சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும்.
1. வேலு நாயக்கர் ரொம்ப எடை போட்டுவிட்டதாக மருத்துவர் (doctor) கூறிவிட்டார். தினமும் ஜாக்கிங் போய்விட்டு தினம் தினம் எடையை செக் செய்து கொள்ளுமாறு கூறி விட்டார். அவரும் மெனக்கெட்டு ஜாகிங்கிற்கான உடைகள், காலணிகள் எல்லாம் வாங்கி பார்த்திப ஆண்டு மார்கழி மாதம் கூடாரைவல்லி நாளன்று ஒரு நல்ல பிரும்ம முகூர்த்தத்தில் ஜாகிங்கை ஆரம்பித்து விட்டார். முதல் நாள் எடை பார்த்த போது அவர் எடை 1 கிலோ குறைந்திருந்தது. இருப்பினும் அவர் மேற்கொண்டு ஜாக்கிங் செய்வதை விட்டு விட்டார். ஏன்?
2. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது?
3. ஒரு மேஜை மேல் ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தை டிஸ்டர்ப் செய்யாமல், தொடாமல் அதன் கீழ் ஒரு பேப்பரை வைக்க முடியுமா?
4. ஒரு 4 அடி நீளமான குறுகிய குழிக்குள் குட்டிப் பையன் விளையாடிய பந்து விழுந்து விட்டது. குழியைப் பெரிதாக்கவும் வழியில்லை. துரோணாச்சாரியாரும் பக்கத்தில் இல்லை. பந்தை பின்னே எப்படித்தான் எடுப்பது?
5. இமயமலை ஏறுவதற்காகச் அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்?
6. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.
7. ஒரு பார்வையற்றவன் ஓர் அறையில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் பார்த்திராத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?
8. டோண்டு ராகவன் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும்போது ஒரு திருப்பத்தில் எப்போதும் விபத்துத்தான். என்ன பிரச்சினை?
9. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது)
10. தான் பலான தேதி பலான கிழமை பலான மணிக்கு இறக்கப் போவதாக அறிவித்தார் ஒருவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நால்வரில் அவர் யாராக இருக்கும்?
அ: கபீர்தாஸ் ஆ: சுவாமி விவேகானந்தர் இ: ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஈ: ராமமூர்த்தி
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
17 comments:
சற்றே விடையை மாற்றினால் சரியான விடை கிடைக்கும் நாட்டாமை அவர்களே. பிறகு இக்கேள்வியின் சுவாரசியமானப் பின்னணியைக் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நினைவு நாளைப் பற்றி சிவாஜிக்கு மட்டுமா தெரியும்? நம் எல்லோருக்கும்தானே? நீங்கள் அளித்த விடைக்கானக் கேள்விகள் "எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி அவருக்கே தெரியாத, ஆனால் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்ன?" என்பதேயாகும். அந்தக் கேள்வியை நான் கேட்கவில்லையே.
மேலும் முயற்சி செய்யவும், ரொம்பவும் கிட்டேயே வந்து விட்டீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
3. கண்ணாடி மேசை?
4. கையால் தான். ஆழம் குறிப்பிடவில்லையே.
7. பார்வை அற்றவர்களுக்கு கேட்கும் திறன் அதிகம். கூடைக்குள் பாம்பு?
3. கண்ணாடி மேசை?
தவறான விடை
4. கையால் தான். ஆழம் குறிப்பிடவில்லையே.
தவறான விடை. நான்கு அடி ஆழக்குழி என்று வேறு குறிப்பிட்டுள்ளேன்!!
7. பார்வை அற்றவர்களுக்கு கேட்கும் திறன் அதிகம். கூடைக்குள் பாம்பு?
தவறான விடை. இன்னொரு க்ளூ. அவன் செவிடனாகவே இருந்திருந்தாலும் அவன் தெரிந்து கொண்டிருப்பான். ஒரு வால்ட் டிஸ்னீ படம் சமீபத்தில் 1961-ல் வந்தது. அதுதான் இக்கேள்விக்கு இன்ஸ்பிரேஷன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாட்டாமை அவர்களே, மனம் தளறாதீர்கள். உங்கள் கடைசி பதில் தவறானாலும் சரியான விடையை நெருங்கியுள்ளது. ஆகவே வேறு யாரும் அதற்கு முற்றிலும் சரியான விடையுஐத் தெரிவிக்கும் வரை உங்களுடைய விடைக்கே கடைசியில் க்ரெடிட் கிடைக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1) வேலு நாயக்கர் ஒருவேளை நம்ம சர்தார்ஜி மாதிரியா, ஒரு நாளைக்கே ஒரு கிலோ குறையுதே, அப்போ தொடர்ந்து செய்தால் கறைந்து காணாமல் போய் விடுவோம் என்று பயந்திருப்பார்.
2) எம்.ஜி.ஆரின் முதுகு அவருக்கு தெரியாது, ஆனால் சிவாஜிக்கு தெரியும் :) அடிக்க, கடிக்க வரவேண்டாம்.
3) மேஜையின் கீழ் புத்தகத்துக்கு நேராக வைத்து விடலாமே.
4) நேரு மாதிரி குழியில் நீர் ஊற்றினால்
6) இன்னும் அதிக தொலைவுக்கு பின்னரே ஊர் வரும் என்று எழுதியிருக்கும், தாகத்தால் சாவதை விட சுட்டு செத்திருக்கலாம்.
7) கூடையில் கருவாடு இருந்திருக்கும். கண்பார்வையற்றவர் அதை சாப்பிடாதவராக இருக்கலாம்.
10) நாலு பேர் இருக்கிறார்கள்.
1) "வேலு நாயக்கர் ஒருவேளை நம்ம சர்தார்ஜி மாதிரியா, ஒரு நாளைக்கே ஒரு கிலோ குறையுதே, அப்போ தொடர்ந்து செய்தால் கரைந்து காணாமல் போய் விடுவோம் என்று பயந்திருப்பார்." தவறான விடை. இன்னொரு க்ளூ இதற்கான பதில் வடிவேலுத்தனமானது.
2) "எம்.ஜி.ஆரின் முதுகு அவருக்கு தெரியாது, ஆனால் சிவாஜிக்கு தெரியும் :) அடிக்க, கடிக்க வரவேண்டாம்." தவறான விட
3) "மேஜையின் கீழ் புத்தகத்துக்கு நேராக வைத்து விடலாமே." சரியான விடை
4) "நேரு மாதிரி குழியில் நீர் ஊற்றினால்." நேரு அவ்வாறு செய்தாரா என்ன? எப்படியும் விடை சரியே.
6) "இன்னும் அதிக தொலைவுக்கு பின்னரே ஊர் வரும் என்று எழுதியிருக்கும், தாகத்தால் சாவதை விட சுட்டு செத்திருக்கலாம்." தவறான விடை.
7) "கூடையில் கருவாடு இருந்திருக்கும். கண்பார்வையற்றவர் அதை சாப்பிடாதவராக இருக்கலாம்." இல்லை, தவறான விடை. இனொரு க்ளூ. அந்த அறையில் இவர்கள் இருவரைத் தவிர இன்னும் நிறைய பேர் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.
10) "நாலு பேர் இருக்கிறார்கள்." கேள்வியை இப்போது திருத்தியுள்ளேன். பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
1) ஒரு நாள் கழிச்சு எடை பார்த்தா ஒரு கிலோ குறையுதுனா, பத்து நால் கழிச்சு பார்த்தா 10 கிலோ குறையும் என்று விட்டு விட்டார்.
8) போலி டோண்டு எதிரில் வந்து இடித்து விடுகிறார்?
10) இ
தவறான பதில்கள் ஆள்தோட்ட பூபதி அவர்களே.
ஆன்புடன்,
டோண்டு ராகவன்
வேலு நாய்க்கர, நாய் கட்ச்சிட்சிப்பா. ஒரு கிலோ கறியப் புடுங்கிடிச்சுடுபா.
அதான்பா மனுசன் ஜாகிங்குக்கு முயுக்குப் போட்டாரு..நயினா விடை கரீட்டா?
திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார்...
உப்புச் சத்தியக்கிரகத்தில் கலந்த்து கொண்டாரா?
1930ல் நடந்த னிகழ்ச்சி என்பதனால் ஒரு குருட்டடிதான்.
1.வேலு நாயக்கரை அதுக்குள்ள போட்டு தள்ளிட்டாங்கலோ
2.எம்.ஜீ.ஆரின் வாரிசு ஜெயலலிதா
3.4.எளிது விடை அளிக்கப்பட்டுவிட்டது
5.முட்டை சூடு பண்ணும்போது ஐஸ் உருகி...
6.நீங்கள் வந்தது தவறான நேர் எதிர் திசையில் அப்படிங்கற மாதிரி ஏதாவது
7.
8. அது பிளைண்ட் டர்ன்....
9.சமீபத்தில் 1930 நடந்த சம்பவங்களை எங்களுக்கு தெரியாது.
10.ராமமூர்த்தி
"வேலு நாய்க்கர, நாய் கட்ச்சிட்சிப்பா. ஒரு கிலோ கறியப் புடுங்கிடிச்சுடுபா.
அதான்பா மனுசன் ஜாகிங்குக்கு முயுக்குப் போட்டாரு..நயினா விடை கரீட்டா?"
100% சரி. அதுதான் ஜனகராஜ் குரலில் கூறினால் 50% அதிக மதிப்பெண்கள். அதற்காக அந்த துக்கத்தை மறக்க தன்ணியெல்லாம் போடக் கூடாது. தங்கச்சிய நாய் கட்சிச்சிப்பா என்ற பதிவைப் பார்த்துத்தான் இப்புதிரின் இன்ஸ்பிரேஷனே வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1."வேலு நாயக்கரை அதுக்குள்ள போட்டு தள்ளிட்டாங்களோ."
தவறான விடை. இப்போது அதற்கான விடையும் அளிக்கப்பட்டு விட்டது.
2."எம்.ஜீ.ஆரின் வாரிசு ஜெயலலிதா.
தவறான விடை."
இன்னொரு க்ளூ தருகிறேன். சிவாஜிக்குத் தெரிந்தது எம்.ஜி.ஆரைப் பற்றியது. எம்.ஜி.ஆருக்குத் தெரியாதது சிவாஜியைப் பற்றி ஆனால் எம்.ஜி.ஆருக்கு துளியும் சம்பந்தமில்லாத விஷயம். அதுவும் vice versa வானது. இப்பவே ரொம்ப க்ளூ கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். ஆகவெ வுடு ஜூட்.
5."முட்டை சூடு பண்ணும்போது ஐஸ் உருகி..."
நான் நினைத்த விடை இல்லையென்றாலும் கிட்டவே வருகிறீர்கள். சரியான விடை வேறு யாரிடமிருந்தாவது கிடைக்காத பட்சத்தில் அதை நானே கூறி ஆனால் க்ரெடிட் உங்களுக்கு கிடைக்கும்.
6."நீங்கள் வந்தது தவறான நேர் எதிர் திசையில் அப்படிங்கற மாதிரி ஏதாவது"
தவறான விடை.
8. "அது பிளைண்ட் டர்ன்...." தவறான விடை. ஆனால் ஒரு க்ளூ. விடையை நான் கூறிய பிறகு எல்லோரும் அடிக்க வருவீர்கள்.
9."சமீபத்தில் 1930 நடந்த சம்பவங்களை எங்களுக்கு தெரியாது."
இப்போதும் அம்மாதிரி நடக்க வாய்ப்புண்டு.
10."ராமமூர்த்தி." விடை சரியே, ஆனால் விளக்கினால்தான் மார்க். குருட்டாம்போக்காக எல்லாம் இருக்கக் கூடாது அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"உப்புச் சத்தியக்கிரகத்தில் கலந்த்து கொண்டாரா?
1930ல் நடந்த னிகழ்ச்சி என்பதனால் ஒரு குருட்டடிதான்."
நல்ல முயற்சி ஆனால் சரியான விடையல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
2. 2. எம்.ஜி.ஆர் சமாதி மெரீனா கடர்கரையில் அமையும் என்பது.
எம்.ஜி.ஆர் சமாதி மெரீனா கடற்கரையில் அமையும் என்பது.
தவறான விடை. இன்னொரு க்ளூ இதே கேள்வியை ராஜ் கபூரைப் பற்றி ராஜேந்திர குமாருக்குத் தெரிந்தது ராஜ் கபூருக்கு ராஜேந்திர குமாரைப் பற்றித் தெரியாது என்றும் மாற்றிக் கேட்கலாம்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment