இதென்ன புது கலாட்டா என்பவர்களுக்கு பதில் இதோ. ஜெயா டிவி நேர்காணல் ஜூன் 17-ஆம் தேதியே வந்து விட்டது. அதன் சிடியைப் பெற ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். ஆனால் கிடைத்ததோ டிவிடி. எனது மடிக்கணினி அதை போட மாட்டேன் எனக் கூறி விட்டது. மேஜைக்கணினியோ அதை அடையாளம் காணவே மறுத்து விட்டது. Video TS போல எதோ இருந்தது.
ஆகவே இதை எனக்கு கிடைக்க ஏற்பாடு செய்த எனது மச்சினியிடம் கூற, அவரோ சிடியாகவே (இம்முறை இரு சிடிக்களாக) வாங்கித் தந்தார். அது கிடைத்தது போன சனிக்கிழமை. அதற்குள் காரைக்கால் ஆல் இண்டியா ரேடியோ எஃப்.எம். நேர்காணல் நடந்து முடிந்து அதன் எடிட் செய்யப்படாத சிடியை வேறு நிலையத்தினரே கொடுத்து விட்டனர்.
ஆடியோ சிடி சிறியதுதானே அதை ஏற்றலாமே என முயன்று லோலுப்பட்டு பிறகு பத்ரி அவர்களது துணையோடு அதை வலையேற்றி எம்பெட் செய்ய முடிந்ததை ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளேன். சரி வீடியோவை பார்க்கலாம் என முயன்றால் வழக்கம் போல ஃபார்மாட் பிரச்சினை. .dat file .mpeg ஆக மாற்ற வேண்டியிருந்தது. அதற்கான மென்பொருள் ஏற்கனவேயே இருந்ததால் அதையும் செய்து முடித்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் என்ன அக்கிரமம், அவ்வாறு கன்வெர்ட் செய்யப்பட்ட சிடிக்களை ப்ளே செய்ய மடிக்கணினி மறுத்து விட்டது. ஆனால் .dat fileகளை பிளே செய்வதில் சிக்கல் இல்லை.
என்னடா இது மதுரக்கு வந்த சோதனை என தலையை சொரிந்து கொண்டே யோசித்தேன். சரி எதற்கும் இருக்கட்டும் என இரண்டு சிடிக்களில் சிறியதை முதலில் அவர் சொன்ன தளத்தில் (archive.org) ஏற்றினேன். அதுவும் சமர்த்தாக ஏறிவிட்டது. எம்பெட்--ம் செய்து விட்டேன்.
இப்போது துணிந்து பெரிய சிடி யை ஏற்றுகிறேன். பார்க்கலாம் என்னதான் ஆகிறது என.
(இரண்டு மணி நேரம் கழித்து):
அடேடே அதுவும் சமர்த்தாக ஏறிவிட்டதே.
சில டிப்ஸ்: கீழே உள்ள ஹைப்பர்லிங்குகளை அழுத்தினால் தனி பக்கத்தில் பார்க்கலாம். அவற்றின் கீழே எம்பெட்டெட் வீடியோக்களும் உள்ளன, அவற்றிலும் பார்க்கலாம்.
இந்த ஜெயா டிவி நேர்காணலை போடுவதில் முதலில் ஏற்பட்ட தயக்கத்தை ஏற்கனவேயே பழைய பதிவில் கூறியுள்ளேன். அதிலும் ஏ.ஐ.ஆர். ஆடியோ டேப் கடைசியாக வந்து முதலில் ஏறியதில், மூத்த பெண்ணை விடுத்து இளைய பெண்ணுக்கு திருமணம் முதலில் செய்த கதையாகி விட்டது (என்ன பதிவின் தலைப்பை ஜஸ்டிஃபை செய்து விட்டேனல்லவா)? அக்காவுக்கு சற்றே மவுஸ் குறைந்து விட்டதோ.
எது எப்படியானாலும் இம்மாதிரியான அற்புத தளத்தைக் காண்பித்துக் கொடுத்த பத்ரிக்கு மீண்டும் நன்றி.
முதலில் ஹைப்பர் லிங்குகள்
Part 1
Part 2
இப்போது எம்பெட் செய்தவை
Part 1 embeding
Part 2 embedding
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
2 hours ago
8 comments:
அது என்ன அக்காவிற்கு முன்னால் தங்கைக்கு கல்யாணம் ஆன கதை.
அப்படி ஒரு அக்கா மனம் ஆகாமல் இருந்தால், நீங்கள் உங்கள் பையனுக்கோ தம்பிக்கோ திருமணம் முடித்து வைப்பீர்களா. எனக்கு தெரிந்து இரு குடும்பத்தில் அக்கா படிப்பிற்காக திருமணத்தை தள்ளி போட்டு இருந்தார், அவருடைய இரண்டு தங்கைகள் திருமனம முடிந்த பிறகு இவருக்கு திருமணம் நடந்தது.
இதே போல அண்ணனுக்கு முன்னால் தம்பிக்கு திருமணம் ஆனாலும் அந்த வீட்டில் யாரும் பெண் கொடுக்க மாட்டார்களா.
For example: Now X is the elder sister, Y is younger sister. X got married later than Y.
Now Y's son A is 12 years old, X's son B is 8 years old.
Now B is younger brother or elder brother to A.(how should they call, annaa-periyamma payyan or tambi)
//
how should they call, annaa-periyamma payyan or tambi
//
இதிலென்ன பெரிய பிரச்சனை ?
எத்தனையோ குடும்பங்களில், அக்காவுக்கு குழந்தை பாக்கியம் லேட்டாக அமைந்து போகும். அப்ப ஏற்படும் நிலை தானே.
பேர் சொல்லிக் கூப்பிடவேண்டியது தான். பெயரை அதுக்குத் தானே வைக்கிறார்கள் ? திரு. ராம்ஜீ கூகிள்! (யாஹூ எல்லாம் பழசாகிப்போச்சு)
Dondu sir,
Thx for uploading the interview
Krishnan
well done dondusir,the interview in jaya tv is excelent.i wish some more time should have been alotted for the programme.it was a grand sucess.we want more such interviews in more channels on various topics .
radhas.
தொலைக்கட்சியில் பேட்டி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்களது பேட்டி ஒரு உதாரணம்.
தொலைக்கட்சியில் பேட்டி எப்படி இருக்கக் கூடாது என்பதை
http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_07.html
வந்து அறியலாமே....(என்னால் முடிந்த ஒரு கற்பனை முயற்சி..)
ஹிஹிஹி
உங்கள பாத்தா ஸ்பெயின் கால்பந்து கோச் Vicente del Bosque போலவே இருக்கு!(முக ஜாடை)
Well done Dondu sir..unga interview migavum arumai..unga ezhuthukkaluku nanum oru visiri
இப்பொழுதெல்லாம் டிவி டியூனர் கார்டு (TV Tuner Card) ரூ.500ல் இருந்து கிடைக்கிறது. அதை வாங்கி தங்களுடைய டெஸ்க்டாப்பில் மாட்டிவிட்டால் போதும். தேவைப்படும் போது கேபிள் டிவியின் வயரை இந்த கார்டில் மாட்டி கணினியிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் பதிந்து கொள்ளவும் முடியும். அடிப்படை கணினி அறிவு இருந்தாலே போதுமானது.
பேட்டி வழக்கம்போல் வேகம்... வேகம்... வேகம்....
Post a Comment