இது மலர் மன்னன் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல். என்னுடைய போன பதிவில் சீறி வந்த பல பின்னூட்டங்களுக்கு இதிலும் இதைத் தொடர்ந்து வரும் மலர் மன்னன் அவர்கள் இன்னொரு கட்டுரையின் பகுதியிலும் விடைகள் உள்ளன. எல்லாம் சேர்ந்து மிகப் பெரியதாகி விட்டதால் தனிப்பின்னூடமாகவே போடத் துணிந்தேன்.
In my article in Thinnai on Gandhi-Godse, I did NOT say that Godse did NOT belong to RSS or Hinsdu Maha Saba, because that qestion did NOT arise. Godse was a known Hindutva activist, editor of Agrani and Hindu Rashtra. The denial was about the involvement of RSS and Hindu Maha Saba or Savarkarji in the assassination.
To explain further, there was no evidence for a plot to kill Gandhiji in RSS or Hindu Maha Saba or involving Savarkarji and Godse was deputed to execute the plot. According to Godse, it was his own decision. For your info, Godse was once in the Congress also and courted arrest, imprisonned.
In my earlier related article, I have also said that we need NOT regret for having failed to safeguard Gandhiji even for a year whereas the British raj protected him for many years. This was the sircastic remark of Churchil as an attempt to prove Bharatiyas' inefficiency in the statecraft and it is a disgrace if we repeat his comment. Before my article on Gandhi-Godse, I had to write an intro (as a sequel to Sri Karpaka Vinayakam) entitled "Vidai UNdu vinaakkaLukku viLakkam vENdumenil." That article has answers to many of the commnets the readers put forth in your blog. (அக்கட்டுரையின் காந்தி கொலை சம்பந்தப்பட்ட பகுதியைக் கீழே தருவேன் - டோண்டு)
Kalyanam himself has said to me that he was posted to be Gandhiji's typist clerk a few days before the assaassination. He had even said Gandhiji's behaviour was very rude toward him but all those details were irrelevant to our topic. Kalyanam is still in Chennai and I know even his eldest daughter. Now that many years have passed, he may NOT be able to fill up every dotted line but the main points would remain intact. The plot hatched at Hindu Maha Saba quarters is his own reading without any vaild reasons because there was no evidence to such conspiracy, produced in the court. Had there been any smallest evidence for their involvement, the prosecution would have brought to the notice of the court to bring disgrace to Savarkarji because immediately after the partition, due to the loss of lives and properties and also outrage of modesty, Hindus were turning slowly to Hindu Maha Saba. In the first general elections, there were many Hindu Maha Saba candidates elected to Lok Sabha.
The bloggers quote from the press whereas I know kalyanam, I stayed with him for many days in his T.Nagar kalyana mandapam, spending night after night talking about many matters including Gandhiji's assassination and Kalyanam's nearness to gandhiji. I don't remember what he said about his past but he definitely told me that his posting as Gandhiji's typist with access to him was very recent, a few days before his death. I need to remember this fact because this is what is necessary for recording the incident.
எனக்கு அனுப்பிய இன்னொரு மின்னஞ்சலில் அவர் கூறியது:
I could go through Irainesan's blog in the matter and also your rejoinder to him in his blog as well as in your blog.
Whether Godse was in RSS or in Hindu Maha Saba is a non issue because he was NOT a stranger but a known Hindutva activist. It is also a non issue as to whether I subscribe to his action or not because it has got nothing to do with the intention of writing on the topic.
No cold blooded murder could be appreciated but I admit that I have no regrets for the liqudation of Gandhiji from our political scene at that crucial hour. In fact, many Hindus heaved a sigh on hearing his death at that time. Why, inwardly, Nehru and Patel would have beem felt relieved because Gandhi was a thorn in their flesh in those days.
மலர் மன்னனின் "விடையுண்டு வினாகளுக்கு, விளக்கம் வேண்டுமெனில்" என்ற திண்ணை கட்டுரையில் காந்தி கொலை சம்பந்தமாகப் பேசும் பகுதி இங்கே. முழுக்கட்டுரைக்கு பார்க்க: http://www.thinnai.com/pl0106065.html
1947க்குப் பிறகு சிலர் சில காரியங்களைத் துணிந்து செய்ய நேர்ந்தது வாஸ்தவந்தான். மத நல்லிணக்கம், சிறுபான்மையினர் மனங் கோணாது இருக்கச் செய்தல் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு துணிவை இழந்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்யத் தவறிவிட்டதால் வந்த வினை, தவறான அனுமானங்கள் நிஜமெனப் பதிவாகிவிட்டிருக்கின்றன. மாறாகச் சிலராலாவது துணிந்து செயல்பட முடிந்திருக்கிறதே! ஆச்சரியந்தான்.
நாதுராம் விநாயக கோட்ஸே இன்றைய பயங்கரவாதிகளைப் போல் ஒரு நபரைக் கொல்வதற்காகப் பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியவர் அல்ல. தன்னந்தனியாகச் சென்று காந்திஜியின் நேர் எதிரே நின்று காந்திஜிக்கு மாத்திரமே பாதிப்பு நேருமாறு துப்பாக்கியால் சுட்டவர். காந்திஜியைச் சுட்டதும் சூழ்ந்துள்ளோர் ஆவேசச் சீற்றத்தில் தன்னைக் குற்றுயிரும் குலை உயிருமாகச் சிதைத்துப் போடுவார்கள் என்பது தெரிந்தே அவ்வாறு வினையாற்றினார். காந்திஜியைச் சுட்டுக் கொலை செய்த சமயத்தில் கோட்ஸேயின் வயது முப்பத்து ஒன்பது. நன்கு ஆலோசித்து, முடிவு எடுக்கும் வயது. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திடீர் என முடிவு செய்யும் பருவமல்ல. அவர் மூர்க்கத்தனமான வெறி¤யூட்டப்படும், மூளைச் சலவை செய்யப்படும் மதரஸாக்களில் இளமை முதல் பயின்றவருமல்ல. மேலும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். பெரிய படிப்பு ஏதும் படிக்காவிடினும் தனது தரப்பு நியாயத்தைத் தௌ¤வான ஆங்கிலத்தில் சொல்லத் தெரிந்து நீதிபதியை வியக்கச் செய்தவர். நீதிமன்றத்தில் கோட்ஸே அளித்த வாக்குமூலம் நெடுங்காலம் பிரசுரிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி வெளியில் வந்தால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என்று அரசு உறுதி செய்துகொண்ட பின்னரே அது பகிரங்கப் படுத்தப்பட்டது. ''மே ஐ ப்ளீஸ் யுவர் ஹானர்'' என்ற தலைப்பில் கோட்ஸேயின் நீதிமன்ற வாக்குமூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதனைப் படித்துப் பார்த்தால் முன்னரே ஒரு முடிவு செய்துகொண்டு, எதிராளியை மடக்குகிறோம் என்கிற நினைப்பில் என்னிடம் கேள்விகளை எழுப்பத் தோன்றாது.
காந்திஜி கொலை வழக்கு பகிரங்கமான நீ¦திமன்ற விசாரணையாக நடைபெறவில்லை. இன் காமரா என்பார்களே அதற்கு இணங்க அறைக்குள்ளே ரகசியமாக நடந்தது. நிருபர்கள் வடிக்கட்டப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, நிருபர்கள் விசாரணைபற்றிப் பதிவு செய்யும் செய்திகள் நீதிபதியின் பார்வைக்குச் சென்று அவரது தணிக்கைக்குப் பிறகுதான் பிரசுர அனுமதியைப் பெற்றன. ஏனெனில் பொது ஜன அபிப்பிராயமே தலைகீழாக மாறிவிடக் கூடிய நிலையில் விசாரணையின் போக்கு அமையலாயிற்று.
1947 ஆகஸ்டு 15 உண்மையான சுதந்திர நாள் அல்ல. டொமினியன் அந்தஸ்து தரப்பட்ட தினம்தான் அது. பர்மாவில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ வீரர்களை (அவர்களில் முக்கால்வாசியும் தமிழர்கள்), பூச்சிகளை நசுக்கிக் கொல்வதுபோல் கொல்லச் செய்த தளபதி, அதற்குப் பரிசாக பிரிட்டிஷ் துரைத்தனத்தால் வைசிராய் பதவியில் நியமிக்கப்பட்டவரான மவுண்ட் பேட்டனையே தொடர்ந்து தங்களின் அதிபதியாக இருக்குமாறு காங்கிரஸ் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்க, அவர் கவர்னர் ஜெனரலாகவும் பெரும்பாலான ஆங்கிலேய அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் நீடிப்பவர்களாகவும் இருந்த சமயத்தில்தான் காந்தி சுடப்பட்டார். ஆகவே காலனி ஆதிக்க இந்தியா கண்ணில் வைத்துப் போற்றிய காந்தியை சுதந்திர பாரதம் காப்பாற்ற வக்கல்லாது போனதாக ஒரு குற்ற உணர்வு நமக்குத் தேவை இல்லை. சர்ச்சில் நம்மை ஏளனம் செய்வதற்காகச் சொன்ன விமர்சனம் அது. நாம் துப்புக் கெட்டவர்கள் என்று நம்மைக் குத்திக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்ட, வெளிப்படையான பாரத துவேஷயின் வார்த்தைகள் அவை. அவற்றையே திருப்பிச் சொல்வது ஈ.வே.ரா. அவர்கள் கற்றுத் தந்த சுய மரியாதைக்கே இழுக்கு.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அல்ல, அதற்காகக் காங்கிரசார் பீற்றி¤க் கொள்வது அர்த்தமற்றது எனத் திருச்சி நகர தூதன் திருமலைசாமி அந்தக் காலகட்டத்தில் கிண்டலும் கேலியுமாக எழுதிய வயணம் தெரிய வேண்டுமானால் எஸ்.வி. ராஜதுரையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஈ.வே.ராவுக்குப் பரிந்தும் அண்ணாவை உரிமையுடன் கடிந்தும் திருமலைசாமி அற்புதமாக எழுதிய கட்டுரையைத் தேடி எடுத்துப் பிரசுரித்தவர் என் பழைய சினேகிதர் ராஜதுரை. திருமலைசாமியின் புதல்வர்(பெயர் மறந்துவிட்டது) மிகவும் சிரம தசையில் இருந்தபோது அவருக்குக் கார்ட்டூன் வரையும் திறன் இருப்பதைக் கண்டு அதன் மூலம் அவர் ஓரளவு வருவாய் பெற ஏற்பாடு செய்தவன்தான் நான். அவர்கள் குடும்பம் கடைந்தெடுத்த ஜஸ்டிஸ் கட்சிக் குடும்பம். அதற்காகத் திருமலைசாமியின் மகனை ஒதுக்கிவிடவில்லை. என்னால் முடிந்ததைச் செய்தேன். இன்று அவர் இருக்குமிடம் தெரியவில்லை. தெரிந்தால், இப்போதும் அவர் சிரம தசையில் இருந்தால் அவருக்கு ஒரு நல்ல ஏற்பாடு செய்துதரக் காத்திருக்கிறேன். ஏனென்றால் திருமலைசாமி நாம் மதித்து நினைவில் கொள்ள வேண்டிய திறமை மிக்க கட்டுரையாளர். அவரால் கல்கியே மிகவும் கவரப்பட்டு, தமது ஆசிரியர் குழுவில் சேருமாறு அவரை அழைத்ததுண்டு. ஜஸ்டிஸ் கட்சியின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாகத் திருமலைசாமி கல்கியின் அழைப்புக்கு மசியவில்லை.
சரி, அடிப்படையான விஷயத்திற்கு வருவோம். ரகசியமாக நடந்த காந்திஜி கொலை வழக்கு விசாரணை முடிவில், கோட்ஸேயின் வாக்குமூலத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்த நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?
''அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜூரர் முறைத் தீர்ப்பு நம் நாட்டில் இருக்கும் பட்சத்தில் குற்றம் சாப்பட்டிருப்பவரை நான் நிரபராதியென விடுதலை செய்யவேண்டியிருக்கும்'' என்பதுதான்!
இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகளே. கற்பனை அல்ல. பத்திரிகைகளுக்கு அன்று இதனை வெளியிட அனுமதி தரப்படவில்லை. ஆனால் இன்று நீதிமன்றப் பதிவாளரிடம் அனுமதி பெற்று ஆய்வுக்காக எனக்கூறி சரிபார்த்துக் கொள்ளலாம். வசதியுள்ள சரித்திர பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு இது எளிதாக முடியும்.
வழக்கை விசாரித்துத் தீர்ப்பு அளித்த நீதிபதியே பகிரங்கமாக அப்படிச் சொன்னார் என்றால் காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும் என யோசிக்கத் தோன்றுகிறதா இல்லையா?
இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது. காந்திஜி கொலை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகிவிட்டிருக்கிற ஒரு சரித்திர நிகழ்வு. உணர்ச்சிவசப்படாமல் ஆராயக் கூடிய சூழல் உருவாகிவிட்டிருக்கிற தருணம் இது. சலனப்படாமல் அந்த நி¤கழ்வை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து விவரங்க¬ளைப் பதிவு செய்வதுதான் நமது நோக்கமாயிருக்க வேண்டுமேயன்றி, ஓட்டுகளுக்காக அலையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைப் போல மதவெறி, மிருகத்தனம் என்றெல்லாம் மனம் போன போக்கில் ஏதும் சொல்லிக் கொண்டிருக்கலாகாது.
புற்றீசல் மாதிரி இப்போது வந்து கொண்டிருக்கும் புலன் விசாரணை முக்காடு போட்டுக் கொண்டு விற்பனை யொன்றே குறிக்கோளாகப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகைகளில் ஒன்றாகத் திண்ணையை ஆக்கிவிடக்கூடாது, கண்டதையும் எழுதி. இந்த விஷயத்தில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். எதிர்வினை ஆற்றுவோரும் இதே மாதிரியான எச்சரிக்கையுடன், எழுதப்படுவதற்கு உள்நோக்கம் கற்பிக்காமல், உண்மைகள் பதிவு செய்யப்படவேண்டும் என்ற அக்கரையுடன் செயல்படவேண்டும் என எதிர்பார்க்கிறேன். வாருங்கள், நாம் எல்லோரும் ஓர் வட்ட மேஜையை மனதால் வரித்துக் கொண்டு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கடந்துபோன நிகழ்வுகளைப் பற்றி ஆற அமர அவரவர் குறி¤ப்புகளைப் பகிர்ந்து கொள்வோம். உணர்ச்சி வசப்படாமல் விவாதங்கள் செய்து முடிவுகளுக்கு, அவை மிகவும் கசப்பானவையாகவே இருப்பினும் வருவோம். நமக்கு வரலாற்றுப் பார்வை இல்லை என்பதாக ஏற்கனவே நம்மீது ஒரு வசை உள்ளது. நம் தலைமுறையிலாவது அதனைக் களைய நாம் முற்படலாம் அல்லவா? அதற்காக நம் சந்ததியார் நம்மைப் பாராட்டுவார்கள் அல்லவா?
ஒன்று நினைவிருக்கட்டும். நமது வரலாற்றை வேறு எவரோ எழுதிவைக்க, அதனை ஆதாரமாக வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். இது நமக்குப் பெருமை தருவதாகாது. நாமே நிகழ்வுகளை ஆய்ந்து விருப்பு வெறுப்பு இன்றி நம் வரலாற்றைப் பதிவு செய்வோம். நமக்கு அதற்கான அருகதை இல்லையா என்ன? குறைந்த அளவிலான கால கட்டத்தில் சம்பவித்துள்ள நம் காலத்து நிகழ்வுக¬ளை இவ்வாறு பரிசீலித்துப் பதிவுகள் செய்வது சாத்தியம்தான்.
இப்படியான மனப்போக்குடன் என் எழுத்தை அணுகுவதாயின் எல்லாக் கேள்விகளுக்குமே என்னிடம் ஆதாரப் பூர்வமான விடைகள் உண்டு. இன்னொன்றும் தௌ¤வுபடுத்திவிடுகிறேன்:
நான் வேலை வெட்டி இல்லாமல் பொழுதுபோக வேண்டுமே என்பதற்காகச் சாய்வு நாற்காலியில் கிடந்தவாறு திண்ணையில் கதைக்க வரவில்லை. மிகவும் சலித்துக் கொண்டும், எழுதியாக வேண்டுமேயென்று நொந்து கொண்டும் தான் எழுதுகிறேன். ஆகையால் எதிர்வினைகள் தீவிர சிந்தனையின் அடிப்படையிலும் ஓரளவுக்கேனும் விஷய ஞானத்துடனும் அமையவேண்டும் என நான் எதிர்பார்த்தால் அதில் தவறு இருக்காது என நம்புகிறேன்.
அடுத்த தவணையில் காந்திஜியைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு ஏன் ஒரு விவரம் தெரிந்த, நடு வயது மனிதன் வரப் போயிற்று, தன்னந் தனியாக காந்திஜியின் பக்தர்கள் மத்தியில் அவ்வாறு சுடுவதால் பத்திரமாகப் போலீஸ் வசம் அகப்படுவதற்கு மாறாகச் சின்னாபின்னமாகி விடுவோம் என்று தெரிந்திருந்தும் எதனால் அதற்குத் துணிந்தான் என ஆராய்வோம். (அதுதான் என்னுடைய முந்தையப் பதிவில் வந்தது - டோண்டு).
இப்போது மறுபடியும் டோண்டு ராகவன். நான் ஏற்கனவே ஓரிடத்தில் கூறியபடி மலர் மன்னன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். அவர் கூறுவதை பொறுமையுடன் கேட்டால் பல விஷயங்கள் தெரிய வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தாண்டு
-
புத்தாண்டில் வழக்கமான மலைத்தங்குமிடத்தில் இருப்பேன். (31 காலைமுதல் 1 மாலை
வரை) ஆர்வமிருக்கும் நண்பர்கள் வந்து என்னுடன் தங்கலாம். செலவுகளைப்
பகிர்ந்துகொள்ளு...
29 minutes ago
8 comments:
இறைநேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://copymannan.blogspot.com/2006/01/blog-post_19.html
என்னுடைய இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.மலர்மன்னன் உங்களுக்கு பதில் கூறியிருக்கிறார்.
அதிலேயே இப்பின்னூட்டத்தையும் நகலிடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவரது பதிவில் இப்பின்னூட்டம் என்ன செய்தாலும் விழவில்லை. ஒரு வேளை மட்டுறுத்தல் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
அழகப்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://etheytho.blogspot.com/2006/01/blog-post_21.html
குறைந்த பட்சம் இஸ்மாயில் என்று கோட்ஸே தன் கையில் பச்சை குத்தியிருந்ததாக விட்ட கதை பொய் என்று ஆகிவிட்டதல்லவா. அதை பற்றி நீங்கள் இப்போது மேலே பேசாததே போதும், நான் கூறியதில் விஷயம் இருக்கிறதென்று எனக் காட்ட. இல்லை இதைப் போல ஏதேனும் வேறு கதை வைத்திருக்கிறீர்களா?
"அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?"
கல்யாணம் காந்தி கொலையை நேரில் கண்டவர் என்ற முறையில் அவர் ஹே ராம் பற்றிக் கூறியதையும், இஸ்மாயில் பற்றிக் கூறாததையும் கணக்கில் கொள்ளலாமே தவிர சங் பரிவார் சதி செய்ததா இல்லையா என்பது சம்பந்தமான விசாரணைகளை பற்றி அவரிடம் நேரிடையானத் தகவல் இருக்கும் என நம்ப முடியாது. அது பற்றி அதிக பட்சம் அவரதது கருத்தைத்தான் அவரால் கூற முடியும். தர்க்க சாஸ்திரத்தை பற்றி நான் எழுதிய என் பதிவை பார்த்து விட்டுப் பேசுங்கள். நேரிடையாக அவர் பார்த்தது பற்றி அவர் கூறுவதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மற்றப்படி அவர் அனுமானங்களுக்கு அவர் தகுந்த சாட்சியமளிக்க வேண்டும்.
நீல வண்ணத்தில் நான் என்ன புரிந்து கொண்டேன் என்று நீங்கள் எழுதிய தமாஷையும் ரசித்தேன். மற்றப்படி நீங்கள் நான் கூறியோ அல்லது நான் நீங்கள் கூறியோ எதையும் ஏற்கும் நிலையில் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆகவேதான் பின்னூட்டமிடத் தயங்கினேன்.
இப்பின்னூட்டத்தையும் என் காந்தி கோட்ஸே இரண்டாம் பகுதியில் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நேரிடையாக அவர் பார்த்தது பற்றி அவர் கூறுவதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்//
திரு.வெங்கட்ராமன் கல்யாணம் அவர்கள் சொன்னதாக மலர் மன்னன் சொன்னதை நாம் நம்புவதை விட அவரே (கல்யாணம்) சொன்ன தகவல் ரீடிப்.காம் இல் கிடைக்கிறது.
http://in.rediff.com/news/2002/aug/15spec.htm
அழகப்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://etheytho.blogspot.com/2006/01/blog-post_21.html
"சரி, அடிப்படையான விஷயத்திற்கு வருவோம். ரகசியமாக நடந்த காந்திஜி கொலை வழக்கு விசாரணை முடிவில், கோட்ஸேயின் வாக்குமூலத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்த நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?
"அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜூரர் முறைத் தீர்ப்பு நம் நாட்டில் இருக்கும் பட்சத்தில் குற்றம் சாப்பட்டிருப்பவரை நான் நிரபராதியென விடுதலை செய்யவேண்டியிருக்கும்'' என்பதுதான்!
இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகளே. கற்பனை அல்ல. பத்திரிகைகளுக்கு அன்று இதனை வெளியிட அனுமதி தரப்படவில்லை. ஆனால் இன்று நீதிமன்றப் பதிவாளரிடம் அனுமதி பெற்று ஆய்வுக்காக எனக்கூறி சரிபார்த்துக் கொள்ளலாம். வசதியுள்ள சரித்திர பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு இது எளிதாக முடியும்.
வழக்கை விசாரித்துத் தீர்ப்பு அளித்த நீதிபதியே பகிரங்கமாக அப்படிச் சொன்னார் என்றால் காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும் என யோசிக்கத் தோன்றுகிறதா இல்லையா?
இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது. காந்திஜி கொலை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகிவிட்டிருக்கிற ஒரு சரித்திர நிகழ்வு. உணர்ச்சி வசப்படாமல் ஆராயக் கூடிய சூழல் உருவாகிவிட்டிருக்கிற தருணம் இது. சலனப்படாமல் அந்த நி¤கழ்வை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து விவரங்களைப் பதிவு செய்வதுதான் நமது நோக்கமாயிருக்க வேண்டுமேயன்றி, ஓட்டுகளுக்காக அலையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைப் போல மதவெறி, மிருகத்தனம் என்றெல்லாம் மனம் போன போக்கில் ஏதும் சொல்லிக் கொண்டிருக்கலாகாது."
மேலே இருப்பது நான் இட்ட காந்தி கோட்ஸே இரண்டாம் பாகப் பதிவில் மலர் மன்னன் அவர்கள் குறிப்பிட்டது. அவர் கோர்ட் ஆவணங்கள் சார்ந்து கூறுகிறார்.
காந்தி கோட்ஸே முதல் பாகத்தில் மலர் மன்னன் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுவும் கோர்ட் ஆவணங்கள் சார்ந்துதான் என்பதையும் நினைவில் வைக்கவும்.
"சாவர்கரையும் கூடக் கொலையில் பங்குபெற்றவர் எனக் குற்றப் பத்திரிகை கூறியது. விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். கவனியுங்கள், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அல்ல (குற்றத்தைக் காவல்துறை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சட்ட நுணுக்க ரீதியாகப் பிழை உள்ளது என்கிற காரணங்களுக்காகக் குற்றவாளிகள் விடுதலை செய்யபட்டால்கூட, நீதிமன்றமே எங்கள் மீது தவறு இல்லையென விடுதலை செய்து விட்டது என்று அரசியல்வாதிகள் தீர்ப்பைத் திருத்திப் பேசுவது இக்காலத்தில் வழக்கமாகிவிட்டிருக்கிறது! அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் காவல் துறை வேறு வழியின்றி வேண்டுமென்றே குற்றப் பத்திரிகையைச் சரிவரத் தாக்கல் செய்யாமல் விடுவதும், குற்றத்தை உறுதிசெய்வதற்கான சாட்சியங்களை முன்னிறுத்தாமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்வதுமான முறைகேடுகள் இன்று சர்வ சகஜமாகிவிட்டிருக்கின்றன! ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் வழக்கு இப்படித்தான் குற்றம் நிரூபணமாவதற்குப் போதிய சான்றுகளைத் தரப் ப்ராசிக்கியூஷன் தவறிவிட்டது என்கிற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதைத் தங்களின் வெற்றியாகக் காங்கிரஸ் கொண்டாடுகிறது )."
இப்பின்னூட்டத்தையும் என் காந்தி கோட்ஸே இரண்டாம் பகுதியில் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு.வெங்கட்ராமன் கல்யாணம் அவர்கள் சொன்னதாக மலர் மன்னன் சொன்னதை நாம் நம்புவதை விட அவரே (கல்யாணம்) சொன்ன தகவல் ரீடிப்.காம் இல் கிடைக்கிறது.
http://in.rediff.com/news/2002/aug/15spec.htm
நீங்கள் கொடுத்த சுட்டி என் திரையில் வேலை செய்யவில்லை நண்பர் நல்லடியார் அவர்களே. நான் ஏதேனும் தவறாக சுட்டுகிறேனா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இறைநேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://copymannan.blogspot.com/2006/01/blog-post_19.html
"* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?"
இதற்கான பதிலை என்னுடைய காந்தி கோட்ஸே பற்றிய இரண்டாம் பதிவில் பின்னூட்டமாக கொடுத்திருக்கிறேன்.
"பெண் கற்பு புகழ் (இப்பட்டம் அவருக்கு புகழ் சேர்க்கிறதாம்!!!!??!!. பாவம், மா-- என்று சொல்வதை தான் அவர் வார்த்தையில் "பெண் கற்பு புகழ்" என்று கூறுகிறேன் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு வெகுளியாக இருக்கிறாரே!) டோண்டு அவர்கள் என் கேள்வியை நீங்கள் புரிந்து கொண்ட அளவிற்கு அவர் புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. அதனால் தான் அப்படி பதிலளித்திருக்கிறார்."
நீங்கள் கூறியது புரியாமல் போக நான் என்ன மடையனா? இவ்வளவு தரக்குறைவாக ஒருவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் தாக்குகிறீர்கள். அதை அக்னாலட்ஜ் செய்வது என் தகுதிக்கு ஏற்றதில்லை, ஆகவே அதை தமாஷாக மாற்றினேன்.இல்லை நான் தரக்குறைவாகத்தான் இருப்பேன் என நீங்கள் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.
என் புதுக் கல்லூரியில் நீங்கள் படிக்கவில்லை என நம்புகிறேன். God spare my alma mater such old students.
(வில்) அம்புடன்,
டோண்டு ராகவன்
என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://merkondar.blogspot.com/2006/01/3.html
கல்யாணம் அவர்கள் ரீடிஃப்ஃபுக்கு சொன்னது இதோ: "I am the only living witness to the incident today. I was just a few inches behind him when he was shot at. The bullet missed me by six inches. His death was instantaneous. People say, he said 'Hey Ram'. I don't know. I don't remember having heard anything. Maybe all of us were shocked. I do not know how somebody could think of shooting a good man like him (http://in.rediff.com/news/2002/aug/15spec.htm)"
மலர் மன்னன் அவர்கள் எழுதியது:
"காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு "ஹே ராம்' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி "ஹே ராம்' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த "ஹே ராம்' சமாசாரமும் ஒன்று!"
இரண்டுக்கும் இடையில் என்ன முரண்பாடு இருப்பதாகக் கூறுகிறார்கள்? ரிடிஃப்ஃபில் கல்யாணம் ஹே ராம் பற்றி கூறியது ஒரு வித சங்கடத்துடந்தான் என்று எனக்கு படுகிறது. சரித்திர புத்தகங்களில் எல்லாம் வந்து விட்ட ஒரு விஷயத்தை அப்படி ஒரேயடியாக மறுக்கத் தயங்கியுள்ளார். அவர் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் அவர் கூறியது விளங்கும். மலர் மன்னன் அவருடன் சில நாட்கள் தங்கியிருந்து விவரம் சேகரித்திருக்கிறார்.
ஒன்று செய்யலாம், ரிடிஃப் சார்பில் கல்யாணம் அவர்களை பேட்டி கண்டவரையே சந்தித்துக் கேட்கலாம்.
"குமரி அணந்தன் ஒரு முறை பேசும் போது சொன்னார்,' காந்திஜி இறப்பதற்கு நான்கு (சரியாக தெரியவில்லை) சொன்னாராம் என்னை எதிரி கொலை செய்யும் போது கூட அவனை வைய மாட்டேன் ஏ ராமா எனத் தான் சொல்வேன் என்று சொன்னார் சொன்னபடியே சொல்லிவிட்டார்.' என்று சொன்னார்."
குமரி அனந்தன் அவர்கள் நேரடியாகக் கேட்டாராமா? ஆனால் அவர் கூறியதிலிருந்து இந்த ஹே ராம் வெர்ஷன் எப்படி வந்தது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.
அது சரி, கோட்ஸே ஏதோ இஸ்மாயில் என்றெல்லாம் கையில் பச்சை குத்தியிருந்ததாகக் கூறப்பட்டதே? அது என்ன ஆயிற்று? நீதிபதி கோட்ஸேயையும் ஜூரிகளையும் வைத்து ஏதோ கூறினாரே, அது பற்றி நானும் மலர் மன்னன் எழுதியிருந்ததிலிருந்து குறிப்பிட்டிருந்தேனே? அது பற்றி ஏதாவது எதிர் வினைகள்?
நான் மறுபடியும் கூறுவேன், மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்ஸே கொலையாளிதான். அவன் செய்தததை நியாயப்படுத்தவே முடியாது. அதற்கான தண்டனையும் அவன் அனுபவித்தாகி விட்டது. என்னுடைய கேள்வியெல்லாம், அரசு ஏன் எல்லாவற்றையும் இத்தனை நாட்கள் மூடி மறைத்தது என்பதுதான். மேலும் இப்போது எல்லாவற்றையும் நன்கு கூர்ந்து கவனித்து ஒரு பழம்பெறும் பத்திரிகையாளர் எழுதும் போது ஏன் இந்தக் கூச்சலெல்லாம்?
இப்பின்னூட்டம் என்னுடைய "காந்தியும் கோட்ஸேயும்" பற்றிய இரண்டாம் பகுதியிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
See http://www.asianage.com/main.asp?layout=2&cat1=1&cat2=22&newsid=205891&RF=DefaultMain
Gandhiji didn't say He Ram as he died, says aide - By K.Venugopal
Thiruvananthapuram, Jan. 30: Countless biographers have recounted that Mahatma Gandhi had muttered "He Ram" when he was shot by Nathuram Godse in New Delhi on January 30, 1948.
However, if the Mahatma’s personal assistant Venkita Kalyanam is to be believed, the Father of the Nation had said nothing after he was shot.
Mr Venkita Kalyanam, who arrived in Kollam to take part in a programme held in connection with Martyrs’ Day, told the media on Monday that Bapu could not say anything when he was shot by the assassin.
"I was right behind him when he was shot," said Mr Kalyanam.
"He did not say anything. He died immediately."
According to him, Gandhiji fell backwards with a groan and his spectacles and sandals fell off on impact.The 83-year-old former aide of Mahatma Gandhi also accused the Congress Party of betraying the ideals of the Mahatma after his assassination.
According to him, Gandhi was not keen on Jawaharlal Nehru becoming Prime Minister after Independence. The Mahatma wanted an ordinary person, preferably a farmer, to become Prime Minister.
"However, Nehru was ambitious and was afraid that he was getting old and would not get another chance," said Mr Kalyanam. "So he insisted on becoming Prime Minister and also favoured the partition of the country."
Post a Comment