7/02/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 111 & 112 - இறுதி எபிசோடு))

எபிசோடு - 111 (30.06.2010) சுட்டி - 2
நாதனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். நாதன் அசோக்குக்கு நேர்ந்த கஷ்டங்களை நினைத்து உருகுகிறார். காதம்பரி வந்து பார்க்கிறாள்.

வையாபுரியிடம் பணம் கொடுத்து ஏமாந்த அந்த தொழிலதிபர் சிங்காரத்தை கூப்பிட்டனுப்புகிறார். தன்னிடம் அடியாளாக சேரும்படி கேட்கிறார். சிங்காரம் மறுத்து விடுகிறான். அவன் ஏற்கனவே அடியாளாக இருந்தவன்தானே, அதுவும் இறந்துபோன நல்லத்தம்பியின் சகோதரன் வையாபுரியிடம்தானே என கேட்க, சிங்காரம் வையாபுரியும் நல்லத்தம்பியும் ஒரே ஆள் எனக் கூறிவிடுகிறான். திடுக்கிட்ட அந்தத் தொழிலதிபர் அப்போது தான் கொன்றது வையாபுரியையா என திகைப்புடன் கேட்க, சிங்காரம் இப்போது திடுக்கிடுகிறான்.

இது பற்றி அறிந்த நாதன் வக்கீலிடம் உடனே அந்த தொழிலதிபரை அரெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். இதிலெல்லாம் அவசரப்படக்கூடாது என வக்கீல் அறிவுரை கூறுகிறார்.

கொலை செய்தவன் யாரெனத் தெரிந்தும் ஏன் இன்னும் தாமதம் என நண்பர் கேட்க, சோ அவசரப்பட்டால் காரியம் நடக்காது. இதில் சாதுர்யமாக நடந்து குற்றவாளியை பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 112 (01.07.2010) (இறுதி எபிசோடு) சுட்டி - 2

சிறைச்சாலையில் பார்வையாளர்கள் பகுதி. அசோக்கைப் பார்க்க அந்த சன்னியாசி வருகிறார். அசோக் அவரை வணங்கி தனக்கு ஏற்பட்ட சோதனைகளை கூறுகிறான். எல்லாமே பரமன் செயல் எனக்கூறி, அவர் அசோக்குக்கு கையாலயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துக் கூறி அவன் வசிஷ்டர் எனவும் கூறுகிறர். பிறகு அவர் நாரதராக சுயவுருவம் பெற, அசோக் வசிஷ்டரின் ரூபத்தைப் பெறுகிறான்.

எங்கே பிராமணன் என்பதை அவர் தேடியதன் பலனை கூறுமாறு நாரதர் வசிஷ்டரிடம் கேட்க, அவரோ கலியுகத்தில் முழுமையான வர்ணரீதியான பிராமணனாக வாழ்தல் துர்லபமே எனக்கூறிவிடுகிறார். பிறகு அங்கிருந்து இருவருமே மறைகின்றனர். உள்ளே வரும் காவலாளி அவர்கள் எங்கே என பிரமிக்கிறான்.

அசோக் நல்லவன், நேர்மையாளன் ஆனால் அவனை பைத்தியம் எனக்கூற வைத்தீர்களே எல்லோரையும், இப்போது திருப்திதானா என சோவின் நண்பர் கேட்க, அப்படித்தால் லோகம் நினைக்கிறது. இன்றையச் சூழ்நிலையில் வர்ண ரீதியான பிராமணன் என ஒருவன் வாழ முற்பட்டால் அவன் பைத்தியக்காரனாகத்தான் பார்க்கப்படுவான். ஏன் நேர்மையாக இருப்பவனுக்கும் அதே கதிதான் என சோ கூறுகிறார்.

வர்ணங்கள் என்பவை சாதிகள் அல்ல. நால்வகை குணநலன்களையே அவை குறிக்கின்றன. ஒன்றுக்கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை எனக் கூறும் சோ அவற்றுக்கான சான்றுகளை பல இடங்களிலிருந்தும் சுலோகமாகவும் மேற்கோள்களாகவும் காட்டுகிறார். இவை எல்லாம் ஒன்றும் தான் கண்டுபிடித்தவையல்ல், சொன்ன விவரங்கள் எல்லாமே பல இடங்களில் தேடிப்படித்து, விஷயம் அறிந்தவர்களிடம் கேட்டு தான் உணர்ந்தவை மட்டுமே என்றும் இதில் தனக்கு வேறு கிரெடிட் எதுவும் இல்லை எனவும் அவர் கூறி, இந்த சீரியல் வெற்றிகரமாக எடுக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் (ஜெயா டிவி, வெங்கட், தயாரிப்பாளர் சுந்தரம் ஆகியோர்) நன்றி கூறுகிறார்.

எங்கே பிராமணன் முதல் பகுதியில் கடைசி எபிசோட் என்பதை நான் முதலிலிருந்தே கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை நான் அவ்வாறு காண இயலவில்லை. ஆகவே இந்த சீரியல் இம்மாதிரி முடிந்தது என்னையும் ஆச்சரியத்திலும் ஏமார்றத்திலும் ஆழ்த்தி விட்டது. காரணம் கதையில் இன்னும் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?

அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.

நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.

அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்.

எது எப்படியோ நான் இம்மாதிரி சோ அவர்களை இம்மாதிரி முழுமையாகக் கண்டித்து இப்பதிவை போடுவேன் எனக்கனவிலும் நினைக்கவில்லை.

பொறுமையாக எனது எங்கே பிராமணன் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் படித்த எல்லோருக்கும் என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

Madhavan Srinivasagopalan said...

nice thoughts..

Anonymous said...

முடிஞ்சு போச்சா...!
அது சரி, ஒரிஜினல் கதையிலும் இப்படித்தான் முடிவா டோண்டு சார்?

dondu(#11168674346665545885) said...

//ஒரிஜினல் கதையிலும் இப்படித்தான் முடிவா டோண்டு சார்?//
ஒரிஜினல் கதை பகுதி 1 மட்டுமே. இரண்டாம் பதிவு புதிதாக எழுதியதே. ஆகவே நானும் ஏமாந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

I am shocked too.May be he was pressurised to complete the serial.?Who knows what will happen in Hamara Tamilnadu?
Its like starting Ramayan Parayanam and stopping with Aranya Kandam!
Some are hoping for a part 3 but I dont think so its possible.
It seems stopped midway .

Karthik. S.

Anonymous said...

Dear Dondu

We got Jaya TV in USA just few months before they started telecasting the second part (of Enge Brahmanan). We missed part 1. I used to read your coverage once in a while. As usual you have done a very good job.

I am also deeply disappointed with they way the story ends ! Hope they will start part-3 with Vashistar (Ashok) returns and lives the rest of his life with Kadambari, fulfills the duty as a son and husband.

Afzar has done a great job. He is a fantastic selection and he has justified his role 200%. All other actors (Delhi Kumar, Nalini, Sridhar, Kambar Jayaraman et al) has fit in their roles like a glove.

-Venkat

Kasaly said...

உன்மையான பிராமனியத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவியது.சில நேரம் தொடர் பார்க்க முடியாமல் போனாலும் உங்கள் பிளாக் முலமாக
வாசிக்க முடிந்தது கூடுதல் சிறப்பு.பின்னூட்டம் என்ற முறையில் சில நிறை குறைகளை உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன்.இன்னும் கொஞ்சம் நீட்டி தொடரின் ஓட்டத்தை மாற்றி எல்லோரும் திருப்தி படும் வகையில் முடித்திருக்கலாம்.‘எது நடந்ததோ அது நன்றாக நடந்தது’....கதையின் போக்கை நான் ஒரு வகையில் யூகித்திருந்தேன், கதையில் ஒன்றிபோய் சிரத்தை எடுத்து எழுதி பதிவிட்ட நீங்கள் வேறு வகையில் நினைத்திருக்கலாம் முடிவில் இருசாரருக்கும் மிகுந்த ஏமாற்றம்?நான் ஒரு இஸ்லாமியன் எனக்கே இவ்வளவு ஆர்வம் இருந்தது இந்த சீரியலில்....!!!

Anonymous said...

Dondu Sir,

Where can we get to watch Enge Brahmanan part 1? Do you have your updates in the archives?

As everyone has shared, the serial has been stopped abruptly. It is a disappointing message. Ashok should have been shown to successfully complete all the four ashrams. This way, he could be shown to carry out all his responsibilities.

It is not fair of Vasishtar to have taken up this experiment and abscond midway.

Cho and Venkat should make Parts 3 and 4 for grihasthashram and sanyasam and could show Ashok as an exemplary and inspiring human being.

Regards

hayyram said...

பிராமணர்கள் நடைமுறை வாழ்க்கையில் படும் கஷ்டங்களையும் தமிழகத்தில் பிராமணர்கள் தொடர்ந்து ஊடகங்களாலும் அரசியல் வாதிகளாலும் அவமதிக்கப்படுவதையும் பற்றியும், ஒதுக்கீட்டு அநியாயங்கள் பற்றியும் , பிராமணப் பெண்களுக்கெதிராக தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு ஜாதியினரால் நடத்தபடும் லவ் ஜிகாத் பற்றியும் கொஞ்சம் கூட அலசாமல் முடித்து விட்டார் சோ. ஸோ ஏமாற்றமே! இவற்றை அலசினால் பிரச்சனைகள் வருமென்று விட்டு விட்டார்களோ என்னமோ!

வஜ்ரா said...

//
தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு ஜாதியினரால் நடத்தபடும் லவ் ஜிகாத் பற்றியும் கொஞ்சம் கூட அலசாமல் முடித்து விட்டார் சோ. ஸோ ஏமாற்றமே!
//

இதெல்லாம் எனக்கே ஓவராப்படுது...கொஞ்சம் அடங்குங்க சார்.

வலைஞன் said...

Once again it is proven...

"சோ"வை நம்பினோர் கைவிட டபார் !

hayyram said...

//இதெல்லாம் எனக்கே ஓவராப்படுது...கொஞ்சம் அடங்குங்க சார்// "எனக்கே" என்றால் என்ன அர்த்தம், நீங்கள் பிராமணரா? அல்லது நீங்கள் நீதிமானா? தமிழ் சினிமாவில் பத்துக்கு எட்டு படம் பிராமணப் பெண்களை உருவகப்படுத்தியே ஹீரோயின் கதாபாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. காரணம் இதைப் பார்த்து ப்ராமணப் பெண்கள் வேறு ஜாதிஆண்களான தம்மிடம் விழுந்து விடவேண்டும் என்ற ஜொல்லு விடும் எண்ணம். அடைய முடியாத பெண்ணை நினைத்து சுய மைதுனம் செய்துகொள்ளுவது போன்ற ஒரு மனோநிலை தான் ப்ராமண அடையாளப் பெண்களையே ஹீரோயினாக சித்தரித்துப் படம் எடுப்பது. அப்படி படம் எடுக்கும் பெரும்பாலானவர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள். ஆனால் அதே போல் எத்தனை படம் ஒரு முஸ்லீம் அடையாளமுள்ள பெண்ணை ஹீரோயினாக வைத்து வந்திருக்கிறது என்று எண்ணிச் சொல்லுங்கள் பார்க்கலாம்? இது லவ் ஜிகாத் தான்! ஜாதி விவாதம் என்று வந்தால் ப்ராமணன் வீட்டுப் பெண்ணைத் தருவியா என்று கேட்டு ப்ராமணன் வீட்டுப் பெண்களை லவட்டுவதில் தான் குறியாக இருக்கிறார்கள் பார்ப்பன எதிர்ப்புத் தமிழர்கள். இதை தட்டிக் கேட்க நாதியற்ற இனமாகத்தானே ப்ராமண இனம் இருக்கிறது. இதை சோ சொல்லவில்லை என்று ஆதங்கப் பட்டால் அது ஓவரா இருக்கா?

சிவமுருகன் said...

//எது எப்படியோ நான் இம்மாதிரி சோ அவர்களை இம்மாதிரி முழுமையாகக் கண்டித்து இப்பதிவை போடுவேன் எனக்கனவிலும் நினைக்கவில்லை.//


I 'm also joining with you. May be we expect Enge Braminan - III.

Thanks for your Great efforts on posting day by day eposides.

Sorry for English comment.

Anonymous said...

//படம் எடுப்பது. அப்படி படம் எடுக்கும் பெரும்பாலானவர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள்//

கே.பாலச்சந்தர் யார்?

Anonymous said...

//ஆனால் அதே போல் எத்தனை படம் ஒரு முஸ்லீம் அடையாளமுள்ள பெண்ணை ஹீரோயினாக வைத்து வந்திருக்கிறது என்று எண்ணிச் சொல்லுங்கள் பார்க்கலாம்?//

இதற்கு காரணம் இசுலாமியர்கள் தங்கள் வாழ்க்கையை மதத்தோடு பிணைத்துப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தங்களுயிரைவிட தங்கள் மதமே உயர்ந்தது. கொலை, குண்டு போட அவர்கள் தயார். அவர்கள் மதப்பெண்களை இழிவுபடுத்தியவன் உயிர் உடனே காலி.

நீங்கள் அப்படியா?

எல்லாம் வெறும் வாய்ச்சவடால்.

Anonymous said...

//அவர்களுக்கு தங்களுயிரைவிட தங்கள் மதமே உயர்ந்தது. கொலை, குண்டு போட அவர்கள் தயார்//

Oops. It is so unfortunate that , the human should help those so called "God". Even The God need help from human. Then why you need a God, who can not help himself?

hayyram said...

//கே.பாலச்சந்தர் யார்?//

விவஸ்தை கெட்ட கதைகளை மட்டுமே படமாக எடுத்து பெயர் வாங்கிய அற்ப மனிதரைப் பற்றி பேசாதீர்கள். பிராமணப் பெண்களை அசிங்கப்படுத்தி படம் எடுத்து தமிழ் சமூகத்திற்கு பாதை அமைத்துக் கொடுத்த பிராமண விரோதி அவர். மேலும் அறிந்து கொள்ள

http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138.html

சுட்டியைப் படியுங்கள்.

Venkatramanan said...

ராகவன் சார்

அந்த கடைசி அத்தியாயம்... எங்கம்மாப்பா ரெண்டு பேருக்கும் ஏமாற்றம்தான். அது போகட்டும்!
அந்த தொடரை விட்டு விட்டு பார்ப்பவர்களுக்கு (நடுவில் சதாபிஷேகம், சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம், காதுகுத்து என வெளியூர் பயணங்கள், கரண்ட் கட் போன்ற நடைமுறைச் சிரமங்கள்) உங்கள் பதிவின் கவரேஜ் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான்!

என் பெற்றோருக்குக் கூட ஒரு ரெண்டு மூனு வாரச் சுருக்கங்களை வாசித்துக் காட்டியுள்ளேன்.

வாழ்க உங்கள் consistency!

அன்புடன்
வெங்கட்ரமணன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது