நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் போட்டு ரொம்பநாளாச்சு பெரிசு, நீ போடறயா இல்லே நானே போடட்டுமா என முரளிமனோகர் சில நாட்களாக படுத்தி வருவதால் நானே போடறேண்டான்னு அவன்கிட்டே சொல்லிட்டு, இப்போ இப்பதிவை போடறேன்.
புதிர்களை அவ்வப்போது தோன்றும்போது எழுதி வரைவாக வைத்துக் கொள்வது வழக்கம். இது வரைக்கும் 4 தேறியுள்ளன, சரி அதையும் இங்கேயே கேட்டுடுவோம்னு போட்டுட்டேன்.
மேலும் சில புதிர்கள்
1. இரு ஷட்டகர்கள் (சகலைபாடிகள்) சடகோபாச்சாரியும் கண்ணன் ஐயங்காரும் காட்டில் வாக்கிங்கிற்கு சென்ற போது வழி தவறி விட்டனர். என்ன செய்வது எனப் புரியாது சடகோபாச்சாரி வடக்கு நோக்கி நகர, கண்ணன் ஐயங்காரோ தெற்கு நோக்கி நகர்கிறார். கால் மணி நேரம் அவ்வாறு நடந்த பின்னால் அவ்விருவருவரும் சந்திக்கின்றனர். எப்படி இது சாத்தியம்?
2. சீனக்கலாசாரம் 4500 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தியக் கலாச்சாரமோ 5500 ஆண்டுகளாக இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என வாத்தியார் பாஷ்யம் ஐயங்கார் கேட்க மாணவன் கஸ்தூரிரங்கையங்கார் பதிலளிக்கிறான். ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார். அவன் என்ன பதில் சொல்லியிருப்பான்?
3. ஆசிரியர் ரங்காராவ் திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார் என்றால், அதே கஸ்தூரிரங்கையங்கார் 2000 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எனச் சொல்லி உதை வாங்குகிறான். அது எப்படி அவ்வளவு கரெக்டாக சொன்னானாம்? ஏதேனும் கார்பன் டேட்டிங் முறை புதிதாக வந்திருக்கிறதா என்ன?
4. தொட்டதெல்லாம் பொன்னாகும் என வரம் பெற்ற மைதாஸ் மன்னன் மிகத் துயருறுகிறான். அவன் சாப்பிட நினைத்த உணவு தங்கமாகிறது, அவனது அருமை மகளை கட்டி அணைக்க அவளும் தங்கப் பதுமையாகி விட்டாள். பாவம் அவன் என்னதான் செய்வான் இதில் எல்லாவற்றிலிருந்தும் விடிவு பெற என பத்தாம் வகுப்பு ஆசிரியர் சங்கரராமன் அழகான ஆங்கிலத்தில் அங்கலாய்க்க, மாணவன் வரதராஜன் மகரக்கட்டு உடைந்த தன் கழுதைக் குரலில் தமிழில் யதார்த்தமாக ஒரு தீர்வு சொல்ல ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார் (நான் சமீபத்தில் 1960-61 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்தபோது உண்மையாகவே நடந்த நிகழ்ச்சி இது). அப்படி என்ன வரதராஜன் தவறாகச் சொல்லியிருப்பான்?
சாதிகள் தவிர்க்கப்பட்டிருக்க முடியுமா?
ஆல்டஸ் ஹக்ஸ்லி என்னும் ஆங்கில எழுத்தாளர் எழுதிய “சாகசங்கள் நிறைந்த ஓர் புது உலகம்” (Aldous Huxley's Brave New World") என்னும் புத்தகம் போன நூற்றாண்டில் முப்பதுகளில் வந்தது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது பற்றி மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லலாம். நான் இப்பதிவில் கூறவந்த விஷயங்களுக்கு தேவையானவற்றை மட்டும் அதிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.
குழந்தை பிறப்பையே ஆண் பெண் சேர்க்கையிலிருந்து விலக்கிவைத்து விஞ்ஞான பூர்வ முறையில் செயற்கை கருத்தரிப்பு, இன்குபேட்டரில் கருக்கள் ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்கும் ஒரு சமூகம் பற்றிய கதை இது என்றால் மிகையாகாது.
அதில் கருக்களை அவை குழந்தைகளாக உருவாகும் முன்னரே ஐந்து சாதிகளாக பிரிக்கின்றனர் (five castes என்றே வெளிப்படையாகக் கூறப்படுகிறது). அவற்றுக்கு ஆல்ஃபா, பீட்டா, காம்மா, டெல்டா மற்றும் இப்சிலான் என பெயரிடுகின்றனர். இப்பெயர்கள் கிரேக்க மொழியில் உள்ள முதல் ஐந்து எழுத்துக்களே, ஆங்கிலத்தில் A, B, C, D & E எனக்கூறலாம்.
ஆல்ஃபாவைச் சேர்ந்த குழந்தைகள் அறிவில் சிறந்தவர்கள், புதிய கண்டுபிடிப்புகளைக் கூறுபவர்கள், மனபலம் மிக்கவர்கள் இத்யாதி, இத்யாதி. மற்ற வகை கருக்கள் ஆரம்பத்திலிருந்தே அவரவர் அறிவு வளர்ச்சியில் வெவ்வேறு நிலைகளில் தடை செய்யப்பட்டு பல வேறு திறமைகளை வளர்க்கின்றனர். அவரவர் திறமைக்கேற்ப அவரவரிடமிருந்து பிறகு வேலைகள் பெறப்படுகின்றன. சிலர் அறிவு சம்பந்த வேலைகளில், சிலர் அரசாட்சி செய்து போர்த் தொழிலில் ஈடுபடுதல், சிலர் வியாபாரத்தில் செயலாற்றல், சிலர் மற்ற பிரிவினருக்கு சேவை அளித்தல் ஆகியவையும் அந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன. அதே சமயம் ஒவ்வொரு சாதிக் குழந்தையும் தத்தம் சாதியே சிறந்தது என மூளைச்சலவையும் செய்யப்படுகின்றனர். ஆகவே யாரும் சாதியை மாற்றிக் கொள்ளும் குழப்பமும் இல்லை.
இதெல்லாம் நான் சொல்லவில்லை அந்த நாவல் சொல்கிறது. தமாஷாக நாடோடி அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தமிழகத்தில் என்னென்ன சாதிகள் இருக்கும் என்பதை கற்பனை செய்து எழுதியதை நான் எனது ஒரு பதிவில் கூறியவற்றில் இருந்து சில வரிகள்:
“அன்றிரவு தங்குவதற்காக ஹோட்டலுக்கு பாகலாம் என்றால் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஹோட்டலாக இருந்தது. ஆக வக்கீலும் எழுத்தாளரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வேண்டி வருகிறது. நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.
ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்”.
வேறு ஒன்றும் வேண்டாம், சாதாரண அரசு அலுவலகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். Class 1, class 2, class 3 class 4 ஆகிய நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தந்த கிளாசுகளுக்கான சம்பள விகிதங்கள், பொறுப்புகள் ஆகிய எல்லாமே வரையறுக்கப்படுகின்றன. கிளாஸ் மாறுவதற்கு படாத பாடும் பட வேண்டியிருக்கிறது. யூ.பி.எஸ்.சி. தேர்வுகள் எழுதி பெற்ற மதிப்பெண்களுக்கேற்ப கிளாஸ் 1 & 2 அதிகாரிகள் வேலையில் சேர்க்கப்படுகின்றனர். கிளாஸ் 3 சூப்பர்வைசர் மற்றும் கிளெரிக்கல் கேடர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டினால் பிரமோஷன் மூலம் அபூர்வமாக கிளாஸ் 2 க்கு வேண்டுமானால் வரலாம், கிளாஸ் 1-க்கு வரவே இயலாது.
ஆனால் இங்கும் ஒரு தமாஷ். பல கிளாஸ் 3 ஊழியர்களுக்கு (வங்கி குமாஸ்தாக்கள்) டிரான்ஸ்ஃபர் இருக்காது. ஆகவே சௌகரியமாக ஒரே ஊரில் இருந்து கொண்டு சைட் பிசினஸ் பார்க்க ஏதுவாக அரும்பாடுபட்டு தவறிக்கூட கிளாஸ் 2-க்கு பதவி உயர்வு வராமல் பார்த்துக் கொள்கின்றனர். அவர்களைக் கேட்டால் கிளாஸ் 3-யே உத்தமம் எனக்கூறுவார்கள். பல கிளாஸ் 4-க்களின் நிலைப்பாடோ வேறு மாதிரி. வெறுமனே தண்ணீர் கொண்டு வந்து வைப்பது, கோப்புகளை ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு கொண்டு செல்வது போன்ற வேலை செய்பவர்களைக் கேட்டால் ஆளைவிடுங்கள், அரசு வேலை, நல்ல சம்பளம், பெரிய பொறுப்பும் இல்லை என்ற ரேஞ்சிலேயே பதில்கள் வரும்.
இதெல்லாவற்றையும் மீறி அடுத்த மேல் வகுப்புக்கு செல்பவர்களும் உண்டு. அவர்களிலும் பலர் பின்னால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது “நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். இப்பப் பார் பொறுப்பு அதிகம், இடமாற்றம் வேற, சம்பளம் அப்படி ஒண்ணும் அதிகம் இல்லை. குடும்பம் குழந்தைகளுக்கான படிப்புக்காக ஓரிடத்தில், நாம் இன்னோரிடத்தில் இரட்டைச் செலவு, தேவையா இது தேவையா என வடிவேலு ரேஞ்சுக்கு தங்கள் முகத்துக்கு முன்னால் தம் விரலையே காட்டிக் காட்டிப் பேசுபவர்களும் உண்டு.
ரேண்டமாக எந்த சமூகமோ, மக்கள் சேர்ந்து வாழும் குழுக்களோ எல்லாவற்றிலும் தினசரி விஷயங்களை நடத்திச் செல்ல வேவ்வேறு திறமையுடையவர்கள் தேவைப்படுவார்கள். கால நேர வர்த்தமானத்தைப் பொருத்து இம்மாதிரி வேலை பங்கீடுகள் நடக்கும். அது காலத்தின் கட்டாயம். பிற்காலத்தில் தமிழ்மணத்தில் பலர் அது பற்றி திட்டுவார்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரிந்திராது, அவ்வாறே தெரிந்தாலும் போடா ஜாட்டன்களா என அந்தந்த சமூகம் தன் இயல்புக்கேற்றபடி சாதிகளை உருவாக்கிக் கொள்ளுமாய் இருந்திருக்கும்.
அரசியல் நாகரிகம்
நேற்றைய ஹிந்துவில் ஒரு போட்டோ பார்த்தேன். கர்நாடகா முதன் மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் விவாதம் ஆரம்பிக்கும் முன்னால் ஒருவருக்கொருவர் சுமுகமாகப் பேசிக் கொள்வதை காட்டியிருந்தார்கள். எனக்கு அதை பார்த்து பெருமூச்சுதான் வந்தது. நம்மூரில் இம்மாதிரி காட்சிகளை இப்போது பார்க்கவியலுமா? ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இவ்வாறு நடந்து கொள்வார்களா? இம்மாதிரியான நாகரிகச் செயல்பாடுகள் நம்மூரிலும் நடந்துதான் வந்தன. நிலைமை மோசமானதே 1987-க்கு பிறகுதான் எனக்கூற வேண்டும். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை கருணாநிதியும் அவரும் அவ்வப்போது சந்தித்து சிரித்துப் பேசுவது நிற்கவில்லை.
ஆனால் அதன்பிறகு கவர்னர் ஆட்சி, அதற்கப்பால் 1989 எலெக்ஷனில் கருணாநிதி ஜெயித்து ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக வந்ததும் ஆரம்பித்தது சனியன். ஜெயும் சும்மா இல்லை கருணாநிதியும் சும்மா இல்லை. கடைசியில் ஜெயின் புடவையை பிடித்து இழுத்து அவிழ்க்கும் நிலை வரை வந்தது. அதன் பிறகு ஜெ சபைக்கே வரவில்லை. 1991-ல் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டு ஜெயின் ஆட்சி ஏற்பட்டபோது கருணாநிதியும் 1996 வரை சபைக்கே வரவில்லை. இந்த கண்ணாமூச்சி நாடகம் இன்னும் தொடருகிறது. ஜெயும் சரி கருணாநிதியும் சரி எதிர்க்கட்சித் தலைவருக்கான கடமையை செய்யவே இல்லை. இந்த அழகில் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்வதெல்லாம் வேண்டாத ஆசையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
எலிப்புழுக்கை எழுத்துக்கள்
ஆங்கிலத்தில் இதை small print என்பார்கள். பல படிவங்களில் முக்கிய ஷரத்துகள் இம்மாதிரி சிறு எழுத்துக்களில் வரும். அதை நான் எலிப்புழுக்கை எழுத்துக்கள் என்பேன். இதையே mouse print என அழைத்து ஒரு வலைப்பூ ஆங்கிலத்தில் ஒவ்வொரு திங்களன்றும் வருகிறது. கடந்த திங்களன்று வந்த அதன் பதிவில் நார்ட்டன் பிராடக்டுகளில் தரப்படும் கழிவுகளை குறித்து எழுதப்பட்டிருந்தது.
சகட்டுமேனிக்கு ரிபேட்டுகளை அறிவிப்பது, எப்படியாவது தங்கள் பொருட்களை வாங்கச் செய்வது. பிறகு அந்த வாக்குறுதிகள்? தேர்தல் வாக்குறுதிகள் ரேஞ்சுக்குத்தான் அவற்றின் மரியாதை இருக்கும். சாதாரணமாக பலர் ரிபேட்டுகளை பெற வேண்டியதற்கு செய்ய வேண்டிய காரியங்களை சோம்பேறித்தனம் காரணமாக அப்படியே திராட்டில் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு தரவேண்டியது மிச்சம். அப்படியே அதற்கான பூர்வாங்க வேலைகளை செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது, அல்லது பேப்பர்கள் தங்களிடம் வரவே இல்லை என சாதிப்பது என்றெல்லாம் மாய்மாலம் செய்வார்கள்.
கல்வியறிவு மிகுந்த மேல்நாடுகளிலேயே அவ்வாறு செய்யும்போது நம்ம ஊர் மோசடி பேர்வழிகள் சும்மா இருப்பார்களா என்ன? சமீபத்தில் 1961-ல் வெளிவந்த படம் பாவ மன்னிப்பு. அதில் வந்த எல்லா பாடல்களுமே ஹிட். அவற்றை தரவரிசைப்படுத்தி கூப்பன்களை அனுப்ப வேண்டியது. ஒவ்வொரு பாட்டுக்கும் கிடைக்கும் வாக்குகளை பொருத்து அவர்றின் இடவரிசை, அந்த இடவரிசை நீங்கள் அனுப்பிய லிஸ்டுக்கு ஒத்துப்போனால் உங்களுக்கு பரிசு. ஒரு தவறுமில்லாம இருந்தால் முதல் பரிசு, ஒரு தவறு மட்டும் இருந்தால் இரண்டாம் பரிசு, இரு தவறுகள் இருந்தால் மூன்றாம் பரிசு என்றெல்லாம் அமர்க்களப்படுத்தினர். ஒருவர் எத்தனை கூப்பன்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்றும் கூறப்பட்டது. என்ன, ஒவ்வொரு கூப்பனுக்கும் ஒரு இணைப்பு வைக்க வேண்டும், அது என்ன என்பது இப்போது மறந்து விட்டது, ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கி அதன் ரசீதுதான் அது. அவை இலவசமாக கிடைக்காது, ஆகவே அதை விற்பவருக்கு அமோக சேல்.
அதெல்லாம் விடுங்கள். ரிசல்ட் அறிவிக்கும்போது ஒரு அதிரடி அறிவிப்பு. பாடல்களை வரிசைப்படுத்த வேண்டும் அல்லவா? அப்போது உதாரணத்துக்கு முதல் பாடல் (காலங்களில் அவள் வசந்தம்) இடத்தில் கடைசி பாடலை (சாய வேட்டி தலையிலே கட்டி) ஒருவர் மாற்றிப் போட்டால் அது ஒரு தவறு இல்லையாம், இரண்டு தவறுகளாம். ஒரு தவறு எப்போது வரும்? அது வரவே வராதாம், ஆகவே இரண்டாம் பரிசு கிடையவே கிடையாதாம். அட பிச்சைக்கார பசங்களா இப்படியா கொள்ளையடிப்பீர்கள் என நினைத்தேன். அப்புறம் எந்த மயித்துக்குடா இரண்டாம் பரிசு என்னவென அறிவித்தீர்கள் என கேட்டால் அது அப்படித்தானாம். இது எப்படி இருக்கு?
ஒரு அசைவ ஜோக்
ஃபிரெஞ்சில் படித்தது தமிழில் தருகிறேன்.
ஒருவன் நன்றாக ஏமாந்தால் அவனை ஓத்துவிட்டார்கள் என்பார்கள் எல்லா மொழிகளிலுமே (he has been fucked thoroughly, er ist gründlich gefickt worden). இதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
இரு 10 வயது சிறுமிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தி கையில் மரத்தில் செய்யப்பட்ட குழந்தை பொம்மை. இன்னொருத்தி கையில் பார்பி பொம்மை.
இன்னொருத்தி: உன் கையில் இருக்கும் பொம்மை எவ்வளவு செலவாயிற்று?
ஒருத்தி: 10 ரூபாய். உன்னுடையது?
இன்னொருத்தி: 100 ரூபாய்.
அப்போது ஒரு பெண்மணி தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு அப்பக்கம் வருகிறாள். அக்குழந்தையை காட்டி இரு சிறுமிகளும் கேட்கின்றனர், “அதற்கு எவ்வளவு செலவாயிற்று”?
சிசேரியன் செய்து கொண்டு அக்குழந்தையை பெற்றெடுத்த அப்பெண்மணி கூறுகிறாள் “10000 ரூபாய்”.
அவள் அந்தண்டை போகும் வரை பேசாமல் அச்சிறுமிகள் இருக்கின்றனர், பிறகு ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறுகிறாள், “அடேங்கப்பா 10,000 ரூபாயா, யாரோ அந்தப் பெண்ணை நல்லா ஓத்துட்டாங்க”.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
18 hours ago
30 comments:
1. எதிரும் புதிருமாக நின்றிருந்திருப்பார்கள்.
2. இந்தியக்கலாச்சாரத்திலிருந்து பிரிந்தது தான் சீனக் கலாச்சாரம்
3. இரண்டு மாதங்களுக்கு முன் பாடம் நடத்திய போது 2,000 வருடங்களுகு முன் பிறந்தார் திருவள்ளுவர் என்று நடத்தியிருப்பார்.
@மாயவரத்தான்
1 & 3 சரி. 2-தவறு
அன்புடன்,
டோண்டு ராகவன்
4. கையில க்ளவுஸ் மாட்டிக்க வேண்டியது தானே?!
@மாயவரத்தான்
4-வது கேள்விக்கான விடை தவறு
அன்புடன்,
டோண்டு ராகவன்
// //ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.// //
ஆஹா...அற்புதம்.
நாட்டில் விவசாயம் தாழ்ந்து கிடக்கிறது. நகரங்களில் குப்பைகள் அதிகமாகிவிட்டன. எனவே, திறமைசாலி பார்ப்பான் என்கிற அடிப்படையில் 'குப்பை அள்ளுவதையும் வயலில் வேலைசெய்வதையும்' பார்ப்பனர்களின் குலத்தொழில் ஆக்கிவிட்டால் எப்படி இருக்கும்?
தலைமுறை தலைமுறையாக பார்ப்பன ஜாதியினர் குப்பை அள்ளுவதையும் வயலில் வேலைசெய்வதையும் மட்டும் செய்தால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படாதா?
//அதே சமயம் ஒவ்வொரு சாதிக் குழந்தையும் தத்தம் சாதியே சிறந்தது என மூளைச்சலவையும் செய்யப்படுகின்றனர். ஆகவே யாரும் சாதியை மாற்றிக் கொள்ளும் குழப்பமும் இல்லை. //
தத்தம் சாதியே சிறந்ததுன்னு சொல்லனுமாக்கும்!
மனுசனா இருந்தா மண்டை வெடிச்சிருமா!?
எல்லா நாட்டிலயும் இப்படி தான் சாதி பார்த்துகிட்டு இருக்காங்களா!?
அதிலும் பூனூல் எல்லாம் போட்டுகிட்டு!
// //ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறுகிறாள், “அடேங்கப்பா 10,000 ரூபாயா, யாரோ அந்தப் பெண்ணை நல்லா ஓத்துட்டாங்க”.// //
இதுதான் நங்கநல்லூர் பஞ்சாமிர்தமா...?
@அருள்
உமது பிரச்சினை என்ன அருள்? ஒரு ஜோக்கை ஜோக்காக பார்க்க முடிந்தால் பார்க்கவும், இல்லாவிட்டால் பொத்திக் கொண்டு போகவும்.
டோண்டு ராகவன்
// அருள் said...
// //ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறுகிறாள், “அடேங்கப்பா 10,000 ரூபாயா, யாரோ அந்தப் பெண்ணை நல்லா ஓத்துட்டாங்க”.// //
இதுதான் நங்கநல்லூர் பஞ்சாமிர்தமா...?//
ஒருவன் நன்றாக ஏமாந்தால் அவனை ஓத்துவிட்டார்கள் என்பார்கள் எல்லா மொழிகளிலுமே (he has been fucked thoroughly, er ist gründlich gefickt worden). இதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
இதை சொல்லிட்டு தானே சொல்றாரு!
என்ன தலைப்பில் +18 போட்டிருக்கலாம், பதினெட்டு வயசுக்கு கம்மியா ப்ளாக் படிக்கிறாங்களா என்ன?
பஞ்சாமிர்தம்னா நாலும் இருக்க தானே செய்யும், சில நேரங்களில் பேரிச்சம்பழ ”கொட்டைகள்” கூட
//2. சீனக்கலாசாரம் 4500 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தியக் கலாச்சாரமோ 5500 ஆண்டுகளாக இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என வாத்தியார் பாஷ்யம் ஐயங்கார் கேட்க மாணவன் கஸ்தூரிரங்கையங்கார் பதிலளிக்கிறான். ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார். அவன் என்ன பதில் சொல்லியிருப்பான்?//
4500 varudam dhaan irundhaalum, cheena kalacharam, "andha" matter-la, 5500 varudamaaga irukkum indhia kalacharathhai vida romba vaegam-nu theriyidhu-nu solliruppaan. (janathhogaila avanga dhaane adhigam!)
http://satamilselvan.blogspot.com/2010/07/blog-post_15.html
ஏன் சாதி ஒழியாம இருக்குன்னு இப்போ தெரியுதா!?
//
உமது பிரச்சினை என்ன அருள்? ஒரு ஜோக்கை ஜோக்காக பார்க்க முடிந்தால் பார்க்கவும், இல்லாவிட்டால் பொத்திக் கொண்டு போகவும்.
//
உங்கள் பலப் பதிவுகளில் அருளை ரவுண்டுகட்டி பலர் "ஓத்து"க்கொண்டு இருப்பது அவருக்கு உருத்தியிருக்கு போலும்.
4. ஃபோர்க் வைத்து தொடாமல் சாப்பிடலாமே என்று சொன்னானோ இல்லை யாரையாவது ஊட்டிவிடச் சொன்னானோ ?
@வஜ்ரா
அதையும் செஞ்சானே. வேகவைத்த முட்டையை சுடச்சுட வாயில் இன்னொருவரைவிட்டு போட வைக்க அவன் நாக்கு பட்டதுமே அது தங்க முட்டையாகி விட்டதே.
பி.கு. உடனே நாக்கை வச்சுண்டு ஏதாவது அசிங்கமாக கெஸ் செய்ய தடா. அதுவும் தவறான விடையாகவே அமையும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
4....அப்படி என்ன வரதராஜன் தவறாகச் சொல்லியிருப்பான்?
ஒரு குழாயை நேராக வாயிலிருந்து வயித்துக்குச் சொருகி சோத்தக் கரச்சு ஊத்தச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன்..இல்லை பஸ்பமாக்கி லேக்கியமா எம்.ஜி.ஆர் மாதிரி சாபிடச் சொல்லியதால் வரதராஜனை வெளியில் அனுப்பியிருப்பார் வாத்தியார்.
//ஒரு குழாயை நேராக வாயிலிருந்து வயித்துக்குச் சொருகி சோத்தக் கரச்சு ஊத்தச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன்..இல்லை பஸ்பமாக்கி லேக்கியமா எம்.ஜி.ஆர் மாதிரி சாபிடச் சொல்லியதால் வரதராஜனை வெளியில் அனுப்பியிருப்பார் வாத்தியார்.//
சுவையான கற்பனை. ஆனாலும் தவறுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அப்படி என்ன வரதராஜன் தவறாகச் சொல்லியிருப்பான்?
//
"பேசாம தங்க பஸ்பம் சாப்பிடலாமே" என்று கேட்டிருப்பானோ?
வால்பையன் said...
// // http://satamilselvan.blogspot.com/2010/07/blog-post_15.html
ஏன் சாதி ஒழியாம இருக்குன்னு இப்போ தெரியுதா!?// //
சிதம்பரம் ஆலையத்தின் தெற்கு கோபுரத்தின் உயரம்தான் மற்ற கோபுரங்களைவிட அதிகம். மூலவர் நடராஜர் பெருமான் பார்க்கும் திசையும் தென் திசைதான். நடராசர் ஆலையத்தின் கொடிமரம் இருக்கும் திசையும் தெற்குதான்.
தெற்கு கோபுரவாயிலில் இருந்து கோயிலுக்கு உள்ளே செல்வதற்கான எல்லா அமைப்பும் இப்போதுமிருக்கிறது. இடையே ஒரு சிறிய சுவர்மட்டுமே 'தற்காலிகமாகக்' கட்டப்பட்டது போன்ற வடிவில் இருக்கிறது. நந்தனார் நுழைந்த வழி என்பதால் அடைத்துவைத்திருப்பதாக சிதம்பரம் பகுதி மக்கள் காலம்காலமாக பேசிவருகின்றனர்.
மஹாகும்பாபிஷேக காலத்தில் மட்டும் திறந்து மற்ற காலங்களில் மூடுவதன் பின்னணி பார்ப்பன தீட்சிதர்களின் சாதிவெறியன்றி வேறல்ல.
ஆனால் ஒரு வேடிக்கை பாருங்கள் - நந்தனுடைய சந்ததியினர் இப்போது தாராளமாக மற்றவாசல்கள் வழியாக உள்ளே வரமுடிகிறது. ஆனால், நந்தன் வந்த வழியில் மட்டும் வர முடியவில்லை.
/நந்தனுடைய சந்ததியினர் இப்போது தாராளமாக மற்றவாசல்கள் வழியாக உள்ளே வரமுடிகிறது. ஆனால், நந்தன் வந்த வழியில் மட்டும் வர முடியவில்லை. //
அப்படி வர நேர்ந்தால் பார்பனீயர்களின் தோல்வியை ஒப்பு கொள்ள வேண்டியிருக்குமே!
2....சீனர்கள் 1000 ஆண்டுகள் கலாச்சாரமே இல்லாமல் இருந்துள்ளனர் என்று சொன்னானோ ?
இல்ல இந்தியக்கலாச்சாரம் ரொம்ப பழசாயிடுச்சு, நம்ம வேணா புதுக் கலாச்சாரத்துக்கு மாறிக்கலாமா என்று கேட்டானோ ?
@வஜ்ரா
2-ஆம் கேள்விக்கான விடை தவறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
2. He claims the teacher is a chinese.
4. Tell him to pee, this will turn him to a statue, problem solved.
Sridhar
//2. He claims the teacher is a chinese. தவறான விடை
4. Tell him to pee, this will turn him to a statue, problem solved.
சரியான விடை, ஆனால் வரதராஜன் சொன்ன முறை வேறு.
எங்கள் பத்தாம் வகுப்பாசிரியர் சங்கரரமன் மிக அருமையாக ஆங்கிலப் பாடம் எடுப்பார். மைதாஸ் மன்னனின் பிரச்சினையை அவர் உருக்கமாக ஆங்கிலத்தில் கூறி, பாவம் அவன் என்னதான் செய்வான் என கேட்டு நிறுத்த, வரதராஜன் கழுதைக் குரலில் தமிழில் ஸ்பஷ்டமாகக் கூறினான், “தன்னைத் தானே தொட்டுக்கலாம் சார்”.
நாங்கள் எல்லோருமே குபீரென சிரிக்க ஆசிரியர் கோபத்துடன் வரதராஜனை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்.
இரண்டாம் கேள்விக்கான விடை மட்டும் பாக்கி இருக்கிறது. அது போங்குத்தனமான விடை (நம்ம பசங்க சாதாரணமானவங்க இல்லையல்லவா) என்பதுதான் விடைக்கான க்ளூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//2. சீனக்கலாசாரம் 4500 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தியக் கலாச்சாரமோ 5500 ஆண்டுகளாக இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என வாத்தியார் பாஷ்யம் ஐயங்கார் கேட்க மாணவன் கஸ்தூரிரங்கையங்கார் பதிலளிக்கிறான். ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார். அவன் என்ன பதில் சொல்லியிருப்பான்?
4500 varudam dhaan irundhaalum, cheena kalacharam, "andha" matter-la, 5500 varudamaaga irukkum indhia kalacharathhai vida romba vaegam-nu theriyidhu-nu solliruppaan. (janathhogaila avanga dhaane adhigam!)//
indha vidai sari illaiyaa?! :/ adadaa!! ippudi aayiruchhe!
ஒரு வேளை பையன் இப்படி சொல்லி இருக்கலாம்- சார் இதில் இருந்து உங்க கோமணம் தெரிகிறது.
என்னங்க...அந்த சீனா கலாச்சாரம், இந்தியக் கலாச்சாரம் கேள்விக்கான விடை தான் என்ன ?
//என்னங்க...அந்த சீனா கலாச்சாரம், இந்தியக் கலாச்சாரம் கேள்விக்கான விடை தான் என்ன ?//
கஸ்தூரி ஐயங்கார் என்ன சொன்னானென்றால், “சார் அப்போ கிட்டத்தட்ட முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவுல யாரும் ஹோட்டலுக்கு போய் சைனீஸ் டிஷ் எதுவும் ஆர்டர் பண்ணியிருக்க முடியாது” என்றான்.
அன்புடன்,
டோண்டு ரகவன்
//என்னங்க...அந்த சீனா கலாச்சாரம், இந்தியக் கலாச்சாரம் கேள்விக்கான விடை தான் என்ன ?//
கஸ்தூரி ஐயங்கார் என்ன சொன்னானென்றால், “சார் அப்போ கிட்டத்தட்ட முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவுல யாரும் ஹோட்டலுக்கு போய் சைனீஸ் டிஷ் எதுவும் ஆர்டர் பண்ணியிருக்க முடியாது” என்றான்.
அன்புடன்,
டோண்டு ரகவன்//
இது ஒரு புதிரா ?
அருள், மாதிரி ஆசாமிகள் படிக்கிறவனைப் பற்றி கவலைப் படாமல் உளறுவதை கண்டிக்கிற அனானி வகையறாக்கள் இது மாதிரி கேனத்தனமான புதிர்களையும் கண்டிக்கனும்.
.
good post dondu anna.enjoyed ur nonveg jokes.but i wonder how u are managing ur family people from seeing it .of course i think they
are used to it.
madurairadha.
@ராதாகிருஷ்ணன்
என் மனைவியும் சரி, மகளும் சரி கணினி அருகிலே கூட வருவதில்லை.
போலி டோண்டு பிரச்சினையால் அவர்களை தள்ளியே வைத்திருந்தேன். அதே பழக்கம் தொடர்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment