12/31/2010

வால்பையனின் கவனத்துக்கு

டோண்டு பதில்கள்-30.12.2010 பதிவில் வழக்கம்போல வால்பையனும் நான் பதிலளித்த கேள்விகளுக்கு அவரும் பதிலளித்துள்ளார்.

அதில் ஒரு கேள்வி, அதற்கு எனது பதில், வால் பையனின் வெர்ஷன் ஆகியவற்றை கீழே தருகிறேன்.

வால்பையன் said...
// பிராமணர்கள் அனேகமாக அனைத்து துறைகளிலும் பணியில் இல்லையென்றே (இருந்தாலும் மிக குறைந்த எண்ணிக்கையே) இருக்கும் போது இன்னும் ஏன் இந்த பிராமண துவேசம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம்?
பதில்: தேவையற்ற அச்சம். சுய மரியாதை இல்லாதவர்கள்தான் இவ்வாறு தூற்றுபவர்கள்.//

வால்பையனின் பதில்: துறைகளின் மேலதிகாரியாக மட்டுமே இருக்க நினைப்பது தான் அதற்கு காரணம், துப்புரவு பணியாளர்கள் வேலையில் பாப்பானை சேரச்சொல்லுங்கள், யாருக்கு பயம் என்று அப்பொழுது விளங்கும்!
December 31, 2010 1:05 PM


துப்புரவு பணி என்ன, கக்கூஸ் க்ளீனிங்கிலும் பார்ப்பனர் உண்டு. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பெயர் பெற்ற சுலப் சவுச்சாலயாவை நிறுவி, வெற்றிகரமாக நடத்துபவர் டாக்டர் பாதக் (Dr. Pathak) என்னும் பார்ப்பனரே.
1943-ல் பீஹாரில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பாகேல் என்னும் கிராமத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்த அவர் காலேஜ் படிப்பையெல்லாம் முடித்த பின்னர் 1968-ஆம் ஆண்டு கக்கூஸ் கழுவுபவர்களின் விடுதலைக்கான இயக்கத்தில் சேர்ந்து பல அரிய தொண்டாற்றியிருக்கிறார். துப்புறவு பணியாளர்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளை அண்மையில் இருந்து அவதானித்தவர் அவர். கக்கூஸ் கழுவுவதில் பி.எச்.டி செய்துள்ளார். துப்புறவு தொழிலாளிகளின் இழிவான வேலை சூழ்நிலையை மாற்ற அருமையான சிஸ்டத்தை உருவாக்கியவர் அவர்.

அதற்கு அகில உலக அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

உலகில் கக்கூஸ்கள் எவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்துள்ளன என்பது பற்றியெல்லாம் பாதக் சம்பந்தப்பட்ட இந்த இணைய தளத்தில் போய் தெரிந்து கொள்ளலாம்.

மனிதக் கழிவை நீக்கும் தொழிலாளர்களது மிக அவமானகரமான சமூக இழிநிலையை சாடிய அவர், வெறும் வாய் வார்த்தைகளிலெல்லாம் நிற்காது, இதன் தொழில் நுட்பத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பதிலும் கவனம் செலுத்தி, அதை வெற்றிகரமாக செய்து அதிகாரிகள், பொறியியல் நிபுணர்கள் ஆகியோருக்கும் நேரடியாக நிரூபித்தவர்.

இந்தியாவில் டாயிலட் பிரச்சினை என்ன என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ஒரு காட்சியை தவறாமல் காண முடியும். அதிலும் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும் பயணம் செய்வோரின் கண்களுக்கு இந்தக் காட்சி தப்பவே தப்பாது.

அது - ரயில்வே டிராக்கின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு இடையே புதைந்து காணப்படும் மனிதர்கள்தான். அவர்கள் தங்களது இயற்கை உபாதையை போக்க இப்படிப் புதர்களை நாடுவது சகஜமான காட்சியாகி விட்டது.

ரயில் வரும்போது எழுந்து நின்று கொள்வதும், ரயில் ேபான பின்னர் அமர்ந்து 'பாரத்தை' இறக்குவதும் சகஜமான காட்சியாகும்.

இந்தியக் கிராமங்களில் மலம் கழிக்க மக்கள் அதிகம் நாடுவது வயல் வெளிகளையும், ரயில்வே பாதைகளையும்தான். திறந்தவெளியில்தான் அவர்கள் தங்களது 'பாரத்தை' இறக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள்.

இதில் பெண்களின் நிலைதான் ரொம்ப சோகமானது. இருள் பிரியாத அதிகாலை நேரங்களிலும், இருள் கவியும் மாலை நேரங்களிலும்தான் அவர்கள் இப்படி போக முடியும். இதனால் அவர்களுக்கு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வேறு சில பக்கவிளைவுப் பிரச்சினைகளுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இது இந்தியாவில் மட்டும் இல்லை. உலகம் முழுவதும் இந்த கழிப்பறைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன. இதுகுறித்து யோசித்த ஐ.நா. சபை, 2025ம் ஆண்டுக்குள் இதற்கு நிரந்தரத் தீர்வு காண தீர்மானித்தது.

வளரும் நாடுகளில் நவீன டாய்லெட் வசதிகளை ஏற்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. செலவுகள் அதில் முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கு மாற்று வழி உள்ளது.

அதுகுறித்து விவாதிக்கத்தான் டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு நேற்று (31.10.2007) தொடங்கியுள்ளது. 4 நாள் நடக்கும் இந்த மாநாட்டில், 40க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு கழிப்பறைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு என்ன, செலவுகளைக் குறைக்க மாற்று வழி என்ன என்பது குறித்து விவாதிக்கின்றனர்.

ஐ.நா. மதிப்பீட்டின்படி, உலகம் முழுவதும் 20.6 கோடி மக்கள் முறையான, சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கையை 2015ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 70 லட்சம் பேர் முறையான கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதியான பிந்தேஸ்வர் பதக் கூறுகையில், மற்ற பிரச்சினைகளைப் போல இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினை.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் அடிப்படை சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. இதுகுறித்துத்தான் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப் போகிறோம் என்றார்.

இந்தியாவில் சுலப் இன்டர்நேஷனல் நிறுவனம் குறைந்த செலவிலான கழிப்பறைகளை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் துணைத் தலைவரான அனிதா ஜா கூறுகையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கழிப்பறை முறைதான் மிகவும் சிறந்தது, செலவு குறைந்தது. இந்த வகை கழிப்பறைகளை உருவாக்க குறைந்தது 700 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 3000 ரூபாய் வரை செலவாகும்.

இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது முக்கியமான அம்சமாகும். தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இத்தகைய கழிப்பறைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் தண்ணீரையும் கூட நாம் சேமிக்க முடியும் என்றார்.


தினமலரில் வந்த ஒரு செய்தி:
டைம் பத்திரிகை 2009ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் துறையில் சாதித்த ஹீரோக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுலப் சர்வதேச சமூக சேவை கழகத்தின் நிறுவனர் பிந்தேஸ்வர் பதக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது. மிக குறைந்த செலவில், சுகாதாரமான கழிப்பறைகளை அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் இவர்.

மேலும், போதிய சுகாதார வசதிகள் இல்லாத கிராமங்கள், குடிசைப் பகுதிகளிலும் இந்த கழிப்பறைகளை, தனது சுலப் அறக்கட்டளை அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொடுத்து வருகிறார். இவரது தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கழிப்பறைகளை நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் வசிக்கும் கழிப்பறை வசதி இல்லாத மக்கள் மற்றும் வீடுகள் இல்லாத மக்களின் வசதிக்காக முக்கிய நகரங்களில் 5,500 பொதுக் கழிப்பறை வளாகங்கள், இவர் உருவாக்கி கொடுத்த தொழில் நுட்பத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து மக்களும் சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாவதற்கு, இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட அனுபவமே காரணம்.

பதக் ஆறு வயது சிறுவனாக இருக்கும் போது, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளியை தொட்டு விட்டார். இதைக் கவனித்த அவரது பாட்டி, புனிதம் கெட்டு விட்டதாகக் கூறி, கங்கை நீரால் அவரை குளிப் பாட்டினார். பாட்டியின் இந்த செயல், பதக்கின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதனால், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என, உறுதி கொண்டார். இந்த உறுதி தான், பின்னால் செயல்வடிவம் எடுத்தது. சுகாதாரமற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் அவலங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதக், அந்த பகுதிகளில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், "சமூகத்தில் யாருக்காவது பாடுபட வேண்டும் என, நினைத்தால், அவர்கள் பிரச்னைகளை முதலில் அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

தற்போது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் கூட, 11 கோடி வீடுகளில் இன்னும் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை. அதேபோல், பயன்படுத்தப்படும் தண்ணீரில், 75 சதவீதம் சுகாதாரமற்றதாகவும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் குழந்தைகள் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால், நோய்கள் ஏற்பட்டு பரிதாபமாக மரணம் அடைகின்றன. கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது சட்ட விரோதம் என, கடந்த 1993ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அந்த தொழிலை இன்னும் செய்து வருகின்றனர். இதுபோன்ற அவலங்களை தடுக்க வேண்டும் என்ற உறுதி கொண்டவர் பதக். இதுகுறித்து, அவர்,"இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அரசு நினைத்தால், ஒரே நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்'என கூறியுள்ளார்.


ஆனால் அரசு நினைக்குமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு மலிவு விலையில் சாராயம் அளித்து அவர்களை கீழான நிலையிலேயே வைக்க விரும்புவார்கள். வேறென்ன செய்வார்கள்?

டோண்டு ராகவனது இப்பதிவு பற்றி தானும் கருத்து சொல்ல வேண்டும் என படுத்துகிறான் முரளி மனோகர்.

அவன் கூறுகிறான், “டோண்டு பெரிசு 2010-ஆம் ஆண்டை வெஸ்டர்ன் டாயிலட் பற்றிய பதிவுடன் ஆரம்பித்து, இப்போது சுலப் கழிப்பறையுடன் முடிக்கிறது. என்ன தற்செயலான நிகழ்ச்சி!!!

மேலும், வால்பையன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதாரணமாக பாப்பான் எங்கே சென்றாலும் தலைமையில்தான் இருக்க விரும்புவான். அதற்கான மனத்திடம், மேலாண்மை எல்லாமே அவனிடம் உண்டு. என்ன ஓக்கேவா?

வால் பையனின் சாதி என்னவென்று எனக்கு தெரியாது. துப்புரவு வேலைக்கு வர அவர் சாதியினர் மட்டும் விரும்புவார்களா என்பதை தங்கள் வீட்டினரை கலந்து கேட்டு அறியட்டும். அவருடன் சேர்ந்து கும்மியடிக்கும் மற்ற பதிவர்களும் தத்தம் மனதிடம் இக்கேள்வியை வைக்கட்டும். வெறுமனே பாரில் தண்ணியடித்து சிக்கன் லெக்பீஸை கடித்துக் கொண்டு முற்போக்கான கருத்துக்களை பேசினால் மட்டும் தீராது இப்பிரச்சினை”.

நன்னி முரளி மனோகர். இப்பதிவை போட தூண்டுதலாக இருந்ததற்கு நன்னி வால் பையன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/30/2010

மூன்றாம் முறையாக மோதி முதல் ரேங்கில், நம்ம ஊர் மரமண்டைகளுக்கு இது உரைக்குமா?

நம் நாட்டு முதலமைச்சர்களை தர வரிசைப்படுத்தும் நோக்கத்தில் இந்தியா டுடே நடத்தும் வருடாந்திர ஓட்டெடுப்பில் முன்றாம் ஆண்டிலும் மோதி முன்னால் நிற்கிறார். அவருக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஷீலா தீட்சித்துக்கும் இடையில் பெரிய இடைவெளி.

முதலில் அந்த ரிப்போர்ட்டை பார்ப்போம் (மோதி பற்றி குறிப்பிட்டதையே இங்கு தருகிறேன். மற்றவர்களை பற்றிய குறிப்புகள், பல புள்ளிவிவர கணக்குகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தளத்தில் போய் பார்த்து கொள்ளலாம்).

When it comes to politics, it doesn’t matter if you are a man or woman, illiterate or educated, urban or rural, old or young, Hindu or Muslim, upper caste or Dalit.
Everybody has an opinion and everyone believes he or she is right. Narendra Modi is not among the dozen or so men and women who barely conceal their prime ministerial ambitions but if a political version of “Indian Idol” were to be chosen, irrespective of these divides, the Gujarat chief minister is likely to win hands down.

Since 2002, when INDIA TODAY and pollsters AC Nielsen-ORG-MARG broadened the scope of the Mood of the Nation poll to assess the performance of chief ministers across the country, Modi has always been rated among the five best chief ministers in the country.

In our last three polls, he has held the number one slot and this year, with a nationwide approval rating of 20, Modi polled almost as much as the first and second runners-up, Sheila Dikshit (11) and Nitish Kumar (10), put together.
For the 15th Mood of the Nation poll, 12,374 voters in 19 states were asked to rate the performance of the chief ministers of their own states as well as their perceptions about the chief ministers of other states. Though chief ministerial writ does not extend beyond the boundaries of the respective states, some like Modi have come to acquire a pan-Indian image.

That Modi’s approval rating is a phenomenal 80 per cent in his home state should come as no surprise, but what is truly astounding is that across several states, he has got between 20 and 25 per cent of the votes.

In contrast, the rating of most chief ministers outside their respective states remained in single digits. Modi scored exceptionally well in states like Karnataka, Haryana, Maharashtra, Tamil Nadu and even communist Kerala. Barring the first, all are non-BJP ruled states which are on high growth trajectories.

In Rajasthan, Modi got 35 per cent votes as against 38 per cent of local Chief Minister Ashok Gehlot, while in Uttar Pradesh, he was not too far behind Mayawati who, just a over a year ago, became the first chief minister to win an absolute majority in 20 years. Besides the cross-border support, Modi’s backers belong to all three age groups surveyed: 18-24, 25-44 and 45 upwards and is spread equally across the illiterate, the moderately educated though there is a skew in his favour among the highly educated.

Across the country, 12 per cent of voters who voted for the Congress in the last elections say they will vote for Modi if they get a chance.
Proof perhaps that people believe in his development mantra.

The overwhelming endorsement is also a proof that despite the controversies that have surrounded Modi these past few years, people are by and large taken in by his image as an absolutely incorruptible politician, something that sounds like an oxymoron these days.

இதை கூறினால் மோதி மதவெறியர் என வழக்கமான ஒப்பாரியை வைப்பார்கள். அதுவும் உணமையில்லை என நான் இட்ட பதிவுக்கு இடி போன்ற மௌனமே பதிலாகக் கிடைத்தது.

அவ்வாறு கூறுபவர்கள் அவசர நிலையை தனது சொந்த நலனுக்காக கொண்டு வந்து, நாட்டின் ஜனநாயகத்தையே கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற இந்திரா காந்தியை அன்னை மாதா தாயார் என்றெல்லாம் புகழ்வார்கள், அவரது மகனும் 1984-சீக்கியக் கொலை புகழ் ராஜீவும் அவர்களுக்கு சம்மதமே. இந்த அழகுக்கு இந்திராவும் சரி, ராஜீவும் சரி, அவரது மனைவி இத்தாலிக்காரியும் சரி லஞ்ச ஊழலில் திளைப்பவர்கள்.

நம்ம ஊர் தினகரன் கொலை புகழ், கோயமுத்தூர் குண்டு வெடிப்பு புகழ் கருணாநிதியும் நல்லவர், ஆனால் மோதி கெட்டவர்.

எப்பத்தான் நம்ம ஊர் மரமண்டைகளுக்கு இதெல்லாம் விளங்குமோ தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் 30.12.2010

நக்கீரன் பாண்டியன்
கேள்வி- 1. பலர் எதிர்பார்த்தபடி திமுக-காங் கூட்டணி முறிந்து விடும் போல் அறிகுறி தெரிகிறதே?
பதில்: எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நடந்தால் தமிழக மக்களுக்கு நல்லதுதானே.

கேள்வி- 2. அம்மாவுக்கு பிடிக்கும் தலைமை மகனுக்கு வேப்பங்காய் என்ன காரணம்?
பதில்: அம்மாவுக்கு தன் சகோதரிகள் மேல் இருக்கும் பாசம் மகனுக்கு தனது சித்திகள் மேல் இல்லையோ என்னவோ.

கேள்வி- 3. ஜெ.யின் லாவக அணுகுமுறை மாற்றம் தேர்தல் வரை தொடருமா?
பதில்: தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். சாதாரணமாக தமிழக அரசியல் அரங்கில் 1990கள் முதல் நான் காணும் போக்கு என்னவென்றால், ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி பல முறை சொதப்பல்கள் செய்து எதிராளிக்கு வெற்றியளித்ததே அதிகம் நடந்துள்ளது. இம்முறை சொதப்ப வேண்டியது மஞ்சள் துண்டின் முறை என எண்ணுகிறேன்.

கேள்வி- 4. ஆன்லைன் டிரெடிங் தான் இந்த விஷ விலையேற்றத்திற்கு காரணம் என்று தெரிந்த பிறகும்?
பதில்: எப்படித் தெரியும் உங்களுக்கு? தகவலுக்குத்தான் கேட்கிறேன்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால் இது தொழில் நுட்பம் சமபந்தப்பட்ட விஷயம். எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை. ஆகவே இக்கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்து அதற்கான எதிர்வினைகளிலிருந்து மேலும் கற்கலாம் என எண்ணம்.

ஆன்லைன் டிரேடிங் சில வகைகளில் சூதாட்டத்தத்தை நினைவுபடுத்துகிறது. சூதாட்டம் தவறு என்றாலும் மனிதர்களால் அதைத் தவிர்க்க இயலாது. அதைத் தடை செய்தால் பல வழிகளில் அது நடந்தே தீரும் என்பது எனது கருத்து.

சமீபத்தில் 1971-ல் வெளியான “சூதாட்டம்” என்னும் படம் நினைவுக்கு வருகிறது. ஜயசங்கர், முத்துராமன் மற்றும் தேங்காய் சீனுவாசன் மூணு சீட்டு ஆடிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு போலீஸ் ஜீப்பில் செல்கின்றனர். பொழுது போவதற்காக அவர்கள் சென்ற வண்டியின் பதிவு எண்ணில் உள்ள தனி நம்பர்களை கூட்டினால், [உதாரணத்துக்கு 3331 --> 3+3+3+1 = 10 --> ரெட்டைப்படை எண்] விடையாக வருவது ஒற்றைப்படையா ரெட்டைப்படையா என மூவரும் பந்தயம் கட்டுகின்றனர் (அதற்கு முன்னால் யாருமே வண்டி என்ணைப் பார்க்கவில்லை என்பதை ஜெண்டில்மேன் அக்ரீமெண்டாக உறுதி செய்து கொள்கின்றனர்). பந்தயங்கள் எல்லாம் போட்ட பின்னால் போலீஸ்காரரிடமே வண்டியின் எண்ணைக் கேட்டறிந்து விடை தெரிந்து கொண்டு பிறகு பெட்டை செட்டில் செய்கின்றனர்.

ஆக, ஆன்லைன் டிரேடிங் சரியோ தவறோ எனப்து ஒரு பக்கம் இருக்கட்டும், அதை அழிக்க முடியும் என நம்புகிறீர்கள்?

கேள்வி - 5. பெரிய கார்பரேட் நிறுவனத் தலைவர்கள் தான் இந்தியா ஆட்சி அதிகாரத்தை முடிவு செய்கிறார்கள் என்ற செய்தி நல்லதற்கா?
பதில்: இது ஒன்றும் புதிதில்லையே. எல்லா தேசங்களிலுமே நடப்பதுதானே. உதாரணத்துக்கு, எந்த யுத்தங்களைப் பார்த்தாலும் அவற்றுக்கு முக்கால்வாசி பொருளாதாரக் காரணங்கள்தான் அதிகமிருக்கும். அதிலும் சம்பந்தப்பட்ட தேசங்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் நடக்கும் போட்டியாகவே இருக்கும்.

பல கோடிக்கணக்கான மக்கள் கொலையாகும் விஷயங்களிலேயே அப்படி என்றால் ஆட்சி அதிகாரம் மட்டும் எப்படித் தப்ப முடியும்? என்ன, இதெல்லாம் இலை மறைவு காய் மறைவாக நடந்தபோது பொது மக்களுக்கு அது பற்றி அதிகமாகப் பிரக்ஞை இல்லை. இப்போது இருக்கிறது, அவ்வளவே. இதுவும் கடந்து போகும்

மிளகாய் பொடி
கேள்வி - 6. வரும் தேர்தலில் திமுக என்ன பொருள் இலவசமாக கொடுப்பதாக இருக்கிறார்கள்?
பதில்: ஆளுக்கொரு ஆப்பு, அவரவரே வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளுடன்?

கேள்வி - 7. சச்சினின் சமீபத்திய சாதனை பற்றி...?
பதில்: இந்தியாவின் பிராட்மேன் அல்லவா அவர். உதாரணத்துக்கு இங்கே போய் பாருங்களேன்.

கேள்வி - 8. சென்னையில் தற்பொழுது குளிர் ஜாஸ்தியாக தெரிகிறதே? உலகம் வெப்பம ஆவதாலா?
பதில்: ரமணனைத்தான் கேட்க வேண்டும். அவர்தான் கடந்த நூறாண்டுகளில் சென்னையின் குளிர்கால டெம்பரேச்சர்களை ஒரு எக்செல் தாளில் கொடுத்து அதிகாரபூர்வமாக பேச இயலும்.

அவரே இப்போது கூறுகிறார். மழைகாலத்தில் வளி மண்டலத்தில் நீரின் அடர்த்தி அதிகமாகி, ஒன்று மழையாகப் பொழியும் அல்லது பனி இருக்கும். இந்த ஆண்டு மழையும் அதிகம், கூடவே பனிபொழிவும்.


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி - 9. நடிகர் ரஜினியின் வீரம் சினிமாவில்தான். அரசியல் என்றால் அவருக்கு பயம்- சுப்பிரமணிய சாமி.
பதில்: ரஜனி கன்னட ராஜ்குமார் போன்று ஒரு நடிகர் அவ்வளவே. கன்னட வீரராகக் கருதப்பட்ட அந்த ராஜ்குமாரும் வீரப்பனிடம் பிணைக்கைதியாக இருந்தபோது அஞ்சி அடக்க ஒடுக்கமாகத்தான் இருக்க வேண்டியிருந்தது.

மேலும் அரசியலுக்கு தான் வருவது பற்றி ரஜனி என்றுமே சீரியசாகப் பேசியதாகத் தெரியவில்லையே. எனது கருத்து என்னவென்றால் 1996-ல் அவருக்கு நல்ல வாய்ப்பு இருந்தது ஆனாலும் உள்ளே இறங்கவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.

கேள்வி - 10. ஊரெல்லாம் பற்றி எரியும் நானோகார், ஒரு லட்சம் விலை சொல்லிட்டு 2 லட்சத்துக்கு விற்கும் நானோ கார், விற்பனையே ஆகாத நானோ கார்.. இதுக்கு விருதாம்..
பதில்: நானோவின் விற்பனை சொதப்புகிறது போலிருக்கே.

அதே நேரத்தில் அதற்கு அவார்ட் கொடுத்தவர்களும் விஷயம் தெரிந்தவர்கள்தான் போலிருக்கே.

இப்போதாவது சரியாக விற்பனை போகிறதா என்பதை பார்ப்போம்.

கேள்வி - 11. தம்பி விஜய் மாசற்ற தமிழன்-உரக்கச்சொன்ன சீமான்!
பதில்: அப்படியாங்ணா. அப்படியாவது விஜயின் மார்க்கெட் நிமிர்ந்தால் சந்திரசேகர் வாணாம்னா சொல்லப் போறார்? இது சம்பந்தமான மேலதிக தமாஷ் விவரங்களை இங்கும் காணலாம்.

கேள்வி - 12. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.
பதில்: அந்த மாணவர்கள் என்ன தப்பு செஞ்சாங்க?

கேள்வி - 13. வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பதில்: ஐந்தாவதாக மாட்டிக் கொள்ளக்கூடிய பெண் காப்பாற்றப்பட்டார்.


பார்வையாளன்
கேள்வி - 14 என்னை போன்றோருக்கு பிராமணர்கள் மீது துவேஷமும் இல்லை. அதீத அன்பும் இல்லை. ஆனால் முழு நேரமாக பிராமணர்களை எதிர்ப்பவர்கள் மனதில் பிராமணர்கள் மேல் அதீத மரியாதை இருக்கிறது என நினைக்கிறேன். உங்கள் கருத்து? (முக்கிய வேலைகளுக்கு பிராமணர்களை அமர்த்துததல், ஆலோசனை கேட்டல் போன்றவை சில உதாரணங்கள்)
பதில்: இது வெறும் தற்செயல். யாருமே தங்களுக்கு ஆலோசகர்களாக தங்களால் சிறந்தவர்களாகக் கருதுபவர்களையே வைப்பார்கள், காரணம் அவர்களது திறமைதான். அவ்வாறு அமர்த்தப்படுபவர்களில் பார்ப்பனரும் இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் அவ்வாறு நடப்பது திறமைக்காகத்தானே தவிர பார்ப்பனர் என்பதற்காக என்றெல்லாம் இல்லை.

கண்டிப்பாக தாங்கள் வலியுறுத்தும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு எல்லாம் தங்களுக்கு காரியம் ஆகவேண்டிய இடங்களில் பார்க்க மாட்டார்கள் அவ்வளவே.

கேள்வி - 15. இத்தகையத் திறனை பிராமணர்கள் பெற என்ன காரணம்? (பிராமணர்கள் அபார அறிவு திறன் கொண்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. பிராமண துவேஷம் செய்பவர்கள் நினைக்கிறார்கள்).
பதில்: இக்கேள்வியை பிராமண துவேஷம் செய்பவர்களிடம்தான் கேட்க வேண்டும். திருமணச் சடங்குகளுக்கு பார்ப்பனர்கள் வேண்டாம் என கொடி பிடிப்பவர்களே தத்தம் வீட்டு திருமணங்களில் பார்ப்பனர்களை வைத்து, ஹோமம் வளர்த்து, தாலி கட்டி, அம்மி மிதித்து, சப்தபதி மந்திர கோஷங்கள் முழங்க திருமணம் நடத்துகிறார்கள். கேட்டால் வீட்டுப் பெரியவர்கள் சொன்னார்கள் எனக் கூறுவது.

கேள்வி - 16. நாம் ஆங்கிலம் கலந்து எழுதுவதுபோல, ஜெர்மன் பிரெஞ்ச் மொழிகளில் நடக்கிறதா ?
பதில்: தாராளமாக நடக்கிறது. ஆங்கில பாதிப்பு உடைய ஜெர்மன் டெக்ஸ்ட் DEnglisch என்றும் அதே போல ஆங்கிலக் கலப்பு பிரெஞ்ச் franglais என்றும் அழைக்கப்படும். அதுவும் அமெரிக்க ஆங்கில்மதான் இங்கு சுட்டப்படுகிறது.

கேள்வி - 17. உங்கள் பார்வையில், ஜெயமோகன் சாருநிவேதிதா . ஒப்பிடுக
பதில்: சுய மரியாதை பற்றிய எனது இப்பதிவில் நான் சாருவை பற்றி குறிப்பிட்ட சில வரிகள்:

சாரு நிவேதிதாவின் பல எழுத்துக்கள் அவர் ஏற்கனவேயே பல முறை சொன்னதாகத்தான் இருக்கும். தன்னை ஒண்ணுமே தெரியாத பாப்பா ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டு உதார் விடுவதும், மற்றவர்கள் அதை நம்புவார்கள் என நம்புவது போல காட்டிக் கொள்வதும் பல முறை நகைச்சுவையாகவே இருக்கும்.

உதாரணத்து அவரது இந்த லேட்டஸ்ட் பதிவையே எடுத்துக் கொள்வோம். அதில் தன்னை லயோலா கல்லூரிக்கு பேச அழைத்துவிட்டு வெறுமனே சாம்பார் சாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள் என பிரலாபித்திருக்கிறார்.

உப்பு புளி செலவுகளுக்கும் நண்பர்கள் கையை எதிர்பார்க்கும் நிலையில் தன்னை வைத்திருப்பவர் சாரு நிவேதிதா. எனது கேள்வி பதில் பதிவு ஒன்றில் வந்த ஒரு கேள்வியும் அதன் பதிலும் கீழே:

எம். கண்ணன்
9. ஜெயமோகன் ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, கனடா சென்றாலும் சரி, அமெரிக்கா சென்றாலும் சரி - நாடு முழுவதும் சுற்றிக் காட்ட, விருந்தோம்பல் செய்ய பல வாசகர்கள், நண்பர்கள் செய்கிறார்கள். ஆனால் பலமுறை கேட்டு, வேண்டுகோள் விடுத்தும் சாருவை யாரும் எங்கும் கூப்பிட்டு (வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழகத்துக்குள்ளேயே வசிப்பவர்கள் கூட) விருந்தோம்புவது இல்லையே? ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: மடிப்பாக்கத்தில் வசிக்கும் எனது எழுத்தாளர் நண்பர் வீட்டுக்கு அமெரிக்கவாழ் பதிவர் ஒருவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் சாரு பற்றி பேசும்போது, அவருடன் ஒரு அளவுக்குள் பழக வேண்டும் என கூறினார். கடன் கேட்டுவிடுவார் என்றார்.

அவருடைய வலைத்தளத்திலேயே பார்க்கலாமே, தனது வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு அதற்கு பணம் அனுப்புமாறு கேட்டு கொள்கிறார். அப்படி பெறும் பணத்தை ரொம்ப காஸ்ட்லி பார்களில் குடிக்கத்தான் பயன்படுத்துகிறார் என்பதையும் அவ்வப்போது எழுதி வருகிறார். இந்த விஷயங்களெல்லாம் படிப்பவர் மனதில் ஓர் அவெர்ஷனை உருவாக்கிவிடுகிறது.

இவையெல்லாம் ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக்கு அவர் யாரிடமும் கையேந்துவதில்லை, அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவரது எழுத்துக்களில் சுய இரக்கம் கிடையாது. ஆகவேதான் அவரை அழைக்க ஆட்கள் அனேகம் உண்டு. நன்றாக வேறு அவர் எழுதுகிறார் என்பது கூடுதல் போனஸ்.


ஆகவே இவ்விருவரிடையே என்ன ஒப்பீடு இருக்க இயலும்? ஜெயமோகன் மலை, சாரு மடு என்று கூறுவதைத் தவிர.


hayyram
கேள்வி - 18. கருணாநிதியும் ஜெயலலிதாவும் கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்தவர்களுக்கு சர்ச் கட்ட பட்டா வழங்குவது முதல் சலுகைகள் பல வாரி வழங்குவதாக மண்டியிட்டு முழங்கியிருப்பதை பற்றி தங்கள் கருத்து?
பதில்: நன்றாகவே மண்டியிடுகிறார்கள் என்றுதான் கூற வேண்டும். சபாஷ் சரியான போட்டி எனக் கூறுவது பி.எஸ். வீரப்பாவை மிமிக்ரி செய்யும் விவேக் குரலில்


thenkasi
கேள்வி - 19. பிராமணர்கள் அனேகமாக அனைத்து துறைகளிலும் பணியில் இல்லையென்றே ( இருந்தாலும் மிக குறைந்த எண்ணிக்கயே) இருக்கும் போது இன்னும் ஏன் இந்த பிராமண துவேசம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம்?
பதில்: தேவையற்ற அச்சம். சுய மரியாதை இல்லாதவர்கள்தான் இவ்வாறு தூற்றுபவர்கள்.

கேள்வி - 20. கலப்புத் திருமணம் செய்யும் போது (குறிப்பாய் மென்பொருள் பொறியாளர்) பிராமண பெண்களையே தேர்ந்தெடுக்கும் இவர்கள் பிராமண குலத்தை ஏளனம் செய்வது ஏன்?
பதில்: ஆஷாடபூதிகள்.

கேள்வி - 21. பொதுவாய் பிராமணர்கள் (தற்காலத்தில்) யாருக்கும் பிரச்ச்சனை பண்ணாமல் இருக்கும் போது ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாய் சொல்லபடும் ஒரு சில செயல்களுக்கு இந்தத் தலைமுறையை வாய்க்கு வந்தபடி பேசுவதும்,எழுதுவதும் சரியா?
பதில்: குருட்டுத்தனமான வெறுப்பு பார்ப்பனர்கள் மேல். இதற்கு வெறுப்பாளர்களின் வளர்ப்பே காரணம்.

கேள்வி - 22. மருத்துவம் பார்க்க அனுபவமிக்க பிராமண மருத்துவர் வேண்டும்,வழக்குகளை திறமையுடன் வாதிட பிராமண வக்கீல் வேண்டும்,புகழ்பாடும் நிகழச்சிகளை தொகுத்தளிக்க பிராமண நிகழ்ச்சி தொகுப்பாளர் வேண்டும் ஆனால்?
பதில்: திறமை மிக்கவர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்களில் சிலர் பார்ப்பனர்களாக இருக்கலாம். அது மிகவும் தற்செயலான விஷயம். ஏனெனில் திறமை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் உரியது அல்ல.

கேள்வி - 23. ஊடகம், செய்தித்தாள்கள், வானொலி, திரைப்படம் (தமிழகத்தில்) ஆகியவற்றில் தனி ஆட்சி செய்த போதும் இன்னும் பிராமணரை துவேஷிப்பது நியாயமா?
பதில்: சூரியனை பார்த்து நாய் குரைத்தால் அதற்குத்தான் வலிக்கும். கிடக்கிறான்கள் ஜாட்டான்கள்.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/29/2010

மொழிபெயர்ப்பின் உச்சங்கள்

இஸ்ரவேல எழுத்தாளர் Ephraim Kishon என்னுடைய அபிமான எழுத்தாளர். இஸ்ரேலை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் அதன் அண்டை இசுலாமிய நாடுகள் அதற்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரவேலர்களது வழமையான மனவுறுதியை இன்னும் பலப்படுத்தும் வண்ணம் அவரது புத்தகங்கள் அமைந்தன எனக்கூறினால் அது மிகையாகாது.

எனது எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ என்னு பதிவில் இட்டிருந்த சில வரிகளை இங்கே நான் கூறுவேன்.

கலந்துரையாடலுக்கு சிறப்பு விருந்தினர் ஜெயகாந்தன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி. அவர்களை நான் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஜெயகாந்தனின் புத்தகங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அங்கு வந்திருந்தார். அவருடன் பேச விருப்பமா என்ற கேள்விக்கு ஜெயகாந்தன் தேவையில்லை என்று கூறிவிட்டார். அவரைப் பொருத்தவரை தான் ஒருமுறை ஒரு கதையை எழுதிவிட்டால் அது எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்பதில் தனக்கு சுவாரசியம் இல்லை எனக் கூறிவிட்டார்.

இந்த நேரத்தில் இஸ்ரவேல எழுத்தாளரான Ephraim Kishon பற்றியும், அவரது ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளர் Friedrich Torberg பற்றியும் என் எண்ணங்கள் எழுந்தன. அவர்களை பற்றி பேசலாம் என எண்ணியபோது ஜெயகாந்தன் அவர்கள் மேலே பேச ஆரம்பித்ததால் பிறகு கூறலாம் என்று விட்டு விட்டேன். பார்வையாளர்கள் அவர்கள் அறியாமலேயே இஸ்ரேல் சம்பந்தப்பட்ட எனது உரையிலிருந்து தப்பித்தனர். இங்கே அதை பற்றி கூறிவிடுகிறேன்.

Ephraim Kishon ஒரு ஹங்கேரிய யூத எழுத்தாளர். இரண்டாம் உலக மகாயுத்தத்துக்கு பிறகு இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தவர். மத்திய ஐரோப்பாவை சேர்ந்த அவருக்கு பல ஐரோப்பிய மொழிகள் தாய் மொழி அளவுக்கு சரளமாக வரும். இஸ்ரேலுக்கு வந்ததும் ஹீப்ரூவில் எழுத ஆரம்பித்தார். அவரது புத்தகங்கள் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்படும். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை Friedrich Torberg ஜெர்மனில் மொழிபெயர்ப்பார். அந்த மொழியில் தானே எழுதியிருந்தால் எப்படியிருக்குமோ அதே மாதிரி தோர்பெர்க் மொழிபெயர்த்துள்ளார் என்று கிஷோன் அழுத்தம்திருத்தமாகக் கூறுவார். ஒரு மொழிபெயர்ப்புக்கு இதைவிட பெரிய பாராட்டு இருக்கவே முடியாது என்பது இன்னொரு மொழிபெயர்ப்பாளனான எனக்கு தெரியும். தோர்பெர்க் மரணத்துக்கு பிறகு கிஷோனே தனது புத்தகங்களின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பை செய்தார்.


உண்மை கூறப்போனால் நான் கிஷோனின் ஹீப்ரூ மூலத்தையோ, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையோ படித்ததில்லை. நான் படித்ததெல்லாம் Friedrich Torberg ஜெர்மனில் மொழிபெயர்த்ததுதான். ஆகவே கிஷோன் கூறியதைத் தவிர நேரில் என்னால் அதை வெரிஃபை செய்து கொள்ளாத நிலை.

ஆனால் Harry Potter நாவல்கள் ஏழையும் ஆங்கில மூலத்தில் பல முறை படித்தவன், இன்னும் படிப்பவன். அவற்றின் இரண்டாம் மற்றும் நான்காம் புத்தகங்களின் ஜெர்மானிய வெர்ஷன்களையும் விலைக்கு வாங்கி வைத்திருப்பவன். மற்ற புத்தகங்கள் இல்லையென்பதற்கு ஒரே காரணம் அவை விலைக்கு வாங்கக் கிடைக்கவில்லை என்பதே. ஜெர்மானிய நூலகத்திலும் கிடைக்கவில்லை.

ஆனால் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் அல்லியான்ஸ் பிரான்சேஸ் நூலகத்தில் கிடைக்கின்றன. முதல் மூன்று புத்தகங்களை ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அதே நூலகத்தில் படித்திருக்கிறேன். வேறு காரணங்களால் அந்த மெம்பர்ஷிப்பில் பிரேக் ஏற்பட்டது. இப்போதுதான் மறுபடியும் உறுப்பினன் ஆனேன். நான்காம் மற்றும் ஐந்தாம் ஹாரி பாட்டர் புத்தகங்களை கொண்டு வந்துள்ளேன்.

அடடா என்ன அருமையான மொழிபெயர்ப்பு! ஜெர்மனிலும் சரி பிரெஞ்சிலும் சரி அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவற்றுள் போகும் முன்னால் நான் படித்த ஏழாவது புத்தகம் பற்றி நான் இட்ட பதிவிலிருந்து சில வரிகள்:

கடந்த காலத்துக்கு செல்வது என்பது பலருக்கு பிடிக்கும். எனக்கும்தான். அதே சமயம் அது முடியாது என்பதும் தெரியும். அப்படியே கற்பனை செய்து போனாலும் தற்கால சிந்தனைகள் அறிவுகள் ஆகியவை அவற்றை முழுமையாக அனுபவிக்க விடாது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.

நான் அப்பதிவில் குறிப்பிட்டபடி அந்தக் காலம் போல இப்போதெல்லாம் அதிகம் புத்தகம் படிக்க பொறுமையில்லை. அப்போதெல்லாம் ஒரு சராசரி புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற வேகத்தில் படிப்பேன். தமிழாக இருந்தால் ஒரு நிமிடத்துக்கு இரு பக்கங்கள். ஆனால் இப்போது, சில பக்கங்கள் படித்த உடனேயே ஆர்வம் குன்றி விடுகிறது. வேறு வேலையில் மனம் செல்கிறது. நூலகத்திலிருந்து கொண்டு வரும் சில புத்தகங்கள் படிக்கப்படாமலேயே திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன.

பழைய வேகத்தில் புத்தகங்கள் படிப்பது ரொம்ப குறைந்து விட்டது. 2003, 2005 மற்றும் 2007-ல் மூன்று புத்தகங்களை அவ்வாறு முடிக்க முடிந்தது. அவை முறையே ஹாரி பாட்டர் புத்தகத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள். நேற்றைக்கு (21.07.2007) புத்தகம் வாங்கி வந்ததும் நிறைய வேலைகள். இருப்பினும் நேரம் திருடி படித்தேன். இன்று கணினியை திறந்து வைத்திருந்தாலும் வேலை எல்லாவற்றையும் ஒத்திப் போட்டு விட்டு முப்பது வருடங்களுக்கு முந்தைய ராகவனாக மாறினேன். அந்த அளவுக்கு அந்தக் காலம் திரும்ப வந்தது.

ஹாரி பாட்டரின் கடைசி புத்தகம் என்பதால் இது பற்றிய எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே இருந்தன. கதையின் ஓட்டத்தை ஊகித்து பலர் பல கதைகள் விட்டார்கள். அவ்வாறு நான் படித்ததில் ஒன்று கூட உண்மையில்லை. இந்தப் புத்தகம் என்னைப் பொருத்தவரை முழுக்கவும் புதிதாகவே இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. ரௌலிங் பின்னி பெடல் எடுத்துள்ளார். இரண்டு நாட்கள் முன்னால் கதையின் அச்சிட்ட பக்கங்களை சில நாதாறிகள் இணையத்தில் வெளியிட்டு இழிந்த காரியம் செய்தனர். என்னிடம் அதை கூறிய எனது நண்பர் சுட்டி வேண்டுமா எனக் கேட்டார். வேண்டவே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

ரௌலிங் ஏற்கனவே சொன்னது போல பல மரணங்கள் நிகழ்கின்றன. யார் யார் என்று நான் கூறப் போவதில்லை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் வேடிக்கை விளையாட்டு ஒன்றும் இல்லை என்பது இப்புத்தகத்தின் அடிப்படை நாதம். அதை இந்த மரணங்கள் உறுதி செய்கின்றன. வெற்றியோ தோல்வியோ, கடமையைச் செய்யவும் என்று கூறிய கீதாசார்யனின் அறிவுரையைக் கடைபிடிக்கிறான், பகவத் கீதையின் பெயரைக் கூட கேட்டிருக்க முடியாத ஹாரி பாட்டர். அவன் தோழர்கள் ரானும், ஹெர்மியானும் அவனுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். கதையின் பிற்பகுதியில் டம்பிள்டோரேயின் சேனை வேறு வந்து சேர்ந்து கொள்கிறது. மந்திரச் சொற்கள் வழக்கம் போல லத்தீன மொழியில் இருப்பது கம்பீரமாக உள்ளது. டாபி, க்ரீச்சர் போன்ற எல்ஃபுகள் அமர்க்களம் செய்கின்றன. ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள் ரொம்பவும் சீரியசான விஷயங்களை கூறுகின்றன. இதற்கு மேல் கதையை கூற மாட்டேன். போன தடவை ராபணா என்று போட்டு உடைத்ததைப் போல் இம்முறை சேய்ய மாட்டேன்.

எதேச்சையாக ஆரம்பித்த ஹாரி பாட்டர் கதை இப்படி பல கோடிக்கணக்கான வாசகர்களை புரட்டிப் போட்டு விட்டது. மிக அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் இவையும் அடங்கும்.


இப்போது மொழிபெயர்ப்புகளுக்கு போவோம். மொழிபெயர்ப்புகளில் பெயர்ச் சொற்களை மாற்றலாகாது என்பது எங்களுக்கு கற்பிக்கப்பட்ட அடிப்படை விதியாகும். அதாவது தமிழில் கண்ணாயிரம் என்றிருப்பதை ஆங்கிலத்தில் thosand eyes என்று மாற்றலாகாது. ஆனால் ஹாரி பாட்டர் மொழிபெயர்ப்புகளில் அது அடிக்கடி மீறப்படுகிறது. ஜெர்மனில் கூட அவ்வளவுக்கு இல்லை ஆனால் பிரெஞ்சில்? இது பற்றி மேல் விவரங்கள் அறிய இங்கே செல்லவும்.

Hogwarts பிரெஞ்ச் வெர்ஷனில் Poudlard என்றாகிறது. Snape-n பெயர் பிரெஞ்சில் Rogue என்றாகிறது. இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.

Hogwarts என்பது ஒரு பூவின் பெயர் என ரௌலிங்கே கூறுகிறார். அதே இணையப் பக்கத்தில் Draco என்றால் டிராகன் என்றும் வருகிறது. Malfoy என்றால் bad faith என்று பொருள். ஆகவே அந்த பாத்திரத்துக்கு டிராகோ மால்ஃப்வா என்பது பொருத்தமே. அதே லாஜிக்கை வைத்துத்தான் மற்ற பாத்திரங்களின் பெயர்களும் வருகின்றன.

இப்போது பிரெஞ்சில் நான்காம் புத்தகத்தை முடிக்கும் தருவாயில் உள்ளேன். உடனே ஐந்தாவது புத்தகம், பிறகு நூலகத்துக்கு சென்று ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்களைக் கொண்டு வர வேண்டியதுதான்.

ஆக ஹாரி பாட்டரின் ஏழு புத்தகங்களையும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் படித்து முடித்திருக்கும் நிலை வரும்.

மூல ஆங்கில மொழியில் உள்ள மேஜிக் அப்படியே ஃபிரெஞ்சிலும் ஜெர்மனிலும் வருவது மொழிபெயர்ப்பின் உச்சம் எனக் கூறலாம்.

இதில் என்ன வேடிக்கை என்றால், ஆங்கில மூலத்தில் ஒரு புத்தகம் வெளியானதும்தான் அது மொழிபெயர்ப்புகளுக்காக சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களிடம் தரப்படும். அந்தந்த மொழிபெயர்ப்புகளின் வெளியிடும் தேதிகளும் முதலிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடும்.

ஏழாம் புத்தகம் வந்ததும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் proz.com-ல் நான் அதை பற்றி விவாதிக்க ஒரு தனிப்பட்ட மன்றம் துவக்கினேன். ஏனெனில் அதில் முழுக்கதையும் விவாதிக்கப்படும். ஆகவே அதை இன்னும் படிக்காதவர்களுக்கு தொல்லை ஏற்படலாம். ஆகவேதான் தனி மன்றம். அதன் மட்டுறுத்தாளன் அடியேன். (அதன் சுட்டி இங்கு தருவது பிரயோசனப்படாது, ஏனெனில் அதை எல்லோராலும் அடைய முடியாது).

அதில் ஹாரி பாட்டர் ஃபிரெஞ்சு ஜெர்மன் மொழிகளைத் தவிர்த்து மீதி மொழிகளில் எந்தத் தரத்தில் மொழி பெயர்க்கப்பட்டது என கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு விடையாக ஒரு உக்ரேனிய பெண்மணி கூறியதாவது.

முதலில் டோண்டு ராகவன்
I am speechless, even thinking about the trouble you took to take printouts. I am sure that cost would be more than the book cost.

OK. No use in crying over spilled milk.

Tell me one thing. How do you find the Ukranian and Russian translations of Harry Potter? Personally I like the German and French versions too.

I would take this opportunity to ask other members of this forum to say a few words about the translations in their native languages.

Kirill Semenov-உக்ரேனிய மொழிபெயர்ப்பாளரின் பதில்:
I'm native Russian, but unfortunately the Russian translations are bad. It's quite a long story, but the idea is that the Russian publishing house who owes the copyright always tried to print out every new book as soon as possible. It was awkward: the books were translated by several people, and the editor was not even checking the consistency of characters' names or spells or geographical places throughout a book. It was a chaos, and HP fans voiced their protests against the official translations, up to demanding from the British publisher to break the contract with that publishing house from Moscow. Also, several not official Russian translations were created by the fans (probably still available at the Web).

The Ukrainian translations are great, luckily. They are published by a very good publishing house here, famous for their high quality children literature. So I prefer the Ukrainian translation, it's very colourful, a pleasure to read.

பாவம், மேலே சொன்ன உக்ரேனிய பெண்மணி இணையத்தில் ஒரு பிராடு ஆங்கில காப்பியை படித்து விட்டு மன்றத்துக்கு வந்திருக்கிறார். ஆகவே அவருக்கு உண்மை தெரிந்ததும் அளவு கடந்த ஏமாற்றம். அதில் அவர் எழுப்பிய ஒரு ஆட்சேபணையும் அதற்கான எனது எதிர்வினையும்.

Sorry to spoil anyone's fun, but being an addicted fan of the HP books, I'm quite dissapointed by the last volume.

Finished reading it this weekend.

Too much repetitions. I don't know about English natives, but for a Russian ear those constant "sweet floral scent", "squeezing her/his hand", "sniffled" and so on sound just boring.

The plot is well-expected, no real suprises, but I thought everything will be more subtle and Prof. Snape will turn to be a good guy at the end of it.

The final chapter is pathetic, in fact. Kids, etc., that sounds too boring and trivial at the end of these huge book (which might be half as large, in fact) and at the end of the saga.

Now I have a hard time to think about what to do with my son, who is 11 this November, because the book is certainly not for his age, with all this snogging, sexual experience and so on taking a good half of it. I know the characters have grown adult, but what on earth should I tell to my 11-year-old kid who is desperate to know any news about Harry? That Harry was f***ng with Ginny? Mind you,:)

எனது பதில்:
You will be surprised to know what 11 year old kids know

Recently in the year 1957 I was 11 year old myself and I vividly remember what we used to talk among ourselves and the colorful languages employed by us, of course in Tamil; but about snogging, we understood.

Evil is as old as the world and naturally there is something very much repetitive about it. In fact each evil person or each good person combatting the evil are just repeating what their respective predecessors did.

It is in the fitness of things that the HP books became more adult in content. After all writing in any other way and making the children to constantly remain so as in similar series such as William series of Richmal Crompton or in the The Big Five series of Enyd Blighton (?) would have spelled an end to the super super best seller status the HP books now have.

In hindsight, Snape turns out to be the bravest of all and Harry rightly names his second son after him along with Dumbledore.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/25/2010

கன்னித்தாய் - ஒரு மொழிபெயர்ப்பு தவறு

உலகெங்கிலுமுள்ள கிறித்துவ சகோதரர்கள் இன்றைய தினத்தை குழந்தை ஏசுவின் பிறந்த நாளாக கொண்டாடுகின்றனர். அவர்கள் எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

செசில் பி டிமில்லியின் “அரசர்களுக்கு அரசன்”, “பத்துக் கட்டளைகள்” ஆகிய படங்களை நான் சிறுவயதிலேயே பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டவன். அதிலும் பத்துக் கட்டளை படத்துக்கு என் தந்தையின் ஆன்லைன் மொழிபெயர்ப்பு வேறு அப்படத்தை நான் ரசிக்க உதவி செய்தது பற்றி ஏற்கனவேயே எழுதியுள்ளேன். அரசர்களுக்கு அரசன் மௌனப் படம். சப் டைட்டில்கள்தான் வரும். அவற்றையும் என் தந்தைதான் எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

மேலும், எனது அபிமான எழுத்தாளர் திருமதி டய்லர் கால்ட்வெல் அவர்களது பல நாவல்கள் மூலம் எனக்கு கிறித்துவ மதத்தின் மீது மிகுந்த அபிமானமே வந்தது.

ஆனால் பெரியவனானதும் வேறு பல புத்தகங்களைப் படித்ததில் எனது நம்பிக்கையில் சில மாறுதல்கள் வந்தன. அவர்றில் ஒன்று ஏசுவின் கன்னிப் பிறப்பு. அது பற்றி சில வரிகள் இங்கு.

மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ் காமில் ஒரு சிறு சலசலப்பு. ஒரு மன்ற இடுகை தவறான மொழிபெயர்ப்பினால் வந்த அனர்த்தங்கள் பற்றியது. அதற்கான உதாரணங்கள் கேட்கப்பட்டிருந்தன. என் பங்குக்கு பைபிள் பழைய ஏற்பாட்டில் வந்த பிழையான மொழிபெயர்ப்பு பற்றி எழுதினேன். விஷயம் இதுதான்.

ஒரு முறை இசாக் அசிமோவ் ஸ்பெயினில் ஒரு மியூசியத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு இருண்டகாலம் என ஐரோப்பிய சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் அச்சிடப்பட்ட பைபிள் இருந்தது. அதை அச்சிட்டு வெளியிட்டவர்கள் அந்த நாட்டில் உள்ள யூதர்கள். இசாக் அசிமோவ் அந்த பைபிளை புரட்டிப் பார்த்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் யூதர்களின் ரட்சகர் பற்றி ஒரு முன்னறிவிப்பு இருந்தது. “ஒரு அல்மாவுக்கு ரட்சகர் பிறப்பார்” என ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் ஹீப்ரூ மொழியாகும். இந்த வாக்கியத்தில் எல்லாமே ஸ்பானிய மொழியில் இருக்க அல்மா என்ற ஹீப்ரூ சொல் மட்டும் அப்படியே கையாளப்பட்டிருந்தது. அல்மா என்றால் கல்யாண பிராயத்தை ஆடைந்த இளம் பெண் என்று பொருள். ஆனால் சாதாரணமாக எல்லா மொழிகளீலும் இந்த இடத்தில் கன்னி என்றுதான் மொழிபெயர்ப்பார்கள். ஒரு நிமிடம் திகைத்த அசிமோவுக்கு திடீரென தெளிவு பிறந்தது. யாரோ ஒரு மொழிபெயர்ப்பாளர் கடந்த காலத்தில் இந்த ஹீப்ரூ சொல்லை கன்னி என மொழிபெயர்த்துள்ளார். பிறகு அதிலிருந்து மொழி பெயர்த்த பலர் அப்படியே கன்னி என குறிப்பிட்ட, கன்னி மேரி வழிப்பாடு எல்லாம் வந்து விட்டது. அதை ஒத்துக் கொள்ளாதவர்கள் கொலை முதலிய கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட கன்னி(கழியாத பெண்ணை பெடூலா என ஹீப்ரூவில் குறிப்பிடுவார்கள்).

இந்த விஷயத்தை நான் ப்ரோஸின் அந்த இடுகையில் குறிப்பிட்டதுமே சீறிக் கொண்டு ஆக்ரோஷமான தாக்குதல்கள் என்னை நோக்கி வந்தன. “வெளியாட்கள் எல்லாம் எங்கள் கிறித்துவ வேதம் பற்றி பேசுவதா, அதுவும் இந்த இசாக் அசிமோவுக்கு என்ன தகுதி உண்டு என்றெல்லாம் பொருள்ப்ட வாசகங்கள் இருந்தன. நான் மட்டும் சும்மா இருந்தேனா, என்ன? பழைய ஏற்பாடு என்பது யூதர்களது புத்தகம். சொல்லப்போனால் கிறித்துவர்கள்தான் வெளி மனிதர்கள். இசாக் அசிமோவ் யூதர். மேலும் இரு பைபிள்களையும் ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அவருக்கு தகுதி இல்லையென்றால் வேறு யாருக்கு தகுதி உண்டு என்றெல்லாம் நான் எழுத, ஒரே கலாட்டாதான் போங்கள். நேற்று அந்த இடுகையில் போய் பார்த்தால் எனது ஒரிஜினல் பதிவு, அதன் பதில்கள் ஆகியவை நீக்கப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக மேலும் பலர் எழுதி, எல்லாவற்றையும் எடுத்தது சரிதான், ஆனால் நரசிம்மனுடைய (டோண்டு ராகவன்) ஒரிஜினல் பதிவு கண்டிப்பாகவே ஏற்புடையதே என வாதாடினர். பிறகு என்ன நடந்தது? தலைவாசலின் அதிபர் ஹென்றியே வந்து அந்த திரியத்துக்கே ஒரு பெரிய பூட்டு போட்டுவிட்டு சென்றார். அவர் எழுதுகிறார்:
“ViktoriaG wrote this earlier in the thread, but even at that point, 16 posts (from 9 different posters) had already been removed for having strayed from the topic of translation. By now, a total of 28 posts from 13 posters has been removed. At least five moderators have been involved. A number of members, too, have tried to redirect discussion to the original topic. Thanks for your efforts, folks.

At this point, in the interest of keeping things orderly (so that our moderators can do their own work, too!), I am closing the thread”.

உண்மை என்னவென்றால் மொழிபெயர்ப்புடன் மிகவும் சம்பந்தம் உடையதுதான் நான் இட்ட இடுகை. இருப்பினும் பல மன அழுத்தங்களை அது உருவாக்கியதால் அதையும் அதன் எதிர்வினைகளையும் நீக்க வேண்டியிருந்தது என்பதே நிஜம். கடைசியில் சமாளிக்க முடியாமல், போகவே மொத்த டாபிக்கையே பூட்டு போட்டு விட்டனர்.

அதெல்ல்லாம் இருக்கட்டும், இப்பதிவுக்கே வருவோம். மித்ரா என்னும் பெயருடைய இன்னொரு தேவகுமாரனின் கதையின் காப்பிதான் நம்ம ஏசுவின் கதை என இங்கே கூறுகிறார்கள்.

Anyhow, merry Christmas!

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/23/2010

டோண்டு பதில்கள் 23.12.2010

hayyram
கேள்வி-1. சார் கையோடு ஒரு கேள்வியும் போட்டு விடுகிறேன். ஐந்து வருடம் கருணாநிதியின் ஆட்சியும் தமிழர்களின் வனவாசமும் முடியும் தருவாயில் கருணாநிதியின் சாதனைகளை (அல்லது ஊழலை) பட்டியலிட முடியுமா? (உங்கள் கை வலித்தால் என்னை திட்டாதீர்கள்)
பதில்: மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டு டெர்ம் முழுவதும் ஆட்சியை செய்த தில், உலக ரிக்கார்ட் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பங்குதாரராக இருந்து நல்லபடி அதை செய்தது, ராசா தலித்து என்ற கார்டை வைத்து அழுவாச்சி காரணங்களைத் தந்தது, அதே சமயம் தன்க்கு ஒத்து வராத தலித்து அதிகாரியான உமாசங்கரை ஆட்டிப்படைத்த சாதனை ஆகியவையே அவரது இந்த ஆட்சிக்கான சாதனைகள். ஊழல்? ஊழல்களே சாதனை என்னும் போது இது என்ன சிறுபிள்ளைத்தனமாக கேள்வி?

கேள்வி-2. ஒவ்வொரு முறை துக்ளக் படிக்கும் போதும் சோவிற்கு வயசாகிறதே என்று கவலை தோன்றி விடுகிறது. சோவிற்கு பிறகு துக்ளக் என்னாகும்? உங்கள்கணிப்பு ப்ளீஸ்?
பதில்: யாரும் யாரையும் நம்பி இல்லை. நடப்பது நடந்தே தீரும். அது பற்றி இப்போது என்ன கவலை? சோவே அவ்வாறு கவலைப்படுவதாகத் தெரியவில்லையே.

நக்கீரன் பாண்டியன்
கேள்வி-3. தயாநிதிமாறன்-மதுரையார் நட்புக் கூட்டணி நிரந்தரமா அல்லது?
பதில்: நிலையற்ற சமநிலை என்பார்கள். பூ என ஊதினால் கீழே விழுந்துவிடும் இக்கூட்டணி.

சஸ்பென்சின் உச்சக்கட்டம் என்ன என ஒரு கேள்வி உண்டு. அதன் பதில் இப்படிப் போகும். இரு சர்தார்ஜிகள் ஒன்றாக சேர்ந்து நிர்வாணமாக குளித்துக் கொண்டிருக்கிறார்கள். சோப் கீழே விழுந்து விட்டது. யார் அதைக் குனிந்து எடுப்பார்கள் என்பதுதான் சஸ்பென்சின் உச்சக் கட்டம். இது ஏன் எனக்கு இப்போது நினைவுக்கு வர வேண்டும்?

கேள்வி-4. மலைவாசஸ்தல ஜாகை மாற்றங்கள்-தமிழக அரசியல் பெரும் புள்ளிகள்- உங்கள் விமர்சனம்?
பதில்: பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான். நாம் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்ப்பதை விட?

கேள்வி-5. யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி காமராஜ் நேர்மைக்கு வாய்ப்பில்லைதானே?
பதில்: மோதி இருந்து ஆட்சி செய்யும் இப்போதைய குஜராத்தை மறந்து பேசலாமா? மனதிருந்தால் எப்போது வேண்டுமானாலும் மோதி ஆட்சிக்கு இணையாண ஆட்சி நமது தமிழகத்திலும் வரவியலும். என்ன, மனதுதான் இருக்காது.

ஆனாலும் நமது சக தமிழ்ப்பதிவர்கள் குஜராத் கலவரத்தை கையில் எடுத்துக் கொண்டு கூச்சல் போடுவார்கள். அதே பதிவர்கள் மோதி குஜராத் கலவரத்தைத் தூண்டியதாக ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் இடி போன்ற மௌனம் பாவிப்பார்கள். பொய் சாட்சி புகழ் டீஸ்டாதான் அவர்களுக்கு பைபிள் போல.

கேள்வி-6. போகிற போக்கை(centarl da increased 18 % for 2010) பார்த்தால், அரசு ஊழியர் கா(வீ)ட்டில் மட்டும் இனி பண மழையாமே?
பதில்: என்ன, பஞ்சப்படி 18% உயர்ந்ததா? மத்திய அரசு பென்ஷனரான டோண்டுவுக்கு களிப்பளிக்கும் விஷயமாயிற்றே. ஆ, காந்தி இறந்து விட்டாரா?

கேள்வி-7. மென்பொருள் வர்த்தகம் மீண்டும் சூடு பிடித்துவிட்டதே-இது தொடருமா?
பதில்: பயனர்களுக்கு புதுப்புது மென் பொருட்கள் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கும் வரை இது ஏன் தொடராது? நடுவில் அவற்றை வாங்கும் சக்தி தற்காலிகமாக குறைந்ததே அப்போது ஏற்பட்ட சுணக்கத்துக்குக் காரணம்.

ஆனால் ஒன்று பழைய உற்சாக நிலை, அதனால் மென்பொருள் நிபுணர்களுக்கு அதிகமாகிக் கொண்டே போகும் பண வரவெல்லாம் இருக்குமா என்பதுதான் சந்தேகம். ஏனெனில் மென்பொருட்கள் மேல் இருந்த பிரமிப்பு இப்போது அவ்வளவாக இல்லை. மக்கள் அவற்றுக்கு பழகிக் கொண்டார்கள் என்பதும் ஒரு காரணமே.


virutcham
கேள்வி-8. அலைபேசி விலையை வெகுவாக குறைத்து ராசா மக்களுக்கு பெரிய சேவை செய்து இருப்பதாகவும் அவரை வேண்டும் என்றே குற்றவாளியாக்குவதாகவும் இங்கே சில பதிவுலக பிரபலங்கள் எழுதினார்களே. இப்போ அவர்கள் கருத்தில் மாற்றம் இருக்குமா?
பதில்: ராசா மட்டும் தனியாக ஊழல் செய்திருக்க முடியாது. ஆகவே தான் மாட்டினால் மற்றவர்களும் மாட்டுவார்கள் என்ற எண்ணத்துடன் அவர் இருக்கிறார் என நான் நினைக்கிறேன்.

மேலும், அவ்வளவு பேரும் மாற மாட்டார்கள். பூத் ஏஜெண்டுகள் எல்லாம் மாறுவார்கள் என நினைக்கக் கூடாதுதானே.


பார்வையாளன்
கேள்வி-9. சாருவின் புத்தக விழா குறித்து உங்கள் கருத்து... இளைஞர்கள் பெருமளவில் திரண்டது தமிழ் இலக்கியத்துக்கு நல்லதுதானே?
பதில்: சமோசா நன்றாக இருந்தது என சிலர் கூறியுள்ளார்கள். நான் போகவில்லை, ஏனெனில் சாருவின் எழுத்துக்கள் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை.

கேள்வி-10. தமிழின் வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கு- உங்கள் பார்வை என்ன?
பதில்: திராவிட இயக்கம் எனப் பார்த்தால் அதன் தந்தையாக மற்றும் பகுத்தறிவுப் பகலவன் என குருட்டுத்தனமாக போற்றப்படும் கன்னட ஈ.வே.ராமசாமி நாயக்கர் விருப்பப்படி விட்டிருந்தால் தமிழ் என்றைக்கோ கோவிந்தாவாகியிருக்கும். நல்ல வேளையாக அண்ணாத்துரை போன்றவர்கள் இருந்தார்களோ, தமிழ் பிழைத்ததோ.

ஆனால் பொருள் ஒன்றுமே இல்லாமல் மணிக்கணக்கான நேரம் பேசி கைத்தட்டுகள் வாங்கவே தமிழ் அதிகம் பயன்பட்டது. கீழே இந்திரன் சந்திரன் படத்தின் கடைசி சீனைப் பாருங்களேன். கமல் சம்பந்தமில்லாது சில தமிழ் வாக்கியங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேச மக்களும் குருட்டுத் தனமாகக் கைதட்டுவார்கள், கமல் அவர்களை அதற்காகவே சாடுவார்.


கேள்வி-11 இணையத்தின் வருகை தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது- உங்கள் பார்வை..
பதில்: கண்டிப்பாக ஏற்படுத்தியுள்ளது. ஒத்துக் கொள்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் அறிந்த உதாரணத்துடனேயே இதை விளக்குவேன். அதாவது டோண்டு ராகவனது அனுபவம்.

சமீபத்தில் பிப்ரவரி 2002-லிருந்து கணினி வாங்கி இணையப்பக்கங்களை மேய ஆரம்பித்தேன். ஆனால் அக்டோபர் 2004 வரை தமிழ் பக்கங்கள் பக்கம் வந்ததே இல்லை. திடீரென 2004 நவம்பரில் வந்து வலைப்பூவும் துவக்கினேன். அதன் பிறகு எனது தமிழ் ஆளுமையில் ஏறுமுகமேதான். அதற்கெனவே காத்திருந்தது போல தமிழ் மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. எனது கணினியில் எனது எல்லா மொழிகளுக்கும் தனித்தனி ஃபோல்டர்கள் வைத்துள்ளேன். அவற்றில் மிகப்பெரியது தமிழ் மொழிக்கானதுதான். ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்ல ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து கூட தமிழுக்கு மாற்றும் வேலைகளும் அதிகமாக வருகின்றன. எனது அயல் நாட்டு வாடிக்கையாளர்கள் அனைவருமே எனது தமிழ் மொழிபெயர்ப்புக்காகத்தான் என்னுடன் தொடர்பு கொள்கின்றனர்.

மிகச் சாதாரண தொழில்காரனான எனது நிலையிலேயே இந்த மட்டில் அதிக உயர்வு என்றால் மற்றவருக்கும் அதே மாதிரித்தானே?

கேள்வி-13 பிராமணர் அல்லாத ரஜினி ,பிராமணர் போல நடந்து கொள்ள பார்ப்பது.. பிராமணர் இனத்தை சேர்ந்த கமல், பிராமணர் அல்லாதவர் போல் காட்டி கொள்வது- ஒப்பிடுக
பதில்: நண்பர் வஜ்ரா சொன்னது போல, “முதலில் பிராமணர் என்றால் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று நீங்களே கட்டமைத்துக்கொண்டுள்ள பிம்பத்தை உடையுங்கள். பின்னர் ரஜினி பிராமணர் போல் நடந்துகொள்கிறாரா இல்லை கமல் பிராமணர் போல் நடந்துகொள்கிறாரா என்று ஆராய்ச்சி செய்யுங்கள். சிவாஜிராவ் கெயிக்வாட் என்பது பிராமணப் பெயர்தான்”.

அப்படியில்லை, ரஜனி பிராமணர் இல்லை என்றும் சிலர் கூறுகிறர்கள். அது இருக்கட்டும், அவரது இரண்டாம் மகளது திருமணம் சம்பந்தமாகவா உங்கள் கேள்வி? அவர் பிராமணரோ இல்லையோ, அவரது மனைவி ஐயங்கார், இரண்டாம் மாப்பிள்ளை ஐயர். ஆகவே பார்ப்பன முறைப்படித்தான் திருமணம் நடந்தது. ஏன் என்ன பிரச்சினை இதில்?

பிராமணர்களை சாடும் சோகால்ட் பகுத்தறிவு வாதிகள், பார்ப்பனர்கள் காற்றே ஆகாது என வார்த்தைக்கு வார்த்தை அவர்களைத் திட்டி “செந்தமிழில்” எழுதுபவர்கள். ஆகியோரில் பலர் தமது வீட்டுப் பெரியவர்களது சொல்லுக்குக் கட்டுப்படுவதாகச் சொல்லி, அக்கினி வளர்த்து, பார்ப்பன புரோகிதர்களை வைத்து சப்தபதி மந்திரங்கள் முழங்க எல்லோரும் பாராட்டும் முறையில் மணம் செய்து கொள்வது நடந்திருக்கிறது.

கருணாநிதியின் மனைவியே சத்திய சாய்பாபா காலில் விழுந்து ஆசி பெற்றதை கலைஞரே அருகில் இருந்து பார்த்தவர்தானே.

மற்றப்படி கமல் நடந்து கொள்வது ஆஷாடபூதித்தனமானது என்பதும் உண்மைதான். தானும் மற்றவர்களுடன் சேர்ந்து பார்ப்பனரைத் திட்டிவிட்டால் சாதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாசிலார்களாக தம்மையே பாவித்துக் கொள்ளும் எடுபட்ட சில ஜாட்டான் பயல்கள் தன்னை வாழ்த்துவார்கள் என மனப்பால் குடிக்கும் சில தொடைநடுங்கி பார்ப்பனர்களில் அவரும் ஒருவர்.

ஆனாலும் என்னைப் பொருத்த மட்டில் அவரது அபார நடிப்புத் திறமை, திரையுலகத்துக்கான அவரது டெடிகேஷன் ஆகியவையே முக்கியமானவை. அவரது தனிப்பட்ட கருத்துக்கு அவருக்கு முழு அதிகாரம் உண்டு. நான் யார் அதை பழிக்க?

கேள்வி-14 தொடர்புடைய கேள்வி... இப்படி கமல் போலியாக நடிப்பதால், பிராமணர் அல்லாதாரின் நம்பிக்கையை பெற்று விட முடியாது .. அதே சமயம் பிராமணரின் எரிச்சலையும் சம்பாதித்து கொள்கிறார்.. இந்த தேவையில்லாத போக்கு ஏன்? (அல்லது அவர் என்ன செய்தாலும் பிராமணர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பார்களா)?
பதில்: என்னைப் பொருத்தவரை கமலை பார்ப்பனர் என்பதற்காகவே திட்டுபவர்கள் ஜாட்டான்கள் என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். அத்தருணங்களில் கமலுக்கு எனது ஆதரவு உண்டு. அந்த ஜாட்டான்களையும் ஜாட்டான் என அழைத்து சாடுவேன்.

என்ன இருந்தாலும் கமல் எனக்கு நெருங்கிய உறவு முறை. எப்படி என்கிறீகளா? கமலின் அக்காவின் கணவரின் தங்கையின் கணவரின் அத்தை பிள்ளைதான் இந்த டோண்டு ராகவன்.

இது கமலுக்குத் தெரியுமா எனக் கேட்பவர்களுக்கு எனது பதில் அவர் அண்ணா சாருஹாசனிடமே இதை நான் கூறியாகி விட்டது. அவருக்கு என் மாமா பிள்ளையை நன்கு தெரிந்திருக்கிறது. இப்போது டோண்டு ராகவனையும் தெரிந்து கொண்டார். ஆளை விடுங்கள் சாமி.


ஞாஞளஙலாழன்
கேள்வி-15. பிராமணர்களுக்கு மட்டும் ஏன் தமிழ் நாட்டில் சமஸ்கிருதப் பாசம் இருக்கிறது?
(இதற்கு நான் சான்றுகள் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன்).

பதில்: வடமொழியுடன் சிறிது பரிச்சயம் ஏற்பட்டாலும் அதன் வீச்சு புரியும். பார்ப்பனர்கள் விஷயத்தில் அவர்களது பரிச்சயம் டீஃபால்டாகவே அதிகம். தனிப்பட்டவர் படிக்காவிட்டாலும் கூட அவர்கள் வீடுகளில் நடக்கும் திருமணங்கள், சிரார்த்தம் ஆகிய சடங்குகள் போது மந்திரங்களை கேட்கவாவது செய்வார்கள். ஆகவேதான் நீங்கள் கூறுவது போல நடக்கிறது.

கேள்வி-16. ஆங்கிலத்தில் 'ஞா', ழ, ள போன்ற உச்சரிப்புகள் இல்லை..இவ்வாறாக ஒரு மொழியில் இருக்கும் உச்சரிப்புகள் மற்ற மொழிகளில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்னர் ஏன் தமிழில் சமஸ்கிருதம் சார்ந்த எழுத்துகளைப் புகுத்தப் பிராமணர்கள் முற்படுகிறார்கள் (அல்லது ஆதரவு தெரிவிக்கிறார்கள்)?
பதில்: நான் ஏற்கனவேயே இன்னொரு தருணத்தில் கூறியது போல வடமொழி சுலோகங்களை கூறும்போது உச்சரிப்பு ரொம்பவுமே முக்கியம். அதே சமயம் பலருக்கு தேவநாகரி லிபியில் படிக்க வராது. அம்மாதிரி சமயங்களில் கிரந்த எழுத்துக்கள் துணைக்கு வருகின்றன.

கேள்வி-17. கிருஷ்ணா, ஷிவா, ஷக்தி, பிரம்மா, சரஸ்வதி, லக்ஷ்மி போன்ற தெய்வங்கள் தமிழர்களின் தெய்வங்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை (பெயரே சான்று). இந்த தெய்வங்கள் வட நாட்டிலிருந்து தமிழகத்திற்கு பல்வேறு மன்னர்களால் புகுத்தப் பட்டிருக்கலாம். அவற்றின் வழிபாட்டு முறையும் தமிழில் இல்லை. தமிழர்களிடத்தில் சிறு தெய்வ வழிபாட்டுமுறை இருக்கிறது. அது ஏன் பிராமணர்களிடத்தில் இல்லை?
பதில்: இல்லை என எவ்வாறு கூறுகிறீர்கள்? ஏதேனும் கருத்துக் கணிப்பு எடுத்தீர்களா, அல்லது மற்றவர் எடுத்ததை படித்தீர்களா? தமிழ் தனி வடமொழி தனி என்பது மிகச் சமீபத்தில்தான் வந்தது. கோவில்களில் வழிப்பாட்டு முறை பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. காலம் செல்லும் போக்கில் வல்லவை நிற்கும், அல்லவை மறையும்.

மற்றப்படி எனது அன்னை வழி பாட்டனார் திரு. ரங்காச்சாரி அவர்கள் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் உபாசகர். எங்கள் உறவினர்கள் பலர் சிறு தெய்வங்களை பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருகின்றனர்.

நண்பர் எல்.கே. கூறுகிறார்: “மிக மிகத் தவறான தகவல். எனக்குத் தெரிந்து பல பிராமண குடும்பங்களின் குல தெய்வங்கள் எல்லை தெய்வங்களே. எங்கள் குடும்பதிற்க்கே கண்ணூர்பட்டியில் (ராசிபுரம்-நாமக்கல்) பெரியாண்டவர்தான் குலதெய்வம். சேலம் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் உள்ள பிராமணர்கள் அங்கு வருகின்றனர்””.

என்ன சரிதானே?


pt
கீழ்கண்ட செய்திகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?

கேள்வி 17. அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
பதில்: நான் ஜெயா டிவியில் 19.12.2010-ல் வெளியான சோவின் பேட்டியை பார்த்தேன். மேலே உள்ள கேள்விக்கு சோ கேலியாகப் புன்னகை செய்து கூறியதாவது.

இக்குற்றச்சாட்டு வந்தது நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதிலிருந்து. கருணாநிதி நீரா ராடியாவிடம் இக்கேள்வியை வைத்திருக்க வேண்டும், அல்லது ரத்தன் டாட்டாவிடம்.

இக்குற்றச்சாட்டை தயாநிதி மாறனே மறுக்கவில்லை. ஏண்டா பாவி மறுக்கவில்லை என்று அவரையாவது கேட்டிருக்க வேண்டும். அது ஒன்றுக்கும் அவருக்கு வக்கு இல்லை. சோ ராமசாமியிடம் வருகிறார்.

டோண்டு ராகவன் இங்கு சேர்ப்பது. தினகரன் கொலை விவகாரத்தில் அழகிரியின் பங்கு பற்றி கேள்வி கேட்ட ஜெயா டிவி நிருபரிடம் “நீதாண்டா கொலைகாரன்” என பண்புடன் சீறியவர்தானே இந்தப் பெருந்தகை? அவரிடம் போய் நாகரிகமான நடவடிக்கையை எல்லாம் எதிர்ப்பார்ப்பது ஓவர் இல்லையா?

கேள்வி-18. பொங்கல் பண்டிகைக்குள் கட்சியைத் தொடங்கும் விஜய், தனது புதிய கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்து அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக, சட்டசபைத் தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
பதில்: நான் ஏற்கனவே சொன்னது போல விஜய் முதலில் தன்னை ப்ரூவ் செய்ய வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்வது நல்ல பயிற்சியாக அமையும் அவ்வளவே.

கேள்வி-19. படங்களில் பாலுறவை திணிக்கிறார்கள். பாலுறவு பக்தி மாதிரி, நெஞ்சுக்குள் வைத்திருக்க வேண்டும் வெளியே காட்டக் கூடாது. தேவையில்லாமல் பாலுறவு திணிக்கப்படுகிறது.- என்றார் வைரமுத்து.
பதில்: இவ்வளவு உருகுபவர் அம்மாதிரி காட்சிகளுக்கு பாடல் வரிகள் தாரமலிருக்க இவர் தயாராமா? அதெல்லாம் செய்தால் புவ்வாவுக்கு என்ன செய்வாராம்? வெறும் ஆஷாடபூதி.

கேள்வி-20. கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.
பதில்: அவர் கவலை அவருக்கு. மகன் மந்திரி பதவியில் இல்லாமல் இருக்கும் இந்த நாட்களில் அவரது கம்பேனி தள்ளாடுகிறதே. அப்போது நீங்களா உதவப் போகிறீர்கள்?

கேள்வி-21. மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது என்றும், மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வில் முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
பதில்: சீமான் ஒன்றும் புதிதாகக் கூறவில்லையே? ஆனால் இதையெல்லாம் அவர் எப்போதிலிருந்து கூற ஆரம்பித்தார் என்பதையும் பார்க்க வேண்டும்.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/22/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.12.2010

நண்பர்களுக்கு நன்றி
இந்தப் பதிவை போடும்போது அது அந்த குறிப்பிட்ட வகைக்கான கடைசி பதிவு என்பது எனக்கு அப்போது தெரியாது.

எனது ஹிட் கவுண்டர் 8 லட்சம் எண்ணிக்கையை தாண்டியதற்காக போட்டது அப்பதிவு. இன்று என்ன தோன்றியதோ, பேசாமல் ஹிட் கவுண்டரையே தூக்கி விட்டேன் (அப்போதிலிருந்து 27000-க்கும் மேலாக ஹிட்கள் வந்திருந்தன). அந்த ஸ்பீடில் வரும் பிப்ரவரி மாதம் போல 9 லட்சம் தாண்டியிருக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் திடீரென இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தோன்ற, கவுண்டரையே ஒரு க்ஷணநேர தீர்மானத்தில் தூக்கி விட்டேன். இப்போது விடுதலையானது போன்ற உணர்வு.

பொய்யை நிலைநிறுத்துவது மிகக்கடினம்
நான் மத்தியப் பொதுப் பணித்துறையில் வேலை செய்த போது பால் பாக்கியசாமி என்னும் ஒப்பந்தக்காரர் எனக்கு மிகப் பரிச்சயமானார். அவர் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்து அவரும் அவர் தாயும் தந்தை வீட்டாரால் விரட்டப்பட்டு அன்னையின் அன்னை வீட்டில் வளர்ந்தவர். அப்போது தான் பட்ட அவமானங்கள், தான் அவற்றை சமாளித்த விதம் எல்லாவற்றையும் என்னிடம் விவரிப்பார்.

அவர் கதை விடுவதாக எனக்கு முதலில் சந்தேகம். ஆகவே பல குறுக்கு கேள்விகள் பல தருணங்களில் வெவ்வேறு கோணங்களிலிருந்து போட்டேன். எல்லாவற்றுக்கும் பொருத்தமான பதில்களே வந்தன. உண்மையைக் கூறியிருந்தால் ஒழிய இது சாத்தியமே இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அப்போதுதான் உண்மை கூறுவதன் பலனை புரிந்து கொண்டேன். பொய் சொல்ல ஆரம்பித்தால் எந்த பொய்யை எங்கு யாரிடம் கூறினோம் என்றெல்லாம் நினைவில் வைக்க வேண்டும் சள்ளை பிடித்த வேலை. கால விரயம் வேறு. உண்மை கூறிவிட்டால் நாம் நம் வேலையை பார்த்துக் கொண்டே போகலாம்.

நான் பொறியியல் கல்லூரியில் கற்க முடியாத பல பாடங்களை அவரிடமிருந்து கற்றேன். மறக்க முடியாத மனிதர் அவர்.

உண்மை என்பது ஒன்றுதான். ஆனால் பொய்கள் அனேகம். அதுவும் சமயோசிதப் பொய்கள் சள்ளை பிடித்தவை. “ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களைக் கூறுவது” தவிர்க்க முடியாததாகி விடும்.

ராசா, கருணாநிதி, நீரா ராடியா ஆகிய பலே பேர்வழிகள் இனிமேல் கூறும் பொய்களை வகைப்படுத்தினாலே போதும்.

குற்றமும் எல்லா நேரத்திலும் கண்டுபிடிக்கப்படாமல் தப்பிக்காது
இதற்கு கராலரிதான் குற்றங்கள் விஷயத்திலும். மத்தியப் பொதுப்பணித்துறையில் அளவுகளை பதிக்கும் புத்தகம் (measurement book - m.book) என்பதை ஒவ்வொரு பொறியாளரும் பாவித்தாக வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் செய்யும் வேலைகளை அளவெடுப்பதை உடனுக்குடன் பதிக்க வேண்டும். மிஞ்சிப் போனால் அன்றைய நாள் முடியும் முன்னரே பதித்து விடுவது நல்லது.

என் நண்பன் கணேசன் சோம்பேறி. அவன் எல்லாவற்றையும் தனித்தாளில் குறித்துக் கொண்டு பிறகு சாவகாசமாக முந்தைய தேதியிட்டு நிரப்புவான். அவன் அவ்வாறு நிரப்பியதை ஒரு நாள் என்னிடம் எதேச்சையாகக் காட்ட, நான் என்னிடம் மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமையின் துணையால், அப்புத்தகத்தில் குறிப்பிட்ட முந்தைய தேதி ஞாயிற்றுக் கிழமையாயிற்றே என எடுத்துக் கூற அவன் மூன்றாம் பேஸ்த் அடித்தது போல ஆனான். அதை வைத்து பில்லும் அனுப்பி அது டிவிஷன் ஆஃபீசில் பாஸ் ஆகி ஒப்பந்தக்காரர் பணமும் பெற்றாயிற்று. ஆகவே தவற்றைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் இல்லைதானே.

யாரும் பார்க்காதவரை க்ஷேமம் என்றுதான் அவனைத் தேற்றினேன். பல நாட்களுக்கு அவனுக்கு உதறல்தான். என்ன செய்வது. நானே அவ்வாறு ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்லி மூன்றாண்டுகளுக்கு சிக்கலில் மாட்டிக் கொண்டவன்தானே. அக்கதை இதோ.

என் அத்தையின் கணவர் திடீரென இறக்க அத்தையும் அவரது ஐந்து குழந்தைகளும் சென்னையில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் குடிபுகுந்தனர். என் வயதுடைய ஸ்ரீதர் மற்றும் என் அக்காவின் வயதுக்கு ஈடான அவன் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஸ்ரீதர் என்னைவிட 4 மாதம் சிறியவன். ஆனால் ஒரு வகுப்பு அதிகமாக படித்தான் (நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்குத் தாவியிருக்கிறான்). அவனை என் பள்ளியில்தான் தெலுங்கு மீடியம் கிளாசில் சேர்த்தார்கள். (அவன் தந்தை இறந்த சமயம் அவர் ஆந்திராவில் பத்தாண்டுகளாக போஸ்டிங்கில் இருந்தார்).

எல்லோரிடமும் அவன் எனது சொந்த தம்பி என சும்மா கூறிவைத்தேன். அது பிறகு பல சங்கடங்களை வரவழைத்தது. முதலில் என் எட்டாம் வகுப்பு உபாத்தியாயர் ஜயராம ஐயங்காரிடம் மாட்டிக் கொண்டேன். அவர் ஸ்ரீதரிடம் “உனக்கும் ராகவனுக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம்” என யதார்த்தமாகக் கேட்டு வைக்க, அந்த உண்மை விளம்பி 4 மாதம் என்றான். வாத்தியார் தான் குடித்துக் கொண்டிருந்த காப்பியை துப்பி அவருக்கு புரைக்கேறிவிட்டது. பிறகு நான் ஒருவாறு சமாளித்து “இல்லை, சார், ஒரு வயது 4 மாதங்கள்” எனக் கூறி சமாளித்தேன்.

ஸ்ரீதரின் வகுப்பாசிரியர் எவெரெஸ்ட் அவர்கள் (அவரது உண்மைப் பெயர் தெரியாது, விசு அவர்கள் மன்னிப்பார் என நினைக்கிறேன். பிறகுதான் அவர் பெயர் ஸ்ரீனிவாசாசார்லு என்பதை அறிந்து கொண்டேன்) இன்னும் டீப்பாக சென்றார். “ஆக உன் தந்தை ஆர். நரசிம்மன் இவனுக்கு தந்தை அல்லவா”? எனக்கேட்டார். நான் ஆமாம் எனச் சொல்லி வைக்க, பிறகு அவன் என்ன் அவரை தனது கார்டியனாக ஸ்கூல் அப்ப்ளிகேஷன் ஃபார்மில் குறிப்பிட்டுள்ளான் என ஒரு கூக்ளியை வீசினார். அசருவேனா நான், என் அத்தைக்கு பிள்ளைக் குழந்தை இல்லாததால் அவன் குழந்தையாக இருக்கும்போதே ஸ்வீகாரம் கொடுத்து விட்டார்கள் என ஒரு சிக்ஸர் அடித்தேன். நல்ல வேளையாக மேலே கேள்விகள் வரவில்லை. நான் பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டும்வரை மனதில் லேசாக உதறல்தான்.

இதை விடுங்கள். அலுவலகத்துக்கு லேட்டாக வரும்போது காரணத்தை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் ஒரு பெண்மணி தனக்கு ப்ரெக்னன்சி டெஸ்ட் என எழுத, அவள் என்ன எழுதினாள் என்பதையும் கவன்க்காது பின்னால் வந்த 3 ஊழியர்கள் அதையே டிட்டோ என குறித்த கூத்தும் நடந்திருக்கிறது.

ஆனால் நான் இங்கு கூற விரும்புவது ஒரு சீரியசான கிரைம் விஷயம். இரண்டே கால் கிலோ தங்கத்துக்காக கொலை செய்த நேமி சந்த் என்ற குற்றவாளி மாட்டியதும் மேலே சொன்னது போலத்தான். செல்பேசி Tower lapping signal என்ற தொழில் நுட்பம் பற்றி அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் முக்கியமாக மாட்டியிருந்திருக்கிறான்.

ஆனால் இச்செய்தியை நான் இங்கே கொணர்வதற்கான முக்கியக் காரணமே வேறு. இறந்துபோன சுரேஷ்குமாரின் குடும்பம் அனாதையாக நின்றது. சுரேஷ்குமாரிடம் நகைகளை விற்பதற்காக கொடுத்து வைத்திருந்த சுனிலிடம் போலீசார் அந்த நகைகளை திருப்பிக் கொடுத்து விட்டு ஒரு வேண்டுகோள் வைத்தனர். அதாவது மனிதாபிமான அடிப்படையில் இறந்தவர் குடும்பத்துக்கு ஏதேனும் உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் சுரேஷ் குமாரின் வாரிசுகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அளித்தார். அது மட்டுமல்ல, இறந்தவரின் மகன்கள் படிக்கும் தனியார் பள்ளியின் நிர்வாகி அந்த மாணவர்கள் பிளஸ் டூ வரைக்கும் தனது பள்ளீயிலேயே இலவசமாக படிக்க உதவி செய்துள்ளார். மனித மனத்தின் அதல பாதாள வீழ்ச்சியை காட்டிய இதே குற்றம், அதே மனித மனத்தின் எவரெஸ்ட் உச்சியையும் காட்டியுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/21/2010

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - 2

இது பற்றிய முந்தைய இடுகையில் பதிவர் அருள் ஒரு பின்னூட்டத்தில் கேட்டார்:

அதைத் தேட முனைந்த போது சட்டென கிடைக்கவில்லை. ஆனால் அதன் சாரம் என்னவென்றால், அதே உச்சரிப்பு அதிர்வுகள் தமிழிலும் கொணர ஏன் முயற்சிக்கலாகாது என்பதுதான் என நினைக்கிறேன். அருள் அவர்கள்தான் இதை கன்ஃபர்ம் செய்ய வேண்டும். தமிழிலும் அவ்வாறு அதிர்வுகள் உண்டுதான்.

இது சம்பந்தமாக தமிழில் உதாரணங்கள் தேட நான் முனைந்தபோது பம்பாய் சாரதா அவர்கள் பாடிய கந்தசஷ்டி கவசம் யூட்யூப்பில் கிடைத்தது. முதலில் அதை இங்கே போடுகிறேன். தமிழ்க்கடவுளாம் முருகன் பெருமையைப் பாட சொற்களால் இயலுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும், பாடலைக் கேளுங்களேன்.



அருணகிரிநாதரின் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற வரிகளைக் கொண்ட திருப்புகழையே எடுத்துக் கொள்ளுங்களேன். முதலில் அதைக் கேட்போம்.



இதே பாடல் வேறொரு ராகத்தில், ஸ்ரீனிவாஸ் மற்றும் நித்யஸ்ரீயின் குரல்களில்:



மேலே சொன்ன இரு அமரகாவியங்களிலும் உள்ள சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டியது அவசியம் அல்லவா? அதிலும் கந்தசஷ்டி சொற்களுக்கு நான் முன்னால் வடமொழி சுலோகங்களில் சொன்ன அதிர்வுகள் உண்டு. அவற்றைத் தவறாக உச்சரித்தால் விரும்பும் பலன்கள் கிட்டாது, விபரீதங்களுக்கும் வழிவகுக்கலாம் என்பதையே நான் கூறப் புகுந்தேன்.

இல்லாவிட்டால், கண்ணெதிரே தோன்றினாள் என்னும் படத்தில் “ஈஸ்வரா” எனத் துவங்கும் பாடலில் “பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே” என்று இருந்த வரியை பாடகர் உதித் நாராயண் “பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே” என்று பாடிய விபரீதம்தான் நடக்கும், பரவாயில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/20/2010

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம்

நான் சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு தேர்வில் மகாத்மா காந்தியைக் கொன்றது யார் என்ற ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டிய கேள்வி வந்தது. அதன் விடையை பாடத்தில் படித்திருந்தாலும் உப்பிலிக்கு காந்தியைக் கொன்றவரின் பெயர் அச்சமயம் பார்த்து மறந்து தொலைத்தது.

ஆனால் வேறு விஷயம் அரைகுறையாக நினைவுக்கு வரவே, மகாத்மா காந்தியைக் கொன்றது ஒரு வயதான நபர் என எழுதித் தொலைத்தான். மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வினியோகிக்கும் சமயம் ஆசிரியர் ரங்காராவ் அன்றைக்கென்று மழமழவென சவரம் செய்து வந்திருந்தார். ஆகவே அவர் கோபத்துடனேயே இருப்பார் என்பது மாணவர்களது சரியான அனுமானம்.

அப்படிப்பட்டவர் “உப்பிலி எழுந்திரு” என கர்ஜிக்க, உப்பிலிக்கு சர்வநாடியும் ஒடுங்கிற்று. “மகாத்மா காந்தியைக் கொன்றது யார்” என அவனிடம் முழு வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் கேள்வி கேட்க, தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என தெளிந்த உப்பிலி, அசட்டுத் துணிச்சலுடன் “கோட்ஸே சார்” என்று கூற, “பின்னே ஏன் காந்தியைக் கொன்றவர் ஒரு வயதானவ்ர் என எழுதினாய்” என ரங்காராவ் கர்ஜித்தார்.

உப்பிலி பவ்யமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு, “அப்படித்தான் புத்தகத்தில் போட்டிருக்கு” என்று கூற, எல்லா மாணவர்களுக்கும் ஒரே திகைப்பு. உப்பிலி மேலும் பவ்யமாகக் கூறலானான். “சார் புத்தகத்தில் போட்டிருக்கு சார், ‘மகாத்மா காந்தியை 1948, ஜனவரி 30-ஆம் தேதி மாலை கோட்ஸே என்கிற கயவன் சுட்டுக் கொன்றான்’ என்று” கூறினான்.

அடுத்த நிமிடம் ரங்காராவ் சார் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தார். “அடே அசடு கயவன்னாக்க கிழவன்னு அர்த்தம் இல்லை, சரி உட்கார்” எனக்கூறிவிட்டு, கயவன் என்றால் கெட்டவன், தீயவன் என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இப்போது எனது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். கிழவனை சரியாக உச்சரிக்காமல் ஒரு பெரிய கோஷ்டியே கெயவன் என்றும், கியவன் என்றும், கிளவன் என்றும் கூறிவரும் நிலையில் அப்பாவி உப்பிலி மட்டும் கயவனும் கிழவனே என முடிவுக்கு வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இதுவாவது பரவாயில்லை, ஹாஸ்யமாக போயிற்று. இருப்பினும் தவறான உச்சரிப்பால் உயிருக்கே கேடு வந்ததும் நடந்திருக்கிறது.

எங்கே பிராமணன் சீரியல் பகுதி-2, ஆறாம் எபிசோடில் சோ அவர்கள் இதை சுவையாக விளக்குகிறார். இது பற்றி நான் இட்ட பதிவிலிருந்து சில வரிகள்:

“உமாவுக்கு பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் பண்ணிப் பார்த்தார்களா என வேம்பு சாஸ்திரிகள் கேட்க, அவ்வாறு செய்வது சட்ட விரோதம் என நீலகண்டனும் அவர் சம்பந்தியும் கூறுகின்றனர். ஆணோ பெண்ணோ நல்லபடியாக பிறந்தால் போதும் என பர்வதம் கூறுகிறாள்.

நுணலும் தன் வாயால் கெடும் என்னும் கணக்காக வேம்பு சாஸ்திரிகள் எல்லாம் தெரிந்த சிரோன்மணி அசோக் உமாவுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை கூறலாமே எனக் கிண்டலாகக் கேட்டு, சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார். அவர் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்திருந்தால், அவற்றின் அதிர்வுகளை உமாவின் கருவிலுள்ள குழந்தை பெற்றிருக்கும், அதையும் இவர் உணர்ந்திருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என வேம்பு சாஸ்திரிகளே கூறிடலாமே தான் எதற்கு என அசோக் வினயமாக பதிலளிக்கிறான். வேம்பு சாஸ்திரி திடுக்கிடுகிறார். தான் சொன்ன மந்திரங்களில் என்ன குறைவு என அவர் துணுக்குற்று கேட்க, எல்லோர் எதிரிலும் வேண்டாம், அவரிடம் தான் தனியாக கூறுவதாக அவன் தயங்க வேம்பு சாஸ்திரிகள் அவன் இப்போதே கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அவரது மந்திரங்களில் ஸ்வரப்பிழை இருந்ததாக அசோக் கூறுகிறான்.

“ஸ்வரப்பிழையா, இது என்ன கச்சேரியா” என சோவின் நண்பர் வியக்க, கச்சேரியாக அமையக்கூடாது என்பதுதான் சரி என சோ விளக்குகிறார். வேதத்தின் ஸ்வரத்தை மாற்றல், அவசரப்படல், உணர்ச்சியின்றி அதை உச்சரித்தல், சொல் மாற்றிக் கூறுதல், அனாவசியமாக தலையெல்லாம் ஆட்டி சேஷ்டைகள் செய்தல் முதலியவை அடங்கிய ஆறு குறைகளை சோ அவர்கள் பட்டியலிடுகிறார். இந்திரனைக் கொல்லும் ஆற்றல் பெற்ற பிள்ளை பெறும் வரம் வேண்டி தவம் இருந்த ஸ்வஷ்டா என்னும் தேவத்தச்சன், தனது கோரிக்கையை ஸ்வரப்பிழையுடன் கூறியதில் இந்திரனால் கொல்லப்படும் மகன் என உருமாறி, அவனுக்கு பிறக்கும் மகனை இந்திரன் கையால் சாவதாக வரும் கதையையும் சோ கூறுகிறார். தினசரி வாழ்க்கையிலும் இம்மாதிரி தொனி மாறிய வரவேற்புரைகள் விபரீத பொருளை தருவதையும் உதாரணத்துடன் விளக்குகிறார்”.


அந்த எபிசோடின் வீடியோவுக்கான சுட்டி இதோ. (இந்த எபிசோடே இரண்டு வீடியோக்களில் உள்ளன. முதல் வீடியோ சுமார் 11 நிமிடங்கள், இரண்டாவது வீடியோ சுமார் 10 நிமிடங்கள். அதன் லொகேஷன் திரைக்கு கீழ் பகுதியில் வருகிறது. இரண்டையும் பார்த்தல் நலம்).

அதே போல “தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளாய்” என்னும் பாடலை பல பாடகர்கள் தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் என்றெல்லாம் சிதைத்துப் பாடியதில் ஒரு குழந்தை கிருஷ்ணர் ஒரு நாயர் என்று முடிவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான்.

அம்மாதிரியான பிழைகள் வரலாகாது என்பதற்காகவே வடமொழி சுலோகங்களை தமிழில் எழுத முயலும்போது சரியான உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துக்களை பாவிக்கிறேன் என ஒருவர் கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

விருப்பம் உள்ளவர்கள் பாவியுங்கள், மற்றவர்கள் விட்டுத் தொலையுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/16/2010

டோண்டு பதில்கள் 16.12.2010

நக்கீரன் பாண்டியன்
கேள்வி-1. நடிகர் விஜய்யின் திடீர் அம்மா(ஜெ) பாசம் யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்?
பதில்: நடிகர் விஜய் இன்னும் தன்னை ப்ரூவ் செய்யவில்லை. தேர்தலில் நிற்கட்டும், பிறகு தெரிந்து கொள்வோம் அவர் வல்லவரா அல்லது வெத்துவேட்டா என்று.

கேள்வி-2. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் அடுத்த வால் வைமேக்ஸ் விவகாரம் எனும் வரும் தகவல்களை பார்த்தால்?
பதில்: அது பற்றி இங்கு விவரமாக பதிவு இட்டிருக்கிறார்கள்.

ராசா கையை வச்சா எதுவும் உருப்பட்டதில்லைங்கறது நிரூபணமாகி விடும் போலிருக்கே. மேற்கு வங்காளத்தை சேர்ந்த மார்ச்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரசாந்த் சாட்டர்ஜிக்கு பாராட்டுகள். மேலே உள்ள பதிவில் உள்ள கிண்டலாக மஞ்சத்துண்டு என்ன சொல்லக்கூடும் என கற்பனை செய்து இடப்பட்ட ஒரு பின்னூட்டத்திலிருந்து சில வரிகள்:

"தலித்துகளை அவமானப் படுத்த ஆரியர்களின் இன்னும் ஒரு முயற்சி தான். வங்காளத்திலே பானர்ஜி, சாட்டர்ஜி,முகர்ஜி, காங்குலி என்பன பார்ப்பனீய டைட்டில்கள் என வங்காளத்தில் சாதிகள் என்ற நூலிலே பல ஆண்டுகளுக்கு முன் படித்த நினைவு. இந்த வைமாக்ஸ் பற்றி கிளப்பி இருப்பதும் ஒரு சாட்டர்ஜி தான். மிகத் திறமையாகப் பணியாற்றி நல்ல பெயர் எடுத்த திராவிட தலித்துக்கு இழுப்பெயர் தேடித் தர இன்னும் ஒரு பூணூலும் வந்து விட்டார். ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட ஆரியர் செயல்களிலே" .

இதையே நிஜமாவாகவே மஞ்சத் துண்டு சொன்னாலும் வியப்படைவதற்கில்லை.

கேள்வி-3. காலம் கடந்து நடத்தப் படும் சோதனைகள் கண் துடைப்பு அல்ல என சொல்வதை பார்த்தால்?
பதில்: அப்பா குதிருக்குள் இல்லைன்னு சொல்லற மாதிரியில்லை? ஏம்பா தெரியாமத்தான் கேக்கறேன்? இவ்வளவு மாசமா அமர்க்களம் நடந்துண்டு இருக்கு. மந்திரி பதவியும் பணால் ஆயிடுச்சு. இன்னும் ஆவணங்களை தன் வீட்டில் வைத்திருக்க ராசா என்ன கைநாட்டு கபோதியா?

கேட்பவன் கேனையாக இருந்தா கேழ்வரகில் நெய் வடியுதும்பாங்க, கருணாநிதி நியாயஸ்தர்னும் சொல்லுவாங்க.

கேள்வி-4. இலவச டீவி வேண்டாம் என்று சொன்ன புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் திரு விஜயகுமார் பற்றி?
பதில்: நீங்கள் இதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு “கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி, ஃபேக்ஸ் செய்துள்ளது பாராட்டுக்குரியது.

ஆனால் அந்த டிவி உண்மையான அறுதிப் பெறுநர் முத்துவேல் கருணாநிதிக்கு போகாது நடுவிலேயே யாராவது உடன்பிறப்பு அபேஸ் செய்தாலும் அதை தாயுள்ளத்துடன் ரசிப்பார் நமது மாண்புமிகு முதல்வர் என நினைக்கிறேன்.

இல்லை, ஈ.வே.ராமசாமி நாயக்கரின் உண்மையான சீடராக இருந்தால், அந்த டிவிக்கான பணத்தை தன்னிடம் தவறாமல் தருமாறும் ஆணையிடலாம்.

கேள்வி-5. சுப்பிரமணிய சுவாமி தரும் அதிர்ச்சி தகவல்கள் பற்றி?
பதில்: அவை தரும் அதிர்ச்சி தரும் தகவல்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை சுப்பிரமணியன் சுவாமியை கோமாளியாகவே பார்த்தவர்கள் அதிர்ச்சியும் மன உளைச்சலை அடைவதுதான் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் தமாஷ்.


LK
கேள்வி-6. சார், போலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன் அம்பு படத்திற்கு எழுதி இருக்கும் பாடலில் கண்ணனை கிண்டல் அடிக்கும் வகையில் வரிகள் உள்ளன. அதை குறித்தும் , கமலின் போலி நாத்திக வாதத்தை குறித்தும் உங்கள் கருத்து?
பதில்: கமல் என்பவர் ஒரு மாபெரும் கலைஞர். நல்ல திரைப்படங்கள் தருவதற்காக பாடுபடுபவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியில் இருக்கிறார். அதைவிட வேறு என்ன வேண்டும்?

கண்ணன் என்பவனை நம்மவர்கள் எல்லாமாகவும் பார்த்துள்ளோம். அவன் நம் மனத்துக்கு பிடித்த கடவுள். அவனைத் திட்டுபவர்களும்அ கூட் அவனைப் புறக்கணிக்க முடியாது. அவனது ராசலீலை பற்றி கேவலமாக பேசிய வக்கிரம் பிடித்த கிறித்துவ பாதிரியார்கள் அவன் தங்களைப் போலவே ஓரினச் சேர்க்கையிலும் மன்னனாக இருந்திருந்தால் வாழ்த்தியிருப்பவர்களாக இருந்திருக்கும்.

அவர்களது ஜட்ஜ்மெண்டுகளை ஒரு பரிசீலனையும் இல்லாது ஏற்கும் நமது அறிவு ஜீவிகளது போக்கு அவர்களுக்குத்தான் பிரச்சினை. கமலும் அவர்களில் சேர்த்தி. விட்டுத் தள்ளுங்கள்.

கேள்வி-7. வீட்டு வசதி வாரிய ஊழல் பற்றி?
பதில்: இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் தரும், தோண்டத் தோண்ட புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகள். வேறென்ன கூறுவது? இந்த டிஸ்க்ரீஷனரி கோட்டா என்பதை ஒழித்துக் கட்ட வேண்டும். அலாட்மெண்டுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தகுதியற்றவருக்கு கொடுத்தால் அவ்வாறு செய்தவருக்கு அரபு நாடுகள்/சீனாவில் உள்ளது போல கல்லால் அடித்து/தலையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை தர வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த ரூல்ஸெல்லாம் எனக்குத் தெரியாது என்று திருவாய் மலர்ந்தருளும் வீரப்பாண்டி ஆறுமுகம் போன்ற அடாவடி மந்திரிகளை சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.

எதற்கும் உண்மைத் தமிழன் இட்ட இந்தியாவின் ஊழல்களின் தந்தை கருணாநிதி என்னும் பதிவைப் பார்த்து விடவும்.


மிளகாய் பொடி
கேள்வி-8. யுவராஜ் சிங், ஜஸ்வந்த் சிங் போன்றோர் சீக்கியர் தானே? பின் ஏன் அவர்கள் டர்பன் அணிவதில்லை?
பதில்: எல்லா சிங்குகளுமே சீக்கியர்கள் அல்ல. எல்லா சீக்கியர்களுமே டர்பன், சிகை அணிவதில்லை. அவ்வாறு அணியாமல் இருப்பவர்களை மௌனா எனக் குறிப்பிடுவார்கள். நீங்கள் சொல்லும் யுவராஜ் சிங், ஜஸ்வந்த் சிங் போன்றோர் ஆகியோர் எப்படி என்பது எனக்குத் தெரியாது.

கேள்வி-9. டர்பன் என்பதற்கு சரியான தமிழ்ப் பதம் என்ன? தலைபாகை சரியாக இருக்காது என்பது என் எண்ணம்?
பதில்: தலைப்பாக்கட்டுன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன்.

கேள்வி-10. அம்மாவும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி இவர்கள் பக்கம் தானே?
பதில்: ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகமாகும்.

கேள்வி-11. நீங்கள் எந்த கம்பெனி செல்போன் கனெக்சென் வைத்து இருக்கிறீர்கள்?
பதில்: இது என்ன நாட்டுக்கு ரொம்பத் தேவையான விஷயமா என்ன? இருந்தாலும் கேட்டதால் சொல்கிறேன், நான் பாவிப்பது வோடஃபோன். வைத்திருப்பது மிகவும் அடிப்படையான நோக்கியா ஹாண்ட்செட். கேமரா, ப்ளூபெர்ரி போன்றவை சுத்தமாக லேது அந்த ஹாண்ட்செட்டில்.


ஏதேனும் கேள்விகள் இருந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/14/2010

ராஜலச்சுமியை டீச்சர் கூப்பய்யா

மாம்பலத்தில் இருந்த அப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் அந்த 8 வயது சுட்டிப்பெண்ணுக்கு அன்று காலையிலிருந்தே ஏதோ இனம் புரியாத அச்சம். காரணம் அவளது 6 வயது தம்பி. அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் அவன் முக லட்சணம் முந்தைய நாள் மாலையிலிருந்தே சரியாக இல்லாமல் திருட்டு முழி விழித்துக் கொண்டிருந்தான். அக்காவுடன் ஒன்றாக செல்வதையே அவமானம் என சாதாரணமாகக் கருதி, அவளிடமிருந்து பல அடிகள் தள்ளியே வீட்டுக்கு செல்பவன், அன்று என்னவோ சமத்தாக அவள் அருகிலேயே நடந்தான்.

என்னவோ சரியில்லையே, எலி ஏன் அம்மணமா போறதுன்னு அப்பெண் அப்போதே யோசித்தாள். ஆனால் கல்லுளி மங்கனான அவள் தம்பி அவள் கேள்வி எதற்கும் பதில் சொல்லவில்லை. தி.நகர் ராமனாதன் சாலை முக்கில் இருக்கும் பள்ளியில் இருந்து வெளியே வந்து அதே சாரியிலேயே நடந்து டாக்டர் அன்னங்கராச்சாரியார் நர்சிங் ஹோமுக்கு எதிரில் தெருவை கடந்து ராமசாமி தெரு வழியாக தண்டபாணி தெருவில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழமையான முறைக்கு மாறாக, உஸ்மான் சாலை வந்ததுமே அப்படியே அத்தெருவை குறுக்கே கடந்து சரோஜினி சாலை வழியாக செல்லலாம் என்று மட்டும் கூறிவிட்டு, 12-ஆம் நம்பர் பஸ் வருவதைக் கூட கவனிக்காது குடுகுடுவென ஓடி உஸ்மான் சாலையைக் கடந்து சரோஜினி சாலையில் நுழைந்து சென்றான். இவளும் வேறு வழியின்றி அவன் பின்னாலேயே செல்ல வேண்டியதாயிற்று.

அன்று மாலையும் இரவிலும் அவள் அருகே வந்து அவனிடம் என்ன விஷயம் எனக் கேட்க முயன்றதையும் தவிர்த்து சமத்தாக அம்மாவின் அருகில் போய் நின்று கொண்டான் (அவன் அம்மா செல்லம்). அவள் மட்டும் என்ன அப்பா செல்லம்தானே, இருந்தாலும் அப்பாவிடம் தம்பியை போட்டுக் கொடுக்க விடாமல் அவளது தம்பிப் பாசம் தடுத்தது.

இதையெல்லாம் எண்ணியவாறே வகுப்பில் அமர்ந்திருந்த அச்சுட்டிப் பெண் கிளாசுக்கு வெளியே இருந்த விளையாட்டு மைதானத்தின் மறுபுறத்தில் இருந்த தன் தம்பியின் வகுப்பை ஒரு பார்வையிட்டாள். இரண்டாம் வகுப்பு டீச்சர் நெட்டைக் கமலா வகுப்பிலிருந்து வெளிவருவதை சுவாரசியமின்றி பார்த்த அப்பெண் அடுத்து நடந்ததைப் பார்த்து நடுங்கிப் போனாள். இரண்டாம் வகுப்பு மாணவியான மூக்குஒழுகி மைதிலி (ஆறு வயது), டீச்சரால் அனுப்பப்பட்டு மைதானத்தை கடந்து நான்காம் வகுப்பை நோக்கி வரலானாள்.

இரண்டே எட்டுகளில் நான்காம் வகுப்புக்கு வந்த அப்பெண், நான்காம் வகுப்பு டீச்சர் சாவித்திரியைப் பார்த்து, “ராஜலச்சுமியை டீச்சர் கூப்பய்யா” என மழலை மறையாத குரலில் கத்தி விட்டு வேகமாக இரண்டாம் வகுப்புக்கு திரும்பினாள். “ராஜி, போய்ப் பாரம்மா, வழக்கம் போல உன் தம்பி வம்பை இழுத்து விட்டுண்டுட்டான் போல இருக்கு” என அனுதாபத்துடன் அச்சுட்டிப் பெண்ணிடம் கூற, அவளும் விதியை நொந்து கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு கிளாஸ் டீச்சராக இருந்த அதே நெட்டைக் கமலாவிடம் போய் நின்றாள்.

“ராஜி, நீயே பாரு. நீ எவ்வளவு சமத்து. இங்கே படிச்ச ஒவ்வொரு வகுப்பிலும் காண்டக்டுல முதல் பரிசு வாங்கியிருக்கே. உன் தம்பி எப்படி இவ்வளவு துஷ்டனானான்? அவன் என்ன பண்ணியிருக்கான் பாரு” எனக்கூறி டாக்டர் அன்னங்கராச்சாரியாரின் பேரன் டி. ஏ. ரங்கநாதனைக் காட்டினாள். சிவந்திருந்த அவன் முகம் கண்ணீரால் நிரம்பியிருந்தது. வலது கன்னத்தில் சந்திரப்பிரபை போன்ற வடிவத்தில் நகத்தால் கிள்ளிய அடையாளம். “நேத்து மத்தியானமே உன் தம்பி இதை பண்ணியிருக்கான். ரங்கநாதனும் உடனேயே அழுதுக் கொண்டே வீட்டுக்கு போய் விட்டான். இப்போத்தான் விஷயம் வெளியே வந்திருக்கு” என டீச்சர் கூறினாள்.

அப்பெண்ணின் தம்பியோ இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்னும் முகபாவத்துடன் நின்று கொண்டிருந்தான். அச்சுட்டிப் பெண்ணுக்கு இப்போதுதான் தன் தம்பி முந்தைய நாள் மாலை அன்னங்கராச்சாரியாரின் நர்சிங் ஹோம் அருகே செல்வதைத் தவிர்த்ததின் காரணம் புலப்பட்டது. என்ன செய்வது, தம்பி சார்பில் எல்லோரிடமும் அவள் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. என்னதான் படுத்தினாலும் நெட்டைக் கமலாவின் ஃபேவரைட் மாணவனானதால் அவள் தம்பி ஓரிரு ஸ்கேல் அடிகளுடன் தப்பித்தான் (டீச்சர் கையிலிருந்த ஸ்கேல் வேகமாக அவன் அருகில் வந்ததுமே அதன் ஃபோர்ஸ் குறைக்கப்படுவது அவனுக்கு மட்டும்தான் தெரியும்)

இதெல்லாம் நடந்து 58 ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் அந்தச் சுட்டிப் பெண் “இம்மாதிரியெல்லாம் என்னைப் படுத்தினாயேடா டோண்டு” எனப் பெண்களுக்கே உரித்தான ஞாபகசக்தியுடன் தன் தம்பியிடம் கூறுவது வழக்கமாகப் போயிற்று.

என்னை மன்னித்துவிடு அக்கா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/13/2010

சில அரதல் பழசான மொக்கைக் கதைகள்

நான் பல இடங்களில் பல தருணங்களில் படித்த கதைகளை வைத்து இங்கே மொக்கை போட ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது என்னவென்பதைக் கடைசியில் கூறுகிறேனே.

கதை-1: தவளை உருவில் வந்த ராஜகுமாரி
அந்த சோல்ஜருக்கு அன்று காலையிலிருந்தே ஒன்றும் சரியாக அமையவில்லை. யார் முகத்தில் விழித்தோம் என்று பார்த்தால், அடச்சே அவன் தன் முகத்தைத்தான் கண்ணாடியில் பார்த்து தொலைத்திருக்கிறான்.

நொந்து போன அவனுக்கு ஒரே ஆறுதல் ராணுவ முகாமில் தங்கியிருந்த அவனுக்கு அன்று விடுமுறை. சரி சினிமாவுக்குப் போகலாம் என வெளியில் வந்து முயற்சித்தான். அவன் அதிர்ஷ்டம் அன்றைக்கென்று பார்த்து விஜய் நடித்த வில்லு, குருவி, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களுமே ஹவுஸ்ஃபுல். பிறகுதான் அவனுக்கு அன்று காணும் பொங்கல் என்பது நினைவுக்கு வந்தது.

சரி கடற்கரைக்கு போய் அடையாரின் முகத்துவாரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம் என நினைத்தான். அவ்வாறே சென்று, புழுவை முள்ளில் பொருத்தி, தக்கையை நதியின் கரையிலிருந்து தண்ணீருக்குள் வீசினான். சில மணி நேரங்கள் கழிந்தன. ஒன்றும் சிக்கவில்லை. அடச்சே என முயற்சியை கைவிட நினைத்தபோது திடீரென தக்கை தண்ணீருக்குள் இழுக்கப்பட்டு மறைந்தது. விறுவிறென தூண்டில் கயிற்றை சுற்ற அவன் கையில் கடைசியில் ஒரு குண்டு மீன் கிடைத்தது என்றுதான் எழுத ஆசை. ஆனால் கிடைத்ததோ தவளை ஒன்று.

இது வேற எனச் சொல்லிக் கொண்டே அதை கையில் பிடித்து தரையில் வீசி அடித்துக் கொல்ல அவன் முயன்றான். அப்போது அத்தவளை, “மானிடனே நில், நான் ஒரு ராஜகுமாரி. என்னை ஒரு சூனியக்கார கிழவி சபித்து தவளையாக்கி விட்டாள்” என்றது. இது என்ன புதுக்கதை என வியந்த அவனிடம் அது மேலும் கூறியதாவது. தான் மிக மிக அழுது சூனியக்காரியிடம் தன்னை மீண்டும் அரச குமாரியாக்க வேண்டும் எனக் கேட்க, அவளோ அதை உடனே செய்ய முடியாது என்றும், ஓரிரு நூற்றண்டுகளுக்கு பிறகு, ஒரு போர் வீரன் கையில் ராஜகுமாரி மாட்டுவாள் என்றும், அவன் அவளை தன் இருப்பிடத்துக்கு அழைத்து சென்று, தன் கட்டிலில் தலையணை மேல் படுக்க வைத்து, இரு சொட்டு அடையாறு நதி நீரை விட்டால், இரவு 12 மணிக்கு தான் ராஜகுமாரியாக மாறமுடியும் எனக் கூறியதாகக் கூறினாள்.

அத்தவளை மேல் இரக்கம் வந்தது போர்வீரனுக்கு. ஆகவே ஒரு பாட்டிலில் அதை தண்ணீர் நிரப்பி, அதற்குள் அத்தவளையை போட்டு தன் பேரக்சுக்கு வந்தான். மற்ற சோல்ஜர்கள் கண்ணில் படாமல் நைட் விசில் அடிக்கும்வரை காப்பாற்றினான். எல்லோரும் விளக்கை அணைத்ததும், அவன் தவளை சொன்ன மாதிரி செய்தான்.

என்ன ஆச்சரியம், சரியாக இரவு 12 மணிக்கு அவனருகே ஒரு பேரழகி படுத்திருந்தாள்.

மேலே நடந்ததை அப்படியே அந்த போர் வீரன் பின்னால் கோர்ட் மார்ஷல்காரர்களிடம் சொல்ல, யாருமே அவனை நம்பவில்லை. அதான் நான் எற்கனவேயே சொன்னேனே, அந்த சோல்ஜருக்கு அன்று காலையிலிருந்தே ஒன்றும் சரியாக அமையவில்லைதான்.


கதை-2: ஒன்றுமே மாறவில்லை
தான் படித்து, தேர்வு பெற்று சென்ற அந்த மிலிட்டரி அகாடெமிக்கு அந்த படை தளபதி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விசிட்டுக்கு வந்திருந்தார். தனது பழைய அகாடெமியைப் பார்த்தது அவருக்குள் பல ஆட்டோகிராஃப் நினைப்புகளை தூண்டி விட்டது. “அதே அகாடெமி, மாறவேயில்லை” என்றார். பிறகு தான் படித்த வகுப்பறைக்கு சென்றார். அதே வகுப்பறை என இன்னொரு முறை ஃபீலிங்ஸ் ஆனார். அப்படியே தான் இருந்த ஹாஸ்டலுக்கு சென்றார். அதே ஹாஸ்டல் என்றார். காரிடாரில் நடந்தார் (அதே காரிடார்). அறை 208 அவர் அங்கு படித்தபோது தங்கியிருந்த அறை. அதே 208-ஆம் எண் அறை எனக் கூறியவாறு சட்டென கதவைத் திறந்து உள்ளே சென்றால், அங்கு இரு கட்டிலகள். இரண்டு மாணவர்கள் இவரைப் பார்த்து பேந்தப்பேந்த விழித்தனர். அதே கட்டில்கள், அதே மாணவர்கள் என்றவாறே அறைக்குள் பார்த்தால், அந்த ஆளுயர கப்போர்ட் கண்ணில் பட்டது. அதே கப்போர்ட் என விதந்தோதியவாறு அதைத் திறந்தால், உள்ளே அரைகுறை ஆடைகளுடன் ஒரு ஃபிகர் நின்று கொண்டிருந்தது. அதே ஃபிகர் என இவர் வியப்புடன் கூற, மாணவர்களில் ஒருவன், “சார் அது எனது சகோதரி” எனக்கூற, “அதே பொய்” எனக்கூறி இன்னமும் அதிகமாகவே ஆச்சரியப்பட்டார் அந்தப் படை அதிகாரி.

இப்போ மெனக்கெட்டு ஏன் இந்த பழைய மொக்கைகளைப் போடணும் எனச் சீறுகிறான் முரளி மனோகர்.

என்ன செய்வது, முரளி? மொக்கை போட்டு கொஞ்ச நாளாச்சில்லையா? அதனால்தான். லூஸ்ல விடு மாமு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

இப்பதிவை போட எனக்கு முன்னோடியாக இருந்த 34,900 பேருக்கு நன்றி (தலைப்பை மேற்கோள் குறிகளுக்கிடையில் இட்டு கூகளில் தேடுபெட்டியில் போட்டால் கிடைக்கும் ஹிட்ஸ் 34,900. அதனால்தான் சொன்னேன்). எல்லோருடைய பெயரையும் குறிப்பிட இயலாது. ஆகவே எனக்கு இதை மின்னஞ்சலாக அனுப்பிய எனது கணினி குரு முகுந்தனுக்கு நன்றி கூறிவிடுகிறேன். முதலில் பதிவு:

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

கருணாநிதியின் தனக்குத் தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80ல் கூறியிருப்பதைப் பார்க்கலாம்.


*1944ம் ஆண்டு எனக்கும்,பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால்,மனவமைதி குறையத் தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால்,வாழும் காலம் எப்படி போய் முடிவது?என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம்81,82ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கி.மீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு,துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை,இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93ம் பக்கங்களில்................
*பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும்,இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள் (அவ்வளவு அல்பமா ஈ.வே. ராமசாமி நாயக்கர் என கேட்பது முரளி மனோகர்). காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம்92,93ல்..............................
*பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2.முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3.கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4.முரசொலி செல்வம்,செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்ப்பட்டது)
5.மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6.ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7.அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8.எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10.மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11.உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12.உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13.பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14.கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15.தயாநிதி மாறன் வீடு
16.டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா,அமைந்தகரை
17.கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18.டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19.டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20.எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21.முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22.சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23.ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக32கிரவுண்ட் நிலம்
25.சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26.இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு,சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27.கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28.கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29.அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ,காபி தோட்டங்கள்
31.அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32.மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33.ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34.ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35.பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36.கேரளாவில் மாமன்,மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி,மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37.செல்வம் வீடு
38.முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39.கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர்,காட்டூர்,திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை,திண்டுக்கல்,கொடைக்கானல்,மேலூர் சொத்துக்கள்,மதுரை நகரின் வீடியே பார்லர்கள்,கடைகள்,ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41.செல்வம் வீடு-பெங்களுர்
42.உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43.பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ்,இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45.முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46.தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர்,ஜி.என்.செட்டி சாலை,சென்னை.
47.கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48.மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம்,மயிலாடுதுறை,திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
51. Kalanidhi Maran becomes Chairman of Spice Jet Airlines with major stake-holder

52. Next target is ``Go Indigo'' Airlines, extra extra and etc etc...

இங்கு அழகிரி,கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.

திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும்,தோளில் போட்ட துண்டுடன்,சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

அதற்கு சப்பைக்கட்டு கட்ட தான் சௌகரியமான குடும்பத்திலேயே பிறந்ததாகவும், கொள்ளையர் வந்து திருடும் அளவுக்கு அவர் வீட்டில் பணம் இருந்ததெனவும் அவர் குறில்லிடுகிறார், இப்போது.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழ்ழ்ழ்ழ்ழ்ழ வைக்கும் தமிழ்மக்கள்.

தெளிவாக யோசித்து முடிவெடுக்கவும். தமிழகத்தைக் காப்பாற்றவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/12/2010

ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்

முதலில் தினமலரில் வந்த இச்செய்தியை பார்த்து விடுங்கள். பிறகு என் கருத்தைத் தெரிவிக்கிறேன்

ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று ராஜாவை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது, சி.பி.ஐ., ரெய்டில் நடந்தது என்ன?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.

ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., களத்தில் இறங்கியது. கடந்த 8ம் தேதி, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது முன்னாள் உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். டில்லி, சென்னை, பெரம்பலூர் என 14 இடங்களில் நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களையும், பண பரிமாற்றம் தொடர்பான ராஜாவின் முக்கிய டைரி ஒன்றையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். சி.பி.ஐ., நடவடிக்கையால், முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ராஜாவை அழைத்து முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.

சி.ஐ.டி., காலனியில் உள்ள இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை, நேற்று காலை ராஜா சந்தித்தார். சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியும், சி.பி.ஐ., ரெய்டு குறித்தும், அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், முதல்வர் விளக்கம் கேட்டறிந்தார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அடுத்த கட்டமாக ராஜாவை அழைத்து விசாரணை நடத்தி, அவர் தரும் பதில்களின் அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ராஜாவை விசாரணைக்கு அழைத்தால், அடுத்து என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதனால் யார், யார் சிக்குவார்கள், டைரியில் யார், யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கின்றன, விசாரணையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், முதல்வர் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு பெரிய இழப்பு ஏற்படுமோ என்று, தி.மு.க., தலைமை அஞ்சுகிறது. இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு தயார்: நேற்று முன்தினம் இரவு 12.10 மணிக்கு, டில்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ராஜா, சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் பேட்டியளிக்கும்போது, "ஸ்பெக்ட்ரம் புகார் குறித்த சி.பி.ஐ., விசாரணை என்பது வழக்கமான நடைமுறை. சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்' என்றார்.


இப்போது டோண்டு ராகவன்.

கருணாநிதி நிச்சயமாகவே கேட்டிருக்கக் கூடிய ஒரு கேள்வியை நான் ஊகிக்கிறேன்.

“என்ன ராசா, நீங்கள் பதவி இழந்து இவ்வளவு நாட்கள் ஆச்சு. உங்களை விசாரிக்கவில்லையேன்னு எல்லோரும் கேள்வி கேட்டு, சுப்ரீம் கோர்ட்டும் அரசுக்கும் சிபிஐக்கும் கிடுக்கிப் பிடி போடுவதும் பல நாட்களாகவே எல்லோரும் பார்த்துத்தான் வந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இப்படியா அஜாக்கிரதையாக டயரியை ரெய்டில் சிக்குமாறு வைப்பது”?

ராசா என்ன பதிலளித்திருப்பார் என்பதை நான் உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

ஆனால் ராசா அப்பால் சென்றதும், கருணாநிதி மேலும் இம்மாதிரி யோசித்திருக்கலாம். டயரியை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேணும் என்பதே ராசாவின் நோக்கமாகக் கூட இருக்கலாம். அப்போதுதானே தன்னுடைய கூட்டாளிகள் மற்றும் புரவலர்களும் மாட்டுவர்? மேலும், இந்த நடவடிக்கைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதாக ராசா கூறுவது எந்த வரைமுறையில் வரும்? அப்ரூவராக மாறினால் தண்டனை கிடைக்காது/கணிசமான அளவில் குறையும் என்பது அவருக்குத் தெரியாதா?

இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதும் கருணாநிதி தன்னைத் தானே கேட்கும் கேள்வியின் விளைவுதானோ?

அது சரி, சுப்பிரமணியன் சுவாமியின் கூற்றுப்படி 10% (ராசா) 30% (கருணாநிதி) சம்பாதித்தவருக்கே இந்த மன உளைச்சல் என்றால் 60% சம்பாதித்தவர் (சோனியா) எவ்வளவு யோசிக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/09/2010

டோண்டு பதில்கள் 09.12.2010

நக்கீரன் பாண்டியன்
கேள்வி-1. அன்பின் ஆழத்தை கவிதையாய் சொல்லும் “நந்தலாலா” படம் பற்றிய தங்கள் விமர்சனம்?(http://www.tamizh.ws/2010/11/nandalala-2010-mysskin-snightha-akolk.html)
பதில்: அப்படத்தை நான் பார்க்கவில்லை. பார்ப்பேன் என்றும் கூற முடியாது. நான் கேள்விப்பட்டவரை அது ரொம்பவும் ஆழ் உணர்ச்சிகளை உள்ளடக்கிய படம், அதைப் பார்ப்பவர்கள் பல நாட்களுக்கு மனக்கஷ்டம் அடைவார்கள். அம்மாதிரி படங்களை நான் பார்க்காமல் தவிர்த்து விடுவேன். உதாரணம் சுப்பிரமணியபுரம் (நான் பார்த்த க்ளிப்பிங்கில் கத்தியால் குத்தி விட்டு அந்தக் காயத்தின் மேல் வேண்டுமென மண்ணை வீசிவிட்டுப் போன வக்கிரம் காட்டப்பட்டது), விருமாண்டி, பருத்திவீரன் ஆகியவை அடங்கும். பாபா, குசேலன், எந்திரன் ஆகிய படங்களை விளம்பர அலம்பல்கள் தந்த எரிச்சலால் பார்க்கவில்லை.

மற்றப்படி நந்தலாலா படம் ஒரு ஜப்பானிய படத்தின் காப்பி என்பது என்னைப் பொருத்தவரை முக்கியமில்லாத விஷயம், ஏனெனில் நான் ஜப்பானிய படத்தையும் பார்க்கவில்லை.

கேள்வி-2. வெறும் விளம்பர தந்திரத்தால் சன் டீவியின் எந்திரன் படம் வெற்றி பெற்றது எனும் கருத்து பற்றி?
பதில்: அப்படியானால் பாபாவும், குசேலனும் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே. பெண் சிங்கம் மட்டும் லேசுப்பட்டதா என்ன? பை தி வே எந்திரனும் பார்க்கவில்லை, பார்க்கும் ஆசையும் இல்லை. மேலே சொன்ன எரிச்சலே காரணம்.

கேள்வி-3. தமிழ் நாட்டில் திரைப்படத்துறை ஒரு சில குழுக்களின் கையில் எனும் உலவும் கருத்தின் அடிப்படையில், இது எங்கே கொண்டு போய் விடும்?
பதில்: இந்த நிலை வேறு அதிகம் பலம் வாய்ந்த பல குழுக்கள் வரும் வரை நீடிக்கும். பிறகு அவற்றின் ஆதிக்கம் வரும். அப்போதும் இதே கேள்வி மீண்டும் கேட்கப்படலாம்.

அதாவது இம்மாதிரி குழுக்களின் ஆதிக்கம் ஒன்றும் புதிதல்லவே. உலக சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது?

கேள்வி-4. இந்த 85 வயதிலும் கலைஞரின் ஞாபக சகதியின் ஆளுமை பற்றி?
பதில்: நல்ல நினைவாற்றல், பாராட்டுக்குரியது. ஆனால் அதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர்த்து தமிழகத்துக்கு என்ன பலன்?

கேள்வி-5. தமிழக முதல்வரின் பிள்ளைகளில் அவரது அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்பது உங்கள் கருத்து,விளக்கத்துடன்?
பதில்: தமிழகத்தில் மன்னராட்சிதான் என முடிவே செய்து விட்டீர்களா? தமிழகத்தை யாருமே காப்பாற்ற முடியாது போலிருக்கே.


நீச்சல்காரன்
கேள்வி-6 இணையத்தில் அதிகமான செய்தி வலை தளங்கள் புழக்கத்தில் உள்ளன. இன்னும் அதிகரிக்க கூடும். அதிகமான செய்தி ஊடகங்கள் பெருகுவது நல்லதா கேட்டதா?
பதில்: பெருகினால் வரக்கூடிய ஆரோக்கியமான போட்டி நல்லதுதானே. பலருக்கு வேலை வாய்ப்பு. பலமுள்ளவை நிலைக்கும், இல்லாதவை மறையும்.


பத்மநாபன்
கேள்வி-7. அரசியல்வாதிகளால் சுருட்டி ஸ்விஸ் வங்கியில் போட்ட இந்திய பணத்தை மீட்க வழியே இல்லையா?
பதில்: அரசுக்கு மனம் இருந்தால் முடியும்தான். ஆனால் அங்கும் அரசியல்வாதிகள்தானே இருப்பார்கள்? எப்படி ஐயா மனம் வரும்?

virutcham
கேள்வி-8. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் ஒட்டிய தெருக்களில் ஒரே தொன்னை குப்பைகள் போட்டு வைத்திருப்பது பற்றிய உங்கள் கருத்து என்ன? யாராவது இதை தவிர்க்க நடவடிக்கை எடுத்தது உண்டா? நான் கோவில் நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி பதில் இல்லை. அது சம்பந்தமான எனது பதிவு இதோ
பதில்: நான் கடைசியாக போனபோது குப்பைத் தொட்டிகள் வைத்திருந்தார்களே. இப்போது இல்லையா?


hayyram
கேள்வி-9. நிதீஷ் குமாரின் அபார வெற்றிக்கு காரணங்களை வரிசை படுத்தவும்! எனக்குத் தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருந்தால் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.
பதில்: நீங்கள்தான் கிட்டத்தட்ட எல்லா காரணங்களையும் கூறிவிட்டீர்களே. இருப்பினும் ஒன்று மிஸ்ஸிங். அதாகப்பட்டது, நிதிஷின் கட்சியின் கூட்டணி இன்னொரு நல்ல கட்சியுடன் அமைந்தது.

அக்கட்சியைச் சார்ந்த அமைச்சர்களும் திறமையாகவே செயல் பட்டனர். ஆனால் நிதிஷின் வெற்றியை ஒத்துக் கொல்ளும் மீடியா பிஜேபியின் பங்கைக் குறைத்து மதிப்பிடுகிறது வேண்டுமென்றே. தான் போட்டியிட்ட 102 இடங்களில் அக்கட்சி 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது 90% வெற்றி (நிதிஷின் கட்சி 141-ல் 115 இடங்களைத்தான் பெற்றுள்ளது, அதாவது 81 சதவிகிதம்).

மோதியை நிதிஷ் பிரசாரத்துக்கு வரவிடாததை பெரிதாகக் கூறுகின்றன பத்திரிகைகள். முஸ்லிம்களைக் கொன்றால் ஓட்டில்லை எனக் கொள்ள வேண்டும் என்கிறார் ஒரு பத்திரிகையாளர். ஆனால் பாஜகவுக்கும் இந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் ஓட்டு போட்டுள்ளனர்.

சோ அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போகிறார். பலர் மோதியை நிதிஷ் நடத்திய விதத்தை விரும்பவில்லை. மோதியை மட்டும் வரவிட்டிருந்தால் வெற்றி இன்னும் அபாரமாக நிதிஷின் கட்சிக்கு கிடைத்திருக்கும் என்கிறார் அவர் (08.12.2010 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையின் தலையங்கம்). அவர் அம்மாதிரி நடந்ததால்தான் நிதிஷின் கட்சியின் வெற்றி சதவிகிதம் பாஜகாவின் வெர்றி சதவிகிதத்தை விடக் குறைந்ததே என்கிறார். இதுவும் யோசிக்கத் தக்கதே.


பார்வையாளன்
கேள்வி-10. அமெரிக்க பாணி ஜனாதிபதி நேரடி தேர்வு நம் நாட்டுக்கு உதவுமா? பிளஸ் மைனஸ் என்ன?
பதில்: கண்டிப்பாக அது இந்தியாவுக்கு ஒத்து வராது. நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியிடமே அதிக அதிகாரங்கள் குவியும். இந்தியாவுக்கு அது லாயக்கில்லை. நம் மக்கள் மன்னர் ஆட்சிக்கு ஒத்துப்போகும் மனப்பான்மை உடையவர்கள். ஆகவே அமெரிக்காவில் நிலவும் checks and balances இங்கு சரிவர செயல்படுவது துர்லபமே.

பிளஸ் என்று பார்த்தால், சிங்கப்பூரின் லீ வான் க்யூ அல்லது குஜராத்தின் மோதி போன்ற நல்லவர் மற்றும் வல்லவர் குடியரசுத் தலைவர் ஆனால் நாட்டுக்கு நல்லது. ஆனால் மைனஸோ அதிகமாயிற்றே. கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி ஆகியோர் வந்தால் நாட்டுக்கு கேடுதான். ஒரு இந்திரா காந்தி இருந்து படுத்தியது போதாதா?

கேள்வி-11. ஒரு விஷயம் ஆதாயம் தருகிறது என்றால் அதை செய்ய பிராமணர்கள் தயங்கமாட்டார்கள் என்பது பெரியார் கருத்து. என் கருத்து அல்ல. பிராமண எதிர்ப்பு என்பது ஆதாயம் தரும் விஷயம் என்பதால் பிராமணர்கள் சிலரே இதில் இறங்கிவிட்டனர் என்ற கருத்து பற்றி ? உதாரணம் பாலசந்தர் , கமல் . சுஜாதா ஞானி சின்னகுத்தூசி
பதில்: ஐந்தாம் வகுப்பு கூட தாண்டாது, கண்டபடி உளறி வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரெல்லாம் பார்ப்பனர்களை பற்றி பேச வந்து விடுவது தமிழக அரசியலின் சாபக்கேடு.

தனக்கு மட்டும் ஆதாயம் தரும் விஷயமாக செய்து வந்தது நாயக்கரே. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை உயர்த்துவதாகக் கூறிக் கொண்டு, தலித்துகளை எரித்து கொலை செய்த கோபால கிருஷ்ண நாயுடுவைக் காப்பாற்ற அந்தாள் செய்ததை பூசி மெழுகிய இந்த பலீஜார் நாயுடுவை விடவா இந்த சுயநலம் சார்ந்த விஷயத்தில் வேறு யாரையாவது குறிப்பிட முடியும்? தன்னை ஆதரித்த அண்ணாவின் ஆட்சி நிலவுவதே அவருக்கு அப்போது ஆதாயம் என்பதுதானே நிஜம்.

திமுக ஏன் உருவானது என்னும் புத்தகத்தில் மலர் மன்னன் எழுதிய சில சுவாரசியமான வரிகள் கீழே.

ஈ.வே.ராவின் சிக்கனம் உலகம் அறிந்ததே. சிக்கனமாக இருப்பது என்பது வேறு. அதில் அவரது சிக்கனம் ஒரு தனி ரகம். அது பணம் வீணாகச் செலவாவதைத் தடுக்கும் சிக்கனம் அல்ல. பணத்தின் மீது கொண்ட அதீத பற்றுதலில் விளைந்த சிக்கனம் அது. இரண்டாவது தன்னிடம் வந்து சேர்ந்தவர்களை மதிக்காத போக்கு. இது அண்ணாவுக்கு வெகு ஆரம்பத்திலேயே தெரியவந்த ஒன்று. அடிக்கடி ஈரோடிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்யும் ஈ.வே.ரா திருச்சிக்கு டிக்கட் எடுக்க மாட்டார். கரூர் வரை ஒரு டிக்கட். பின்னர் கரூரில் இறங்கு கரூரிலிருந்து திருச்சிக்கு டிக்கட். இப்படி இரண்டு முறை குறைந்த தூரத்துக்கான டிக்கட் எடுத்தால் அதில் கொஞ்சம் காசு மிச்சமாகும். இப்படி ஒரு முறை அண்ணாவையும் கூட அழைத்துச் சென்றவர், அண்ணாவைத் தான் கரூரில் இறங்கி திருச்சிக்கு டிக்கட் வாங்க அனுப்பி, அண்ணா டிக்கட் வாங்கி வர தாமதமாகவே, ஆத்திரமடைந்த பெரியார், "சோம்பேறி, வக்கில்லாதவன், ரயில் டிக்கட் வாங்கக் கூட முடியாதவனால் ஒரு கட்சியை எப்படி நடத்தமுடியும்," என்றெல்லாம் விழுந்த அத்தனை வசைகளையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டவர் அண்ணா.

இதுதான் தந்தை பெரியார், தனக்கு தளபதியாக, தன் பெட்டிச் சாவியைத் தந்துவிட்டதாக பட்டம் சூட்டிய அண்ணாவை, தன் கழகத்திற்கு பெரிய ஜனத்திரளையே தேடித்தந்த அண்ணாவை, கழகத்தில் தனக்கு அடுத்த படியாகவிருந்த தலைவரை, தனக்கு முப்பது நாற்பது வயது இளையவரை நடத்திய முறை. கழகத்தில் அண்ணா தன் இனிய சுபாவத்தினாலும், பேச்சாற்றலாலும், கழகத்தின் கொள்கைகளுக்குத் தேடித்தந்த கௌரவத்தாலும், மக்களிடையே பெற்ற புகழாலும், கழகத்தில் அவருக்கு தானே வந்தடைந்த இரண்டாம் இடத்தை, தந்தை பெரியாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவர் மட்டுமில்லை. வயதிலும் கழகத்திலும் அண்ணாவுக்கு மூத்தவர்களாக இருந்தோருக்கும், குத்தூசி குருசாமி, டி.பி.வேதாசலம் போன்றோருக்கும் அண்ணாவுக்கு கழகத்தினுள்ளும் வெளியே மக்களிடமும் இருந்த செல்வாக்கைக் கண்டு பொறுக்கமுடியாதுதான் இருந்தது. அன்ணாவின் இளைய தலைமுறை திராவிட கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணாவிடமே நெருக்கமாக உணர்ந்தனர்.

அதோடு கழகத்தை தன் விருப்பு வெறுப்புக்களையே கொள்கைகளாகவும் நடைமுறையாகவும் ஆக்கியிருந்த தந்தை பெரியார், எவ்வளவுதான் தனக்கு கட்டுப்பட்டிருந்தாலும், தனக்கென ஒரு பார்வையும் கொள்கைகளும் கொண்டிருந்த அண்ணாவை உள்ளூர வெறுக்கத் தொடங்கியிருந்தார் என்றும் சொல்லவேண்டும். மற்றவர்களையும் தூண்டி அண்ணாவை கேலியும் வசையும் பேசத் தூண்டவும் செய்திருக்கிறார் பெரியாரும் திராவிடத் தந்தையுமான ஈ.வே.ரா. குறிப்பாக பாரதிதாசன், அழகரிசாமி போன்றோர். அப்படி வசை பாடிய அழகிரிசாமி உடல்நிலை கெட்டு மரணப் படுக்கையில் இருந்த அழகிரிசாமிக்கு நிதி திரட்டித் தந்தவர் அண்ணா. பாரதிதாசனுக்கும்தான். நிதி திரட்டித் தராமல், "பாட்டுப் பாடறவனுக்கெல்லாம்" திரட்டித் தரானே என்று ஆத்திரப்பட்டவர் தந்தை பெரியார். அழகிரிசாமியும் பின்னர் தன் செய்கைகளுக்கெல்லாம் வருந்தவும் செய்தார்.

அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவது என்றாலே பிடிக்காது. கறுப்புச் சட்டைப் படை என்று ஒரு வாலண்டியர் அணி உருவாக்குவது என்ற தீர்மானத்தில் பிறந்த வழக்கம்தான் திராவிட கழகத்தவர் கருப்புச்சட்டைக்காரன் என்றாக வழி வகுத்தது. இதை தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மேடையிலேயே குறிப்பிடும் போது என்ன சொல்கிறார்? "வெள்ளைச் சட்டை அணியும் குள்ள நரிகள் என்று அவர்களைச் சொல்வேன்" அண்ணா குள்ள உருவினர் என்பது எல்லோரும் அறிந்தது. தனக்கு அடுத்த தலைவரை 'குள்ள நரி" என்று மேடையில் தந்தை சொல்வாரானால், இவருக்குமிடையேயான உறவு எத்தகையது?

நீதிக் கட்சியைச் சேர்ந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தன் அறுபதாம் ஆண்டு நிறைவை சம்பிரதாய சடங்குகள், புரோகிதருக்கு பசு, பொற்காசு போன்ற தானங்கள், வேள்வி என ஏராளமான செலவில் நடத்தவே, ஈ.வே.ரா வுக்கு கோபம். தன்னைக் கண்டு கொள்ளாமல், பார்ப்பனருக்கு தானம், பூஜை என்று செலவழிக்கிறாரே என்று. அண்ணாமலைச் செட்டியாரின் இச்செய்கையைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதும்படி தந்தை பெரியார் அண்ணாவிடம் பணிக்க, அண்ணாவுக்கும் இதில் ஒப்புதல் இருந்ததால் அவரும் எழுத, இடையில் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து ஆயிரம் ரூபாயோ என்னவோ அன்பளிப்பாக வரவே, செட்டியார் பணம் அனுப்பியிருக்கிறார், ஆதலால் ஏதும் அவரைக் கண்டித்து எழுதியதை நிறுத்தச் சொல்கிறார் பெரியார். ஆனால், அன்ணாவோ, "நான் எழுதியது எழுதியதுதான். இனி அதை மாற்ற இயலாது" என்று சொல்ல, பெரியார் நன்கொடைக்கு நன்றி சொல்லி ஒரு குறிப்பு எழுதினார் என்பது நடந்த கதை.

இது போலத்தான் சேலம் மகாநாட்டில் திராவிடர் கழகம் என்ற புதிய நாமகரணமும், நீதிக்கட்சிப் பெருந்தலைகள் தம் பட்டம் பதவிகளைத் துறக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது அண்ணாவின் வலியுறுத்தல் காரணமாகத்தான். பெரியாருக்கு நீதிக்கட்சியினர் தரும் ஆதரவையும் பண உதவியையும் இழக்க வேண்டி வருமே என்ற கவலையும் அரித்துக்கொண்டிருந்தது. மிகுந்த ஊசலாட்டத்துக்குப்பின் தான் அண்ணாவுக்கு இளைய தலைமுறையினரிடம் வளர்ந்து வரும் கவர்ச்சியையும், கழகத்தின் பிராபல்யம் கருதியும் அண்ணாவின் தீர்மானத்துக்கு இயைந்தார். அண்ணாவின் இத்தகைய பார்வையின் தொடர்ச்சிதான் இந்திய சுதந்திர தினத்தை பெரியார் சொன்னது போல் துக்க தினமாக அல்ல, சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பகிரங்கமாக அண்ணா எழுதியது. நிலமை கட்டுக்கு மீறிப் போகிறது என்று பெரியாருக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது. முதலில் பெரியார் கருத்தை ஒட்டி எழுதி பின்னர் சில மாதங்களுக்குள் அண்ணா தன் கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டது,

இருப்பினும் அவருக்கு அண்ணா வருங்காலத்தில் கழகத்திலும் மக்களிடையேயும் ஒரு சக்தியாக வளர்ந்து வருவது உவப்பாக இருக்கவில்லை. தனக்கும் வயதாகிக்கொண்டிருக்க, தன் பாரம்பரிய குடும்ப சொத்தும், கழகத்தின் பேரில் பைசா பைசாவாக சேர்த்து வைத்திருக்கும் சொத்தும், கழகமும் அண்ணாவிடம் போய்ச் சேராதிருக்கவேண்டுமே என்ற கவலை அவரை பீடிக்கத் தொடங்கியது. தனக்கோ மகன் இல்லை. மனைவியும் இல்லை. குடும்ப சொத்து ஈ.வி.கே. சம்பத்துக்குப் போய்விடும். கழகச் சொத்தோ, தனக்குப் பின் வரும் தலைமையிடம் போய்விடும். இதைத் தடுப்பதற்கு உடனடியாக ஒரு வழி தேடியாக வேண்டுமே. தன்னிடம் சில வருஷங்களாக உதவியாக இருக்கும் பெண்ணை மணந்து கொண்டால் தான் கவலைப்படும் இரண்டு விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தவர் தந்தை பெரியார். தன் சொத்துக் கவலைகளுக்குத் தீர்வாக, ஒரு சிறு வயதுப் பெண்ணின் வாழ்க்கையை பலியாக்குவதில் அவருக்கு தயக்கம் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தம் என்றும் பெண்ணின் விடுதலை என்றும் வாழ்நாள் முழுதும் பேசி வந்த எழுபது வயது புரட்சிக்காரருக்கு வந்த கவலைகளும் அதற்கான தீர்வுகளும் இப்படியாகிப் போனது பரிதாபம் தான்.

ஆக, கொள்கைகள் அல்ல, சொத்து பற்றிய கவலைகள், தன் விருப்பு வெறுப்புகளுக்கும் தன்னிச்சையான சுய தீர்மான போக்குகளும் தான் என்றும் தெரிந்ததென்றாலும் அதன் பட்டவர்த்தன மான வெளிப்பாடாக நிகழ்ந்த பெரியார் மணியம்மை திருமணம், அதுவும் பார்ப்பனராகிய எந்த ஆச்சாரியார் தன் சாதிக்கு சாதகமாகத்தானே சிந்திப்பார் என்று காலமெல்லாம் சொல்லி நிந்தித்து வந்தாரோ அந்த ஆச்சாரியாரிடமே, தன் கழகம், சொத்து, நம்பிக்கையான வாரிசு போன்ற கவலைகளுக்கு ஆலோசனை கேட்டது, அதுவும் ரகசியமாகச் சந்தித்துக் கேட்டது, பின் இதெல்லாம் 'என் சொந்த விஷயம், உங்களுக்கு சம்பந்தமில்லை' என்று உதாசீனமாகப் பேசியது எல்லாம் கழகத்தவர்க்கு பெரும் அடியாக விழுந்தது. பெரியாருக்கும் சரி, கழகத்தவர்க்கும் சரி இதுதான் ஒட்டகத்தின் முதுகு தாங்காத சுமையாகச் செய்த கடைசி வைக்கோற் புல். இரு தரப்பாருக்கும் பெரியார்-மணியம்மை திருமணம் ஒரு சௌகரியமான சாக்காகிப் போனது. அந்த சாக்குதான் வெளிச் சொல்லப்பட்டது, திரையின் பின்னிருந்த நீண்ட காலப் புகைச்சல் பற்றி எல்லோருமே மௌனம் சாதிக்கத் தான் செய்கின்றனர்.

கடந்த காலப் புகைச்சல் மட்டுமல்ல. பின் எழுந்த புகைச்சல்களும் கூடத்தான். அண்ணா 'கண்ணீர்த் துளிகள்' தலையங்கம் திராவிட நாடு பத்திரிகையில் எழுதியதும், 'கண்ணீர்த் துளிகள்' என்று புதிய கட்சியினரை பெரியார் கிண்டலும் வசையுமாக தொடர்ந்து இருபது வருட காலம் பேசித் தீர்த்ததும் தெரிந்தது தான். ஆனால், பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று சொன்னார். பெரியாரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும், கட்சி சொத்துக்களுக்காக வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் கட்சியில் எழுந்த கொந்தளிப்பை அடக்கி, பழைய கட்சி என்ன, புதிய திமுகவின் தலைமை நாற்காலி கூட பெரியாருக்காகவே காலியாகவே வைக்கப்பட்டுக் கிடக்கும் என்று கட்சியனரின் கோபத்தை அடக்கிய அண்ணாவின் பெருந்தன்மையையோ, அதற்கு எதிராக, பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று கழகத் தந்தை பெரியாரின் பழிச் சாட்டல் வசை பிரசாரம் எதையும் இன்று எந்த கழகத்தவரும் பேச விரும்பமாட்டார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியாக தந்தை பெரியார் விடுத்த பிரம்மாஸ்திரம் தான், 1949 ஜூலை 13-ம் தேதி விடுதலை பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை. அதில் தான் திருமணம் செய்துகொண்டதற்கான ஒரு புதிய காரணத்தைச் சொல்கிறார். அறிக்கையின் தலைப்பு:"திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும், அவசர முடிவும்." அதில் யாரோ (மறைமுகமாக அண்ணாவைக் குறித்து) தன்னைக் கொலை செய்ய சதி செய்து வருவதாகவும் அதற்கு சம்பத் உதவி வருவதாகவும்" ஒரு குற்றச் சாட்டு. உடனே அண்ணா, தந்தை பெரியார் தன்னைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக, அவதூறு வழக்கு தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஆஜரான பெரியார், தான் அண்ணாவைக் குறிக்கவில்லை என்று சொல்கிறார். அவ்வாறு வாக்குமூலம் அளித்தால், தான் வழக்கை வாபஸ் வாங்குவதாகச் சொல்லவே, வழக்கு தள்ளுபடியாகிறது. சம்பத்தும், ஈ.வே.ரா மணியம்மை இருவர் மீதும் அவதூறு வழக்குத் தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஈ.வே.ரா, மணியம்மை இருவருமே வருத்தம் தெரிவிக்கவே, வழக்கு வாபஸ் ஆகிறது.

ஆக, கடைசியில் இதனால் பெறப்படும் நீதி என்னவென்றால், இது சொத்து பற்றிய கவலைகள். கட்சியில் தனக்கு இளையவரின் புகழ் மீது கொண்ட பொறாமை உணர்வுகள். இதற்கெல்லாம் கொள்கைப் பூச்சு முலாம் பூசப்பட்டு பளபளக்கச் செய்கிறார்கள். மேலிருக்கும் முலாமை யாரும் கீறி விடாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே இந்த பழைய கதைகளை எந்த திராவிட குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வசமே இருக்கும் பத்திரிகைகளை அணுகுவதும் கஷ்டம். பெரியார் திடல் போய் ஒரு பழைய விடுதலை இதழைப் பார்க்க முயன்றவர்களுக்கு தெரியும். "எதுக்கு? யார் நீங்க? என்ன வேணுமோ எழுதிக்கொடுத்துப் போங்க. தேடிப்பார்த்து வைக்கிறோம்." என்று பதில்கள் வரும்.


மீண்டும் டோண்டு ராகவன். பெரியார் திடலில் டோண்டு ராகவன் கண்டது பற்றித்தான் நானே பதிவும் போட்டுள்ளேனே.

அதே போல தனக்கு ஆதாயமாக காங்கிரஸ் இருந்தபோது 1965 ஹிந்தி போராட்டத்தையே தூற்றியவர் இதே மகானுபாவர்தான். 1967 வரை அண்ணாவையும் திமுகவினரையும் கன்ணீர்த்துளிகள் என இகழ்ந்து வந்தவர், அவ்வாண்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் அண்ணா அவருக்கு பெருந்தன்மையாக வழங்கிய தலைவர் பதவியை கூச்ச நாச்சமின்றி பக்கித்தனமாக ஏற்றுக் கொண்டவர் இந்தப் பெருந்தகை.

மற்றப்படி, நீங்கள் சொன்ன பார்ப்பனர்களில் சுஜாதா எப்படி வந்தார்? மற்றவர்கள் தொடை நடுங்கி பார்ப்பனர்கள். தாங்களும் சேர்ந்து பார்ப்பனர்களைத் திட்டினால் தாம் மட்டும் தூஷிக்கப்பட மாட்டோம் என மனப்பால் குடித்தவர்கள். அவர்களையெல்லாம் இங்கே ஞாபகப்படுத்தாதீர்கள். நான் அவர்கள் மேல் பரிதாபப்படுகிறேன்.

கேள்வி-12. தேர்தலை பொறுததவரை, இந்த விவகாரத்தால் அதிகம் பாதிப்பு காங்கிரசுக்கா, திமுகவுக்கா?
பதில்: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி இல்லையென்றால் மக்களுக்கு நல்லது நடக்கும். திமுகவின் அராஜக ஆட்சி முடிவுக்கு வரும். காங்கிரசுக்கு கொஞ்சமாவது நல்ல பெயர் மிஞ்சும்.

ஆனால் கூட்டணி தொடர்ந்தால், திமுகவுக்கு நல்லது, காங்கிரசுக்கு சில ரொட்டித் துண்டுகள் கிடைக்கலாம், ஆனால் மக்களுக்கு கெடுதல்தான் நடக்கும்.

1996 நிலைதான் இப்போதும். இரு தருணங்களிலும் சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி அசுர பலத்துடன் இருந்தது. என்ன, 1996-ல் அதிமுக, இப்போது திமுக. மற்றப்படி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

1996-ல் நரசிம்ம ராவ் தலைமையில் உள்ள காங்கிரஸ் அதிமுகாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பெரிய தவற்றைச் செயதது. இப்போதும் திமுகவுடன் கூட்டணி என்றால் அதே தவற்றை அது திரும்பச் செய்கிறது என கொள்ளலாம். அப்போதாவது த்மக இருந்தது. ஆனால் இப்போது?

கேள்வி-13. சம்ச்சீர் கல்வி முறை குறித்து? இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறதே!
பதில்: பல முன்னுக்குப்பின் முரண் ரிப்போர்டுகள் உள்ளன. சத்தியமாகவே எனக்கு புரியவில்லை. ஆகவே என்னால் இக்கேள்வியிக்கு கருத்து சொல்லவியலாது.


M Arunachalam
கேள்வி-14. What is your take on these lyrics written and also sung by a pervert in Tamil cinema?
பதில்: கூல், கூல். அவ்வரிகளை படத்தில் காண்டக்ஸுடன் பார்ப்பதற்கு முன்னால் நான் ஏதும் கூற விரும்பவிலை.

ஜயதேவரின் அஷ்டபதி பதிகங்களில் இருப்பதை விடவா சிருங்கார ரசம் வந்துவிடப் போகிறது? தமிழர்கள் கலவிக்கலையை அற்புதமாக பாவித்தவர்கள். நடுவில் வந்த கிறித்துவ மிஷனரிகள் அவற்றைப் பாவம் என எடுத்துரைத்து எல்லாவற்றையும் வக்ரமாக பார்த்தனர்.


ஏதேனும் கேள்விகள் இருந்தால் அடுத்தமுறை சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது