எபிசோடு - 99 (09.06.2010) சுட்டி - 2
உமாவின் மாமியார் ரமேஷ் நாதனை சந்திக்கும் விஷயத்தை அவளுடன் விவாதிக்கிறாள். நாதன் உதவி செய்வாரா என அவள் மனம் மயங்க, கண்டிப்பாக செய்வார் என உமா உறுதியாகக் கூறுகிறாள்.
நாதன் அலுவலகத்தில் ரமேஷ். உமாவையும் குழந்தையையும் தான் பிரிய நேர்ந்தது விதியே என அவன் கூற, விதிதான் அவனை உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கச் சொன்னதா என நாதன் கேள்வி கேட்கிறார். பிறகு சாந்தமடைந்து அவன் எங்கும் வேலைக்கு போக முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறார். கெட்டவன் என முத்திரை குத்தப்பட்ட அவனைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை கடினமே என நாதன் மேலும் கூறுகிறார்.
இது பற்றி நண்பர் சோவிடம் கேட்க அவர் யதார்த்த உலகில் அதுவே நிலை எனக்கூறுகிறார். மாரீசனின் கதைஅயையும் கூறுகிறார். மனந்திருந்தி வாழும் மாரீசனை ராவணன் கட்டாயப்படுத்தி மாயமானாக வரச்செய்து சீதையைக் கவருகிறான். இருப்பினும் மாரீசனுக்குத்தான் கெட்டப் பெயர் என சோ கூறுகிறார்.
சாம்பு வேம்பு வீட்டில் அவர்களது மனைவியரிடையே மன வேறுபாடுகள் ஆரம்பமாகின்றன. கோலம் போடுவதில் சண்டை ஆரம்பிக்கிறது. பின்னால் வரப்போகும் சண்டைகள் குறித்தும் கோடி காட்டப்படுகிறது.
நாதனிடம் அசோக் நீலக்ண்டனுக்கு வாக்களித்தப்படி அவரது மாப்பிள்ளை ரமேஷுக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்துகிறான். நாதன் அதை மனமேயின்றி செய்ய முற்படுகிறார். அசோக்கினது உபதேசம் தன்னைப் போன்றவர்களுக்குத்தானா, நல்லத்தம்பி கூடத்தான் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்ட, அவரும் நல்லத்தம்பியும் ஒன்றல்லவே என அசோக் மிருதுவாகக் கூறுகிறான். அவனது ஹிதோபதேசம் தன்னைப் போன்றவர்களுக்குத்தானா என நாதன் கேட்க, அதென்ன ஹிதோபதேசம் என சோவின் நண்பர் கேட்கிறார்.
நல்ல உபதேசங்களே ஹிதோபதேசம் எனக்கூறும் சோ விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள் பற்றி விவரிக்கிறார். விசுவாசம், துரோகம் ஆகியவற்றை விளக்கும் கதைகளையும் சொல்கிறார்.
நீலக்ண்டன் தன் வீட்டுக்கு மகளையும் மாப்பிள்ளையையும் வரச்சொல்லி, நாதன் ரமேஷுக்கு ஒரு சிறுதொழில் செய்யத் தேவையான கடனுக்கான செக்கை தன்னிடம் கொடுத்ததை மாப்பிள்ளையிடம் தர, உமாவும் ரமேஷும் மனம் நெகிழ்கின்றனர். இப்போதெல்லாம் அசோக் கைகாட்டுபவர்களுக்கு நாதன் தயங்காமல் உதவி செய்வதாக நீலக்ண்டன் தான் கண்டறிந்த விஷயத்தைக் கூறுகிறார். மகளையும் மாப்பிள்ளையையும் கோவிலில் செக்கை வைத்து பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்.
(தேடுவோம்)
எபிசோடு - 100 (10.06.2010) சுட்டி - 2
நாதன் ஆஃபீசில் அசோக் எவ்வாறு வேலை செய்கிறான் என வசுமதி கேட்க, அங்கு வந்து அவன் எல்லோரையும் சிக்கனம் என்னும் பெயரில் படுத்துகிறான் என அவர் அலுத்துக் கொள்கிறார். இது பற்றி அசோக்கிடம் வசுமதி விசாரிக்க, அவனோ நாதனே திகிலடையும் வண்ணம் அவரது கம்பெனி செய்யும் பல தில்லுமுல்லு காரியங்களைப் பட்டியலிடுகிறான்.
கோவிலில் வைத்து சாம்பு ரமேஷ் மற்றும் உமாவுக்காக பூஜை செய்து ஆசிகள் வழங்குகிறார். தனது காரியங்களை ஈசனின் துணையுடன் செய்யுமாறு அவர் தன் பங்குக்கு அறிவுரை கூறுகிறார். ரமேஷும் ஒத்துக் கொள்கிறான்.
வேம்பு சோர்வாக படுத்திருக்க, சுப்புலட்சுமி அவரை விசாரிக்கிறாள். தான் ஒரு வீட்டுக்கு சென்று நவக்கிரக ஹோமம் செய்து வந்ததால் சம்பந்தப்பட்ட வீட்டினர் நன்மையடைந்தாலும் அதை செய்து வைக்கும் புரோகிதர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என்றும், அது தொழில்சார்ந்த உடல் உபாதை என்றும் கூறி விளக்குகிறார். மற்றவர்கள் எளிதாக நினைப்பதுபோல வெறுமனே மணியடித்து பிச்சை எடுப்பதுபோல உண்மையான பிராமணனது நிலை இல்லை. அவர்களுக்கான விதிமுறைகள் கடுமையானவை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அசோக்கும் உமாவும் கோவிலில் சந்திக்கின்றனர். ரமேஷ் பற்றி அசோக் விசாரிக்கிறான். உமா விடைபெற்று சென்றதும் நாரதர் தனது வழமையான சன்னியாசி வடிவில் அசோக்கை பார்க்க வருகிறார். அவனுக்கு இன்னும் பல சோதனைகள் வருமெனவும் ஆனால் சூறாவளியிலும் அசையாது நிற்கும் விளக்குச் சுடரையா நீர் என அவர் கூறுகிறார்.
அது எப்படி சார் சூறாவளியில் விளக்குச் சுடர் நிற்கும் அசையாமல் என நண்பர் கேட்க, இவ்வரிகள் பகவத் கீதையை ஒட்டி வருகின்றன எனவும் ஆனால் அதில் கூட சூறாவளி பிரஸ்தாபம் வரவில்லை என்றும், இங்கே சும்மா டிராமடிக்காக கூறுவதற்காகவே சேர்க்கப்பட்டது என சோ கூறுகிறார்.
அசோக்குக்கு சோதனை வரும் எனவும் ஆனால் அவனுக்கு ஈசன் அருள் உண்டெனவும் கூறிவிட்டு அப்பால் செல்கிறார். அசோக் திகைப்புடன் பார்க்கிறான்.
[என்னை மிகவும் உணர்ச்சிவசப்படச் செய்த காட்சி இது. அதை நான் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆகவே வேண்டுமெனவே தட்டையான வரிகளில் கூறி முடிக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்துக் கொள்ளட்டும். நான் கூறியவை வெறும் ஜூஜூபி என்பது தெரியவரும்].
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
11 hours ago
4 comments:
இந்த வாரம் முழுவதும் வேலை பளு
காரணமாக சீரியல் பார்க்க முடியவில்லை,தங்களின் உயரிய எழுத்தின் விளைவால் கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.சந்தோஷம்....சாந்தியும் சாமாதானமும் கிட்டட்டும்.மேலும் எப்படித்தான் வேலை மெனெக்கெட்டு
இந்த கதையை பார்த்து விட்டு எழுகிறீர்களோ!!!!!
சார், என்ன கொடுமை சார் இது, இவ்வளவு மெனக்கெட்டு எழுதுறதை படிச்சும் போட்டு என்னாத்துக்கு இப்படி எழுதி வைக்கிறீங்கோன்னு கேட்கிறாங்க பாருங்க ?
ஆமா, சூரியின் ஜெஸ்டஸ் என்னாச்சு , நான் ரொம்ப நாளா வெயிட் பண்றேன்.
வேலை பளு காரணமாக என்னால் பார்கமுடிவதில்லை.உங்கள் வலைபூ வழியாக தான் விபரம் தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி.
-ஸ்ரீராம்
இந்து மதம் ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம் என்று ஒரு தளத்தில் எழுதி உள்ளார்கள். அது சரியான கருத்தா?
Post a Comment