என் கணினி குரு முகுந்தன் அனுப்பிய மின்னஞ்சலை வைத்து இப்பதிவை இடுகிறேன்.
சச்சின் வேலை செய்யும் கிரிக்கெட் டீம் ஒரு கார்ப்பரேட் கம்பெனி என வைத்து கொள்வோம். அதில் ஆண்டுக்கொரு முறை வரும் அப்ரைசல் சமயத்தில் தலைமை நிர்வாகியின் மனைவியின் அண்ணியின் தம்பி பிங்களனுக்கு பிரமோஷன் தருமாறு தலைமை நிர்வாகிக்கு பிரஷர் தரப்படுகிறது. ஆனால் சச்சின் ஒருவர்தான் அதிக தகுதியானவர். அவரை எப்படி கழித்து கட்டலாம் என ஆலோசனை கேட்க, பெர்சனல் ஆஃபீசர் சகுனிக்கு அவர் மனைவி மந்திரை கூறிய ஆலோசனையின்படி எழுதப்பட்ட அப்ரைசல் இதோ.
பெயர்: சச்சின் டெண்டுல்கர் (உயர் சாதியை சேர்ந்தவர் - ஒருவேளை பார்ப்பனராகக் கூட இருக்கலாம்)
கடைசி பிராஜக்ட் ரிசல்டுகள் 200 ரன்கள்/ 147 பந்துகளில்/ 25X4 / 3X6 / 12X2 / 58X1
ஓக்கே, ஓக்கே, நல்லாத்தான் பண்ணியிருக்கே, ஆனாக்க
25 x 4s = 100
3 x 6s = 18
12 x 2s = 24
58 x 1s = 58
அதாவது ஆடின 147 பந்துகளிலே 200 ரன்கள் 98 பந்துகளிலேதான் எடுத்திருக்கே.
ஆக நீ வேஸ்ட் ஆக்கின பந்துகள் 147-98 = 49
ஒவ்வொரு பந்திலேயும் ஒரு ரன் எடுத்திருந்தா கூட இன்னும் 49 விலைமதிப்பற்ற ரன்களை நம்ம டீமுக்காக எடுத்திருக்க முடியும்.
மேலாளரின் கருத்துரை: எதிர்பார்க்கப்பட்டதை மட்டும்தான் செஞ்சிருக்கே. ஆனால் OUTSTANDING எல்லாம் இல்லை. (நம்ம டீமில மீதி யாரும் இந்தளவுக்கு செய்யல்லைங்கறதை நீ சொல்ல அவசியமில்லை. இது அவங்க அப்ரைசல் இல்லை) உனக்கு அளிக்கப்பட்ட கிரேட் C
உனக்கான மேம்பாட்டு பயிற்சி: ஒற்றை ரன்களை எப்படி திருடுவது (STEAL singles) என்பதே.
பிற்சேர்க்கை:
எல்லா 50 ஓவரிலேயும் நீ ஆடினே என்பது கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனாக்க உன்னோட ஜூனியர்களை ஆடவிடாமே நீயே ஆடியது சரியில்லை. அவர்கள் எப்போதுதான் தத்தம் திறமைகளை வாடிக்கையாளருக்கு நிரூபிப்பதாம்? எல்லாமே கூட்டு முயற்சியாகத்தான் இங்கே இருக்க வேண்டும்.
நீ நல்லா செயல்படல்லேன்னு சொல்ல வரவில்லை. ஆனாலும் இன்னும் மேம்பாடு தேவை.
அது சரி, பிங்களனுக்கான அப்ப்ரைசல்? ஏன் தர வேண்டும்? அவன் என்ன சிக்ஸர் அடித்தானா, கேட்ச் பிடித்தானா? அதெல்லாம் இங்கே எதுக்கு? அவனுடை சப்போர்ட் தளம் வேறு யாரிடம் உண்டு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//சகுனிக்கு அவர் மனைவி மந்திரை //
o. k., o.k..,
//ஒவ்வொரு பந்திலேயும் ஒரு ரன் எடுத்திருந்தா கூட இன்னும் 49 விலைமதிப்பற்ற ரன்களை நம்ம டீமுக்காக எடுத்திருக்க முடியும்//
அதுதானே..,
miga arumai
நொ(சொ)ந்த அனுபவம் மாதிரி இருக்குது
அவ்வவ்.. யாராச்சும் சச்சினுக்கு மொழிபெயர்த்து அனுப்புங்களேன்.. ;)
@லோஷன்
ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பா? ஒரிஜினலே ஆங்கிலம்தானே. அதையே இங்கும் தந்தால் போயிற்று.
200 Runs/ 147Balls/ 25X4 / 3X6
Agree you have done GREAT BUT BUT BUT BUT
25 x 4s = 100
3 x 6s = 18
It implies that you have done 118 Runs in 28 Balls.
And 12 x 2s = 24
58 x 1s = 58
IT means you have done all 200 Runs in only 98 balls
So you have wasted 147-98 = 49 balls
Considering only 1 run scored on each of these balls you could have earned 49 valuable RUNS FOR OUR TEAM
MANAGER’S COMMENT: So you only met the expectations and NOT EXCEEDING (though anyone of our team could not do it) and your Grade is C
Trainings for him: Learn from how to STEAL singles.
One Addition:
It’s good that you played all 50 overs but you should encourage juniors in your team and let them showcase their talent to client – it’s all @ team effort.
I’m not saying you didn’t perform well.. it’s just a improvement area you can focusJJ
அன்புடன்,
டோண்டு ராகவன்
அட்டகாசமான கற்பனை.. ஒருவகையில் உண்மையும் கூட..
ராகவன்,
நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவு மனம் விட்டுச் சிரிக்கும் படியாக இருந்தது..
ஆனாலும் பிராமணரை' விட மாட்டீர்கள் போல !
ராகவன் சார் அவர்களுக்கு வணக்கம்; உங்க பதிவ முதல்ல படிச்சிருந்த, சச்சின் 200 ரன் அடிச்சிட்டாரேன்னு ஓடிப்போய் பேப்பர் படிச்சிருக்கமாட்டேன்.
உண்மைதான். அப்ரைசல் என்பது மேலாளரின் சுய விருப்பு / வெறுப்பிற்குரிய முத்திரையாகத்தான் இன்று உலகம் முழுக்கப் பரவலாக புரிகின்றனர். சகலத்திறமைகள் வாய்ந்த என் நண்பன் ஒருவன் 3 ஆண்டுகளாகவே "நன்று" என்பதைத் தவிர வேறெதனையும் பெற இயலவில்லை. இம்முறை அவனை திருப்திபடுத்தவே நானும் "அப்ரைசல் என்றொரு அல்வா.... நொந்தவனின் சொந்தப் புலம்பல்!" http://nellimoorthy.blogspot.com/2010/12/blog-post_22.html எனப் பதிவிட்டிருந்தேன். 'அதென்னப் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டது போல்' சொல்கின்றானே என எண்ண வேண்டாம். வளைகுடாவில் இருக்கும் எனக்கு இதெல்லாம் மரத்துப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
Post a Comment