சமீபத்தில் 1960-61 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது எங்கள் வகுப்பாசிரியர் திரு சங்கரராமன் அவர்கள் ஒரு விஷயம் சொன்னார்.
என்னை போர்டில் ஒரு ஆங்கில வாக்கியம் எழுதச் சொன்னார். நான் எழுதினேன், “The XXth century has witnessed dramatic changes in the way people live". அந்த வாக்கியம் எந்த காண்டக்ஸ்டில் எழுதப்பட்டது என்பது இப்போது நினைவுக்கு வரவில்லை. அதனால் என்ன இப்பதிவு அதைப் பற்றி அல்ல.
உடனேயே ஆசிரியர் சொன்னார், “XXth century” என்று போடுவது தவறு, அது “XX century” என்றுதான் இருக்க வேண்டும். ஏனெனில் XX என ரோமன் எண்களில் குறிக்கும்போதே அது இருபது அல்ல, இருபதாம் என பொருள் வந்து விடுகிறது. அதாவது XX என்பது ஆர்டினல் எண், கார்டினல் எண் அல்ல.
இதை சொன்னபோதே இன்னொன்றும் சொன்னார், பலர் இதே தவற்றை செய்கின்றனர். ஆங்கிலம் எம்.ஏ. படித்தவர்களும் அவர்களில் அடங்குவர் என்று.
அதே போல Secondary School Leaving Certificate (SSLC) பற்றி பேசும்போது SSLC செர்டிஃபிகேட் என்கிறோம். Permanent Account Number (PAN) PAN நம்பர் ஆகிறது.
ஐடிபிஎல்-ல் நான் வேலை செய்தபோது எங்கள் பொது மேலாளர் ஜலானி அவர்கள் information என்பது ஆங்கிலத்தில் ஒருமை மற்றும் பன்மைக்கு ஒன்றே என்றார். அதாவது informations என்று சொல்வது தவறு என்றார். அதுவே ஃபிரெஞ்சு மொழியில் informations என்றும் ஜெர்மானிய மொழியில் informationen என்றும் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு இதை முதலில் புரிந்து கொள்வது கடினமாகவே இருந்தது.
அது சரி திடீரென ஏன் இந்தப்பதிவு எனக் கேட்கிறான் முரளி மனோகர். ஸ்வாமி ஓம்காரின் இப்பதிவே எனது இந்த இடுகைக்கு இன்ஸ்பிரேஷன். அதிலிருந்து சிலவரிகள் இங்கே.
“நம் மக்களிடையே ஒரு பழக்கம் உண்டு ஏதேனும் ஒரு வார்த்தை அவர்களிடம் சிக்கிவிட்டால் அதன் பொருள் தெரிந்துகொள்ளாமலேயே ஆழ்ந்து பயன்படுத்துவார்கள்.
காட்சு பிடிக்கிறது, க்யூ வரிசையில் வருவது என ஆங்கிலத்தில் கூறும் வார்த்தையே தமிழிலும் இணைத்து சொல்லுவார்கள். Catch என்றாலே பிடிப்பது தானே? இது இணைத்து சொல்லுகிறோம் என்ற பிரக்ஞையே இருக்காது நமக்கு. இது போல எத்தனையோ வார்த்தைகள்.
படிக்காதவர்கள் தான் இப்படி என்று இல்லை. நான் சந்தித்த ஒரு நகரின் ஆட்சியர் (கலெக்டர்) கூட என்னிடம் பேசும் பொழுது இப்படி பட்ட தவறுகளை செய்தார். உதாரணமாக, “நான் ஃபிரியாதான் இருக்கேன். நீங்க உங்க விஷயத்தை பிரீஃப்பா சொல்லுங்க” என்றார்.
நாம் கூட நண்பர்களிடம் “பிரீஃப்பா பேசனும் வா” என கூறி இருப்போம். உண்மையில் பிரீஃப் (brief) என்றால் குறுகிய , சுருக்கமான என பொருள். அதனால் தானே சிறிய அளவில் கோப்புகளை வைக்கும் பெட்டியை பிரீஃப் கேஸ் என கூறுகிறோம். பிரீஃபா பேசுவது என்றால் விரிவாக பேசுவது என்றே நாம் நினைத்திருக்கிறோம்”.
வாசலில் காலிங் பெல் மணி அடிக்கிறது. விண்டோ ஜன்னலைத் திறந்து பார்த்தால் வழக்கமாக வரும் நண்பர். அவரை வரவேற்று டோர் கதவைத் திறக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
3 hours ago
13 comments:
நடு சென்டரா சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லிட்டிங்க...
என்னுடய ஆறாம் கிளாஸ் அனுபவம்,
நீண்ட நாள் 30 -நுப்பதாகவே இருந்தது .
ஒரு நாள் ஆசிரியர் 30 எண்ணில் எழுது ..30 எழுதினேன். எழுத்தில் எழுது...முப்பது எழுதினேன்.மறுபடியும் எண்ணை காட்டி,சொல்ல சொன்னார் ஸேம் நுப்பது. எழுத்தை காட்டி படிக்கசொன்னார் ..முப்பது...இப்ப புரிந்தாதா என்று.. கேட்டார்..இன்னமும் நுப்பதை நாக்கு விட மாட்டேங்குது.
பேனா 'நடு'-சென்டருல இருக்குது..
முக்கியமா, ரொம்ப பேரு 'அசால்டு' என்கிற ஆங்கில வார்த்தையை .. 'சாதாரணமா' பயன் படுத்துறாங்க.. அதுகூட தவறாகும்.
Money-க்கு plural Moneys என்று ஆங்கிலம் ஒத்துக்கொள்கிறது...ஆனால் Informations என்றால் பிழை !! என்ன மொழியோ என்னவோ கண்றாவி...இதில் Rendezvous போன்ற திகிலூட்டும் வேறுமொழிக் கலப்புகள் வேறு. அடிபட்டு அடிபட்டுத் தான் கத்துக்கணும்.
ப்ரீப்பா பேசணும் அல்ல அது.
நான் ப்ரீ அப்பா (naan free paa) பேசணும் வா
அல்லது ப்ரீ ப்பா (Breif aaga= surukkamaaga ) பேசணும் வா
we also say 'RTO office, "டிப்ளமோ" for diploma...
what to do?..
shivatma
எங்கலை காப்பாற்றிய அந்த நண்பர் யார்!?
வால்பையனின் கூக்லி சூப்பர்!
இங்க கூட SSN (Social Security Number) ஐ நெறய பேர் SSN Number என்றே சொல்கின்றனர்.
Foods, Peoples ஆகியவையும் தவறே.
நேரம் கிடைச்சா படிங்க - http://bostonsriram.blogspot.com/search/label/Spoken%20English
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வால்ஸ்!
/எங்களைக் காப்பாற்றிய அந்த நண்பர் யார்?/
எண்ணெய்ச் சட்டியில் இருந்து அடுப்பிற்குள் குதிப்பதுஎன்பது இதுதான்!
இன்னொரு மிகச் சமீபத்தில் நடந்த(1960-70) ஒரு ஞாபகத்தைத் தனிப்பதிவாகப் போட நீங்களே வழி வகுத்துக் கொடுத்திருக்கிறீர்களே!
குமுதம், விகடனில் கூட “சின்சியாரிட்டி” என்று எழுதுகிறார்கள்.
அதே மாதிரி WORK, WORKS இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல்
எழுதுகிறார்கள்.
ஜூவல்லரியை , ஜீவல்லரி என்று எழுதுகிறார்கள். - டில்லி பல்லி
வால் பையன் ஓற்றை வரியில் சிரிக்க வைத்துவிட்டார்
Pardon me is also widely misused, actually, most of the people use pardon me for repeating the same sentence, if they are not clear what the other has told, the real meaning of pardon is to regret/sorry/apology.
"Again, I beg a pardon"is the right term for asking the other person to repeat the same sentence.
நடு மத்தி செண்டர் ல..
Post a Comment