இன்றைய அவசர உலகில் தபால்காரர்கள் கிட்டத்தட்ட பார்க்க முடியாத உயிரினங்கள் ஆகிவிட்டனர் என்பது விசனத்துக்குரியதே. அதுவும் கிராமங்களில் அவர்களது வரவை எதிர்பார்க்கும் மக்களின் மகிழ்ச்சி எல்லாமே பழங்கதையாகப் போய் விட்டன.
மற்ற நாடுகள் பற்றித் தெரியாது, ஆனால் இந்தியாவில் மொழி பேதமின்றி எல்லா ஊர்களிலும் அவர்களது சேவை போற்றப்பட்டதெல்லாம் இப்போது கனவு போலத்தான் இருக்கிறது. (குறைந்த பட்சம் சென்னை போன்ற பெரிய நகரங்களில்).
முதலில் பல்கோன் கீ சாவோன் மே (இமைகளின் நிழலில்) என்னும் ஹிந்திப் படத்தில் இந்தக் காட்சியில் ராஜேஷ் கன்னா தபால்காரனாக வந்து அமர்க்களப்படுத்துவதை கீழே உள்ள வீடியோவில் கண்டு களியுங்கள். இப்படம் சமீபத்தில் 1977-ல் வெளி வந்தது.
தமிழில் கிட்டத்தட்ட அதே மூடில் ஒரு பாட்டு, சமீபத்தில் 1966-ல் வெளி வந்த கௌரி கல்யாணம் என்னும் படத்தில் ஜெயசங்கர், “ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவையிது” எனப் பாடிக்கொண்டே உலா வருகிறார் தன் சைக்கிளில். அப்பாடலின் வீடியோ கிடைக்க மாட்டேன் என்கிறது, பாடல் வரிகளையாவது பார்ப்போம், ஆக்கம் கண்ணதாசன்.
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது,- வாழ்வை
இணைக்கும் பாலம் இது !
தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்,
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்,
உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும்
பிரிவுத் துயரை பேசிடும் கடிதம் ! ( ஒருவர் )
காலம் என்னும் தெய்வமகள்
கலங்க வைப்பாள் - சிரிக்க வைப்பாள் !
எந்த்ந்த முறையில் என்ன என்ன கதையோ,
எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ ,
சுகமும் வரலாம் , துன்பமும் வரலாம்,
இறைவன் அருளால் நலமே வருக ! ( ஒருவர் )
கன்னியரே காலம் வரும் ,
காதலரின் தூது வரும் !
பிள்ளை அனுப்பும் வெள்ளிப் பணம் நூறு,
அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு !
மகனை நினைத்து மயங்கும் மனமே,
விரைவில் வருவான் முருகன் அருள்வான் ! ( ஒருவர் )
அதன் வீடியோ எப்படி இருக்கும்? அதை அறிய மேலே உள்ள ஹிந்திப்பட வீடியோவையே பார்த்தால் போதுமானது. ராஜேஷ் கன்னா இடத்தில் ஜெயசங்கரை கற்பனை செய்து கொள்ளலாம். அப்படியே பொருந்தும்.
போகிற போக்கில் மால்குடி தினங்கள் புகழ் ஆர்.கே. நாராயணனது கற்பனை எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்களேன். தபால்காரர் எவ்வாறு கிராம மக்களின் சுக துக்கங்களில் பங்கு பெறுகிறார் என்பதை மனதைக் கொள்ளை கொள்ளூம் முறையில் ஆர்.கே.என். சித்தரிக்கிறார்.
மனித மனங்களின் சலனங்கள், ஆசாபாசங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள மொழியும் ஒரு தடையாகுமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் சேர்க்கை: கௌரி கல்யாணம் பாட்டின் வீடியோ இங்கே.
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
1 hour ago
4 comments:
பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்மைக்கே.
nothing is impossible
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் மலேசியாவின் கோலாலம்பூரிலும் பல இடங்களில் இப்போதும் அஞ்சல் பெட்டி வைத்திருக்கிறார்கள். இப்போதும் எவராவது கடிதம் போடுகிறார்களா? என்பதை காத்திருந்து பார்க்க முடியவில்லை.
ரொம்ப கவலைப்படாதீங்க டோண்டு ஐயா.. இப்போ தபால்காரர்கள் எல்லாம் வீட்டு புரோக்கர் வேலையும் செய்து, சௌக்கியமாக இருக்கிறார்கள். நங்கநல்லூரில் நான் பார்த்த மூன்று ப்ரோக்கர்களும் தபால்காரர்கள்தான்
Post a Comment