இதைச் சொல்வது இந்திய அரசு.
முதலில் மத்தியப் பொதுப்பணித் துறை மற்றும் ஐ.டி.பி.எல்.-ல் வேலை செய்த போது ஒவ்வொரு ஆண்டு திசம்பர் மாதவாக்கில் அடுத்த ஆண்டுக்கான விடுமுறை லிஸ்டு வரும். அதை வைத்துக் கொண்டு எனது சக ஜூனியர் இஞ்சினியர் மீனாட்சி சுந்தரம் தான் அடுத்த ஆண்டு எடுக்க வேண்டிய ஏர்ண்ட் வீவுகளை வகை படுத்திகொள்வார். அவ்வப்போது அவரிடமிருந்து ஐயோ என்னும் சப்தம் எழும். அது முக்கால்வாசி இம்மாதிரியாக இருக்கும்.
அதைச் சொல்லும் முன்னால் லீவை ப்ரெஃபிக்ஸ்/சஃபிக்ஸ் செய்வது பற்றியும் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு நான் சமீபத்தில் 1981 அக்டோபர் ஆறாம் தேதி ஐ.டி.பி.எல்-லில் சேருவதற்காக ஆஜர் ஆனபோது அன்றைய தினம் ரெஸ்ட்ரிக்டட் விடுமுறை. அடுத்து ஐந்து நாட்கள் விடுமுறை. சென்னையிலிருந்து தில்லிக்கு வந்ததும் அன்று காலைதான். நான் ஜாயினிங் ரிப்போர்ட் தந்தபோது அலுவலக அதிகாரி என்னிடம் அடுத்த ஐந்து நாட்கள் விடுமுறைகள், ஜாயின் செய்த தினமும் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் அலுவலகம் காலியாகத்தான் இருந்தது. ஆகவே நான் ஜாயின் செய்தவுடனேயே விடுமுறை வருவதால் நான் அதிர்ஷ்டம் செய்தவன் எனக் குறிப்பிட, அதிர்ஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை, நான் இதைத் தெரிந்து கொண்டதாலேயே அவசரம் அவசரமாக அன்றே ஜாயின் செய்தேன், என்ன இருந்தாலும் மத்தியப் பொதுப்பணித் துறையில் கொட்டை போட்டவனல்லவா என பணிவுடன் அவரிடம் கூறினேன்.
இதில் விஷயம் என்னவென்றால் நான் வேலைக்கு சேர்ந்த தினத்தையும் சேர்த்து ஆறு நாட்களை முதலில் ப்ரெஃபிக்ஸ் செய்து, பிறகு ஆறு நாட்கள் லீவ் எடுத்தால் கடைசியில் வரும் ஞாயிறையும் சஃபிக்ஸ் செய்தால் மொத்தம் 12 நாட்கள் லீவில் இருக்கலாம்.
இப்போது மீனாட்சி சுந்தரத்திடம் திரும்பச் செல்வோம். அவர் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். இரண்டாம் சனிக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக் கிழமை ஒரு இசுலாமிய புனித தினத்துக்காக விடுமுறை அறிவித்திருக்கிறார். வியாழன் மற்றும் புதன் கிழமைகள் ஹிந்துப் பண்டிகைகளுக்காக விடுமுறை. மனிதா பாவம் புதன், வியாழன், வெள்ளீ, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை சஃபிக்ஸோ அல்லது ப்ரெஃபிக்ஸோ ஒருவித நிச்சயத்தன்மையுடன் செய்ய இயலாத நிலை.
ஏன்? வெள்ளிக்கிழமையன்று குறிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு மேல் ஒரு நட்சத்திரக் குறியீடு கொடுத்திருப்பார்கள். கீழே அதற்கான அடிக்குறிப்பாக “இசுலாமிய பண்டிகைகள் சந்திரனின் குறிப்பிட்டப் பிறை தெரிவதை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் அது ஒரு தினம் முந்தியோ அல்லது பிந்தியோ அரும் வாய்ப்பு உள்ளது” என்று குறிக்கப்பட்டிருக்கும். அதை வைத்துக் கொண்டுதான் மீனாட்சி சுந்தரம் புலம்புவார். “சே, இந்த முசல்மான்களை நம்பவே கூடாதப்பா” என்பார். அதையேதான் இந்திய அரசும் சற்றே நாசுக்காக சொல்கிறது என்பது அவர் துணிபு.
நானும் பல ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறேன். செவ்வாய், புதன், வியாழன்களில் இசுலாமிய விடுமுறைகள் குறிக்கப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் திங்கள் அல்லது வெள்ளி என்றால் அவை முறையே ஞாயிறு அல்லது சனிக்கிழமைகளுக்கு மாறக்க்கூடாது என வேண்டிக் கொள்பவர்கள் மீனாட்சி சுந்தரனார்கள்.
இதை வங்கிகளும் கூறுகின்றன.
வங்கியில் பிக்ஸட் டிபாசிட் தன் சொந்தப் பெயரில் மட்டும் போட்டிருப்பவர் திடீரென மரணமடைய நேர்ந்தால் அவர் வாரிசுதாரர் அதைத் தன் பெயருக்கு மாற்ற ஒரு படிவம் நிரப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்டத் தொகை வரை வங்கியே அதை ஏற்கலாம். அதற்கு மேல் என்றால்தான் கோர்ட்டிலிருந்து வாரிசு சான்றிதழும் பெற வேண்டும். ஆனால் அப்படிவத்தில் இன்னொரு வரியும் சேர்த்திருப்பார்கள். அதாகப்பட்டது இறந்தவர் இசுலாமியராக இருந்தால் என்னத் தொகையானாலும் சரி வாரிசு சான்றிதழை வற்புறுத்த வேண்டும். ஏனெனில் இசுலாமிய வாரிசுச் சட்டம் மிகச் சிக்கலான ஷரத்துகளை தன்னுள் அடக்கியுள்ளது. ஆகவே வங்கி அதிகாரிகள் அங்கு வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம்.
இது சம்பந்தமாக ஒரு திசைதிருப்பல்.
நீதியரசர் அமரர் எம். சீனுவாசன் (ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் தீர்ப்பை வழங்கியவர்) என்னிடம் இது பற்றிப் பேசும்போது குறிப்பிட்டார்.
அதாகப்பட்டது இசுலாமியச் சட்டம், ஹிந்து சட்டம் என்றெல்லாம் சட்டக் கல்லூரிகளில் பாடம் வைத்திருப்பார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஹிந்து சட்டத்துக்கான தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் ஷ்ம்சுத்தீன் என்னும் மாணவர், இசுலாமியச் சட்டத்தேர்வில் முதலாவதாக வந்தது ராகவாச்சாரி.
திசை திருப்பல் முடிந்தது.
இசுலாமியரை இந்த விஷயத்தில் நம்பலாகாது என மொக்கைப் பதிவு போடும், சென்னை புதுக்கல்லூரியில் படித்த டோண்டு ராகவனோ நபியில்லாமல் டோண்டு இல்லை என்று கூறுபவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
2 comments:
//இந்த இசுலாமியர்களை நம்பவே முடியாது!!! - ஒரு மொக்கைப் பதிவு //
தலைப்பு வைக்கிறதே இப்படி பயப்படனுமா ? அய்யோ பாவம் சார் நீங்க.
ஏனப்பன்.
தொடைநடுங்கித்தனமான தலைப்பு.
தொடை இடை உடை நடுங்கித்தனமான முடிவுரையும் கூட.
மொக்கைப்பதிவுக்கே, அதுவும் போடா ஜாட்டான் என்ற டோண்டுவே இப்படின்னா ..... மத்தவனெல்லாம் எம்மாத்திரம் ?
Post a Comment