தமில்லை. காலை ஏழுமணிக்குத்தான் ஊழியர்கள் வருவார்கள். அதற்குப்பிறகே டீ கூட கிடைக்கும். மாலை எட்டுமணிக்கு ஒரு மேனேஜரைத்தவிர எல்லா ஊழியர்களும் போய்விடுவார்கள். விடுதி முழுக்க முழுக்க அதில் குடியிருப்போரின் பொறுப்பிலேயே விடப்படும்.

கேரளத்தில் ஓட்டல்வேலை போன்றவற்றுக்கு ஆள் அதிகம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் வேலைபார்ப்பதில்லை. ஆகவே எத்தனைபெரிய ஓட்டல் என்றாலும் அழுக்கும் நாற்றமும்தான். சென்னையைப்போல மணிப்பூரில் இருந்தும் மேற்குவங்கத்தில் இருந்தும் ஆள் கொண்டுவந்து வேலைசெய்யவைக்க முயன்றார்கள். தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக அதுவும் நடைபெறவில்லை.

கேரளத்தில் ஓட்டல் பணியாளர் போன்றவர்களின் நடத்தையில் உள்ள ஒரு பாவனை கவனிக்கத்தக்கது. பல தமிழர்கள் இது தமிழர்களிடம் மட்டும் அவர்கள் காட்டுவது என எண்ணுவார்கள். உண்மையில் ‘மேலே’ உள்ள எல்லாரிடமும் கேரள வேலையாள் காட்டும் முகம்தான் இது. கேரளத்தின் இடதுசாரி இயக்கம் அடித்தள உழைப்பாளிகளுக்கு தன்முனைபையும் எதிர்காலக் கனவுகளையும் அளித்தது. அவனை கர்வம் கொண்டவனாக ஆக்கியது. ஆனால் எல்லா உழைப்பும் உழைப்பே என்று சொல்லிக்கொடுக்கவில்லை. அதில் நிலப்பிரபுத்துவ கால மனநிலையே நீடிக்கிறது. சாதாரண வேலைசெய்பவர்களுக்கு கூச்சம் அதிகம். அதிலும் படித்தவர்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை”.

“நவமுதலாளித்துவம் எந்த வேலையும் அந்த எல்லைக்குள் மட்டுமே முடிந்துவிடும் ஒன்று என்று வகுத்துள்ளது. வேலைநேரத்தில் முதலாளி முதலாளிதான் தொழிலாளி தொழிலாளிதான். அதற்கான விதிகளை கடைப்பிடித்தாகவேண்டும். வேலைநேரம் முடிந்தபின் முதலாலியை தொழிலாளி பெயர் சொல்லி அழைக்கலாம். வேலை ஒருவனின் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை. அதுவும் கேரள மனநிலையை வந்தடையவில்லை

விளைவாக கேரள அடித்தள உழைப்பாளி தாழ்வுணர்ச்சி கொண்டவனாக இருக்கிறான். தனக்கு மேலே உள்ளவர்களை வெறுக்கிறான். அவனுடைய தன்னகங்காரம் எப்போதுமே புண்படச்சித்தமாக இருக்கிறது. முன்கூட்டியே தன் அகங்காரத்தை விரித்து ஓர் அரண் ஆக்கிக்கொண்டிருக்கிறான். ‘எந்தா வேண்டே?’ என்று வந்து நிற்கும் சர்வரின் முகபாவனை உடல்மொழி அனைத்திலும் ஓர் அறைகூவல், அலட்சியம் தெரிவது இதனாலேயே. சில கேள்விகளுக்கு அவர்கள் பதிலே சொல்வதில்லை, தோளைக் குலுக்குவதுடன் சரி”
.

தொழிலாளிகளின் இந்த விட்டேத்தியான போக்கு இன்னும் அதிக அளவில் மோசமாக கேரளத்தில் இன்னொரு தளத்தில் நடந்து வருகிறது. அது குறித்து நான் இட்ட பின்னூட்டங்களும், ஜெயமோகனின் எதிர்வினைகளும் அதே இடுகையில் வந்துள்ளன.

“கேரளாவில் உள்ள பஸ் டெர்மினஸ்களில் வந்து இறங்கும் பயணிகள் கையில் சிறு பெட்டி இருந்தாலும் அதை சுமக்க ஆள் வைத்தே ஆக வேண்டும் என்றும், அப்படியே பெட்டியின் சொந்தக்காரர் தானே எடுத்து செல்லப்போவதாக சொன்னாலும் கூலியை மட்டும் தந்து விட வேண்டும் என்றும், இதற்கு தலைக்கூலி என்று பெயர் என்றும் படித்த நினைவு இருக்கிறது. இது உண்மையா?

அதே மலையாளத்தார் ஊருக்கு வெளியே வந்த பிறகு இத்தனை உழைப்பாளிகளாக போவது எப்படி? அதுவும் வளைகுடா நாடுகளில் அவர்களை வேலை நிறுத்தங்களை உடைப்பதற்காக அங்குள்ள முதலாளிகள் பயன்படுத்துவதாகவும் கேள்விப்பட்டேன்.

இப்போது வேறு தளத்திற்கு வருகிறேன். எப்போதுமே எல்லோரிடமும் சமமாக நடக்க இயலாது. முரண்டு செய்தால் வேலை போய்விடும், குப்பை போட்டால் ஸ்பாட் அபராதம் வசூலிக்கப்படும் என்றெல்லாம் வைக்கும் இடங்களில்தான் கட்டுப்பாட்டுடன் விஷயங்கள் நகருகின்றன என நினைக்கிறேன்.

இங்கும் சிறிய அளவில் நான் பார்த்த ஒருவிஷயம் என்னவென்றால் வேலைக்காரர்களை மிகவும் கருணையுடன் நடத்துபவர்களைத்தான் அவர்கள் ஏய்க்கிறார்கள். கடுமையாக நடந்து கொள்ளும் முதலாளிகளிடம் ஒழுங்காக வேலை செய்கிறார்கள்.

உங்கள் கருத்து என்ன”?
By Dondu1946 on Feb 27, 2010

“கேரள தொழிற்சங்கம் உருவாக்கிய இரு விஷயங்கள் 1. அட்டிமறி 2 நோக்குகூலி

அட்டிமறி என்பதுதான் நீங்கள் சொல்வது. ஒரு சுமைதூக்கும் தொழிலாளார் சங்கம் அவர்கள் உரிமைகொண்டாடும் இடத்தில் பிறர் எச்சுமையையும் தூக்க அனுமதிக்காது. நாமே தூக்கினால்கூட அதற்கான கூலியை சங்கத்துக்கு கொடுத்துவிடவேண்டும். தலைகூலி என்றும் சொல்லப்படுவதுண்டு. நாலைந்துவருடம் முன்பு திருவனந்தபுரத்தில் ஒரு செங்கல்லுக்கு ஒன்றரை ரூபாய் வீதம் அட்டிமறிக்கூலி போடப்பட்டு ரசீதும் வழங்கப்பட்டது. செங்கல்லின் விலை ஒன்றேகால் ரூபாய்.

நோக்கு கூலி என்பது ஒரு துறையில் அத்துறை சார்ந்த சங்கத்தினரை பணிக்கமர்த்தாமல் வேறுவகையில் வேலைசெய்ய வேண்டுமென்றால் அந்தக்கூலியை தொழிலாளர்களுக்கு கொடுத்துவிடுவது. பி எஸ் என் எல் நிறுவனம் எல் என் ட் நிறுவனம் போன்றவை பொக்லைன் வைத்து பணிகளைச் செய்தபோது [நெடுஞ்சாலைகளில் மனிதர்களைக்கொண்டு மெல்லமெல்ல வேலைசெய்ய முடியாது] அந்த வேலைக்கு எவ்வளவு மனித உழைப்பு தேவையென கணக்கிட்டு அந்த பணம் கூலியாக சங்கத்துக்கு அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வந்து அமர்ந்து ஏழுமணி நேரம் வேடிக்கை பார்ப்பார்கள். உணவு இடைவேளையும் எடுத்துக்கொள்வார்கள். இப்படி நோக்குவதற்கான கூலிதான் நோக்கு கூலி. இப்போதும் உள்ளது”.
By ஜெயமோகன் on Feb 27, 2010

“Your comment is awaiting moderation.
//கேரள தொழிற்சங்கம் உருவாக்கிய இரு விஷயங்கள் 1. அட்டிமறி 2 நோக்குகூலி//
ஒரேயடியாக இது ஒரு எல்லை தாண்டிய நிலைகடந்து விட்டது என எண்ணுகிறேன். செய்யாத வேலைக்கு கூலியை அடாவடியாகக் கேட்டு பெறுவது பிச்சையெடுப்பதை விடவும் திருடுவதையும் விட கேவலமல்லவா?

இது குறித்து ஏதேனும் விவாதம் கேரள அறிவுஜீவிகளிடையே நடக்கிறதா?
By Dondu1946 on Feb 27, 2010”


உங்கள் கருத்து என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

dfgfg said...

அருமையான கருத்துக்கள்.

நீலகண்டர் ஒருமுறை சொன்னார். கம்யூனிசம் முதல் தடவை படிக்கும் போதே புரிந்துவிடுவதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று :-)

RaajK

சைவகொத்துப்பரோட்டா said...

வேடிக்கை பாக்க கூலியா!!

ராம்ஜி_யாஹூ said...

even in congress ruling time it has not changed in kerala.

கிருஷ்ண மூர்த்தி S said...

தலைப்பு, உங்களுடைய அறியாமையையும், ஒருதலைப் பட்சமான முன்கூட்டியே ஏற்படுத்திக் கொண்ட சித்திரமாகவும் தான் தெரிகிறது டோண்டு சார்!

பிச்சைக் காரர்களாக மாற்றப்பட்டது, தொழிலாளர்கள் அல்ல! அப்பாவி பொது ஜனம்!

கேரளத்திற்கே உண்டான வாய்ச் சவடால், வெட்டி உதார்அது.கொஞ்சம் நன்றாகக் கவனித்துப் பார்த்தால், இங்கே உள்ளூரிலேயே அப்படி ஒரு அராத்தான போக்கு இருப்பதைப் பார்க்க முடியும். என்ன, அங்கே சிவப்புச் சாயம் கொஞ்சம் அதிகமாகக் கண்ணை உறுத்துகிறது!

சுமைதூக்கும் தொழிலாளர்கள் மக்களிடம் அலட்சியமாகவும் அராஜகமாகவும் நடந்து கொண்ட சம்பவங்களை நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இவர்களை வழிநடத்த வேண்டிய சங்கத் தலைமை கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது 1980 களில், இடது சாரி அரசியலை கொஞ்சம் சரிவுக்கும் இட்டுச் சென்றது.

/செய்யாத வேலைக்கு கூலியை அடாவடியாகக் கேட்டு பெறுவது பிச்சையெடுப்பதை விடவும் திருடுவதையும் விட கேவலமல்லவா?/

இந்தக் கேள்வியை முதலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வார்டு கவுன்சிலரிடமிருந்து ஆரம்பித்து, எம் எல் ஏ, எம் பி முதல், சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் கிம்பளத்துக்கு அலையும் அரசு இயந்திரத்தின் துருப் பிடித்த திருகாணிகள் இவர்களிடமிருந்தல்லவா ஆரம்பிக்க வேண்டும்?

Anonymous said...

I know many Tamils who are in Kerala and are comfortable there despite small problems.Labor in Kerala cannot be taken granted or treated as slaves.There might be some problems because of unions but why focus only on Unions and not on Birlas,Tatas and others who have made money in Kerala.ITES sector is fast growing in Kerala, so is tourism.Kerala is not that bad as projected by you or Jeyamohan.

ராம்ஜி_யாஹூ said...

It seems your article is one side based. Do you mean Labourers in Tamilnadu are rich . Not at all.

When we enter Central or Egmore railway station, we can see Porters behave more worse than beggars.

When we go south usman road (joining Ranganathan street) auto drivers behave like beggars.

So even Dravida parties too made the labourers as beggars.

வஜ்ரா said...

//
Kerala is not that bad as projected by you or Jeyamohan.
//

exactly
its much worse

கிருஷ்ண மூர்த்தி S said...

அனானி!

கோபப் படுவதற்கு முன்னாள் உண்மை நிலவரத்தைக் கொஞ்சம் பார்த்துவிட்டுப் பேசினால் நல்லது!

கூலிக் காரனென்று எவரையும் இந்தநாளில் இளப்பம் செய்துவிட முடியாது, உண்மைதான்! சங்கம், இடது சாரி அரசு இருக்கிற தைரியத்தில், சுமை தூக்குகிற தொழிலாளி கூட தீவ்காட்டிக் கொள்ளைக் காரனைப் போல் நடந்து கொண்டதை திருவனந்தபுரத்தில் நானே அனுபவித்திருக்கிறேன்.

கேரளாவி ஐ டி ஈ எஸ் துறை வளர்ந்து வருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள!நல்லது!அப்படியே கேரளத்தில் வேறென்னவெல்லாம் வளர்ந்திருக்கிறது என்பதயும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்து விட்டுப் பெருமைப் படுவது உத்தமம்.

ரமணா said...

உங்கள் கருத்துப்படி பார்த்தால்


பாசத்த்லைவரின் வாரீசுகள் வாரி சுருட்டுவதற்கு என்ன பெயர்?
வங்கி ஊழியரை விட உயர் சம்பளம் விகிதம் பெற்ற பிறகும் லஞ்சப்பணத்திற்கு ஆலாய் பறக்கும் கெடு கெட்ட அரசு அலுவலர்களின்( ஒரு பகுதியினர்) செயல்களுக்கு என்ன பெயர்?
தேவையற்ற உடல் பரிசோதனைகளை செய்து பணம் பறிக்கும் முறைகெட்ட மருத்துவ கொள்ளயர்களுக்கு என்ன பெயர்?
ஆன்லயின் வர்தக் சூதாட்டம் நடத்தி உணவுப் பொருட்களின் விலையை விஷ்மாய் உயர்த்தும் மனித ரத்தம் உறிஞ்சும் அட்டைகளூக்கு என்ன பெயர்?
சாதி அரசியல் பேசி தன் காலத்தை ஓட்டும் சக்திகளின் ஆட்களுக்கு என்ன பெயர்?

கிருஷ்ண மூர்த்தி S said...

@ ரமணா!
என்ன பெயர், என்ன பெயர் என்று தவியாய்த் தவித்திருக்கிறீர்கள்!

பேசாமல் குகநாதன், திருமாவளவன் அடிச்சுவட்டைப் பின்பற்றி நீங்களும் தமிழ்நாட்டு முதல்வருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி அவரிடமே இதற்கு என்ன பெயர், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டு விடுங்கள்!

அவரை விட அதில் வேறு எக்ஸ்பெர்ட் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

Anonymous said...

Question : Which is the only place in the world where Keralites will not work.

Answer : Kerala

Jawahar said...

நான் கூட இந்த போர்ட்டர்கள் லொள்ளு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சமீபத்தில் (இது நிஜமான சமீபம், நீங்கள் சொல்கிற சமீபமில்லை!) நான் குருவாயூர் போயிருந்த போது டாக்சியிலிருந்து இறங்கி எங்கள் பெட்டிகளை நாங்களேதான் எடுத்துப் போனோம். யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஒருவேளை ரொம்ப வசதி படைத்தவர்களாக இருந்தாலோ அல்லது ரொம்ப பளுவான பெட்டிகளை சிரமப்பட்டுத் தூக்கிப் போகிறவர்களாக இருந்தாலோ ஆட்சேபிப்பார்களோ என்னவோ.

கேரளாவில் நான் பார்த்த ஒரு நல்ல விஷயத்தை சொல்ல இங்கே கடமைப் பட்டிருக்கிறேன்.

டாக்சிக்காரரிடம் பாக்கி சில்லறை வாங்காமல் போனால் கூப்பிட்டுக் கொடுத்து விடுகிறார்கள்!

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

கேரளாவில் நான் பார்த்த ஒரு நல்ல விஷயத்தை சொல்ல இங்கே கடமைப் பட்டிருக்கிறேன்.

டாக்சிக்காரரிடம் பாக்கி சில்லறை வாங்காமல் போனால் கூப்பிட்டுக் கொடுத்து விடுகிறார்கள்!
------------------------------------

இது பற்றி என்ன சொல்கிரீர்கள் டோண்டு சார்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது