ரோசா வசந்த் அவர்களின் ஒரு பின்னூட்டத்தில் தாம்ப்ராஸ் மீட்டிங்கைக் குறிப்பிட்டு நான் அதற்கு போனேனா என்பது தெரியாதென்றெழுதியிருந்தார். நான் அதற்கு போகவில்லை என்று அவருக்கு அதே பதிவில் பின்னூட்டமிட்டேன். அன்று (25.12.2005) நான் ஹ்யூமர் கிளப் மைலை சேப்டருக்கு "Guest of Humour" (not honour!) ஆகச் சென்றிருந்தேன். அதற்கு முந்தைய நாளும் மீட்டிங் நடைபெற்றதாக அறிந்தேன். அது எனக்கு நிசமாகவே தெரியாது. தெரிந்திருந்தால் போயிருப்பேன். ஆக, நான் இப்போது அந்த மீட்டிங்கைப் பற்றி எழுதப் போவது நேரடியாகப் பார்த்து வருவதல்ல. பல இடங்களில் படித்து அறிந்ததுதான்.
இப்பதிவை என்னுடைய பழைய பதிவு "சில வெளிப்படையான எண்ணங்கள்"-ன் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். அது சம்பந்தமான பல பின்னூட்டங்கள் என்னுடைய இன்னொரு பதிவில்தான் அதிகமாக வந்தன. முதற்கண் நான் சில விஷயங்களுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறேன். பல ஆண்டுகளாக தேவையற்ற பொறுமை காத்து வந்திருக்கும் பார்ப்பனர்கள் இப்போது சீறுவது கண்டு சந்தோஷம். இப்போதாவது நான் எடுத்த நிலைதான் சரியானது என்பதை வலைப்பூ உலகில் இருக்கும் பல பார்ப்பனர்கள் புரிந்துகொண்டால் சரிதான்.
சுஜாதா அவர்கள் என்ன அப்படித் தவறாகக் கூறிவிட்டார்? பார்ப்பனர்கள் தமிழை அழிக்கிறார்கள் என்ற அவதூறு பிரசாரத்திற்குத்தான் தக்க பதிலளித்தார் அவர். இப்போது கூட தமிழ் என்று உச்சரிக்க முடியாத பலர் தமிள் என்று கூற அதை ஸ்பஷ்டமாக உச்சரிப்பவர்கள் பார்ப்பனரே. இதை நான் இங்கு கூற காரணம் ழகரம் தமிழின் சிறப்பு என்ற நிலையில் அச்சிறப்பை வளர்க்க இயலாத நிலையில் பலரும் இருப்பதே. மேலும் கூறுவேன், தமிழகத்தில் பிறந்து, இங்கேயே வளர்ந்து வரும் நாங்கள் தமிழர்கள் என்று கூற எவருடைய சான்றிதழும் எங்களுக்கு தேவையில்லை.
ஆனால் ஒன்றை முதலிலேயே கூறிவிடுகிறேன். அரிவாளைத் தூக்கிக் காட்டுவது சற்று மிகைப்படுத்தலே ஆகும். கும்பலில் வந்த ஆக்ரோஷம் என்று கூறினாலும் சற்றே அடக்கி வாசித்திருக்க வேண்டுமென்றே நான் கூறுவேன்.
முகமூடி அவர்கள் தன் பதிவில் கூறுகிறார்: "பிராம்மணர் மாநாட்டில் கலந்து கொண்டதால் திராவிடர் கழக பீரங்கியான உண்மை நாளேடுக்கு சாலமன் பாப்பையா பேச்சு வியாபாரியாகிவிட்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட மீனவ பிரதிநிதியும் இவர்களின் விமர்சனத்துக்கு தப்பவில்லை. ஆக இதை ஒரு செய்தியாக இல்லாமல் தனது விமர்சனத்தோடும் சேர்த்து வழங்கியிருக்கும் உண்மையில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பது தெரியவில்லை. எப்படியும் உண்மைக்கு பிராமண சங்கத்திடமிருந்து விளக்க கடிதங்களும் வரப்போவதில்லை. ஆக இப்போதைக்கு உண்மை சொல்வதே மெய்..."
உண்மை பத்திரிகை பற்றி. அவர்களுக்கெல்லாம் விளக்கம் அளித்தல் கால விரயமே, ஏனெனில் அவர்கள் அதைப் போட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இந்த விஷயத்தில் உண்மை, விடுதலை ஆகிய பத்திரிகைகள் தங்களுக்கு சங்கடம் தரும் விஷயத்தைப் போட மாட்டார்கள் என்பது தெரிந்ததே. ஆகவேதான் பிராம்மணர்கள் சங்கம் உண்மை பத்திரிகைக்கெல்லாம் எழுதி நேர விரயம் செய்யவில்லை.
பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை மட்டும் அடிக்கும்படி கூறிய பெரியார் அவர்களின் சீடர்களிடம் நியாயம் எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாதுதான். இத்தருணத்தில் இதை பெரியார் அவர்கள் பிராம்மனாள் ஹோட்டல் என்று குறிப்பிடுவதற்கு எதிர்த்து செய்த ஆர்ப்பாட்டத்தின் சமயத்தில் நான் நேரடியாக கேட்டவன் என்ற முறையில் நான் கூறியது நேரடி சாட்சி மூலம் என்பதையும் சொல்லிவிடுகிறேன். பாப்பாத்தியை தேசீய உடமையாக்கு என்ற ரேஞ்சுக்கெல்லாம் எதிரிகள் பேசுவார்களாம் ஆனால் பார்ப்பனர் பொறுமை காட்ட வேண்டுமா? ஆகவேதான் வெட்டுவோம் என்று பிரமிட் நடராஜன் அவர்கள் அவ்வாறு பேசினார்.
பிராம்மணாள் ஹோட்டல் விஷயமும் கேலிக்கூத்தாகவே முடிந்தது. திருவல்லிக்கேணியில் உள்ள முரளி கஃபேயில்தான் போராட்ட மையம். பெரியார் அவர்கள் பிறாம்மணாள் ஹோட்டல் என்று கல்லில் செதுக்கியது மேல் தாரைப் பூச, அது இன்னும் பளபளவென ஜொலித்ததுதான் மிச்சம். ஹோட்டல் முதலாளி முரளி ஐயர் அவர்களிடம் தி.க.வின் பாச்சா பலிக்கவில்லை என்பதுதான் நிஜம். பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு முரளி அவர்களே காஞ்சிப் பெரியவர் கூறியதற்கிணங்க தானே அதை செதுக்கி எடுத்தார்.
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்பது உண்மையே. பார்ப்பனர்கள் தங்கள் நலனைத் தாங்களே பார்த்துக் கொள்வதுதான் நல்லது.
பத்ரி அவர்கள் கூறுவது போல ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தணக் குடும்பங்களுக்கு உதவுவது என்பதையும் பிராம்மணர் சங்கம் வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல ஆக்கப் பூர்வ வேலைகள் காத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் செய்ய நாம் யாருடைய தயவையும் எதிர்ப்பார்க்கக் கூடாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
41 comments:
உச்சரிப்பு பற்றிய நீங்கள் கூறுவது சரி..ஆனால் தமிழ் இருக்க சம்ஸ்கிருதம் தான் தமிழை விட உயர்ந்த மொழி என்று சிலர் கூறும்போதே சந்தேகம் ஆரம்பித்து விடுகிறதே அய்யா...
பக்கத்து வீட்டுக்காரி நல்லவ தான்..அழகிதான்..ஆனாலும் நம்ம அம்மாதான் நமக்கு முதல்ல முக்கியம்.....( இதில் அம்மா என்பது நீங்க நினைக்கற அம்மா இல்லை)
//தமிழகத்தில் பிறந்து, இங்கேயே வளர்ந்து வரும் நாங்கள் தமிழர்கள் என்று கூற எவருடைய சான்றிதழும் எங்களுக்கு தேவையில்லை. //
இதுவும் சரி தான்..
otherwise this post காரம் கம்மி அய்யா.....காரம் கம்மி
வணக்கம் முத்து அவர்களே,
தமிழ் வடமொழியை விட எவ்வகையிலும் குறைந்ததல்ல. பல மொழி தெரிந்தவன் என்ற முறையில் கூறுவேன், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவதெங்கும் காணோம் என்றுதான் நானும் கூறுவேன். நீங்கள் குறிப்பிட்டபடி யார் கூறினாலும் அதை நான் ஆதரிக்கவில்லை.
மற்றப்படி வேண்டிய காரம் இப்பதிவில் சுட்டிய என்னுடைய இரண்டு முந்தையப் பதிவுகளிலும் வந்து விட்டது. என்னுடைய இப்பதிவு அதையெல்லாம் உறுதி செய்கிறது, அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மார்கழி முழுக்க கண்ணனையும் சிவபெருமானையும் திருப்பாவை, திருவெம்பாவை மூலம் அருள் வேண்டி பாடப்படுகிறதே. கடவுள் வழிப்பாட்டில் வைணவமும் சைவமும் தமிழுக்கு அளித்த முக்கியத்துவம் தெரியுமல்லவா? பார்த்தசாரதி பெருமாள் விதி புறப்பாட்டில் பிரபந்தங்களும் வேதங்களும் சேர்ந்தல்லவா முழங்குகின்றன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
வெரி குட்..போற போக்கைப் பார்த்தா ,சம உரிமை வேண்டி "பேமானி..இன்னாடா..கீச்சுடுவேன்" ரேஞ்சுக்கு வந்திடுவீங்க போல இருக்கே .
உங்கள் வெளிப்படைக்கு பாராட்டுக்கள் .வேலில போற பாம்ப எடுத்து மடியில போட்டுட்டு வீரம் பேசுறது நல்லா தான் இருக்கு .ஆனா கொஞ்ச நேரத்துல ஐயையோ குத்துது குடையுதுண்ணு ஆர்ப்பாட்டம் பண்ணாமயிருந்தா சரி.
"சம உரிமை வேண்டி "பேமானி..இன்னாடா..கீச்சுடுவேன்" ரேஞ்சுக்கு வந்திடுவீங்க போல இருக்கே"
கண்டிப்பாக இல்லை. அரிவாளைத் தூக்கிக் காட்டியது டூ மச் என்றுதான் எழுதியிருந்தேன்.
பிரமிட் நடராஜனைப் பற்றி எழுதுயது கூட அவரைப் புரிந்து கொள்ள முடிகிறது என்று எழுதினேன்.
ஆனால் ஒன்று, இனிமேல் குடுமி, பூணலை அறுக்க வருபவர்கள் சற்றே யோசிப்பது நலம், ஏனெனில் அவர்களுடையது ஏதாவது அறுபடும் வாய்ப்பு உள்ளது.
"ஆனா கொஞ்ச நேரத்துல ஐயையோ குத்துது குடையுதுண்ணு ஆர்ப்பாட்டம் பண்ணாமயிருந்தா சரி."
நீங்கள் என்னைக் கூறினீர்கள் என்றால் இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன் என்பதால்தான் என் வெளிப்படையான எண்ணங்களை 7 மாதங்கள் முன்னமேயே வெளியிட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எப்படியோ அய்யர்களுக்கும் சத்திரிய வீரம் வந்து விட்டது.
ஏன் பரசுராமர் இல்லையா, என பட்டில்போட வேண்டாம்
அது காலங்கள் மாறிவிட்டது சார்
//ஆனால் ஒன்று, இனிமேல் குடுமி, பூணலை அறுக்க வருபவர்கள் சற்றே யோசிப்பது நலம், ஏனெனில் அவர்களுடையது ஏதாவது அறுபடும் வாய்ப்பு உள்ளது.//
டோண்டு சார்,
பிரமிடு நடராசன் முந்தின நாள் சூட்டிங்குல பேசுன வசனத்தை அப்படியே சொன்னதுக்கு இவ்வளவு பில்டப்-ஆ? ஆனாலும் உங்களுக்கு அந்த தமாசு மட்டும் போகவே போகாது போல..
"அது காலங்கள் மாறிவிட்டது சார்"
உண்மைதான் என்னார் அவர்களே. நான் என் முதல் பதிவில் கூறியது என் சக பார்ப்பனர்களைப் பார்த்துத்தான். இப்போது பலர் என்னைப்போலவே மாறிவருவது பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"டோண்டு சார்,
பிரமிடு நடராசன் முந்தின நாள் சூட்டிங்குல பேசுன வசனத்தை அப்படியே சொன்னதுக்கு இவ்வளவு பில்டப்-ஆ? ஆனாலும் உங்களுக்கு அந்த தமாசு மட்டும் போகவே போகாது போல.."
ஷூட்டிங்கிலயா மீட்டிங்கிலயா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஷூட்டிங்கிலயா மீட்டிங்கிலயா?//
ஐயய்யோ! டோண்டு சார் ஆரம்பிச்சுடீங்களா ? இன்னும் உங்களை எழுப்புறது கஷ்டம் ..பிரமிடு நடராசன் இப்போ என்ன தொழில் பண்ணிட்டிருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா ? எகிப்துல பிரமிடு கட்டிடிருக்காருண்ணு எதையாவது குண்டத் தூக்கி போட்டுடாதீங்க!
"பிரமிடு நடராசன் இப்போ என்ன தொழில் பண்ணிட்டிருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா ?"
அது தெரியும் ஜோ அவர்களே. ஆனால் அவர் மீட்டிங்கில் பேசியதாகப் படித்ததைத்தானே நான் கூறினேன். அதனால்தான் நீங்கள் ஷூட்டிங் என்றதும் குழம்பி விட்டேன். ஆக, எப்படியோ உங்களிடமிருந்து பின்னூட்ட மழைகள்!! ஜாலி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னூட்டங்கள் இற்றைபடுத்துவதில் ப்ளாக்கர் சொதப்புகிறது ஏன் என்று தெரியவில்லை. பத்து பின்னூட்டங்களிலேயே நிற்கிறது. 11 மற்றும் 12 வரவில்லை. இப்போது 13 எல்லாவற்றையும் கொண்டு வரும் என நம்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
ஜாதிங்கறது நமக்கு நாமே போட்டுக்கிட்ட ஒரு முள்வேலின்னு ஏன் சொல்றேன்னு தெரியுதா..
அது உள்ளருந்து வெளியே வரணும்னு நினைக்கறவனையும் குத்தி காயப்படுத்தும்.. வெளியே இருந்து உள்ளே வரணும்னு நினைக்கறவனையும் குத்தி காயப்படுத்தும்..
அந்த வேலிய அறுத்து எறிஞ்சிட்டு நிம்மதியா இருங்க..
நீங்க என்ன வாதம் செய்தாலும் அந்த சங்க மீட்டிங்கில் சிந்தியவை முத்துக்கள் அல்ல அழுகிய முட்டைகள்.
Sorry I like you as a person. Whatever you write in support of your so called பிராமணர்கள்.
Of all these people I really pity Sujatha.
உங்கள் கருத்தை மிகவும் மதிக்கிறேன் ஜோசஃப் அவர்களே.
ஆனால் என்னதான் சொன்னாலும் ஜாதி என்பது போகாதுதான். நாம் வேண்டாம் என்றாலும் நம் குடும்பத்தினர் விட மாட்டார்கள். பிடிக்கிறதோ இல்லையோ அது எப்போதும் இருக்கிறது என்பதே நிஜம்.
வலைப்பூ உலகில் பயம் காரணமாக தம் ஜாதியை மறைத்த பார்ப்பனர்களைத்தான் நான் அதிகம் குறிவைத்தேன். ஆம், நான் பார்ப்பனன் என்று கூறிக் கொண்டதால் எனக்கு ஒரு கெடுதலும் வரவில்லை. அதைக் என்னைப் போலக் கூறிக்கொள்ளாமல், ஆனால் மற்றவர்கள் அறிந்த பார்ப்பனர்களும் திட்டிலிருந்து தப்பிக்கவில்லை, பத்ரி, வெங்கட் உள்பட.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மனக்குமுறல் அவர்களே,
ஆண் பெண் கற்பு பற்றிய பதிவில் வந்த உங்கள் பின்னூட்டம் புரியத்தான் இல்லை. இப்போது விளக்கம் அளித்ததற்கு நன்றி.
இப்போது இப்பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டம் பற்றி.
ரொம்பவும் லட்சியவாதியாகத் தோன்றுகிறீர்கள். நான் உலகத்தில் நிறைய அடிபட்டவன். வெறுமனே இருந்தாலும் ஜாதியை வைத்து சீண்டுபவர் அனேகம். அப்போதும் சும்மா இருந்தால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். மேலே நான் சாதாரண ஆசாபாசங்கள் நிறைந்த மனிதன்தான். மஹாத்மா காந்தியெல்லாம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பல ஆண்டுகளாக தேவையற்ற பொறுமை காத்து வந்திருக்கும் பார்ப்பனர்கள் இப்போது சீறுவது கண்டு சந்தோஷம். இப்போதாவது நான் எடுத்த நிலைதான் சரியானது என்பதை வலைப்பூ உலகில் இருக்கும் பல பார்ப்பனர்கள் புரிந்துகொண்டால் சரிதான்//.
சீறணும்?!., ஆனா அருவா தூக்கறது தப்பு., என்ன சொல்ல வர்றிங்க?., நீங்க சூசகமாகவும்., சூட்சமமாகவும் பேசறது புரியலையே டோண்டு அவர்களே.
//தமிழகத்தில் பிறந்து, இங்கேயே வளர்ந்து வரும் நாங்கள் தமிழர்கள் என்று கூற எவருடைய சான்றிதழும் எங்களுக்கு தேவையில்லை//
ஆனால் தமிழ்நாட்டின் மீதான அக்கரை., உங்கள் படைப்பாளிகளுக்கு இருக்கிறதா?
//தமிள் என்று கூற அதை ஸ்பஷ்டமாக உச்சரிப்பவர்கள் பார்ப்பனரே//
எங்க 'சா'வச் ஷா வாக்கி., சரவணன ஷரவணன், சிவா வ ஷிவா... அட பசியக் கூட பஷி, சூட.. ஜீடு. மணிப்பிரவளம்ங்கிற பேர்ல பிரவளமா கொண்டு வந்து கொட்டி தமிழ் மொழிய அதை ஸ்பஷ்டமாக உச்சரிப்பவர்கள் பார்ப்பனரே(இது உங்க வார்த்தைகள்தான்.). இதப் பத்தி எழுதுனா ஒரு பதிவே பத்தாது.
//கும்பலில் வந்த ஆக்ரோஷம் என்று கூறினாலும் சற்றே அடக்கி வாசித்திருக்க வேண்டுமென்றே நான் கூறுவேன்//
அது என்னா அடக்கி வாசிக்கிறது அப்ப அடக்கி, வெளிய வந்து வாசிங்கிறிங்களா?. தெளிவச் சொன்னால் நல்லது.
//எப்படியும் உண்மைக்கு பிராமண சங்கத்திடமிருந்து விளக்க கடிதங்களும் வரப்போவதில்லை//
இதுக்கு உங்கள் விளக்கம் வேறு., விளக்கம் எழுதிப் போட்டு அது அப்பத்திரிக்கையில் வராமப் போச்சா?.,
//அவர்கள் அதைப் போட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்// //ஆகவேதான் பிராம்மணர்கள் சங்கம் உண்மை பத்திரிகைக்கெல்லாம் எழுதி நேர விரயம் செய்யவில்லை//
என்னய்யா எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிக்கிறிங்க? சந்தடி சாக்குல விடுதலையையும் இழுத்திட்டிங்க.
//பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை மட்டும் அடிக்கும்படி கூறிய பெரியார் அவர்களின் சீடர்களிடம் நியாயம் எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாதுதான்//
அவரு அடிக்க சொன்னாரு நீங்க ஆயிரம் வருடங்களாக அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்களிலே வேறுபாட்டை விதைத்து., பங்காளிகளிடையே சண்டை மூட்டி மேலானவனென்றும், கீழானவன் என்றும் அவன் வாழ்க்கையில், வாழ்வாதாரத்தில் அடித்தீர்கள். அட கொஞ்ச பேர் இருக்கிற வலைப் பதிவில் கூட உங்கள் சாதி ஆணவத்தை காட்டுகிறீர்கள்.
//பிராம்மனாள் ஹோட்டல் என்று குறிப்பிடுவதற்கு எதிர்த்து செய்த ஆர்ப்பாட்டத்தின்//
அதை ஏனய்யா எதிர்த்தார்?., முழுப் பூசிணிக்காயை மறைத்து வெற்று வீராப்பு பேசிகிட்டு இருக்கிங்க., பிரமனாள் ஹோட்டல் என்றால் அங்கு வேறு ஒருவனும் போக முடியாது.
//பாப்பாத்தியை தேசீய உடமையாக்கு என்ற ரேஞ்சுக்கெல்லாம் எதிரிகள் பேசுவார்களாம் ஆனால் பார்ப்பனர் பொறுமை காட்ட வேண்டுமா?//
இந்த வார்த்தைகளுக்காய் நானும் வருந்துகிறேன்., நீங்க அருவான்னு சொன்னதற்கு வருந்துவதைப் போல. இப்படிப்பட்ட வெறுப்பின் பின்னனி என்னன்னு உங்க பாட்டனாரக் கேட்டு தெரிஞ்சுகிட்டிங்களா?. ஒரு கூட்டம் உங்களையப் பார்த்ததுமே பொங்குதுன்னா... காரணமில்லாம பொழுது போகறதுக்கா செஞ்சாங்க?.
//கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்பது உண்மையே. பார்ப்பனர்கள் தங்கள் நலனைத் தாங்களே பார்த்துக் கொள்வதுதான் நல்லது//.
என்ன நலன்? அதுதான் உங்களையப் பாதுகாக்கறது 'ஹிந்திய' அரசாங்கம் இருக்கே., அனாவசியம கவலைப் படாதீங்க.
எந்த மத்திய அரசின் அலுவலகத்தைப் போய் பார்த்தாலும் அதுல நீங்கதான் சீட்டுக்கு சீட்டு இன்னும் இருக்கிங்க. (இந்த வாதத்த டப்புன்னு என்னோட குறுகிய நோக்கமா திரிச்சுறாதிங்க., எந்த மத்திய அரசு வேலையையும் நானோ என் உறவினர்களோ எங்கள் வருங்கால சந்ததிகளோ கூப்பிட்டுக் கொடுத்தாலும் நிராகரிப்போம்!. எங்களுக்கு அது தேவையில்லை). ஆனால் அது தேவையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கெல்லாம் போகும்போது இந்த இட ஒதுக்கீடெல்லாம் கண்துடைப்பே எனவே நான் நினைப்பேன்.
//வலைப்பூ உலகில் பயம் காரணமாக தம் ஜாதியை மறைத்த பார்ப்பனர்களைத்தான் நான் அதிகம் குறிவைத்தேன்//
உங்கள் இருப்பை நிறுவ உங்களுக்கு பெரியார் எந்தக் காலத்திலும் தேவை. எங்க போனாலும் ஒரு கூட்டத்தை சேத்துக்கனும்னு ஏன் நினைக்கிறிங்க?.
//ஆனால் மற்றவர்கள் அறிந்த பார்ப்பனர்களும் திட்டிலிருந்து தப்பிக்கவில்லை, பத்ரி, வெங்கட் உள்பட//
நீங்க பிராமின்னு பெருமை பேசப் போய்... பாவம் பத்ரியும், வெங்கட்டும்.
//வேண்டிய காரம் இப்பதிவில் சுட்டிய என்னுடைய இரண்டு முந்தையப் பதிவுகளிலும் வந்து விட்டது//
ஒரு ஆள பைத்தியமாக்கிற அளவு காரம் வந்திருச்சு.
சரஸ்வதி 'ஐயர் பொண்ணுங்க மீன் கழுவறதப் பத்தி கொக்கரிக்கிறது... பாருங்க... எனக்குத் தெரிந்த என் தோழிகள் கூட்டத்தில் ஒரே ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் பிராமின் பையன்களை திருமணம் செய்யவில்லை. ஏனெனில் அவர்களில் பொறியியளாளர், மருத்துவர்கள் குறைவு. மேலும் அவர்கள் வளர்க்கப் பட்ட சூழ்நிலை. மூன்றாம் ஆண்டு படிக்கும்போது எனக்கு ஏழரையாய் இருந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான ஒரு பெண்ணும் இதில் அடக்கம். அவங்க தெளிவா இருக்காங்க. ஏனேனில் அவர்களும் அடக்கப் பட்டவர்கள்.
//ஆனால் ஒன்று, இனிமேல் குடுமி, பூணலை அறுக்க வருபவர்கள் சற்றே யோசிப்பது நலம், ஏனெனில் அவர்களுடையது ஏதாவது அறுபடும் வாய்ப்பு உள்ளது//.
இங்க பாருங்க., மனிதன் விழுந்தால் ஒரு பிடி சாம்பல்., இதுல நான் உசத்தி, நீ தாழ்த்தின்னு கூட்டத்த சேர்ந்து அலறினாலும் இதுதான். கருப்புத் தோள் இருக்கிறதுனாலே சுஜாதாவுக்கு தினம் குளிக்கிறவன் அழுக்கானவனாகவும், அசிக்கங்கமாகவும் தெரிகிறது. பத்துநாள் துவைக்காத அழுக்கு வேட்டிய கட்டிகிட்டு இருந்தாலும் பட்டையோ, நாமமோ போட்டுகிட்டு வெள்ளையா இருக்கானா அவன் உலக அமைதிக்கு வித்திடுகிறவன், உலகத் தூய்மையாவனன். என்ன படித்தாலும் 'நிதமும் மீன் கூடை வீட்டுக்கு முன்னாடி இறங்குதா... அவள் ஒழுக்கம் கெட்டவள்., பள்ளி தலைமை ஆசிரியையாக இருந்தால் கூட தப்பு செய்வாள். - உங்கள் படைப்டைப்பாளிகள் தமிழ் நாட்டுல இருந்துகொண்டு, நெஞ்சத்துணிவுடன் தரும் படைப்புகள் இவை. எத்தனைய அறுத்தும் எங்கய்யா திருந்துருங்க?. உங்கள் வயதிற்குத் தகுந்த வார்த்தைகளை எழுதுங்கள். சும்மா உக்காந்து இருக்கிர தி.கவ திரும்ப அறுக்கச் சொல்லி தூண்டி விடுகிறீர்களோ ஒரு வேளை?. உங்கள் சூசகமெல்லாம் யாருக்குப் புரியும்?
"சீறணும்?!., ஆனா அருவா தூக்கறது தப்பு., என்ன சொல்ல வர்றிங்க?., நீங்க சூசகமாகவும்., சூட்சமமாகவும் பேசறது புரியலையே டோண்டு அவர்களே."
உங்கள் புரிதலுக்காக நான் அதைக் கூறவில்லை.
"ஆனால் தமிழ்நாட்டின் மீதான அக்கரை., உங்கள் படைப்பாளிகளுக்கு இருக்கிறதா?"
இல்லை யென்று எப்படி கூறுகிறீர்கள்?
எங்க 'சா'வச் ஷா வாக்கி., சரவணன ஷரவணன், சிவா வ ஷிவா... அட பசியக் கூட பஷி, சூட.. ஜீடு. மணிப்பிரவளம்ங்கிற பேர்ல பிரவளமா கொண்டு வந்து கொட்டி தமிழ் மொழிய அதை ஸ்பஷ்டமாக உச்சரிப்பவர்கள் பார்ப்பனரே(இது உங்க வார்த்தைகள்தான்.). இதப் பத்தி எழுதுனா ஒரு பதிவே பத்தாது."
தாராளமாக எழுதுங்கள். சுவாரசியமானதாகத்தான் இருக்கும்.
"அது என்னா அடக்கி வாசிக்கிறது அப்ப அடக்கி, வெளிய வந்து வாசிங்கிறிங்களா?. தெளிவச் சொன்னால் நல்லது."
நான் ஏற்கனவே சொன்னேனே, அது உங்கள் புரிதலுக்காக அல்ல.
"என்னய்யா எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிக்கிறிங்க? சந்தடி சாக்குல விடுதலையையும் இழுத்திட்டிங்க."
அக்காலக் கட்டங்களில் விடுதலையையும் படித்தவன் என்பதால் என் அனுபவத்தை வைத்தே பேசினேன். வாஞ்சிநாத ஐயர் மனைவிக்கு அவர் பார்ப்பனர் என்பதாலேயே அந்த ஏழைப் பெண்மணிக்கு பென்ஷன் வரக்கூடாது என்று கொடி பிடித்த பத்திரிகைதானே விடுதலை. அதையெல்லாம் அந்தந்த காலக் கட்டத்தில் நேரிலேயே பார்த்தவன் நான்.
"அவரு அடிக்க சொன்னாரு நீங்க ஆயிரம் வருடங்களாக அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்களிலே வேறுபாட்டை விதைத்து., பங்காளிகளிடையே சண்டை மூட்டி மேலானவனென்றும், கீழானவன் என்றும் அவன் வாழ்க்கையில், வாழ்வாதாரத்தில் அடித்தீர்கள். அட கொஞ்ச பேர் இருக்கிற வலைப் பதிவில் கூட உங்கள் சாதி ஆணவத்தை காட்டுகிறீர்கள்."
அப்படியா, திண்ணியத்தில் தலித்தை மலம் தின்ன வைத்தவன் பார்ப்பனனா? பாப்பாப் பட்டி, கீரிப்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளை கூட்ட விடாமல் செய்பவன் பார்ப்பனனா? இரட்டை தம்ளர் முறையை அமுல் படுத்தினவன் பார்ப்பனனா? என்ன பேசுகிறீர்கள்? உங்கள் ஜாதி என்னவென்று எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளத் தேவையும் இல்லை. நீங்கள் தலித்தாக இல்லாத பட்சத்தில் உங்கள் ஜாதிப் பெரியவர்களிலேயே பலர் தலித் மேல் கொடுமை செய்திருப்பார்கள். என்னிடம் கூறவேண்டாம், உங்கள் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளுங்கள்.
"//பிராம்மனாள் ஹோட்டல் என்று குறிப்பிடுவதற்கு எதிர்த்து செய்த ஆர்ப்பாட்டத்தின்//
அதை ஏனய்யா எதிர்த்தார்?., முழுப் பூசிணிக்காயை மறைத்து வெற்று வீராப்பு பேசிகிட்டு இருக்கிங்க., பிரமனாள் ஹோட்டல் என்றால் அங்கு வேறு ஒருவனும் போக முடியாது."
இல்லையே, எல்லோரும் போய்க்கொண்டுதானே இருந்தார்கள்? நானே பார்த்திருக்கிறேனே. வெறுமனே தன் பலத்தை காட்டிக் கொள்ள பெரியார் அவர்கள் செய்த வெட்டிப் போராட்டம்தான் அது. எங்கள் வீடு முரளி கஃபேக்கு அருகில்தான் இருந்தது. கருப்புச் சட்டைக்காரர்கள் செய்த அட்டூழியங்களை நேரில் பார்த்தவன் நான்.
"//பாப்பாத்தியை தேசீய உடமையாக்கு என்ற ரேஞ்சுக்கெல்லாம் எதிரிகள் பேசுவார்களாம் ஆனால் பார்ப்பனர் பொறுமை காட்ட வேண்டுமா?//
இந்த வார்த்தைகளுக்காய் நானும் வருந்துகிறேன்., நீங்க அருவான்னு சொன்னதற்கு வருந்துவதைப் போல. இப்படிப்பட்ட வெறுப்பின் பின்னனி என்னன்னு உங்க பாட்டனாரக் கேட்டு தெரிஞ்சுகிட்டிங்களா?. ஒரு கூட்டம் உங்களையப் பார்த்ததுமே பொங்குதுன்னா... காரணமில்லாம பொழுது போகறதுக்கா செஞ்சாங்க?."
ஆம், மற்ற உயர்சாதி இந்துக்கள் தலித் மேல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு எல்லாவற்றையும் பார்ப்பனர் மேல் போட்டார்கள். அதுதான் உண்மை. இப்போதும் அதுதான் நடக்கிறது. மேலும் 1967 தேர்தலில் பார்ப்பனர்கள் ஓட்டு போடக்கூடாது என்று பெரியார் ஆணையே போட்டார். அது தெரியுமா உங்களுக்கு?
எந்த மத்திய அரசின் அலுவலகத்தைப் போய் பார்த்தாலும் அதுல நீங்கதான் சீட்டுக்கு சீட்டு இன்னும் இருக்கிங்க. (இந்த வாதத்த டப்புன்னு என்னோட குறுகிய நோக்கமா திரிச்சுறாதிங்க.,"
அதெல்லாம் திரிக்க வேண்டிய அவசியமே இல்லை, அது குறுகிய நோக்கம்தான் என்பது வெள்ளிடை மலை.
"எந்த மத்திய அரசு வேலையையும் நானோ என் உறவினர்களோ எங்கள் வருங்கால சந்ததிகளோ கூப்பிட்டுக் கொடுத்தாலும் நிராகரிப்போம்!. எங்களுக்கு அது தேவையில்லை)."
சொல்லிக் கொள்ளுங்களேன், நீங்களோ உங்கள் சந்ததியினரோ நிஜமாகவே அதை செய்யப் போகிறிர்களா என்பதைப் பார்ப்பதா என் வேலை?
"ஆனால் அது தேவையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கெல்லாம் போகும்போது இந்த இட ஒதுக்கீடெல்லாம் கண்துடைப்பே எனவே நான் நினைப்பேன்."
இது உண்மைதான். இட ஒதுக்கீட்டில் வேலை பெற்று முன்னுக்கு வந்தவர்கள் மட்டுமே தங்கள் சந்ததிகளுக்கு அதை மேலும் மேலும் பெற்றுக் கொடுப்பதிலேயே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆகவே உண்மையானத் தேவை உடைய தலித்துகள் முன்னேற முடியவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
"இங்க பாருங்க., மனிதன் விழுந்தால் ஒரு பிடி சாம்பல்., இதுல நான் உசத்தி, நீ தாழ்த்தின்னு கூட்டத்த சேர்ந்து அலறினாலும் இதுதான். கருப்புத் தோள் இருக்கிறதுனாலே சுஜாதாவுக்கு தினம் குளிக்கிறவன் அழுக்கானவனாகவும், அசிங்கமாகவும் தெரிகிறது."
சுஜாதா எங்கு அவ்வாறு பேசினார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அப்படியா, திண்ணியத்தில் தலித்தை மலம் தின்ன வைத்தவன் பார்ப்பனனா? பாப்பாப் பட்டி, கீரிப்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளை கூட்ட விடாமல் செய்பவன் பார்ப்பனனா? இரட்டை தம்ளர் முறையை அமுல் படுத்தினவன் பார்ப்பனனா? என்ன பேசுகிறீர்கள்? உங்கள் ஜாதி என்னவென்று எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளத் தேவையும் இல்லை. நீங்கள் தலித்தாக இல்லாத பட்சத்தில் உங்கள் ஜாதிப் பெரியவர்களிலேயே பலர் தலித் மேல் கொடுமை செய்திருப்பார்கள். என்னிடம் கூறவேண்டாம், உங்கள் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளுங்கள்//
சாதி என்றொரு விதயத்தை புகுத்தி மனிதர்களைப் பகுத்தது பார்ப்பனீயம். என்னுடைய 'உள்ளடங்கும் ஆமைகள்' பதிவை படித்துவிட்டு., என் மனசாட்சியை கேட்கச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்., அது எங்கள் ஆள் ஒருவரின் மீது நடந்த கொடுமை. அவர் தலித் அல்ல.
தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டு பெரியார் என்றொரு மனிதர் உங்களை எதிர்த்தார் என்றால்... புரிந்து கொள்ளுங்கள். அவர் காமத்துக்காக மணியம்மையை மணம் புரிந்தார் என சிலர் எழுதுகிறீர்கள். ஊர் சொத்தை அபகரித்து, உடல் வளர்த்து., 'பல்லிளித்து' கைதூக்கி ஆசி வழங்கி., நம்பி வந்த பெண்களை மோசம் செய்யும் வேலையைச் செய்யவில்லை. அதற்காக அன்று யாரும் சப்பைகட்டு கட்டவில்லை. பொருந்தா மணத்தை எதிர்த்து வெளியேறினார்கள். அதை பற்றி ஊருக்கு உறைத்தார்கள். இங்க... கைல காப்பு மாட்டுன உடனதான எல்லாம் தெரியுது?. பெரியாருடைய உடமைகள் தமிழருக்கு பயன்படுகிறது. அவரை 'கன்னடர்' என்று தூற்றும்., பிற்படுத்தப் பட்டோருக்காக அவர் போராடினார்., தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என திரிக்கும் வேலைகளை செவ்வனவே செய்ய ஆரம்பித்துவிட்டனர் சிலர். நான் உங்களைச் சொல்லவில்லை. நான் எங்கே சொல்லியிருக்கிறேன்னு ஆரம்பித்துவிடாதீர்கள்.
//ஆம், மற்ற உயர்சாதி இந்துக்கள் தலித் மேல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு எல்லாவற்றையும் பார்ப்பனர் மேல் போட்டார்கள். அதுதான் உண்மை. இப்போதும் அதுதான் நடக்கிறது. மேலும் 1967 தேர்தலில் பார்ப்பனர்கள் ஓட்டு போடக்கூடாது என்று பெரியார் ஆணையே போட்டார். அது தெரியுமா உங்களுக்கு?//
எந்த சட்டசபையில் உட்கார்ந்து ஆணை போட்டார்?. ஆனா சட்டசபையில உட்கார்ந்த உடனே., 'ஹிந்திய' ப் புகுத்த 'குலக் கல்வி'ன்னு ஆடினது யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்.
//அதெல்லாம் திரிக்க வேண்டிய அவசியமே இல்லை, அது குறுகிய நோக்கம்தான் என்பது வெள்ளிடை மலை//.
தாராளமா நினைச்சுக்கலாம். ஆனா., குட்டையில இருந்து என்னைக்காவது எந்திருச்சு வாங்க...
//உண்மையானத் தேவை உடைய தலித்துகள் முன்னேற முடியவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?//
ஐ!!!!!
//சுஜாதா எங்கு அவ்வாறு பேசினார்//
இப்பிடியெல்லாம் வெளிய பேச முடியுமா?., திரையில வசனமாத்தான்.
கடைசியா ஒண்ணு, உண்மையாக தமிழுக்கு உழைத்தவர்களை 'தமிழ் தாத்தா'ன்னுதான் நாங்க புரிஞ்சுக்கிறோம். வாஞ்சியும், பாரதியும் மக்கள் மனதில் என்றும் இருப்பர். கூறு போடுபவர்கள்களை எப்போதுமே கூற்றென நினைப்பதுதான் சமுதாயத்திற்கு நல்லது.
"வாஞ்சியும், பாரதியும் மக்கள் மனதில் என்றும் இருப்பர்."
அதே வாஞ்சியைத்தான் துரோகி என்று கூறி விடுதலை எழுதியது. ஆஷ் துரையை சுட்டது ராஜத் துரோகம் என்றும் ஆகவே அவர் விதவைக்கு பென்ஷன் வழங்கலாகாது என்றும் விடுதலை எழுதியது. அது மட்டுமல்ல, ஆஷ் துரையை சுட்ட சமயத்தில் அப்போதைய குடியரசு பத்திரிகை வாஞ்சியை ஜாதி சொல்லி திட்டியது.
"இப்பிடியெல்லாம் வெளிய பேச முடியுமா?., திரையில வசனமாத்தான்"
எந்தப் படத்தில்?
"'ஹிந்திய' ப் புகுத்த 'குலக் கல்வி'ன்னு ஆடினது யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்."
எதையும் எதையும் முடிச்சு போடுகிறீர்கள்? ராஜாஜி அவர்களைப் பற்றிய என்னுடைய இரண்டாம் பதிவில் அவருடையக் கல்வித்திட்டத்தைப் பற்றி நான் எழுதியதையே உங்களுக்கு பதிலாகப் போடுகிறேன். இதில் ஹிஒந்தி எங்கு வந்தது? 1938-ல் ராஜாஜி அவர்கள் ஹிந்தியை அறிமுகப்படுத்தியதை நீங்கள் பேசினால் 1965 ஹிந்தி போராட்டத்தின் போது அந்தப் போராட்டத்தை எதிர்த்தவர் பெரியார் என்பதையும் அறிந்து பேசுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ,
இது இந்த பதிவிற்குச் சம்பந்தம் இல்லாதது .. சொல்லவேண்டும் என்று தோன்றியது அதனால்..
பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா
தகவலுக்காக
வாஞ்சிநாதன் பற்றிய எஸ் ராமகிருஷ்ணன் பார்வை/கட்டுரை
வரல் ஆற்றின் திட்டுகள்
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=20&fldrID=1
உங்களுக்கும் மற்ற எல்லா சக வலைபதிவாளர்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
வாஞ்சிநாதனை பற்றி நீங்கள் சுட்டியதை ஏற்கனவே படித்திருக்கிறேன்.
நன்றி,
டோண்டு ராகவன்
வருக பொழுது அவர்களே. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பென்ஷன் வேண்டாம் என்ற நிலை எடுக்கும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை நிலை இருந்திருக்கலாம் என்றாலும் அவர்கள் எடுத்த கொள்கை நிலைக்காக அவர்களை கண்டிப்பாக மதிக்கத்தான் வேண்டும்.
அதே போல எனக்குத் தெரிந்து சுதந்திரப் போராட்ட விரரின் விதவை என்ற முறையில் ஒருவருக்கு பென்ஷன் தர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் அவர் பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர் என்ற ஒரு காரணத்துக்காகவே எதிர்ப்பு தெரிவித்தது வாஞ்சிநாத ஐயரின் விதவையின் விஷயத்தில்தான். அப்பெண்மணியும் பென்ஷன் பெறாமலேயே இறந்தார். புதுக் கணவனை இழந்து 50 ஆண்டுகள் வறுமை + விதவை வாழ்க்கை வாழ்ந்த அப்பெண்மணியின் பாவத்தைக் கொட்டிக் கொண்டவர்கள் தி.க.வினர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"பென்ஷன் வேண்டாம் என்ற நிலை எடுக்கும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை நிலை இருந்திருக்கலாம்
adhellam illai. verum kollgaidhaan."
அவர்கள் பென்ஷனுக்கு அப்ப்ளை பண்ணியிருந்தால் விடுதலை அதை எதிர்த்திருக்கும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இது பார்ப்பன சங்கத்துக்கு மட்டும் வைக்கப்படும் வேண்டுகோளல்ல.அனைத்து சாதிசங்கங்களுக்கும் வைக்கபடும் வேண்டுகோள்தான்."
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நாட்டாமை அவர்களே. நீங்கள் கேட்பது மிக உயர்ந்த நிலை. ஆனால் அதை எந்த சாஹ்டி சங்கமும் ஒத்துக் கொள்ளாது, பிராம்மணர் சங்கம் உட்பட.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மனக்குமுறல் அவர்களே, என் ஜாதிதான் உயர்ந்தது என்று எப்போதும் கூறவேயில்லை. அதே போல மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று தேவையற்ற பயத்தினால் தன் ஜாதி அடையாளங்களை மறைத்துக் கொண்ட சக பார்ப்பனர்களைப் போல் செய்யவும் விரும்பவில்லை. நான் நானாகத்தான் இருக்க முடியும். வடகலை ஐயங்காராக பிறந்ததற்கு பெருமைப் படுகிறேன் என்று எழுதியதன் காண்டக்ஸ்டைத் தெளிவாகக் கூறியுள்ளேன். இப்பதிவில் அதுவும் சுட்டப்படுள்ளது என்பதையும் தெரிவித்து விடுகிறேன்.
"உங்களை சாதியை வைத்து சீண்டுகின்றார்கள் என்று சொல்கிறீர்கள். சாதியைச் சொல்லி அடையாளப் படுத்திக் கொள்வதால் சீண்டுகிறார்களோ என்னவோ."
இல்லவே இல்லை. பத்ரி, வெங்கட், மாயவரத்தான், அருண், பாலா எல்லாரையும் தேவையின்றி அவர்கள் ஜாதிக்காகச் சீண்டினார்கள். இதன் நடுவில் நான் வந்து வெளிப்படையாகக் கூறினேன், அவ்வாறு நான் இருப்பதற்கு எந்த ஜாட்டானுடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை என்று பொருள்படவும் பேசினேன்.
அதற்காக எந்த வருத்தமும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நிச்சயமாக, இம்மாதிரி சாதி சார்ந்த மாநாடுகள் நடத்தி, கோஷம் போடுவதால் பாதகம் தான் அதிகமே ஒழிய, யாருக்கும் பயன் ஒன்றும் இல்லை. காழ்ப்புணர்ச்சி தான் இறுதியில் மிஞ்சுகிறது. கஷ்டத்தில் இருக்கும் ஒரு மனிதனை (அவன் எந்த சாதிக்காரனாகவும் இருக்கட்டும்!) பார்க்கும்போது, பெரும்பாலானவர்களுக்கு மனதில் ஒரு நொடிப்பொழுதாவது, 'உதவ வேண்டும்' என்ற எண்ணம் துளிர்ப்பதின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் மனிதநேயம்! அதைத் தழைக்க வைப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது. இதைத் தவிர கூறுவதற்கு ஒன்றுமில்லை. நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி பாலா அவர்களே. நீங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை. ஆனால் அதை ஒரு புறம் வைத்துக் கொண்டே தேவையற்ற தாக்குதல்களையும் எதிர்க்கொள்ள வேண்டும் என்றுதான் நான் கூறுகிறேன். அவ்வப்போது சீறுவது மிக அவசியம்.
நாம் ஜாதி பார்க்காது இருப்பினும் மற்றவர்களை அதை வைத்து கெக்கலி கொட்டும் சமயத்தில் சும்மா இருந்ததன் பயனை நிறையவே பார்த்தாகி விட்டது. அது இனிமேல் செய்வதற்கில்லை என்று பலர் நினைத்துள்ளனர், அதை நான் புரிந்து கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"idharku kasu vanga kudathu endru kathu koduthadhe viduthalaikarardhan. enna seivadhu?"
அப்படியா, இதற்கு உதாரணம் தர முடியுமா? நான் பார்த்தவரை ஒரு ஏழை விதவை அவர் பார்ப்பனர் என்பதற்காகவே அவள் கணவர் செய்த தியாகத்தைக் கொச்சைப்படுத்தி பென்ஷன் வழங்குவதை தடுக்க எல்லா வேலையும் செய்தது விடுதலை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"மற்றவர்கள் பயத்தினால்தான் தமது ஜாதி அடையாளங்களை மறைத்திருக்கிறார்கள் என்று நீங்களாகவே எப்படி முடிவுக்கு வந்திருக்கிறீர்களோ தெரியவில்லை. அவர்கள், அப்படி அடையாளப்படுத்திக் கொள்வது அவசியமற்றது, அசிங்கமும் கூட என்றெண்ணியும் அதை செய்யாது விட்டிருக்கலாம். நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒரே காரணத்துக்காக, மற்றவர்களை பயந்தவர்களாக உருவகப் படுத்துதல் நியாயமற்ற செயல்."
I know what I am talking about sir.
"அது என்னது ஜாட்டான்?"
நான் சுட்டிய பதிவிலேயே அதன் பொருளைக் கூறியுள்ளேன். போய்ப் பார்த்துக் கொள்ளவும்.
பாலா அவர்கள் பின்னூட்டத்திற்கு எழுதிய பதில்தான் உங்களுக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
This comment was posted by me in the post of Sundaravadivel vide http://bhaarathi.net/sundara/?p=251
Dear Sylvia,
There is no such thing as conversion to Hinduism from other religions for the simple reason that Hinduism is not like Christianity or Islam, who seek converts. A few people like Aryasamajis do it but it has no official sanction.
Now regarding conversion from one Jaathi to another, in your case, Sudra to Brahmin. It is possible and there are known cases of this happening. Sage Vishwamitra was a Kshatriza by birth and became a Brahmarishi. For him there was Sage Vasishta, who could cerify this conversion.
Let me ask you a question. What attraction do you find in becoming a Brahmin? It is a very much derided community, at least in Tamil Nadu. Having said that nothing stands in your way of becoming a Brahmin. Just call yourself a Brahmin and start behaving like one. But one thing. There is no one there to certify that conversion in you. There are just no qualified persons for doing it in the Brahmin community. And definitely not the VeeraththuRavi you mentioned. You are your own judge and let no one else tell you differently.
As is my usual practice, this comment will be copy pasted as comment to my post on Tambras meeting at http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
The idea is to show that the comment is really from Dondu Raghavan.
Regards,
Dondu N.Raghavan
வாசகர்கள் மன்னிக்கவும். 12-ஆம் தேதியன்று இட்ட முந்தையப் பின்னூட்டம் ப்ளாக்கர் தொழில்நுட்பக் காரணங்களால் இன்றுதான் இற்றைப்படுத்தப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஸ்ருசல் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thadagam.blogspot.com/2006/03/blog-post_114178780004877039.html
தவிர்த்திருக்கலாம்தான் ஆனால் ஆ ஊ என்றால் பார்ப்பனரை சந்திக்கு இழுப்பவர்களின் ஜாதியையும் இழுப்பது என் போன்றவர்களின் எதிர்வினையே.
கோலங்கள் சீரியலையே எடுத்துக் கொள்ளுங்கள். இது வரை கதாபாத்திரங்களின் ஜாதியைப் பற்றி வாயைத் திறக்காதவர்கள் திடீரென்று ஒரு ஐயங்கார் குடும்பத்தைக் காட்டுவதன் நோக்கம்?
சாவித்திரி (?) என்னும் திரைப்படத்தில் கோவில் குருக்களின் மனைவி கெட்டுப்போவதாக காண்பிப்பார்கள். அதே படத்தில் கதாநாயகனின் தாய் விபசாரி என்று வரும்போது அவன் சாதியை மட்டும் கூற மாட்டார்கள். இது என்ன போங்கு? கூறினால் சம்பந்தப்பட்ட ஜாதியினரிடம் செருப்படிபடுவோம் என்பதால்தானே? பார்ப்பனரை மட்டும் ஜாதியைக் குறித்துக் கூறி, இது வெறும் கதைதானே என்று பசப்புவார்கள். ஏனெனில் இது ஒன்றுதானே வன்முறையில் இறங்காத ஜாதி? இந்த பின்புலனில் என் எதிர்வினையை புரிந்து கொள்ளவும். மற்றப்படி ஜாதியை குறித்து எழுதியதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கப் போவதில்லை.
இதையெல்லாம் வைத்து நான் எழுதிய என் வெளிப்படையான எண்ணங்கள் பதிவைப் பாருங்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக அதன் நகல் என்னுடைய மேலே குறிப்பிட்ட பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
கோபத்துடன்,
டோண்டு ராகவையங்கார்
ஸ்ருசல் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:
http://thadagam.blogspot.com/2006/03/blog-post_114178780004877039.html
ஸ்ருசல் அவர்களே, முகமூடி அவர்களின் இப்பதிவைப் போய் படியுங்கள். பின்னூட்டங்களையும் சேர்த்துத்தான். சுவாரசியமாக இருக்கும். பார்க்க:
"பார்ப்பன எதிர்ப்புன்னு எவ்ளோ நாள்தான் ஜல்லி அடிக்கறது" http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_20.html
இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக அதன் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இட்லி வடை அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_114223032793440261.html
அழகப்பன் அவர்களே கோபம் வேண்டாம். கேளுங்கள். தேர்தல் அதிகாரி அவர்கள் இஸ்லாமியராக இருந்தால், துரை முருகன் அவர்கள் "அவர் போடும் தொப்பியை நமக்கும் போட்டுவிடுவாரோ" என்றோ, அல்லது அவர் கிறித்துவராக இருந்தால் "நம்மை சிலுவையில் அறைந்து விடுவாரோ" என்றெல்லாம் தைரியமாகக் கூறி விடுவாரா? அது என்ன நாமம் என்றால் அவ்வளவு இளப்பம்? நாமம் போடுவது ஏமாற்றுவது என்ற பொருளும் உண்டு என்று கூறினால், தொப்பி போட்டுவிடுவது என்றால் என்ன பொருள் வரும் தெரியுமா?
திராவிடக் கட்சிகளுக்கே உரித்தான தைரியத்துடன் ஹிந்துக்களை மட்டும் இழிவு செய்கிறார்கள். அவர் தலைவரே அப்படித்தானே?
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் முறையில் அதன் நகலை என்னுடைய பிராம்மணர் சங்கத்தைப் பற்றிய வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். அதைப் பார்த்த பிறகு மட்டுறுத்தல் செய்யுமாறு இட்லி வடை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இட்லி வடை அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_114223032793440261.html
"நீங்கள் முஸ்லிம்களைவிட சொரணை இல்லாதவர்களா என்று வைணவர்களை உசுப்பேற்றுவதற்காகவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்றே நான் கருத வேண்டியுள்ளது? இல்லையெனில் வேறு என்னதான் காரணம்?"
வைணவர்களை மட்டும் குறிவைக்கவில்லை. இந்துக்களையே நோக்கித்தான் கேள்வி கேட்டேன்.
"தொப்பி போடுதலை அவர் பயன்படுத்தி முஸ்லிம்கள் மனம் புண்பட்டிருந்தால் முஸ்லிம்கள் கண்டிக்கப் போகிறார்கள்."
வெறும் கண்டிப்போடு எல்லாம் நின்றிருக்க மாட்டார்கள். ஃபத்வாவே போட்டிருப்பார்கள்.
எந்த மதம் தாக்கப்பட்டாலும் அந்தந்த மதத்தவரிடமிருந்துதான் எதிர்ப்பு வர வேண்டும் என்று நீங்கள் கூறுவதைத்தான் நான் வேறு சொற்களில் கூறினேன்.
முக்கியமாக திராவிடக் கட்சியினரின் இந்த பாரபட்ச நடவடிக்கை எதிர்த்துத்தான் என் பின்னூட்டம். அதுதான் மற்ற மதத்தினரைப் பற்றிக் கூற தைரியம் உண்டா என்று கேட்டேன்.
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் முறையில் அதன் நகலை என்னுடைய பிராம்மணர் சங்கத்தைப் பற்றிய வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். அதைப் பார்த்த பிறகு மட்டுறுத்தல் செய்யுமாறு இட்லி வடை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214
ஜெயஸ்ரீ அவர்களே,
நீங்கள் என்னதான் உங்கள் பாயிண்டுகளை லாஜிகலாக அடுக்கினாலும் எல்லாவற்றுக்கும் பார்ப்பனரே காரணம், ஹிந்து மதமே காரணம் என்று ஜல்லியடிப்பவர்கள் கேட்கப் போவதில்லை.
போன வருடம் வந்தது முகமூடி அவர்களின் பதிவு "பார்ப்பன எதிர்ப்புன்னு எவ்ளோ நாள்தான் ஜல்லி அடிக்கறது" http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_20.html
அதில் வந்த மூன்று பின்னூட்டங்களை நான் இங்கே சாம்பிளுக்குத் தருவேன். அவற்றில் முதலாவதும் மூன்றாவதும் என்னுடையது.
@ May 22, 2005 6:30 PM க்கு நம்ம dondu(#4800161) சொல்றது என்னன்னா:
பார்ப்பனர்களே, தேவையற்று குற்ற உணர்ச்சிக்கெல்லாம் ஆளாகாதீர்கள். மரம் வெட்டியவர்கள், அரிவாளைச் சுழற்றுபவர்கள், தலித் பஞ்சாயத்து நடத்த விடாமல் தடுப்பவர்கள் எல்லோரும் ஒரு குற்ற உணர்ச்சியுமற்று இருக்கிறார்கள். 60 லட்சம் யூதர்களைக் கொன்ற ஜெர்மானிய கும்பல் சந்தோஷமாக இருக்கிறது. வேலையற்ற ஆங்கில சரித்திர ஆய்வாளர்கள் கூறியதைப் பிடித்து கொண்டு தொங்கும் சிலர் இன்னும் மனு தர்ம காலத்தை பேசிக்கொண்டு உங்கள் செயலாக்கத்தை தடுக்க முயற்சி செய்கிறார்கள். உங்கள் மேல் கட்டுப்பாடுகளை விதிக்க இவர்களுக்கு நாட்டாமை அளிக்காதீர்கள். போடா ஜாட்டான் என்று போய் கொண்டேயிருங்கள். நமக்கு தலைமேல் வேலை இருக்கிறது.
பார்ப்பனீயத்தின் எதிரிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு தனி அஜெண்டாவே இருக்கிறது. அதை அவர்கள் பார்த்து கொள்ளட்டும். நீங்கள் அதற்கு தீனி போடாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்"
நான் மேலே கூறியதற்கும் இன்னும் சிலர் கூறியதற்கும் காஞ்சி பிலிம்ஸ் அவர்கள் போட்டப் பின்னூட்டம் இதோ:
"@ May 23, 2005 12:20 AM க்கு நம்ம காஞ்சி பிலிம்ஸ் சொல்றது என்னன்னா:
//வேத பாடங்களைப்பற்றி படிக்க அக்கறை இல்லாதபோது, வேத காரியங்களை மதிக்க அக்கறையில்லாதபோது, அதற்கு உரிமை கோருவது மட்டும் எந்த வகை நியாயம்?//
வேத பாடங்கள்,வேத காரியங்களும் வெறும் சுத்துமாத்துகளே என்றான பிறகு பிராமணர்கள் உட்பட யாரும் அதை உரிமை கோருவது கிடையாது.போடா ஜோட்டான் என்று பிராமணர்களே வேதத்தை பரணையில் ஏற்றி விட்டார்கள். மற்றவர்கள் அதற்கு உரிமைக் கோருவதாக நீர் சொல்வது அதீத கற்பனையே.
//வேத பாடங்களை கேட்க இப்போது பிராமணர்களுக்கே பிடிக்கவில்லை. //
அது உங்களைப்போன்றோரின் கைங்கர்யம்தான்.//
பூநூலுக்கும் அதே நிலைமை வரும் நாள் தொலைவில் இல்லை அன்னியனே.இப்போதே பல பிராமணர்கள் அதை மறைக்க ஆரம்பித்துவிட்டனர்.
//மரம் வெட்டியவர்கள், அரிவாளைச் சுழற்றுபவர்கள், தலித் பஞ்சாயத்து நடத்த விடாமல் தடுப்ப்வர்கள் எல்லோரும் ஒரு குற்ற உணர்ச்சியுமற்று இருக்கிறார்கள்//
இந்த வெறுப்புகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் தோற்றுவித்தவர்கள் பிராமணர்களே.அவர்கள் சொன்ன வேதங்களே. அதனால் குற்ற உணர்ச்சி மற்றவர்களுக்கு வரத்தேவையில்லை. இந்த பேதங்களை தோற்றுவித்தவர்களே வெக்கமற்று இருக்கிறார்கள்."
அதற்கு நான் இட்டப் பின்னூட்டம்:
"
@ May 23, 2005 1:35 AM க்கு நம்ம dondu(#4800161) சொல்றது என்னன்னா:
"இந்த வெறுப்புகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் தோற்றுவித்தவர்கள் பிராமணர்களே.அவர்கள் சொன்ன வேதங்களே. அதனால் குற்ற உணர்ச்சி மற்றவர்களுக்கு வரத்தேவையில்லை. இந்த பேதங்களை தோற்றுவித்தவர்களே வெக்கமற்று இருக்கிறார்கள்."
ஆகவே அதை இன்னும் செய்பவர்களும் வெட்கமின்றி இருக்கிறார்கள் போலும்.
ரொம்ப நல்லதா போச்சு. ஆகக்கூடி யாரும் வெட்கம் அடையத் தேவையில்லை. எல்லாரும் ஒரு தபா ஜோரா கைதட்டிட்டு அவங்கவங்க வேலையைப் போய் பாருங்கப்பா.
பார்ப்பனர்களே முன்னேறுங்கள். பார்ப்பன எதிர்ப்பு ஜல்லியடிப்பவர்களுக்கு அதுவே காசு கொடுக்கும் தொழில். அவர்களை அதை செய்யவிட்டு விட்டு உங்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுங்கள். எந்த ஜாட்டானும் நமக்கு பொருட்டல்ல என்பதை நினைவில் வைக்கவும். அமைச்சர் அன்புமணி ஐயா காட்டிய வழியில் சுய முன்னேற்றம் பெறுவோம். வர்ட்டா.
அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்"
இதில் அமைச்சர் அன்புமணி எங்கிருந்து வந்தார் என்று கேட்பவர்களுக்காக:
ஊரார் குழந்தைகளுக்கு தமிழ் வழிக் கல்வி என்று கூறிவிட்டு தன் குழந்தைகளை மட்டும் ஆங்கில வழிக் கல்வி அளித்து தான் ஒரு சிறந்த தந்தை என்பதை நிரூபித்ததை நான் மிகவும் ஆதரித்து அவர் தொண்டர்களும் தலைவன் வழியே செல்ல வேண்டும் என்று கூறியபோது, ஏனோ அதை மட்டும் விரும்பாமல் பலர் விவாதித்தனர்.
ஆனால் ஒன்று. இந்து மதம் தன்னுடைய நீண்ட சரித்திரத்தில் சந்திக்காத எதிர்ப்பா? அதிலும் உள்ளிருந்தே வந்த எதிர்ப்புகள் அதிகமே. இருப்பினும் அது பாட்டுக்கு இருந்தது, இருக்கிறது, இருக்கும்.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக அதன் நகலை என்னுடைய பிராம்மண சங்கத்தைப் பற்றிய வெளிப்படையான எண்ணங்கள் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214
"//அடுத்த தலைமுறை, 'நான் ஒதுக்கீட்டை அனுபவித்துப் படித்து முன்னேறிவிட்டேன்; என் மகனை/மகளை என்னால் படிக்கவைத்து ஓப்பனிலேயே சீட்வாங்கமுடியும்' என்று சொல்லி//
எத்தனையோ தலைமுறைகள் முன்னேறிய கூட்டம்., இன்றும் மற்றவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கிறதென்பதை நினைத்து வயிறெரிகிறதே?. சலுகைகள் (மறுக்கப்பட்ட உரிமையது சலுகை என்ன வெங்காயம்?!)எனக் கேலி செய்கிறதே., பழி வாங்கப்பட்டோம்., வஞ்சிக்கப்பட்டோம், நாங்கள் யூதர்களைப் போல என்றெல்லாம் கதறுகிறார்களே. அவர்களிடம் சென்று., 'சாமி, நாம் பல தலைமுறை முன்னேறிவிட்டோம்., பள்ளி வாசலையே மிதிக்காத பெற்றோரின் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கலாம்' என்று சொல்லிப் பாருங்கள் என்ன நடக்கிறதென்று."
உண்மை நிலை என்னவென்று புரிந்து கொள்ளாத உளறல். ஜயஸ்ரீ கூறியது ரிசர்வேஷனை பல தலைமுறைகளாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி. மரம் கூறுவது ரிசர்வேஷனே சுதந்திர பாரதத்தில் இது வரை அனுபவிக்காத பார்ப்பனர்களைப் பற்றி. அது என்ன விட்டுக் கொடுப்பது? ஓப்பன் காம்பெடிஷனில்தானே நாங்கள் இருக்கிறோம்.
ஆனால் ஒன்று. யார் என்ன தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பார்ப்பனர்கள் படித்து முன்னேறுவதை தடை செய்ய முடியாது. ஓப்பன் காம்பெடிஷனில் வரட்டும் என்ற உடனேயே பார்ப்பன ஆதரவு என்று ஏன் தாழ்வு மனப்பான்மையில் பேச வேண்டும்?
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக அதன் நகலை என்னுடைய பிராம்மண சங்கத்தைப் பற்றிய வெளிப்படையான எண்ணங்கள் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இட்லி வடை அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_114223032793440261.html
"ஆச்சர்யமாக இருக்கிறது. கார்டூன் விவகாரமாக மாலிக் அதனை கண்டித்து எழுதிய பதிவில் சம்பந்தமில்லாமல் சரஸ்வதியை ஓவியர் உசேன் வரைந்ததை சுட்டிக்காட்டியதை என்னவென்று சொல்வது?"
இப்போது நீங்கள் கூட சம்பந்தமில்லாமல்தானே சரஸ்வதி ஓவியம் விவகாரத்தை இங்கு வந்து கிளப்புகிறீர்கள்? நீங்கள் கேட்டதால் கூறுகிறேன்,
அந்த இடத்தில் மாலிக் அவர்கள் நான் கேட்டதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் முகம்மது கார்ட்டூன் கொலை குற்றம்போல சித்தரிக்கப்பட்டது, அதே சமயம் சரஸ்வதி ஓவியம் துரதிர்ஷ்ட சம்பவமாக குறைத்து மதிப்பிடப்பட்டது. ஒரு இஸ்லாமியரிடம் இந்த இரட்டை நிலை எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. கராத்தே ஹுசேனிக்கு இங்கு மறுபடியும் சபாஷ் போடுகிறேன்.
இங்கு நான் சாடுவது இஸ்லாமியர்களை அல்ல, ஏனெனில் அவர்களிடம் நியாய உணர்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மதசார்பற்றவர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வெட்கம் கெட்டு செயல்படும் சக ஹிந்துக்களை மன்னிக்க இயலாது.
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் முறையில் அதன் நகலை என்னுடைய பிராம்மணர் சங்கத்தைப் பற்றிய வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். அதைப் பார்த்த பிறகு மட்டுறுத்தல் செய்யுமாறு இட்லி வடை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214
அன்பின் நல்லடியார் அவர்களே,
பெரியார் சொன்னதாக இதே பதிவில் போட்டிருக்கும் இதற்கும் எதிர்வினை கொடுங்கள்.
"அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். 'தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது' என்று தந்தியில் சொன்னோம்."
"பெரியாருக்கு இஸ்லாத்தையும் இஸ்லாமியக் கடவுள் நம்பிக்கையையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது ஏன்?" அவ்வாறு செய்திருந்தால் அவர் கொலையே செய்யப்பட்டிருப்பார் என்பதே உண்மை. மேலும் இன்னொரு மீட்டிங்கில் ஒரு இசுலாமியர் இந்து மதத்தின் குறைகளைப் பற்றிக் கூற ஆரம்பித்த போது அவர் அவரை கையமர்த்தி, "ஐயா அதெல்லாம் கூற நாங்கள் இருக்கிறோம், நீங்கள் எங்கள் மதத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்றும்தான் பெரியார் கூறினார்.
நீங்கள் இந்துக்கள் மேல் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கூறுவதால் என் பங்குக்கு நானும் கூறுகிறேன். முஸ்லிம்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் அஹமதியாக்களை இசுலாமியராக ஒத்துக் கொள்ள முடியாது என்று அறிவிப்பையே கொடுத்துள்ளது பாக்கிஸ்தான் இஸ்லாமிய அரசு. இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானுக்கு குடிபுகுந்த இசுலாமியர்களை முஹாஜிர் என்று கொடுமைப்படுத்துகிறது பாக்கிஸ்தானின் இஸ்லாமிய அரசு.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை என்னுடைய பதிவு ஒன்றில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Can this "Pramana Sangam" do something for "Poor Pramanar in Village neglected by all reservation laws etc etc"
Govt should do something for the Poor Pramanar people who live in a very bad condition. They cannot be avoided just because they have born in one particular community. (This will hold good to all people).
FYI, I am not brahmin. But I did live in brahmin area and I had seen those people starving for good free education (Professional Degree).
Let us be a Human Being and help everyone.
Yes, it is the duty of Tambras to help destitute Brahmins, who in turn should try to improve their own life with their own efforts. Trying to live solely at the mercy of others is not good.
Regards,
Dondu N.Raghavan
Post a Comment