பதினெட்டு மாதங்கள் முன்பாகவே அ.முத்துலிங்கம் பற்றி கேள்விப்paட்டாகி விட்டது, உபயம் எழுத்தாLaர் பாரா அவர்கள். அவர் எழுதியதிலிருந்து சில வரிகள் (அவர் குழந்தை மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தாள்):
“மூன்று தினங்கள். ‘இந்த டாக்டர், நர்ஸ் எல்லாம் ரொம்ப கெட்டவங்கப்பா’ என்று அது நிமிடத்துக்கொரு தரம் புகார் சொல்லிக்கொண்டிருந்தது. புறங்கையில் ஊசி ஏற்றி சலைன் ஏறிக்கொண்டிருந்தது. கையில் லேசாக வீக்கம் கண்டிருந்தது. ஊசி குத்தும் டாக்டர்கள் அனைவரும் கெட்டவர்கள். அதுவும் கை வீங்குமளவுக்கு மாட்டு ஊசி குத்துகிறவர் ராட்சசன் அல்லாமல் வேறு யார்?
‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா கண்ணு. சரியாயிடும். டாக்டர் உனக்கு உடம்பு சரியாகணும்னுதானே செய்யறார்?’ என்று ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தபடிக்கு, கைவசம் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.
தொடங்கிய கணத்திலிருந்து சராசரியாக மூன்று நிமிடங்களுக்கொரு முறை நான் சிரித்துக்கொண்டிருந்தது என் குழந்தைக்கே வினோதமாகத்தான் பட்டிருக்கவேண்டும். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னைப் பார்த்த பார்வை அத்தனை கௌரவமாக இல்லை. யாரும் அப்படி மனம் விட்டுச் சிரிக்கக்கூடிய இடம் இல்லை அது. விடிந்தால் தீபாவளி. இந்த தீபாவளிக்கு நாம் வீட்டில் இருக்கப் போவதில்லை என்கிற வருத்தம் எல்லா பெற்றோருக்கும் இருந்தது. எல்லா குழந்தைகளும் பட்டாசு வெடிக்க முடியாமல் போவது பற்றிய கவலையில்தான் இருந்தார்கள்.
எனக்கும் கவலைதான். குழந்தையைச் சாக்கிட்டு நானும் நாலு கம்பி மத்தாப்பு கொளுத்தலாம். புஸ்வாணம் விடலாம். பாம்பு மாத்திரை கொளுத்துவது எனக்கு ஏக ஆனந்தம் தரும் விஷயமாகும். அந்தப் புகையின் நெடி உடனடியாகத் தும்மல் வரவழைக்கும். ஆனாலும் இஷ்டம். வெடி ஒன்றுதான் ஆகாது. காதுக்குக் கேடு.
இப்படியா ஒரு தகப்பன் இருப்பான்? கழட்டி, சுருட்டி எறிந்த லுங்கி மாதிரி கட்டிலில் குழந்தை கிடக்கிறது. உள்ளுக்குள் என்ன செய்கிறதோ, எத்தனை வலிக்கிறதோ, என்ன வேதனையோ? இப்படிச் சிரித்துக்கொண்டிருக்கிறானே கட்டையில் போகிறவன்”?
பா.ராகவன் மட்டுமா டோண்டு ராகவனும் அந்தச் சூழ்நிலையில் அதே மாதிரித்தான் நடந்து கொண்டு திட்டு வாங்கியிருப்பான். அதை விடுங்கள்.
பாரா சொன்னதை வைத்து அடுத்து வந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரது சில புத்தகங்கள் வாங்கி வந்தேன் (மகாராஜாவின் ரயில் வண்டி, இப்போ அங்கே என்ன நேரம்). சில கட்டுரைகளை படித்தேன், ஆனால் அந்தோ வழக்கம் போல கைமறதியாக என் வீட்டிலேயே எங்கோ வைத்து விட்டேன்.
இப்போதுதான் ஜெயமோகனின் அ. முத்துலிங்கத்துக்கு வயது ஆறு பதிவை பார்க்க நேரிட்டது. அவரது வலைப்பக்கத்துக்கும் அதில் சுட்டி கிடைத்தது. தில் உள்ள பக்கங்களை மேய்ந்த வண்ணம் வரும்போது கூகிள் பற்றிய இந்தப் பதிவு கிடைத்தது. அதிலிருந்து சில வரிகள்:
“முன்னெப்பொழுதும் இல்லாத மாதிரி பூமியை ஒரு பந்துபோல பார்க்கும் வசதியையும் கூகிள் செய்து கொடுத்திருக்கிறது. கனடாவில் இருந்தபடி அவுஸ்திரேலியாவில் இருக்கும் உங்கள் நண்பரின் வீட்டை அவர் அறியாமல் உங்களால் பார்க்க முடியும். அவர் வீட்டு எண், அவர் வீட்டு மரம், அவருடைய நாய் எல்லாவற்றையும் பார்க்கலாம். நான் ஒரு முறை அமெரிக்காவில் இருந்தபோது கனடாவில் இருக்கும் என் வீட்டைப் பார்த்தேன். என் வீட்டு கார்ப்பாதையில் யாரோவுடைய கார் தரித்து நின்றது. அதனுடைய நம்பரை என்னால் குறித்து வைக்க முடிந்தது. இதுவெல்லாம் கூகிள் நிறுவனம் இலவசமாக செய்து தந்திருக்கும் வசதி.
2010 பூமி தினத்தின்போது கூகிள் நிறுவனம், சூழலியல் விஞ்ஞானி சஞ்சயனை ஓர் உரை நிகழ்த்த அழைத்திருந்தது. அந்த உரையின் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தன்சேனியாவில் லேரொலி என்ற இடத்தில் 3.6 மில்லியன் வருடங்கள் பழமையான மனித காலடிச் சுவடுகள் பதிவாகி இன்றுவரை பார்க்கக் கிடைத்திருக்கின்றன. இத்தனை மில்லியன் வருடங்கள் எரிமலைச் சாம்பலால் பழுதடையாமல் பாதுகாக்கப்பட்ட சுவடுகள். மனிதன் நிமிர்ந்து நடந்ததற்கான தடயம். பக்கத்தில் ஒரு பெண்ணின் காலடியும் உள்ளது. அது சரிந்து பள்ளம் கூடியிருந்ததால் அவள் ஒரு பிள்ளையை காவியிருக்கிறாள் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள். ஆக ஒரு குடும்பம் நடந்துபோன அடையாளம். குனிந்து பார்த்து நடந்த நிலைமாறி மனிதன் நிமிர்ந்து நடந்ததற்கான முதல் ஆதாரம்.
திறந்த வெளியில், ஒரு நல்ல நாளில் நிமிர்ந்த மனிதன் ஐந்து, ஆறு மைல்கள் தூரம் பார்க்கலாம். இன்று, எங்கள் தலைமுறையில் சாட்டிலைட் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பூமி முழுவதையும் எங்களால் பார்க்க முடியும். இந்தப் பெரிய அறிவு எங்கள் முந்திய தலைமுறையினருக்கு கிடைக்கவில்லை. சுற்றுச்சூழல் கேடு பூமியில் உச்சத்தை தொட்டதும் எங்கள் தலைமுறையில்தான். பூமியை காப்பாற்றும் முழுப் பொறுப்பும் எங்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவையும் வைத்துக்கொண்டு பூமியை காப்பாற்ற நாங்கள் தவறினால் அடுத்த தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் போதாது. எங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்காது, ஏனென்றால் காலம் கடந்துவிடும்.
நாங்கள்தான் சிந்திக்கவேண்டும். கூகிள் எங்களுக்காக சிந்திக்கமுடியாது.
சூழலியல் விஞ்ஞானி சஞ்சயனின் உரையின் தொடுப்பு:
இது முக்கியமான உரை. உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் அவர்கள் மாணவர்களுக்கும் இதை அனுப்புங்கள்”.
மீண்டும் டோண்டு ராகவன். இப்போது சாவகாசமாக முத்துலிங்கத்தின் பக்கங்களை படிக்கலாம். அவையும் கைமறதியாகப் போய்விடக்கூடாது என்பதற்காகவே இப்பதிவிலும் அவரது பக்கத்தின் சுட்டியை எம்பெட் செய்து விட்டேன்.
பாராவுக்கும், ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்துக்கும் chronological order-l நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
7 hours ago
9 comments:
// //சுற்றுச்சூழல் கேடு பூமியில் உச்சத்தை தொட்டதும் எங்கள் தலைமுறையில்தான். பூமியை காப்பாற்றும் முழுப் பொறுப்பும் எங்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவையும் வைத்துக்கொண்டு பூமியை காப்பாற்ற நாங்கள் தவறினால் அடுத்த தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் போதாது. எங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்காது, ஏனென்றால் காலம் கடந்துவிடும்.// //
வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிக அளவாக, 350 ppm தான் இருக்கலாம். (ppm-பத்துலட்சத்தில் ஒரு பகுதி) ஆனால் அது 392 ppm அளவை எட்டிவிட்டது. (300 ஆண்டுகளுக்கு முன்பு இது 275 ppm தான்.)
புவி வெப்பமடைவதை தடுக்கத் தவறியதால் ஏறக்குறைய நாம் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டோம். பூமி காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பும் தவறிப் போகுமா என்பது 2010 டிசம்பரில் மெக்சிகோ நாட்டில் கூடும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தெரிந்துவிடும்.
ஆருயிர் அண்ணாவின் ஐடி-யை யாராவது வசப்படுத்தி விட்டார்களா ?
2010 திசம்பரில் அருள் அவர்களின் பின்னூட்டம்.
பூமிவெப்பத்திற்குக் காரணம் பார்ப்பானர்களே.
இல்லாத இந்து மதத்தின் இல்லாத சாமிக்கு சூடம் கொளுத்துவது, ஊதுவத்தி கொளுத்துவது, விபூதி தயாரிப்பதாகச் சொல்லி எருவாட்டியை எரிப்பது என்று பூமியின் கரியமில வாயுவின் அளவைக் கூட்டுவதே இந்தப் பார்ப்பானர்களின் வேலை. இவர்களை ஒழித்தாலே பூமியின் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம்.
Hi Dondu,
Congrats!
Your story titled 'அ. முத்துலிங்கத்தின் அமர்க்களமான வலைப்பூ' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 27th July 2010 12:42:04 AM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/310108
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நன்றி தமிழிஸ்,
அன்புடன்,
டோண்டு ராகவன்
நெடு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவில் மதம், சாதி சம்பந்தம் இல்லாதா செய்திகள் பார்க்க முடிகிறது., மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
அருளின் பின்னூட்டமும் அருமை. மாற்றத்தை உங்கள் வலைப்பதிவில் இருந்து தொடங்குவோம்.
புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில எளிய செயல்கள்:
1. தேவையில்லாமல் இயங்கும் மின்கருவிகளை அணையுங்கள்.
2. எந்த ஒரு மின்கருவியையும் தொலையுணர்வு கருவி மூலம் "standby" இல் வைக்காமல் முற்றிலுமாக அணையுங்கள்.
3. குண்டு மின் விளக்குகளை மாற்றி CFL விளக்குகளைப் பொருத்துங்கள்.
4. மின்கருவிகள் வாங்கும் போது BEE முத்திரை 4 அல்லது 5 நட்சத்திரம் உள்ளதாக வாங்குங்கள்.
5. குப்பையைக் குறையுங்கள். முடிந்தவரை அதிக "Package" உள்ள பொருட்களை தவிருங்கள். கடைக்குப் போகும்போது கையோடு துணிப்பையை எடுத்துச்சென்று நெகிழிப் பைகளை தவிருங்கள்.
6. தண்ணீரை வீணாக்காதீர். முடிந்தவரை பாட்டில் தண்ணீரைப் புறக்கணியுங்கள்.
7. வீட்டில் மழைநீர் சேகரிப்பு முறையை சரியாக அமையுங்கள்.
8. புதிதாக சமைத்த உணவை சாப்பிடுங்கள். பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி உணவுகள் போன்றவற்றைத் தவிருங்கள். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உள்ளூர் காய்கறிகளையும், பழங்களையும் உண்ணுங்கள்.
9. போக்குவரத்திற்கு பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துங்கள்.
ஆருயிர் அருள் அண்ணாவுக்கும் ஒரு ப்ரெண்ட் கிடைச்சாச்சு.
பலே பலே!!
நண்பர் அருள் ஒன்றை விட்டு விட்டார், அது - மரங்களை வெட்டாதிருத்தல்!!
அவன்: அட, பிளாட்பாரம் கேசு அந்த ஆளு ஆனா பெயர கேட்டா கோடீஸ்வரன் எண்டு சொல்லுதான்!
இவன்: அடஅதுலே என்னங்க ஆச்சரியம், அவிங்க கூடதான் பசுமை தாயகம் அப்படின்னு ஒண்ணு நடத்துறாங்க, ஆனால் .............
NO said...
// //நண்பர் அருள் ஒன்றை விட்டு விட்டார், அது - மரங்களை வெட்டாதிருத்தல்!!// //
அடடா...உங்கள் அறியாமையைக் காட்டிவிட்டீரே!
தனிமனிதர்கள் யாரும் வேறு வேலையில்லாமல் மரம் வெட்டிக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் சொல்லவருவது "காடுகள்" அழிப்பைதான் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
காடுகள் அழிக்கப்படுவதால் மட்டும் புவிவெப்பமடைவதற்கு காரணமான வாயுக்களில் 20% வெளியாகிறது. காடுகள் அழிக்கப்படுவதைதடுக்க REDD (Reducing Emissions from Deforestation and Forest Degradation) எனும் சிறப்புத் திட்டத்தை ஐ.நா.அவை செயல்படுத்தி வருகிறது. காண்க:http://www.un-redd.org/AboutREDD/tabid/582/language/en-US/Default.aspx
இந்த சிக்கலில் தனிமனிதர்கள் செய்யக்கூடியது பெரிதாக எதுவும் இல்லை. அதிபட்சமாக தாள்கள், காடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பொருட்களை வாங்கும் போது அதில் FSC எனும் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கலாம். காண்க: http://www.fsc.org/about-fsc.html
மற்றபடி தனிமனிதர்கள் மரங்களை நட்டு வளர்க்கலாம். ஆனால், "புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நீங்கள் செய்யக்கூடிய "சில எளிய செயல்கள்" என்றுதான் நான் குறிப்பிட்டுள்ளேன்.
மரம் நட்டு வளர்ப்பது ஒரு "எளிதான செயல் அல்ல" என்பது நீங்கள் முன்பின் மரம் நட்டு வளர்த்திருந்தால் தெரியும். இன்றைய நிலையில் சென்னை போன்ற ஒரு நகரத்தில் ஒரு மரம் நட்டுவளர்க்க குறைந்தது ரூ. 500 தேவைப்படும். கூடவே சிலமாதங்கள் கண்ணும் கருத்துமாக அதனைக் கவனித்து வரவேண்டும்.
அது ஒரு எளிய செயல் அல்ல.
Post a Comment