2/07/2006

புதிர்கள் பத்து - 2

வழக்கம்போலவே சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும்.

1. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது? இதில் பல விடைகள் வந்து குழப்பம் ஆனதால் இங்கொரு க்ளூ. இருவருக்கும் ஒரே விஷயம்தான் நடந்தது.

2. இமயமலை ஏறுவதற்காகச் அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்? ஆம்லட்டை அவன் முகாமிலிருந்தே கொண்டு வந்ததால் அவன் அடுப்பு எதையும் மூட்டவில்லை என்பது நான் கொடுக்கும் ஒரு க்ளூ.

3. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

4. ஒரு பார்வையற்றவன் ஓர் ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் அறியாத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

5. டோண்டு ராகவன் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும்போது ஒரு திருப்பத்தில் எப்போதும் விபத்துத்தான். என்ன பிரச்சினை? முத்து (தமிழினி) அவர்களே தயவு செய்து நீங்கள் இதற்கு விடை அளிக்காதீர்கள்

6. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது, ஆனால் 2006-லும் இது நடக்கக் கூடும்)

7. தான் பலான தேதி பலான கிழமை பலான மணிக்கு இறக்கப் போவதாக அறிவித்தார் ஒருவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நால்வரில் அவர் யாராக இருக்கும்?
அ: கபீர்தாஸ் ஆ: சுவாமி விவேகானந்தர் இ: ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஈ: ராமமூர்த்தி.
விளக்கமும் கூற வேண்டும்.

8. ஒரு பணக்காரரின் பிள்ளையின் 10-ஆம் பிறந்த நாள் விழா 1988-ல் நடக்கிறது ஆனால் அப்பிள்ளையின் 20-ஆம் பிறந்த நாள் விழாவோ 1978-ல் நடக்கிறது. பிள்ளை பிறந்தது என்னவோ கி.பி.யில்தான்

9. ஒரு சித்திரச் சாலையில் சித்திரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சைத்திரிகரின் பல சித்திரங்களை அடுக்க அவருக்கு ஒரே இடம்தான் கொடுக்கப்பட்டது. 2 மணியளவில் அவர் பார்வைக்கு மாட்டிய சித்திரத்தின் எண் 300, 9 மணிக்கு பார்வைக்கு வைத்த சித்திரத்தின் எண் 90 என்றால் 5 மணிக்கு அவர் பார்வைக்கு பொருத்திய சித்திரத்தின் எண் என்னவாக இருக்கும், ஏன்?

10. டோண்டு ராகவனும் பாராவும் ஒரு குறிப்பிட்ட 5 செட் டென்னிஸ் போட்டியில் ஆடினர். இருவருமே 3 செட்களில் வெற்றி பெற்றனர். என்ன கூத்து இது? வெற்றி பெற்றது யார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

33 comments:

ILA (a) இளா said...

விடை: 10 ற்கு மட்டும்.

இருவருமே வெற்றி பெற்றிருப்பார்கள், ஏனெனில் இருவரும் ஆடியது வேறு வேறு எதிராளிகளிடம்.

dondu(#11168674346665545885) said...

இலா அவர்களே தவறான விடை. அவர்கள் ஒரே மேட்சில்தான் ஆடினார்கள் என்று கூறியுள்ளேனே, கேள்வியைச் சரியாகப் படிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ENNAR said...

சீட்டாட்டமா?

dondu(#11168674346665545885) said...

டென்னிஸ் என்ற பெயரில் ஏதாவது சீட்டாட்டம் உளதா என்னார் அவர்களே? அப்படியே இருந்தாலும் இக்கேள்விக்கான விடை அதுவல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vaa.Manikandan said...

வலைப்பூ உலகில் ஒரு பெரிய மனுஷர் காமெடியனாக உள்ளார். அவர் யார்? டோண்டு சார் இது உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம். ஒரு க்ளூ. அவர் பெயர் ரா வில் ஆரம்பித்து ன் இல் முடியும். அவர் டையலர் டோன் "காற்றில்...." (ஜானி).அவர் யார்?

dondu(#11168674346665545885) said...

"டையலர் டோன் "காற்றில்...." (ஜானி).அவர் யார்?"
உங்கள் க்ளூவை அப்டேட் செய்கிறேன். அது "ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சாக" மாறி விட்டது.

மற்றப்படி அவரை நான் நேருக்கு நேர் பார்த்ததில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

9. 210

angle between the hour hand and minute hand, measured anti-clockwise :-(((

latha

லதா said...

7. ramamoorthi (with the assumption the announcement was in tamil and others did not know tamil)

கைப்புள்ள said...

10வது கேள்விக்கு என்னுடைய பதில்:
அவர்கள் இருவரும் ஒரே தரப்பில் இரட்டையர் ஆட்டம் ஆடி வெற்றி பெற்றார்கள்.

dondu(#11168674346665545885) said...

தவறான் விடை லதா அவர்களே. சரியாக யோசிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சரியான விடை கைப்புள்ள அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ramamoorthi (with the assumption the announcement was in tamil and others did not know tamil)
உங்கள் அனுமானம் இங்கு உபயோகமில்லை. விடைக்கான சரியான ஜஸ்டிஃபிகேஷன் தேவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

5. டோண்டுக்கு ஸ்கூட்டர் சரியா ஓட்டத் தெரியாது.

மகேஸ் said...

5.அந்த திருப்பத்தில் போலி டோண்டு எப்போதும் நின்று கொண்டிருக்கலாம். :-)))

dondu(#11168674346665545885) said...

சரியான விடை மகேஸ் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்கலாகாதா என்று யாரைப் பார்த்துக் கூறலாம்?
விடை: நம்ம மகேஸைப் பார்த்து.

டோண்டுவுக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்பதுதான் சரியான விடை.

என் வாழ்நாளிலேயே முதலும் கடைசியுமாக நான் சமீபத்தில் 1978-ல் ஸ்கூட்டர் ஓட்டும்போது திரும்பத் தெரியாது ஒரு மணல் குன்றில் ஸ்கூட்டரை செலுத்தியதை நான் மறந்தாலும் ஸ்கூட்டர் சொந்தக்காரர் உதயசங்கர் இன்னும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jsri said...

7. ராமமூர்த்தி என்பவர் தூக்குதண்டனைக் கைதியா?

லதா said...

9. 210தான். ஆனால் முன்னால் எழுதிய விளக்கத்தில் anti-clockwise என்று தவறாக எழுதிவிட்டேன். சரியான விளக்கம் - angle between the hour hand and minute hand measured clockwise, starting from hour-hand

மகேஸ் said...

4. //ஒரு பார்வையற்றவன் .... அவன் முன்பின் பார்த்திராத//
கேள்வி சரியா டோண்டு சார்?

.:dYNo:. said...

10) PAra and Dontu were playing as a team and won (doubles)

8) In 1978 the kid's 20th-day birthday was celebrated, In 1988 the kid's 20th-year birth day was celebrated.

3) It might have read 'You are at the center of this desert!'

my .02

5) Misformed question... should have written 'Ella thirupathilum vibathu"

9) Not clear enuf

And some I couldn't identify whether they are crude naive jokes or real rebus questions.

.:dYNo:.

dondu(#11168674346665545885) said...

பார்வையற்றவன் பற்றிய கேள்வியை திருத்தி எழுதியுள்ளேன் மகேஸ் அவர்களே. நன்றி. முன்பின் அறியாத என்பதை தெரிந்து கொள்ள அவன் ந்டையின் சத்தத்திலிருந்து பார்வையற்றவன் கண்டு கொள்ள முடியும் என்றும் கூறி விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆம் ஜயஸ்ரீ, ராமமூர்த்தி தூக்கு தண்டனை கைதியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

10) PAra and Dontu were playing as a team and won (doubles)
விடை சரிதான், ஆனால் கைப்புள்ள ஏற்கனவே அதை கூறி விட்டார்.

8) In 1978 the kid's 20th-day birthday was celebrated, In 1988 the kid's 20th-year birth day was celebrated.
பிறந்த நாள் என்றாலே ஆண்டு பூர்த்தி அடையும்போதுதானே. அப்படியே பார்த்தாலும் உங்கள் கணக்கு உதைக்கவில்லை?

3) It might have read 'You are at the center of this desert!'
my .02
தவறான விடை.

5) Misformed question... should have written 'Ella thirupathilum vibathu"
ஒருவர் தன்னுடைய முதலும் கடைசியிலுமான ஸ்கூட்டர் ஓட்டத்தில் முதல் திருப்பத்திலேயே மணல் குன்றில் ஓட்டினால் நான் கேட்ட கேள்வி சரிதான். இந்த இடத்தில் நிஜமாகவே டோண்டு ராகவன் வருகிறான். மற்ற ஜோக்குகளில் சும்மா உதாருக்கு அவன் பெயரை இழுத்தேன். உதாரணமாக டென்னிஸ் ஆட்டம். மஹேஷ் பூபதி மற்றும் லியாண்டர் பெயஸைக் குறிப்பிட்டிருந்தால் எல்லோருமே உடனேயே விடையைக் கூறியிருப்பார்கள்தானே.

9) Not clear enuf
அதன் சரியான விடையே வந்து விட்டது. அதை அளித்தவருக்கு அது க்ளியராகத்தானே இருந்திருக்க வேண்டும்?

And some I couldn't identify whether they are crude naive jokes or real rebus questions.
உண்மையான ரேபஸ் கேள்விகள் என்று எதைக் கூறுகிறீர்கள்? ஒவ்வொன்றுமே ஒரிஜினலாக யாரோ ஒருவர் மனதில்தான் உதித்திருக்க வேண்டும் அல்லவா. உள்ளே போய் நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் பார்த்தால் அவ்வளவுதானா என்று ஆகிவிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போது 210 சரியான விடை லதா அவர்களே.

விடை சரியாக இருந்தாலும் முந்தையத் தடவை விளக்கம் தவறாக விழுந்து விட்டது. பரீட்சையாக இருந்தால் இதற்கு மதிப்பெண்கள் குறைத்திருப்பார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

யோசிப்பவர் said...

7) அவரு ஒரு தூக்கு தண்டனை கதியா இருக்கனும். அப்படின்னா அவரு ராமமூர்த்தியா(யாரு இவரு?!?!)

8) அவர் தத்து கொடுக்கப்பட்ட பிள்ளை. 1988இல் அவர் தத்து கொடுக்கப்பட்டு 20ஆம் ஆண்டை கொண்டாடினார்கள்.(இது சரியில்லைன்னு எனக்கே தெரியும்!)

dondu(#11168674346665545885) said...

வணக்கம் யோசிப்பவரே.

தூக்குதண்டனை கைதி என்ற விடை எப்போதோ வந்து விட்டது. சமீபத்தில் 1961-ல் குமுதத்தில் இக்கேள்வி கேட்கப்பட்டப்போது ராமமூர்த்திக்கு பதில் பட்டாக்கத்தி பக்கிரி என்று போட்டிருந்தார்கள். நான் வெறுமனே இங்கே பெயரை ராமமூர்த்தி என்று மாற்றியதற்கு காரணமே கேள்வியை சற்று கடினப்படுத்துவதற்காகத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மறந்து விட்டேன் யோசிப்பவரே. எட்டாவது கேள்விக்காக நீங்கள் அளித்த விடையும் தவறே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சம்மட்டி said...

//8. ஒரு பணக்காரரின் பிள்ளையின் 10-ஆம் பிறந்த நாள் விழா 1988-ல் நடக்கிறது ஆனால் அப்பிள்ளையின் 20-ஆம் பிறந்த நாள் விழாவோ 1978-ல் நடக்கிறது. பிள்ளை பிறந்தது என்னவோ கி.பி.யில்தான்//
He Born on 1958 Feb 29 - Leap Year

His 20th Birthday based on Calender Year 1978
His 10th Birthday based on Leap Year Date that is Feb 29 1988

Am i Correct ?

Sammatti

சம்மட்டி said...

Means he Celebrate 40th Birthday not 20th birthday on 1988
Sammati

dondu(#11168674346665545885) said...

சம்மட்டி அவர்களே ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் கூறியது எதுவுமே சரியான விடை இல்லை என்று வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். இன்னொரு விஷயம் 1958 லீப் வருடம் அல்லவே அல்ல.

ஒரு க்ளூ தருகிறேன். விடை மிகவும் எளிமையானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vinoth said...

For #8:
1988 and 1978 are room numbers in a hotel

Vinoth said...

For #3:
He got lost while searching for his lady love, and the note was her last word before she died. On seeing this he commits suicide. (What a cruel thinker I am :) )

dondu(#11168674346665545885) said...

வாலில்லாப்பட்டம் அவர்களே, எட்டாவது கேள்விக்கான விடை சரியே. பணக்காரர் தன் பையன் பிறந்த நாள் விழாவை ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடுகிறார். ரூம் எண்கள்தான் 1988 மற்றும் 1978.

3-ஆம் கேள்விக்கான விடை தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது