மேலே சொன்ன தலைப்பில் ஜெயமோகனின் இப்பதிவு என் மனதைக் கவர்ந்தது. முதலில் அதிலிருந்து சில வரிகள். இதில் நான் என வருவது ஜெயமோகனையே குறிக்கும்
----------------------------------------------------------------------------------------------
“சாதியைப்பற்றிய அக்கறையே இல்லாமல் வாழக்கூடிய வாழ்க்கை என்பது நல்லதுதான். அது ஓர் இலட்சிய வாழ்க்கையும்கூட. ஆனால் அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்றுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘நான் யாருடைய சாதியையும் தெரிந்துகொள்ள முயல்வதே இல்லை’ என்று அப்பாவித்தனமாக அல்லது சுய ஏமாற்றாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய ஊரில் சாத்தியமே அல்ல.
அப்பட்டமாக்ச் சொல்கிறேனே, குறைந்தபட்சம் நம் சூழலில் ஒருவர் தலித்தா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. சாத்தியமல்ல என்பதுடன் அது அபாயமும்கூட. தலித்துக்களில் தான் ஒரு தலித் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. அந்த சுய உணர்ச்சி நம் மரபின் சென்றகால இழிமுறைகளில் இருந்து அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான தாழ்வுணர்ச்சியால் ஆனது. இன்றைய பொதுச்சூழலில் சாதாரணமாகச் சொல்லப்படும் சொற்கள்கூட அவர்களின் உணர்ச்சிகளை தீவிரமாகப் புண்படுத்திவிடும். அப்படி அவர்களைப் புண்படுத்துவதென்பது அநீதியானது, நட்புகளை உடைக்கக்கூடியது, பொது அமைப்புகளில் பல சங்கடமான நிலைமைகளை உருவாக்கக்கூடியது. ஆகவே நம்சூழலில் அத்தனை பேரும் இந்தக் கவனத்துடன் தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
என்னுடைய அனுபவம் ஒன்று. பலவருடங்களுக்கு முன் எனக்கு நெருக்கமான இலக்கிய நண்பர் ஒருவர் இருந்தார். பறையர் சாதியைச் சேர்ந்தவர். அது என்னுடைய பிரக்ஞையில் இருந்தது இல்லை. திடீரென என்னிடமிருந்து முற்றாக விலகிச் செல்ல ஆரம்பித்தார். நட்பை நீட்டிக்க நான் பலவேறு வழிகளில் முயன்றேன். அவரது மனக்குறை என்ன என்று விசாரித்தேன். நான் செய்த தவறு என்ன என்று அறிய முயன்றேன்.பலனில்லை. ஆழமான மனச்சோர்வுடன் நானும் விலகிக்கொண்டேன். தீவிர இலக்கியமறிந்த இரண்டே நண்பர்களில் ஒருவரை இழப்பது அந்தவயதில் பெரிய சோகம்.
நான் அந்த ஊரில் இருந்து மாற்றலாக வந்து சிலவருடங்களுக்கு முன் பழைய சங்கத்தோழர் ஒருவர் பேசும்போது நான் அந்த இலக்கிய நண்பரின் மனச்சிக்கலுக்குக் காரணத்தைச் சொன்னார். நான் அவரை வைத்துக்கொண்டே வேறு ஒருவரிடம் அவரது சாதியைச் சொல்லி இழிவாகப்பேசினேன் என்றும் அது அவரது மனதை புண்படுத்திவிட்டது என்றும் அநத இலக்கிய நண்பர் தோழரிடம் ஒரு குவளை மதுவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கிறார்
நான் அந்த கடைசி உரையாடலை சொல்சொல்லாக நினைவுகூர்ந்தேன். ஏனென்றால் அத்தனைநாளும் அதை அத்தனை முறை மனதில் ஓட்டிக்கொண்டிருருந்தேன். என்ன பிழை நிகழ்ந்தது என்று துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருந்தேன். நடந்தது இதுதான். நான் அன்றிரவு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் அப்பாவின் குணநலன்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பா நிலப்பிரபுத்துவகால முரட்டுத்தனமும் நிலப்பிரபுத்துவகால அறமும் ஒருங்கே அமைந்த ஆத்மா. ஒருவன் வீட்டுக்குள் புகுந்து திருடிவிட்டான். அவனை கையும் களவுமாக பிடித்து தென்னையில் கட்டி வைத்திருந்தார்கள். ‘எந்தினுடா மோஷ்டிச்சு? பற நாயிண்டே மோனே’ என்று அப்பா சொன்னதாக நான் சொன்னேன். அவன் ‘பசிக்காக’ என்றதும் சோறுபோட்டு துரத்திவிட ஆணையிட்டார்.
நண்பரை புண்படுத்திய சொல் என்ன என்று சட்டென்று கண்டுகொண்டேன். அப்பா சொன்னதை நான் அப்படியே மலையாளத்தில் அவரது உச்சரிப்பு மற்றும் முகபாவனையுடன் சொன்னேன். மலையாளத்தில் ‘பற நாயிண்டேமோனே’ என்றால் ‘சொல்லுடா நாயின் மகனே’ என்று அர்த்தம். பறைதல் என்றால் சொல்லுதல் .[அது தூய பழந்தமிழ்ச் சொல். பறையர்கள் எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் முரசு அறையக்கூடிய, விழாக்களிலும் கோயில்களிலும் மங்கலக் கௌரவம் கொண்ட உயர்சாதியினர். அதற்கு தொல்லாதாரங்கள் உள்ளன]
நான் சொன்னவற்றை விளக்கியதும் தோழர் ‘அடாடா,நான் அவனிடம் சொல்கிறேன்’ என்றார். அதன்பின் சிலநாட்கள் கழித்து அந்த இலக்கியநண்பர் என்னைக்கூப்பிட்டு மன்னிப்பு கோரினார். மீண்டும் உற்சாகமாக பேச முயன்றார். சில நாட்கள் பேசினோம். ஆனால் நட்புகளைப்பொறுத்தவரை ஒன்றுண்டு, ஒரு நட்பு உடைந்து கொஞ்ச காலம் ஆனால் இரு சாராருமே வாழ்க்கை போக்கில் வெகுதூரம் விலகிச் சென்றிருப்போம். மீண்டும் ஒட்ட முடியாது”.
--------------------------------------------------------------------------------------------
“ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களாக உணராத சாதிகளே இல்லை என்பதுதான். தலித் சாதிகள் அப்படி உணர்வதற்கு ஒரு வரலாற்றுப்பின்புலம் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே சொல்வார்கள். அதற்காக ஒரு பிராமண வெறுப்பை உருவாக்கி வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தலித்துக்களைப்போலவே சிறு சொல்கூட பிராமணர்களை ஆழமாக புண்படுத்திவிடும்.
என் அனுபவத்தில் நான் இந்த புண்படுத்தல் சிக்கலுக்கு உள்ளானவர்களில் அனேகமாக பெரும்பான்மையினர் பிராமணர்களே. நம்ப மாட்டீர்கள் ஜைமினியின் மீமாம்ச சூத்திரங்களைப்பற்றி நான் சொன்ன ஒரு கருத்துக்காக என் நட்பையே முறித்துக் கொண்ட நெடுநாள் நண்பர் ஒருவர் உண்டு. சிலப்பதிகார மணமுறைகளைப்பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நான் ”சமணனாகிய கோவலன் எப்படி ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட’ கண்ணகியை மணந்தான்?” என்று சொன்னதைக் கேட்டு பார்ப்பான் என்ற ‘வசை’ச்சொல்லை நான் வேண்டுமென்றே பயன்படுத்தினேன் என்று எண்ணி புண்பட்டு விலகிய நண்பரும் உண்டு”.
--------------------------------------------------------------------------------------------
“ஒருமுறை ஒரு நண்பர்வட்டத்தில் பேசும்போது நான் சொன்னேன் ”பேசிவரும்போது தமிழ்நாட்டில் ஒடுக்கப்படாத ஒரே சாதிதான் இருக்கிறது போல் தோன்றுகிறது — நாயர் சாதி !” டீக்கடை வைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஆகவே சாதிபேசாமல் இருப்பது என்பது யாரிடமும் நெருக்கமாகப் பேசாமலே இருப்பது மட்டுமே. எல்லாருக்கும் அது சாத்தியமில்லை. ஆனால் தமிழகத்து மனச்சிக்கல் என்னவென்றால் சாதி சர்ந்த இத்தனை உளச்சிக்கல் இருந்தாலும் பொதுவெளியில்சாதி என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற பாவனையை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். ஆகவே சாதியைப்பற்றி பேசுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை. அது ஒரு பெரும்பான்மை நடைமுறை என்பதனால் அதைத்தான் கடைப்பிடித்தாகவேண்டும்.
ஆனால் சாதி என்ற அடையாளத்தை தொடர்ந்து அந்தரங்கமாகவேனும் பரிசீலனைசெய்துகொண்டிருப்போம், பரிகாசம் செய்துகொண்டிருப்போம். நெருக்கமான நண்பர்களிடமாவது அந்த பாவனைகளையும் இடக்கரடக்கல்களையும் கைவிட்டு பழக முடியுமா என்று முயல்வோம். நான் சொல்வது அவ்வளவே”.
---------------------------------------------------------------------------------------------
இப்போது டோண்டு ராகவன்.
இது, இது இதைத்தான் நானும் பலமுறை சொல்லி வருகிறேன். உதாரணத்துக்கு சாதியே கூடாது என்னும் பதிவர்கள் அடிக்கும் கூத்து என்னும் பதிவில் நான் சொன்னவை:
“எதற்கு இந்த ஆஷாடபூதித்தனம்? சாதி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே. அதையெல்லாம் மனதில் கொள்ளாது அதனால் விளையும் சில சங்கடங்களை மட்டும் மனதிலிருத்தி, அதை அப்படியே ஒழிக்க வேண்டும் எனக்கூறுவது தவறு என்பதை விட பிராக்டிகல் இல்லை என்றுதான் கூறவேண்டும்”.
“சாதி ஒழிப்புக்காக பாடுபடுவதாக பொய்யுரைக்கும் கட்சிகளும் கூட தேர்தல் சமயத்தில் தங்கள் வேட்பாளர்களின் சாதி அவர்கள் கேட்கும் தொகுதிக்கு மேட்ச் ஆகிறதா என்றுதான் பார்க்கின்றனர்”.
முகம்மது பின் துக்ளக் படத்தில் ஒரு காட்சி வரும். புரொபசர் ரங்காச்சாரியின் மனைவி துக்ளக் பிரதம மந்திரியாக வரவேண்டும் என வேண்டிக் கொள்வாள். அப்போது “பெருமாளே, துக்ளக் பிரதமராக வந்தால் எங்க பத்துவுக்கு மொட்டை போடுகிறேன்” என்பாள். அவள் பிள்ளையான பத்து என அழைக்கப்படும் பத்மநாபன் லபோ லபோ என கத்துவான். “எனக்கு ஏன் மொட்டை அடிக்கறே, வேணும்னா துக்ளக்குக்கு அடி” என கோபத்துடன் சொல்வான்.
அதை நினைவுபடுத்தும் விதமாக எம்.ஜி.ஆர். அரசு எழுபதுகளின் பிற்பகுதியில் கோமாளித்தனமான ஆர்டர் கொடுத்து தெருக்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்கிய கூத்தைப் பற்றியும் நான் யார் சாதிப் பெயரை யார் எடுப்பது என்னும் தலைப்பில் பதிவிட்டுள்ளேன்.
சாதி ஒழிப்பு என கூறும் தமிழகத் தலைவர்கள் செய்ததெல்லாம் எல்லா குப்பைகளையும் ஜமக்காளத்தின் கீழே தள்ளி குப்பையே இல்லாதது போல தோற்றம் அளித்ததுதான் தவிர வேறு ஒன்றுமில்லை.
மனித சமூகம் இருக்கும் இடங்களிலெல்லாம் குழு மனப்பான்மைகள் கண்டிப்பாக இருக்கும். காலதேச வர்த்தமானங்களை பொருத்து அவர்றின் லேபல் மாறும். நம் நாட்டில் அவை சாதி ரூபத்தில் உள்ளன அவ்வளவே. அவை இங்கு வந்தது காலத்தின் கட்டாயம், அவை தவிர்க்கப்படமுடியாதவை என்பதையே நானும் எனது லேட்டஸ்ட் நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
3 hours ago
48 comments:
ஜெயமோகன் தமிழ்நாட்டில் உலவும் யதார்த்த நிலையை மிகத் தெளிவாகவும் நாசூக்காவும் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். உயர்சாதி ஆதிக்கம் என்பது ஒவ்வொரு நிலையிலும் இருப்பதுதான் உண்மை.
சாதியைப் பாராட்டாமலும், சாதி ஆதிக்கத்துக்கு ஆட்படாமலும் ஒருவன் இருந்தால் போதுமானது.
வழிப்போக்கன்
சாதியை விட குரூரமானது மதம்.
தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதிசண்டை:
ஜாதி ஹிந்துக்கள்(mostly வன்னியர்) vs தாழ்த்தப்பட்டோர்
அப்போ பார்ப்பனர்கள்??
அவங்களைத்தான் ரெண்டு குழுவும் கேடயமா use பண்றாங்க!
தமிழ் அறிவுசீவிகளின் மூளையின் பரப்பளவு என்பது இங்கு நடக்கவிருக்கும் விவாதத்தின் முடிவுரையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஜெயமோகன் ஒரு இந்துத்வா கைக்கூலி என்ற முடிவுரையே அது.
// //அப்பட்டமாக்ச் சொல்கிறேனே, குறைந்தபட்சம் நம் சூழலில் ஒருவர் தலித்தா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. சாத்தியமல்ல என்பதுடன் அது அபாயமும்கூட. தலித்துக்களில் தான் ஒரு தலித் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. அந்த சுய உணர்ச்சி நம் மரபின் சென்றகால இழிமுறைகளில் இருந்து அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான தாழ்வுணர்ச்சியால் ஆனது.// //
இதை இப்படியும் சொல்லலாம்:
நம் சூழலில் ஒருவர் பார்ப்பனரா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. சாத்தியமல்ல என்பதுடன் அது அபாயமும்கூட. பார்ப்பனர்களில் தான் ஒரு பார்ப்பான் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. அந்த சுய உணர்ச்சி நம் மரபின் சென்றகால ஆதிக்கமுறைகளின் காரணமாக அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான மேட்டிமை உணர்ச்சியால், மேல்சாதித் திமிரால் ஆனது.
// //பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள்.// //
அடடா, ஜெயமோகனின் கற்பனைக்கும் கட்டுக்கதைக்கும் ஒரு அளவே இல்லையா? The HINDU, தினமலர், தினமணி, ஆனந்தவிகடன், ஜூனியர்விகடன் என பத்திரிகை உலகம் முழுவதும் 'அவாள்'தான். IIT போன்ற உயர்கல்வி இடங்கள் 'அவாள்' கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. IAS உயர் அதிகாரக்கூட்டத்திலும் அவாள் ஆதிக்கம். TVS, இந்தியா சிமென்ட்ஸ், புதிதாக வரும் SEZ தொழில்களில் அவாளே அதிகம். டிசம்பர் மாதம் பிறந்தால் கர்நாடக சங்கீத கூத்துக்களை அவிழ்த்துவிட்டு பார்ப்பன இசைதான் தமிழ் நாட்டின் பாரம்பரியம் என்கிற கட்டுக்கதைக்கும் அளவே இல்லை.
பார்ப்பன ஆதிக்கம் 'மயிரளவு' கூட குறையாத இன்றைய நிலையிலும் பார்ப்பனர்கள் 'புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள்' என்றால், இன்னும் உங்களுக்கு என்னதான் வேண்டும்.
ஒருதமிழன் கூட உங்களை எதிர்க்காமல், உங்கள் காலை நக்கிக்கிடக்க வேண்டுமா?
கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' புத்தகத்தில் 277-ம் பக்கம்
தலைப்பு : 47। கணையாழியும், கசப்பும்
(குறிப்பு : இங்கே 'அவன்' என்று கண்ணதாசன் தன்னைத்தானே குறிப்பிட்டுக் கொள்கிறார்)
"கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை, அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள் போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.
கருணாநிதி பேசுகிறார்। அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர் போல் பேசுகிறார்। இவ்வளவு பேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கெனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்।
அடுத்தாற்போல் அண்ணாதுரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்। காங்கிரஸை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக் கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்.
"நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை। எனக்கென்றுகூட நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித் தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்॥" கூட்டத்தில் பெருத்த கையலி.. 'கருணாநிதி வாழ்க' என்ற முழுக்கம். அவன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.
பெரிய ஜாதிக்காரனையும், சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான்।
அண்ணாதுரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார்। அவரை வரம்பு மீறி புகழ்ந்து கொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப் பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.
அவன் நேரே அவரிடம் போனான்। "என்ன அண்ணா॥ இப்படி சதி செய்துவிட்டீர்கள்?" என்று நேருக்கு நேரே கேட்டான்.
"அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு। அடுத்தக் கூட்டத்தில் போட்டு விடுகிறேன்॥" என்றார்.
"அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா॥?" என்று அவன் கேட்டான்।
"அட சும்மா இரு॥ அடுத்தத் தேர்தல் வரட்டும்। பார்த்துக் கொள்ளலாம்.." என்றார்.
அவன் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நடக்கலானான்।
அவன் கண்களில் நீர் மல்கிற்று। பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும் உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.
கட்சியிலும் அண்ணாதுரை மீதும் அவன் வைத்திருந்த பிடிப்பி நெல்லின் உமி சிறிது நீங்குவது போல நீங்கத் தொடங்கிற்று..."
அண்ணா உயிருடன் இருந்தபொழுதே 1961-லேயே இந்தப் புத்தகம் வெளிவந்துவிட்டது। தான் இறக்கின்றவரையிலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி மட்டும் அண்ணா கருத்து சொல்லவில்லையாம். காரணம், அவ்வளவு 'உண்மை'கள் இந்தப் புத்தகத்தில் குவிந்து கிடக்கின்றன. வாங்கிப் படித்துப் பாருங்கள்.
பதிப்பகம் : வானதி விலை ரூ.60.००
பின்குறிப்பு : கலைஞரும் இந்தப் புத்தகத்தைத் தான் இதுவரை படித்ததே இல்லை என்றே சாதித்து வருகிறார்.
http://chanackyan.blogspot.com/2007/08/blog-post_23.html
டோண்டு ராகவன் Said...
// //மனித சமூகம் இருக்கும் இடங்களிலெல்லாம் குழு மனப்பான்மைகள் கண்டிப்பாக இருக்கும். காலதேச வர்த்தமானங்களை பொருத்து அவர்றின் லேபல் மாறும். நம் நாட்டில் அவை சாதி ரூபத்தில் உள்ளன அவ்வளவே.// //
உங்களது இந்தகருத்து மற்றநாடுகள் அளவில் நியாயமானதா இருக்கலாம். ஆனால், இதனை இங்கு நியாயமாக்க இரண்டு முன் தேவைகள் உள்ளன:
1. உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்கிற ஏற்றத்தழ்வு நிலை அகல வேண்டும்.
2. 'குழு மனப்பான்மைகள் கண்டிப்பாக இருக்கும்' என்கிற நிலையில் - எந்தக்குழுவில் எத்தனைப் பேர் என்பதை அளந்து, எல்லாவற்றிலும் அவரவர் மக்கள்தொகைக்கான பங்கைக் கொடுத்துவிட வேண்டும்.
இதற்கு ஒரு பார்ப்பனராவது சம்மதிப்பாரா?
//
'குழு மனப்பான்மைகள் கண்டிப்பாக இருக்கும்' என்கிற நிலையில் - எந்தக்குழுவில் எத்தனைப் பேர் என்பதை அளந்து, எல்லாவற்றிலும் அவரவர் மக்கள்தொகைக்கான பங்கைக் கொடுத்துவிட வேண்டும்.
//
பங்கு போட்டுக் கொடுப்பது யார் ?
// //பங்கு போட்டுக் கொடுப்பது யார் ?// //
ஜனநாயக அமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கமே இதற்கு பொறுப்பு.
பங்குபோட்டு கொடுப்பது என்பது சாதிவாரி விகிதாச்சார பங்கீடாகும்.
மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக அனால் அதிகாரத்தில் சிறுபான்மையாக இருக்கும் மக்கள் இதனை வரவேற்கிறார்கள். மக்கள்தொகையில் சிறுபான்மையினராக அனால் அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் இதனை வரவேற்க தயாரா? என்பதுதான் கேள்வி.
அதேசமயம், """தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்""" என்று ஜெயமோகனும், டோண்டு'வும் கருதும் நிலையில் சாதிவாரி விகிதாச்சார பங்கீட்டினை பார்ப்பனர்கள் எதிர்ப்பதற்கான தேவை எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை.
உண்மையில் 'சாதிவாரி விகிதாச்சார பங்கீடு' என்பது எங்கே அதிகாரமும் வளமும் குவிந்திருக்கிறதோ அங்கிருந்து அதிகாரமும் வளமும் இல்லாத இடத்திற்கு அவற்றைப் பரவலாக்கும். எனவே, "தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின்" ஆதிக்கத்தை தகர்க்கக் கூட இது உதவியாக இருக்கும்.
எனவே, பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கத்தை தகர்க்க பார்ப்பனர்கள் முன்வர வேண்டும். அவரவர் மக்கள்தொகைக்கேற்ப சாதிவாரி விகிதாச்சார பங்கீட்டினைக் கோரவேண்டும்
வழிப்போக்கன் said...
// //சாதியைப் பாராட்டாமலும், சாதி ஆதிக்கத்துக்கு ஆட்படாமலும் ஒருவன் இருந்தால் போதுமானது.// //
அப்படி யாராவது இருக்காங்களா என்ன? வழிப்போக்கன் ஜோக் அடிக்கிறார்.
இந்தியன், திராவிடன், தமிழன் - இவை எல்லாவற்றுக்கும் முன்பு மனிதனின் அடிப்படை அடையாளமா இருப்பது சாதிதான்.
எனவே, BC/MBC/SC மக்களில் ஒவ்வொருவரும் தனது சாதி உணர்வினை பெருவதும், அதனை வெளிக்காட்டுவதும், அதற்காக வெட்கப்படாமல் இருப்பதும் இன்றைய உடனடி தேவையாகும்.
ஒருவன் தனது சாதியை நினைத்து பெருமைப்படுவது நல்லதே. (வேறு எந்த ஒரு சாதியையும் இழிவாகவோ தாழ்வாகவோ நினைப்பதுதான் தவறு.)
ஒடுக்கப்பட்ட சாதிகள் தத்தமது சாதி அடிப்படையில் அணிதிரள்வதும், உரிமைகளுக்காக போராடுவதும்தான் அவர்களை விடுவிக்கும். விடுதலைக்கு அது ஒன்றே வழி. சாதியை மறைப்பதால் ஒரு பயனும் இல்லை, இழப்பே மிஞ்சும்.
(முற்பட்ட வகுப்பினர் ஏற்கனவே மிகுந்த சாதி உணர்வு, பெருமையுடன் இருப்பதால் - அவர்கள் புதிதாக இதனை பெறவேண்டிய தேவை இல்லை.)
எம்.ஜி.ஆர். செய்ததெல்லாம் நடைமுறைச் சிக்கல் தானே ஒழிய கோமாளித்தனமில்லை, மேலும் நீங்கள் குறிப்பிட்ட காந்தி,நேரு,பட்டேல் ஆகியவை சாதிப் பெயர்களாக இல்லை என நினைக்கிறேன்.[இருந்தால் ஆதாரம் காட்டவும்]
அருள்!
உங்களோடு ரொம்பவே தமாஷாக இருக்கிறது!
தமிழ் ஓவியா, சங்கமித்திரன் மாதிரி, பேசாமல் உங்கள் வலைத் தளத்திலேயே இத்தனையையும் தொகுத்துப் போட்டுக் கொள்ளுங்களேன்!
சுயசிந்தனையும் இல்லை, மாற்றுச் சிந்தனையும் இல்லை. எதற்காக உங்களுடைய நேரத்தையும், மற்றவர்களுடைய நேரத்தையும் இப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
@ஸ்மார்ட்
காந்தி,நேரு,பட்டேல் ஆகியவை சாதிப் பெயர்களே. இதில் என்ன ஆதாரம் காட்டுவது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெரு, டாக்டர் நாயர் ரோட் ஆகியவை பற்றி என்ன கூறுவீர்கள்.
டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியாரை அவர் வாழ்காலத்தில் யாராவது லட்சுமணசாமி என மொட்டையாக கூறினார்கள் என்றால் அது அவரால் அவமானமாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும்.
எனது கேள்வி இதுதான். இறந்தவர் என்ன உமக்கு மாமனா மச்சானா, அவர் பெயரை இப்படி மாற்ற?
துக்ளக் ஜெயிப்பதற்கு பத்துவுக்கு மொட்டை போடும் கதைதான் இது.
@கிருஷ்ணமூர்த்தி
அருள் என்பவர் அப்படியே ஜெயமோகன் சொல்வது போலத்தான் நடந்து கொள்கிறார். சரியான காமெடி பீஸ். நமக்காச்சு பின்னூட்டங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிருஷ்ணமூர்த்தி said...
// //சுயசிந்தனையும் இல்லை, மாற்றுச் சிந்தனையும் இல்லை. எதற்காக உங்களுடைய நேரத்தையும், மற்றவர்களுடைய நேரத்தையும் இப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?// //
டோண்டு ராகவன் said...
// //@கிருஷ்ணமூர்த்தி
அருள் என்பவர் அப்படியே ஜெயமோகன் சொல்வது போலத்தான் நடந்து கொள்கிறார். சரியான காமெடி பீஸ். நமக்காச்சு பின்னூட்டங்கள்.// //
சும்மா டபாய்க்காதீங்க.
நான் கேட்ட கேள்விகளுக்கோ, கருத்துகளுக்கோ உங்களது பதிலை - அப்படி ஏதாவது இருந்தால் - சொல்லுங்கள்?
//
நான் கேட்ட கேள்விகளுக்கோ, கருத்துகளுக்கோ உங்களது பதிலை - அப்படி ஏதாவது இருந்தால் - சொல்லுங்கள்?
//
அருளு, உண்மையிலையே நீ இப்படித்தானா இல்லை லூசாட்டம் நடிக்கிறியா ?
நீங்கள் கேட்கும் கேள்விகள் (அதெல்லாம் ஒரு கேள்வின்னு கேக்கவந்துட்டானுங்க) எல்லாம் பதில் சொல்லத் தகுதியற்றவை என்பது தான் டோண்டு ராகவன், கிருஷ்ணமூர்த்தி இருவரும் சொல்வது...!
உமக்குப் புரிந்ததோ இல்லையோ, ஊர் ஒலகத்துக்குப் புரிந்துவிட்டது...
Dear Dondu Sir
Given a choice, people will suffer as a comfortable bramin than a poor dalit, considering the percentage of bramin sufferers and dalit sufferers.
Sridhar
சார் இந்தக்கட்டுரையை ஜெமோ பதிவில் பார்ததுமே, இது இங்கு மறுவெளியிடு செய்யப்படும் என்று நினைத்தேன்.
யாரோ எழுதின புதுக்கவிதை தான் நினைவுக்கு வருது,
சாதிவெவ்வேறானாலும் நீயும் நானும் ஒண்ணு தான்,
வா ! சேர்ந்தே 'அள்ளுவோம்'
jayamohan is frank and very honest
in his message.i fully agree with his views and thank him on behalf of many brahmins.i also thank u for bringing his views to us.
madurai radha.
Gandhi, Patel are surnames....
We can say it as Family Names.
M.K. Gandhi belongs to Vaisya Caste and S.V.Patel belongs to Leva Patidar caste.
சீக்கிரம் வாங்க கோவி.கண்ணன்.அள்ளுவோம்.
Good post Mr Dondu
-Vetrikkathiravan Iyer
கோவி கண்ணன் சொன்னது:
/சார் இந்தக்கட்டுரையை ஜெமோ பதிவில் பார்ததுமே, இது இங்கு மறுவெளியிடு செய்யப்படும் என்று நினைத்தேன்./
ரொம்ப சரி! இங்கே பதிவு வந்தால் அது உங்கள் பதிவிலும் தொடர்ந்து எதிரொலிக்கும்,என்று நான் நினைத்ததுமே சரியாக இருக்கிறதே!
அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள், கோவி கண்ணன்?
"இப்போது டோண்டு ராகவன்.
இது, இது இதைத்தான் நானும் பலமுறை சொல்லி வருகிறேன்"
உங்கள் கருத்தும் ஜெயமோகன் கருத்தும் முற்றிலும் ஒன்றல்ல.
சாதிகள் இருக்கட்டும்.
சாதிவாரியாக இடஒதுக்கிட்டை, சாதி மக்கட்தொகை வாரியாக கொடுத்துவிட்டால், சாதியும் இருக்கும்; சந்தோசமும் இருக்கும்.
எல்லாருக்கும் கிடைக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப.
Anonymous said...
// //உமக்குப் புரிந்ததோ இல்லையோ, ஊர் ஒலகத்துக்குப் புரிந்துவிட்டது...// //
பார்ப்பானர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு உமது பதில் ஒரு எடுத்துக்காட்டு.
உங்களுக்கு பார்ப்பான் மட்டும்தான் 'ஒலகம்'னா அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?
// //நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் பதில் சொல்லத் தகுதியற்றவை என்பது தான் டோண்டு ராகவன், கிருஷ்ணமூர்த்தி இருவரும் சொல்வது...!// //
பார்ப்பானுக்கு பிடித்தமாதிரிதான் கேள்விகூட கேட்க வேண்டும் என்கிற அளவுக்கு மிதமிஞ்சி இருக்கிறது உங்கள் சாதிவெறி.
"""பார்ப்பனர்கள் நமது பிரச்சாரத்தினால் புத்தி திருந்திவிடுவார்கள் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும். அவர்கள் தெரியாதவர்களாயிருந்தால் நியாயம் சொல்லலாம்.
நன்றாய்த் தெரிந்தே, எங்கு தங்கள் ஆதிக்கமும் சோம்பேறிப் பிழைப்பும் போய்விடுகின்றனவோ என்று சுயநலங்கருதி, குறங்குப் பிடிவாதமாய் இருப்பவர்களை நாம் எந்தப் பிரச்சாரத்தால், எப்படி மாற்றக்கூடும்?"""
தந்தை பெரியார் - குடிஅரசு 27.10.1929
அட தேவுடா ,
இத்தனை நாள் அருள் என்ற பெயரில் கட்டம் கட்டி ஆடியவர் நம்ம பழைய கட் அண்ட் பேஸ்ட் கன்சாமி தானா?
போக்கிரி வடிவேலு மாதிரி டிபரண்ட் கெட்டப்-ல் அருள்-ன்னு வந்தாலும் கடசில அந்த கொண்டைய கட் பன்னனும்னு தொனாமால் போச்சா ? அய்யோ அய்யோ
Anonymous said...
// //சாதிகள் இருக்கட்டும்.
சாதிவாரியாக இடஒதுக்கிட்டை, சாதி மக்கட்தொகை வாரியாக கொடுத்துவிட்டால், சாதியும் இருக்கும்; சந்தோசமும் இருக்கும்.
எல்லாருக்கும் கிடைக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப.// //
சாதிஒழிப்பு என்பது இந்த தலைமுறைக் காலத்தில் ஆகாது என்று தெளிவாகிவிட்டது. எனவே, அனானியின் இந்தக்கருத்தை நான் வரவேற்கிறேன்.
டோண்டு + கிருஷ்ணமூர்த்தி + வஜ்ரா + மருது & கோ என்ன சொல்கிறீர்கள்?
//டோண்டு + கிருஷ்ணமூர்த்தி + வஜ்ரா + மருது & கோ என்ன சொல்கிறீர்கள்? //
சாதி வாழனும், (இட ஒதுக்கீடு மற்றும் மணி ஆட்டுவது உட்பட அவரருக்கு உண்டான ) சலுகைகளை அனுபவிக்கனும், சாதி மாறி திருமணம் செய்யும் இளையர்களை உயிரோடு கொளுத்தனும். சரியா மிஸ்டர் அருள் ?
//
அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள், கோவி கண்ணன்?//
உங்களுக்கு பிறர் பார்பனரைப் பற்றிப் பேசுவது பிடிக்காது, பார்பனர்கள் மட்டுமே பார்பனர்கள் பற்றிப் பேசுவது பிடிக்கும்.
/டோண்டு + கிருஷ்ணமூர்த்தி + வஜ்ரா + மருது & கோ என்ன சொல்கிறீர்கள்?/
சிங்கிளா வாங்கிக்கட்டிக்கிறது போதாதென்று கும்பலாக வேறு வந்து மொத்த வேணுமாக்கும்!
அருள்! உமக்கு, ஆனாலும் அசட்டு தைரியம் ஜாஸ்தி!
என்னவோ பெரியார் வந்த பிறகு, கருஞ்சட்டைத் தொண்டர்கள் வந்தபிறகு சாதிபோய்ச் சமத்துவம் வந்துவிட்ட மாதிரிப் பீலா விட்டதை இப்போது, நீங்களே இந்தத் தலைமுறையில் ஆகாது என்று சொல்கிறீர்கள்!
இங்கே என்ன நடக்கிறதென்பதைக் கொஞ்சம் பார்ப்போம்!
கொண்டா ரெட்டிக்குக் கொடுத்த சலுகைகளை, காசுபண்ணத் தெரிந்த ரெட்டிமார்கள் தாங்களே அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள்."சாத்தூர்" அண்ணாச்சிகள் சாதித்தது இது ஒன்று.
காட்டு நாயக்கர்கள் என்று ஒரு பிரிவுக்குக் கொடுத்த சலுகைகளை நாயக்கர்கள் போலி சர்டிபிகேட் எடுத்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொண்டாக உள்ளே புகுந்து பார்க்கப் போனால் காருன்யமாக நடத்தப் படும் கல்லூரி என்றாலும், வள்ளத்தில் பகுத்தறிவு மணிகட்டி நடத்தப் படும் கல்லூரி என்றாலும் காசு கொடுத்தால் தான் கதவு திறக்கும் சீட் கிடைக்கும்!
,
பார்ப்பன் என்ன சாமி, நானே பெரிய சாமி என்று ஆடின மருவத்தூர் பராசக்தி கூட மெடிகல் காலேஜ் ஆள் சீட்டைக் காசு கொடுத்தால் தான் தருகிற அளவுக்குத் தான் இடம், ஒதுக்கீடு எல்லாமே இருக்கிறது!
அருள் சாமி! அங்கே போய் ஆடு சாமி!
//பார்ப்பன் என்ன சாமி, நானே பெரிய சாமி என்று ஆடின மருவத்தூர் பராசக்தி கூட மெடிகல் காலேஜ் ஆள் சீட்டைக் காசு கொடுத்தால் தான் தருகிற அளவுக்குத் தான் இடம்,//
சூத்திர சாமியார் பங்காரு அடிகளாரை விடுங்கோ, தலித் கோவிந்தம் நடத்தச் சொல்லும் பெரியவா காலேஜில் சூத்ராளுக்கு இலவசமா இடம் இருக்கான்னு சொல்லுங்க சாமி.
@கட்சியிலும் அண்ணாதுரை மீதும் அவன் வைத்திருந்த பிடிப்பி நெல்லின் உமி சிறிது நீங்குவது போல நீங்கத் தொடங்கிற்று...
அவ்வளவோ கேவலமானவனே நான் என்பதை சொல்லிவிடுகிறார் கவிஞர்.
ஒரு கணையாழிக்காக தன் கொள்கைகளை மாற்றிக்கொண்ட இவன் எழுதிய எதையும் நம்பமுடியாது.
கண்ணா..கண்ணா என்றெழுதிய இவன் ஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணிக்காக ‘அல்லா..அல்லா..” என்றிருப்பான்.
ஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி, ஒரு பாட்டல், ஒரு பொம்ப்ளை - இவை போதும் இவனுக்கு.
நன்றி அனானி...இவனின் உண்மைமுகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியதற்கு.
கிருஷ்ணமூர்த்தி said...
// //காசு கொடுத்தால் தான் கதவு திறக்கும் சீட் கிடைக்கும்!// //
அதான் தெரியுதுல்ல.
அப்புறம் எதுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்று இப்பவும் எதிர்க்கின்றீர்?
காசு கொடுத்துக்கூட சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்கிற சாதிவெறியா?
கோவி.கண்ணன்!
நீங்களும்,அருளோடு சேர்ந்து கொண்டு பரிவாரங்களுடன் தலித் கோவிந்தம் பேசுகிற பெரியவாவிடமும் அப்படியே ஏசு அழைக்கிறார், காசு கேட்கிறார் ரகக் காருண்யாக் கூட்டத்திடமும் சேர்ந்து கேளுங்கோ சாமி!
எனக்கு எந்த ஆட்சேபமுமில்லை.நேரம், உடல் நிலை அனுமதித்தால் நான் கூட வந்து சேர்ந்து கொள்கிறேன்!
@அருள்!
அதெப்படிங்க! என்ன மொத்து வாங்கினாலும் உங்களால் தொடர்ந்து காமெடிப் பீஸ் வேஷம் கட்ட முடிகிறது? வடிவேலு சினிமாவில் வேஷம் கட்டி மொத்து வாங்கினால் காசு கிடைக்கும்.
உங்களுக்கு என்ன கிடைக்கிறதென்று இவ்ளோ கஷ்டப்பட்டு மொத்து வாங்குகிறீர்கள்?
கோவி.கண்ணன் said...
// //சாதி வாழனும், (இட ஒதுக்கீடு மற்றும் மணி ஆட்டுவது உட்பட அவரருக்கு உண்டான ) சலுகைகளை அனுபவிக்கனும், சாதி மாறி திருமணம் செய்யும் இளையர்களை உயிரோடு கொளுத்தனும். சரியா மிஸ்டர் அருள் ?// //
சரியல்ல - தவறு. திருமணம் செய்ய ஆண்/பெண் தான் தேவை, சாதி தேவையில்லை. (இப்போதெல்லாம் ஒருபால் திருமணங்கள் கூட அங்கீகரிக்கப்படுகின்றன.) சாதி மாறி திருமணம் செய்யும் இளையர்களை உயிரோடு கொளுத்துவது கொடும் குற்றம். குற்றமிழைப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சாதி அடிப்படையில் உரிமை கேட்பதற்கும் இதற்கும் தொடர்பேதும் இல்லை.
வகுப்புவாரி உரிமை என்பது சாதி வேண்டும் என்பதோ, சாதிப்பெருமை பேசுவதோ, சாதிவெறிபிடித்து மற்ற சாதிகளுடன் சண்டையிடுவதோ அல்ல.
கண்ணெதிரே இருக்கும் ஒரு கொடிய நோய்க்கு ஒரே மருந்து மக்கள்தொகைக்கேற்ப வகுப்புவாரி உரிமை/பங்கு அளிப்பதுதான்.
"""நமது நாட்டில் பல வகுப்புகளிருந்தபோதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கிறதா? தேசத்தில் வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்கமிருக்கிறதா என்பதைக் கவனித்து, வேலை செய்தால், அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டுவந்ததாகும். (தந்தை பெரியார், குடிஅரசு 14.02.1926).
""வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணரமுடியாதவனோ, தன் வகுப்பைப்பற்றிச் சந்தேகப்படத்தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்பது தேசத்துரோகம் என்று சொல்லப்படுமானால் அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும்." (தந்தை பெரியார், குடிஅரசு 22.9.1940).
"ஒவ்வொரு வகுப்பாருக்கும் இத்தனை உத்தியோகங்கள்தாம் என்று திட்டவட்டமாக வரையறுத்துவிட வேண்டும். அந்த எண்ணிக்கைக்கு மேற்பட்டு எவராவது, எந்த வகுப்பினராவது ஓர் ஆள் அதிகமாக உத்தியோகம் பார்த்தால் அவர்மீது துராக்கிரத ஆக்கிரமிப்புக் குற்றம் சாட்டப்பட்டு, அவனுக்கு வேலை கொடுத்தவனுக்கு நாணயக் குறைவுக் குற்றம் சாட்டியும் அதற்கான தண்டனையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும், எல்லா வகுப்பினரும் சமநிலை எய்தமுடியும்.
இல்லையேல், மேலே இருப்பவர்கள் இன்னும் உயர உயர போய்க்கொண்டே இருக்க - தாழ்ந்த நிலையில், சமுதாயத்தின் அடித் தளத்திலேயே வேதனையுறுவோர், மேலும் மேலும் தாழ்ந்து அழிந்து போகவேண்டிய நிலைமைதான் ஏற்படும்.""" (தந்தை பெரியார், குடிஅரசு 17.8.1950).
இப்பதிவே ஜெயமோகன் கூறியதையே முக்கியமாக குறிப்பிட்டுள்ளது. அதில் கூறப்பட்டதையே அருளும் தனது பின்னூட்டங்கள் மூலம் உறுதிப்படுத்திவிட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தலித்துக்களில் தான் ஒரு தலித் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. //
பார்ப்பன, மேட்டிமை சாதிகளில் எத்துணை பேருக்கு எதிர்ப்படுபவன் பார்ப்பனரல்லாதவன் எனக்கருதி செயல்படும் கேவலமான உணர்ச்சி இல்லை
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=941&ncat=2
அந்துமணி வாரமலர் பா.கே.ப
தேனி மாவட்டம், வீரபாண்டியிலிருந்து வாசகி ஒருவரின் கடிதம். அவர் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறாராம். அந்நிறுவனம் சார்பில் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களில் ஈடுபடுகிறாராம்.
சமீபத்தில், எட்டு தொண்டு நிறுவனங்கள் இணைந்து, தேனி மாவட்டத்தில் உள்ள தலித் பெண்களின் நிலை பற்றி தகவல் சேகரித்தனராம்.
கடிதத்தில் வாசகி எழுதியுள்ளது இது தான்...
கம்ப்யூட்டர் காலத்திலும் அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடக்கும் தலித் மக்களின் நிலைமையை உயர்த்த, கடவுள் மனிதனாக பிறந்து வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்...
வெளிப்பேச்சுக்கு மட்டுமே அரசியல்வாதிகள், தலித் மக்களிடம் உரிமை கொண்டாடுவது போல் தோன்றுகிறது.
பெண்களை விட ஆண்களிடம் ஜாதி வித்தியாசம் அதிகமுள்ளது. பெண்கள் பொறாமை குணம் படைத்தவர்கள் தான்; ஆனால், ஆண்களை மாதிரி ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்ல...
நாய்க்கு எலும்புத்துண்டு போடுவதுபோல், தலித்களுக்கு இட ஒதுக்கீடும், இலவச திட்டங்
களும் கொடுக்கின்றனர் ஆட்சி செய்வோர்.
தலித் மக்கள் அதிகம் உள்ள கிராமங்களில், தலித் மக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், மற்ற ஜாதி மக்களை தாழ்த்திப் பேசுவது கிடையாது. ஆனால், சிறுபான்மையாக தலித் மக்கள் உள்ள கிராமங்களில் அவர்களின் நிலைமையை
(குறிப்பாக, சக்கிலியர் நிலைமை.) நினைக்கும் போது, நாம் எந்த நூற்றாண்டில் உள்ளோம் என பதற வைக்கிறது.
சர்வேயில் கீழ்கண்ட கேள்விகளை தலித் மக்களிடம் கேட்டோம். இச்சர்வேயில் எஸ்.சி., பி.சி., குழுக்களிடம் தனித்தனியாக கலந்துரையாடினோம்.
தலித் மக்கள் உள்ள கிராமங்களில் நடந்த சர்வே (சதவீதத்தில்):
1. காலணி அணிந்து மேல் சட்டையுடன் ஊருக்குள் செல்ல முடியுமா?
ஆம் – 80, இல்லை – 20.
2. அனைத்து கோவில்களுக்கும் சென்று வர முடியுமா?
ஆம் – 2. இல்லை – 98.
3. பொது இடங்களில் மற்ற பெண்களுடன்
சமமாக உட்கார முடியுமா?
ஆம் – 10, இல்லை – 90.
4. பிற ஜாதியினர் வீட்டிற்குள் செல்ல முடியுமா?
ஆம் – 0, இல்லை – 100.
5. டீ கடைகளில் தனி டம்ளர் உண்டா?
ஆம் – 90, இல்லை – 10.
6. பொது சுடுகாடு வசதி உண்டா?
ஆம் – 0, இல்லை – 100.
7. இறந்த சேதி சொல்லுதல், அவ்வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலை செய்கின்றனரா?
ஆம் – 50, இல்லை – 50.
8. பொது கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியுமா?
ஆம் – 75, இல்லை – 25.
மேற்கண்ட கேள்விகளை எஸ்.சி., மற்றும் பி.சி., பெண்களிடம் கேட்கும் போது, சில பெண்கள், "உண்மையைச் சொன்னால் நாங்கள் ஊரில் வாழ முடியாது...' என்று பயந்தனர்; சில பெண்கள் உண்மையைத் தைரியமாகக் கூறினர்.
தேனி மாவட்டத்தில், குறிப்பாக, ஆண்டிபட்டி, கடமலை, பெரிய குளம், போடி, தேனி வட்டங்களில் இந்த சர்வே செய்தோம்.
டீ கடைகளில் தனி டம்ளர் முறை அதிகமாக உள்ளது. அலுமினிய டம்ளருக்கு பதில் எவர்சில்வர் டம்ளர் பயன்படுத்துகின்றனர். கடையில் எவர்சில்வர் மற்றும் பீங்கான் டம்ளர்கள் உள்ளன. எஸ்.சி.,க்கு எவர்சில்வர் என்றால், பி.சி.,க்கு பீங்கான்... எஸ்.சி.,க்கு பீங்கான் என்றால், பி.சி.,க்கு எவர்சில்வர். பார்ப்பதற்கு வித்தியாசம் தெரியாது; ஆனால், தனி டம்ளர் முறை உள்ளது.
தனி டம்ளர் முறை உள்ள கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் ஒரு குழு உள்ளது. ஆனால், அக்குழுவில் உயர் ஜாதியினர் மற்றும் பணக்கார தலித்துக்கள் உறுப்பினராக உள்ளதால், கமிட்டியால் சரியாக செயல்பட முடியவில்லை.
குறைந்தது ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, போடி தாலுக்காவில் 60 கிராமங்களில் தனி டம்ளர் முறை உள்ளது. இதை தடுக்கப் போவது யார் என்று தான் தெரியவில்லை.
Anonymous said...
// //அந்துமணி வாரமலர் பா.கே.ப// //
அய்யோ பாவம்.
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகிறது.
சாதி காலத்தின் கட்டாயம், அது தவிர்க்கப்படமுடியாதது என்கிறார் டோண்டு.
தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருப்போர் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று கட்டுக்கதையை அள்ளிவிடுகிறார் ஜெயமோகன். (அறிவு, நாணயம், நேர்மை இருந்தால் - இதற்கான ஆதாரத்தை அவர் காட்டவேண்டும்.)
பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி என்கிறார் இன்னொரு அனானி 'அவாள்'.
ஆனால், சாதி இருக்கிறது, அது மக்களின் முதன்மை சிக்கலாகவும் இருக்கிறது - சாதியால் ஏற்பட்டுள்ள கேடுகளுக்கு சாதி அடையாளத்தை முன் நிறுத்துவதும், வகுப்புவாரி விகிதாச்சார பங்கீடும்தான் தீர்வு என்றால் - பார்ப்பனர்களுக்கு அடிவயிறு எரிகிறது.
சரி நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள் ?- எப்போதும் போல சாதி ஏற்றத்தாழ்வுகள் நீடிக்க வேண்டும். பார்ப்பான் உயர்ந்த சாதி என்று கோலோச்ச வேண்டும். படைக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் 'அவாள்'களே அதிபதிகளாக இருக்க வேண்டும் எனபதுதானே உங்கள் அடிமனதின் அவா.
மனுதர்மமும் சனாதனதர்மமும் கால காலத்திற்கும் நாட்டின் தலைவிதியாக நீடிக்க வேண்டும் என்பதுதானே உங்கள் பேராசை.
டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியாரை அவர் வாழ்காலத்தில் யாராவது லட்சுமணசாமி என மொட்டையாக கூறினார்கள் என்றால் அது அவரால் அவமானமாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும்.=========
@ எப்படி சொல்கிறீர்கள்?
கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவர்மட்டும்தான், அவர் மனம் என்ன நினைக்கும் எனச்சொல்ல முடியும். லட்சுமணசாமி ஒரு ஜாதி வெறியராயிருந்தால் மட்டுமே தன் ஜாதி கண்டிப்பாக சொல்லப்படவேண்டும் என நினைப்பார். ஏனெனில் ஜாதிவெறியர்கள் மட்டுமே ஜாதிப்பெயரை இணைத்துக்கொள்வர். மற்றவர் ஏன் ஜாதிப்பெயருக்கு அலையவேண்டும்? லட்சுமணசாமி ஒரு ஜாதி வெறியரா?
”எனது கேள்வி இதுதான். இறந்தவர் என்ன உமக்கு மாமனா மச்சானா, அவர் பெயரை இப்படி மாற்ற? -----
@ நனனாக்கேட்டுட்டீங்க போங்க !
ஒருவன் தனிப்பட்ட வாழ்க்கை வாழும் வரையில், நான் உன் மாமனா மச்சனா என்று அவன் கேட்கமுடியாது. பொதுவாழ்க்கைக்கு வந்து விட்டால், அவன் வாழ்க்கை ஒரு ரகசியம் இல்லை. அது முழுக்க அவன் வாழ்க்கையுமல்ல. அவன் பொதுவாழ்க்கை மக்களைனைவரையும் பாதிக்கிறது.
கருனானிதி என்னைப்பற்றி எவரும் சொல்லக்கூடாது என்பதும் ஒரு நடிகை, ”நான் எங்கே எந்த சாமியாருடன் கட்டிப்புரண்டேன்” என்று கேட்கக்கூடாது என்பதும் ஒன்று. இருவரையும் பொது மக்கள் கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள். அவர்களது வாழ்க்கையை விமர்சிப்பார்கள்.
அதைப்போலவே ஒருவனோ அல்லது ஒருத்தியோ, ஊரின் தெருவுக்குப்பெயரிடும் அள்வுக்கு பெரும்புள்ளியாகி விட்டால், அவனோ அவளோ செத்த பின்னும் (அதற்குப் பிறகுதானே வைக்கிறார்கள் பெயர்களை?) அவ்ர்களைப் பற்றி யாரும் பேசலாம்.
எதிர் கேள்வி டோண்டுவுக்கு
”மாமனா மச்சனா என்று கேட்பதற்கு முன் ஏன் எங்கள் ஊரின் தெருவுக்கும் க்ட்டடத்துக்கும் உஙகள் பெயர்கள் ?
பொது மக்கள் சொத்தா? உங்கள் வீட்டுச் சொத்தா? உங்கள் வீட்டுக்கு, உங்கள் கதவுக்கு, உங்கள் ஜன்னலுக்கு வைத்துகொள்ளலாமே? வீட்டில் நீ பத்தினியோ அல்லது ... கவலையில்லை. ரோட்டில் இறங்கி நடந்தால், பொது ஒழுக்கம் பேணப்பட வேண்டும். இல்லாவிட்டால், சொல்லிழுக்குப் படவேண்டும்.”
உன் அக்காவா, தங்கச்சியா நான் என்னைக்கேள்வி கேட்கிறாய்? என்ற பருப்பு வேகாது
@அனானி
அப்படீன்னா நாயர் ரோட், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ரோட் ஆகிஒயவர்றை எப்படி விளக்குவீர்கள்?
ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வது ஜாதி வெறியர்கள் எனப் பொருள் கொள்ள முடியாது.
இறந்தவர் பெயரை மாற்ற யார் இவர்களுக்கு அதிகாரம் தந்தது என்பதே என் கேள்வி.
கூடவே எம்ஜிஆரின் இந்த கோமாளித்தன செய்கை பல நிர்வாகச் சிக்கல்களை கொண்டு வந்தது என்பது தனி சேனலில் போகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அய்யோ பாவம்.
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகிறது.
//
அத ஒரு முதலை சொல்லுது...!
அப்படீன்னா நாயர் ரோட், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ரோட் ஆகியவர்றை எப்படி விளக்குவீர்கள்?
@விளக்க முடியாது. அது ஒரு பொலிடிக்ஸ். தவறானது. ஜாதிப்பெயர்கள் நீக்கப்பட்டால் எல்லாவற்றையுமே நீக்கவேண்டும்.
ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வது ஜாதி வெறியர்கள் எனப் பொருள் கொள்ள முடியாது.
@ சரிதான். அப்படியே வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக, ஒரு பாலிசி எடுக்கப்படும்போது எல்லாரும் ஒத்துழைத்து ஜாதிப்பெயர்களை நீக்கிக்கொள்ளவேண்டும். ஜாதிப்பெயர்களோடுதான் இருப்பேன் என்று அடம்பிடிப்பது, ஜாதிவெறியில்லாமல் வேறென்ன?
இறந்தவர் பெயரை மாற்ற யார் இவர்களுக்கு அதிகாரம் தந்தது என்பதே என் கேள்வி.
@அரசுக்கு அதிகாரம் தந்தது மக்கள். மக்கள் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துகிறார்கள் அக்கட்சியின் கொள்கையும் அதன் வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொண்டு.
வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சியில் அமர்ந்தவர்கள் என்ன செய்யவேண்டுமென நினைக்கிறார்களோ அதைச்செய்ய அவர்களுக்கு மேண்டேட் (மக்கள் தந்த அதிகாரம்) இருக்கிறது. ஜாதிப்பெயர்களை நீக்க அவர்கள் நினைத்தால், அவர்கள் செய்யலாம். செத்தவன் ஜாதிப்பெயர் பொதுமக்கள் புலக்கத்தில் இருந்தால் நீக்கலாம். அவன் சிலையை அகற்றலாம். அவர்களுக்கு என்ன அதிகாரம் என்று கேட்க முடியாது. பிடிக்கவில்லையென்றால், வேறு க்ட்சிக்கு ஓட்டுப்போட்டு ஆட்சியில் அமர்த்தி மீண்டும் ஜாதிப்பெயர்களை கொண்டு வரலாம். நோ அப்ஜக்ஷன்!
//டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியாரை அவர் வாழ்காலத்தில் யாராவது லட்சுமணசாமி என மொட்டையாக கூறினார்கள் என்றால் அது அவரால் அவமானமாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும்.//
டோண்டு அய்யா,
என்னங்க இது தவறான கருத்த சொல்லியிருக்கிறீங்க?லட்சுமணசாமி முதலியார் அய்யாவை அவங்க அம்மா அப்பா "எலே லட்சுமணசாமி முத்லியார்"னா கூப்பிட்டிருந்தா அவர் மனம் வேதனை அடைந்திருக்குமா அடைந்திருக்காதா?தெருக்களில் சாதி பெயர் எடுத்தது நல்லதொரு செயல் என்று தோன்றுகிறது.
இன்னுமொன்றையும் யோசித்துப் பாருங்களய்யா.நம்ம மரம் வெட்டி மருத்துவர் புண்ணியத்துல தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து "திராவிட வன்னிய நாடு" தனி மாநிலமாக உதயமானால் என்ன கொடுமையெல்லாம் நடக்க வாய்ப்புள்ளது. கடலூர் கடைதெருவுக்கு "அருள் படையாச்சி சந்து"ன்னு வன்னிய ஜாதி வெறி தலைவரோட பெயர் வைப்பாங்களா மாட்டாங்களா?
ஏற்கெனெவே வன்னிய திரு நாட்டுல வசிக்கறோமே என்று நொந்து நூலாய்ப் போயிருக்கும் எம் தமிழ் மக்கள்,"அடப் பாவிகளா இதைவிட 'பெரும் பீயுண்ட கரும்பன்னி வாயன் சந்து'ன்னு தூய திராவிட வன்னிய பொங்கு தமிழ் பண் பெயரை வச்சுருக்காலாமேடா"ன்னு வேதனையோடு சொல்லுவாங்களா மாட்டாங்களா?எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
பாலா
ஒரு இசுலாமியப் பதிவரின் இடுகை ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:
http://ww5.pondicherryblog.com/2010/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/#comment-809
//அது என்ன எல்லா உதாரணங்களும் உங்களுக்கு சம்பந்தமில்லாத மதத்திலிருந்து எடுத்து போடுகிறார்கள்? இசுலாமிய சமூகத்தில் இல்லாத சாதிக்கொடுமையா? அதைப் பற்றி ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள்?
பார்க்க: http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_5.ப்ப்
அதிலிருந்து சில வரிகள்:
“இசுலாமியர்களிடம் சாதியம் இருப்பதை எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் தன் எழுத்துகளில் பதிவு செய்திருப்பதையும் அதற்காக தக்கலை ஜமாத் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருப்பதையும் என்னுரையில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் ஜமாத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்திருப்பதைச் சொல்ல வரும் நோக்கத்தில் அப்போது நினைவில் வந்த "ரசூலில் தலையை வெட்டிவிடலாம். ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளை என்ன செய்யப்போகிறீர்கள்?" என்ற கவிஞர் இன்குலாப்பின் கூற்றை எடுத்துரைத்தேன்.
இலண்டனிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் பசீர் அவர்கள் கலந்துரையாடலில் சொன்ன மறுமொழியில் 'இன்குலாப் புலி ஆதரவாளர்..' என்றார். பசீரின் இந்த மாதிரியான மறுமொழி என்னைக் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. இன்குலாப் புலி ஆதரவாளாரா.. இல்லையா ? என்பதல்ல இங்கே கேள்வி. அவர் சொன்ன கருத்து மட்டுமே. இன்குலாப் புலி ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே அவர் சொல்வதை நம்பகத்தன்மையுடன் ஏற்க மறுப்பது என்ன மாதிரியான புரிதல்?
ராயகரன் குறுக்கிட்டு இசுலாமியர்களிடமும் சாதியம் இருப்பதைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் என்னுடைய கூற்றை பசீர் ஓர் இசுலாமியராக மட்டுமே தன் வட்டத்துக்குள் நின்று கொண்டு மட்டுமே பார்ப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் முஸ்லீம் சமூகத்தில் சாதிப் பிரிவினைகள் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாவிதர், மரைக்காயர், வெள்ளாட்டிகள் என்ற பிரிவுகளில் நாவிதர்கள் மற்றவர்களால் இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். மரைக்காயர் போன்ற உயர் பிரிவினர் திருமண உறவுகளை நெருங்கிய சொந்தத்திற்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை முஸ்லீம்களுக்கும் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கும் இடையே திருமண உறவுகள் கிடையாது என்பதை நானறிவேன். அதுமட்டுமல்ல, புதிதாக இசுலாத்திற்கு மதமாறி வரும் தலித்துகளை இவர்கள் சரிசமமாக நடத்துகிறார்களா என்றால் சில ஊர்களில் புதிதாக மதம் மாறியவர்கள் எதையாவது முறையிடும்போது 'அட..மொறையப் பத்தி எல்லாம் பறையங்க கிட்டேப் பேசணுமோ?" என்று பெரியதனக்காரர்கள் சொல்லியும் இருக்கிறார்கள்”
வினவின் கருத்துக்கள் பலவற்றுடன் நான் முரண்படுகிறேன். இருப்பினும் அவரது இப்பதிவில் அவர் இசுலாமியத்தில் உள்ள சாதிக்கொடுமைகள் பற்றி எழுதியுள்ளார். பார்க்க: http://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/
நான் கூற வருவது இதுதான். இந்த சமூகக் கேடு பற்றி எழுதப் புகுந்த நீங்கள் உங்களது சொந்த மதத்தில் இருக்கும் சாதி வேறுபாடுகள் குறித்து கள்ளமௌனம் சாதிப்பதைத்தான்.
இப்பின்னூட்டத்தை நீங்கள் பாட மறுத்தாலும் மறுக்கலாம். ஆகவே இதையே எனது சொந்தப் பதிவிலும் பின்னூட்டமாக நகல் எடுத்து ஒட்டுகிறேன், பார்க்க://
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனைவருக்கும் வணக்கம், எமது தளத்தில் அய்யா ஒன்றும்செய்யா ராகவனின் கருத்துகளுக்கு http://bit.ly/f7fTjW சில விளக்கங்கள் இங்கே இடுவது, அத்தளாத்தை வழிநடத்தும் எனது கடமை ஆகின்றது.
1. ஒருவர் ஒரு கருத்தை கூறினால் அதனை அலசிப்பார்த்தல் அவசியம் ஆகின்றது.
2. அக்கருத்து தவறு என்றுப்பட்டால் அதனை தக்க சான்றுகளுடன் எடுத்துரைத்தல் நலம்.
3.அய்யா ஒன்றும்செய்யா இராகவனின் கூற்றுப்படி இஸ்லாத்தில் சாதியம் உண்டு, ஆக ஒரு இஸ்லாமிய பெயர் தாங்கிவர் இந்துமதத்தைப் பற்றி அதனைக் கூறக் கூடாதாம்
அய்ய இரண்டு இடத்தில் சறுக்கிவிட்டார், செயமோகனை ஆஹா ஒஹோ என்றுபதிவிட்டாலும், செயமோ கூறியதில் ஒன்றை மறந்துவிட்டீர்கள், கேரளாத்தில் ஒரு மத்ததார் இன்னொரு மதத்தாரை பகடி செய்தாலும், நக்கலடித்தாலும் கோபப்படுவதில்லை. இதைத்தான் அவர் கூறியிருந்தார். அதற்கு நேர்மாறாகா ஒன்றும்செய்யா இராகவன் எம் தளாத்தில் கருத்திட்டு இருந்தார்.
இன்னொன்று, perception நினைத்தல் சரியென் நினைத்தல். அதாவது நான் ஒரு இந்து, அவர் ஒரு இஸ்லாமிய பெயர் தாங்கியவர், அவர் இன்ன மதம் என்று அறியாமலேயே அவர் இன்னார் தான் என இட்டுக்கட்டுதல். இது உங்களின் அறியாமையக் காடுகிறது.
இக்பால் செல்வன் ராகவன் பிறந்த அதே குலத்தில் பிறந்தவர், ஆனால் அவரும் அவர் பெற்றோரும் அந்த அடையாளத்தை துறந்த முற்போக்கு சிந்தாவாதிகள்.
அதனால் தான் அவரை ஒரு இஸ்லாமியர் என நினைத்துவிட்டார். பரவாயில்லை. உங்களைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் தீய்வர்கள் என்று நினைத்தாஅல். இக்பால் செல்வன் அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.
மற்றபடி நீங்கள் இஸ்லாத்தில் சாதியம் பற்றி கூற நினைத்தால் அதனை ஒரு கட்டுரையாக தீட்டி தருங்கள். தாராளாஅமாக அதனை வெளியிடுகிறோம். நன்றிகள்
Post a Comment