6/06/2010

சென்னை பதிவர்கள் சந்திப்பு 05.06.2010

எனது கார் காந்திச் சிலையை அடைந்தபோது மாலை 05.30 ஆகிவிட்டது. போகும் வழியில் வந்திருக்கக் கூடிய பதிவர்களை ஊகித்து, பெயரை எழுதி வைத்துக் கொள்ளலாம் என எண்ணி, முதலில் கேபிள் சங்கர் பெயரை எழுதினேன். ஆனால் நான் அங்கு சென்று ஏற்கனவே வந்த பதிவர்களுடன் சேர்ந்து கொண்டபோது பார்த்தால் கேபிள் சங்கர் இன்னும் வரவில்லை. பிறகுதான் வந்தார். அது மட்டுமல்ல, எப்போதும் லேட்டாக வந்து, டீக்கடையில் சேர்ந்து கொள்ளும் மருத்துவர் ப்ரூனோ ஏற்கனவேயே வந்து அமர்ந்திருந்தார். மழை ஏதேனும் வந்து விடக்கூடாதே என லேசாக கவலை எழுந்தது நிஜம். ஆனால் நல்ல வேளையாக அப்படி ஒன்றும் ஆகவில்லை.

பேசாமல் எனது நோட்டுப் புத்தகத்தை பாஸ் செய்து வந்தவர்கள் தத்தம் பேரை குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டேன். அதன்படி பதிவு செய்தவர்கள் மற்றும் பிறகு நானே கண்டறிந்தவர்கள் பின்வருமாறு.

அன்பழகன், காவேரி கணேஷ், கே. ரவிசங்கர், டி.வி. ராதாக்ரிஷ்ணன் (வலைப்பூவை விட்டு விக வேண்டாம் என நான் அவரை கேட்டுக் கொண்டேன்), தண்டோரா, பலாபட்டறை ஷங்கர், ஜாக்கி சேகர், சிறில் அலெக்ஸ், ப்ரியன், பி. சரவணன், ஸ்ரீ, நரேந்த்ரகுமார், (பதிவர் பெயரை படிக்க இயலவில்லை என்னவோ Fefli என்பதுபோல இருக்கிறது), ப்ரூனோ, சங்கர், லக்கிலுக், பாலபாரதி, விக்கி, அதிஷா, அதியமான், ஆனந்த் (பேநாமூடி), தமிழ்துரை, ஜ்யோவ்ராம் சுந்தர், விஜய், அப்துல்லா.

மேலே குறிப்பிட்டுள்ளது முழுமையான பட்டியல் அல்ல. பிற்கும் பலர் வந்தனர். எல்லார் பெயரையும் போட்டுக் கொள்வது பிராக்டிகலாக முடியவில்லை. ஆகவே பெயர் விட்டுப் போனவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இன்னொரு விஷயம். வழக்கம் போலவே நேற்றும், பலகுழுக்கள் தன்னாலேயே உருவானதால் எல்லோரையும் கவர் செய்ய முடியவில்லை.

அமெரிக்கா மேரிலாந்திலிருந்து சிறில் அலெக்ஸ் இந்தியாவுக்கு நிரந்தரமாகவே வந்து விட்டார். அவர் வேலை செய்த கம்பெனியிலேயே சென்னை ஆஃபீசுக்கு மாற்றல் பெற்று வந்ததால், இங்கு வேலை தேடவேண்டிய சங்கடம் இல்லை. ஜெயமோகனின் பக்கம் இருக்கும் தள்த்துக்கு அவர்தான் மேனேஜர் என்பதால் ஜெ இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை எனக்கேட்டேன். தளத்தின் வைரஸ் பிரச்சினை பற்றியும் கேட்டேன். அது ஒரு மால்வேர் பிரச்சினை என கரெக்ட் செய்தார் அவர். ஜெயமோகன் அவரது இச்சைப்படியே இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்றும் குறிப்பிட்டார். சிறில் அலெக்ஸ் போலி டோண்டு விவகாரம் பற்றியும் பேசினார். அவருக்கு அது சம்பந்தமாக நான் பல தகவல்கள் கொடுத்தேன்

பிறகு கூட்டம் மணலுக்கு ஷிஃப்ட் ஆனது. முதலில் எல்லோரும் வரிசையாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

அதியமான் சிறில் அலெக்சுடன் அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோல் விலையை கேட்டறிந்து, அப்பணத்தை வைத்துக் கொண்டு அங்கு ஒரு வேளை உணவுகூட கிடைக்காது என்பதை நிறுவினார். ஆனால் இந்தியாவில் அப்படியில்லை எனக்கூற, சிறில் விலைவாசிகள் பல காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்றார். செல்பேசி சேவை இந்தியாவில் அமெரிக்காவை விட மிக மலிவு, ஆனால் அதே நேரம் அமெரிக்காவில் பல குறிப்பிட்ட தினங்களில் டாக்டைம் இலவசம் என்றும் இந்தியாவில் அப்படியில்லை என்றும் கூறினார்.

வரும் செம்மொழி மகாநாட்டுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக ஒரு பொருட்காட்சி நடக்கும் எனவும், அதில் பதிவர்களுக்காக சில ஸ்டால்கள் ஒதுக்கப்படும் என்றும் லக்கிலுக் கூறினார். அங்கு வரும் பொதுமக்களுக்கு இணையத்தில் தமிழ் எவ்வாறு எழுதுவது என்பது போன்ற விஷயங்களை புதிதாக வருபவருக்கு சொல்லித்தர சுமார் 50 தன்னார்வலர்கள் தேவை எனவும், இதுவரை 30 பேர் சேர்ந்துள்ளனர் என்றும் லக்கிலுக் கூறினார். இப்போதே சொன்னால் அவர்களை அழைத்து செல்லும் ஏற்பாடுகலை செய்யவும் தோதாக இருக்கும் என்றும் கூறினார்.

பாலபாரதி பேசும்போது இகலப்பை, என்.எச்.எம். ஆகிய இலவச தமிழ் எழுதிகள் இருப்பதைகூட தெரிந்து கொள்ளாத பலர் மெனக்கெட்டு விலை கொடுத்து வேறுபல எழுதிகலை வாங்குவதையும் குறிப்பிட்டார். இம்மாதிரி இலவச எழுதிகளின் சிடிக்களை நிறைய காப்பி எடுத்து வினியோகிக்கலாம் என்றும் கூறினார். இணையத்திலிருந்தே அவற்றை தரவிறக்கிக் கொள்ளலாமே என ஒரு வர் கூற, கணினி வைத்திருப்பவர்கள் பலர் இணையத்தை இன்னும் போட்டுக் கொள்ளவில்லை என பதில் கூறினார்.

திடீரென யாரோ ஒருவர் டோண்டு ராகவன் ஏதேனும் ஒரு விஷயம் பற்றிப் பேசலாம் என வெள்ளந்தியாக கூறிவிட, அவனோ இதுதான் சாக்கு என்பது போல, இஸ்ரேலை பற்றிப் பேசலாமா என கேட்டு வைக்க பலர் எழுந்து ஓடத் தயாராயினர். அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவன் மேலே பொஏசவில்லை. இருப்பினும் ஒருவர் இஸ்ரேலுக்கு வந்த சமாதான கப்பலை இஸ்ரேல் தடுத்த விவகாரம் பற்றி கேட்டார். இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை என நான் கூறினேன். வந்தவர்களில் யாரேனும் மனித வெடிகுண்டாக இருந்தால் என்ன செய்வது என்பதுதான் என் கேள்வி.

இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் காலை 8.10. காவேரிகணேஷிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. சந்திப்புக்கான படங்கள் அவரது இப்பதிவில். அதிலிருந்து நானும் இருக்கும் ஒரே ஒரு படத்தை நான் இங்கே போடுகிறேன். அவர் ஆட்சேபிக்க மாட்டார் என நம்புகிறேன். மீதி படங்களை அங்கு சென்று பார்த்து கொள்ளவும்.


அவருக்கு என் நன்றி.

நர்சிம் விவகாரம் பற்றி பேச அங்கு பலர் தயாராக இல்லை. ஆகையால் அது பற்றி நான் பேச நினைத்ததை முழுமையாகக் கூற முடியவில்லை. அது பற்றிய எனது எண்ணங்கள் என் இரு பதிவுகளில் உள்ளன. 1
மற்றும் 2.

பிறகு எல்லோரும் டீக்கடைக்கு சென்றோம். அங்கு செல்லும் வழியில் ஜ்யோவ்ராம் சுந்தர் வந்து சேர்ந்து கொண்டார். அங்கும் இன்னும் அதிக குழுக்கள் உருவானதால் பலாபட்டறையான விஷயங்கள் பேசப்பட்டன. அதற்குள் இரவு எட்டு மணி ஆகியபடியால் என் காரை வரவழைத்து, எல்லோரிடமும் விடை பெர்றுக் கொண்டு சென்றேன்.

இது முதல் டிராஃப்ட் மட்டுமே. வேறு ஏதாவது நினைவுக்கு வந்தால் எழுதுகிறேன். நேற்று வீட்டுக்கு செல்ல இரவு பத்து மணிக்கு மேல் ஆனதால் இன்று காலைதான் பதிவு போட முடிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

29 comments:

மொக்கை மோகன் said...

நானும் லேட்டாக வந்தேன். ஆனால் அதற்குள் தாங்கள் கிளம்பி விட்டதை அறிந்தேன். மன்னிக்க!

கிருஷ்ண மூர்த்தி S said...

/நர்சிம் விவகாரம் பற்றி பேச அங்கு பலர் தயாராக இல்லை/

இந்த ஒரு விஷயம் தான் பதிவர் சந்திப்புக்களில் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

பதிவுகளில், பின்னூட்டங்களில் சர்ச்சைக்குரியதாக எதையாவது எழுதி விடுவது, கண்டனங்கள் குவிந்தால் வருத்தம், மன்னிப்பு மாதிரி ஜகா வாங்குவது ஒரு பக்கம்!

பின்னூட்டங்களை எழுதும்போது, ஒரிஜினல் பதிவின் கோரத்தை விட மிகவும் குரூரமாக எழுதி விடுவது, அதை அந்தப் பதிவரும் தன மனநிலைக்குத் தகுந்த மாதிரி இருப்பதால், வெளியிட்டுப் பிரச்சினையைப் பற்றி எரியச் செய்வது!

இத்தனையும் செய்துவிட்டு, நேரில் சந்திக்கும் பொது அதைப் பற்றி பேசுவதற்கே தயக்கம் என்றால் என்ன அர்த்தம்?

எனக்கு முன்னால் இருக்கும் மொக்கை மோகனுடைய பதிவில் இந்தப் பதிவர் கூட்டத்தின் படங்கள் இருப்பதில் இரண்டாவது..காப்ஷன் இப்படிச் சொல்கிறது:"சென்ஷி பதிவு போட்டு இருக்காராம். எவ்வளவு தான் அடிச்சாலும் இப்படியே சிரிச்சுகிட்டு இருந்துட வேண்டியதுதான்" அதை வைத்து அவர் தான் மருத்துவர் ப்ருனோ என்று ஊகிக்க முடிந்தது!

டிவிட்டரில் கள்ளக் காதல் பற்றி எழுதியதையாவது தவறு என்று சொன்னாராமா?

எனக்கு, பதிவர் சந்திப்புக்களில் பரிச்சயம் இல்லை.வால்பையன் ஒருவரைத் தவிர தனிப்பட்ட முறையில் எந்தப் பதிவரையும் நேரிடையாகச் சந்தித்ததுமில்லை, பழக்கமும் இல்லை.

நேரில் சந்திக்கும்போது மாமா, மாப்பிள்ளே சகாவு என்று கட்டித் தழுவிக் கொண்டு, அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் நிஜமாகவே காலை வாரிக் கொண்டு இருப்பது மிகவும் வினோதமாகத் தான் இருக்கிறது!

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற மாதிரி நரசிம்-சந்தனமுல்லை என்ற இருவரது தனிப்பட்ட கருத்துவேறுபாடுகள், அதைத் தொடர்ந்த உணர்ச்சி வெடிப்புக்கள் என்றில்லாமல், பின்னூட்டங்கள், ஆதரவாளர்களாலேயே இந்தப் பிரச்சினை இவ்வளவு பெரிதான மாதிரித் தோன்றுகிறது!

Ganesan said...

சென்னை பதிவர் சந்திப்பு –தொகுப்பு,புகைப்படங்கள்


http://kaveriganesh.blogspot.com/2010/06/blog-post.html

அருள் said...

கிருஷ்ணமூர்த்தி said...

// // நேரில் சந்திக்கும் பொது அதைப் பற்றி பேசுவதற்கே தயக்கம் என்றால் என்ன அர்த்தம்?// //

அட்டைக்கத்தி சண்டை'ன்னா அப்படிதான் இருக்கும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/அட்டைக்கத்தி சண்டை'ன்னா அப்படிதான் இருக்கும்./

திரு அருள்!

நான் பதிவர் சந்திப்பு பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் என்னடாவென்றால், நீங்கள் ஒவ்வொரு பதிவிலும் வந்து போடுகிற பின்னூட்டச் சண்டையைப் படி விவரித்துக் கொண்டிருக்கிறீர்கள்!

சுயசொறிதலைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன்! சில பதிவுகளில் நீங்கள் நீட்டி முழக்கி எழுதும் பின்னூட்டங்கள், பதிவெழுத, பதிவுகளைப் படிக்க ஏன் வந்தோம் என்றாக்கி விடுகிறது!

ராம்ஜி_யாஹூ said...

Thanks for sharing, Your writing about bloggers meet is excellent, as always.

அருள் said...

கிருஷ்ணமூர்த்தி said...

// //சில பதிவுகளில் நீங்கள் நீட்டி முழக்கி எழுதும் பின்னூட்டங்கள், பதிவெழுத, பதிவுகளைப் படிக்க ஏன் வந்தோம் என்றாக்கி விடுகிறது!// //

அது உங்க பிரச்சனை. அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?

Anonymous said...

சார், நீங்க கார் வாங்கிட்டிங்களா? எப்போ? உங்கள் கொள்கை என்ன ஆனது? இது பற்றிப் பதிவு இட்டுள்ளீர்களா?

dondu(#11168674346665545885) said...

எல்லா கால் டாக்சிகளும் டோண்டு ராகவனது கார்தான் என்பதை லோகமே அறியுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kannan said...

யாரு அந்த ப்ளூ ஷர்ட் தான் நீங்களா? ரொம்ப ஸ்மார்டா இருக்கிறீர்கள்

dondu(#11168674346665545885) said...

அது ஜ்யோவ்ராம் சுந்தர். நானில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஜ்யோவ்ராம்-கிறது யாரு ? ஒரு பதிவர் சண்டையில் அடிபட்டாரே அவரா ? இந்த சந்திப்பில் யர்ருக்கும் அடி ஏதும் இல்லையே ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டோண்டு சார் இந்த சிரிப்புபோலிஸ் பத்தி சொல்லாம விட்டுடீங்களே!!!!

Anonymous said...

வினவுக்கும்பலிலிருந்து யாரும் வரவில்லையா?

வஜ்ரா said...

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
டோண்டு அவர்களின் வலைப்பக்கத்தைத் திறந்ததும் நிரந்தர பதிவுகள் என்று மேலே இடது பக்க ஓரத்தில் ஒரு மூன்று பதிவுகளின் தலைப்பு வரும். அதில் முதல் பதிவைப் பார்க்கவும்.

K.R.அதியமான் said...

வினவு குழுவை சேர்ந்த ‘தளபதி’ என்ற தோழரும் பதிவர் சந்திப்பிற்க்கு வந்திருந்தார். ஆனால் தான் ஒரு வாசகன் என்று மட்டும்தான் என்று தெரிவித்தார். அவர் வினவு குழுவை சேர்ந்தவர் என்பது, டீக்கடையில் அவருடன் சூடான விவாதம் செய்த போதுதான் தெரிந்தது. சில ஆண்டுகள் முன்பு இளம் கவிஞர் சங்கர ராமசுப்பிரமண்யன் எழுதிய ஒரு (ஈராக் போர் பற்றிய) கவிதையின் ‘அரசியல்’ பற்றி ‘விளக்கம்’ கேட்க அவருடைய வீட்டினுள் அத்திமீறி நுழைந்து, அவரை மிரட்டி ம.க.இ.க அலுவலகத்திற்க்கு ‘அழைத்து’ சென்ற விவகாரம் குறித்து சூடான விவாதம். நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரும் கலந்து கொண்டார். தோழர் தளபதி அந்த அத்துமிறலை நியாயப்படுத்தினார். புதிய ஜனனாயகம் இதழில் திருமாவின் பொறுக்கி அரசியல் என்று எழுதியதற்க்காக, ’அறச்சீற்றம்’ அடைந்த வி.சிறுத்தைகள் சிலர் ம.க.இ.க அலுவலகத்தில் நுழைந்து ‘விளக்கம்’ கேட்டதை ஒப்பிட்டேன். அது தவறு என்றால், இவர்கள் ச.ர.சுப்பிரமண்யன் விசியத்தில் செய்ததும் தவறுதான். அல்லது இரண்டும் சரிதான். ஒன்றை மட்டும் நியாயப்படுத்த முடியாது என்றேன். இல்லை என்றார்.

மேலும் அ.மார்க்ஸின் செய்ல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அறிவுஜீவிகளின் ‘வெறுப்பை’ பற்றி பேசினார். செம்புரட்சிக்கு பின் லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை தடை செய்வீர்களா என்று கேட்டேன். அதை அப்போது ஒரு மக்கள் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார். கவனிக்கவும். தடை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை. கமிட்டி முடிவு செய்யும் என்றார். இதுதான் இவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனனாயகம் பற்றிய கோட்பாடு.

சுகுணா திவாகர் உங்களின் உண்மையான ’தோழர்’. அவரை போய் இப்படி தாக்குதவது மூடத்தனம் என்றேன். மிக முக்கியமாக, அவர் வேலை செய்யும் பத்திர்க்கையின் பெயர் மற்றும் சுகுணாவின் இயற்பெயரை வேண்டுமென்றே உங்கள் பதிவில் சுட்டிக்காட்டி அவருக்கு வீண் பிரச்சனை செய்ய முயல்கிறீர்கள். இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்றேன். பைத்தியாரன் வேலை செய்யும் துறை பற்றி அவருக்கு ஒரு முறை பின்னூட்டம் இட்ட போது, வேண்டாம் என்று அவர் என்னை தடுத்தார். ஆனால் சுகுணாவிற்க்கு மட்டும்….

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் விவாதம். நேரமாகிவிட்டதால் விடை பெற்றேன்.
வினவு குழு ‘தோழர்’ ஒருவரை முதன் முறையாக நேரில் சந்தித்த ’பாக்கியம்’.
இவர் என்ன ’பெயரில்’ அங்கு ’பின்னூட்டம்’ இடுகிறவர் என்று யோசித்தபடியே வீடு திரும்பினேன்.

Rajan said...

ஜ்யோவ்ராம் சுந்தரின் போட்டோவில் பூணூல் வெளியே தெரிகிறது!

யதேச்சையானதா அல்லது!

dondu(#11168674346665545885) said...

@ராஜன்
ஜ்யோவ்ராம் சுந்தருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். என்னவோ தனது பார்ப்பன வேர்களை மறந்து நடமாடினால் அவரை உபயோகமற்ற இணைய தாசில்தார்கள் ஏற்றுக் கொள்வார்கள் என மனப்பால் குடித்தார்.

நான் ஏற்கனவேயே பல இடங்களில் குறிப்பிட்டது போல சுற்றியிருப்பவர்கள் இம்மாதிரித்தான் ஒரு பார்ப்பனனை சீண்டுவார்கள். கமலஹாசனையே விடைல்லையே, ஞாநியையும் விடவில்லையே.

ஆகவேதான் நான் என்னிடம் அவ்வாறு பேச முயல்பவர்களை எடுத்த எடுப்பிலேயே போடா ஜாட்டான், நான் பாப்பனனேதான், அதுவும் வடகலை ஐயங்கார். அதுக்கென்ன இப்போ என வெளிப்படையாகவே கேட்டு விடுவதால் என்னிடத்தில் எவனும் வம்பு வைத்துக் கொள்வதில்லை.

சண்டைக்கார பார்ப்பனன்,
டோண்டு ராகவையங்கார்

Rajan said...

//நான் ஏற்கனவேயே பல இடங்களில் குறிப்பிட்டது போல சுற்றியிருப்பவர்கள் இம்மாதிரித்தான் ஒரு பார்ப்பனனை சீண்டுவார்கள். கமலஹாசனையே விடைல்லையே, ஞாநியையும் விடவில்லையே.
//


நான் இப்போ என்ன சொன்னேன் பூணூல் தெரியுதுன்னு தானே சொன்னேன் ! நீங்களாகவே ஏன் வண்டி வண்டியா எடுத்து விடறீங்கன்னுதான் தெரியல! ஒரு கணக்கு போட்டுட்டீங்க ! ம்ம்ம் நடத்துங்க

Rajan said...

//ஆகவேதான் நான் என்னிடம் அவ்வாறு பேச முயல்பவர்களை எடுத்த எடுப்பிலேயே போடா ஜாட்டான்,//

இதெல்லாம் மத்த்தவங்களுக்கு இப்போ ரொம்ப ஜாலியா போயிடிச்சே சார்!

Rajan said...

//நான் பாப்பனனேதான், அதுவும் வடகலை ஐயங்கார்.//



வடகலையோ தென்கலையோ எச்சக்கலையோ அதெல்லாம் எதுக்கு ! நீங்க பாப்பான்னு சொல்லி தெரியணுமா எத எழுதுனாலும் வாசம் வந்துடுமே!

Rajan said...

//சண்டைக்கார பார்ப்பனன்,
டோண்டு ராகவையங்கார் //


மொதல்ல மொட்டைக்கார பாப்பனன்னு ஒருத்தன் இருக்கான் ஸ்ஸ்ஸ்ஸ்சோ! அவருக்கு எதாவது பண்ணனும் !

dondu(#11168674346665545885) said...

சுந்தரோட பூணல் தெரியுது இல்லே ஜட்டி நாடா தெரியுது. அது பற்றி உங்களுக்கென்ன?

டோண்டு ராகவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ராஜன், என்ன வேலை இது??? அது பனியன். இந்த எழவையெல்லாம்கூடச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா நான்?

அருள் said...

K.R.அதியமான் said...

// //செம்புரட்சிக்கு பின் லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை தடை செய்வீர்களா என்று கேட்டேன். அதை அப்போது ஒரு மக்கள் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார்.// //

காமிடி எதுவும் இல்லையே?

கனவில் வாழ்வை தொலைத்தவர்கள் நிறைய பேர். இந்த கனவே கூட ஒரு சதியாக இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. அதனாலதான் கேட்டேன்.

அருள் said...

டோண்டு ராகவையங்கார் Said...

// //நான் பாப்பனனேதான், அதுவும் வடகலை ஐயங்கார். அதுக்கென்ன இப்போ என வெளிப்படையாகவே கேட்டு விடுவதால் என்னிடத்தில் எவனும் வம்பு வைத்துக் கொள்வதில்லை.// //

"உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் மநுதர்மம் முதலிய இந்து சாத்திர-புராண-இதிகாசங்களில் பெரிய கீழ் - மேல் பேதமும், பெருத்த இழிவும், பெருமையும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதை விட்டுவிடுவது என்பது எந்த பார்ப்பனனாலும் முடியாததும், விரும்பப்படாததுமான காரியமாகும். மற்றும் மேல்சாதிக்காரன் என்கின்ற பார்ப்பானுக்கு இந்தச் சாதி உணர்ச்சியை விடாமல் எந்தத் துறையிலும் காட்டிக்கொள்வதனால் மேன்மையும் நல்வாழ்வும் இலாபமும் இருந்து வருகின்றன. அதை இழக்க எந்தப் பார்ப்பானும் சம்மதிப்பான் என்று நம்புவது இயற்கைக்கு விரோதமானதாகும்....."

"வாயில் - நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது, பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய - புலி புல்லைத் தின்னாது. அது போலவாக்கும் பார்ப்பனர்கள் தன்மை."

தந்தை பெரியார் (23.4.1957 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலம்)

Anonymous said...

\\ஜ்யோவ்ராம் சுந்தரின் போட்டோவில் பூணூல் வெளியே தெரிகிறது!//

ராஜன், உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? பூணூல் தெரிஞ்சா என்ன? பூ.....ல் தெரிஞ்சா என்ன? சாதி இல்லை சாதி இல்லைன்னு நீங்களும் வால்பையனும் அடிக்கிற ஆபாசக் கூத்து பத்தாதா? இவ்ளோ பேசுற நீங்க கண்ணாலம் கட்டும்போது நல்ல புள்ளையா அம்மா அப்பா பார்க்குற உங்க சாதிப் பொண்ணத்தானே கட்டப் போறீங்க?

Unknown said...

டோண்டு சார்,
ஜூன் இறுதி அல்லது ஜூலையில் ஏதாவது பதிவர் சந்திப்பு சென்னையில் நடக்க உள்ளதா? அந்த சமயத்தில் இந்தியா வருகிறேன். பிரபல பதிவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?

நன்றி,
பாஸ்கர்.

வால்பையன் said...

அடடா!

என்ன கூச்சல், கும்மாளம்!

சுந்தர் கட்டியிருப்பது திருட்டு வாட்சான்னு கேட்டா மாதிரி டோண்டு சாருக்கு என்னா கோவம் வருது!, போட்டோவில் என்னமோ வெள்ளையா தெரியுதேன்னு கேட்டார், வேறு யாரும் கேட்கவில்லை, இவர் கேட்டு விட்டார், அதற்கு ஒரு அனானி சொந்த சாதியில் தானே திருமணம் செய்வீர்கள் என அட்சதை போட்டு மொய் வைக்கிறார்!

நிச்சயம் அப்படி செய்ய மாட்டோம் சாதி வெறியர்களே, நாங்கள் சொல் ஒன்று செயல் ஒன்றாக வாழ்பவர்கள் அல்ல!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது