எபிசோடு - 95 (02.06.2010) சுட்டி - 2
காதம்பரியின் குத்தல் பேச்சு தொடர்கிறது. இது கற்பனை கதைதான் என்றாலும் சாம்பு படும் துயரம் கண்முன்னால் விஸ்வரூபம் எடுக்கிறது. வார்த்தைகளால் எப்படி கொல்ல முடியும் என்பதை காதம்பரி காட்டும் இடம் அந்த நடிகையின் திறமையையே காட்டுகிறது.
சாம்பு வேம்பு வீட்டில் காதம்பரி நடந்து கொண்டது பற்றி விவாதம் தொடர்கிறது. நாதன் வீட்டில் இருக்கும் ஆண்களின் பெருந்தன்மை அவர் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இல்லை என வேம்புவின் மனைவி சுப்புலட்சுமி அபிப்பிராயப்படுகிறாள். வீட்டுப் பத்திரத்தை திருப்பித் தரவேண்டியதுதான் என வேம்பு கூற அது நாதனை அவமானப்படுத்துவதாகாதா என சாம்பு குழம்புகிறார். வேம்புவின் சகோதரியோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் எனக்கூற, அவளை சாஸ்திரிகளின் மனைவிகள் அடக்கிவிடுகின்றனர். ரொம்பவும் யதார்த்தமாக அதே சமயம் இம்மாதிரி காட்சிகளில் வந்திருக்கக்கூடிய மெலோடிராமாக்கள் ஏதுமின்றி இரு வைதிகர் குடும்பங்களுக்கு நேர்ந்த அந்த அவமானம் விஸ்வரூபமெடுக்கிறது.
சாம்பு தன் மகள் ஆர்த்தியை கோவிலுக்கு வரவழைத்து அவளிடம் நடந்ததை கூறி அவள் கையில் அந்த வீட்டுப்பத்திரத்தை தந்து நாதனிடம் கொடுத்துவிட்டு வருமாறு கூறுகிறார். அதே கோவிலுக்கு வந்திருக்கும் வேம்புவிடம் ஆர்த்தி இது பற்றிக் கூற அவர் சாம்புவிடம் வந்து பத்திரத்தை தங்களிடம் தந்தது அசோக், ஆகவே தாம் இருவருமே அவனிடம் சென்று கூறுவதுதான் மரியாதை எனக்கூறுகிறார். சாம்பு இதன் நியாயத்தை ஒத்துக் கொண்டாலும் இந்த சங்கடமான நிலையில் விவேகமாக செயல்படும் திறமை ஆர்த்திக்கே உண்டு என்பதால் அவளே செல்லட்டும் என்கிறார். சரஸ்வதிகளையுடன் இருக்கும் அந்த உத்தமப் பெண் தனது தந்தைக்கு ஏற்பட்ட துயரத்தை உள்வாங்கிக் கொண்டு செல்லும் காட்சியும் அற்புதம்.
(வால்மீகி ராமயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் சீதையை தேடுவதில் தாமதம் செய்வதால் கோபமுற்ற ராமன் வாலியின் மேல் பாணம் செலுத்திய ராமனின் அம்புறாத்தூணியில் மேலும் பாணங்கள் உள்ளன என சுக்ரீவனுக்கு தெரியப்படுத்துமாறு லட்சுமணனை அனுப்ப அவனும் அண்ணனின் முழு கோபத்தையும் தன்னுள் வாங்கிக் கொண்டு செல்லும் காட்சிதான் எனக்கு இங்கே நினைவுக்கு வந்தது).
அசோக் கையில் பத்திரத்துடன் நிற்கிறான். தனது குரு சாம்பு சாஸ்திரிகளை அவமதித்த ஆர்த்தியிடம் அவள் ஏன் அப்படி செய்தாள் என கேட்க, வசுமதி வந்து தனது நாட்டுப்பெண்ணுக்கு பரிந்து பேசுகிறாள். அசோக் அவளை சில வார்த்தைகளில் அடக்கி, காதம்பரியிடம் அவளிடம் தன் மேல் இன்னும் ஏதேனும் மரியாதை பாக்கியிருந்தால் அவளே சாம்பு சாஸ்திரிகளிடம் அந்தப் பத்திரத்தை திருப்பித் தரவேண்டும் என கட்டளையிடுகிறான். அவளும் அதை எடுத்து கொண்டு செல்கிறாள், தன் அக்கா வீட்டிற்கு.
அவளது அக்காவோ அவள் அவசரப்பட்டு விட்டதாகவும் இதனால் அவளது மதிப்பு புக்ககத்தில் அதல பாதாளத்தில் விழுந்து விட்டது என்றும் எடுத்துரைக்கிறாள். அவளோ கேட்பதாக இல்லை.
சோவின் நண்பர் காதம்பரியின் இச்செய்கை பற்றி சோவிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் பத்ம புராணத்திலிருந்து ஒரு கதையை கூறுகிறார். கணவனை சிறிது மதிக்காது இருக்கும் பெண்ணொருத்தி அடுத்த பிறவியில் படும் கஷ்டங்கள் விவரிக்கப்படுகின்றன.
(தேடுவோம்)
எபிசோடு - 96 (03.06.2010) சுட்டி - 2
காதம்பரி பிடிவாதமாக அக்காவின் வீட்டிலேயே இருக்கப் போவதாகக் கூறுகிறாள். வீட்டுப் பத்திரத்தை சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் நேரில் போய் தரவும் மறுக்கிறாள். ஆகவே வேறு வழியின்றி அவளது அக்காவே அதை எடுத்துக் கொண்டு சாம்பு சாஸ்திரிகளின் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு சாம்புவோ வேம்புவோ இல்லாததால் செல்லம்மாவும் சுப்புலட்சுமியும் அதை வாங்கிக் கொள்ள தயங்குகின்றனர். பிறகு வேம்புவின் செல்பேசிக்கு ஃபோன் செய்து அவரிடம் தகவல் தரப்பட, அவர் சாம்புவிடம் கலந்து பேசி பத்திரத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொல்ல, அவர்களும் அதை ஏற்கின்றனர்.
இதற்குள் அசோக்குடன் காதம்பரியின் அக்கா சாம்பு வீட்டிலிலிருந்தே பேசி அவனிடம் விஷயத்தைக் கூறுகிறாள். சாம்பு வீட்டுக்கு காதம்பரியை நேரிலேயே போகுமாறு தன் கூறியிருக்க அவளோ அக்கா மூலமாக அதை கொடுத்து விட்டது அவன் மனதை உறுத்துகிறது. காதம்பரியை அவள் அக்கா வீட்டுக்கே சென்று சந்திக்கிறான். அவளை வீட்டுக்கு வருமாறு அழைக்க அவள் தனக்கு நாதன் வீட்டில் அவமானம் ஏற்பட்டதாகக் கூறி வர மறுக்கிறாள்.
இப்போது ஃப்ளாஷ்பேக்.
காதம்பரியை தீவிரமாக கண்டிக்கிறார் நாதன். சாம்புவுக்கு தான் தந்த வீடு தன் சுயசம்பாத்தியத்தால் வந்ததெனவும் அதை யாருக்கு வேண்டுமானாலும் தரும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும், வேறு யாரும், வசுமதி உட்பட, அதில் தலையிட முடியாது எனவும் அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார். வசுமதி அவரை சமாதானப்படுத்தும் முகமாக. காதம்பரி அவரை தந்தையாக நினைத்ததாலேயே அத்தனை உரிமை எடுத்துக் கொண்டாள் எனக் கூற, நாதன் தானும் அவளை மகளாக நினைத்ததாலேயே இந்த புத்திமதி கூறுவதாக சொல்லிவிடுகிறார்.
ஃப்ளாஷ்பேக் முடிந்தது.
அவர் கூறியதில் தவறு என்ன என அசோக் கேட்கிறான். இப்போது காதம்பரி வேறு கோணத்திலிருந்து பேசுகிறாள். தான் தர்மபத்தினியாக இருக்க முழு முயற்சிகள் செய்வதாகவும் ஆனால் அசோக்கொ உண்மையான கிருஹஸ்தனாக செயல்படவில்லை எனவும், தனது சம்பாத்தியத்தில்தான் தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் எனக் கூற, அசோக் இதன் நியாயத்தன்மையை உணர்ந்து சிறிது நேரம் அமைதி காக்கிறான். பிறகு தானும் ஒரு நல்ல வேலை தேடிக்கொள்ளப் போவதாக அவன் கூறுகிறான்.
என்ன சார் அசோக் இப்படி சொல்லி விட்டான்? இது வர்ணரீதியான பிராமணனுக்கு விதிக்கப்பட்ட கிரஹஸ்தாஸ்ரமப்படி சரியா எனக் கேட்க, சோ நிதானமாக ஆனால் அழுத்தமாகக் கூறுகிறார் சரியில்லை என. பிறகு வர்ணரீதியான பிராமணனுக்கு விதிக்கப்பட்ட கடுமையான விதிகளை விவரிக்கிறார். ஆனால் அவை இக்காலத்தில் முழுமையாகக் கடைபிடிக்க முடியாதவை எனவும் அவர் கூறுகிறார். இப்போது அசோக் செய்வது வர்ணரீதியான வைசியன் செய்வது என்கிறார். ஆனாலும் தற்காலத்தின் நிதர்சனங்களால் அவனது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைகின்றன என்றும் கூறுகிறார். அவ்வப்போது சமரசங்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகின்றன, இம்முறையும் அப்படித்தான் என அவர் கூறுகிறார்.
அசோக் சொன்னதைக் கேட்டு காதம்பரி மனம் மகிழ்ந்து அவனுடன் தனது புக்காத்துக்கு கிளம்புகிறாள். அசோக் கேட்டுக் கொண்டபடி அடுத்த நாள் காலையே அவள் சாம்பு சாஸ்திரிகளிடம் ஃபோனில் பேசி மன்னிப்பு கேட்கிறாள். சாம்பு வீட்டில் காதம்பரியின் மனமாற்றம் பற்றி பேசுகிறார்கள். அசோக் வேலைக்குப் போகப்போவது பற்றியும் பேசுகிறார்கள்.
அசோக்காக உருமாறி வந்திருக்கும் வசிஷ்டர் எவ்வாறு மேலே செயல்படப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
11 hours ago
9 comments:
சமீபத்தில் (2 வாரங்கள்!) சில முதியோர் இல்லங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு உள்ளவர்களில் பெரும்பான்மையோர், பூனூல் அணிந்திருந்தனர். அங்கே பிராமணன்? உங்கவாளுக்கு, "முதியவர்கள்" தான் பிடிக்காது, "முதியாவாளை"யுமா பிடிக்காது? பெத்தவாளை நன்னா பார்த்துக்க வேண்டியது மனுசாலோட கடமைனு, உங்கவா படிச்ச வேதங்களில் சொல்லவில்லையா?
-கிருஷ்ணமூர்த்தி
எல்லாம் சரிதான்! வர்ணாச்ரம க்ருஹஸ்தனாக இருக்கப் போவதாக சொன்னான்! ஆனால் மூணு வேளையும் சந்தி பண்ணுவதாக சொல்றான்! ஆனா ஒரு வேளையாவது அக்னி கார்யம்( ஔபாசனம்) பண்ணவே இல்லை! அது முக்கியமானது! அப்பறம் வேதம் தினமும் சொல்லணும்! வர்ணாச்ரம க்ருஹஸ்தன் கோவில் குளம் அலைய வேண்டியது இல்லை! காலத்துக்கும் கடை பிடிக்க முடிஞ்சதாவது செய்யலாம்! வைதீகம் பண்ணலாம்!வேதம் படிக்கணும், வேதம் சொல்லித்தரணும், யாகம் பண்ணனும், யாகம் பண்ணி வைக்கணும், தானம் குடுக்கணும், தானம் வாங்கிக்கணும்! இதில் ஒன்று கூட பண்ற மாதிரி தெரியலை! வேதம் தினமும் சொல்லணும்!
இப்போ பார்த்தா வேலைக்கு போறேன்னு சொல்றான்!
இன்றைக்கு முடிஞ்ச அளவுக்கு நடந்துக்கற ஒருத்தர் அளவு கூட அசோக் செய்யலையே!
என்ன பண்றது! தானம் கூட அவ அப்பா சொத்து, அவர் பண்ணின மாதிரி தானே!
@அனானி கிருஷ்ணமூர்த்தி
முதியோ இல்லங்களிலே ஏதாவது சென்சஸ் எடுத்தீர்களா? எங்களை பத்தி கவலைப்படறதை விட்டு விட்டு உங்காத்து பெரியவாளை நல்லபடியா காப்பாத்துங்கோ.
டோண்டு ராகவன்
அவனோட அப்பா சொத்துதான். தானம் வாங்கறான், அதையே தானமா பண்ணறான்.
அவனது முயற்சிகளில் பின்னடைவுகள் இருந்தாலும் அவனோட நோக்கங்களில் பழுதில்லை. எப்படி எல்லாவற்றையும் சமாளிக்கப் போறாங்கறதுதான் கதை. பொறுமையாக பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பொதுவான பார்வையில் காதம்பரியின்
இமேஜ் கூடியிருக்கிறது. அவள் நேரம்
பார்த்து விட்ட அம்பில் சரியாக அசோக்(உங்கள் வஷிஷ்டர்)கிளிய்ன் போல்ட்.இனிவரும் காலங்களிலும் ‘வர்ணரீதியான பிராமனன்...நல்ல க்ருஹஸ்தன் என்ற நிலை கிடைக்குமா யோசிக்க வேண்டிய விசயம்.கதையின் பிரம்மா His all attempt is failed என்கிறார்.நீங்களோ வசிஷ்டரே வெற்றி பெறவில்லையென்றால் வேறு யார் பெற முடியும் என்கிறீர்கள்...?
சென்னை பதிவர் சந்திப்பு –தொகுப்பு,புகைப்படங்கள்
http://kaveriganesh.blogspot.com/
@அரைஸ்
வெற்றி தோல்வி என்பது இறுதியில் பர்க்கப்பட வேண்டியது. என்னதான் இருந்தாலும் காதம்பரிதான் அசோக்குக்கு ஏற்ற தர்மபத்தினி என நாரதராலேயே அடையாலம் காட்டப்பட்டவள். அசோக்கின் முன்னேற்றம் அவளைப் போன்று நம்பிக்கையற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மூலமும் ஏற்படும்.
நம்மால் எப்படி போகும் கதை என ஊகிக்க முடியாத இந்த நிலை மெகா சீரியல்களிலேயே இதற்கு தனியிடம் தந்துள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஏலேய் தினவு,
எனக்கு பதில் போட்ட அப்புறம் டகிள் பிகிள் ஊதிரும் ஆமா... சொல்லிட்டேன்
//அளவுக்கு மேல் பணம் நிம்மதியை அழிக்க மட்டுமே.//
என்னத்தை பொறுமையா பார்க்கிறது அந்தப் புள்ல படற கஷ்டத்தையெல்லாம் பார்த்தா அப்டியே அழுகாச்சி அழுகாச்சியா வந்திடுது எப்படி தான் சமாளிக்குமோ ?
அதுக்குள்ள நமக்கு மூச்சுமுட்டிறது.
Post a Comment