இதற்கு முந்தையப் பதிவு: பெரியாரின் எழுத்துக்கள் விடுபட்ட நிலையில்
பெரியாரின் எழுத்துக்கள் விடுபட உதவிய உச்ச நீதிமன்றத்தின் லேட்டஸ்ட் தீர்ப்பு இங்கு தரப்படுகிறது. நன்றி கீற்று தளத்துக்கு.
முதலில் கீற்று தளத்தில் வந்த செய்திக்கு செல்வோம். பிறகு வருவான் டோண்டு ராகவன்.
பெரியார் படைப்புகளுக்கு எந்த பதிப்புரிமையும் கிடையாது
பெரியார் முழக்கம் செய்தியாளர் செவ்வாய், 22 ஜூன் 2010 17:34
வீரமணி உரிமை கோர அவரிடம் எந்த சான்றும் இல்லை - உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு
‘குடிஅரசு’ உள்ளிட்ட பெரியார் ஏடுகளுக்கும் பெரியார் படைப்புகளுக்கும் கி.வீரமணி பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் ஏதுமில்லை. பெரியார் நூல்கள் மக்கள் அரங்கிற்கு வந்துவிட்டது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடுவதற்கு எதிராக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரியார் நூலை வெளியிடும் பதிப்புரிமை தமக்கு மட்டுமே உண்டு என்றும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவது தமது பதிப்புரிமையில் குறுக்கிடுவதாகும் என்றும் கூறி, பதிப்புரிமையில் குறிக்கிட்டதால் ரூ.15 லட்சம் தமக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் வழக்கில் கோரி இருந்தார்.
பெரியார் திராவிடர் கழகம் 2008 செப்டம்பர் 17 ஆம் தேதி குடிஅரசு தொகுப்புகளை வெளியிடத் திட்டமிட்டிருந்ததற்கு இடைக்காலத் தடை கோரியிருந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, அப்போதுள்ள நிலையே நீடிக்க (Status Quo) உத்தரவிட்டார். தடைகோரிய மனு உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்துரு, குடிஅரசு தொகுப்புகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் (வீரமணி) தமக்கு பதிப்புரிமை உண்டு என்பதை நிரூபிக்கவில்லை என்றும் கூறி 27.7.2009 இல் தீர்ப்பளித்தார். இத் தீர்ப்பை எதிர்த்து கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகள் விசாரணையை தங்களால் நடத்த இயலாது என்று கூறி விட்டனர்.
வழக்கு முடிந்து விடாமல் இழுத்தடிக்கப்பட வேண்டும் என்பதிலேயே வீரமணியின் தரப்பினர் ஆர்வமாக இருந்தனர். மீண்டும் மீண்டும் வழக்கைத் தள்ளி வைக்கும் கோரிக்கையையே வீரமணி வழக்கறிஞர்கள் முன் வைத்தனர். இறுதியாக இந்த வழக்கை மேல்முறையீட்டு அமர்வு நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிஃபுல்லா, என். கிருபாகரன் ஆகியோர் விசாரணைக்கு தலைமை நீதிபதியே உத்தரவிட்டார். இந்த அமர்வு முன் முழுமையான விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்த பிறகு, கோடைகால விடுமுறை வந்து விட்டது.
விடுமுறைக்குப் பிறகு கடந்த 9 ஆம் தேதி நீதிபதிகள், தங்கள் தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதிகள் அறையில் வழக்கறிஞர்கள் முன்பு நீதிபதிகள் தீர்ப்பினை அறிவித்தனர். நாடு முழுதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பு பதிப்புரிமை வழக்கில் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது. கழக சார்பில் வழக்கறிஞர் எஸ். துரைசாமி, இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் ஆர். தியாகராஜன், கிளேடிஸ் டேனியல் ஆகியோர் வாதிட்டனர். நீதிபதிகள் - வீரமணி தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் எல்லாவற்றுக்கும் விரிவான, சட்டப் பூர்வமான பதில்களை முன் வைத்து மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகள் :
‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதற்கு தடை கோரி, மனுதாரர் (கி.வீரமணியும்) தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனு, தம்மையும் இணைத்துக் கொள்ள தஞ்சை இரத்தினகிரி தாக்கல் செய்த மனு இரண்டையும் சேர்த்தே, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களின் கருத்துகளை இந்த நீதிமன்றம் உன்னிப்பாக பரிசீலித்தது. இரு தரப்பிலும், பல ஆவணங்கள் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. அவைகளையும், நீதிமன்றம் உன்னிப்பாகப் பரிசீலித்தது. இந்த வழக்கில் மனுதாரர் கோரிய இடைக்காலத் தடை மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் (நீதிபதி சந்துரு) தீர்ப்பும் உன்னிப்பாக பரிசீலிக்கப்பட்டது.
பெரியாரின் சிந்தனைகளான குடிஅரசு தொகுப்புகளை வெளியிட தடைகோரும் மனுதாரர் சார்பில் (கி.வீரமணி) முதன்மையாக எடுத்து வைத்த வாதம், தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது என்பதாகும். 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின், சட்டப் பிரிவுகளின் கீழ், அவர் இந்த உரிமையை கோருகிறார். எதிர் மனுதாரர்களான கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் இந்தத் தொகுப்புகளை வெளியிடுவது, தமக்குரிய பதிப்புரிமையில் குறுக்கிடுவதாகும் என்றும், எனவே குடிஅரசு கட்டுரைகள், சுய மரியாதை இயக்க தொடர்பான எழுத்துகள், நூல்கள், வெளியீடுகள் எவற்றையும் வெளியிடும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்றும், அவர்கள் வெளியிடுவதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் (கி.வீரமணி) கோருகிறார். அத்துடன், இதற்காக ரூ.15 லட்சம் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாகும். மனுவில் நீதிமன்றத்திடம் முதன்மை கோரிக்கையாக, தமக்குரிய பதிப்புரிமையை மனுதாரர் குறிப்பிடும் மனுதாரர், மனுவின் உள்ளடக்கத்தில், வேறு ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
அதாவது 1983 ஆம் ஆண்டில் தம்மால் நியமிக்கப்பட்ட புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழுவினர் ‘குடிஅரசு’இதழ்களிலிருந்து தொகுத்த பெரியாரின் கட்டுரைகள் தொகுப்பை, யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று, (Stealthily removed) அதே தொகுப்பையே அவர்கள், நூலாக அச்சிட்டு வெளியிட இருப்பதாகக் கூறுகிறார். பெரியார் நூல்களுக்கு தமக்கு மட்டுமே பதிப்புரிமை உண்டு. அதில் குறுக்கிடுவதை அனுமதிக்கக்கூடாது என்பதே வழக்கில் மனுதாரரின் முதன்மையான கோரிக்கை. ஆனால், திருச்சியில் தம்மால் நியமிக்கப்பட்ட குழுவினர் தொகுத்தவற்றை தெரியாமல் எடுத்துச் சென்று, வெளியிட்டுவிட்டதாக தனது வழக்கு மனுவில் கூறுகிறார். இதில், தனக்குரிய பதிப்புரிமையை, எந்தக் குறிப்பான ஆவணத்துக்குக் கோருகிறார் என்பதை திட்டவட்டமாகக் கூறவில்லை.
பதிப்புரிமை சட்டத்தின்படி (பிரிவு 17) ஒரு நூலின் பதிப்புரிமைக்கு உரியவர், அந்த நூலை எழுதியவர்தான். அதே நேரத்தில் வேறு ஒரு இதழிலோ செய்தித்தாளிலோ அதன் உரிமையாளர் கீழ், வேலை செய்யும் எழுத்தாளர், அந்த பத்திரிகையில் எழுதிய படைப்புகளுக்கான பதிப்புரிமை, அதன் உரிமையாளருக்கே உண்டு. அப்படித்தான் பதிப்புரிமை சட்டம் உட்பிரிவு (17(ய)) கூறுகிறது. எழுத்தாளர், தனது எழுத்துக்கு பதிப்புரிமை கோர வேண்டும் என்றால், அதற்காக தனியாக உடன்படிக்கை ஒன்றை உரிமையாளருக்கு எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அத்தகைய உடன்படிக்கை ஏதும் இல்லாதபோது, உரிமையாளருக்குத்தான் பதிப்புரிமை போய்ச் சேரும். பதிப்புரிமை சட்டத்தின் அடுத்த பிரிவு (எண்.18), பதிப்புரிமைக்குரிய ஒருவர், எழுத்து மூலமாக, அந்த உரிமையை முழுமையாகவோ, பகுதியாகவோ, பதிப்புரிமையை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்த இரு சட்டப் பிரிவுகளின்படி, ஒருவர் பதிப்புரிமை கோருவதற்கு இரு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று - ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசிரியர், தனக்கான பதிப்புரிமையை கோருவதற்கு, அந்த நிறுவன உரிமையாளருடன் ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். மற்றொன்று பதிப்புரிமைக்கு உரிய ஒருவர், தனது பதிப்புரிமையை வேறு எவருக்காவது தர விரும்பினால், அத்தகைய உரிமையை அவருக்கு எழுத்து மூலம் வழங்கியிருக்க வேண்டும். இதுதான் சட்டத்தின் நிலை. இந்த சட்டப்படி பார்த்தால், மனுதாரர், தனக்கு ஆதரவான ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இங்கே மனுதாரர் குறிப்பிட்டுள்ள குடிஅரசு தொகுப்பு - மனுதாரரின் (கி.வீரமணி) படைப்புகளோ, எழுத்துகளோ அல்ல. அவைகள், 1925 ஆம் ஆண்டிலிருந்து ‘குடிஅரசு’ பத்திரிகையில் தந்தை பெரியார் எழுதியவை. மனுதாரரின் எழுத்துகளாக இல்லாத ஒன்றுக்கு, அவர், பதிப்புரிமை கோர முடியாது. பெரியாருடைய எழுத்துகளுக்கான பதிப்புரிமை பெரியாருக்குத்தான் உண்டு. இதில், இரண்டு கருத்துகளுக்கு இடமே இல்லை. தொகுக்கப்பட்ட ‘குடிஅரசு’ கட்டுரைகள், பெரியாருக்கு உரியவை என்பதை மனுதாரர், எதிர் மனுதாரர் இருவருமே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இப்போது அடுத்தக் கேள்வி என்னவென்றால், எழுத்தாளர் என்ற முறையில் பதிப்புரிமை பெற்றிருந்த தந்தை பெரியார், தனது பதிப்புரிமையை பதிப்புரிமை சட்டத்தில் கூறியுள்ளபடி (பிரிவு 17, 18)வேறு எவருக்காவது, எழுதிக் கொடுத்திருக்கிறாரா என்பது தான்.
பதிப்புரிமை சட்டத்தின் 18 ஆவது பிரிவின் கீழ்தான், மனுதாரர் தமது உரிமையைக் கோரியிருக்கிறார். அதாவது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின், அதன் விதிகளில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார். சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெயரில் தந்தை பெரியார் பதிவு செய்திருந்த சொசைட்டிக்கான விதிகளில், நூல்கள் வெளியீடு, துண்டுப் பிரசுரங்கள் வெளியீடு போன்ற ஆக்கபூர்வமான பணிகள் நிறுவனத்தின் செயல்பாடுகளாக இருக்கும் நிறுனத்தின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில், நூல்களை வெளியிடவும், விற்கவும், அச்சகம் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளன. இந்த ‘சொசைட்டிக்கான’ பதிவில் கையெழுத்திட்டவர்களில் தந்தை பெரியாரும் ஒருவர். மேற்குறிப்பிட்ட விதிகளில், தந்தை பெரியாரின் குடிஅரசு பற்றியோ அல்லது அவரது மற்ற படைப்புகள் பற்றியோ குறிப்பிட்டு, எதையும் சுட்டவில்லை.
மேற்குறிப்பிட்ட நிறுவனத்தை பெரியார் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ்தான் (Society Registration Act) அதுவும், 1952 ஆம் ஆண்டில் தான் (21.10.1952) பதிவு செய்துள்ளார். இதில் ஒன்றை கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தொடரப்பட்டுள்ள வழக்கு 1952க்கு முன்பே 1925 முதல் 1949 வரை நடந்த ‘குடிஅரசு’வார ஏடு தொடர்பானதாகும். ‘குடி அரசு’ நிறுத்தப்பட்ட பிறகு, பெரியார் பதிவு செய்த நிறுவனத்தின் விதிகளில் குடிஅரசு பற்றியோ, அல்லது அது தொடர்பான பதிப்புரிமை பற்றியோ, தந்தை பெரியார் படைப்புகள் பற்றியோ, வெளியிட்ட நூல்கள் பற்றியோ, குறிப்பிட்டு எதையும் கூறவில்லை.
மனுதாரரின் வழக்கறிஞர் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் 22வது விதியை சுட்டிக்காட்டி வாதாடினார். இந்த நிறுவனத்தின் தலைவர் பெரியார், தனது பெயரிலும், நிறுவனத்தின் பெயரிலும்,ஏற்கனவே வாங்கிய சொத்துகளும், அதன் நிர்வாகக் குழு ஆயுள் உறுப்பினர்கள் நிறுவனத்துக்காக ஏற்கனவே வாங்கிய சொத்துக்களும், இந்த நிறுவனத்துக்கு உரிமையுடையதாகும் என்று அந்த பிரிவு கூறுகிறது. (இதன்படி ‘குடிஅரசு’ ஏற்கனவே பெரியாரால் வாங்கப்பட்ட சொத்து என்றும், எனவே அது நிறுவனத்துக்கு உரிமையாகிறது என்றும், வழக்கறிஞர் வாதிட்டார்). மேற்குறிப்பிட்ட பிரிவுகள், நிறுவனத்தில் உறுப்பினர்களுக்கான உரிமைகளைத் தான் (Status) வரையறுக்கின்றன. நாங்களும் விடா முயற்சியோடு துருவித் துருவி ஆராய்ந்து பார்த்த பிறகும்கூட, பெரியாரின் படைப்புகள், மனுதாரரின் நிறுவனத்துக்கு உரிமையுடையவை என்பதற்கு ஆதரவாக, எதையும், எங்களால் கண்டறியவே முடியவில்லை. (By any amount of Strenuous effort - we were not in a position to discern of any right in favour of the appellant - society)
1925 ஆம் ஆண்டிலிருந்து 1949 வரை ‘குடிஅரசு’ வெளிவந்த காலங்களில் அமுலில் இருந்தது 1914 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வெளிவந்த பதிப்புரிமை சட்டமாகும். அதற்குப் பிறகு 1957 ஆம் ஆண்டில்தான் புதிய பதிப்புரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே ‘குடிஅரசு’க்கு 1914 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பதிப்புரிமை சட்டமே - சட்டப்படி பொருந்தக் கூடியதாகும்.
இரண்டு சட்டங்களில் உள்ள விதிகளும், பெரியாருக்கு வழங்கியுள்ள உரிமைகளை, இந்த வழக்கில் ஆராய வேண்டியிருக்கிறது. காரணம், மனுதாரரின் வழக்கறிஞர் திருச்சி வே. ஆனைமுத்து தொகுத்த “பெரியார் சிந்தனைகள்” நூல் தொகுதிக்கு பெரியார் அனுமதி வழங்கியதைக் குறிப்பிட்டுள்ளார். 1972 ஆம் ஆண்டில் பெரியார் அதற்கான அனுமதியை ஆனைமுத்து என்ற தனிமனிதருக்கு வழங்கியுள்ளார். இதை ஆனைமுத்து ‘பெரியார் சிந்தனைகள்’ தொகுதிக்காக தாம் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்த ஆவணம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை கவனத்துடன் பரிசீலித்தோம். அதில், நாங்கள் அறியவருவது என்னவென்றால், தந்தை பெரியாரே ஆனைமுத்துவை அழைத்து, தனது பேச்சு எழுத்துகளைத் தொகுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்தத் தொகுப்பை உருவாக்க தனிப்பட்ட முறையில் தனது ஒப்புதலையும் வழங்கியிருக்கிறார்.
ஆக, திரு. ஆனைமுத்து என்ற தனி நபரிடம், தனது எழுத்து பேச்சுகளைத் தொகுக்கும் வேலையை தந்தை பெரியார் ஒப்படைத்திருக்கிறார். அதுபோல மனுதாரரும் (கி.வீரமணி) தன்னிடம் பெரியார் ஏதேனும் பணியை ஒப்படைத்திருக்கிறார் என்பதற்கான ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. தனது பேச்சுகளும், எழுத்துகளும் தொகுக்கப்பட வேண்டும் என்று ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்த பெரியார், அந்த வேலையை ஒரு தனி மனிதரிடம் ஒப்படைக்க முன் வந்த நிலையில், அதே போன்ற உரிமை தனக்கும் மனுதாரர் கோரினால், அப்படி பெரியார் ஒப்படைத்ததற்கான ஆவணத்தைக் காட்டியிருக்க வேண்டும். 1957ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின்படி (பிரிவு 8), இத்தகைய எழுத்துபூர்வமான உரிமையைப் பெற்றிருந்தால் மட்டுமே, அதற்கு உரிமை கோர முடியும். எனவே - சட்டமும், மனுதாரருக்கு ஆதரவாக இல்லை.
2003 ஆம் ஆண்டு நவம்பரில் எதிர் மனுதாரர் (கொளத்தூர் மணி) ‘குடிஅரசு’ முதல் தொகுதியை வெளியிட்டார். அதில் முன்னுரையில் 1983 ஆம் ஆண்டு திருச்சியில் புலவர் இமயவரம்பன் தலைமையில் பெரியார் பற்றாளர்கள் தொகுத்ததை அப்படியே எந்த மாற்றமும் இன்றி வெளியிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சார்பில் இது ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்களே, புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழு தொகுத்ததையே வெளியிட்டுள்ளதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். நாங்கள் ஏற்கனவே கூறியது போல், இது பெரியாரின் எழுத்துகள் தானே தவிர, மனுதாரரின் (கி.வீரமணியின்) சிந்தனையில் உதித்த படைப்புகள் அல்ல. எனவே பெரியாரின் எழுத்து-பேச்சு தொகுப்புக்கான பதிப்புரிமை மனுதாரருக்கு உள்ளதா என்பதே முடிவு செய்யப்படாத நிலையில், அத்தொகுப்பு தன்னுடையது அல்ல; பெரியாருடையது என்று மனுதாரரே ஒப்புக் கொள்ளும்போது, மனுதாரருக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது. மனுதாரர் தனக்கு சாதகமாக சமர்ப்பித்த ஆவணங்கள் எதிலும் அவர் பதிப்புரிமை கோரும் உரிமையை எந்த வகையிலும் உறுதிப்படுத்தவில்லை.
‘விடுதலை’யில் பெரியார் எழுதியதை (2.10.1952) மனுதாரர் ஒரு ஆவணமாக சமர்ப்பித்துள்ளார். அதில் இவ்வாறு பெரியார் எழுதியிருக்கிறார்:
“அப்போது ஸ்தாபனத்திற்கு உள்ள சொத்துக்கள் என்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது ஒரு லட்ச ரூபாய் தான். அதாவது சில கட்டிடங்கள், 2 அச்சு நிலையங்கள், 2 பத்திரிகைகள், புத்தகங்கள் உரிமைகள், ரொக்க நிதிகள் ஆகியவை. அன்றைய நிலவரப்படி” -என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில், பெரியார் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் என்பதில் பெரியார் நூல்களின் பதிப்புரிமையும் அடங்கும் என்று மனுதாரர் கூறுகிறார். இதை ஏற்க முடியாது. பெரியாரின் பேச்சும், கட்டுரைகளும், சொத்துகள்தான் என்பதற்கான குறிப்பான சட்ட ஆவணம் இல்லாத வரை, மனுதாரரின் வாதத்தை ஏற்க இயலாது. நேரடி தொடர்பில்லாத ஒரு குறிப்பை (Remote References) மட்டும் அடிப்படையாகக் கொண்டு மனுதாரர் உரிமை கோருகிறார். இதை பொருத்தமான ஆவணமாக அங்கீகரிக்க முடியாது.
மற்றொரு எதிர்மனுதாரர் (கோவை இராம கிருட்டிணன்) ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (21.08.2008) இதழுக்கு அளித்த பேட்டியில் திருச்சியில் புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழு தொகுப்பையே தாங்கள் வெளியிட்டிருந்ததாக கூறியதை, இங்கே மனுதாரர், தமக்கு சார்பாக சமர்ப்பித்துள்ளார். இந்த ஆவணமும் மனுதாரரின் (வீரமணியின்) பதிப்புரிமையை ஏற்பதற்கோ, அங்கீகரிப்பதற்கோ எந்த வகையிலும் உகந்தது அல்ல. அந்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ள செய்திகூட, மனுதாரர் (கி.வீரமணி) தந்தை பெரியார் பேச்சு எழுத்துகளை வெளியிடாமல் இருந்ததைத்தான் குறிப்பிடுகிறது.
1983 ஆம் ஆண்டு புலவர் இமயவரம்பன் தலைமையில் ‘குடிஅரசி’லிருந்து தொகுக்கப்பட்ட பெரியார் எழுத்து பேச்சுகளுக்கு மனுதாரர் தமக்கு பதிப்புரிமை கோருவதால் இப்போது அமுலிலுள்ள 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் பிரிவுகளை நாங்கள் பரிசீலித்தோம். அதில் 52(1)(எம்) பிரிவு - பதிப்புரிமை கோர முடியாத சில செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளது. இதன்படி, ஒரு செய்திப் பத்திரிகை அல்லது இதழ் அல்லது பருவ இதழ்களில் வெளிவரும், அன்றாட பொருளாதாரம், அரசியல், சமூகம் அல்லது மதம் தொடர்பான கட்டுரைகளை மீண்டும் மறு வெளியீடாக வெளியிடுவது பதிப்புரிமையில் குறுக்கீடுவதாகாது என்று கூறுகிறது. அந்த கட்டுரைகளை ஆசிரியர், பதிப்புரிமைக்கு உட்பட்டது என்று வெளிப்படையாக அறிவிக்காதவரை, மறு வெளியீடு செய்யும் உரிமை உண்டு என்று, அந்த பிரிவு கூறுகிறது. ‘குடிஅரசு’ஒரு செய்திப் பத்திரிகை தான். இந்த சட்டப்படி அதில் வரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிடுவதற்கு பதிப்புரிமை கேட்க முடியாது. தனது எழுத்துப் பேச்சுகளுக்கு பதிப்புரிமை எதையும் தந்தை பெரியாரும் எழுதி வைக்கவில்லை.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சில விதிகளைக் காட்டி, மனுதாரர் தனது பதிப்புரிமைக்கு உரிமை கேட்டது பற்றி, ஏற்கனவே, விரிவாக விளக்கி இருக்கிறோம். எனவே ‘குடிஅரசு’செய்தித்தாள் என்றாலும் சரி அல்லது வார இதழ் என்றாலும் சரி,எப்படி அழைத்தாலும், அதில் வெளிவந்துள்ள தனது கட்டுரைகளை எவரும் வெளியிடக்கூடாது என்று பெரியார் உரிமை கோரியிருந்தார் என்பதற்கான ஆவணமோ, சட்டபூர்வமாக ஏற்கக் கூடிய சான்றுகளோ எதுவும் இல்லாத நிலையில் ‘குடிஅரசு’ இதழில் பெரியாரின் பேச்சு-எழுத்துகளை வெளியிட முன் வந்துள்ள எதிர் மனுதாரர்கள் மீது எந்த குற்றமும் காண முடியாது. (Therefore, there being no other document or legally acceptable material to show that Thanthai Periyar reserved his right of production of any of his articles published in the news paper or in the Weekly Magazine Kudiarasu, no fault can be found with the respondents when they want to publish the collection of the speeches and articles of Thanthai Periyar Published in the Weekly Kudiarasu) தந்தை பெரியாரின் படைப்புகளை எதிர்மனுதாரர்கள் (கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன்) வெளியிடுவதற்கான பாதுகாப்பை பதிப்புரிமை சட்டத்தின் 52(1)(எம்) பிரிவு தெளிவாக வழங்குகிறது.
சொல்லப் போனால், ஏற்கனவே 2003 நவம்பரில் 1925 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தொகுப்பையும், 2006 செப்டம்பரில் 1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளையும் எதிர்மனுதாரர்கள் வெளியிட்டுவிட்டதாக கூறியுள்ளனர். இந்த வெளியீடுகளின்போது, மனுதாரர் (கி.வீரமணி) எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. இதே சட்டப் பிரிவின் அடிப்படையில் ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி (நீதிபதி சந்துரு) கூறியுள்ள அதே கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குடிஅரசு தொகுப்புகளை வெளியிடுவதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை!
இரண்டாவது எதிர் மனுதாரர் (கு. இராமகிருட்டிணன்) சார்பில் வாதிட்டவர் (கிளாடிஸ் டேனியல்), மற்றொரு சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டினார். 1914 ஆம் ஆண்டின் பதிப்புரிமை சட்டம், ஒரு நூலாசிரியருக்கு பதிப்புரிமையின் காலத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அந்த எழுத்தாளர் தனது வாழ்நாள் முழுதும் பதிப்புரிமைக்கு உரியவர். அவர் இறந்து 25 ஆண்டுகள் வரையும் அவருக்கு பதிப்புரிமை உண்டு. இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு பதிப்புரிமை முடிவுக்கு வந்து விடுகிறது. இதுதான் 1914 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் நிலை. இந்தப் பிரிவுக்கு 1957 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பதிப்புரிமை சட்டம் (79(5)) ஏற்பு வழங்கியுள்ளது. அதாவது 1957 ஆம் ஆண்டு புதிய பதிப்புரிமை சட்டம் வருவதற்கு முந்தைய காலத்தின் படைப்புகளுக்கு பதிப்பாளர் உரிமைகளுக்கான காலக்கெடு, ஏற்கனவே அமுலில் இருந்த சட்டத்திலுள்ளதே பொருந்தும் என்று வாதிட்டார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
மேற்குறிப்பிட்ட இரு சட்டப் பிரிவுகளின்படி பெரியார் எழுத்து பேச்சுகளுக்கான பதிப்புரிமை, அப்படியே பெரியார் பதிப்புரிமை எழுதி தந்ததாக ஏற்றுக் கொண்டாலும் கூட அது முடிவுக்கு வந்துவிட்டது என்பதே சரி. பெரியார் முடிவெய்தியது 24.12.1973. அதற்குப் பிறகு, 25 ஆண்டுகள் பதிப்புரிமை உண்டு என்று எடுத்துக் கொண்டாலும், 24.12.1998 அன்றோடு பதிப்புரிமை முடிவுக்கு வந்துவிட்டது. எதிர்மனுதாரர் (கொளத்தூர் மணி) ‘குடிஅரசு’ முதல் தொகுதியை வெளியிட்டதே 2003 நவம்பரில்தான். எனவே, சட்டரீதியாக பதிப்புரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே 24.12.1998-க்குப் பிறகு தந்தை பெரியாரின் படைப்புகள் மக்கள் அரங்கிற்கு வந்து மக்கள் சொத்தாகி விட்டன. (Therefore, when after 24.12.1998, the literary works of Thanthai Periyar have come into Public domain, even if there were any restrictions, the same would have ceased to operate after 24.12.1998) - என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
27 தொகுதிகளையும் கணினியில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் கழகம் வெளியிடும் ‘குடிஅரசு’ 27 தொகுதிகளும் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது. ‘பிடிஎஃப்’முறையில் கணினியில் பதிவாக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளையும் ‘periyardk.org என்ற இணையதளத்துக்குச் சென்று படிக்கலாம்.
இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .periyardk@gmail.com என்ற முகவரிக்கு கடிதம் எழுதுவோருக்கு இலவசமாக இணைய தளத்தின் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
- பெரியார் திராவிடர் கழகம்
இதற்கு எதிர்வினையாக வீரமணி ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார். அது பின்வருமாறு:
பெரியாரின் "குடிஅரசு' தொகுதிகளின் எழுத்து, பேச்சுகளை தனி நபர்கள் லாபம் அடையும் நோக்கில் வெளியிடத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அவ்வாறு விதிக்கப்பட்ட தடையை தனி நீதிபதி நீக்கினார்.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது.
எனினும், குடிஅரசு தொகுதிகளை வெளியிடும் உரிமை பற்றிய பிரதான வழக்கு இனிமேல்தான் விசாரிக்கப்பட உள்ளது. திரிபுவாதம் மற்றும் திருட்டிலிருந்து பெரியார் எழுத்துகளை, கருத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். எனினும், பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை பெரியார் அறக்கட்டளையின் அனுமதி பெற்று, எவரும் வெளியிடலாம். இதற்கு எப்போதும் தடை இல்லை என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இப்போது டோண்டு ராகவன். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தெளிவாகவே உள்ளது. ஆனால் வீரமணி என்ன கூறுகிறார்? அதாகப்பட்டது பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை பெரியார் அறக்கட்டளையின் அனுமதி பெற்று எவரும் வெளியிடலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என்று. உச்சநீதி மன்ற திர்ர்ப்பில் அவ்வாறெல்லாம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்றுதான் எனக்கு படுகிறது. வழக்கறிஞர் பதிவர்கள் தமது கருத்துக்களை இங்கு கூறுவது நலமாக இருக்கும்.
இப்போது லேட்டஸ்டாக வை.கதிரவன் என்பவர் 22.07.2010 தேதியிட்ட இன்று விற்பனைக்கு வந்த குமுதம் ரிப்போர்டர் 18-19-ஆம் பக்கங்களில் எழுதியுள்ள இன்னொரு விஷயத்தைப் பார்த்தேன்.
இது பெரியாரின் அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்டது. தனது மரணம் வரை பெரியார் தனது தனிப்பட்ட சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்கவில்லை. மேலும் அவை யாவும் பெரியார் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டதாகவும் எந்த ஆவணமும் இல்லை. ஆகவே அவை மக்கள் சொத்துக்களாகி விட்டன என்ற விவகாரத்தை இப்போது பெரியார் தி.க. கிளப்பியுள்ளது.
அம்மாதிரியான அசையா சொத்துக்கள் என்னென்ன என்பதையும் இக்கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. அவை: சென்னையிலுள்ள பெரியார் திடல், ஈரோட்டிலுள்ள பெரியார் மன்றம், அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகம், பத்தாயிரம் சதுர அடியிலான ஒரு மஞ்சள் மண்டி, பல வீடுகள், மணியம்மை ஸ்டோர் என்ற பெயரில் ஒரு கடை என பெரியாருக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஈரோட்டில் உள்ளன. திருச்சி நகரத்தில் 3 ஏக்கர் பரப்பில் பெரியார் மாளிகை, திருச்சி கே.கே. நகர் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியார் கல்வி வளாகம் ஆகியவை உள்ளன. சேலம் ஏற்காட்டில் ஏரிக்கருகே ஒரு வீடு மற்றும் சில கடைகள் பெரியாரின் சொத்துக்களாக உள்ளன. தஞ்சையில் பெரியார் இல்லம் உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளன.
இவை மேம்போக்காக தெரிந்தவை மட்டுமே. மேலும் இருக்கக் கூடிய சொத்துக்கள் விவரம் திரட்டி கோர்ட்டுக்கு செல்லப் போவதாக கொளத்தூர் மணி கூறியுள்ளார். இது பற்றி விவரம் கேட்க வீரமணி தரப்பை அணுகியதில் சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் ரிப்போர்டர் கட்டுரை கூறுகிறது.
சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
18 hours ago
20 comments:
/திரிபுவாதம் மற்றும் திருட்டிலிருந்து பெரியார் எழுத்துகளை, கருத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்./
நல்ல தமாஷ்!
பெரியார் எப்போதுமே, அந்த நேரத்தில் தனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே போட்டு உடைத்து விடுகிற வழக்கம் உள்ளவர்.
தன்னுடைய நிலைப்பாட்டை மனதில் தோன்றியபடிஎல்லாம் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருந்ததில், நிறையவே முரண்பாடுகள் இருந்தன. ஆனால், அந்தக் குறையைப் பெரியார் மூடி மறைக்க முயன்றதும் இல்லை.
பெரியாரைப் பகுத்தறிவுப் பகலவனாக்கி, அதற்குப் பூசாரி பொறுப்பை வீரமணி ஏற்றுக் கொண்ட பிறகு, பெரியார் என்ன பேசினார் எந்த அர்த்தத்தில் பேசினார் என்பதைக் கூட பூசாரி வந்து தான் சொல்ல வேண்டும் என்ற மாதிரி ஆனதும், பெரியார் பேசினது எல்லாம் அவர் காலத்திலேயே நீர்த்துப் போக ஆரம்பித்து, இன்றைக்கு பூசாரிகள் காலத்தில் காலிப் பெருங்காய டப்பாவில் ஏதோ கொஞ்சம் மீதமிருக்கும் வாசனை மாதிரியே ஆகிக் கொண்டும் வருகிறது.
பெரியாரின் எழுத்துக்கள் விடுபட்ட நிலையில்...?
புதிதாக ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை! அப்புறம் இந்த விஷயத்திற்கு எதற்காக இவ்வளவு பில்டப்?
இன்றைய காலத்தின் தேவைக்குத் தீர்வு சொல்ல முடியாத பழைய நினைவுகளாகவே பெரியாரின் எழுத்துக்கள் ஆகிப்போய் நிறைய ஆண்டுகளாகிறது!
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், திராவிட அமைப்புகள் ரெண்டுபட்டால் பார்ப்பனர்களுக்குக் கொண்டாட்டம்.
அவர்கள் சண்டையில் உங்களது 'அக்கிரமம், அட்டூழியங்களை' மறந்து விட்டுவிடுவார்கள் என்று மனப்பால் குடிக்காதீர்.
கிருஷ்ணமூர்த்தி said...
// //இன்றைய காலத்தின் தேவைக்குத் தீர்வு சொல்ல முடியாத பழைய நினைவுகளாகவே பெரியாரின் எழுத்துக்கள் ஆகிப்போய் நிறைய ஆண்டுகளாகிறது!// //
அப்போ இன்றைய காலத்தின் தேவைக்குத் தீர்வுகள் சங்கரமடத்தில் இருக்கின்றனவா?
அல்லது மனுதர்மம், புராண இதிகாசங்களில் இருக்கின்றனவா?
இல்லாத இராமனுக்கு கோவில் கட்டுவதும், இல்லாத இராமர் பாலத்தை இடிக்காமல் விடுவதும் இன்றைய காலத்தின் தேவைக்குத் தீர்வு ஆகிவிடுமா?
//
திராவிட அமைப்புகள் ரெண்டுபட்டால் பார்ப்பனர்களுக்குக் கொண்டாட்டம்.
//
திராவிட அமைப்பு ரெண்டு, நான்கு, ஆறு எட்டு என்றெல்லாம் பட்டுச் சீரழிந்து சின்னாபின்னமாகப் போவதை பார்ப்பானர்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கப்போகிறார்கள். இதில் மனப்பால், மனப்பிராந்தி, மன விஸ்கி எல்லாம் யாரும் குடிக்கப் போகவில்லை.
ஒரு ஃபாசிச அமைப்பு சீரழிவதில் யாருக்கும் கவலை இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அருள்,
சங்கர மடத்தில் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் அவசியம் எனக்கில்லை.அதை, சௌகரியத்திற்காகக் கூட்டு சேர்ந்து, வழக்கின் சாட்சிகளைத்தொடர்ந்து பிறழ் சாட்சிகளாக மாறிக் கொண்டிருப்பதற்குத் துணை நிற்பவர்களிடம் போய்க் கேட்டுக் கொள்ளுங்கள்!
முதலில் திராவிடம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டு அப்புறம் தேடுங்கள்!
உங்களிடம் ஒரு நல்ல விஷயம்!
தமிழ் ஓவியா ஐயா மாதிரி கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்தோ, அங்கே பார்த்துத் தெளியுங்கள், இங்கே பார்த்து உணருங்கள் என்றெல்லாம் இல்லாமல் உளறுவதைக் கூடக் கொஞ்சம் ஒரிஜினாலிடியுடன் செய்து கொண்டிருக்கிறீர்கள் பாருங்கள், நீங்கள் நிஜமாகவே ரொம்ப நல்லவர்!
Anonymous said...
// //ஒரு ஃபாசிச அமைப்பு சீரழிவதில் யாருக்கும் கவலை இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.// //
எது ஃபாசிச அமைப்பு ?
உலகிற்கே ஃபாசிச அடையாளமாகத் திகழ்ந்த இத்தாலியின் முசோலினியிடம் பாடம் கற்று வந்த கே.எம்.முன்ஷிதான் ஆர்.எஸ்.எஸ் சித்தந்தத்தின் அடிப்படையாக இருந்தார்.
ஃபாசிசத்திற்கு ஆட்களை தயார் செய்யும் முசோலியின் அமைப்பான Opera Nazionale Balilla (ONB) - என்பதை முன்மாதிரியாகக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் ஷாகாவும் செயல்படுகிறது.
எனவே, ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வ-பார்ப்பன பயங்கரவாதக் கூட்டம்தான் இந்தியாவின் ஒரே ஃபாசிசக் கூட்டம்.
Dravidianism = Tamil socialism
Nazism = National socialism
For dravidianism the enemy is brahmin
For Nazis the enemy is jew
(there is nothing common between a jew and a brahmin except that both are religious nuts)
both dravidianism and nazism reject individualism and emphasize on collective being...for the sake of race.
Arul, Go F*ck your selves with your fascist nazi dravidian ideology.
EVR writings when comes out in the open and allows itself to debate...it will stand debunked in no time.
All of it simply is tamil version of nazi propaganda material. PERIOD.
//
ஃபாசிசத்திற்கு ஆட்களை தயார் செய்யும் முசோலியின் அமைப்பான Opera Nazionale Balilla (ONB) - என்பதை முன்மாதிரியாகக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் ஷாகாவும் செயல்படுகிறது.
எனவே, ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வ-பார்ப்பன பயங்கரவாதக் கூட்டம்தான் இந்தியாவின் ஒரே ஃபாசிசக் கூட்டம்.
//
அருள்,
இங்கு ஆர்.எஸ். எஸ் பற்றி உம்மைத் தவிர எவனாவது பேசுனானா ? உம்ம திராவிடக் கொள்கையைச் சொன்னால் எதற்கு வடநாட்டுக் காக்கி டவுசரை கவ்வுகிறீர் ?
உம்ம திராவிட கருப்புட் டவுசர் கிழிந்து போஸ்ட் ஆபீஸ் ஆகிக்கொண்டிருக்கு...என்றால் காக்கி டவுசர் தான் உண்மையான போஸ்ட் ஆஃபீஸ் என்று உம்ம சர்டிஃபிக்கேட்டை இப்ப யார் கேட்டு அழுதார்கள் ?
பெரியாரின் எழுத்துக்கள் பாசிசம் போதிக்கின்றன...திராவிடம் என்பது நாஜிக்கொள்கைக்கு ஒப்பானது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் இது தான் என்றால்...உங்கள் அறிவு/முட்டாள்தனம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
சில சமயங்களில் வாயை மூடிக்கொண்டிருப்பதே புத்திசாலித்தனம். இது என்னிக்குத் தான் உமக்குப் புரியப்போகுது ?
// // //dravidianism = Tamil socialism
Nazism = National socialism
For dravidianism the enemy is brahmin
For Nazis the enemy is jew// // //
WRONG
""The Vedas are veriably a fountain of poison that has periodically infested the veins world with its dangerous dogmas. Ramaite apartheid, Kautilyan totalitarianism and Brahmanic Fascism are some of the deadly venom that Hinduism has spewed forth onto the world. Nazism is another such deadly scourge invented by the Brahminist Vaishnavas that has devastated the world. The Nazis adopted all their fundamental dogmas from Hinduism. Besides the swastika, the Nazis adopted the Vedic concepts of the superiority of the Aryan race and of course, apartheid.
The origin of Nazism can be traced back directly to Madame Blavatsky and her Theosophical Society. Madame Blavatsky propounded the notion of the superiority of the Aryan race, an idea derived from Vedic concepts of varnashramadharma (apartheid). These were then used by the Thule Society in Germany, which was the direct precursor of the National Socialist Party.""
Read: Nazism - Its Brahmanic Origin
http://truthseeker241212365.blogspot.com/2009_02_01_archive.html
If Periyar DK challenges the rights of the trusts controlled by Veeramani&Co over these properties
then there will a real BIG fight.
Periyar DK will urge the government to take over them and the educational institutions.But Veeramani wont give up so soon.
Hence watch out for the fight between followers of Periyar over properties.I support the demand that govt. should take over them and manage them without paying any compensation to Veeramani&Co. DK will be weakened if the properties are taken over by govt.So I support that demand.
So, by your definition and my definition. The origin of Dravidianism is Vedas...
That means Dravidianism has vedic roots...via nazism. Excellent.
Anonymous said...
// //So, by your definition and my definition. The origin of Dravidianism is Vedas...
That means Dravidianism has vedic roots...via nazism. Excellent.// //
திராவிடம் என்பது ஒரு இனப்பிரிவு. ஆரியர், நீக்ரோ, மங்கோலியர் என்பது போன்றதுதான் இது. இதனை 'நாசிசம், பாசிசத்துடன்' போட்டு குழப்புவது உங்களது இனவெறியின் வெளிப்பாடு.
திராவிடம், திராவிடர், திராவிட நாடு என்கிற வார்த்தை எந்த ஒரு இனத்திற்கும் எதிரானது அல்ல.
பார்ப்பனர் அல்லாத இந்நாட்டு மக்களை குறிக்கும் வகையில்தான் தந்தை பெரியார் திராவிடன் என்பதைப் பயன்படுத்தினார்.
""நாம் 'இந்தியர்' என்பதை மறுக்கிறபடியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெறவேண்டுவதாலும் 'திராவிடர்' என்னும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல; மறந்ததை நினைத்துக்கொண்டதேயாகும்; நம்மைக் குறிக்க 'பார்ப்பனரல்லாதார்' என்கிறோம். 'அல்லாதார்' என்பதைச் சேர்த்துக் கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் - 'அல்லாதார்' ஆகவேண்டும்?"" என்றார் தந்தை பெரியார் (குடிஅரசு 9.12.1944).
எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் திராவிடன் என்கிற கருத்து முன்வைக்கப்படவில்லை. ஆரிய அடக்குமுறை, சுரண்டல், இழித்தன்மையிலிருந்து பெரும்பான்மை மக்களை விடுவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
எனவே, விடுதலைக்காக குரல் கொடுப்பது எப்படி நாசிசம் ஆகும்?
மிகமுக்கியமாக 'தந்தை பெரியார் பார்ப்பனர்களுக்கு எதிரானவர் அல்ல' என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பார்ப்பனர்களைப்பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்:
"""எனது கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட, 'மேல்சாதி'யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது - அவன் நல்வாழ்வு வாழக்கூடாது - அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ...'கோடீஸ்வர'னாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே - எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உட்பட எவரும் சிறிதுகூட நமக்கு மேல்சாதியினன் என்பதாக இருக்கக்கூடாது என்பதுதான் என் நோக்கம்.
பணக்காரத்தன்மை என்பது ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல; அந்த முறை தொல்லையானது - சாந்தியற்றது என்று சொல்லலாம்; என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல்லைக் கொடுக்கக்கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடியதும், எப்போழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.
ஆனால், இந்த மேல்சாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகாக் குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத்தன்மையையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும்; ஒரு பெரிய மோசடியும் 'கிரிமினலு'மாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல்சாதிதன்மையை ஒழித்தாகவேண்டும் என்பது எனது பதிலாகும்."""
--தந்தை பெரியார் - குடியரசு 9.11.1946
அருள்
தலிதிஸ்தான் வலைத்தளத்திலிருந்து எல்லாம் எடுத்துக்காட்டுகள் கொடுக்கிறீர்கள்...அது மிகவும் ஆபத்தான தளம்.
இந்தியாவைக் கூறு போட எண்ணும் தீவிரவாத அடிப்படைவாத நாய்களின் கூடாரம் தலிதிஸ்தான் வலைத்தளம்..
http://en.wikipedia.org/wiki/Dalitstan.org
இவ்வலைத் தளத்தின் கருத்துக்கள் வெறுப்புணர்ச்சி கருத்துக்கள் மற்றும் தேசவிரோத கருத்துகள் பரப்புவன என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிருத்தவ அடிப்படைவாத சொறி நாய்கள் உதவியுடன் நடத்தப்படும் நாய்க்கூடாரம் தலிதிஸ்தான். இவர்களுக்கும் இந்திய தலித் களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வஜ்ரா said...
// //தலிதிஸ்தான் வலைத்தளத்திலிருந்து எல்லாம் எடுத்துக்காட்டுகள் கொடுக்கிறீர்கள்...அது மிகவும் ஆபத்தான தளம்.// //
'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'
// //இந்தியாவைக் கூறு போட எண்ணும் தீவிரவாத அடிப்படைவாத நாய்களின் கூடாரம் தலிதிஸ்தான் வலைத்தளம்.// //
இந்திய மக்களுக்கு இந்துத்வ பயங்கரவாதிகளை விட ஆபத்தான வேறுஒரு கூட்டம் இருக்கிறதா என்ன?
OUT LOOK, July 19 இதழில் வெளிவந்திருக்கும் Hindu Terror-Conspiracy of silence செய்திக்கட்டுரையைப் படித்துப்பாருங்கள்:
http://communalism.blogspot.com/2010/07/hindu-majority-has-blind-spot-for.html
http://communalism.blogspot.com/
பதிவின் சப்ஜக்டுக்கு வாங்க அருள். நீங்க வீரமணியை ஆதரிக்கிறீர்களா அல்லது உண்மை மற்றும் நியாயத்தை ஆதரிக்கிறீர்களா?
மருத்துவர் மாதிரியே வீரமணியும் தன் மகனது நலனுக்காக மட்டுமே செயல்படுவதால் அவரையும் ஆதரிக்கிறீர்களா?
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //பதிவின் சப்ஜக்டுக்கு வாங்க அருள். நீங்க வீரமணியை ஆதரிக்கிறீர்களா அல்லது உண்மை மற்றும் நியாயத்தை ஆதரிக்கிறீர்களா?// //
நீங்கள் இப்படி சொல்வதால் ஆசிரியர் வீரமணியின் பக்கம் உண்மை இல்லை என்று ஆகிவிடாது. (உண்மை இதழை வெளியிடுவதும் அவர்தான் என்பது வேறு செய்தி).
இது ஒரே அமைப்பாக இருந்தவர்களிடையே, ஒரே கொள்கைக்காக பாடுபடுவர்களிடையே உள்ள உள்முரண்பாடு. நீதிமன்றத்தின் படி ஏறிய பிறகு - நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதை அவர்கள் கேட்கப் போகிறார்கள். இதில் என்னுடைய கருத்துக்கு என்ன தேவை இருக்கிறது?
காஞ்சிபுரம் பெருமாள் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்று ஒய்(Y)-யுக்கும், யு (U)வுக்குமான சர்ச்சையில் என்னுடை கருத்துக்கு எந்த தேவையும் இல்லை என்பது போலத்தான் இதுவும்.
//இதில் என்னுடைய கருத்துக்கு என்ன தேவை இருக்கிறது?//
மக்கு மசாலா அருள்,அப்ப மத்த இடத்துல நீ உளறின கருத்துக்களேல்லாம் ரொம்ப தேவையான கருத்துக்களா?முண்டம் முண்டம்.
Anonymous said...
// //மக்கு மசாலா அருள்,அப்ப மத்த இடத்துல நீ உளறின கருத்துக்களேல்லாம் ரொம்ப தேவையான கருத்துக்களா?முண்டம் முண்டம்.// //
ஹா..ஹா...
இதுக்குப்பதிலா நீங்க ஒட்டுமொத்தமா 'டோண்டு & கோ'-வின் எல்லா பதிவுகளையும் அதில் பின்னூட்டம் போடுகிற எல்லோரையும் நேரடியாவே திட்டியிருக்கலாம், உங்களையும் சேர்த்து.
'டோண்டு & கோ' கருத்துக்களேல்லாம் ரொம்ப தேவையான கருத்துக்களா? இதனால யாருக்காவது ஏதாவது பயன் இருக்கா?
பொழுது போகலைன்னா, தொலைக்காட்சியில ஏதாவது ஒரு பிளேடு படத்த பார்க்கிற மாதிரி, அப்பப்ப பார்ப்பன கோமாளித்தனத்தை வேடிக்கை பார்க்கிறதும் ஒரு ஜாலிதான்.
இதுக்கெல்லாம் 'ஃபீல்' பன்னாதீங்க. தேவையில்லை'ன்னாலும் கருத்துசொல்றது எங்க கருத்துரிமைன்னு எடுத்துக்கோங்க.
//
'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'
//
நீங்கள் காண்பாதாக எண்ணிக்கொண்டிருக்கும் மெய்ப்பொருள் ஒரு பொய்ப்பொருள் என்பதைத் தான் சொல்கிறேன்.
//
இதில் என்னுடைய கருத்துக்கு என்ன தேவை இருக்கிறது?
//
பதிவின் சப்ஜெக்ட்டைப் பற்றி பேச உங்களிடம் எதுவும் இல்லாத பட்சத்தில்..உங்களுடன் விவாதிக்க எதுவும் இல்லை.
good post.at last liberator periar liberated from the clutches of
veeramani and co.thank god.
madurairadha
Post a Comment