அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் வார்த்தைகளின் தமிழாக்கம்தான் இத்தலைப்பு.
முந்தாநேற்று திடீரென என் வீட்டம்மா கேட்டார், “ஏன்னா பத்ரி சேஷாத்ரிக்கு என்ன வயது”? என்று. சமீபத்தில் 2005 புத்தகக் கண்காட்சியில் அவரை முதல்முதலாகச் சந்தித்தபோது அவர் தான் பிறந்த வருடம் 1972 எனச் சொன்னதாக நினைவு. அதையே என் வீட்டம்மாவிடம் கூற, அவரோ “அப்போ அவர் இவர் இல்லை” என பூடகமாகக் கூறி அப்பால் சென்றார். என்ன விஷயம், ஏதாவது ஒபிச்சுவரியில் இப்பெயரைப் பார்த்தாயா எனக் கேட்டதற்கு அவர் ஆமாம் என்றார். பிறகு நானும் அச்செய்தியை பார்த்தேன், வயது 64 எனப்போட்டிருந்தது. மனம் அமைதியாயிற்று.
பிறகு கூகள் பஸ்ஸில் பாரா அவர்கள் இந்த நிகழ்வைக் குறிப்பிட்டிருந்தார். அது பற்றிப் பதிவும் போட்டார். பலர் இந்த வயதைக் கவனிக்காமல் மெனக்கெட்டு பத்ரிக்கே போன் போட்டு அவர் இருக்கிறாரா இல்லையா என விசாரித்த கூத்தை அதில் பார்த்தேன்.
பத்ரிக்கும் ஃபோன் போட்டு பேசினேன். வயது 64 என்பதைக்கூட பார்க்காது அவரிடம் பலர் இது பற்றி போன் செய்ததை என்னவென்று கூறுவது? மனிதர் சிரிக்கிறார்.
கடவுள் நம்ம பத்ரிக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும்.
இம்மாதிரி குழப்பங்கள் பலருக்கு பல முறை ஏற்பட்டுள்ளது. அவர்களின் விவரங்கள் இங்கும் தொகுக்கப்பட்டுள்ளன.
பல சமயங்களில் இது இறந்ததாகக் கூறப்பட்டு பிறகு உயிருடன் திரும்புபவருக்கு பெரிய தொல்லையாகப் போகிறது. இதற்கு ஒரு உதாரணம் இதோ: என்ன செய்வது சிகப்பு நாடாவின் தொல்லை அப்படி.
அதே சமயம் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன. ஆல்ஃப்ரட் நோபல் என்னும் தொழிலதிபர் டைனமைட்டைக் கண்டுபிடித்து வியாபாரம் செய்தவர். அவரது இந்த மாதிரியான அவசர ஒபிச்சுவரியில் அவரை “மரணத்தின் வணிகர்” என குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து துணுக்குற்றார். பிராயச்சித்தமாகத்தான் நோபல் பரிசுகளை நிறுவினார்.
பெரிய பத்திரிகைகளில் பல பெரிய மனிதர்களின் ஒபிச்சுவரிகளின் வரைவு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே தயார் செய்யப்பட்டு, அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் என என் தந்தை அமரர் நரசிம்மன் கூறியுள்ளார். அண்ணா, ஜேபி ஆகியோரது மரணங்கள் தவறுதலாக இம்மாதிரித்தான் முன்னமேயே அறிவிக்கப்பட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
1 hour ago
4 comments:
நன்றி!
தவறுகளால் ஏற்படும் குழப்பங்கள்பற்றி
சுவையான பதிவு.
//இற்றைப்படுத்தப்படும்//
புரியலயே!
//இற்றைப்படுத்தப்படும்//
--> Updated.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment