நண்பர் கே.கே. அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல் இப்பதிவுக்கு அடிப்படையாக அமைந்தது. அவர் எழுதுகிறார்:
சில நாட்களுக்கு முன்னால் வந்த மின்னஞ்சலில் CNN-IBN சேனலில் வந்த ஒரு செய்திக் குறிப்பு சுட்டப்பட்டிருந்தது. அதில் இளைஞர்கள் சிலர் கோவில்களுக்கு சென்று ஹிந்து தர்மத்தில் பாவிக்கப்படும் சில பழக்கங்களுக்கான விஞ்ஞான பின்னணிகளை மக்கள் அறியத் தருகிற விஷயம் கூறப்பட்டிருந்தது.
ஆங்கில மூலத்தை இங்கே பார்க்கலாம்:
வீடியோவைப் பார்க்க இங்கே சுட்டவும்:
அந்தக் குழுவினர் செய்வதை ஆதரித்து உள்ளூர் பத்திரிகைகள் எழுதியுள்ளதாக அறியப்படுகிறது. கல்லூரி செல்லும் மாணவர்கள் அதில் அடங்கியுள்ளனர்அது பற்றிய செய்திக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆதரவு தேவை. விரும்பினால் உதவவும்.
நல்லது கே.கே. அவர்களே. அந்த மாணவர்கள் செய்வது நல்ல காரியமே. ஏதோ என்னால் ஆன உதவி.
Adyar Talk பத்திரிகையில் வந்த ரிப்போர்ட் (சென்னை):
விபூதி ஏன் இடுகிறோம் என்று தெரியுமா? அக்கினி வளர்த்து ஹோமங்கள் செய்யப்படும் நோக்கங்கள் என்ன, அரச மரத்தை ஏன் சுற்றுகிறோம்? மந்திரங்கள் ஏன்? எண் 108-ன் முக்கியத்துவம்?
இக்கேள்விகளுக்கும் வேறு சில கேள்விகளுக்கும் அறிவியல்பூர்வமான விடைகள் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஒரு இளைஞர் குழு. இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றிய அறிவை மக்களிடம் வளர்ப்பதே அதன் நோக்கம். அது அரசு சார்ந்த அமைப்பு அல்ல. அரசுசாரா அமைப்பும் (NGO) அல்ல; மத அடிப்படையில் ஆனதும் அல்ல. நகரத்தின் பல கல்லூரிகளிலிருந்து வந்துள்ள இளைய சமுதாயமே அது.
இக்குழு பல கோவில்களுக்கு சென்று நாம் தினசரி பாவிக்கும் மத பழக்க வழக்கங்களின் அடிப்படையை பகுத்தறிவு மூலம் விளக்கி வருகிறது. இதன் ஆரம்பங்களைப் பற்றி கேட்டபோது ஒரு தன்னார்வலர் பால கணேஷ் கூறுவதாவது: "சுவாமி விவேகானந்தரின் செயல்திட்டமே எங்களுக்கு இதில் வழிகாட்டி. நமது கலாச்சார பழக்க வழக்கங்களின் அறிவியல் அடிப்படையை வெளிக்கொணர நாங்கள் முடிவு செய்தோம"
கடந்த ஒரு வருடமாக இக்காரியத்தில் ஈடுபட்டு வருகின்றர் இக்க்ழுவினர். நகரத்தில் பல கோவிகளில் இத்தொண்டை செய்துள்ளனர். இதற்காக அவர்கள் கடைபிடிக்கும் வழிமுறை ரொம்ப எளிமையானது. கோவில் நிர்வாகங்களின் அனுமதி பெற்று தங்களது தட்டிகளை பொருத்துகின்றனர். அவற்றில் நமது கலாச்சார பழக்கவழக்கங்களின் அறிவியல் பின்னணி பற்றி அவர்கள் கூற வருவது எழுதப்பட்டுள்ளது
அதன் தன்னார்வலர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இவை பற்றி பேசி விளக்குகின்றனர். "இவை பற்றி கையேடுகள் இருந்தால் நலமாக இருக்கும் என்று பலர் கருத்து கூறினர். ஆகவே எங்களிடம் இருக்கும் பணத்தைத் திரட்டி, இலவசமாக வினியோகிக்க ஒரு கையேடு வெளிக்கொணர்ந்தோம்" என்று கூறுகிறார், காளிதாஸ் என்னும் சட்டக் கல்லூரி மாணவர்.
சமீப காலமாக அவர்கள் கோவில்களை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதை ஒரு கரசேவையாக அவர்கள் கருதுகின்றனர்
கடந்த ஞாயிறன்று, கிண்டி் சாய்பாபா கோவிலில் இந்தக் கோவில் ப்ராஜக்ட் செயல்படுத்தப்பட்டது. இந்தியக் கலாசாரத்தின் உண்மைப் பரிமாணங்களை உணர்ந்து, மக்களுக்கும் அவற்றை எடுத்துக் கூறுவதே இக்குழுவினரின் நோக்கம். ஆகவே அவை சம்பந்தமாக தங்களுக்குள்ளேயும் விவாதிக்கின்றனர்.
இந்த மாணவர்கள் ஆக்கும் காரியங்களைப் பார்த்த பல கோவில் நிர்வாகங்கள் இந்தத் தட்டிகள் தத்தம் கோவில்களிலும் நிரந்தரமாக வைக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளன. இதை நல்ல சிக்கனமான முறையில் நிறைவேற்ற இந்த மாணவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இதில் பல இடையூறுகளையும் சந்திக்கின்றனர். "பிரசித்தி பெற்ற கோவில்களும் இந்து அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களிலும் பல சட்ட விதிமுறைகள் இவர்களது முயற்சிகளுக்கு வேகத்தடையாக உள்ளன" எனறு கூறுகிறார் பொறியியல் மாணவர் சங்கர் ராம்.
"இதில் மிகப்பெரிய தடை பணத்தட்டுப்பாடே. மாணவர்களாகிய நாங்கள் இந்தக் கையேடுகளை அச்சிடத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்வது கடினம். அதே சமயம் நாங்கள் எந்த தனி நிறுவனத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை. புரவலர்களும் இல்லை" என்று கூறுவது மதுக்குமார் என்னும் இன்னொரு பொறியியல் மாணவர்.
இந்த எழுச்சிமிக்க இளைஞர்கள் உபயோகமற்றவர்கள் அல்ல, குறைவாக உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என்பதே நிஜம். மேலதிகத் தகவல்களுக்கு காளிதாஸ் செல்பேசி எண் 9841063687.
இப்போது டோண்டு ராகவன் மேலும் கூறுவது. நண்பர் மரபூர் சந்திரசேகர் அவர்கள் பல கோவில்களில் கரசேவை செய்பவர். அவரைப் போன்றவர்களின் தொடர்பு இக்குழுவினருக்கு உதவியாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
5 hours ago
48 comments:
நீங்க கோவி, கோவி ("ல்" இல்லாம) எழுதி இருக்கர்த பாத்த, யாரையோ உள் குத்து குத்தறது மாதிரி இருக்கே!
ஏதோ கொளுத்தி போடணும் போல இருந்தது .. ஹி ஹி.
எழுத்துப் பிழை (தலைப்பில்) Unintentional என நம்பமுடியவில்லை! Intended என்றால் ஏன்? இது சரியில்லை, சீப்பாக இருக்கிறது டோண்டு அவர்களே!
முதலில் தலைப்பில் "ல்" என்ற எழுத்தைச் சேர்க்கவும். கோவிகளில் என்று இருக்கிறது.
இவர்கள் உண்மையான பகுத்தறிவுவாதிகள். ஆனால் சி.என்.என்.ஐ.பி.என் தலைப்பைப் பார்த்தீர்களா ?
Hanging out in temples to "RATIONALISE" religion
அறிவினால் அடைய முடியாதது தான் மதம் என்ற மத்திய கிழக்கு மனித விரோத மதச் சிந்தனையின் தாக்கம் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது அவர்கள் மூளையில், அதனால் தான் இப்படி ஒரு தலைப்பு.
நல்ல செய்தி சார். இந்த மாதிரி நான் தொண்டாற்ற காலம் என்று கனிய போகிறதோ.
வாழ்க அவ்விளைஞர்கள். அவர்கள் அவர்தம் பணி
வெளியே போகும் அவசரத்தில் பதிவு போட்டு விட்டு சென்றபோது எழுத்துப்பிழையை கவனிக்கவில்லை. இப்போது திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.
இதில் எனது உள்நோக்கத்தை சந்தேகிப்பது சரியில்லை. பதிவையும் அதன் லேபலை பார்த்தாலே புரிந்திருக்க வேண்டும் இது எழுத்து பிழை என்று. அதையும் மீறி உள்நோக்கம் இருப்பதாக சந்தேகத்தை வெளிப்படுத்துபவர்கள் தாங்கள் யாரிடமோ ப்ரௌனீஸ் புள்ளிகளை பெறவிரும்புவதாக நான் ஏன் கூறக்கூடாது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சாதா எழுத்துபிழைக்கு வந்து சீப்,சந்தேகம் என்று கும்மியடிக்கும் பெனாத்தலார், கேடி குண்டன் தனது பதிவில் டோண்டுவின் குடும்பத்தை கேவலமாக எழுதியபோதும் அமுக பதிவுகளில் நோண்டு மாமா என்று எழுதியபோதும் எங்கே போயிருந்தார்?
ஒருவேளை செலக்டிவ் அம்னீசியாவோ?
சுரேஷ்,
தலைப்பில் unintentional எழுத்துப் பிழை என்பதே என் எண்ணமும் !
"Intentional", "Cheap" என்று சொல்லி ஒரு அனாவசிய தர்க்கத்தை ஆரம்பிக்க வேண்டாமே :(
அப்படி வராது பாலா அவர்களே. ஏனெனில் சற்று முன்புதான் சுரேஷ் சேட்டில் வந்தார். நாங்கள் பேசி தீர்த்து கொண்டோம். இனி அந்த விவாதம் வராது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Why should there be a scientific reason for the rituals.In the name of explaining that there is 'science' behind rituals they will end up giving a wrong picture of both. There is no scientific reason for wearing tie to office
or to wear shoes and socks in a hot city like Madras. It has become a formal practice. Why cant we extend this logic to rituals and accept them. Faith need not be based on science.
//Why should there be a scientific reason for the rituals.//
Why not? what is wrong in exploring such a possibility? Hinduism is not like abhrahamic religions to have rigid rules and blindly following/believing what the prophets have dictated to their followers.
would they extend this service to amman kovils and muneeswaran/sodalamaadan temples as well?
//
would they extend this service to amman kovils and muneeswaran/sodalamaadan temples as well?
//
unless, the dravidian dogs along with their missionary paid fat cheques come and prevent these good sensed people, they would prosper and come to any temple and explain.
After all,
Ekam sat, viprah bahuta vadanti
Truth is one, wise men call it by many names.
makkal kalai ilakkiya nanbargal palar pothu makkal munbu pala inthu matha purattukkalai ariviyal sothanaigal moolamaga nirupiththullanar.
komanan
\\There is no scientific reason for wearing tie to office
or to wear shoes and socks in a hot city like Madras.//
இது உங்களுக்குத் தெரியுது. டமில், டாமில் கலாச்சாரம்னு கூவுறவங்களோட புத்திரன் கோட்டு, சூட்டு டை இல்லாம வெளில வர்றதே இல்லையே?
jokes apart:
கீழே உள்ளவற்றிற்கு யாருக்காவது பதில் தெரியுமா?
1. ஏன் வீட்டு வாசலில் அதிகாலை நேரத்தில் சாணி தெளிக்கிறார்கள்? மார்கழி மாதத்தில் ஏன் பரங்கிப்பூவை வைக்கிறார்கள்?
2. இணையத்தில் ஒ(டு)துக்கப்பட்ட பார்ப்பனர்கள் செய்யும் தர்ப்பணத்தில் ஏன் "தர்ப்பைப்புல்" உபயோகிக்கிறார்கள்?
3. கோயிலில்களில் கும்பிடும்போது ஏன் கைகளை குவிக்க வேண்டும்? (சிலர் கடனுக்கு கைகளை தட்டையாக சேர்த்து கும்பிடுவார்கள், இது தவறு).
4. பெண்கள் ஏன் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்?
இதற்கான பதிலை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் நான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பின்பற்றுபவன். கேள்விகள் கேட்க மட்டுமே தெரியும்.
டோண்டு சார்: இன்னும் சில இடங்களில் "கோவி" என்றிருக்கிறது. அவற்றை (கடைசி பத்தி மற்றும் கடைசியிலிருந்து ஆறாவது பத்தி) திருத்தி விடவும். ஒரு சிறு சந்தேகம் : நீங்கள் பத்து பதிவுகள் தயார் செய்திருப்பதாகவும், அவை சமீப நிகழ்வுகளால் சச்சரவை உண்டாக்கும் என்று வெளியிடாமல் இருப்பதாகவும் வேறோரு வலையில் படித்தேன் (ஞாபகம் இல்லை, மன்னிக்கவும்). அவற்றில் இதுவும் ஒன்றா?
Ada pongada pokuatravanay
Try to do some useful work
Nowadays attempts are made to rationalize unrational things. Every religion is doing that. Even christianity is trying to do this.
This is utter crap and just spin doctoring.
I used to read "janabhoomi" where they used to say proton is nothing but shiva and electron is parvathi qutoing some nonsense text. when more nuclear particles were found the smae janabhoomi will put more spin saying that is shiva and another is vishnu and such crap.
How these usless kids are going to justify untouchability and sati craps in hinduism.
Instead of trying to do all such nonsense people should engage in spreading the real jist in hinduism which is "advaitham". Strict followers of advaitham will not believe in any god as every one is god and there is no need for external manifestation.
If these students wants to preach anything let them print S.Radahkrishnan's philosophy book and distribute it instead of trying to invent nonsense to explain why we need to smear ashes/practise sati and untouchability.
டேய் கோமணம், நீ ஒரு ம.க.இ.க மடையன் என்று என்றோ நினைத்தேன் இன்று உன் எண்ணத்தை வெளியிட்டு அதை உறுதி செய்ததற்கு நன்றி.
போய், பஸ் ஸ்டாண்டில் உண்டியல் குலுக்கும் வேலையைப் பார், சில்லரையாவது தேரும். எங்கே மசூதி முன்னாடி நின்னு பெரியார் கடவுளைப்பற்றி சொன்ன சில வாக்கியங்களை உறக்கச் சொல்லிப்பார், நீ ஆணாக இருந்தால் உன் ஆண்மையை வெட்டி எரிந்துவிடுவார்கள், இல்ல பெண்ணாக இருந்தால் உன்னை அம்மா வாக்கிவிடுவார்கள். சும்மா இந்து மதப்புரட்டு என்று சொல்லும் உனக்கு இந்துக்களைத் திட்டுவது தவிர வேறு எதுவும் செய்ய வக்கில்லை.
அன்புள்ள டோண்டு,
செய்திக்கு நன்றி. இத்தொண்டுகளின் மூலம், சுற்றியுள்ள மக்களையும் சந்திக்க முடிகிறது, அவர்களுள் பள்ளி கல்லூரி போக வசதியற்றவர்க்கும், படித்தும் வேலை கிடைக்காதவர்க்கு வேலை கிடைக்கச்செய்தும் வருகிறோம். நமச்சிவாய சொல்லத்தெரிந்து, சிவலிங்கத்தின் மேல் நீர் ஊற்றி, கிடைக்கும் காட்டுப்பூவை வைத்து, தான் உன்ணுமுன் இறைவனுக்கு அர்ப்பணித்த பின், உண்ணுவதுவே தகுதியாக பூசை நடத்துபவர், புலால், புகை இன்றில்லாதவராயும், பெருமாள் கோவில்களில், துளசியைப்போட்டு வணங்கி, நமோநாராயணா சொல்லத்தெரிந்தவர், இதே சிரத்தையோடு செய்யச் சொல்லியும் வருகிறோம். யாரோ துவக்கி வைக்கச் சொல்லி நாங்கள் செய்யவில்லை. பல கோவில்களில் பூசாரியோ, அந்தணாரோ கிடைப்பதில்லை! படிக்க: http://templesrevival.blogspot.com and http://reachhistory.blogspot.com and www.conserveheritage.org and join temple_cleaners yahoo groups
Another stupid explanation by Krishnakumar.
Without knowing what the people are actually speaking, this person comes and tells they they are rationalizing Sati! And giving them advice of using S.Radhakrishnan.
Please try and find out what they have said in the first place before assuming and "rationalizing" your irrational assumptions.
//
Even christianity is trying to do this.
This is utter crap and just spin doctoring.
//
What do you mean by "EVEN" christianity ?
As if christianity never tried and its just trying now ?
All the while the only source of evil and untruth has been the Vatican.
scientific explanations on heritage practises:
http://www.uppathil.net/
http://www.iish.org/about.asp (Indian Institute of Scientific Heritage )
//டேய் கோமணம், நீ ஒரு ம.க.இ.க மடையன் என்று என்றோ நினைத்தேன் இன்று உன் எண்ணத்தை வெளியிட்டு அதை உறுதி செய்ததற்கு நன்றி.....
சும்மா இந்து மதப்புரட்டு என்று சொல்லும் உனக்கு இந்துக்களைத் திட்டுவது தவிர வேறு எதுவும் செய்ய வக்கில்லை. //
மக்கள் கலை இலக்கிய கழகம் என்பது மக்களிடையே பரவிக்கிடக்கும் பல மூட நம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாகவும் கூத்துப்பட்டறை போன்ற வீதி நாடகங்கள் மூலமாகவும் அறியாமையை விலக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஒரு சமூக புரட்சி இயக்கம். சும்மா தின்று கொழுத்து வயிறு வளர்க்கும் சங்கர மடமல்ல. இந்து மதத்தில்தான் அதிக மூட நம்பிக்கைகள் இருப்பதால் அவற்றை குறி வைத்து அதிகமாக செயல்படுகிறார்கள். உண்மையை சொன்னால் கோபம் வருகிறதோ?
//நீ ஆணாக இருந்தால் உன் ஆண்மையை வெட்டி எரிந்துவிடுவார்கள், இல்ல பெண்ணாக இருந்தால் உன்னை அம்மா வாக்கிவிடுவார்கள்//
//
அதுதான் குஜராத்தில் பார்த்தோமே உங்கள் லட்சணத்தை?.
Komanan
//How these usless kids are going to justify untouchability and sati craps in hinduism.//
I thought sati was abolished, isn't untouchability illegal. krishnakumar you are way back in time, welcome to 2008.
//
இந்து மதத்தில்தான் அதிக மூட நம்பிக்கைகள் இருப்பதால் அவற்றை குறி வைத்து அதிகமாக செயல்படுகிறார்கள். உண்மையை சொன்னால் கோபம் வருகிறதோ?
//
கோமணம்,
இஸ்லாமிய, கிருத்துவ மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை விரட்ட இதுவரை ம.க.இ.க என்ன செய்துள்ளது ?
அவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா ? அவர்கள் மட்டும் அவர்கள் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை நம்பிக் கொண்டு ஏமாற வேண்டுமா ?
உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் இஸ்லாமிய, மற்றும் கிருத்தவ சமூகத்தின் எதிரிகள்.
//மக்கள் கலை இலக்கிய கழகம் என்பது மக்களிடையே பரவிக்கிடக்கும் பல மூட நம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாகவும் கூத்துப்பட்டறை போன்ற வீதி நாடகங்கள் மூலமாகவும் அறியாமையை விலக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஒரு சமூக புரட்சி இயக்கம். //
இவ்வளவு வருடங்களாக இருந்து என்ன செய்ய முடிந்தது உங்களால்? ஒண்ணும் செய்யவில்லை. உங்களால் கடவுள் இல்லை என்று சொல்லிகொண்டிருதவரும் கோயில் கோயிலாக அலைகிறார், மந்திரவாதி சாய் பாபாவிடம் மோதிரம் கேட்கிறார். சக்தி அம்மா சாமிஜி பீடத்தில் கை ஏந்துகிறார். என்ன கொடுமை இது.
நீங்கள் சும்மா விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் என்று கட்டுகதை விடாமல், நீங்கள் 'ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத சோஷலிச அரசியல் இயக்கம்' என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்
//
நீங்கள் 'ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத சோஷலிச அரசியல் இயக்கம்' என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்
//
ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஜனநாயக நாட்டில் வாழக்கூடத் தகுதி இல்லாதவர்கள். அவர்கள் நாட்டின் எதிரிகள். ம.க.இ.க என்பது ஒரு தேசவிரோத அமைப்பு. சோசியலிசம் என்பது ஜனநாயகத்தின் எதிரி. இந்துக்களை மட்டும் குறி வைக்கும் இந்த கேப்புமாரி இயக்கம் எல்லாம் இருந்தால் என்ன இல்லாமல் இருந்தால் தான் என்ன ? இவர்களால் தான் நாட்டில் கலவரம், கலகம் எல்லாம் நிகழ்கிறது. இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் நக்சலைட்டுகளாக மாற டிரைனிங் கொடுக்கிறார்கள் இந்த மானங்கெட்ட ம.க.இ.க மடையர்கள். நக்சல் இயக்கத்தின் பின்புறத்தை நுகர்ந்து புழகாங்கிதம் அடையும் கூட்டம் தான் ம.க.இ.க கூட்டம்.
ம.க.இ.க இயக்கத்திற்கும் தீவிரவாதத்தை வளர்க்கும் மதரசாக்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்களுக்கு சிவப்பு புத்தகம் என்றால் அவர்களுக்கு பச்சை புத்தகம், இரண்டுமே தீவிரவாதத்தை வளர்க்கும் செயல்முறை விளக்கப்புத்தகங்கள்.
pagutharivu look this:
http://www.iish.org/about.asp (Indian Institute of Scientific Heritage )
//விபூதி ஏன் இடுகிறோம் என்று தெரியுமா? அக்கினி வளர்த்து ஹோமங்கள் செய்யப்படும் நோக்கங்கள் என்ன, அரச மரத்தை ஏன் சுற்றுகிறோம்? மந்திரங்கள் ஏன்? எண் 108-ன் முக்கியத்துவம்?//
இவைகள் தற்செயலாக நடந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.
இவற்றின் பயன்கள் பின்னாளில் இவற்றை நியாய படுத்த உருவாக்கியிருக்க வேண்டும்.
சரி அப்படியே இருந்தாலும் இவைகள் இல்லாமலும் மனிதர்கள் வாழ முடியுமே. பின் ஏன் இதை ஒரு கலாசாரமாக எடுத்த சொல்லவேண்டும்.
சிற்பகலைகள் எல்லா நாட்டிலும் உள்ளது. அது போல் நமது நாட்டிலும் உள்ளது.
ஆகவே கோவில்களை ஒரு கலாசார சின்னமாகவும், மாணவர்களுக்கு சிற்ப கலையை சொல்லிகொடுக்கவும் வேண்டுமானால் உபயோகபடுத்தலாம் என்பது என் எண்ணம்.
வால்பையன்
//
இவைகள் இல்லாமலும் மனிதர்கள் வாழ முடியுமே. பின் ஏன் இதை ஒரு கலாசாரமாக எடுத்த சொல்லவேண்டும்.
//
உடைகள் இல்லாமலும் மனிதர்கள் வாழமுடியும்.
மின்சாரம், டீ.வி ஃபிரிட்ஜ் வாஷிங் மெஷின் இல்லாமல் கூட மனிதர்கள் வாழமுடியும்.
எப்படி சராசரி வாழ்க்கையின் (material life) தரத்தை அவையெல்லாம் முன்னேற்றுகிறதோ, அதே போல் நீங்கள் கூறியவற்றைச் செய்வதால் ஆன்மீக வாழ்க்கையின் (spiritual life) தரம் உயரும்.
//உடைகள் இல்லாமலும் மனிதர்கள் வாழமுடியும்.
மின்சாரம், டீ.வி ஃபிரிட்ஜ் வாஷிங் மெஷின் இல்லாமல் கூட மனிதர்கள் வாழமுடியும்.//
சரியாக தான் சொல்கிறீர்கள். மனிதன் உடையை அணியும் பழக்கம் கொண்டுவரும் முன்னர் இந்த கடவுளை கண்டுபிடித்திருக்க மாட்டான்.
மின்சாரம், டீவி, போன்று கடவுளும் ஒரு கண்டுபிடிப்பு தான்,
இது தானே என் வாதம்.
//எப்படி சராசரி வாழ்க்கையின் (material life) தரத்தை அவையெல்லாம் முன்னேற்றுகிறதோ, அதே போல் நீங்கள் கூறியவற்றைச் செய்வதால் ஆன்மீக வாழ்க்கையின் (spiritual life) தரம் உயரும்.//
நீங்கள் சொல்லியிருப்பது கோவிலை பற்றிய என் கண்ணோட்டத்தை என்று நினைக்கிறேன். இதில் spiritual லைப் எங்கிருந்து வருகிறது.
கலை மனித வளர்ச்சியில் ஒரு அங்கம். அதை ரசிக்கலாம் வேறு என்ன அதில் இருந்து எதிர் பார்க்கிறீர்கள்,
அல்லது இதே போல் மற்ற (மனிதர்களுக்கும் )அனைத்திற்கும் மரியாதை தர வேண்டியது நம் கடமை அல்லவா!
வால்பையன்
எழுமலை.. அப்போ நீங்க எல்லாம் அதுக்கு கூட லாயக்கு இல்லாத சூடு சொரனை இல்லத கூட்டம் நு ஒத்துக்கற?? அப்படித்தானே
நல்லா சொன்னீங்க வால்பையன்.
ஏழுமலை.. அப்போ டீ வீ , பிரிட்ஜ் போலத்தான் கடவுள்களும் என்று சரியாக சொல்லிவிட்டீர்கள்.
அது ஏசுவானாலும், ராமர், முருகர், வினாயகர் என எந்த கண்டுபிடிப்பு கடவுளானாலும் பொருந்தும்..
ippadi solli solli than 2000 varudangalaaga yematri varukirargal.
komanan
அனானிகளுக்கு என் வேண்டுகோள்!
நான் என் நம்பிக்கையின் அடிபடையில் வாதம் செய்கிறேன்.
அவர்கள் மாற்று நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுடன் என் நட்பு மிக முக்கியமானது
தயவுசெய்து சிண்டு முடித்து விடாதீர்கள் யாருடனும்.
வால்பையன்
எவ்வளவு தான் நாயைக் குளிப்பாட்டு நடுவீட்டில் வைத்தாலும் அது நாறும் குப்பையைத் தான் விரும்பும் என்பது சரியாக புரிய வைத்த கோமணம், வாக்காளன் போன்றோர்க்கு நன்றி.
ம.க.இ.க மடையர்கள், கம்யூனிஸ்டுகளுக்கும் கடவுள் இல்லை. அதே போல் நாய்க்கு, பன்றிக்கும் தான் கடவுள் இல்லை. ஆகவே இரண்டும் ஒன்றா ?
\\விபூதி ஏன் இடுகிறோம் என்று தெரியுமா?//
நெற்றியில் வழியும் வியர்வை உடல் நலத்திற்கு நல்லதில்லை. சளி பிடிக்கும், ஒற்றை/இரட்டை தலைவலி வரும். நெற்றியில் இடப்படும் வீபூதிப் பட்டை வியர்வையை உறிஞ்சும்.
புருவ மத்தியானது மிகவும் சென்ஸிடிவ் ஆன காந்தப்புலமாகும். கண்களை மூடி உள்ளங்கை வாய் மற்றும் மூக்கின் மேலிருக்க, ஆட்காட்டி விரலால் அடுத்தவரின் புருவ மையத்தை வலமாகவும், இடமாகவும் சுழற்றி அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக ம க இ க / தி க பேர்வழிகள் முறையே மருதையன் / கி. வீரமணி போன்றோரிடம் இப்பரிசோதனையை செய்யலாம். பெண்கள்/ஆண்கள் இருவரையுமே ஹிப்னாடிஸம் / மெஸ்மரிஸம் மூலம் வசியப்படுத்த முடியும் என்பது நிரூபனமான உண்மை. இதனால் தான் அந்த இடத்தை வீபூதி / குங்குமம் கொண்டு மறைத்திருப்பார்கள் நம் முன்னோர்கள்.
வீட்டு வாசலில் தெளிக்கப்படும் சாணம் காற்றிலுள்ள ஒசோனை ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையது. சாணம் தெளித்து, பின் குனிந்து கோலம் போடும்போது ஒசோனை சுவாசிப்பார்கள் என்ற காரணத்தினாலும், மற்றும் சாணத்திற்கு கிருமிகளைக் கொல்லும் தன்மை உண்டு என்பதாலுமே சாணம் தெளிக்கப் படுகிறது.
அதே போல பிள்ளை வரம் வேண்டி அரசமரத்தை சுற்றுவதும் ஒசோனை சுவாசிப்பதற்காகவே. அரசமர இலைகளுக்கு ஒசோனை ஈர்த்து வெளியிடும் ஆற்றல் உள்ளது.
நம் முன்னோர்கள் விவரம் கெட்டோ, கூறு கெட்டோ எந்த செயலையும் செய்யவில்லை. அவர்கள் செய்த எல்லாவற்றிலுமே அறிவியல் சார்ந்த அர்த்தம் இருந்தது. சிலவற்றுக்குப் பின்னாலிருக்கும் அறிவியல் பூர்வமான உண்மைகள் நம்மைப் போன்ற (ம க இ க மற்றும் தி க ஆதரவாளர்களைசொல்லவில்லை, ஏனென்றால் அவர்கள்தான் "அறிவு"ஜீவிகளாயிற்றே!) மரமண்டைகளுக்கு விளங்காத காரணத்தினாலேயே வீண் விதண்டாவாதம் செய்து நம்மையும் ஊரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆரிய வெண்ணை எழுமலை... இவ்லோ பேசும் நீங்கள் கடவுள் இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? அப்படி முடியாமல்தானே பொய் கதைகள் பல கூறி தமிழனை ஏமாற்றி வந்துள்ளீர்கள்? கடவுளால் வறுமை குறைந்துள்ளதா? பட்டினி சாவுகள் குறைந்துள்ளதா? சாதி மத வர்க்க பேதம் ஒழிந்துள்ளதா? லஞ்சம்
ஒழிந்துள்ளதா? சுனாமி ஒழிந்துள்ளதா?
எம்மாலும் உம் போன்று தர குறைவாக திட்ட தெரியும். உமது இனத்தை செர்ந்த டோண்டு அவர்கள் பிரசுரிக்க மாட்டார் என்பதால் விடுகிறேன்.
கோமணகிருஷ்ணன்
//மரமண்டைகளுக்கு விளங்காத காரணத்தினாலேயே வீண் விதண்டாவாதம் செய்து நம்மையும் ஊரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.//
ஆரோக்கியமான விவாதத்திற்கு தான் நண்பரே நான் வருகிறேன்.
கோவில்களில் கற்பூரம் ஏற்றப்பட்டது புனிதமாகத்தான் கருதப்பட்டது.
என்று அதை ஏற்ற கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
இதேபோல் இஉங்கள் விளக்கங்களும் பின்னாளில் எதோ ஒரு காரணத்திற்காக மாற்ற படலாம் பாருங்கள்.
வால்பையன்
//பொய் கதைகள் பல கூறி தமிழனை ஏமாற்றி வந்துள்ளீர்கள்?//
நாங்க தான் சொன்னோம், ஏன் தமிழன் அதை கேக்கணும். இப்ப மஞ்ச துண்டு அய்யாவும் அதை தானே செய்ய பார்க்கிறார்.
//எம்மாலும் உம் போன்று தர குறைவாக திட்ட தெரியும். உமது இனத்தை செர்ந்த டோண்டு அவர்கள் பிரசுரிக்க மாட்டார் என்பதால் விடுகிறேன்.//
நீயி மனுசன் தானே, இல்ல நாயா? உமது இனம் எமது இனம் எதோ சொன்னியே அதான் கேட்டேன்
//கடவுளால் வறுமை குறைந்துள்ளதா? பட்டினி சாவுகள் குறைந்துள்ளதா? சாதி மத வர்க்க பேதம் ஒழிந்துள்ளதா? லஞ்சம்
ஒழிந்துள்ளதா? சுனாமி ஒழிந்துள்ளதா?//
சரியான கேள்வி. அனால் இதே கேள்வியை நீங்கள் அரசுக்கும் அதன் சோஷலிச கொள்கைகளுக்கும் கேட்க்க மறுப்பது ஏன்?
நீங்கள் கேட்க மாட்டீர்கள். நானே கேட்டுவிடுகிறேன்.
சோஷலிசத்தினால் வறுமை குறைந்துள்ளதா? பட்டினி சாவுகள் குறைந்துள்ளதா? சாதி மத வர்க்க பேதம் ஒழிந்துள்ளதா? லஞ்சம் ஒழிந்துள்ளதா?
//என்று அதை ஏற்ற கூடாது //
அவசரமாக தட்டியதால் எழுத்து பிழையை திருத்தமுடியவில்லை
அதில் "என்று" என்பதை இன்று என்று படிக்கவும்
வால்பையன்
ஏழுமலை , நான் ம க இ க வும் இல்லை, கே க து க என எதுவும் இல்லை... கடவுள் மறுப்பாளன் அவ்வளவுதான்.. மேலும், எங்கும் சென்று நாத்திக வாதம் செய்வது, கடவுளை பழிப்பது, கும்பிடுவோரை பழிப்பது என்று எதுவும் செய்வதில்லை.. என்னளவில் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். கடவுள் மனிதனின் கண்டுபிடிப்பே என இருக்கிறேன்.
தேவையின்றி ஏன் வார்த்தைகளை விடுகின்றீர் நாய், பண்றி என?
இப்போது எல்லோருக்கும் தெரியும் யார் எது என??
/நெற்றியில் வழியும் வியர்வை உடல் நலத்திற்கு நல்லதில்லை. சளி பிடிக்கும், ஒற்றை/இரட்டை தலைவலி //
சரியாதே சொல்லியிருக்கீங்க திரு அனானி, மிகச் சரியான வாதம் உங்களுடயது.
இதெல்லாம் சில நல்ல விஷயங்களுக்கு சொன்னது. அறிவியல்பூர்வமான உண்மை. நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அதை மறுக்கவில்லை.. ஆணால் , கடவுள் , வர்க பேதத்தோடு இனைத்து இதனை பேசுவது தான் தவறு என்கிறோம் என் போன்ற கடவுள் மறுப்பாளர்கள்.
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையான விஷயம், ஆனால் அதனை ஏன் கடவுளுடன் இனைக்கவேண்டும்? தலைவலி என்பது இந்துவுக்கும் வரும், கிறிஸ்துவுக்கும் வரும் , இஸ்லாமியருக்கும் வரும். ஆனால் விபூதி என்ற ஒன்றை ஏன் இந்துக்களின் அடையாளமாக வைத்தார்கள்?
இவ்வளவு அழகாக யோசித்து செய்தவர்கள் ஏன் அதை இந்து மதத்துடன் இனைத்தார்கள்? அனைவருக்கும் பொதுவாகவே தானே வைத்திருக்கவேண்டும்?
ஒரு வேளை பொதுவாக சொல்லிவிட்டு , பின்னர் அது கடவுளோடு , மதத்தோடு ஒன்றி விட்டதா? எப்படி என்ன நடந்தது என்று புரியவில்லை
இது வீண் வாதம் அல்ல, நியாயமான கேள்வி என புரிந்துக்கொள்வீர்களா?
குறிப்பு - நான் ம க இ க வும் , கே க து க , தி க , என எதுவும் இல்லை... கடவுள் மறுப்பாளன் அவ்வளவுதான்..
//
ஆரிய வெண்ணை எழுமலை... இவ்லோ பேசும் நீங்கள் கடவுள் இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? அப்படி முடியாமல்தானே பொய் கதைகள் பல கூறி தமிழனை ஏமாற்றி வந்துள்ளீர்கள்? கடவுளால் வறுமை குறைந்துள்ளதா? பட்டினி சாவுகள் குறைந்துள்ளதா? சாதி மத வர்க்க பேதம் ஒழிந்துள்ளதா? லஞ்சம்
ஒழிந்துள்ளதா? சுனாமி ஒழிந்துள்ளதா?
//
சூடான வெண்ணை, கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும். முடியுமா ? இல்லை என்றால் மூடிக்கொள்ளவும்.
வாக்காளா, நீ வெறும் கடவுள் மறுப்பாளன் என்பதை யாம் அறியோம். கண்ட நாயுடன் கூட்டு சேர்ந்து ஜால்ரா தட்டியதால் வந்து விழுந்தது தான் அது. ஆகவே உங்கள் கேள்வியை ம.க.இ.க, தி.க, இன்ன பிற "க" க்களிடமிருந்து விலகி நின்று கேளுங்கள். தெளிவான பதில் நிச்சயம் கிடைக்கும்.
\\ஆரோக்கியமான விவாதத்திற்கு தான் நண்பரே நான் வருகிறேன்.
கோவில்களில் கற்பூரம் ஏற்றப்பட்டது புனிதமாகத்தான் கருதப்பட்டது.
என்று அதை ஏற்ற கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.//
வால்பையன்,
நானும் ஆரோக்கியமான விவாதத்தையே விரும்புபவன். நம் முன்னோர்கள் உபயோகித்த கற்பூரத்திற்கும், இப்போது நாம் உபயோகிக்கும் கற்பூரத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பழையது இயற்கையாக ம்ரத்திலிருந்து எடுக்கப்பட்டது. இப்போதையது சிந்த்தடிக், நாம் செயற்கையாக டர்பெண்டைன் எண்ணையிலிருந்து தயாரிக்கப் படுவதையும், பெட்ரோலியம் சுத்திகரிப்பிலும் கிடைப்பதையும் உபயோகிக்கிறோம். ஏன் தடை செய்யப்பட்டது என்று புரியும் என்று நினைக்கிறேன்.
வாக்காளன்,
நம்மைப் போன்றோர்களிடம் இதைச் செய், அதை செய்யாதே என்றால் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது செய்ய மாட்டோம்/செய்வோம் . அதனால்தான் கடவுளின் மேல் பழியைப் போட்டு இதை செய்யாட்டா உம்மாச்சி கண்ணக் குத்தீரும் என்று அறிவியலையும் / கடவுளையும் கோர்த்து விட்டார்கள் நம் முன்னோர்கள்.
இன்னொரு கொசுறு: பார்ப்பணர்கள் இறந்தவர்களுக்கு செய்யும் திவசம் / தவசத்தின் போது தர்ப்பைப் புல் வைத்து செய்வார்கள். உடம்பிலிருந்து பிரிந்த உயிரானது காஸ்மிக் கதிர்களாய் அண்டவெளியில் சுற்றும். இதைத்தான் "செத்தவன் ஆவி இங்கயே சுத்தி சுத்தி வருதுடா"ன்னு கிராமங்களில் சொல்லக் கேட்டிருக்கிறோம். சரி விஷயத்திற்கு வருவோம். பார்ப்பணர்கள் செய்யும் திவசத்தில், ஸ்பஷ்டமாக சில மந்திரங்களை சொல்லி, இறந்தவர் பெயர், குலம் கோத்திரம் எல்லாவற்றையும் குறிப்பிட்டு ஓதுவார்கள். தர்ப்பைப் புல்லிற்கு காஸ்மிக் கதிர்களை அப்சார்ப் செய்யும் தன்மை இருப்பதால், இறந்தவரின் ஆவி/காஸ்மிக் கதிர் அந்த தர்ப்பைப் புல்லில் இருந்து, நாம் சொல்வதைக் கேட்கும் என்பது நம்பிக்கை.
டுபாகூர் விடுவதற்கு ஒரு அளவே இல்லையா? பொட்டு வைத்தால் ஹிப்னாடிஸம் செய்ய முடியாதா? எந்த வேதத்தில் இப்படி கூறி இருக்கிறார்கள்? பொட்டு வைத்திருந்தால் அடுத்தவரின் புருவ மையத்தை வலமாகவும், இடமாகவும் சுழற்றினால் அவர்களுக்கு ஒன்றும் ஆகாதா? நல்ல பகுத்தறிவு.
இதுநாள் வரைக்கும் சளி வைரஸால் வருகிறது என்று தான் படித்துள்ளேன். இப்பதான் அது விபூதி வைக்காததால் என்ற அறிவியல் உண்மையை அறிந்து கொண்டேன். ஆமாம் விபூதி அந்த வேர்வையை எங்கு உரிந்து தள்ளுகிறது. எனக்கு தெரிந்து தினந்தோரும் விபூதியை பூசிக்கொண்டால் தோல் மரமரத்து சொறி பிடித்து ,தோல் தன் லஸ்டரை இழந்து கருப்பாகி விடும். விபூதியை வழக்கமாக் பூசிக்கொள்வோரின் நெற்றியே அதற்கு சான்று. வேர்வை வந்தால் அதை கர்சீப் கொண்டு துடைத்தாலே போதும் விபூதி,கிபூதி தேவையில்லை. அக்குகளில் தானே அதிகமாக வேர்வை வழிகிறது. யாரும் அங்கு வீபுதியை பூசிக்கொள்வ தில்லையே?
ஆமா,தெரியாமதான் கேட்கிறேன் அப்ப நம்ம ஜெமினி பொண்ணு கமலா செல்வராஜ் கிட்டே ஏன் குழந்தை பிறக்காதவங்க போகனும்? பேசாம அரச மரத்த சுத்தி வரவேண்டியது தானே? காலையில அரச மரத்த சுத்தி வந்தா கெடுதிதான் ஏன்னா அது ஆக்சிஜன உறின்சி கார்பன்டை ஆக்சைட வெளி விடும். அத சுத்தி வரவங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காம போக சந்தர்ப்பம் இருக்கு. வெனும்னா இரவு 8 மணிக்கு மேல அத சுத்தி வரலாம்.அப்பதான் அது கார்பன்டைஆக்சைட உள்ளிளித்து ஆக்சிஜனை வெளியிடும்..
//வெனும்னா இரவு 8 மணிக்கு மேல அத சுத்தி வரலாம்.அப்பதான் அது கார்பன்டைஆக்சைட உள்ளிளித்து ஆக்சிஜனை வெளியிடும்..
//
போய் Science புத்தகத்தை மீண்டும் ஒரு முறை நன்றாக படிக்கவும்.
//போய் Science புத்தகத்தை மீண்டும் ஒரு முறை நன்றாக படிக்கவும்.//
இதுதான் சரி. பகலில்தான் ஆக்சிஜன் வெளிப்படும். முக்கியமாக வேப்ப மரத்தில் அதிகமாக. அதே சமயம் இரவுகளில் கரிமில வாயுதான் வெளிப்படும் என்றுதான் நான் படித்ததாக ஞாபகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\ஆமாம் விபூதி அந்த வேர்வையை எங்கு உரிந்து தள்ளுகிறது. எனக்கு தெரிந்து தினந்தோரும் விபூதியை பூசிக்கொண்டால் தோல் மரமரத்து சொறி பிடித்து ,தோல் தன் லஸ்டரை இழந்து கருப்பாகி விடும்.//
சாணியை வரட்டியாகத் தட்டி அதை எரித்து வரும் சாம்பலுடன் இயற்கையில் கிடைக்கும் வாசனை திரவியங்களை சேர்த்து வீபூதியாக்கி அதை நெற்றியில் தடவினால் லஸ்டரும் குறையாது, "கருப்(பு)"பாகவும் மாறாது. இப்போது கிடைக்கும் வீபூதியில் செயற்கையான வாசனைப் பொருட்கள் கலக்கப் படுவதாலேயே நெற்றி கருப்பாக மாறுகிறது.
நெற்றியில் உறிஞ்சப்படும் வியர்வை (நுண்துளையேற்றம்/கேப்பிலரி ஆக் ஷன் முறையில்) வீபூதியின் மேல் பரப்பிற்கு வந்து காற்றில் ஆவியாகிறது. இங்கேதான் நம் முன்னோர்களின் நுண்ணறிவை கவனிக்க வேண்டும். வெறும் நெற்றியில் வியர்வை முத்துக்களாக (பெரிய துளிகளாக) இருக்கும். (அதை கைக்குட்டை / மேல் துண்டால் துடைக்கலாம். வேலையிலிருக்கும் மக்கள் அடிக்கடி துடைக்க முடியாது). வீபூதியானது நுண்துளைகளால் ஆன மைக்ரோ / நானோ துகள் (மீசோ போரஸ் / மேக்ரோ போரஸ் / நானோ போரஸ் மெட்டீரியல் இவை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்). இதிலுள்ள நுண்துளைகள் வியர்வை முத்துக்களை உறிஞ்சி, மைக்ரோ / நானோ அளவுள்ள துளியாகிறது. இது காற்றில் ஆவியாவதற்கு ஏற்றதாகிறது. விளக்கம் போதுமா அன்பரே/நண்பரே? ஏற்கனவே நான் சொன்னபடி நம் முன்னோர்கள் நம்மைப் போல மடையர்களாக உலாவவில்லை. நமக்குப் புரியாதவற்றை புரிந்துகொள்ள முயலவேண்டும்.
அதே மாதிரி மஞ்சளில் இருந்து தயாரிக்கப் படும் குங்குமம் நெற்றியை ஒன்றும் செய்யாது. உதாரணம் நம் ஊரில் கிடைக்கும்/கிடைத்த "சுகந்தா" மஞ்சள் குங்குமம்.
என்னுடைய மொக்கையை தொடர்ந்து வெளியிடும் டோண்டு சாருக்கு நன்றிகள் பல.
Post a Comment