போனவாரம் ஒரு நாள் திடீரென செல்பேசியில் அழைப்பு வந்தது. ஜெயா டிவியிலிருந்து பேசினார்கள். அடுத்த நாள் காலைமலருக்கான நேர்காணலுக்கான ஷூட்டிங்குக்காகக் கூப்பிட்டார்கள். எனக்கு ஒரே திகைப்பு. ஏற்கனவே இருமுறை இது விஷயமாக ஜெயா டிவியில் இதே காலை மலருக்கு பேட்டி அளித்திருக்கிறேன் என்பதை அவருக்கு நினைவுபடுத்தினேன். அவர் தனக்கும் அது தெரியும் எனக் குறிப்பிட்டார்.
இருந்தாலும் முதலிரண்டு நேர்காணல்களில் கூறப்படாத செய்திகள், கூறப்பட்ட சில விஷயங்களுக்கான் இற்றைப்படுத்தல்கள் ஆகியவை இருக்கும் என்றார். எனக்கென்ன, சரி என்று கூறிவிட்டேன்.
அடுத்த நாள் காலை என் காரில் ஜெயா டிவி வளாகத்தில் சரியாக 11.30-க்கு வந்து என்னை டிராப் செய்து விட்டு, என் வீட்டம்மாவும் மகளும் வடபழனியில் இருக்கும் எனது உறவினர் வீட்டுக்கு விரைந்து விரைந்து சென்றனர்.
போன முறை வந்த அதே ப்ரொட்யூசர்தான் இபோதும். சும்மா சொல்லப்படாது. ஏற்கனவேயே கூறியதைத் திரும்பக்கூறாது தவிர்க்க நிஜமாகவே பாடுபட்டார். நானும்தான். பேட்டி காண வந்தது முதல் இருமுறை வந்தவர்களல்ல. நல்ல வேளையாக வேறு இருவர் - ஓர் ஆண், ஒரு பெண் வழக்கம் போலவே.
ஆனாலும் என்னதான் முயன்றாலும் சில விஷயங்கள் ரிபீட் ஆவதை தடுக்கவியலவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஷூட்டிங் எடுத்தனர். கூறப்பட்ட எல்லா விஷயங்களையுமே காட்டுவார்களா எனத் தெரியவில்லை. இம்முறை மறக்காமல் திருக்குறள் மொழிபெயர்ப்பு பிராஜக்டில் எனது பங்கையும் கூறினேன். ஆகவே பேட்டியைக் காண நானும் ஆவலோடு இருக்கிறேன்.
ஷூட்டிங் முடிந்ததும் காரை வரவழைத்து வீட்டுக்குச் சென்றேன்.
வரும் வியாழனறு, அதாவது ஜூன் 17 அன்றைக்கு காலை செய்திகளுக்குப் பிறகு காலை மலரில் எனது நேர்காணல் வருகிறது என்பதை அறிந்தேன்.
இந்தப் பதிவைப் போடுவதா வேண்டாமா என எனக்குள்ளேயே தயக்கங்கள். இருந்தாலும் போட்டு விட்டேன்.
முடிந்தால் ஜெயா டிவியில் வியாழனன்று காலை மலரில் பேட்டியைப் பார்க்கவும்.
அதாவது காலை 7 மணியளவில் செய்திகள் ஆரம்பிக்கும். அது ஏழரை மணியளவில் முடிந்ததுமே காலை மலர்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
11 hours ago
63 comments:
தயக்கத்துக்கு என்ன காரணம்???
இதில் தயக்குவதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
வாழ்த்துகள்.
பாராட்டுகள் சார்.
பேட்டி ஒளிபரப்பான பின்னர், வீடியோவை அப்லோட் செய்துவிடுங்கள். எங்களைப்போன்ற எக்ஸ்பேட்ரியட் மக்கள் இப்படிப் பார்த்தால் தான் உண்டு.
அடடா, 17 அன்று சுப முஹூர்த்தமாயிற்றே! காலையில் இரண்டு கல்யாணங்கள் போயே ஆகவேண்டும். உங்கள் பேட்டியை வீடியோவில்தான் பார்க்க வேண்டும்; மறக்காமல் மேலேற்றி விடவும்.
உங்கள் நேர்காணலை என்னால் இங்கிருந்து பார்க்க முடியாது என்பதை வருத்ததுடன் தெரிவிக்கிறேன்.
இதில் தயங்குவதற்கு என்ன இருக்கிறது டோண்டு சார்!
பதிவுகளே ஒரு விதமான சுய சொறிதல் தான் என்கிற போது இதெல்லாம் இல்லாமல் எப்படி?
இளமை விகடனில் என்னுடைய படம், கிழட்டு சகடனில் என்னுடைய கவிதை என்றெல்லாம் பதிவுகள் வரும்போது, தொலைக்காட்சிப் பேட்டிக்கு மட்டும் தயங்குவானேன்!
பழைய பேட்டியை டவுன்லோட் செய்து பார்த்தவர்கள் நாங்கள், இதை மட்டும் பார்க்கத் தயங்குவோமா, அசருவோமா என்ன?
இனிய பாராட்டுகள்.
பொதுவாக நான் டிவி பார்ப்பதில்லை.
காலை எத்தனை மணிக்கு வரும்?
பார்க்க முயற்சிக்கிறேன்.
இப்போது சற்று நேரத்துக்கு முன்னால் பொதிகையில் நம்ம அண்ணாகண்ணன் கலந்துகொண்ட உரையாடலைப் பார்த்தேன்.
வாழ்த்துக்கள் சார் ! நிகழ்ச்சி வீடியோ லிங்க் இருந்தால் வலையில் ஏற்றவும்.
தயக்கமென்ன ராகவன் ஜி??
வாழ்த்துக்கள், பதிவில் போடுங்க, கண்டிப்பா பாக்கறேன்.
இந்த தடவை லக்கி CD பண்ணித் தருவாரா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஜெயா டீவி புகழ் டோண்டு!
அடுத்த தேர்தலில் நங்கநல்லூரில் நிற்க சீட் கிடைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை!
Dear Dondus:
I would like to clarify an information about Mr. Cho Ramasamy. Would you be kind enough to provide that clarification?
Does he know to read Hindi?
Does he know to write Hindi?
Does he know to speak Hindi?
if Cho can speak Hindi, is there any link that can substantiate that.
Thanks...in advance.
PS: Either way, please publish this comment as I may get an answer form someone else (if you are not in a position to clarify the same).
Thanks, again...
எத்தனை மணிக்கு?
congradz.....sir
வாழ்த்துக்கள் ஐயா
ஒளிபரப்பின் நேரம் பற்றிய தகவல்:
அதாவது காலை 7 மணியளவில் செய்திகள் ஆரம்பிக்கும். அது ஏழரை மணியளவில் முடிந்ததுமே காலை மலர்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தயக்கம் ஏன் எனவும் சிலர் கேட்டுள்ளனர்.
1. எந்த சேனலில் எந்த டிவி நிகழ்ச்சியுமே அது வந்தால்தான் உண்டு.
2. இடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
3. இது மூன்றாவது நேர்காணல். ஆகவே சற்றே ஓவரோ என எனக்குள்ளேயே தயக்கம்.
அன்ப்டன்,
டோண்டு ராகவன்
பாராட்டுகள் சார்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், சன்மானம் கிடைத்ததா இல்லையா ?
//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், சன்மானம் கிடைத்ததா இல்லையா ?//
No.
Fact is, I get the exposure and this helps me in landing more translation assignments.
By the way, my commenting in English is bound with my present assignment of English to German translation. I keep the keyboard setting to German and am able to type freely the German texts with their special characters such as ö,ä,ü and ß.
I found by trial and error that all my open windows should have German setting so that there is no problem.
The moment I bring in NHM for Tamil typing it changes all typewriter settings to US English.
This is indeed a sort of trouble that is peculiar to my case.
Regards,
Dondu N. Raghavan
//Fact is, I get the exposure and this helps me in landing more translation assignments.//
எப்படியோ வருமானத்திற்கு வழி ஏற்பட்டால் நல்லது தான்.
நல்வாழ்த்துகள்
நல்வாழ்த்துக்கள்
மா.மணி
வாழ்த்துக்கள் டோண்டு சார்!
வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள் சார்.
நீங்கள் ஒன்றும் ஜெயா டிவி நிகழ்ச்சி யில் மன்னிப்பு கேட்க வில்லையே, அப்புறம் என்ன தயக்கம் பதிவிட.
vaazhthukkal.. sir
nice to know.. I will watch Jaya TV tomorrow morning.. & comment further on the show.
நல்வாழ்த்துக்கள். டோண்டு சார்.
வாழ்த்துக்கள் சார்.
"No.
Fact is, I get the exposure and this helps me in landing more translation assignments.
By the way, my commenting in English is bound with my present assignment of English to German translation. I keep the keyboard setting to German and am able to type freely the German texts with their special characters such as ö,ä,ü and ß.
I found by trial and error that all my open windows should have German setting so that there is no problem.
The moment I bring in NHM for Tamil typing it changes all typewriter settings to US English.
This is indeed a sort of trouble that is peculiar to my case.
Regards,
Dondu N. Raghavan
"
Have two computers
"Fact is, I get the exposure and this helps me in landing more translation assignments.
"
Participate in Jackpot program. You will get more expo.
If it is only for women, then participate in any other pro where the compere is a popular actress. You will get more expo. You may ask the producer to allow you to get a position near her. When the camera focuses on her, tell him tilt it slighly towards you also.
People will ask you who this guy?
When the actress introduces you at the start of the prog, explain your job as translator. Dont forget to say you are a big fan of the actress.
May Sri மகரனெடுங்குழைகாதன் bless you success in your affairs with that actress, sorry, your exposure with the help of her.
வாழ்த்துக்கள்.
காலை நேரம் தொ.கா முன் செலவழிப்பது ரொம்ப கஷ்டம். ஒளிபரப்பு ஆனா பின் கொஞ்சம் உங்க பதிவில் upload செய்திடுங்க.
Vaalpayan!
நங்கநல்லூர்காரர்கள் secret admirers of DMK.
Dondu Raavanukku deposit kuuda kidaikkaathu.
வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துகள் சார்.
கண்டிப்பா பார்த்துட்டு, என் கருத்துக்களை சொல்றேன்.
வாழ்த்துக்கள் சார் கண்டிப்பாக பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் சார்.
//தயக்கத்துக்கு என்ன காரணம்???//
சாருவை விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்க வைத்தது போல் ஏதாவது நடந்ததா :)
அப்புறம் சாருவைப்போல் பேட்டிக்கு பணம் கொடுக்கவில்லை என்று புலம்பல் பேட்டி வருமா (நீர்தான் பண விஷயத்தில் கில்லாடியாச்சே, அதனால் வராதுதானே :))
@பரிதி நிலவன்
தயக்கத்துக்கு காரணங்கள் ஏற்கனவேயே கூறிவிட்டேன். இதில் பணம் நான் எதிர்பாராததால் பிரச்சினையே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Have two computers//
இப்பின்னூட்டத்தை எனது மேஜை கணினியிலிருந்துதான் போடுகிறேன்.மடிக்கணினி வேறு உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துகள் சார்
வாழ்த்துக்கள் சார்,
என்ன உங்க நெருங்கிய நண்பர்கள் இருவரை காணவில்லை? அவர்கள் வராததால் அவர்களின் சார்பாக ...
அருள்: இந்த மாதிரி பதிவை போடுவது பார்பனிய வெட்டி வேலை! ஜாதிகள் ஒழிக, பார்ப்பனீயம் ஒழிக, வன்னியர் வாழ்க, இரமாதாசியம் வாழ்க!!
ஜோ அமலன்: This is what Dr. D J Thil Lal Angadi has written about Hinduism and Brahmins where he clearly encapsulates its rise and structures. Thirumazhisai Alwar has also said that இனகுப்போம் இன்றுவர திருமாலாம் நின்றேடுத்த நட்ருக்கினிய நவிற்சி நாவே! He clearly says that Hinduism is brahminical and hene how you can answer the points that has been raised not to be raised.
வாழ்த்துகள் டோண்டு..
போனமுறையே பேட்டி எடுத்தவர் உங்களிடம் இருந்து நிறைய தகவல்களை வெளிக்கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த முறையாவது மேலதிக தகவல்களை நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் வழியில் உரையாடலை அமைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அமீரக நேரத்திற்கு காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும். திருப்பள்ளி எழுச்சியானால் பார்க்கிறேன் :-)
//பேட்டி ஒளிபரப்பான பின்னர், வீடியோவை அப்லோட் செய்துவிடுங்கள்.- வஜ்ரா//
இராகவன் ஐயா,
அன்பர் வஜ்ராவின் கோரிக்கைக்கு நீங்கள் இன்னும் ஏதும் சொல்லக் காணோமே!
அவர் பிரச்சினைதான் என் பிரச்சினையும்! அன்பரை வழிமொழிகிறேன்.
வணக்கமும் வாழ்த்துகளும்.... தரவேற்றினால், நாங்களும் காண்போம்!!
நன்றி,
பழமைபேசி.
No,
ஆஸ்தான காமெடியன் ஒருவரை விட்டுவிட்டீங்களே ! நீர்”வால்”க !
ஜோ! இங்கிலீஸ் உங்களுக்கு வரலை இன்னும் கொஞ்சம் ஒட்டையா இருந்தா தான அவருது போல இருக்கும்.
சென்னைக்கு வரப் போறாராம், ஜாக்கிரதை.
nigalchi neram 7 1/2 ngradhala 7 1/2 aarambichiduchunu artham pannida koodadhungradhu than thayakkathukana kaaranamo?! ;-)
தயக்கமே வேண்டாம் சார்
சாரு போல நீங்களாக ஒரு விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை என்று எந்த ஒரு கட்டுரையிலும் பகிரங்கப்படுத்தவில்லை, அவர்களாகவே அழைக்கிறார்கள், உங்கள் கருத்துக்களை கூறுகிறீர்கள்,
அம்புட்டுதேன்,
அன்புடன்,ராகவேந்திரன்தம்மம்பட்டி
இப்போதான் பார்த்தேன்
இயல்பாக நல்லா இருந்திச்சு
It was nice.. I watched it fully 8:30 to 8:50 am..
பேட்டி பார்த்தேன்.
நீங்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு கலைஞர் என்பதை உங்களது பேட்டியின் மூலம் அறிய முடிந்தது.
மொழிபெயர்ப்பில் ஈடுபட விரும்பும் புதியவர்கள் உங்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாராட்டுக்கள்.
அவா, இவா, ஆத்துலன்னு பதிவுல எழுதுறதில்ல, ஆனா பேசும் போது மட்டும் ஏன் வருது, அது இல்லாம பேசுனா ஜெயாடீவியில திரும்ப கூப்பிட மாட்டாங்களா!?
"வால்பையன் said(asked)...
அவா, இவா, ஆத்துலன்னு பதிவுல எழுதுறதில்ல, ஆனா பேசும் போது மட்டும் ஏன் வருது,..."
எழுதும்போது, யோசிச்சு, சரியான கவனமா வார்த்தையை பயன்படுத்த முடியும்..
ஆனால், பேசுவது, தன்னிச்சையா இயற்கையா வரும்.. பெரும்பாலும், பழகத்தில் இருக்கும் வார்த்தைகளே (ஸ்டைல்) வரும்.
இதனை தவிர்ப்பதேன்பதே ஒரு பெரிய கலை.. பெரும்பாலும், இந்த கலை தேவை இல்லை என்பது என்கருத்து..
என்னை பொறுத்தவரை, பேட்டியின் பொது டோண்டு சார் இயல்பா இருந்தார்..
"வால்பையன் said...
அவா, இவா, ஆத்துலன்னு"
Infact atleast once, Dondu sir mentioned 'Veettula' (not 'Aaththula')...
// //நல்ல வேளையாக வேறு இருவர் - ஓர் ஆண், ஒரு பெண் வழக்கம் போலவே.// //
உங்களது பேச்சுத்தமிழ் புரிந்துகொள்ள கடினமாக இருந்தது.
உங்களிடம் பேசிய அந்த ஆண், பெண் இருவரின் பேச்சைக் கொண்டு அவர்களது சாதியை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், உங்கள் பேச்சு அப்படி இல்லை. பேட்டியை பார்த்த எவரும் உங்கள் சாதியை எளிதில் கணித்திருப்பார்கள், கவனித்திருப்பார்கள்.
//பேட்டியின் பொது டோண்டு சார் இயல்பா இருந்தார்.. //
அரட்டை அரங்கம் விசு மாதிரி ஒரு இடத்தில் உணர்ச்சிவசபட்டார்!
எனக்கு தெரிந்து கடந்த இரண்டு முறை ராகவன் என்று அழைக்கபட்ட டோண்டு இம்முறை தான் டோண்டு ராகவன் என அழைக்கப்பட்டார் என நினைக்கிறேன்!
அவர் சொன்ன ஹிந்தி கவிதை(மாதிரி) அர்த்தம் தெரிந்தால் மகிழ்வேன்!(கடற்கரை மேட்டர்)
ப்ளாக் பற்றி சொல்லும் பொழுது, அதை ஒரு பயிற்சிக்களம் என அறிந்திருக்கலாம் என்பது என் கருத்து!
மொழிபெயர்பு பற்றி பேச அழைத்திருந்ததால் அதை பற்றி பேச நேரமிருந்திருக்காது என நினைக்கிறேன்!
முக்கியமாக வினவு பற்றி பேசாமல் இருந்ததற்கு அதுவே காரணமாக இருந்திருக்கும்!
வினவை பேச அழைத்திருந்தால் நிச்சயம் டோண்டு என்ற பெயர் அங்கே வந்திருக்கும்!
:)
@வால்பையன்
அவா, இவா, ஆத்துக்கு என்பதெல்லாம் பேசும்போது தானாகவே வருபவை, தவிர்க்க விரும்பவில்லை.
பதிவில் கூட எங்கே பிறாமணன் சம்பந்தமான இடுகைகளில் பிராமணத் தமிழையே பயன் படுத்துகிறேன். அதுதான் பாந்தமாக வருகிறது.
@அருள்
ஜெயா டிவியில் ரெகுலராக வருபவர்களுக்கு அம்மாதிரி இருக்குமாறு கூறியிருப்பார்களாக இருந்திருக்கும். எனக்கு அம்மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாததால் இயல்பாகவே இருந்தேன்.
அன்புடன், டோண்டு ராகவன்
I watched it.
It is an interview with a man on technical matters. More useful only to those who are in that field.
He spoke fast. Maybe, his nature. In interviews, it is better to have just a normal delivery.
The disadvantage of speaking fast in intereviews is: the interviewers may not be allowed to think as they will become engrossed in the speech of the interviewee.
Although the technique is to make the interviewee speak more and more, yet insightful questions from the intervieweres are also necessary to make the interview more useful and interesting.
His fast delivery pre-empted intelligent questions. The man and the woman asked only a few questions and with few interruptions.
Her question: Is there any connection between creativity and translation work?
It is an intelligent question.
இவர் லாங்க் ரிப்ளை கொடுத்தார். Whether the reply was also intelligent I wont write here.
அருள் and வால்பயைன்!
பேச்சுபழக்கைத்தை ஒருநாள் இண்டர்வியூக்காக மாற்ற முடியாது. சாதி தெரியத்தான் செய்யும். தெரிந்தாலென்ன?
சாதி இருப்பதைவிட, அந்தச்சாதியை வைத்து என்ன செய்றோம், நினைக்கிறோம் என்பதைப்பொறுத்துத்தான் மக்களோடு நம் உறவு அமைகிறது.
பார்ப்பனப் பாசை பலவிடங்களில் உதவி செய்யும். சிலவிடங்களில் இல்லாமலிருக்கலாம்.
//பார்ப்பனப் பாசை பலவிடங்களில் உதவி செய்யும். //
மனவாடுன்னு கண்டுபிடிக்கிறதை தவிர வேறு எதுக்கு உதவி செய்யும்!
உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கமுடியுது!
மொழி தொடர்பு சாதனம் தானே தவிர மனிதனின் ஆளுமையை குறிக்கும் சாதனம் இல்லையே!, நேர்மையானவன் பேச தெரியாமல் இருக்கலாம், களவானிபய யோக்கியன் மாதிரி பேசலாம்!, இதுல களவானிபயலுக்கு தான் உதவி செய்யும் மொழி, உங்க கருத்தும் அது தானா!?
வால்பையன் said...
// //இதுல களவானிபயலுக்கு தான் உதவி செய்யும் மொழி, உங்க கருத்தும் அது தானா!?// //
'பார்ப்பனப் பாசை' என்று அவர் சொன்னது பேச்சு வழக்கைத்தான், மொழியை அல்ல.
பேசிப்பேசியே பலபேர் ஆட்சியை பிடித்த நாடு இது என்பதை மறந்துடாதீங்க.
Sir,
En innum ungal interview upload pannavillai.
Aavaludan ethir paarkirom,
Krishnan
Post a Comment