எனக்கு பிடித்த 4 விஷயங்கள்:
1. பழைய விஷயங்களை நினைவுக்கு கொண்டு வந்து அசைபோடுவது. அதனால்தானோ என்னவோ சமீபத்தில் 1952-ல் என்றெல்லாம் வார்த்தைகள் விழுகின்றன. அவற்றை நினைவுக்கு கொண்டுவரும்போது அப்போதைய மனநிலைமை முதற்கொண்டு அப்படியே வருகின்றன. அதனால்தான் என்னுடைய அப்பா, அன்புள்ள அப்பா பதிவை எழுதும்போது உணர்ச்சிவசப்பட்டேன்.
2. பிடித்த புத்தகங்களில் கோடிட்டப் பகுதிகளை மறுபடி மறுபடி படிப்பது. அம்முறையில் கிருஷ்ணமணி சமீபத்தில் 1981-ல் விகடனில் எழுதிய "வேர்கள்" என்னும் தொடர்கதையில் வந்த ஒவ்வொரு அத்தியாயத்தையும் பலமுறை படித்தேன். இப்போது பத்தாம் முறையாகப் படிப்பது ஹாரி பாட்டரின் நான்காம் புத்தகத்தின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு.
3. மொழி பெயர்ப்பது. கூறவும் வேண்டுமோ. எனக்கு பிடித்த வேலை. அதற்கு பணம் வேறு கிடைக்கிறது. டபுள் ஓக்கே.
4. பதிவுகள் போடுவது. தமிழ் மணத்தில் ஏதாவது எழுதாவிட்டால் கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது. ஆகவேதான் அதற்கு இடையூறாக வரும் போலிகளை போடா ஜாட்டான் என்று புறம் தள்ளிவிட்டு போக முடிகிறது.
எனக்கு பிடித்த நான்கு படங்கள்:
1. படகோட்டி அதன் அத்தனை பாட்டுக்களும் பிடிக்கும்.
2. மன்மத லீலை. சமீபத்தில் 1976-ல் பார்த்த இப்படத்தைப் பிறகு பார்க்கவேயில்லை. இருந்தாலும் சீன் பை சீன் ஞாபகம் இருக்கிறது.
3. ஆட்டோகிராஃப். கதாநாயகன் என்னைப்போலவே உணர்ச்சிவசப்படுபவனாக இருக்கிறான்.
4. அன்பே சிவம். முதல் முறையாக கதாநாயகனும் கதாநாயகியும் சேராமல் போனதற்காக வருத்தப்படாத படம். வேறு எந்த முடிவுமே சாத்தியம் இல்லை என்ற உண்மை முகத்தில் அறையும்போது என்ன பேச முடியும்?
நான் வசித்த நான்கு இடங்கள்:
1. திருவல்லிக்கேணி. பிறந்து வளர்ந்த இடம். இப்போது கூட அதன் வீதிகளில் செல்லும்போது பழைய நினைவுகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன.
2. நங்கநல்லூர். என் அப்பா ஆசை ஆசையாய் இங்குதான் வீடு கட்டினார். அதை வாடகைக்கு விட்டு நான் டில்லியில் இருபது ஆண்டுகள் கழித்த போது இந்த வீடு அவ்வப்போது என் கனவில் வந்தது.
3. பம்பாய். மும்பையல்ல. பசுமையான நினைவுகள் 1, 2, 3, 4.
4. தில்லி. எனக்கு மொழிபெயர்ப்பு துறையில் பல கதவுகளைத் திறந்துவிட்ட இடம். தில்லி நினைவுகள் இனிமேல் போட்டு பிறாண்டுவேன்.
எனக்கு பிடித்த வலைப்பதிவாளர்கள்:
1. என்றென்றும் அன்புடன் பாலா. இவரது பதிவுகளைப் பார்த்துத்தான் நானும் பதிவுகள் போட ஆசைப்பட்டேன்.
2. டி.பி.ஆர்.ஜோசஃப். அவரும் நானும் சேர்ந்து அடித்த பெரிசுகளின் லூட்டி பலருக்கு ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டது, முக்கியமாக இட்லி வடைக்கு.
3.தருமி. இன்னொரு பெருசு. பினாத்தல் சுரேஷ் புலம்பியது எங்களைப் பார்த்துத்தான்.
4. முத்து (தமிழினி). இஅவரைப் பற்றி நான் பதிவு போட்டுள்ளேன்.
நான் tag செய்யப் போகிறவர்கள்:
1. முத்து (தமிழினி)
2. என்றென்றும் அன்புடன் பாலா
3. நாட்டாமை
4. சோம்பேறி பையன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
17 hours ago
16 comments:
மன்மதலீலை கிளிப் பார்க்க நம்ம வீட்டுக்கு போங்க!. என்னுடய அனுபங்கள்ல பிடித்த பகுதியை நீங்க பார்க்க வேணாம்
பதிவைப் பார்த்தேன். படத்தில் ஏதாவது சீன் விடியோ க்ளிப்பிங் அப்பதிவில் இருக்கிறதா? என் திரையில் தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களிடம் Real player இருந்தால், நன்றாக தெரியுமே! ஒவ்வொரு கிளிப்பும் முதல் கொஞ்ச நேரம் இருட்டினப்பல இருக்கும், பிறகு தெரியவரும், பாருங்க!
சந்தோஷமா இருக்கு. அருகதை உண்டோ என்னவோ தெரியவில்லை.
நன்றி
அய்யா,
அது என்னங்கய்யா tag பண்றது? புது விளையாட்டா இருக்கு...ம்..வாறேன்...
வெளிகண்ட நாதர் அவர்களே, என்னிடம் ரியல் பிளேயர் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கண்டிப்பாக உண்டு தருமி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்து (தமிழினி), இது ஏதோ அந்தாதி போல இல்லை?
ஒரு படத்தில் வடிவேலுவை ஒருவன் துரத்த அவன் மணிக்கணக்காக ஓட, கடைசியில் அவன் மாட்டிக் கொள்ள, ஊ என்று அவன் அழ, துரத்தியவன் நான் உன்னைத் தொட்டுட்டேன் நீ என்னைப் பிடி என்று ஓட ஆரம்பிக்க, கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க என்று வடிவேலு நொந்து கொண்டதும் ஞாபகத்துக்கு வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாட்டாமை அவர்களே, மேலே உள்ள பின்னூட்டத்தில் நான் சொன்ன வடிவேலு கதை மாதிரித்தான். இது ஒரு மாதிரி ரிலே ரேஸ். நான் செய்த மாதிரி உங்களுக்கு பிடித்த இனியவை நான்குகளை லிஸ்ட் தயார் செய்து போடவும். என்னை மாதிரி மசாலா சேர்த்துக் கொண்டாலும் நல்லதுதான்.
முக்கியமாக உங்களை இழுத்ததற்கு காரணமே நீங்கள் சிறிது நாட்களாகப் பதிவு போடவில்லை என்பதால்தான். படிப்பு மும்முரமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்பல்லாம் பெருசுங்கதான் இளசுங்க மாதிரி ஆட்டம் போடுதுங்கன்னு யாரோ ஒரு பதிவாளர் முனகுறது கேக்கறா மாதிரி இருக்கு..
எங்க உங்க போலி அட நம்மளத்தான் சொல்றார்னு சங்கிலிக்குள்ள புகுந்துருவாரோன்னு நினைச்சித்தான் அவருக்கு ஒரு 'சாரி' சொல்லி வச்சேன்.. அவருக்கு திட்டறதுக்குத்தானே தெரியும்..
சங்கிலி மேன் மேலும் நீளமாய் செல்ல வாழ்த்துக்கள்..
நானும் முத்து(தமிழினிய) இழுத்துவிடலாம்னு பார்த்தேன்.. சரி அவரு ரொம்ப பிசியான ஆளாச்சேன்னு விட்டுட்டேன்..
சோ.பையன நானும் டாக் பண்ணேன்.. அவர் எங்க.. ஊருக்கு போய்ட்டு வந்த குஷியில இருப்பார்..போடற அன்னைக்குத்தான் நிஜம்..
தருமி அண்ணா,
என்ன படத்துல ரொம்ப சோகமா இருக்கா மாதிரி இருக்கு..
நான் என் படத்தை எடுத்துட்டேன்.. மீசை இல்லேங்கறத வச்சியே நம்மள ஒருத்தர் அடையாளம் சொன்னார் இல்லையா? மீசை இல்லாதவனெல்லாம் ஒரு ஆம்பிளையான்னு ரோஷம் வந்து எடுத்துட்டேன்..
அது ஒண்ணுமில்ல ஜோசஃப். உங்கள மாதிரி படம் வர்ரமாதிரி செய்யத்தெரியலையேங்கிற சோகம்தான் அது. (ஆனா இந்தப் படம் எப்படி வந்திச்சின்னு தெரியலையே!) நான் இந்த சோகத்தில இருக்க, நீங்க என்னடான்னா, இருந்த படத்த எடுத்துட்டேங்கிறீங்க... :-(
ஃபோட்டோ இருந்தால் போட்டுக் கொள்வது நல்லது ஜோசஃப் அவர்களே. அப்போதுதான் அதர் ஆப்ஷன் இருக்கும் பதிவுகளில் உங்கள் பெயர் மற்றும் ப்ளாக்கர் எண்ணை யாரும் ஃபோர்ஜ் செயாமல் இருப்பார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு அவர்களே, என்னையும் இழுத்து விட்டதற்கு :-)
*****
தமிழ்மணத்தை பார்க்காவிட்டால் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறதா ?? இதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன் :-)
****
உங்களுக்கு பிடித்த படங்களில் எனக்கும் பிடித்தது ஆட்டோகிராப், அன்பே சிவம் !!
இடங்களில் பிடித்தது : மும்பை (பம்பாய் அல்ல)
****
ஜோசப் சாரும் என்னை இழுத்துருக்காரு.. பாப்போம் எப்ப எழுதப்போறேனோ !!!
நன்றி சோம்பேறி பையன் அவர்களே. எழுதுங்கள், படிக்கக் காத்திருக்கிறோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வேலைகள் மத்தியிலும் நல்ல பதிவு போட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
இப்பின்னூட்டம் என்னுடைய சங்கிலிலிப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_22.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment