எனது இப்பதிவை போட்டபோது இருந்த எனதுதயக்கங்களே வேறு. ஆனால் நிஜமாகவே நடந்தது முற்றிலுமே எதிர்பார்க்காததே. நான் முதலில் ஏன் தயங்கினேன் என்றால், சொன்ன தேதிக்கு நேர்காணல் ஒளிபரப்பப்படுமா என்பதே. மேலும் இது மூன்றாவது நேர்காணலாக வேறு அமைந்து விட்டதா, ஆகவே இது கொஞ்சம் ஓவரோ என்ற எண்ணம் வேறு சேர்ந்து கொண்டது. இருந்தாலும் நடப்பது நடக்கட்டும் என பதிவை போட்டேன். பதிவரல்லாத நண்பர்கள் யாருக்குமே ஃபோன் போட்டு சொல்வதாக இல்லை. இருந்தாலும் நேற்று இரவு அதையும் செய்து வைத்தேன்.
ஆனால் நடந்ததென்னவோ சிறிதும் எதிர்பாராதது. விளக்குகிறேன்.
இன்று காலை செய்த்களின் போதே டிவியை ஆன் செய்து விட்டோம். அது முடிந்ததும் காலை மலர் என அதற்கான இசையுடன் வந்தது. ஆகா என நிமிர்ந்து உட்கார்ந்தால், ஆரோக்கிய சமையல் பற்றி ஒரு பெண்மணி விஸ்தாரமாக பேசினார், எருமை மாடுகள் ஏன் சேற்றில் மூழ்கிய வண்ணம் காணப்படுகின்றன என்று இன்னொருவர் பேசினார். ராசி பலன்களும் வந்தன. அதற்குள் நண்பர்களிடமிருந்து ஃபோன் கால்கள் வர ஆரம்பித்தன. எருமை மாடுகளின் நிழற்படத்தில் நான் எங்கே இருக்கிறேன் என எனது பாபிஷ்ட நணபன் ஒருவன் நக்கலாகக் கேட்டான்.
நானே பொறுக்க முடியாமல் தயாரிப்பாளருக்கு ஃபோன் போட அவர்தான் காலை மலரின் கான்சப்டின் மாற்றம் பற்றி விளக்கினார். காலை 08.10-க்கு மேல்தான் எனது பேட்டி வரும் எனக் கூறினார். பிறகுதான் மனம் அமைதியாயிற்று. தவறு என் மேல்தான். கான்சப்ட் மாறியிருக்கும் என தோன்றவேயில்லை என்பதுதான் நிஜம்.
பேட்டியும் ஆரம்பமாயிற்று. எனது பெயரை டோண்டு ராகவன் எனக்குறிப்பிடுமாறு கூறியிருந்தேன். டோண்டு என்னும் பெயர் ஏன் என்பதுடன் கேள்விகள் தொடங்கின. மிக கவனத்துடன் முந்தைய இரு நேர்காணல்களில் கூறப்பட்டவற்றைத் தவிர்க்க எண்ணினாலும் சில விஷயங்கள் ரிபீட் ஆவதைத் தடுக்கவியலவில்லை. முக்கியமாக “எந்தக்கடையில் அவள் பூ வாங்கினாளோ” எனத் தொடங்கும் வாக்கியத்துக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றிப் பேசும்போது உள்ளுக்குள் இருந்து வந்த அழுகையை அடக்க போனமுறை போலவே இப்போதும் சிரமப்பட்டேன்.
ஆனால் திருக்குறள் பற்றி நான் கூறியது முழுக்கவே வந்ததில் எனக்கு திருப்தியே. வாடிக்கையாளாரை அணுகும் முறைகள் பற்றி நான் இட்ட சில பதிவுகளிலிருந்து பல விஷயங்கலைக் கூறினேன். பெண்கள் இத்துறையில் ஆற்றும் பங்கு பற்றியும் கேட்டார்கள். சொலவடைகளை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளையும் குறிப்பிட்டேன். அரை மணி நேர நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்த ஷூட்டிங்கிலிருந்து மிக சிறப்பாகவே நிகழ்ச்சிகளை தொகுத்திருப்பதும் பாராட்டுக்குரியதே. நிகழ்ச்சி முடிவடைந்ததும் அதன் தயாரிப்பாளருக்கு போன் போட்டு நன்றி கூறினேன்.
எனது மச்சினி ரிகார்ட் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறாள். சிடி கைக்கு வந்ததும் யூ டியூப்பில் ஏற்றுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நமது தேவைகள், நமது பாவனைகள்
-
அன்புள்ள ஜெ, இதை எழுதும்போதே பெரும் சோர்வொன்று வந்து ஆட்கொண்டுவிடுகிறது.
வாழ்வின் எல்லா பக்கங்களும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. இலட்சியக் கனவுகளோடு
பேரிய...
12 hours ago
19 comments:
thnaks for sharing,. Please post the videos in utube and here soon , wishes
வழக்கமாக காலையில் தொலைகாட்சி பார்ப்பதில்லை. நீங்கள் 7 . 30 என சொன்னதால், ஏழு மணியில் இருந்தே பார்த்தேன். செய்தி, சமையல் நிகழ்சி, எருமை பற்றிய ஒரு விளக்கம் என பல அணிவகுத்த்தல், உங்கள் நிகழ்ச்சி, தள்ளி வைக்க பாடு விட்டது என நினைத்து, எட்டு மணிக்கெல்லாம் ஆப் செய்து விட்டேன்..
என்னதான் நீங்கள் பதிவில் அடஹி மறு ஒழி பரப்பு செய்தாலும், தொலை காட்சியில் பார்ப்பது போல இருக்காது...
சரியான நேரம் சொல்லாத உங்களுக்கு கண்டனங்கள்,
@பார்வையாளன்
நானே ஏமாந்துவிட்டேனே. எனது தரப்பிலிருந்து தவறான அனுமானம், வருந்துகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் ஈழத்தமிழருக்காக இறங்கி பேசியது வியப்பாக இருந்தது. மொழிபெயர்ப்புக்காக எவராக இருந்தாலும் காசுவாங்குவதில் கருணைக் காட்டமாட்டேன் என்று உங்கள் வலைப்பூவில் வசனம் பேசிவிட்டு, அந்த ஈழத்தமிழரிடம் காசுவாங்க மறுத்தது வியப்புதான்.
உங்களது நிகழ்ச்சியை எதிர்பார்க்கும்போது, பசுமாட்டை பாராட்டி குறுக்கே ஒரு நிகழ்ச்சி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு பார்த்து எருமை மாட்டை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள் (இது யாருடைய சதியோ). எருமை மாடுதான் உங்களில் யாருக்கும் பிடிக்காதே!
@Arul
Please see: http://dondu.blogspot.com/2007/09/blog-post_03.html
Regards,
Dondu N. Raghavan
'ஜெயா டிவி புகழ்' டோண்டு சார் ;),
எனக்கு நீங்கள் போட்ட பதிவை பற்றியெல்லாம் தெரியாது. இன்று காலை எதேச்சையாக சேனல் மாற்றும் பொழுது, என்னடா இது டோண்டு போல் இருக்கே என்று ஒரு கனம் பார்த்தால், கேட்பவரும் உங்கள் 'டோண்டு' பெயர் காரணம் கேட்டார்கள்.
பேட்டி நன்றாகவே இருந்தது.
இடையில் நீங்கள் கூறிய “எந்தக்கடையில் அவள் பூ வாங்கினாளோ”வை தேடி படித்தேன். அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி, அதை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது.
வாழ்த்துக்கள் சார்.
I happened to see ur program for 10 mts before starting to work.your explanation on 'how technology has changed the translation job as paperless' was really good.ur comments on ladies participation in that field also gud......
@பார்வையாளன்
நானே ஏமாந்துவிட்டேனே. எனது தரப்பிலிருந்து தவறான அனுமானம், வருந்துகிறேன்."
பரவா இல்லை சார்... சீக்கிரம், அதை பதிவேற்றம் செய்யுங்கள்...
அன்பு வாழ்த்துக்கள் தோழர் !
விரைவில் பதிவேற்றுங்கள் !
// எனது மச்சினி ரிகார்ட் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறாள் //
முன்பொரு நாள் தங்கள் தளத்தில் ஒரு பாட்டு கேட்டது ஞாபகமிருக்கிறது (சும்மா நகுதல்பொருட்டு) ....
ஒரு சமயம்.. பத்தாம் கிளாசுல நல்ல மார்க்கு எடுக்கலன்னு சொன்னீங்கனு நினைக்கிறேன்.. பிறகு, எப்படி, பொறியில படித்து முடித்தீர்கள்..? பெட்டி, நன்றாக இருந்தது..
மறு ஓளிபரப்பு உண்டா சார் ?
நான் பாதி தான் பார்த்தேன், வீடியோ ஏத்துங்க, அப்ப தான் முழுசா கலாய்க்க வசதியா இருக்கும்!
கொஞ்சம் தாமதமாக எழுந்ததால் இந்த நேரமாற்றம் வசதியாகவே இருந்தது.(காழீயூரார் வந்த போதுதான் எழுந்தேன் :-) ) முழு நேர்காணலையும் காண முடிந்தது. மொழிபெயர்ப்புகள் குறித்து உங்கள் பதிவுகளை வாசித்திருந்ததால் ஏற்கனவே தெரிந்தவிசயங்களாகவே இருந்தது. புதுதாக பகிர்ந்தது மொழிபெயர்ப்பு துறையில் பெண்களின் குறைவான பங்களிப்பு பற்றி குறிப்பிட்டது.உங்களின் நண்பரின் நாவலை மொழிபெயர்ப்பது குறித்து சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன், அந்த செய்தி விடுபட்டிருந்தது. நிறைய நேரம் நீங்கள் பேசி முடிக்கும் முன்பே அவர்கள் அடுத்த கேள்வியை கேட்க முனைந்தாலும் முழுபதிலையும் சொல்லியபின்பே அடுத்த கேள்விகளுக்கு போனதில் ''டோண்டு''வை காண முடிந்தது :-)
அன்பின் டோண்டு ராகவன்,
நீங்கள் கேள்வி - பதில் பகுதியை நிறுத்தி விட்டதாக அறிந்தேன். அதற்கான காரணமாக நான் கருதுவது பல மொக்கையான, உப்பு சப்பில்லாத கேள்விகளால் உங்களுக்கு போரடித்துவிட்டது எனக்கருதுகிறேன். தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விறுவிறுப்பான நிகழ்வு பற்றி கேள்வி...
என்னை பழிவாங்குகிறது அரசு,ஊழல்வாதிகளை காக்க முயலுகிறது-ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் வழக்கு
இது பற்றி நான் அங்கே தெரிவித்த கருத்தானது,
திரு. உமாசங்கர் அவர்களை 14 Feb 1999 லிருந்து அறிவேன். தனது கடமையை காதலுடன் செய்யும் ஒரு சில அதிகாரிகளில் இவரும் ஒருவர். அரசாங்க அலுவலகங்களில் உள்ள Red Tapism = சிவப்பு நாடாத்தனத்தை குறைக்க கணனிகளை பயன்படுத்தி பெருமுயற்சி எடுத்தவர். அடிக்கடி கூறும் வார்த்தை "We are dealing in Tax payer's Money", இவருக்கே இந்த நிலை என்னும் போது மலைப்பாக உள்ளது. நம்ம திருக்குவளையார் வர வர மகாபாரத திருதரஷ்டிரனைப் போல மாறிக்கொண்டு வருகிறார். கூட இருக்கும் விதுரர்களை வேறு விரட்டுகிறார்கள்.
உண்மையில் நடப்பவைகளை கூர்ந்து கவனிக்கும் போது கலைஞர் தனது அந்திமக்காலத்தில் திருதரஷ்டிரனைப்போல் முடிவு எடுக்கிறாரோ என நினைக்க தோன்றுகிறது. பிள்ளைகளின் மீதுள்ள பாசத்தினால் திருதரஷ்டிரன் இப்படித்தான் குருட்டாம் போக்கில் செயல்பட்டு அநீதிக்கு ஆதரவளித்து இறுதியில் தனது பெருங்குடும்பத்திலிருந்த 100 பிள்ளைகளையும், அவர்களது பெரும் வலிமைமிக்க படைகளையும், அவர்களை எதிர்த்து போரிட்ட வெறும் 5 பேரிடம் போரில் இழந்து தவித்தான்.
தவிர அரசியல்வாதிகளை விட அரசாங்க அதிகாரிகள் விவரமானவர்கள். அதிலும் இவரைப்போன்ற IAS அதிகாரிகளைப் பகைத்துக்கொள்வது அரசுக்கு நல்லதல்ல என நினைக்கிறேன். இவரிடம் பழகிய வரையில் அறிந்த ஒன்று, அனைத்து விவரங்களையும் ஆவணப்படுத்தி பத்திரமாக வைத்திருப்பார். ஆதலால் கண்டிப்பாக இவரே வழக்கில் வெற்றி பெறுவார் என்கிறேன். உங்களின் கருத்தென்ன ?
with care & love,
Muhammad Ismail .H, PHD.,
Sir,
Can you share the links of the older ones too...
Krishna
காலை ஏழேகால் மணியிலிருந்து, ஒன்பது மணி வரை இன்று ஜெயா டி வி தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. உங்கள் பேட்டி நிகழ்ச்சி நன்றாக இருந்தது. (இதற்கு முன் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நான் பார்க்கவில்லை.)
நீங்கள் பேசும்பொழுது கொஞ்சம் வேகமாக (விரைவாக) பேசியதுபோல எனக்குத் தோன்றிற்று. மீண்டும் ஒருமுறை நிதானமாகக் கேட்பதற்காக, ஆடியோ ரிகார்டிங் பண்ணி வைத்துள்ளேன்.
ama, ivaru periya governaru.. ivaru pettiya pakkanum endruthaan ellam thudikkiranga!! poyya..
komanan
டோண்டு சார்! உங்கள் பேட்டியை கடைசி 10 நிமிடங்கள் மட்டும் பார்த்தேன். கேள்வி கேட்டு முடிக்கப்படும் முன்னரே, தடாலடியாக பதில் கொடுத்துகொண்டிருந்தீர்கள். என்ன அவசரமோ? அதே போல், நீங்கள் ரொம்ப வேகமாக பேசுகிறீர்கள். நிறுத்தி நிதானமாக சொல்லியிருக்கலாமே? அல்லது இயற்கையாகவே நீங்கள் இப்படித்தானா? மற்றபடி மொழிபெயர்ப்பு குறித்த உங்கள் குறிப்புகள், ஆலோசனைகள் நன்றாக இருந்தன. உங்கள் பெயர் போடும்போது மொழிபெயர்ப்பாளர் என்று காட்டினார்கள். “எழுத்தாளர்” என்றும் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
In our area there is current cut from 6 am to 9 am. So, i am waiting for the u tube video. thanks
sundararajan
Post a Comment