நியூசிலாந்திலிருந்து துளசி மற்றும் அவர் கணவர் கோபால் இருவரும் தற்சமயம் சென்னையில். அவர் சென்னை வருவதறிந்து என்னைத் தொடர்பு கொள்ளுமாறு மின்னஞ்சலிட்டிருந்தேன். அவரும் என்னை சென்னைக்கு வந்ததும் தொடர்பு கொண்டார். 3-ஆம் தேதி வெள்ளியன்று என் வீட்டிற்கு இருவரும் வந்திருந்தனர். நிறைய விஷயங்கள் பேசினோம்.
பிறகு அவர் மதுரை சென்று தருமி மற்றும் காக்கா பிரியனைக் கண்டு பேசியதைப் பற்றி தருமி அவர்களும் பதிவு போட்டுள்ளார். முதலிலேயே கூறுவேன். அதன் தலைப்பு INTERNATIONAL TAMIL BLOGGERS CONFERENCE 2006 (2) என்றுதான் இருக்க வேண்டும் ஏனெனில் INTERNATIONAL TAMIL BLOGGERS CONFERENCE 2006 (1) என் வீட்டிலேயே பிப்ரவரி 3 அன்றைக்கே நடந்து விட்டது, ஹி ஹி ஹி.
துளசி மற்றும் கோபால் என் வீட்டிற்கு வந்து சென்ற அன்றிரவே அடுத்த நாள் ஆப்பரேஷனுக்காக அட்மிட் ஆக வேண்டியதாயிற்று. அங்கு என்னை பிரமிப்பில் ஆழ்த்திய விஷயத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியாயிற்று.
இந்தப் பின்புலனில் நான் இன்று கலந்து கொண்ட சந்திப்பு மிக்க முக்கியமாயிற்று. முதலில் என் வீட்டம்மா போகவே கூடாது என்று கூறிவிட்டார். சர்ஜன் 10-ஆம் தேதி தையல் பிரிக்கப் போவதாகக் கூறியதால் நான் ஒருமாதிரி அவரைச் சரிக்கட்டியிருந்தேன். ஆனால் வெள்ளியன்று தையல் பிரிப்பதை திங்களன்று ஒத்திவைத்து விட்டார் கல்நெஞ்சுக்கார சர்ஜன். நானும் முதலில் சரி இந்த முறை போக முடியாது என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று நேற்று இரவு வரை அதைப் பற்றிப் பேசுவதையே ஒத்திப் போட்டேன். முகத்தை மட்டும் சோகமாக வைத்துக் கொண்டேன். நேற்று இரவு அவரே என்னிடம் இந்த சந்திப்பைப் பற்றிக் கேட்க, போக முடியாதுபோலிருக்கிறது என்று தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு கூற ஒன்றும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார். இன்று காலை அவராகவே வந்து, என் தலையைக் கோதிக்கொண்டே "பரவாயில்லை, தேவையான முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு காரில் போய் காரில் வாருங்கள்" என்று கூற அவர் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அடக்கத்துடன் கூறினேன்.
இப்போது ப்ளாக்கர் சந்திப்பு. அதற்கு வந்திருந்தது:
1. எஸ். கிச்சு
2. துளசி மற்றும் கோபால்
3. மதுமிதா
4. அருணா ஸ்ரீனிவாசன்
5. ஜோசஃப்
6. மரவண்டு கணேஷ்
7. கிருபாசங்கர்
8. சுவடுகள் சங்கர்
9. உருப்படாதது நாராயணன்
10. ச்டேஷன் பெஞ்ச் ராம்கி
11. ஐகாரஸ் பிரகாஷ்
12. அடியேன்.
அது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் இதோ. இவையும் துளசி அவர்கள் இன்று (10.03.2006) எனக்கு அனுப்பியவைதான். நன்றி துளசி அவர்களே.
ஐந்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய சந்திப்பு சரியான நேரத்தில் துவங்கியது. விறுவென்று எல்லோரும் வந்து சேர மீட்டிங்க் களைகட்டியது. பதிவுகளின் மூலமே அறிந்திருந்த மதுமிதா, ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி, மரவண்டூ கணேஷ், ஜோசஃப் ஆகியோரை சந்திக்க முடிந்தது. ஜோசஃப் அவர்கள் தன்னுடைய "திரும்பிப் பார்க்கிறேன்" நிகழ்ச்சிகள் ரெகுலராக வந்துக் கொண்டிருக்கும் என்று உறுதி கூறினார். கிருபா நான் லைனக்ஸுக்கு மாறுவது நலம் எனப் பரிந்துரை செய்தார். அவரும், எஸ்.கேயும் நாராயணனும் பேசிக் கொண்ட பல தொழில்நுட்ப விஷயங்கள் என் அறிவுக்கு மீறியதால் அவற்றை வெறுமனே புரிந்தது போன்ற முகபாவத்தை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். மரவண்டு அவர்களுடன் எனக்கு வலைப்பதிவதில் ஏற்பட்ட சங்கடங்களைப் பற்றிப் பேச அவரும் அனுதாபத்துடன் கேட்டுக் கொண்டார்.
செவிக்குணவில்லாதபோழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதற்கேற்ப போண்டாவும் காப்பியும் அமர்க்களமான காம்பினேஷனாக அமைந்தன. மீட்டிங் ஆரம்பித்து சரியான இரண்டுமணி நேரத்தில் என் வீட்டம்மாவிடமிருந்து சீக்கிரம் வீடிற்கு வருமாறு செல் பேசியில் கூறப்பட, நல்ல பிள்ளையைப் போல் எல்லாரிடமும் விடை பெற்று நகர்ந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
14 comments:
ராகவன்,
அலுவலகத்தில் காட்டு வேலையாக இருந்ததால், உங்களது முந்தைய பதிவை இப்பொழுது தான் படிக்க நேர்ந்தது. விரைவிலும், பூரணமாகவும் உடல் குணமடைய எனது வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்.
வலைப்பதிவர் சந்திப்பு குறித்த பதிவுக்கு நன்றி.
ஸ்ரீகாந்த்
நன்றி ஸ்ரீகாந்த் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னுடைய இன்றைய திரும்பிப் பார்க்கிறேன் தொடரிலும் நம் சந்திப்பைப் பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்..
அத்துடன் சென்னையில் வசிக்கும் தமிழ்மண ப்ளாகர்களின் டைரக்டரி ஒன்றை தயாரிக்கலாமா என்றும் யோசனை கேட்டு எழுதியிருக்கிறேன். இதுவரை யாருமே கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை..
நீங்கள் உங்களுடைய கருத்தை எழுதி துவக்கி வையுங்களேன்..
ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://ennulagam.blogspot.com/2006/02/78.html
"யார்றா இவன்?" என்று சாலையில் போவோர் வருவோர் என்னைப் பார்த்து வியந்ததுண்டு!"
உங்களுக்கு கொஞ்சம் போலீஸ் ஜாடை உண்டு என்றுதான் எனக்கு நேற்று உங்களைப் பார்த்ததும் பட்டது!
ப்ளாக்கர் டைரெக்டரி நல்ல ஐடியா. முதலில் நான் ஆரம்பித்து வைக்கிறேன்.
டோண்டு ராகவன்
N.Raghavan B.E.,
20/B.23, 15th Cross Street,
Nanganallur,
Cheennai - 600061
Tel: 22312948, 22324807 & 9884012948
இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியான செய்தி. தற்போது உங்கள் உடல் நலன் எப்படி இருக்கிறது டோண்டு சார். விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்
அன்புடன்
முத்துகுமரன்
மிக்க நன்றி முத்துக்குமரன் அவர்களே. என் உடல்நலம் இப்போது நன்றாகவே ஆகி வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே, (அரசியல் மேடைகளில் கூப்பிடுவதைப் போல் நீங்கள் மற்றவர்களை அழைப்பதால் நானும் அப்படியே உங்களை...) :-)
சந்திப்பைப் பற்றி பதிந்ததற்கு நன்றி. இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்று நானும் மிக்க ஆவலாயிருந்தேன். ஆனால் சூழ்நிலை காரணமாக இயலாமல் போய்விட்டது. துளசி கோபாலைப் பற்றி சொல்வதற்கு சில விஷயங்கள் உள்ளது. என்றாவது என் பதிவில் அதை எழுதுகிறேன்.
நன்றி சுரேஷ் கண்ணன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பல தொழில்நுட்ப விஷயங்கள் என் அறிவுக்கு மீறியதால் அவற்றை வெறுமனே புரிந்தது போன்ற முகபாவத்தை வைத்துக் கொண்டு கேட்டுக்//
இது தான் எங்களுக்கு தெரியுமே....
மற்றபடி மீட்டிங் பற்றி எழுதியதற்கு நன்றி...நான் வந்தப்போ வடை எனக்கு இல்லை..எங்க அந்த ராம்கி?
போண்டா மற்றும் காப்பிக்கு பில் செட்டில் செய்தது கோபால் அவர்கள். ரஜினி ராம்கி மீட்டிங்கிற்கு வர இயலவில்லை.
புத்தகக் கண்காட்சியில் நாம் அவ்வளவு நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தத் தருணத்தில் உங்களுடன் கேண்டீன் போகத் தோன்றவில்லை. போயிருக்க வேண்டும். அடுத்த முறை ஈடு செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
துளசி அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_08.html
ப்ளாக்கர் சந்திப்புகளை எங்கள் பார்வை கோணங்களிலிருந்து எழுதியுள்ளோம். உங்கள் தரப்பிலிருந்து எப்போது எழுதுவதாக உத்தேசம். மேலும் என் பதிவுகளை எப்போது பார்ப்பதாக உத்தேசம்?
ப்ளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் நீங்கள் அனுமதிப்பதால் என் டிஸ்ப்ளே பெயர் மற்றும் எண் மேட்ச் ஆகின்றனவா எனப் பார்க்கவும். என் போட்டோவும் வர வேண்டும். அப்போதுதான் உண்மையான டோண்டு பின்னூட்ட்மிட்டான் என்று பொருள்.
இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் கேட்டுக் கொண்டதன் பேரில் துளசி அவர்கள் ப்ளாக்கர் சந்திப்பில் எடுத்த போட்டோக்களை இன்று அனுப்பியிருக்கிறார்.
அவற்றை இப்பதிவில் அப்லோட் செய்திருக்கிறேன்.
துளசி அவர்களுக்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_16.html
நீங்கள் என் வீட்டுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி துளசி அவர்களே. நீங்கள் அனுப்பித்த போட்டோக்களும் வந்து சேர்ந்தன. அதற்கும் நன்றி.
உட்லேண்ட்ஸ் சந்திப்பைப் பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
வழக்கம்போல எலிக்குட்டி சோதனையை செய்து உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை கண்டுகொண்டு மட்டுறுத்தல் செய்யவும்.
இப்பின்னூட்டத்தின் ந்கலை என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இட்டுவிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2006/04/blog-post_04.html
நான் என் பதிவில் இட்டப் படங்கள் நீங்கள் எனக்கு அனுப்பியவையே என்பதை இந்த இடத்தில் மீண்டும் நன்றியுடன் கூறுவேன்.
நீங்கள் என் பதிவுக்குக் கொடுத்த சுட்டி ஆர்கைவ்ஸுடையது. இந்த ஸ்பெசிஃபிக் சுட்டியைத் தந்தால் நேரடியாகக் கிடைக்கும். பார்க்க:http://dondu.blogspot.com/2006/02/12022006.html
"இப்பத்தான் செந்தமிழ்ச் செல்வன் டோண்டு பேருலே வந்துட்டுப் போனார். வழக்கமா இல்லாம கொஞ்சம் நல்ல மொழியிலேதான் சொல்லிட்டுப் போனார். மாற்றம் வந்திருக்கு."
போட்டோ வந்ததா? இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.
"இவ்வளவு பேர் சேர்ந்து பேசியிருக்கீங்க. கொஞ்சம் சுவாரசியமா பேசாமலேயா இருந்திருப்பீங்க? அந்த கிசுகிசுங்களில கொஞ்சம் எடுத்துவிடறது......"
அது இல்லாமலா இலவசக் கொத்தனார் அவர்களே. எல்லோரையும் பீடிக்கும் செந்தமிழ் பின்னூட்ட வித்தகனைப் பற்றியும் பேசப்பட்டது. அது யார் என்பதில் பலருக்கு சந்தேகம் இல்லை.
இந்தப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண்பிக்க அதன் நகலை இதே ப்ளாக்கர் சந்திப்பைப் பற்றி நான் இட்டப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment