அரசியலில் விவஸ்தை ரொம்பக் குறைவுதான் என்பதை நானும் அறிவேன். ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்யும் அலம்பல்களால் யாருக்கு விவஸ்தை இருக்கிறதோ இல்லையோ அவருக்கு அது சுத்தமாக லேது என பிரகடனப்படுத்தி விட்டார்.
உதாரணத்துக்கு இந்த உரலில் வந்த இச்செய்தியைப் பாருங்கள்.
பாட்னா: பிகார் வெள்ள நிவாரண நிதியாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கொடுத்த ரூ. 5 கோடியை திருப்பி அனுப்பியுள்ளார் பிகார் முதல்வர் நிதிஷ்.
பிகாரில் பாஜகவின் தயவோடு தான் கூட்டணி அரசு நடத்தி வருகிறார் நிதிஷ்குமார். ஆனால், அடுத்தாண்டு அந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜகவிடமிருந்து விலக அவர் முயன்று வருகிறார்.
கடந்தமுறை லாலு பிரசாத் தோற்றதற்கும் நிதிஷ்குமார் ஆட்சிக்கு வரவும் முக்கியமாக இருந்தது அந்த மாநிலத்தின் சிறுபான்மையினரின் வாக்குகள். இந்த வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள இப்போதே தனது முயற்சிகளை ஆரம்பித்துவிட்டார் நிதிஷ்.
இதற்கென சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு சமீபத்தில் பாட்னாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வசதியாக அமைந்துவிட்டது.
அதில் பங்கேற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிகார் பத்திரிக்கைகளில் குஜராத் அரசு சார்பில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தந்திருந்தார்.
பாட்னா கூட்டத்தில் பங்கேற்கும் தனக்கு அந்த பத்திரிக்கைகள் நல்ல கவரெஜ் தரும் என்பது தான் இதற்குக் காரணம். அதில் நிதீஷ்குமாரும் நரேந்திர மோடியும் கைகோர்த்திருப்பதைப் போன்ற படம் இடம் பெற்றிருந்தது.
மேலும் பிகாரில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்கு குஜராத் ரூ. 5 கோடி தந்து உதவியதையும் அந்த விளம்பரம் பெரிதாக விளக்கியது.
இதனால் முஸ்லீம்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் இந்த விளம்பரத்துக்கு நிதிஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அன்றைய தினம் பாஜக தலைவர்களுக்கு தர இருந்த விருந்தையும் ரத்து செய்தார். இதனால் கூட்டணி உடையப் போகிறது என்று செய்தி பரவியது. ஆனால், பாஜக அதை பெரிதுபடுத்தவில்லை. மாநிலத் தலைவர்கள் லேசான கண்டனம் தெரிவித்ததுடன் அமைதி காத்துவிட்டது. மூத்த பாஜக தலைவர்கள் யாரும் நிதிசுக்கு எதிராகப் பேசவில்லை.
இந் நிலையில் நேற்று பிகார் வெள்ள நிவாரணத்திற்காக குஜராத் அரசு வழங்கிய ரூ. 5 கோடியை திருப்பி அனுப்ப நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இதன்மூலம் பாஜகவிடமிருந்து தான் விலக விரும்புவதை நிதிஷ் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஆனால், பிகாரில் தனித்துப் போட்டியிடும் நிலையி்ல் பாஜக இல்லை. இதனால் பாஜக அமைதி காத்து, கூட்டணியை தக்க வைக்க முடிந்தவரை முயலும் என்றே தெரிகிறது.
ஒரிஸ்ஸாவில் பாஜக உதவியோடு ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளத் தலைவர் முதல்வர் நவீன் பட்நாயக் , சட்டமன்ற-மக்களவைத் தேர்தலின்போது கடைசி நேரத்தி்ல பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு தனித்துப் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.
இதை ஸ்டைலை நிதிஷ் குமாரும் பின்பற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசியல் காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அதற்காக அரசியல் நாகரிகத்தை மறக்கலாமா என்பதுதான் எனது கேள்வி.
அதை விடுங்கள். வெள்ள நிவாரணத்துக்கு வரும் உதவியை இம்மாதிரி தனது கட்சியின் அல்ப நலன்களுக்காக ஒரு கட்சித் தலைவர் இம்மாதிரி திரும்ப அனுப்புவது எந்த வகையில் புத்திசாலித்தனம் என்பது தெரியவில்லை? மத்திய அரசுடன் சண்டை வந்தால் மத்திய உதவியையும் மறுப்பாரோ?
உங்கள் கட்சியுடன் ஒட்டு உறவு இல்லை என முறித்து கொள்ள எல்லா கட்சியினருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை இன்னும் நாகரிகமாக செய்திருக்கலாம். இந்த அழகுக்கு இந்த மகானுபாவர்தான் பீகாரிலேயே மிக ஜெண்டில்மேன் அரசியல்வாதியாகக் கருதப்படுபவர் என்று வேறு பேச்சு இருக்கிறது. அப்போது மீதிப்பேரின் யோக்கியதை பீகாரில் என்னவாக இருக்கும்?
ஆனால் ஒன்று, இதற்கு ராஷ்டீரிடிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நிதிஷ்குமாரின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஒரு மாநிலத்தில் பிரச்சினை ஏற்படும்போது மற்ற மாநிலங்கள் உதவுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அந்த வகையில் குஜராத்தும் உதவி இருக்கிறது. அந்த பணத்தை திருப்பி அனுப்புவது குஜராத் மக்களை அவமதிப்பதாகும்.
நரேந்திரமோடி தனது சொந்த பணத்தில் இருந்து தரவில்லை. அது மக்களின் பணம். அதை திருப்பி அனுப்பியது மோசமான செயல்’’என்று தெரிவித்துள்ளார். லாலுவே பரவாயில்லை போலிருக்கே.
ஆ வூன்னாக்க மோடியை திட்டு என்பதை விட்டு அவர் மாதிரி திறமையான மாநில நிர்வாகத்தை அளிக்க யாருக்குமே நேரம் இல்லை என்பதுதான் விசனத்துக்குரியது.
நம் தமிழ் நாட்டில்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி மற்றும் ஜெ-கருணாநிதி மோதல்கள் தனிப்பட்ட தாக்குதல்களாகப் போய் தமிழ் நாட்டின் மானத்தை வாங்குகின்றனர் என்றால், தானும் அநாகரிகத்தில் குறைந்தவன் அல்ல என பீகார் முதல்வரும் களமிறங்கியிருப்பது வருந்தத்தக்கதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
11 hours ago
17 comments:
// //அரசியல் காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அதற்காக அரசியல் நாகரிகத்தை மறக்கலாமா என்பதுதான் எனது கேள்வி.
அதை விடுங்கள். வெள்ள நிவாரணத்துக்கு வரும் உதவியை இம்மாதிரி தனது கட்சியின் அல்ப நலன்களுக்காக ஒரு கட்சித் தலைவர் இம்மாதிரி திரும்ப அனுப்புவது எந்த வகையில் புத்திசாலித்தனம் என்பது தெரியவில்லை? மத்திய அரசுடன் சண்டை வந்தால் மத்திய உதவியையும் மறுப்பாரோ? // //
நியாயமாக பார்த்தால் "அரசியல் நாகரிகத்தை" மறந்தவர் நரேந்ர மோடி, ஆனால் நீங்கள் மோடியை குற்றம் சாட்டாமல் நிதீஷ்குமாரை திட்டுவது உங்கள் குணத்தை காட்டுகிறது.
'மத்திய அரசுடன் சண்டை வந்தால் மத்திய உதவியையும் மறுப்பாரோ?' என்று சொல்வது சரியான வாதம் அல்ல. ஏனெனில் மத்திய அரசின் பணம் என்பது பீகார் மக்களின் பணமும்தான். ஆனால், மோடி கொடுத்தது குஜராத் மக்களின் பணம்.
சரி விடுங்கள், மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
//நரேந்திர மோடி குஜராத் அரசு சார்பில் தந்த விளம்பரத்தில் அநாகரிகக் குறைவு எதையும் நான் பார்க்கவில்லை.//
நாகரிக குறைவா? அ நாகரிக குறைவா?
@அருள்
குஜராத் மற்றும் பீகார் மக்களும் இந்திய மக்களே.
நரேந்திர மோடி குஜராத் அரசு சார்பில் தந்த விளம்பரத்தில் நாகரிகக் குறைவு எதையும் நான் பார்க்கவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி பி.என்.எஸ், த்வற்றைச் சுட்டிக்காட்டியதற்கு
"கோஸி வெள்ளப்பெருக்கின்போது குஜராத் அரசு வெறும் ரூ.5 கோடி நிதியுதவியோடு நின்றுவிடவில்லை. வெள்ளம் பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் குஜராத் அரசு தனது அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணிக் குழுக்களை அனுப்பி வைத்தது. 36 டாக்டர்கள், 56 செவிலியர்கள், 80 தீயணைப்புப் படை வீரர்கள், 15 நவீன நடமாடும் மருத்துவமனைகள் ஆகியவற்றை அனுப்பி வைத்தது. இவர்கள் சில மாதங்கள் வெள்ளம் பாதித்த பகுதியில் தங்கி இருந்து சேவை செய்தார்கள். இந்த உதவிகளை எப்படித் திருப்பித் தருவார் நிதீஷ் குமார்? 80 ரயில்பெட்டிகளில் பாதிக்கப் பட்டோருக்கான நிவாரணப் பொருள்கள் சுமார் ரூ. 20 கோடி அளவுக்கு குஜராத் மாநிலத்திலிருந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. இதையெல்லாம் திருப்பித் தந்துவிட முடியுமா?"
இப்படி ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறது இன்றைய தினமணி நாளிதழின் தலையங்கம்
ஓட்டுப் பொறுக்குவதற்காக இங்கே அனேகமாக எல்லாத் தலைவர்களும் இந்த மாதிரித் தலைவர்களால் வழிநடத்தப் படும் கட்சிகளும் திடீர் உத்தமர்களாகிவிடுகிற விஷயம் ஒன்றும் புதிதல்லவே!
அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்!இப்படி சிலப்பதிகாரத்திலேயே சொல்லியிருப்பதாக செம்மொழி மாநாட௮உ நடத்திக் கட்டுரை, கவிதை வேண்டுமானால் வாசிக்கலாம்!
இங்கே பிரிடிஷ்காரர்களிடமிருந்து இரவல் வாங்கிய அரசியல், ஆட்சி முறையில், அரசியலும் பிழைக்கவில்லை! அறமும் பிழைக்கவில்லை!
The ads were not published by Gujarat govt, but by some textile businessman.
http://ibnlive.in.com/news/we-didnt-issue-ads-in-bihar-dailies-modi-govt/124037-37-64.html?from=rhs
இந்த விஷயத்தில் லாலுவின் செயலை அவ்வளவு எளிதில் பாராட்டக்கூடாது. அவர் நாகரீகமாக நடந்துள்ளார் என்று அர்த்தம் அல்ல.
அவர் மாநில அரசியலுக்கு தோதாகத் தான் அவர் இந்த விஷயத்தைப் பார்க்கமுடியும்.
நிதீஷ் இப்படி செய்யாதிருந்திருந்தால்
லாலுவின் பேச்சு வேறு விதமாக இருந்திருக்கும். மனதிற்குள் யோவ் நிதீஷ் ஏன்யா என் பொழப்பில் இப்படி மன்னைப் போடுகிறாய் என்று திட்டிக் கொண்டுதான் இருப்பார்.
மானத்தை விட்டா மார் வரைக்கும் சோறு என்ற பழமொழி கேள்விப்பட்டதில்லையா!. அரசியல்ல இதெல்லாம் ஜகசமப்பா
அரசியல் நாகரிகம் என்று ஒன்று இல்லை.
Politics is an art of possible.
The reason for returning the money is that Modi was trying to take undue advantage over the 5 crore relief. The pic was portraying Nitish Kumar playing into the hands of Modi.
This is the provocation. Not that Modi's money is stained; and that Muslims will not vote for Kumar.
Muslims will vote even if Modi has given the money. So the muslim not voting as a fear factor is an exaggeration.
The real factor is as I said in para one. Modi's treachery in 'using' Nitish Kumar to project his (Modi's) image.
மோடி கொடுத்ததனால் முசுலீம்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என்பது அதீதிய கற்பனை. முசுலீம்கள் மோடி கொடுத்த பணம் கறைபடிந்தது என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆபத்துக்கு ஆர் உதவினாலென்ன? நி.குமாரும் அப்படிப் பார்க்கவில்லை.
மோடி தனது பிம்பத்தை மக்களிடையே உயர்த்துவதற்கு இப்பணத்தையும், குமாரின் உருவத்தையும் பயன்படுத்தினார் என்ற நினைப்பே நி.குமாரின் இன்னடைத்தைக்கு காரணம்.
தன் வினைத் தன்னைச் சுடும்
வீட்டப்பம் ஓட்டைச் சுடும்.
பாஜ கட்சிக்குப் இப்போதுதான் அரசியல் நாகரீகம் எல்லாம் நினைவுக்கு வருகிறது போலிருக்கிறது.
1. நாடெல்லாம் செங்கல் பூஜை நடத்தி மதத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்திய போது அரசியல் நாகரீகம் எங்கே இருந்தது?
2. அயோத்தியில் 'அதே இடத்தில் கோவில் கட்டுவோம்' என்று ரத யாத்திரை நடத்தி நாடெங்கும் கலவரத் தீயை மூட்டிக் குளிர் காய்ந்த போது அரசியல் நாகரீகம் எங்கு இருந்தது?
3. அயோத்தியில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், கும்பலின் வெறியைத் தூண்டி விட்டு சர்ச்சைக்குட்பட்ட வரலாற்றுக் கட்டிடத்தை இடிக்க வைத்த போது அரசியல் நாகரீகம் எங்கு போனது?
4. குஜராத்தில் மதக் கலவரம் நடந்த போது (அல்லது நடத்திய போது) 'அரசியல் சட்டத்தின் கீழ் எல்லா மக்களின் உயிரையும், உடைமையையும் காப்பாற்றுவோம்' என்று பதவி ஏற்ற முதல்வர் அதை மறந்து உயிர்ப்பலிக்கு பார்வையாளராக இருந்தது என்ன அரசியல் நாகரீகத்தில் சேர்த்தி?
தமது வசதிக்கு ஏற்ப அரசியலை சீரழித்து விட்டு தேவைப்படும் போது மற்ற எல்லோரும் நாகரீகமாக இருக்க வேண்டும் என்று புலம்புவது வேடிக்கையாக இருக்கிறது.
இன்னும் ஆண்டாண்டு காலம் தவம் இருந்து தம்மை தூய்மைப் படுத்திக் கொண்டாலும், அரசியலில் அவர்கள் மீது படிந்திருக்கும் களங்கம் நீங்காது.
செய்தவர்கள் அனுபவிக்கிறார்கள், தமது வினையின் பலனை.
@ மா.சிவகுமார்!
முன் செய்த வினையை இப்போது பிஜேபி அனுபவிக்கிறது! சரி என்றே வைத்துக் கொள்வோம்!
பிரிடிஷ்காரர்களை விடப் பிரித்தாளும் கொள்கயை மிகவும் தந்திரமாகக் கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் கட்சி ஏன் முன்-பின் செய்த வினைகளை அனுபவிக்கவில்லை?
இவர்கள் செய்யும் வினைகளை எல்லாம் இந்த நாட்டின் ஜனங்கள் தான், போபால் மாதிரி, அடுத்து அணுஉலை விபத்து நஷ்ட ஈடு இப்படி வரிசையாக அனுபவிக்க வேண்டி இருக்கிறது? தெரியுமா? சொல்ல முடியுமா?
இங்கே கழகங்கள் செய்த, செய்து வரும் வினையை, மானாட மயிலாட மங்கையர்கள் மார்பாட நடத்தி வரும் நிகழ்ச்சிகள் மறைத்து விடுகிறதே! அப்போது அந்த முன்வினை, ஓட்டப்பம் எல்லாம் எங்கே போனது?
கொஞ்சம் சொல்லுங்களேன்!
Where you got all these negative matters Mr. Dondu??
Immm... This also go with More negative Comments ..
Tamilan
Qatar
// //கொஞ்சம் சொல்லுங்களேன்!// //
தீமையுடன் தான் வாழவேண்டும் என்பது தவிர்க்க முடியாது போய்விட்டால், குறைவான தீமையை தேர்ந்தெடுப்பதுதான் அறிவுடைய செயல்.
பா.ஜ.க'வுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் எந்த ஒரு மோசமான கட்சியும், ஒப்பீட்டளவில், குறைவான தீமையைத்தான் தரும்.
அதாவது 'ஆர்.எஸ்.எஸ் + கூட்டத்துடன்' ஒப்பிட்டால் மற்ற எல்லோரும் நல்லோரே.
// 'ஆர்.எஸ்.எஸ் + கூட்டத்துடன்' ஒப்பிட்டால் ஒப்பிட்டால் மற்ற எல்லோரும் நல்லோரே//
மரம் வெட்டி இயற்கையை நாசம் செய்வது, தலித் மக்கள் மீது வன்கொடுமை செய்வது, தன் குழந்தைகளை மட்டும் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைத்து விட்டு ஊரான் வீட்டுள் போய் தமிழ் வளர்ப்பது- இப்படி செய்யும் சாதி கட்சியுடன் ஒப்பிட்டால்?
//
அதாவது 'ஆர்.எஸ்.எஸ் + கூட்டத்துடன்' ஒப்பிட்டால் மற்ற எல்லோரும் நல்லோரே.
//
இப்படிப்பட்ட கூட்டம் இருக்கும் வரை, கம்மூனிஸ்டுகளைக் கம்பேர் செய்யும் போது எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்லும் கூட்டமும் தாராளமாக இருக்கலாம். தப்பேயில்லை.
மாவோ போன்ற கம்யூனிஸ்டு சூப்பர் ஸ்டார்களை ஆதரிக்கும் மா.சி பேசுவது கொஞ்சமும் நல்லா இல்லை.
பா.ஜ.க வுக்கு ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்றால், 30 வருசமா திருட்டுத்தனமா ஒரு வழமான மாநிலத்தை மிகவும் பின் தங்கிய மானிலமாக மாற்றிய "புதிய ஜனநாயக" வாதிகளுக்கெல்லாம் ஊழ் வினை உருத்து வந்தூட்டுமா? ஊட்டாதா ?
\\அதாவது 'ஆர்.எஸ்.எஸ் + கூட்டத்துடன்' ஒப்பிட்டால் மற்ற எல்லோரும் நல்லோரே.//
அருளு, நீங்க சொல்றது உண்மைன்னா ஏன் அந்த ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் மரம் வெட்டி பிச்சையெடுத்தார்? தேர்தலுக்குத் தேர்தல் கொரங்கு மாதிரி தாவுறவனெல்லாம் உங்க பார்வைல யோக்கியன். மத்தவனெல்லாம் அயோக்கியன். நானோ என் குடும்பத்தாரோ கட்சியில் பதவிக்கு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்று மரம் வெட்டி வீர வ்சனம் பேசியது நினைவிருக்கிறதா அருளு? உண்மையாகவே நீங்கள் சுரணையுள்ளவரென்றால் மரம்வெட்டி அன் கோவை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்க வேண்டாம், குறைந்த பட்சம் நாக்கைப் பிடுங்கும் அளவுக்காவது கேள்வி கேட்க வேண்டும். அதை விட்டு விட்டு டோண்டு சார் பதிவுல வந்து பார்ப்பான் அதைப் பண்ணினான், பார்ப்பான் என்னைப் படிக்க விடவில்லை என்று டுபுக்கு விடுவது ஏன்?
Yesterday TV channels portrayed the issue as:
Clash of Egos.
எம்ஜிஆரும் இந்த மாதிரி பல தடவை செய்திருக்கிறார். எவரும் தன்னை விட புகழ்பெற்று விடக்கூடாது என்பதில் குறியாயிருந்தார்.
நித்திஸ்குமாரின் செயல் சரியே. எங்கோரு மானிலத்து அரசியல்வாதி, தன்னை விட புகழ் பெற குறுக்குவேலை செய்வதா?
இங்கு மட்டுமல்ல வேறெந்த மானிதல்த்திலும் போய் அங்கு தன் புகழ் பரப்பினால், அவர்களும் இப்படித்தான் செய்வார்கள்
jarf
Post a Comment