10/21/2010

சென்னை பதிவர் சந்திப்பு - 20.10.2010 - ராஜன் திருமண வரவேற்பு

சென்னை சிந்தாதிரி பேட்டை காமாட்சி மீனாட்சி மகாலில் 20.10.2010 மாலை 7 மணி அளவில் நடைபெறவிருக்கும் பதிவர் ராஜனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒரு பதிவர் சந்திப்பாகவும் மாற்றலாம் என வால்பையன் மற்றும் கே.ஆர்.பி. செந்தில் ஆகியோர் பதிவு போட்டிருந்தனர். நாமும் சரி, பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு வெகுநாட்களாயிற்றே என மனதில் வைத்து அதற்கு சென்றேன்.

ஏழு மணிக்கு ஆரம்பிக்க இருந்தது வரவேற்பு நிகழ்ச்சி. 6 மணிக்கே அங்கு சென்றால் பதிவர்களுடன் பேசலாம் என்ற என் எண்ணம் பொய்த்தது. நான் மண்டபத்துக்கு சென்றபோது பதிவர்கள் யாருமே இல்லை. வால் பையனுக்கு போன் போட்டு கேட்டால் அவர் எல்லிஸ் ரோடில் ரூம் போட்டிருப்பதாகவும், பலர் அங்கு வந்திருப்பதாகவும் கூறினார். நான் அவரிடம் கண்டிப்பாகக் கூறினேன், எல்லோரையும் அழைத்துக் கொண்டு உடனே வருமாறு. நல்ல வேளையாக கையில் ஹாரி பாட்டர் நாவல் இருந்ததோ பிழைத்தேனோ. சற்று நேரம் கழித்து அதிஷாவும் லக்கிலுக்கும் வந்தனர். கல்யாண மாப்பிள்ளை ராஜனும் வந்து எங்களுடன் சிறிது நேரம் பேசினார்.

லக்கிலுக்கிடம் நான் எனது எந்திரன் பதிவில் கேட்ட சந்தேகத்தை அவரிடமும் கேட்டேன். அதாவது, “என் மனதுக்கு ரொம்ப நாட்களாகவே ரொம்பப் புதிராக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், வேலன் மற்றும் வெற்றிவேலில் ஹவுஸ்ஃபுல் ஆவதை விடுங்கள். ஒரு ஷோவுக்கு சமயத்தில் 20 பேர் கூடத் தேறுவதில்லை. அதெப்படி அவற்றை நடத்துவது கட்டுப்படியாகிறது? அந்த காம்ப்ளெக்ஸின் முதலாளியிடம் 7 தியேட்டர்கள் மேல் இருக்கின்றனவாம். மனிதர் எப்படி சமாளிக்கிறார்”?

அவரும் தியேட்டர்களது உண்மை நிலவரத்தைக் கூறினார். சென்னையில் கணிசமான அளவில் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அது முழுவது க்ஷீணிக்காமல் இருக்கவே பல வரிகள் நீக்கப்பட்டன. டிக்கெட்டு விலைகளையும் மார்க்கெட் நிலவரம் போல முதல் ஓரிரு வாரங்களுக்கு வைக்க அனுமதி தரப்பட்டது போன்ற விஷயங்களை விளக்கினார்.

மண்டபத்தின் உள்ளே மெல்லிச்சை கச்சேரி ரொம்ப சவுண்டாக இருந்ததால், எல்லோரும் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தோம். வரும் 2011 தேர்தலில் திமுகவுக்கு தனியாகவே சாதாரண பெரும்பான்மை கிட்டும் என லக்கிலுக் ப்ரெடிக்ட் செய்தார். பிறகு மற்ற பதிவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அப்துல்லா, பலாபட்டறை சங்கர், உண்மை தமிழன், கும்மி, சிரிப்பு போலீஸ் ரமேஷ், ஜாக்கி சேகர், மங்குனி அமைச்சர் ஆகியோர் வந்து சில நேரம் கழித்து வால் பையன் வந்தார். பேசிக் கொண்டே இருந்ததில் மணி ஏழரையைத் தாண்ட, எல்லோரும் மறுபடி உள்ளே சென்றோம்.

மணமக்களுக்கு வாழ்த்துக் கூறுவதற்காக பலர் வரிசையில் நின்றனர். அவர்களிடையே ருத்திரனும் இருந்தார். அவரிடம் சென்று பேசினேன். பதிவு பின்னூட்டங்களில் நான் அவருக்கு தெரிவித்த எதிர்ப்பை அவர் பெர்சனாக எடுக்கலாகாது எனக் கூறியதும் அவரும் அதை புன்னகையுடன் ஆமோதித்தார். அவருடன் அதை க்ளாரிஃபை செய்து கொண்டது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. எங்கள் இருவரையும் சேர்த்து கும்மி அவர்கள் போட்டோ எடுக்க அதை கண்டிப்பாக எனக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவரும் அதையும் மர்ற போட்டோக்களையும் மின்னஞ்சலில் அனுப்பினார். அவை கீழே.


(ருத்ரனுடன் நான்)


(இடமிருந்து வலம்: வால்பையன், ருத்ரன், மணமகள், ராஜன், நான்)



ருத்ரனிடம் அவர் டாக்டர் ஷாலினியுடன் சேர்ந்து மாடரேட் செய்த Good touch, bad touch விவாதத்தை நினைவு கூர்ந்து அதில் நான் வெறுமனே சுருக்கமாக கூறிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். அதாவது பிறப்புறுப்பைத் தொடும்போது ஆண் குழந்தையானாலும் சரி, பெண் குழந்தையானாலும் சரி அதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆகவே பாலியல் ரீதியாக தன்னைத் தொடுபவர்களை குழந்தையும் அனுமதிக்கிறது, வெளியிலும் சொல்வதில்லை. இம்மாதிரியான நிகழ்வுகள்தான் அதிக ஆபத்தை விளைவிக்கும். அதை குழந்தையின் பெற்றோர் உணர்ந்து குழந்தையுடன் பக்குவமாகப் பேசவேண்டும்.

இரவு விருந்து நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட 9 மணி வாக்கில் விடை பெற்று சென்றேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

71 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

புகைப்படம் பார்த்து கண்கள் பணித்தது, இதயம் இனிட்டது
.

Jackiesekar said...

டோண்டு சார் கல்யாணத்துக்கு நானும் வந்தேன்...

Anonymous said...

manamakal pottu vaithiruppathu hindu kalaachaaramaache? eppadi anumathithaar rajan?

எல் கே said...

அலுவலக வேலை காரணமாக வர இயலவில்லை

கோவி.கண்ணன் said...

மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்

டுபாக்கூர் பதிவர் said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....

பேக்கிரவுண்ட்ல பிள்ளையார்?, ஒண்ணும் புரியலை :)

dondu(#11168674346665545885) said...

@ஜாக்கி சேகர்
உங்க்ள் பெயரையும் சேர்த்து விட்டேன்.

@ராம்ஜி_யாஹூ, கோவி கண்ணன்
நன்றி

@டுபாக்குர் பதிவர்
ராஜனைக் கேளுங்கள். எனக்கென்னவோ பெண் வீட்டாரின் ஏர்பாடு என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டுபாக்கூர் பதிவர் said...

//இரவு விருந்து நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட 9 மணி வாக்கில் விடை பெற்று சென்றேன்.//

இரவு விருந்து நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட 9 மணி வாக்கில் விடை பெற்று வந்தேன்....

இதுதானே சரியாக வரும்.

:)

Anonymous said...

தும் ததா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஜாக்கி சேகர் said...

டோண்டு சார் கல்யாணத்துக்கு நானும் வந்தேன்...
//
ஜாக்கி அண்ணே சாப்பிட்டதை சொல்லவே இல்லை?

ராம்ஜி_யாஹூ said...

மணப்பெண்ணின் நெற்றியில் பொட்டை பார்த்த நண்பருக்கு, மேலே சுவரில் மாறியிருக்கும் பிள்ளையார் படம் கண்ணில் தெரிய வில்லை போல.

பகுத்தறிவு எல்லாம் பதிவுலகோடு சரி, கடவுள் மறுப்பு கொள்கை எல்லாம் கணினி திரையோடு சரி போல.

R. Gopi said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

உமர் | Umar said...

பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும், நேரிலும் வாழ்த்திய அனைவருக்கும் மணமக்கள் சார்பில் நன்றிகள்.

நாளை, இன்னும் விரிவாக பதிவிடுகின்றோம்.

Anonymous said...

மணப்பெண்ணின் நெற்றியில் பொட்டை பார்த்த நண்பருக்கு, மேலே சுவரில் மாறியிருக்கும் பிள்ளையார் படம் கண்ணில் தெரிய வில்லை போல.
appadiyalla...sila kalyaana mandapathil pillaiyaar padam samy padam vaithiruppaarkal. appadi irukkumonnu nenachen.

காமன் மேன் said...

டோண்டு சார்,

இன்று அவர்களின் திருமண நாள் தேவையில்லாத கமெண்டுகளை மாடரேட் செய்யுங்கள். இங்கே இன்ன இடத்தில் திருமணம் என்று அறிவித்துவிட்டே, அழைப்பிதழை பொதுவில் வைத்தே திருமணம் செய்து கொள்கின்றனர் இருவரும்.

கருத்து மோதல்களோ, கேள்விகளோ வைக்கும் நேரம் இதுவல்ல. மேலும் பதிலளிக்கக் கூடியவர்கள் எங்கேயும் ஓடிப்போய்விட மாட்டார்கள்.

இனிய வாழ்க்கை அமைந்திட
வாழ்த்துங்கள் நண்பர்களே.

Anonymous said...

வந்தவங்க லிஸ்ட் போட்டீங்க சரி. சாப்பாடு ஐட்டம் வாரியா எழுதப்படாதா ?

நம்ப அம்பி அருள் வரலையோ ? சுசீந்திரன், சரவணன் எல்லாம் வரலையா ?

ஏனப்பன்

Anonymous said...

//டோண்டு சார்,

இன்று அவர்களின் திருமண நாள் தேவையில்லாத கமெண்டுகளை மாடரேட் செய்யுங்கள். இங்கே இன்ன இடத்தில் திருமணம் என்று அறிவித்துவிட்டே, அழைப்பிதழை பொதுவில் வைத்தே திருமணம் செய்து கொள்கின்றனர் இருவரும்.

கருத்து மோதல்களோ, கேள்விகளோ வைக்கும் நேரம் இதுவல்ல. மேலும் பதிலளிக்கக் கூடியவர்கள் எங்கேயும் ஓடிப்போய்விட மாட்டார்கள்.

இனிய வாழ்க்கை அமைந்திட
வாழ்த்துங்கள் நண்பர்களே. //

I second this comment.

Anonymous said...

நேரம் இதுவல்ல. மேலும் பதிலளிக்கக் கூடியவர்கள் எங்கேயும் ஓடிப்போய்விட மாட்டார்கள்.

I "third" this comment.

தாறுமாறு said...

கல்யாண பத்திரிகைல சுப முகூர்த்தம் 7.30 9.00ன்னு போட்டிருந்ததே கவனிக்கல? பொட்ட கவனிச்சவங்க இத கவனிக்கனுமே? நார்மலா உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.

Anonymous said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..

NO said...

// கல்யாண பத்திரிகைல சுப முகூர்த்தம் 7.30 9.00ன்னு போட்டிருந்ததே கவனிக்கல? பொட்ட கவனிச்சவங்க இத கவனிக்கனுமே? நார்மலா உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.//

மேலே சொல்லப்பட்டது உண்மையானால், கருத்துக்கள் கீழே!

ஒரு சாரர் நாத்தீகர்கள் தன்னின் முடிவுகளை தனக்குள்ளேயும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் வட்டத்தாரிடம் வைத்துக்கொண்டு, நம்பிக்கையாளர்களிடம் அதிகமாக தன்னின் நிலையை விளிக்காமல் இருப்பவர்கள். ஆதாவது இது என் நிலைப்பாடு, ஆனால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய நான் இல்லை என்பவர்கள்.

அடுத்த நிலை, ஆத்திகர்களை பார்த்து கடவுளின் இல்லாமை பற்றியும், இல்லாத ஒன்றை வணகுவது உபயோகமில்லா ஒரு செயல் என்றும் விலாவரியாக உபதேசம் செய்பவன்!

இதில் மூன்றாவது நிலை, ஆத்திகர்களை பார்த்து ஏளனம் செய்பவர்கள்!

இந்த மூன்று நிலைகளில் முதல் நிலையில் இருப்பவர், தன்னின் சொந்தங்களின் விருப்பினால் மத அடையாளைங்களை அழிக்காமல் இருப்பவர்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனென்றால், அவர்கள் மாற்றாருக்கு தன்னுடைய கருத்தை உபதேசிப்பது இல்லை. வணங்குவது, வணகப்படுவது இல்லாம் கேவலம் என்றும் கூறவில்லை. அதே சமயம் அவர்கள் நம்பிக்கையாளர்களும் இல்லை. அவர்கள் வீட்டு விசேஷங்களில் மத அடையாளங்கள் இருந்தால் தவறொன்றுமில்லை.

இரண்டாவது நிலையில் இருப்பவர்கள், இந்த நிலையை எடுக்கவே முடியாது! ஏனென்றால் மாற்றாருக்கு அவர்கள் கேட்காமலேயே நாத்தீகம் பற்றியும், அவர்கள் வணகும் உருவங்களோ, அடையாளங்களோ எவ்வளவு தவறானது என்றும் உள்ளே புகுந்து பிரச்சாரம் செய்யும் இவர்கள், முதலில் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தன்னுடைய வாழ்க்கை சார்ந்த விடயங்களில் இதை அகற்ற வேண்டும். என் சொந்தங்கள் சொன்னதால் இதை செய்தேன் என்று சொல்லுவது சுத்த பம்மாத்து. அப்படியென்றால் அவர் மாற்றாருக்கு அறிவுரை சொல்ல அருகதை அற்றவர்.

நண்பர் திரு இராஜனோ, மத விடயங்களில் மிக்க அநாகரீகமாக கிண்டல் பல செய்தவர்.

செய்யட்டும், அது அவரின் freedom of speech. அவரின் உரிமை. அவரின் எண்ணங்கள். தவறில்லை. ஆனால் அப்படி புரட்சி பேசும் அவர், தன்னுடைய சொந்த விடயத்தில் சுப முகுர்த்தம் பார்த்து சடங்குகள் நடத்தினால் அதை விட hypocrisy எதுவும் கிடையாது. தன்னின் பகுத்தறிவு மற்றும் புரட்சி நிலை எப்பேர்பட்ட ஏமாற்று வேலை என்று அவரே காட்டிவிட்டார்!

அதாவது உருக்கு மட்டும்தான் உபதேசம். போடுவது எல்லாம் வெளிவேஷம்!

இந்த தருணத்தில் இதை சொல்லிகாட்டுவது நாகரீகம் இல்லை என்று பலர் எண்ணலாம். நானும்அதை ஏற்கிறேன். ஆனால், இவர் நாகரீகம் இல்லாமல் சொன்னது பல. இந்து கடவுள்களை பற்றி, இந்து மத நம்பிக்கைகளை பற்றி, முகமதுவைப்பற்றி, ஏசு கிருத்த்வைப்பற்றி மிக நாகரீகமாக போட்டவர்தான் இவர். ! அப்படி எல்லாம் பேசிவிட்டு, தனக்கென்று வரும்பொழுது சகுனம் பார்த்து எல்லாம் செய்தால், இவர் போலி என்றிலாமல் என்ன சொல்லுவது??

இந்த தருணத்தில், திரு சுகுணா திவாகரின் பற்றி சொல்லி ஆகவேண்டும். இவரின் கருத்துக்கள் மீதும் இவரின் எண்ண ஓட்டங்கள் மீதும் எனக்கு மிக மிக அதிக கருத்து வேறுபாடுகள் உண்டு.காட்டமாக இவருக்கு பல பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன். இவரின் நிலைகள் மிக தவறு என்று சொல்லிருக்கிறேன். அப்படி இருந்தும் இவருடைய பதிவு ஒன்றில் தன்னின் திருமண நிகழிச்சியை பற்றி எழுதி இருந்ததை படித்தேன். அதில் சில படங்களையும் போட்டிருந்தார் என்று நினைவு. அதாவது, நேரம் பார்க்காமல், பறை முழக்க சத்தத்தோடும், எந்த விதமான மத சடங்குகள் இல்லாமல் நடந்ததாக எழுதி இருந்தார். இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், திரு இராஜனும் இப்படி ஏதாவது செய்திருந்தால், மாற்றானுக்கு அறிவுரை சொல்லுவதை அவரும் பின்பற்றுகிறார் என்று சொல்லி இருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை. ஆதலால், மாற்றானுக்கு மத மறுப்பை சத்தம் போட்டு பிரச்சாரமாக சொல்லவும், கிண்டல் செய்யவும் அருகதை அற்றவராக அவர் ஆகிறார்!

ராஜரத்தினம் said...

//வரும் 2011 தேர்தலில் திமுகவுக்கு தனியாகவே சாதாரண பெரும்பான்மை கிட்டும் என லக்கிலுக் ப்ரெடிக்ட் செய்தார்//
பின்னே அப்படி வரவில்லையென்றால் இவர் பதிவே போடமுடியாது என்பது மட்டுமல்ல அறிவிலினு ஒரு ஜால்ரா மூடிவிட்டு போனது போல இஅவரும் போகவேண்டி இருக்குமே? அதுக்காக வாவது திமுக ஜெயித்து இன்னும் 3,4,5,6,7G அப்படினு எத்தனை ஸ்பெக்ட்ரம் இருக்கோ அதயெல்லாம் போட்டு சம்பாரிக்கட்டுமே?

திராவிட வயிற்றுப்போக்குக் கழகம் said...

//
இந்த தருணத்தில் இதை சொல்லிகாட்டுவது நாகரீகம் இல்லை என்று பலர் எண்ணலாம். நானும்அதை ஏற்கிறேன். ஆனால், இவர் நாகரீகம் இல்லாமல் சொன்னது பல. இந்து கடவுள்களை பற்றி, இந்து மத நம்பிக்கைகளை பற்றி, முகமதுவைப்பற்றி, ஏசு கிருத்த்வைப்பற்றி மிக நாகரீகமாக போட்டவர்தான் இவர். ! அப்படி எல்லாம் பேசிவிட்டு, தனக்கென்று வரும்பொழுது சகுனம் பார்த்து எல்லாம் செய்தால், இவர் போலி என்றிலாமல் என்ன சொல்லுவது??
//

அதர் சைடுல இருந்து இதுக்கு ஏதாச்சும் பதில் இருக்கா ?

இந்த ஐ.செகண்டு இட்டு, ஐ. தர்டு இட்டு என்று ஜிங்க்ஜக் தட்டிய வெண்ணவெட்டி எவனாவது வருகிறானா இல்ல தட்டியதோட சரியா ?

அருள் said...

NO said...

// //முதல் நிலையில் இருப்பவர், தன்னின் சொந்தங்களின் விருப்பினால் மத அடையாளைங்களை அழிக்காமல் இருப்பவர்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனென்றால், அவர்கள் மாற்றாருக்கு தன்னுடைய கருத்தை உபதேசிப்பது இல்லை. வணங்குவது, வணகப்படுவது எல்லாம் கேவலம் என்றும் கூறவில்லை. அதே சமயம் அவர்கள் நம்பிக்கையாளர்களும் இல்லை. அவர்கள் வீட்டு விசேஷங்களில் மத அடையாளங்கள் இருந்தால் தவறொன்றுமில்லை.// //

கணிசமான கடவுள் மறுப்பாளர்கள் இத்தகைய நிலைபாட்டில்தான் இருக்கிறார்கள் என்று கருதுகிறேன். அதேசமயம் அவர்கள் தமது குடுப்பத்தினர், நண்பர்களை கட்டாயப்படுத்துவதே இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

குறிப்பாக - கடவுள் நம்பிக்கை, கோவில் வழிபாடு, வீட்டில் பூசை போன்றவற்றை அனுமதிப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் பழைய பார்ப்பன புரோகிதத்தை மாற்றியுள்ளனர். பார்ப்பனர்கள்தான் கடவுளின் புரோக்கர்கள் என்ற நிலை மாறியிருக்கிறது. அதாவது, கடவுளை நம்புகிறவர்கள்கூட பார்ப்பன மேன்மையை ஏற்காத மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பரவலாக நடக்கும் தமிழ்முறை திருமணம் இதற்கு ஒரு உதாரணம்.

பா.ம.க தலைவர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் - தாலியும் தமிழ் பாரம்பாரியமும் உண்டு. ஆனால், அய்யரும் யாகமும் புரோகிதமும் இல்லை.

NO said...

//பா.ம.க தலைவர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் - தாலியும் தமிழ் பாரம்பாரியமும் உண்டு. ஆனால், அய்யரும் யாகமும் புரோகிதமும் இல்லை.//

ஹா ஹா ஹா, இதை விட நல்ல ஜோக்கு நான் கேட்டு ரொம்பநாளாகிவிட்டது. நீங்க வன்னியரா என்பதே எனக்கு இப்பொழுது சந்தேகம் இருக்கிறது. எனக்கு மிக நெருங்கிய வன்னிய நண்பர்கள் உண்டு. உங்கள் கட்ச்சியில் இருக்கும் மேல் மட்டத்தில் உள்ள சிலரை பற்றியும் firsh hand knowledge எனக்கு உள்ளது.
வன்னிய குல சத்திரியர்கள்தான், தேவர்கள் தெற்க்கே உள்ள அந்தஸ்த்திற்கு நிகராக வடக்கு தமிழகத்தில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அதாவது, அந்தகாலத்திலிருந்து சமூக முக்கியஸ்த்தர்கள்ளாக, சமூக காவலர்களாக வலம் வந்தவர்கள். இவர்கள் இல்லாமல் வட தமிழக கோவில் இல்லை என்று சொல்லலாம். அதாவது கோயில் குருக்களும் அந்தணர் வட்டமும் மக்களின் மத தேவைகளுக்கு எவ்வளவு முக்கியமோ, அதை கட்டிக்காக்க, மொத்த ஆளுமை செய்ய, பிரச்சனை என்றால் சமரசம் செய்ய வன்னிய சமூகமும் முக்கியமாகவே இருந்தது. இருக்கிறது. வன்னிய நாயக்கர்கள் மிக ஈடுபாடுள்ள வைணவர்கள். மேலும் வன்னிய அடிகளார், original வன்னியர் சங்கம் தொடங்கிய நடராசன் போன்றவர்கள் மத விடயத்தில் எப்படி பட்டவர்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜகத் இரட்சகனின் சமய அறிவு எப்பேற்பட்டது என்று அவர் எழுதிய ஆழ்வார் பற்றிய ஆய்வை படித்தால் புரியும். அவரை போன்ற பல தீவிர சைவ மற்றும் வைணவ அறிஞர்கள் மற்றும் பற்றுடையவர்கள் பல பல இருக்கிறார்கள்.

விடயம் அப்படி இருக்கையில் இதற்க்கு ஒரு twist கொடுத்தது ராமதாஸ் அவர்கள்தான். அவரும் அதை ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் செய்யவில்லை. கழகங்கள் மாதிரி தன் கட்சியும் மக்கள் முன் இருக்க வேண்டும் என்பதால் வன்னிய சமூகத்திற்கு ஒரு திராவிட கழக வர்ணம் பூச பார்த்தார். ஆனால் அது வெளி தோற்றம் மட்டுமே என்று எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் உங்கள் சமூகத்தில் இருக்கும் இறை நம்பிக்கைகளை அவர் வெளிப்படையாக திட்டுவதோ சபிப்பதோ கிடையாது. உங்களுக்கு தெரியுமா தெரியாது. ஆனால் சங்கர மடத்தின் பல நண்பர்களில் வன்னியர்கள் பல இருக்கிறார்கள். A K மூர்த்தி போன்றவர்கள் கண்முன்னே இருக்கும்பொழுது, இந்து மத எதிரியாக ப மகா இருப்பதாக பேசுவது நல்ல வேடிக்கை.

அதாவது அருள் என்ற வன்னிய நண்பர் திராவிட கழக அபிமானியாக இருக்கலாம். இந்து மத எதிர்ப்பாளராக இருக்கலாம். ஆனால் அதை மட்டும் வைத்துக்கொண்டு வன்னியர்கள் மற்றும் உங்கள் கட்சி ஆட்கள் எல்லாம் வைதீக இந்து மதத்தை புறக்கணிக்கிறார்கள் என்று கூறுவது, உங்கள் "முற்போக்கு பேச்சு ஆசையை" மட்டுமே காட்டுகிறது. உண்மை நிலைமையை இல்லை!

அருள் said...

NO said...

// //வன்னியர்கள் மற்றும் உங்கள் கட்சி ஆட்கள் எல்லாம் வைதீக இந்து மதத்தை புறக்கணிக்கிறார்கள் என்று கூறுவது, உங்கள் "முற்போக்கு பேச்சு ஆசையை" மட்டுமே காட்டுகிறது. உண்மை நிலைமையை இல்லை!// //

நான் கூறியதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

"பா.ம.க தலைவர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் - தாலியும் தமிழ் பாரம்பாரியமும் உண்டு. ஆனால், அய்யரும் யாகமும் புரோகிதமும் இல்லை." என்றுதான் கூறினேன்.

மருத்துவர் இராமதாசு அவர்களும், மருத்துவர் அன்புமணி அவர்களும் நடத்திவைக்கும் திருமணங்களில் - இவர்கள் உறுதிமொழியை வாசிக்க மணமக்களின் பெற்றொர் தாலி எடுத்துக்கொடுக்க, அய்யரோ மந்திரங்களோ இல்லாமல் திருமணம் நடக்கும்.

வன்னியர்களின் திருமணம் என்று நான் கூறவில்லை, பா.ம.க தலைவர்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் என்றுதான் கூறினேன்.

அருள் said...

ராம்ஜி_யாஹூ said...

// //மணப்பெண்ணின் நெற்றியில் பொட்டை பார்த்த நண்பருக்கு, மேலே சுவரில் மாறியிருக்கும் பிள்ளையார் படம் கண்ணில் தெரிய வில்லை போல. பகுத்தறிவு எல்லாம் பதிவுலகோடு சரி, கடவுள் மறுப்பு கொள்கை எல்லாம் கணினி திரையோடு சரி போல.// //

தாறுமாறு said...

// //கல்யாண பத்திரிகைல சுப முகூர்த்தம் 7.30 9.00ன்னு போட்டிருந்ததே கவனிக்கல? பொட்ட கவனிச்சவங்க இத கவனிக்கனுமே? நார்மலா உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.// //

NO said...

// //புரட்சி பேசும் அவர், தன்னுடைய சொந்த விடயத்தில் சுப முகுர்த்தம் பார்த்து சடங்குகள் நடத்தினால் அதை விட hypocrisy எதுவும் கிடையாது. தன்னின் பகுத்தறிவு மற்றும் புரட்சி நிலை எப்பேர்பட்ட ஏமாற்று வேலை என்று அவரே காட்டிவிட்டார்! அதாவது உருக்கு மட்டும்தான் உபதேசம். போடுவது எல்லாம் வெளிவேஷம்!// //

திராவிட வயிற்றுப்போக்குக் கழகம் said...

// //அதர் சைடுல இருந்து இதுக்கு ஏதாச்சும் பதில் இருக்கா ? இந்த ஐ.செகண்டு இட்டு, ஐ. தர்டு இட்டு என்று ஜிங்க்ஜக் தட்டிய வெண்ணவெட்டி எவனாவது வருகிறானா இல்ல தட்டியதோட சரியா ?// //

""இந்த தருணத்தில் இதை சொல்லிகாட்டுவது நாகரீகம் இல்லை"" என்று கூறி - வரவேற்பில் 'மணமகள் பொட்டுவைப்பது, சுவற்றில் பிள்ளையார், சுபமுகூர்த்தம்' என்பனவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனோடு தொடர்புடையவர்களின் பதில் என்னவென்று தெரியவில்லை. (மறுநாள் திருமணம் எவ்வாறு நடந்தது என்பது குறித்தும் தெரியாது).

உண்மையாக நடந்தது என்ன? என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை இதுவெல்லாம் உண்மை எனில், என்னைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சிக்கலோ, நடக்கக்கூடாததோ அல்ல.

திரிகரண சுத்தி - "அதாவது மனம், சொல், செயல்" ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதன் ஒரே நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அதேசமயம் வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் - "நினைப்புக்கும் பிழைப்பிற்கும்" இடையே முரண்பாடுகள் தோன்றியவாறுதான் இருக்கும். அதுதான் இயல்பு.

உலகின் மாபெரும் சாதனைகள், மாபெரும் வெற்றிகள், மாபெரும் புரட்சிகள் எல்லாமும் முதலில் ஒரு "நினைப்பாக (கொள்கையாக)" இருந்து, அதன்பிறகுதான் "பிழைப்பாக (நடைமுறையாக)" மாறின.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் அரசாங்கம் தேவையில்லை என்றுதான் கருதினர் - ஆனாலும், அதே பிரிட்டிஷாரின் சட்டங்களுக்கு கீழ் அவர்களது அரசிற்கு கட்டுப்பட்டுதான் வாழ்ந்தார்கள். இன்று ஈழத்தில் மிகப்பெரும்பாலான தமிழர்கள் சிங்கள அரசை விரும்பவில்லை. ஆனாலும், அந்த அரசின் நிருவாகத்தில்தான் வாழ்கிறார்கள். இதுதான் நினைப்புக்கும் (கொள்கை) பிழைப்பிற்கும் (நடைமுறை) இடையேயான முரண்பாடு.

வேறுவழியின்றி இன்று ஒரு நடைமுறையை நாம் ஏற்கிறோம் என்பதற்காக அதுதான் நமது கொள்கை என்று ஆகிவிடாது. மாறாக, அதனை ஒருநாள் தூக்கி எறிவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறோம் என்பதே உண்மையாகும். ஒருவேளை அந்த ஒருநாள் நமது வாழ்நாளில் நடக்காமல் கூட போகலாம். "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று பாடிய பாரதியார் விடுதலைப்பெற்ற இந்தியாவை காணவில்லை. மார்க்சீயத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் வாழ்நாளில் உலகின் ஒரு நாடும் கம்யூனிச நாடாக ஆகவில்லை. அதற்காக அவர்கள் கொள்கை வெற்றியடையவில்லை என்று கூறிவிட முடியுமா?

கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, இந்துமத மறுப்பு என்பதெல்லாம் ஒருவரது கொள்கையாக இருக்கலாம் (நான் திரு ராஜன் அவர்களைக் குறிப்பிடவில்லை). ஆனால், திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம் அல்ல. அதில் இருவீட்டார் இருக்கிறார்கள். அந்த வீடுகளுக்குள் பல குடும்ப அங்கத்தினர் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் சில விருப்பம், சில நம்பிக்கை இருக்கலாம். அவை மணமகன்/மணமகளின் தனிப்பட்ட கொள்கை, விருப்பத்திற்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அவற்றையும் மதிப்பதே நல்ல நடைமுறையாக இருக்கும் - அடுத்தவர் விருப்பத்திற்கு வளைந்து கொடுப்பதும் நல்ல பண்புதான்.

நமது கொள்கையை நமக்கானவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களையும் நம்வழிக்கு மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் எவரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. திருமணம் போன்ற வாழ்வில் ஒருமுறை நடக்கும் நிகழ்வுகளில், வீட்டின் பெரியோர்களுக்கும், நமது மதிப்புக்குரியவர்களுக்கும் கட்டுப்படுவதே சிறந்தது - அது நமக்கு பிடிக்காத செயலாக இருப்பினும் கூட.

(குறிப்பு: எனது கருத்துகள் பொதுவாகக் கூறப்பட்டுள்ளன. திரு. ராஜன் திருமணம் குறித்து அல்ல. அங்கு நடந்த உண்மை நிகழ்வு குறித்து எனக்குத் தெரியாது)

hayyram said...

//பா.ம.க தலைவர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் - தாலியும் தமிழ் பாரம்பாரியமும் உண்டு. ஆனால், அய்யரும் யாகமும் புரோகிதமும் இல்லை.// தாலியும், கல்யானமும் கூட பார்ப்பனன் கொண்டுவந்தது தான் என்று தானே இப்போது ப்ரசாரம் நடந்து வருகிறது. அப்படி இருக்கும் போது அது மட்டும் எதற்காம்? தாலியும் கட்டாமல் கல்யானமும் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் கைகுலுக்கி வாழ்ந்து விடுங்களேன். கல்யானம் என்ற சடங்கே தேவையில்லையே. நாய், நரி, பண்ணி, எருமை, ஆடு, ஓனான் ஒட்டகம் என்று மற்ற ஜீவராசிகள் எல்லாம் எப்படி பார்ப்பனன் கொண்டு வந்த கல்யானம் என்ற சடங்கை ஏற்காமல் பகுத்தறிவோடு வாழ்கின்றன. பார்த்தவுடன் புணர்ந்து குட்டிகளை இட்டு சடங்குகளற்ற சமுதாயமாக வாழ்கின்றன. அவர்களுக்கு இருக்கும் பகுத்தறிவுகூட ப ம க கூட்டத்தினருக்கு ஏன் இல்லாமல் போனது. தாலி திருமணம் போன்ற பார்ப்பன சடங்குகளை தானும் செய்து கொண்டு, மற்றவர்களுக்கு செய்து வைக்கும் பார்ப்பன உத்யோகத்தையும் பார்த்துக்கொண்டு ஏன் இருக்க வேண்டும். உண்மையான பகுத்தறிவாளர்கள் என்றால் பிரானிகளைப் போல கல்யாணமே செய்து கொள்ளாமல் இருக்கவேண்டும். எந்த பகுத்தறிவாளனும் அப்படிச் செய்வதில்லையே ஏன்?

அருள் said...

hayyram said...

// //தாலியும், கல்யானமும் கூட பார்ப்பனன் கொண்டுவந்தது தான் என்று தானே இப்போது ப்ரசாரம் நடந்து வருகிறது. அப்படி இருக்கும் போது அது மட்டும் எதற்காம்? தாலியும் கட்டாமல் கல்யானமும் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் கைகுலுக்கி வாழ்ந்து விடுங்களேன். கல்யானம் என்ற சடங்கே தேவையில்லையே.// //

தாலியும் திருமணமும் பார்ப்பான் கொண்டுவந்தது என்றால், தமிழர்கள் திருமணம் செய்யாமலே வாழ்ந்த நாடோடிக்கூட்டமா? என்ன?

உண்மையில் ஆரியர்கள் நாடோடிக்கூட்டமாக வாழ்ந்த காலத்திலேயே தமிழர்கள் ஊரையும் நகரையும் அமைத்து நாகரீக வாழ்க்கை வாழ்ந்தனர். ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று கூறப்படுவது உண்டு. தமிழர் வாழ்வில் திருமணம் என்னும் நிகழ்வானது ஒரு தனி மனிதனுக்குச் சமூகத் தகுதியையும், சடங்கியல் வாழ்வில் பங்கேற்கும் தகுதியையும் அளிக்கும் அங்கீகாரமாக விளங்குகிறது. பார்ப்பானைப் பார்த்து தமிழர்கள் திருமணம் செய்யக்கற்றனர் என்று பேசுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

ஆரியக்கூட்டம் திருமண வாழ்வை தொடங்கும் முன்பே தமிழர்கள் திருமணம் செய்யும் பழக்கத்தைக் கைக்கொண்டனர். ஒருவனையும் ஒருத்தியையும் கணவன் மனைவி என ஆக்கும் இந்நிகழ்ச்சி ஒரு பண்பாட்டின் அடையாளம். மிகப்பழங்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டுதல் இல்லை. வீட்டிற்கு முன்பு இட்ட திருமணப் பந்தலில் மணமக்களை நீராட்டுதல், மக்களைப் பெற்று மூத்த மகளிர் நெல்லும் மலரும் தூவி வாழ்த்துதல், உழுந்தால் செய்யப்பட்ட களியை எல்லார்க்கும் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளே இருந்தன.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தீ வளர்த்தல், தீயை வலம் வருதல், பார்ப்பனம் மந்திரம் ஓதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல் போன்ற வழக்கங்கள் தமிழர் திருமணத்தில் புகுந்தன. ஆனால் அப்போதும் தாலி இல்லை.

"கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது... கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம்... சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல. பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும் கூட பேசப்படவே இல்லை." என்கிறார் அறிஞர் தொ. பரமசிவன். எனினும் 10 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தாலியும் தமிழர் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.

தந்தை பெரியார் தான் முதன் முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 1968 இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுய மரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

ஆனால் இப்போதெல்லாம், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் பலராலும் போற்றப்படுகிறது.

மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, 2009 ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, தாலி பார்ப்பன அடையாளம் அல்ல. அது பிற்கால தமிழர் பண்பாட்டு வடிவம்தான். தாலி இல்லாத திருமணமும் தமிழர் வாழ்வியல்தான். தமிழ் கிருத்துவர்களும் இசுலாமியர்களும் மஞ்சள் தாலி கட்டுகிறார்களா? என்ன?

"தீயை வலம் வருதல், பார்ப்பனம் மந்திரம் ஓதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல்" என்கிற பார்ப்பன அடையாளங்களை புறக்கணித்தாலே அது பகுத்தறிவு திருமணம்தான் - தாலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட.

Anonymous said...

//அடுத்தவர் விருப்பத்திற்கு வளைந்து கொடுப்பதும் நல்ல பண்புதான்.

நமது கொள்கையை நமக்கானவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களையும் நம்வழிக்கு மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் எவரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. திருமணம் போன்ற வாழ்வில் ஒருமுறை நடக்கும் நிகழ்வுகளில், வீட்டின் பெரியோர்களுக்கும், நமது மதிப்புக்குரியவர்களுக்கும் கட்டுப்படுவதே சிறந்தது - அது நமக்கு பிடிக்காத செயலாக இருப்பினும் கூட.//

நல்ல கருத்து. அப்புறம் என்ன மசித்துக்கு ஆ,வூன்னா பார்ப்பானை திட்டுற அருள்.

அவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுத்து பொத்திக்கிட்டு போவ வேண்டியது தானே?

திருந்துங்கடா டேய்

UFO said...

மதநம்பிக்கை சார்ந்த விஷயங்களை எள்ளி நகையாடவோ, பிரமதத்தவரின் கடவுள்களை அசிங்கமாய் ஏசவோ, அடுத்தவருக்கு நாத்திகம் போதிக்கவோ, கடவுள் மறுப்பை பற்றி எழுதவோ இனி அந்த 'அழுக்கு ராஜாவுக்கு' எந்த ஒரு சிறு தகுதியும் அருகதையும் இல்லை. இனி மற்றவர் முன்னிலையில் முழிக்க வெட்கி தலை குனிய வேண்டும் அந்த ஆல் இன் ஆல். போலி நாத்திகவாதி. ஊருக்கு உபதேசம். போடுறது எல்லாம் வெளிவேஷம்.

இங்கு திருமணம் என்பது இரு வீட்டார் விஷயம், தன் சுய விருப்பு வெறுப்புகளை ஒருவர் அதில் காட்டக்கூடாது எனும் திரு.அருள் போன்றவர்களுக்கு:

ஐயா... ஒரு கிறிஸ்டின் அல்லது ஒரு முஸ்லிம் ஒரு இந்துவை தாலி கட்டி கெட்டிமேளம் கொட்டி அக்னி சாட்சியாய் திருமணம் செய்துகொண்டாலும் இதைத்தான் சொல்வீர்களா? 'ஏன் அவருக்கு அவர் நம்பிக்கைக்கு ஒத்துபோற கிருத்துவ/முஸ்லிம் பெண்ணோ கிடைக்கவில்லையா' என்பீர்கள் அல்லவா? அதேபோல இந்த தமிழ்நாட்டில் ஒரு நாத்திகபெண் கூடவா ராஜனுக்கு கிடைக்கவில்லை?

திரு.டோண்டு:
தாங்கள் நேரில் சென்றிருந்தும் இந்த புரட்சி நாத்திக திருமணம் பற்றி... ஐயர், மந்திரம், தாலி, அக்னிவலம், அம்மி..அருந்ததி, மஞ்சள், குங்குமம் பற்றி எல்லாம் எழுதவில்லையே...?
இப்போது ராஜன் விநாயகரை கும்பிட்டு இந்துவாகிவிட்டார் என்று மவுனமா? அப்போ நீங்களும் போலியா?

UFO said...

@அருள்
//"தீயை வலம் வருதல், பார்ப்பனம் மந்திரம் ஓதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல்" என்கிற பார்ப்பன அடையாளங்களை புறக்கணித்தாலே அது பகுத்தறிவு திருமணம்தான் - தாலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட.//----தாலி:-மூடநம்பிக்கையா? பகுத்தறிவா?

hayyram said...

//தமிழர் வாழ்வில் திருமணம் என்னும் நிகழ்வானது ஒரு தனி மனிதனுக்குச் சமூகத் தகுதியையும், சடங்கியல் வாழ்வில் பங்கேற்கும் தகுதியையும் அளிக்கும் அங்கீகாரமாக விளங்குகிறது// அருள் , இந்த வரைக்குமாவது ஒத்துக்கொள்கிறீர்களே. அதுவரைக்கும் சந்தோஷம் தான். ஏனெனில் தமிழர் கலாச்சாரம் என்பது ஒரு பெண்ணை பிடித்து விட்டால் ராவோடு ராவாக தூக்கிகொண்டு போய் புணர்ந்து விடுதல் தான். கல்யாணம் என்ற சடங்கையே பார்ப்பனன் தான் கொண்டு வந்தான் என்று பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் பல பார்ப்பன எதிர்ப்பு மனநோயாளிகள். நீங்கள் குறைந்த கல்யாணம் நம் கலாச்சாரம் தான் என்பதையாவது ஒத்துக்கொண்டமைக்கு நன்றி! ஆனால் நிஜ பகுத்தறிவு ஏன் அத்தோடு நின்று போனது என்பதில் தான் வியப்பு. கல்யானம் மட்டும் எதற்கு? பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு தானே அது. அதுவும் தாலி என்பது பெண்ணடிமைத்தனம் என்று நீயா நானா வரை விவாதிக்கப்படும் போது அந்த பகுத்தறிவை உங்கள் வீடுகளில் புறந்தள்ளுவது ஏன். தாலி கட்டவில்லையென்றால் பெண் ஓடிவிடுவாளா என்ன? பகுத்தறிவுக்கு இவ்விஷயத்தில் ப்ரேக் ஏனோ? உங்களுக்கு எதுவெல்லாம் வசதியோ அதிலெல்லாம் பகுத்தறிவை ஆஃப் செய்து விடுவது. எதுவெல்லாம் பார்ப்பன எதிர்ப்பு பிரிவினை வாதம் பேசி ஒரு இனத்தை அழிக்க உதவுகிறதோ அதற்கெல்லாம் பகுத்தறிவை ஆன் செய்து விடுவீர்கள். அது தான் நடக்கிறது. //கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தீ வளர்த்தல், தீயை வலம் வருதல், பார்ப்பனம் மந்திரம் ஓதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல் போன்ற வழக்கங்கள் தமிழர் திருமணத்தில் புகுந்தன// இப்படி கி பி, கி மு என்று பேசுவதற்கெல்லாம் எந்த உறுதியான ஆதாரமும் கிடையாது. எல்லாம் ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்க்கும் அனுமானம் தான். ஒரு விஷயத்தை திரித்து சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். வடிவேலுவின் புலி கேசி மாதிரி... "ஐநூறு வருடம் கழித்து வரும் மடையர்களுக்கு இது தெரியவா போகிறது??" என்பார்.. அது போல மக்களை மடையர்களாக்க எது வேண்டுமானாலும் சொல்லலாம்! நம்புபவர்களின் இஷ்டம் தானே!

dondu(#11168674346665545885) said...

ஒரு தன்னிலை விளக்கம்:

ராஜன் சம்பந்தமான பகுத்தறிவு கேள்விகளை கமெண்ட் ஏதும் இல்லாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஏனெனில் நான் மண்டபத்திற்கு சென்றதுமே சம்பிரதாயத் திருமணம்தான் அது என்பதை உணர்ந்து கொண்டேன். வால்பையன் மற்றும் ராஜன் எனக்கு நண்பர்கள், ஆகவே நான் அவர்களை இது சம்பந்தமாக தோண்டித் துருவி கேள்விகள் எல்லாம் கேட்கவில்லை.

வால்பையனுக்கு ஃபோன் போட்டு கேட்டதற்கு அவர் அடுத்த நாள் திருமண முகூர்த்தம் சமயத்தில் ஐயரால், ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திர உச்சாடனங்களுடன், எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்ததை உறுதி செய்தார்.

ராஜனின் தாய் தந்தை இப்போது உயிருடன் இல்லை. மணமகள் அவரது பெற்றோருக்கு ஒரே பெண். இது காதல் திருமணம். பெண்ணின் தந்தையின் விருப்பத்துக்கு ராஜன் மதிப்பளித்தார் என்பதுதான் நிஜம்.

ராஜன் பெரியவர்களது விருப்பத்துக்கு பணிந்து போனது எனக்கு பிடித்தது. அவ்வளவே. அவர் வயதில் மிகவும் சிறியவர். மெதுவாக யதார்த்தங்கலை புரிந்து கொள்வார். அவருக்கும் அவர் மனைவிக்கும் என் ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

//ராஜனின் தாய் தந்தை இப்போது உயிருடன் இல்லை. மணமகள் அவரது பெற்றோருக்கு ஒரே பெண். இது காதல் திருமணம். பெண்ணின் தந்தையின் விருப்பத்துக்கு ராஜன் மதிப்பளித்தார் என்பதுதான் நிஜம்// கருனாநிதி தொடங்கி இன்றைய சகோதரர் ராஜன் வரை எல்லோருமே அவர் வீட்டில் இருப்பவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து வீட்டில் பகுத்தறிவை அனைத்து விடும் நாடகத்தை நடத்த தான் செய்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கல்யானத்தின் போது தாலி கட்டமாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லியிருக்கலாம், அல்லது நடத்தி வைக்கவந்த ஐயரை குடுமிக்காரா என்று அழைத்து விரட்டி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இவர்களது வலைதளங்களில் பார்ப்பனரை குடுமிக்காரன் என்றும் 'குடுமியை குனியவைத்தல்' என்ற மிக அசிங்கமான அர்த்தத்தில் வரிகளும் எழுதப்படுகின்றன. படிக்கும் பொழுதே மிக அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. சக மனிதர்கள் பார்ப்பனராகினும் நேரில் பார்க்கும் போது தோன்றும் சாதாரன மனிதாபிமானம் முகம் தெரியாமல் பேசும் போது மட்டும் ஏன் காணாமல் போகிறது. இது ரெட்டை வேடம் அல்லவா? முகமூடி அனிந்த மனிதர்கள் அல்லவா இவர்கள்? தன் குடும்பத்து மனிதர்கள் உணர்வுகளை மதிப்பவர்கள் ஏன் அதே போன்று மற்ற குடும்பத்தினர்களின் மத உணர்வுகளை மதிப்பதில்லை. சக மனிதர்கள் அனைவருமே அவரவர் குடும்பம், மதம் போன்றவற்றின் மீது இதே போன்ற பற்றுதலுடன் அல்லது பக்தியுடன் தானே இருக்கிறார்கள். அவர்களை அவமதிப்பது மட்டும் ஏனோ? தனக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தை தன் வரை மட்டுமே வைத்துக் கொண்டால் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் மிக மோசமான அளவில் ஆபாசமாக மத அடையாளங்களை சம்பிரதாயங்களை பார்ப்பனர்களை என்றெல்லாம் ஏசிப்பேசிவிட்டு இப்போது அதையே தன் மீது பூசிக்கொண்டிருப்பவரைப் பார்க்க கேலியாக அல்லவா இருக்கிறது. இவர்கள் எந்த அளவிற்கு அப்பாசமாக பேசினார்களோ அதே அளவிற்கு அவருக்கு கல்யாண மேடையிலேயே எதிர்வினை கிடைத்திருந்தால் தவறு புரிந்திருக்கும். ஆனால் அப்படிப்பட்ட எதிர்வினையை யாரும் நடத்தாமல் இருந்ததற்கு காரணம், அவரது மற்றும் அவர் குடும்பத்தினரது உணர்வுகளை மற்றவர்கள் மதித்தார்கள் என்பதால் தான். இதை புரிந்து கொண்டால் இந்த மாப்பிள்ளையும் அதே போல மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிறரது மதங்களையோ சம்பிரதாயங்களையோ ஆபாசமாக பேசாமல் இருப்பார் என்று நம்பலாம். அப்படி நடந்து கொள்ளவில்லையெனில் இவர்கள் மனிதர்களே இல்லை.

அபி அப்பா said...

\\ஜாக்கி சேகர் said...

டோண்டு சார் கல்யாணத்துக்கு நானும் வந்தேன்...
\\

அடடா! அவரு கல்யாணம் சமீபத்துல 1965ல் தானே நடந்துச்சு ஜாக்கி! அப்பவே போனீங்களா அவரு கல்யாணத்துக்கு. நான் 1966ல் பிறந்ததால் என்னால் போக முடியலை:-)))

அபி அப்பா said...

மணமகன் நண்பன் ராஜனுக்கும், மணமகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்! என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்!!!

வஜ்ரா said...

அருள்,

பிரிட்டிஷ் காலத்துக்கு எல்லாம் எதுக்குப் போகணும்.

தான் பின்பற்றாத ஒன்றை பிறருக்கு உபதேசிப்பவன் பெயர் Hypocrite. அதற்கு தமிழில் "திராவிடன்" என்று அர்த்தம் என்பது (பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும்) பதிவர் ராஜன் விசயத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. அவ்வளவு தான்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா அருள் ?

வஜ்ரா said...

//
தமிழ் கிருத்துவர்களும் இசுலாமியர்களும் மஞ்சள் தாலி கட்டுகிறார்களா? என்ன?
//

ஆம். கட்டுகிறார்கள். தங்கத்தால் செய்த ஒரு கொடியை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டுவார். எனது நண்பர் நாடார் கிருத்தவர். அவர் சர்ச்சில் தாலியைக் கட்டினார் அல்லது தாலி என்று சொல்லப்படாத தங்கக் கொடியை கட்டினார்.

அருள் said...

Anonymous said...

// //அப்புறம் என்ன மசித்துக்கு ஆ,வூன்னா பார்ப்பானை திட்டுற அருள். அவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுத்து பொத்திக்கிட்டு போவ வேண்டியது தானே? திருந்துங்கடா டேய்// //

திருந்தவேண்டியது நீங்கள்தான்.

எந்த ஒரு கருத்தையும் பார்ப்பனர்கள் அவர்களுக்கான கருத்தாக, அவர்களுக்குள் வைத்துக்கொள்ளும்வரை அதுகுறித்து மற்றவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

ஆனால், தங்களைத்தவிர மற்ற சாதியினரை சூத்திரர் - கீழானவர் என்று தரம்தாழ்த்தி, மனிதஉரிமைகளைப் பறித்து, கல்லாதவர்களாக மாற்றி, முன்னேறவிடாமல் செய்து - காலம்காலமாக அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி பிழைத்ததாலும், இன்றும் சூத்திரர்களை அடிமைப்படுத்துவதைத் தொடர்வதாலும்தான் பார்ப்பனர்களை எதிர்க்க நேரிடுகிறது.

"""எனது கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட, 'மேல்சாதி'யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது - அவன் நல்வாழ்வு வாழக்கூடாது - அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ...'கோடீஸ்வர'னாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே - எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உட்பட எவரும் சிறிதுகூட நமக்கு மேல்சாதியினன் என்பதாக இருக்கக்கூடாது என்பதுதான் என் நோக்கம்.

பணக்காரத்தன்மை என்பது ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல; அந்த முறை தொல்லையானது - சாந்தியற்றது என்று சொல்லலாம்; என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல்லைக் கொடுக்கக்கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடியதும், எப்போழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.

ஆனால், இந்த மேல்சாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகாக் குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத்தன்மையையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும்; ஒரு பெரிய மோசடியும் 'கிரிமினலு'மாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல்சாதிதன்மையை ஒழித்தாகவேண்டும் என்பது எனது பதிலாகும்."""

--தந்தை பெரியார் - குடியரசு 9.11.1946

Anonymous said...

மிகவும் அநாகரீகமாக பிராமணர்களையும் கடவுள்களையும் விமரிசிப்பவர்கள் வால்பையன் மற்றும் ராஜன்.

அந்த திருமணத்திற்கு சென்றதே டோண்டு எவ்வளவு சுயமரியாதை உள்ளவர் எனக்காண்பிக்கிறது.
மற்றொரு பிராமண துவேஷியான ருத்ரனுடன் குலாவல் வேறு!

மொத்தத்தில் தமிழ்நாட்டில் எவரும் கொள்கை பிடிப்பு உடையவர்கள் இல்லை.கோவிலுக்கு செல்லும் தி.மு.க உறுப்பினர்களை கட்சியை விட்டே நீக்கிவிடுவேன் என மு.க சொல்வாரா?ஒருவன் மிஞ்சமாட்டன் கட்சியில்.

உண்மையான நாத்திகன் கடவுளை அவதூறாக பேசமாட்டான்.அவரை வணங்கவும் மாட்டான்.

அதைப்போல பல நேர்மையான நாத்திகர்களும் உண்டு.பல வேஷதாரி ஆத்திகர்களும் உண்டு

நன்றி

அருள் said...

UFO said...

// //@அருள்
//"தீயை வலம் வருதல், பார்ப்பனம் மந்திரம் ஓதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல்" என்கிற பார்ப்பன அடையாளங்களை புறக்கணித்தாலே அது பகுத்தறிவு திருமணம்தான் - தாலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட.//
----தாலி:-மூடநம்பிக்கையா? பகுத்தறிவா?// //

தமிழர்களில் ஆண்கள் வேட்டிகட்டுவதையும் பெண்கள் சேலை அணிவதையும் பண்பாட்டு சின்னமாக பின்பற்றுகின்றனர். இதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா? என்று கேட்கமுடியுமா? அதுபோலத்தான் தாலியும். அதுஒரு பண்பாட்டு சின்னம்.

பெண்ணுரிமை நோக்கில் பார்த்தால் பெண்களுக்கு மட்டும் தாலி என்பது ஒருவிதமான அடிமைச் சின்னம் என்றும் கொள்ளலாம். ஒருகாலத்தில் திருமணமன ஆண்கள் மெட்டி அணிந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது இல்லை.

கிருத்துவ மதத்தில் ஆண், பெண் இருவரும் சரிசமமாக மோதிரம் அணிகிறார்கள்.

தாலி தேவையா? மோதிரம் தேவையா? முதலில் திருமணம் ஆனதற்கு ஒரு அடையாளம் தேவையா? என்பதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இதில் பகுத்தறிய என்ன இருக்கிறது? மூடநம்பிக்கைக்கு என்ன வேலை?

கணவன் ஒருவர், மனைவி ஒருவர் என்பதுதான் பொதுவாக ஏற்கப்பட்ட விதி - சில விதிவிலக்குகளும் உண்டு. அவ்வளவுதான்.

Anonymous said...

//Dondu - பெண்ணின் தந்தையின் விருப்பத்துக்கு ராஜன் மதிப்பளித்தார் என்பதுதான் நிஜம். //

When you do it, is a necessity; when I do it is a stupidity.

Good attitude.

How can't he consider others in the same situation? He will continue this for his children too, under the shelter of elders opinion. But he will make fun of others.

Hippocrates.

Sridhar.

Anonymous said...

//Anany - அந்த திருமணத்திற்கு சென்றதே டோண்டு எவ்வளவு சுயமரியாதை உள்ளவர் எனக்காண்பிக்கிறது.
மற்றொரு பிராமண துவேஷியான ருத்ரனுடன் குலாவல் வேறு!//

This shows Mr.Dondu's maturity, not self respect. One may not like other,s views. But there is no point having hard feeling on others. It will only affect your own well being.

Sridhar

hayyram said...

//ஆனால், தங்களைத்தவிர மற்ற சாதியினரை சூத்திரர் - கீழானவர் என்று தரம்தாழ்த்தி, மனிதஉரிமைகளைப் பறித்து, கல்லாதவர்களாக மாற்றி, முன்னேறவிடாமல் செய்து// என்ன அருளு, நீங்க கிராமத்தில செய்யறதை எல்லாம் பாப்பான் செய்றத மாத்தி சொல்றீங்க?

hayyram said...

//எனது கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட, 'மேல்சாதி'யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, // நீங்க மட்டும் மேல் ஜாதியா இருக்கனும்ங்கறீங்களா? இந்த காலத்தில பணம் இருப்பவன் மேல் ஜாதி, பணம் இல்லாதவன் கீழ் ஜாதி. தமிழகத்தில இப்போ கருனாநிதி, ராமதாஸ் போன்றவங்கதான் மேல் ஜாதி.

hayyram said...

//தமிழர்களில் ஆண்கள் வேட்டிகட்டுவதையும் பெண்கள் சேலை அணிவதையும் பண்பாட்டு சின்னமாக பின்பற்றுகின்றனர். // அப்போ குழாய் மாட்டினவனும் சுடிதார் போட்டவங்களும் பண்பாடு இல்லாதவங்களா? இதென்ன மூட நம்பிக்கை? //முதலில் திருமணம் ஆனதற்கு ஒரு அடையாளம் தேவையா? என்பதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது// ஏன் அதையும் தான் மாற்றுங்களேன். இந்தியாவை ஆளும் சோனியாவின் இத்தாலி அரசு அதை மாற்ற தானே கீப்புகளுக்கும் ஜீவனாம்ச சட்டமெல்லாம் கொண்டு வந்திருகாங்க. அதையும் உங்க வீட்டுல வரவேற்பு குடுத்து ஏத்துக்கொங்க. அப்படி இல்லைன்னா கல்யாணத்துக்கு மந்திரம் ஓதுவதைக்கூட அவரவர் விருப்பத்தை பொறுத்துன்னு சொல்லி விட்டுட்டு போங்களேன். பாப்பானை திட்ட சான்ஸ் கிடைக்கும் இடமெல்லாம் பகுத்தறிவு பேசனும், பகுததறிவு திரும்பி உங்களையே தாக்கினால் அதெல்லாம் அவரவர் இஷ்டம் என்று ஜகா வாங்க வேண்டுயது. சைக்கோத்தனத்திலிருந்து வெளியே வந்து பிறருடைய உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த காலத்தில் எப்படி வாழ்கிறோம் இனி எப்படி வாழ வேண்டும் என்கிற யோசையோடு விவாதிக்காமல் பழைய ஊசிப்போன வரலாறையே பேசி சட்டையை கிழித்துக் கொள்ளாதீர்கள்.

hayyram said...

//கணவன் ஒருவர், மனைவி ஒருவர் என்பதுதான் பொதுவாக ஏற்கப்பட்ட விதி - // இது என்ன மூட நம்பிக்கை. இது பார்ப்பனன் விதித்த விதி அல்லவா. ராமர் பெயரைச் சொல்லி அதை நம்மிடம் தினித்து விட்டார்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு திரிகிறதே! நீங்கள் மட்டும் அந்த கூட்டத்திலிருந்து பிறழ்ந்து பேசுகிறீர்களே. ஒருவனுக்கு ஒருத்தி என்பது பொது விதியானால் ஏன் சார் நாள் தோறும் கள்ளத்தொடர்பு சாவு வருது. பகுத்தறிவு வாதி கருனாநிதி ஏன் சார் அதை மீறினாறு. அதை தட்டிக் கேட்க வீரமிக்க , பண்பாடு நிறைந்த தமிழர்கள் ஏன் சார் இல்லாம போனாங்க. ஒருவனுக்கு ஒருத்திங்கறதெல்லாம் வெள்ளைக்காரன் நம் சுந்தந்திர வாழ்க்கை மீது தினித்த கட்டுப்பாடு. ஒரு ஆனுக்கு இரு பெண்ணோ, ஒரு பெண்ணுக்கு இரு ஆணோ, எல்லாம் அவரவர் விருப்பம் போல முறையான திருமண பந்தத்துடன் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்தவர்கள் தான் நம்மவர்கள். அதை தடுத்து அசிங்கப்படுத்தியதால் இப்போது கள்ளத்தொடர்பு தலைவிரித்தாடுகிறது. எப்போ வெள்ளைக்காரன் கொண்டு வந்த இ பி கோ வை நீராகரிக்கப் போறீங்களோ அப்போதான் இந்தியர்கள் உண்மையான சுதந்திரமான வாழ்க்கை வாழப்போகிறான் என்பது நிஜம்.

அருள் said...

hayyram said...

// //
//கணவன் ஒருவர், மனைவி ஒருவர் என்பதுதான் பொதுவாக ஏற்கப்பட்ட விதி - // இது என்ன மூட நம்பிக்கை. இது பார்ப்பனன் விதித்த விதி அல்லவா. ராமர் பெயரைச் சொல்லி அதை நம்மிடம் தினித்து விட்டார்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு திரிகிறதே! // //

அப்படியா? இராமர் பெயரை சொல்லி திணிக்கும் முன்பு தமிழர்கள் பல மனவியுரடனா வாழ்ந்தனர்?

ஒருவேளை இராமனின் தந்தை தசரதனின் பலமனைவி தத்துவமாக அது இருக்குமோ! அல்லது 'குந்திதேவிக்கு 1 கணவன் 5 கள்ளக் கணவர்கள் - அவளது மருமகள் பாஞ்சாலிக்கு 5 ஒரிஜினர் புருஷன்கள்' என்கிற மஹாபாரதக் கதை- பார்ப்பனத் திணிப்பாக அது இருக்குமோ!

கோவிலுக்கு தேவரடியார்களை நேர்ந்துவிட்டு பார்ப்பன பூசாரிகள் கூட்டாக அனுபவித்த வரலாறெல்லாம் மறந்து போனதோ!

Anonymous said...

//This shows Mr.Dondu's maturity, not self respect. One may not like other,s views. But there is no point having hard feeling on others. It will only affect your own well being.

Sridhar//

No Mr.Sridhar,it is not maturity but typical lack of self respect nature which is widespread among most of the brahmins.When a film was titled "Karai kadantha Kuraththi" the Kurava communities revolted and the name was changed to "Karai kadantha oruththi"Whereas if Brahmins are abused and ridiculed by many so freely,it is because of persons like Dondu.But there are many like him.Well he could avoid such characters telling them they do not deserve to be his friends as they abuse his community and ridicule his belief.He cleverly befriends them saying that he would correct them.But it is IMPOSSIBLE.Do you think that specimen like ARUL can be corrected? No Sir.They pretend to sleep and even if you drop a bomb they would not wake up!They have to be shunned and ignored by the normal people.

In this aspect,I respect Mr.Ilaya Raja for his valor.Sometime back he was requested to be the music director for the movie on Periyar but he politely but firmly refused the offer.He said both Periyar and himself are poles apart in principles and so it would not be right and his conscience won't permit him to take up the job.See, he is THE MAN

The Brahmin hatred is there only in Tamil nadu and Maharashtra states.The DMK is spreading venom among mass and looting them.The evil like DMK should have been banned right at the inception but the then Govt failed in this.It has grown into a big tree and now it is impossible.

Sorry Dondu I do not intend to offend you but just trying to be explicit.Thanks

பெசொவி said...

எந்த ஒரு உண்மையான ஆத்திகனும் பிறர்மேல் அவதூறு சொல்ல மாட்டான். இங்கு ஒரு திருமண விழாவைப் பற்றி பதிவு இருக்கிறது. மணமக்களை வாழ்த்த விரும்புபவர்கள் வாழ்த்துங்கள்! மாற்றுக் கருது உள்ளவர்கள் ராஜனுக்கோ, வால்பையன் அருணுக்கோ போன் போட்டு உங்க கருத்தை சொல்ல்லுங்க. தயவு செஞ்சு இங்க கும்மி அடிக்காதீங்க.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ, இறைவனை இறைஞ்சுகிறேன்.

hayyram said...

//என்கிற மஹாபாரதக் கதை- பார்ப்பனத் திணிப்பாக அது இருக்குமோ!// ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டு வாழும் எந்த கலாச்சார வாழ்க்கையுமே பார்ப்பன தினிப்பு தானென்று தானே பிரசாரம் நடக்கிறது. அதைத்தான் இங்கே குறிப்பிட்டேன். கருனாநிதியின் பல மனைவி வாழ்க்கை பற்றி உங்கள் கருத்தென்னவோ?

Suresh Ram said...

//அந்த திருமணத்திற்கு சென்றதே டோண்டு எவ்வளவு சுயமரியாதை உள்ளவர் எனக்காண்பிக்கிறது.
மற்றொரு பிராமண துவேஷியான ருத்ரனுடன் குலாவல் வேறு!//

மாற்று கருத்து உள்ள ஒருவருடன் பேச கூடாது என்பது தவறான கருத்து ! சிறுபிள்ளை தனமானது.அது தற்கால திராவிட மதத்தின் பண்பு!

அருள் said...

hayyram said...

// //கருனாநிதியின் பல மனைவி வாழ்க்கை பற்றி உங்கள் கருத்தென்னவோ// //

ஏற்கனவே சொன்ன பதில்தான். "கணவன் ஒருவர், மனைவி ஒருவர் என்பதுதான் பொதுவாக ஏற்கப்பட்ட விதி - சில விதிவிலக்குகளும் உண்டு."

ஒருசிலரின் வாழ்க்கை விதிவிலக்கில் வரும். விதிவிலக்குகள் ஒருபோதும் விதிகளாக மாட்டா.

அருள் said...

வஜ்ரா said...

// //உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா அருள் ?// //

திருமணம் ஆகிவிட்டது. தாலிகட்டிதான் திருமணம் நடந்தது.

அய்யர், தீ வளர்த்தல், புரோகிதம், அம்மி மிதித்தல் எதுவும் இல்லை

Unknown said...

// //கருனாநிதியின் பல மனைவி வாழ்க்கை பற்றி உங்கள் கருத்தென்னவோ// //
ARUL' QUOTE:
//ஏற்கனவே சொன்ன பதில்தான். "கணவன் ஒருவர், மனைவி ஒருவர் என்பதுதான் பொதுவாக ஏற்கப்பட்ட விதி - சில விதிவிலக்குகளும் உண்டு."

ஒருசிலரின் வாழ்க்கை விதிவிலக்கில் வரும். விதிவிலக்குகள் ஒருபோதும் விதிகளாக மாட்டா.//

நீர் குறிப்பிட்டது விதி விலக்கல்ல! தல விதி! கலை விதி!

K.MURALI said...

follow up

Atheist said...

நாத்திக சமூகத்தில் ஒரு புரட்சி திருமணம்...

http://athikkadayan.blogspot.com/2010/10/blog-post_26.html

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 1"

சுயமரியாதைத் திருமணம் என்பதற்கு அவரவர் விருப்பம்போல் விளக்கம் கொடுத்து - விநாயகர் படம் இருப்பதாலேயே அது சுயமரியாதைத் திருமணம் அல்ல என்பது போல பேசுகின்றனர். ஆனால், சுயமரியாதைத் திருமணத்திற்கு அதை விட விரிவான பொருள் உண்டு.

சுயமரியாதைத் திருமணம் என்கிற பதத்தை தமிழ்நாட்டில் நிலைநாட்டிய பெரியாரின் கருத்தைப் பார்ப்போம்.

தந்தை பெரியாரின் விளக்கம் 1: ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

""திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச்செய்யச் செய்துகொள்ளும் காரியமேயாகும். இதைச் சிலர் - அதாவது பழைய முறைக்காரர் சடங்கு என்கிறார்கள்; புதிய முறைக்காரர் ஒப்பந்தம் என்கிறார்கள்.

சடங்கு என்று சொல்லுகின்றவர்கள் உண்மையிலேயே சடங்காகவே கருதிக் காரியங்களில் இலட்சியமில்லாமல் நடத்துகிறார்கள். அதாவது, கலியாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எவ்வித உரிமையும் இல்லை....மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான்; பெண் மாப்பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டாள்....

ஆனால், சுயமரியாதைத் திருமணம் என்பது அப்படி அல்ல மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து, தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அர்த்தமும் பொருத்தமும் அவசியம் இல்லாமல் வெறும் சடங்கு, பழக்க வழக்கம் என்பதற்காக மாத்திரம் ஒன்றையும் செய்யக்கூடாது என்பதுமேயாகும்.""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

எனவே, "ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்" என்கிற பெரியாரின் அளவுகோள் படி இங்கே விவாதிக்கப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணமே ஆகும்.

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 2"

தந்தை பெரியாரின் விளக்கம் 2: வீண் செலவுகள் கூடாது:

""திருமணம் சம்பந்தமாகச் செலவு, மெனக்கேடு, வீண் கஷ்ட நஷ்டம் ஆகியவைப்பற்றி பழைய முறைக் கலியாணங்களில் இலட்சியமே செய்யப்படுவதில்லை. ஆடம்பரத்துக்காகவே வீண் செலவுகளைத் தகுதிக்கதிகமாகக் கடன்வாங்கியாவது செய்யப்பட்டு வருகிறது.

திருமணத்திற்காக மூன்று நாள், நான்கு நாள், ஏழு நாள் கூட மெனக்கெட்டு வெளியூர் உறவினர்களையும் தருவித்து - மெனக்கெடச் செய்து, அய்ந்துநாள் விருந்து, பத்து நாள் விருந்து என்று சாப்பாட்டுச் செலவும்; பந்தல், மேளம், சங்கீதம், ஊர்வலம், வாணம் என்பதாக வீண்காரியங்களும் - குடிகாரர்கள் குடித்த போதையில் நடப்பதுபோல் - கலியாண போதையில் சிக்கி பணம், நேரம், கழ்டம் ஆகியவை தாறுமாறாகச் செலவாக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு மூன்று நாள்களுக்காக - சிலர் பார்த்துப் புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாறுமாறான ஆடம்பரச் செலவுகள் கலியாணத் தம்பதிகள் தலையிலோ அல்லது குடும்பத்தார் தலையிலோ விழுந்து, கலியாணக் கடன்களால் வெகுநாளைக்கு அவதிப்பட வேண்டியிருப்பதால் - சில குடும்பங்கள் கலியாணச் செலவாலேயே 'பாப்பர்' ஆகி, மீளாக் கடன்காரர்களாகக் கூட ஆகவேண்டியதாகி விடுகின்றன.

இப்படிப்பட்ட கொடுமைகளும் முட்டாள்தனமான காரியங்களும் கூடாது என்பதுதான் சுயமரியாதைக் கலியாணம் என்பதன் முக்கிய அம்சமாகும்""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

எனவே, "திருமணத்தில் விநாயகர் இருக்கிறாரா? இல்லையா?" என்பதைவிட திருமணத்திற்காக அளவுக்கதிகமாக செலவு செய்யப்படாமல் - "சிக்கனமாக நடத்தப்படுகிறாதா?" என்பதுதான் சுயமரியாதைத் திருமணம் என்பதற்கு தந்தை பெரியாரின் மிகமுக்கிய அளவுகோள் ஆகும்.

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 3"

தந்தை பெரியாரின் விளக்கம் 3: திருமணம் தெய்வீகமானது அல்ல.

""கலியாண விஷயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்பந்தம் முக்கியமானது - இலட்சியமானது அல்லவென்றும், அதில் ஏதோ ஒரு தெய்வீகச் சம்பந்தம் இருக்கிறதென்றும்; அதுவேதான் திருமணத்தின் இலட்சியமென்றும், ஆதலால் அப்பெண்ணும் மாப்பிள்ளையும் அத் தெய்வீகச் சம்பந்தத்திற்காக ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமைகளையும் அநீதியையும் பெண் பொறுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் மாப்பிள்ளைக்குப் பெண் அடிமையாய், பக்தியாய் இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், சுயமரியாதைக் கலியாணம் என்பது அப்படியில்லை. திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பத்தம் என்றும், அந்த ஒப்பந்தவிஷயம் பெண்ணையும் ஆணையும் பொறுத்ததே ஒழிய வேறு எவ்விதத் தெய்வீகத்திற்கோ அல்லது எவ்விதக் கட்டுப்பாட்டிற்கோ சம்பந்தப்பட்டதில்லை என்பதுமே ஆகும்""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

எனவே, "திருமணம் தெய்வீகமானது அல்ல" என்கிற பெரியாரின் அளவுகோள் படி இங்கே விவாதிக்கப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணமே ஆகும்.

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 4"

தந்தை பெரியாரின் விளக்கம் 4: வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.

""பழையமுறைக் கலியாணப்படி பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை; வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை.

சுயமரியாதைக் கலியாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கிறது என்பதுடன், இவைகளே கலியாண ஒப்பந்தத்தின் சரத்துக்களாகும்""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

கிருஷ்ண மூர்த்தி S said...

இடம் பொருள் ஏவல் என்று எதையும் பார்க்காமல் கட் அண்ட் பேஸ்ட் செய்கிற வேலையை இங்கேயும் விடமாட்டேன் என்கிறீர்களே அருள்!

ஒரு பதிவருடைய திருமணம் நடந்தது,அதற்குப் போய்விட்டு வந்து ஒரு பதிவை எழுதினால், திருமணமான தம்பதியருக்கு வாழ்த்து சொல்வது தானே முறை! அதை விட்டு விட்டு, இங்கே வந்து மணமகனைக் கடித்துக் குதறுகிற வேலை எதற்கு? நாகரீகம் கருதி, சிலகாலம் பொறுத்து அவரிடமோ, அல்லது அவரை ஆதரிப்பவர்களிடமோ போய் உங்களுடைய வாதங்களை வைத்துக் கொள்ள வேண்டியது தானே! பிடிக்கவில்லை என்றால், அவரைக் கரித்துக் கொட்ட இந்த நேரம் தான் கிடைத்ததா?

டோண்டு சார்! இந்தப் பதிவில், இப்படிக் கமெண்டுகளை நீங்களாவது மாடரேட் செய்திருக்கலாமே!

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 4"

தந்தை பெரியாரின் விளக்கம் 4: வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.

""பழையமுறைக் கலியாணப்படி பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை; வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை.

சுயமரியாதைக் கலியாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கிறது என்பதுடன், இவைகளே கலியாண ஒப்பந்தத்தின் சரத்துக்களாகும்""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

Anonymous said...

நீங்கள் சொல்லியதெல்லாம் சரி.
இவ்வளவு பேசும் நீங்கள் உங்கள் திருமணத்தில் இவை அனைத்தையும் கடைபிடித்தீர்களா ?

விருந்தாளிகளுக்கு விருந்து உபசரிப்பது, பந்தல், மேளதாளம், ரிசெப்ஷன், பட்டு வேஷ்டி, போன்ற ஆடம்பரங்கள் செய்தீர்களா இல்லையா ?

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 5"

தந்தை பெரியாரின் விளக்கம் 5: திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கே சுதந்திரம்:

""கலியாணம் செய்துகொள்ளும் விஷயத்தில் தம்பதிகளைவிட மூன்றாவதானவர்களுக்கே சகல சுதந்திரமும் இருந்து வருகிறாது. செய்து வைப்பதற்கு ஒரு புரோகிதன் வேண்டும். இன்னின்ன மாதிரி செய் என்பதற்குப் பெற்றொர்கள், உறவினர்கள் வேண்டும். இவர்கள் சொன்னபடியெல்லாம் தம்பதிகள் நடக்க வேண்டும்.

சுயமரியாதைக் கலியாணம் என்பதில் இந்த முறையில்லை. மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஒருவருக்கொருவர் சொல்லி சம்மதித்ததற்கு அறிகுறியாக மாலையிட்டுக்கொள்வது என்பதுடன் முடிவு பெற்றுவிடுகிறது.""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

சுயமரியாதைத் திருமணம் குறித்து தந்தை பெரியார் பலநேரங்களில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் முக்கியமான 5 கருத்துகளை நான் எனது பின்னூட்டங்களில் குறிப்பிட்டுள்ளேன். அவை:

1. ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

2. வீண் செலவுகள் கூடாது.

3. திருமணம் தெய்வீகமானது அல்ல.

4. வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.

5. திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கே சுதந்திரம்.

இங்கே விவாதிக்கப்படும் திருமணம் பெரியாரின் அளவுகோள்களில், முதல் 4 அளவுகோள்களையும் நிறைவு செய்வதாகவே நான் நினைக்கிறேன். 5 ஆவது விஷயத்தில் மட்டும் பெண்வீட்டாருக்காக விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு குற்றம் அல்ல. "மனிதம்" என்றே கருதப்பட வேண்டும்.

(பல சுயமரியாதைத் திருமணங்களில் 'அய்யரில்லாமல் திருமணம்' என்கிற ஒருவிஷயத்தை மட்டும் நிறைவேற்றி - மற்றவற்றை வசதியாக விட்டுவிடுகிறார்கள்.)

எப்படிப் பார்த்தாலும் 100 க்கு 80 மதிப்பெண் பாஸ் தானே.

""தோழர்களே! நான் யாரையும் இம்மாதிரிதான் திருமணம் செய்யவேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. சமாதானமாகத்தான் என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருகிறேன். உங்களுக்குள்ள அறிவைக்கொண்டு ஆலோசித்துப் பாருங்கள்.""

தந்தை பெரியார், விடுதலை 24.10.1948

Anonymous said...

குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல... நு சொல்லற கும்பல் ராஜன், கும்மி அண்ட் வால்..... சிப்பு சிப்பா வரது.... சாப்பாடு நன்னா இருந்துதுன்னு சொல்லிருக்கேள்.... ஆமாம் பிராமண சாப்பாடோல்யோ

Anonymous said...

http://www.behindindia.com/india-news-stories/apr-09/anbumani-ramdoss-22-04-09.html

dondu(#11168674346665545885) said...

@அனானி
அன்புமணி ராமதாஸ் பற்றிய சுட்டி வேலை செய்யவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எதார்த்தவாதி said...

அருள்...வால்பையன்...நீங்க இருவரும் ஒரு கேள்விக்கு கூட நேரடியா பதில் சொல்லவில்லையே....

எப்பபாரு 1938,1948...ன்னு ஒரு பழைய பேப்பர் செய்தி போடுறீங்களே....நல்லாவே சமாளிக்கிறீங்க...

மாமனாரின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்த ராஜன்....இதுநாள் வரை கோடானு கோடானுகோடி மக்களின் நம்பிக்கையை கேவலப்படுத்திக்கொண்டிருந்தாரே...இத்தனை கோடி மக்களை விட அவரின் மாமனார் என்ன பெரிய ஆளா... தன் குடும்பத்திலேயே தன் கொள்கையை நிலைநாட்ட முடியாத ராஜன்....அடுத்தவர்களின் நம்பிக்கையையும், கொள்கைகளையும் எள்ளி நகையாடுவதும், கேவலப்படுத்துவும் எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்....

இனிமேல் ராஜனுக்கு கடவுள் பக்தி கொண்டவர்களை பழிக்க அருகதி இல்லை....அவர் அதை தொடர்ந்தால்...அதைவிட கேவலமாக வசைபாட எங்களாலும் முடியும்...

சரி சரி...குப்புற விழுந்தாச்சு...அதுவும் சானியிலையே விழுந்தாச்சு...சீக்கிரம் முகத்தை கழுவிக்கங்க...ரொம்ப நாறுது.....

Anonymous said...

Pls copy and Link and paste in your browser address bar...it's working there.

அன்புமணி ராமதாசின் திருமண படத்தை பார்த்தால்...அது சுயமரியாதை திருமணம் போல தெரியவில்லையே....

ஊருக்கு மட்டுமே உபதேசம் என்பதற்க்கு மற்றுமொரு சாட்சி.....

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது