5/29/2008

மனம் நிறைவு தரும் பி.ஜே.பி.யின் வெற்றி கர்நாடகாவில் !

முதல் தடவையாக பி.ஜே.பி. ஒரு தென்னிந்திய மாநிலத்தில் ஆட்சியை பிடித்ததற்கு முதற்கண் அதற்கு வாழ்த்துக்கள். இடதுசாரி பத்திரிகையாளர்களின் சங்கடமான எதிர்வினைகள் பார்க்கக் கண்கொள்ளா காட்சி. மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. என்ன, இன்னும் ஒரு 4 சீட்டுகள் கிடைத்திருந்திருக்கலாம். பரவாயில்லை, அதனாலாவது பி.ஜே.பி. கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். அதுவும் நல்லதுக்குத்தான் என வைத்து கொள்வோமே.

வழக்கம்போல தங்களுக்கு சாதகமான நிலை வரவில்லை என்றவுடன் எல்லா தரப்பினருமே மேற்கொள்ளும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு சாதகமாக எழுதுவது இம்முறை இடது சாரியினரின் முறை. நம்ம ஞாநியும் தனது லேட்டஸ்ட் ஓ பக்கத்தில் எழுதி விட்டார். அது நம்ம நாட்டுக்கு ஒத்து வராது என்பதுதான் என் எண்ணம். அதன்படி இம்முறை கர்னாடகாவில் சீட்டுகளின் எண்ணிக்கை காங்கிரஸ் 77, பி.ஜே.பி. 42 தேவகௌடா 42. கூடவே ஒரு சதவிகித அளவில் ஓட்டுக்களை பெற்ற உதிரிக் கட்சிகளுக்கும் ஆளுக்கு 2 சீட்டுகள். இதை வைத்து என்ன செய்வது? நாக்கை வழிக்க வேண்டியதுதான். இதையெல்லாம் யோசித்துதான் பிரிட்டனின் முறையை இந்தியா மேற்கொண்டது. அமெரிக்காவில் கூட ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக வோட்டு பெறும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களுக்கு அந்த மாநிலத்தின் மொத்த எலெக்டோரல் காலேஜின் ஓட்டுகளும் கிடைக்கும். இல்லாவிட்டால் இஸ்ரேல் போல ததிங்கிணத்தோம் போட வேண்டியதுதான்.

ஞாநி கிளப்பிய இன்னொரு விஷயம் கர்நாடகாவில் உள்ள எல்லா பெரிய கட்சிகளின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்தான். எடியூரப்பா வசம் 4 வீடுகள், அவற்றில் ஒன்றின் மதிப்பு மட்டும் 2 கோடி, தவிர நஞ்சை 32 ஏக்கர்கள். குண்டு ராவ் மகன் தினேஷுடைய சொத்து 20 கோடி. காங்கிரஸ் வேட்பாளர் சிவக்குமார் என்பவர் சொத்து 77 கோடி. சில வேட்பாளர்களின் சொத்து போன தேர்தலில் காட்டியதையும் இப்போது காட்டுவதையும் வைத்து பார்க்கும் போது 6 மடங்கு உயர்ந்திருக்கிறது.

அப்படியா ஞாநி சார்? தமிழகத்தின் நிலை என்ன? கருணாநிதி அவர்களது சொத்து விவரம் என்ன? அது கடந்த முறையிலிருந்து எவ்வளவு மடங்கு உயர்ந்தது? கூடவே மருத்துவர், டி.ஆர். பாலு, அன்புமணி ஆகியோர் விஷயம் என்ன? நம்மவருடன் ஒப்பிடும்போது கர்நாடகா அரசியல்வாதிகள் பாப்பாக்களாக இருப்பது போன்று தோன்றவில்லை?

அது சரி, மோடியின் சொத்து விவரம் என்ன ஞாநி அவர்களே? அத்துடன் அவரால் குஜராத் அரசின் வருமானம் சரியான வரிவசூல் முறையால் எவ்வளவு அதிகம் ஆனது? இதையெல்லாம் எழுதும் தில் இருக்கிறதா? எழுத மாட்டீர்களே! பாம்பு பிடுங்கியது போல துடிப்பீர்களே!

எல்லாவற்றையும் விட மனதுக்கு நிறைவு அளிப்பது ஜூனியர் அன்னை மாதா தாயார் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் பிரசாரத்துக்கு பலன் இல்லாது போனதுதான். அவர்களால் காங்கிரசுக்குத்தான் இழப்பு அதிகம் என்பதை அக்கட்சி உணரும் வரை கதை கந்தல்தான். வரிசையாக பல மாநிலங்களில் அடைந்து வரும் தோல்விகள் இருந்த செல்வாக்கையும் சோனியா இழந்து வருகிறார் என்பதைத்தான் காட்டுகின்றனர். இதை காங்கிரஸ் உணராதவரை பி.ஜே.பி. -க்கு நல்லது என்று துக்ளக் எழுதுவதில் உண்மை இருக்கிறது.

தமிழகத்திலும் பி.ஜே.பி. அதிகம் உழைக்க வேண்டும். ஓரிரு தேர்தல்களில் தோற்றாலும் பரவாயில்லை. தனி ஆட்சியை அடைய முழுநேர வேலை செய்ய வேண்டும். திருநாவுக்கரசர் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். வரும் தேர்தலில் ஜெயிக்கக் கூடிய தொகுதிகளாக ஒரு பத்தை தேர்ந்தெடுத்து தனியாக வேட்பாளர்களை நிறுத்தி பார்க்கலாம். அப்படி வரும் தோல்வியும் கவுரமானதாகவே இருக்கும். திராவிடக் கட்சிகள் முதுகில் சவாரி செய்வது நிரத்தர அடிமை சாசனம் எழுதித் தருவதற்கு சமம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு (29.05.2008 பிற்பகல் 3.00 மணிக்கு சேர்க்கப்பட்டது)
பி.ஜே.பி.யின் வெற்றி மனதுக்கு நிறைவை தந்த ஜோரில் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியளித்த செய்தியை சேர்க்க மறந்து விட்டேன். அந்தாள் முட்டாள் வட்டாள் நாகராஜ் டிபாசிட் இழந்தார். இது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்.

43 comments:

சரவணகுமரன் said...

சார், ஒகேனக்கல் திட்டத்துக்கு அங்கு ஆளும் பிஜேபி எதிர்ப்பு தெரிவித்தால் உங்க நிலை என்ன?

ஜோ/Joe said...

//சார், ஒகேனக்கல் திட்டத்துக்கு அங்கு ஆளும் பிஜேபி எதிர்ப்பு தெரிவித்தால் உங்க நிலை என்ன?
//

மனநிறைவு ..திருப்தி ..வெறென்ன?

dondu(#11168674346665545885) said...

//சார், ஒகேனக்கல் திட்டத்துக்கு அங்கு ஆளும் பிஜேபி எதிர்ப்பு தெரிவித்தால் உங்க நிலை என்ன?//

வேறு என்ன, நானும் கர்நாடக பி.ஜே.பி. ஐ எதிர்ப்பேன். இதில் என்ன சந்தேகம்?

ஹொகனேக்கல் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது. இங்கு உள்ளே வந்து விட்ட காவிரியை நாம் உபயோகிக்க கர்நாடகக்காரரின் அனுமதி தேவையில்லை. இருப்பினும் காங்கிரசுக்கு சங்கடம் தரக்கூடாது என்று கலைஞர் திட்டத்தை தேர்தல்வரை தள்ளிப்போட்டார். ஒரிஜினல் ஒப்பந்தப்படி பெங்களூரு குடிநீர் திட்டமும் ஹொகனேக்கல் திட்டமும் ஒன்றாக ஒப்பு கொள்ளப்பட்டவை. பெங்களூரு திட்டத்தை கர்நாடகாக்காரர்கள் உடனே நிறைவேற்ற நம்மூர்க்காரர்கள் அஇஅதிமுக மற்றும் திமுக இருவருமே தேவையின்றி காலம் கடத்தினதால்தான் இப்போது சிக்கல் வந்துள்ளது. நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//மனநிறைவு ..திருப்தி ..வெறென்ன?//

யாருக்கு, கலைஞருக்கா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//சார், ஒகேனக்கல் திட்டத்துக்கு அங்கு ஆளும் பிஜேபி எதிர்ப்பு தெரிவித்தால் உங்க நிலை என்ன?//

டோண்டு அய்யா,

பேசாம, கன்னட சொம்மொழித் தாய் போட்ட குட்டி தான் தமிழ்த் தாய் என்றும்,கன்னட தாடிக்காரர் தான் தமிழ்த் தாயின் கணவர் என்றும், ஒத்துக் கொண்டு தமிழ்நாட்டை கர்நாடகாவோடு இணைத்து விட்டால், காவிரி பிரச்சனையும் தீரும்,தாடிக்காரர் தான் தமிழ்த் தந்தை என்பதற்கு அங்கீகாரமும் கிடைக்குமல்லவா?இதற்காக நம்ம கழகங்கள் போராடுமா?

பாலா

Anonymous said...

Dondu Sir!

Our next target is Tamilnadu only. It is more important than Karnataka. But, I wont agree with you that we should stand alone in elections and aim for a few seats only.

We should ally with Vijaykaanth.V.Kanth is number two and will become No.One replacing Kalaignar and his men.

BJP and V.Kanth party together will sweep the polls in TN. But, we may allow V.Kanth to lead the alliance, initially.

Soon, we will see our flag conquering the Black-Red flag.

ஜோ/Joe said...

//BJP and V.Kanth party together will sweep the polls in TN//

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

dondu(#11168674346665545885) said...

//BJP and V.Kanth party together will sweep the polls in TN//

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

I too share the joke wholeheartedly. :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

இத்துப்போன ரீல் said...

//மனநிறைவு ..திருப்தி ..வெறென்ன?//

யாருக்கு, கலைஞருக்கா?

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் கருணாநிதியைப்பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் கூடிப்பேசுவோம் என்பார்.பிறகு பேசிக்கொண்டே இருப்பார்கள் காவிரி பிரச்சனையைப் போல.தற்போது பிஜேபி அரசு அமையப்போவதால், கர்னாடக அரசு ஒத்துக்கொள்ளவில்லை என்று ஆரம்பித்து வழக்கம் போல் தமிழனுக்காக இன்னுமொருமுறை உயிரைக் கொடுப்பார்.மக்களைத் துண்டிவிட்டு இப்போது கலைஞர் டிவியில் காசு பார்ப்பார்.அவரைப் பொறுத்தவரை கடமை முடிந்தது!...

ஜோ/Joe said...

இத்து போன ரீல் -ன்னு சரியாத் தான் பேர் வச்சிருக்கீங்க :)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இந்த வெற்றி சாதரணமாக பெறப்பட்ட்டதல்ல !

மீடியா காரர்களின் ஏகோபித்த எதிர்ப்பு
தேர்தல் ஆணையத்தின் காங்கிரஸ் சார்பு நடவடிக்கைகள்
முஸ்லிம்களின் ஏகோபித்த எதிர்ப்பு

இவற்றை எல்லாம் மீறி தான் இந்த வெற்றி பெறப்பட்டது என்பது மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்குகிறது !

Anonymous said...

B.J.P ன் கர்நாடக வெற்றிக்கு காங்கிரஸாரின் தவறான பொருளாதரக் கொள்கை தான் காரணம்.மேலும் அரசியலில் தூய்மைக்கு பேர் பெற்ற
ஜனதாவின் முன்ணாள் தலைவர் ஹெக்டே விதைத்த காங்கிரஸ் எதிர்ப்பு இன்று எடியூரப்பாவுக்கு சாதகாமாய் விட்டது.

ஆனல் இங்கு கதை வேறு ஒரு வேளை நடிகர் ரஜினி மனது வைத்தால்
நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும் தமிழக இஸ்லாமிய,கிறிஸ்துவ சிறு பான்மை மக்களின் ஓட்டு வங்கியை முழுவதுமாக பெற்றுள்ள திராவிடக் கட்சிகளை ஓரம் கட்ட நினைப்பது வீண் பகல் கனவு.

காவிக் கட்சிக்கு கழகத்தை வெல்லும்
வாய்ப்பு இருப்பதாக நினைப்பது வேடிக்கை.

கோவை,நாகர் கோவில் போன்ற நகரங்களில் கூட BJP ன் செல்வாக்கு மிகக் குறைந்த நிலையில் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி.
தமிழகம் தந்தை பெரியாரின் பாசறை.
இது அண்ணாவின் இரும்பு கோட்டை
இது கலைஞரின் சீரிய தலமை உடயது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

/////////சார், ஒகேனக்கல் திட்டத்துக்கு அங்கு ஆளும் பிஜேபி எதிர்ப்பு தெரிவித்தால் உங்க நிலை என்ன?//

வேறு என்ன, நானும் கர்நாடக பி.ஜே.பி. ஐ எதிர்ப்பேன். இதில் என்ன சந்தேகம்?

ஹொகனேக்கல் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது. இங்கு உள்ளே வந்து விட்ட காவிரியை நாம் உபயோகிக்க கர்நாடகக்காரரின் அனுமதி தேவையில்லை. இருப்பினும் காங்கிரசுக்கு சங்கடம் தரக்கூடாது என்று கலைஞர் திட்டத்தை தேர்தல்வரை தள்ளிப்போட்டார். ஒரிஜினல் ஒப்பந்தப்படி பெங்களூரு குடிநீர் திட்டமும் ஹொகனேக்கல் திட்டமும் ஒன்றாக ஒப்பு கொள்ளப்பட்டவை. பெங்களூரு திட்டத்தை கர்நாடகாக்காரர்கள் உடனே நிறைவேற்ற நம்மூர்க்காரர்கள் அஇஅதிமுக மற்றும் திமுக இருவருமே தேவையின்றி காலம் கடத்தினதால்தான் இப்போது சிக்கல் வந்துள்ளது. நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லை.
/////////


சரவண குமார்,ராகவன் & others..
இது பற்றிய என் பதிவு மற்றும் அலசல்...
http://sangappalagai.blogspot.com/2008/05/60.html

Nat Murali said...

Dear DR Sir,
Your Q and A is coming off very well. Regarding Karnataka, I know those people first hand. I stayed in Bangalore for more than 15 years and I speak their language and they are also as smart and as hard working as Tamilians but not so combative or competitive and they alos believe in co –existence . Their Sin quo Non is “Navu iruvadu hige sami!!” We are like this only. Cauvery is a contagious issue and needs to be solved separately by central government and Courts.
Regarding Hogganekal when the plan is for providing Drinking water to some parts of TN, I propose we do the following.
1. Let the project be undertaken by a central govt. agency with a clear mandate from Centre –Avoid the department of TN and Karnataka for this.
2. Enhance the project benefit of Drinking water to some parts of Karnataka –Like KGF etc.,
3. The whole process , done with Foreign Loans and Donors should be self sustaining –ie, the operating cost should be born by the beneficiaries in and equitable manner.
4. Such project then will become , non-emotional or sentimental – It will become a commercial venture providing amenities to people who needs to pay for the usage.
5. Do not play with Kannadiga’s pride or TN’s Pride by introducing peripheral political bootleggers into this ordinary commercial project of drinking water management.

Once I left India – I have ceased to be Tamilian or Kannadiga, I have become Indian.
Regards
Murali Natarajan
Singapore

Anonymous said...

//வழக்கம்போல தங்களுக்கு சாதகமான நிலை வரவில்லை என்றவுடன் எல்லா தரப்பினருமே மேற்கொள்ளும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு சாதகமாக எழுதுவது இம்முறை இடது சாரியினரின் முறை.//

You are right about this. Why don't they talk about proportional representation before the elections..

But I think that Proportional Representation is better than First Past the Post. I think First Past the Post system is a bit ugly..

Our Electoral system is in need of good reforms. I think we need runoff elections, recalls etc.

// நம்ம ஞாநியும் தனது லேட்டஸ்ட் ஓ பக்கத்தில் எழுதி விட்டார். அது நம்ம நாட்டுக்கு ஒத்து வராது என்பதுதான் என் எண்ணம். அதன்படி இம்முறை கர்னாடகாவில் சீட்டுகளின் எண்ணிக்கை காங்கிரஸ் 77, பி.ஜே.பி. 42 தேவகௌடா 42. கூடவே ஒரு சதவிகித அளவில் ஓட்டுக்களை பெற்ற உதிரிக் கட்சிகளுக்கும் ஆளுக்கு 2 சீட்டுகள். //

Sir the actual percentages are
BJP - 33.8%
Cong - 34.5%
JDS - 19.1%
INDEPENDENTS - 12.1%

There are many types of proportional representation systems. I don't know what type of calculation gave Cong 72 seats. By similar calculation ADMK would have got more seats in TN elections.

I think this calculation does not hold good because people votes were not based on Proportional Representation system.

I think people would vote differently when Proportional representation, Run-Offs are present. Recalls would make politicians behave differently.

--

But elections and democracy alone aren't enough for good governance and prosperity. You might be interested in the following article.

Democarcy isnt Nirvana

http://www.mackinac.org/article.aspx?ID=6720

dondu(#11168674346665545885) said...

//மேலும் தமிழக இஸ்லாமிய,கிறிஸ்துவ சிறு பான்மை மக்களின் ஓட்டு வங்கியை முழுவதுமாக பெற்றுள்ள திராவிடக் கட்சிகளை ஓரம் கட்ட நினைப்பது வீண் பகல் கனவு.//

போக வேண்டிய தூரம் மிக அதிகம். இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லை. எதுவும் முயன்றால் நடக்கும். எடுத்தவுடன் வெற்றி கிட்டாது. நிரம்ப உழைக்க வேண்டும் என்பதுதான் நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிஷோர் said...

//அப்படியா ஞாநி சார்? தமிழகத்தின் நிலை என்ன? கருணாநிதி அவர்களது சொத்து விவரம் என்ன? அது கடந்த முறையிலிருந்து எவ்வளவு மடங்கு உயர்ந்தது? கூடவே மருத்துவர், டி.ஆர். பாலு, அன்புமணி ஆகியோர் விஷயம் என்ன? நம்மவருடன் ஒப்பிடும்போது கர்நாடகா அரசியல்வாதிகள் பாப்பாக்களாக இருப்பது போன்று தோன்றவில்லை? //

அதெப்படிங்க மனசாட்சியே இல்லாம இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்க?
எவன் தப்பு பண்றானோ அவனை கண்டிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைந்தது பாராட்டாமலோ/நியாயப்படுத்தாமலோ இருக்கலாமே!
இப்படி படித்தவர்களே ஒரு தலைபட்சமாக அநியாயத்தை கண்டிக்காமல் இருக்கும் வரை இந்த தேசத்தை காப்பாற்றவே முடியாது.
ஹே ராம்!!!

Unknown said...

//BJP and V.Kanth party together will sweep the polls in TN//

இது மட்டும் நடந்தால் டொண்டு சார் மொட்டை அடிப்பார், அலகு குத்தி காவடி எடுப்பார் என்று உறுதி கூறுகிறேன்

Anonymous said...

karnatakavil matha veri vetri petrullathu. manitha neyam thotrathu.

vetkam!! vetkam!!

komanakrishnan

Anonymous said...

//தமிழகத்தின் நிலை என்ன? கருணாநிதி அவர்களது சொத்து விவரம் என்ன? அது கடந்த முறையிலிருந்து எவ்வளவு மடங்கு உயர்ந்தது? //
neengalthan neril sendru paarthathu pola pesukireergale dondu avargale??!!

komanakrishnan

Anonymous said...

1.கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி எப்படி சாத்யமாயிற்று?கூட்டணி குழப்பத்தையும் தாண்டி( போன ஆட்சி கடைசி நேர கவிழ்ப்பு )

2.வழக்கம் போல் ஓட்டு சதவிகிதத் கணக்கு கொஞ்சம் வேடிக்கை காட்டுகிறதே?

3.முழு 5 ஆண்டு ஆட்சியை முடிக்க விடுவார்களா சயேச்சைகள் ?

4.காவிரி பிரச்சனை,ஹோகனேக்கல் குடி நீர் பிரச்சனைகளில் தமிழகத்துக்கு இப்போதாவது மத்திர அரசின் சலுகை கிடைக்குமா?

5.குஜராத் புகழ் மோடி போல் எடியூரப்பாவும் திறமைசாலியா?

6.துக்ளக் சோ அவர்களும் தாங்கள் சந்தோஷப்பட்டு தனிப் பதிவு போட்டது போல் சிறப்பு தலையங்கம் எழுதி பகுத்தறிவு கட்சிகளின் கடும் கோபத்துக்கு ஆட்படுவார் போல் தெரிகிறதே?இனி கச்சேரி சூடு பிடிக்குமா?

7.தமிழகத்தில் உயர் சாதி பிரிவுகளில் பெரும்பான்மை பிராமண குலத்தவர் மட்டும் பா.ஜ.க.வை ஆதரிப்பது ஏன்?

8.உ.பி.ல் செல்வி மாயாவதி பின்னால் அவர்கள் அணிவகுத்தற்கு பா.ஜ.க வின் மேல் உள்ள கோபமா?

9.தமிழகத்திலும் மாயவதி பாணி செயல் படுத்த முயலுவதாக தகவல்கள் உண்மையா?

10.தலித்களும்,உயர் சாதி பிரிவினரும் (பிராமணர்)சேர்ந்தால் வெற்றி என்பது இங்கு ( கட்டுக் கோப்பான மைனாரிட்டி மற்றும் வலிமையான பிற்படுத்த பட்ட மக்களின் வாக்கு வங்கிஐ எதிர்கொண்டு))சாத்யமா?

Anonymous said...

ஒரு சுவையான செய்தி . 1970-1973 .திருநெல்வேலி மாவட்டம். களக்காடு கிராமம்(மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம்).அது ஒரு பெரிய ( name of the street is also big street)தெரு முழுவதும் பிராமனர்கள் குடும்பம். அப்பொழுது வாஜ்பாய் தலமையில் ஜனசங்கம் என வடக்கில் இருந்தது.எங்கள் நண்பர் குழு முழுவதும் காங்கிரஸ் ,தி,மு.கா,அல்லது பொது உடைமை கட்சியை சார்ந்தவர்கள்( அனுதாபிகள்)
ஒரு நண்பர் மட்டும் ஜனசங் ஆதரவாளர்.

ஒரு தீப்பவளித் திருநாளன்று வெடிகள் வெடிக்கும் போது புஸ் வானமாய் வெடிக்காமல் போகும் போது கேலியாக

வாஜ்பாய்க்கு கோவிந்தா!
அத்வானிக்கு கோவிந்தா!
பண்டாரிக்கு கோவிந்தா!
என்று
சொல்லும் போது அந்த ஜனசங் ( இப்போது BJP) ஆதரவாளர் ஒரு நாள் தென் இந்தியாவை ஜனசங் ஆளும் என கோபமாக சொல்லி எங்களோடு பேசாமல் சென்று விடுவார்.

காலம் எப்படி யெல்லம் விளையாடி மகிழ்கிறது.

ஆனாலும் தங்களுக்கு உள்ளது பேராசை
தமிழகத்தில் அது ஒரு போதும் நடக்க வாய்ப்பில்லை.

Anonymous said...

//வேறு என்ன, நானும் கர்நாடக பி.ஜே.பி. ஐ எதிர்ப்பேன். இதில் என்ன சந்தேகம்?//

அதென்ன கர்நாடக பாஜக, தமிழக பாஜக?. அப்படியென்றால் பாஜகவின் தேசியக் கொள்கையென்பது வெறும் அல்வாதானா?

மாநிலத்திற்கு ஒரு கொள்கையென்பது சந்தர்ப்பவாத காங்கிரசுக்கே வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால பாஜகதான் Party with a difference ஆச்சே!

கர்நாடக பாஜக ஓகேனக்கல் பிரச்சினையிலோ, காவிரிப் பிரச்சினையிலோ நியாயமற்ற நிலைப்பாட்டை எடுத்தால் அதை தட்டி வைக்க வேண்டிய கடமை பாஜகவின் மத்திய பாஜகவிற்கு உண்டு. அதை செய்யாவிட்டால் பாஜகவின் தேசியக் கொள்கை பகல் வேஷம் என்பது நிரூபிக்கப்பட்டுவிடும்.

dondu(#11168674346665545885) said...

//மாநிலத்திற்கு ஒரு கொள்கையென்பது சந்தர்ப்பவாத காங்கிரசுக்கே வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால பாஜகதான் Party with a difference ஆச்சே!//
என்ன பேசுகிறீர்கள்? தண்ணீர் விஷயத்தில் அண்டை மாநிலங்களில் ஏற்படும் சிக்கல்களில் இந்த இரட்டை நிலை எங்குமே தவிர்க்க முடியாதது. கர்நாடகாவில் இருக்கும் அதிமுக மற்றும் திமுகாவினர் கூட கர்நாடக சார்பு நிலை எடுக்காது தப்பிக்க இயலாது.

அவ்வளவு ஏன், எழுபதுகளின் ஆரம்பத்தில் கோவா மஹாராஷ்டிரத்துக்குத்தான் என்று பம்பாய் இந்தியன் எக்ஸ்பிரஸும் கர்நாடகத்துக்குத்தான் என்று பங்களூரு இந்தியன் எக்ஸ்பிரசும் எழுதின.

ஒன்றும் வேண்டாம், உதயா டி.வி. என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்.

மற்றப்படி பாஜகாவிடம் மட்டும் எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பாஜக ஆகிய எல்லா கட்சிகளுக்குமே இந்த தர்ம சங்கட நிலை தவிர்க்க முடியாததே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அந்த ஜனசங் ( இப்போது BJP) ஆதரவாளர் ஒரு நாள் தென் இந்தியாவை ஜனசங் ஆளும் என கோபமாக சொல்லி எங்களோடு பேசாமல் சென்று விடுவார்//.

அவர் பெயர் குளத்து ஐயரா?

//ஆனாலும் தங்களுக்கு உள்ளது பேராசை தமிழகத்தில் அது ஒரு போதும் நடக்க வாய்ப்பில்லை//.
எந்த வேலையுமே ஆரம்பிக்கும் போது கஷ்டம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொதிகைத் தென்றல் said...

//மற்றப்படி பாஜகாவிடம் மட்டும் எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பாஜக ஆகிய எல்லா கட்சிகளுக்குமே இந்த தர்ம சங்கட நிலை தவிர்க்க முடியாததே.//

கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் கூட

கர்நாடக போர் வாள்

புரட்சி முரசு

கன்னடத் தாயின் தவப் புதல்வன்

கொள்கை கோமான்

காவேரியின் காவலன்

ஹோகனேக்கல் படகோட்டி

மென் பொருள் பெருக்கோன்

தீரன் திப்புவின் மறு பதிப்பு

ராணி சென்னம்மாவின் மறுபிறவி

( இப்படியெல்லம் இனி கர்நாடகாவில் பிளக்ஸ் பேனர் வைத்து நம்மை மிஞ்ஞிவிடுவார்காளா இல்லையா பார்ப்போம்)

"அண்ணன் எடியூரப்பா "

மத்திய பா.ஜ.க தலைவர்களை
தாண்டி குஜராத் சிற்பி( சந்தோஷமா dondu சார்)மோடி அவர்களது பாணியில் தான் தேர்தலை சந்தித்து வெற்றி( திருவாளர்கள் கிருஷ்ணாக்களும்,தேவ கவுடக்களும் " மைனாரிடி அரசு என்று பகடி பேசி குறை காலத்தை கழிக்கலாம்)

பெற்றதால் பெரிய பா.ஜ.க வின் தலவர்களின் பேச்சு இனி கர்நாடகாவில் ...............

இத்துப்போன ரீல் said...

//இத்து போன ரீல் -ன்னு சரியாத் தான் பேர் வச்சிருக்கீங்க :)//

கருணாநிதியைப் பற்றி எழுதியதற்க்காக சொல்கிறீர்களா? ஜோ/joe அவர்களே எப்படியிருந்தாலும் உங்களுக்கு என் நன்றிகள்!....நண்பரே!..:) :)

Anonymous said...

//ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் கருணாநிதியைப்பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் கூடிப்பேசுவோம் என்பார்.பிறகு பேசிக்கொண்டே இருப்பார்கள் காவிரி பிரச்சனையைப் போல.தற்போது பிஜேபி அரசு அமையப்போவதால், கர்னாடக அரசு ஒத்துக்கொள்ளவில்லை என்று ஆரம்பித்து வழக்கம் போல் தமிழனுக்காக இன்னுமொருமுறை உயிரைக் கொடுப்பார்.மக்களைத் துண்டிவிட்டு இப்போது கலைஞர் டிவியில் காசு பார்ப்பார்.அவரைப் பொறுத்தவரை கடமை முடிந்தது!...

//இத்துப்போன ரீல் said...
//இத்து போன ரீல் -ன்னு சரியாத் தான் பேர் வச்சிருக்கீங்க :)//

//கருணாநிதியைப் பற்றி எழுதியதற்க்காக சொல்கிறீர்களா? ஜோ/joe அவர்களே எப்படியிருந்தாலும் உங்களுக்கு என் நன்றிகள்!....நண்பரே!..:) :)//

இருந்தாலும் இது தேவையா சார். தாக்கும் விமர்சகரின் மீது கூட தோழமைப் பண்பு பாராட்டும் நற் குணத்தொடு தாங்கள் இருக்கும் போது

கலைஞர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடங்கள் களை கட்டும் போது
விரும்பதாகத விமர்சனங்களை தவிர்த்தால் நலம்..


அதுவும்
//தமிழனுக்காக இன்னுமொருமுறை உயிரைக் கொடுப்பார்.மக்களைத் துண்டிவிட்டு இப்போது கலைஞர் டிவியில் காசு பார்ப்பார்//

ரொம்ப அதிகம் சார்.

கலைஞர்
அவர்களின்
வயது முதிர்ச்சி,
அனுபவ ஆற்றல்,
நினைவாற்றல்,
பிரச்சனை கண்டு
கலங்காத் தைரியம்,
எதிரிகளையும் மதிக்கும்
மாண்பின் சிறப்பு,
துரோகிகளை மண்னிக்கும்
சீர் பண்பு

உலகமுழுமைக்கும் வாழும் 7 கோடி தமிழர் நலம் காக்கும் நற்றமிழ் காவலரை,
ஜாதி,இனம் கட்சிப் பிரிவுகள் தாண்டி
அவரின் 86ம் பிறந்த நாளை அனைவரும்
சிறப்பாக கொண்டாடி மகிழுவோம்.

இது நாம் அவருக்கு செய்யும் நன்றிக் கடன்.

அன்னைத் தமிழுக்கு நாம் செய்யும் பெரும் தொண்டு.



அண்டை மநிலங்கள் நம் ஒற்றுமை இன்மை கண்டு எள்ளி நகையாடுகிறார்கள்.

இந்த புண்ணிய நாளில் (ஜூன் திங்கள் 3 ம் நாள்,2008)

கலைஞர் ஐயா அவர்களின் சீரிய தலமையில் ஒன்று திரண்டு நமது ஜீவாதார தண்ணிர்/வாழும் நிலப் பகுதிகளின் உரிமை களைக் காப்போம் என சூழுரைப்ப்பபோம்.

இமயம் வரை சென்று வடக்கத்திய மன்னன் கனக விஜயனின் ஆணவத்தை அடக்கி,
கற்புக்கரசிக்கு சிலை வடிக்க ,தலையில் கல் தூக்கச் செய்து வெற்றி பேரிகை முழக்கமிட்ட வீரமும் விவேகமும் மீண்டும் பிரகாசித்திடும் பொன்னாளும் வந்திடாதோ ?

காலத்தால் கனிந்து விட்ட
கன்னித் தமிழ் போற்றும்
கலைஞர் ஐயாவை
போற்றி மகிழட்டும் தமிழ்ச் சமுதாயம்.

வாழ்க எம்மான்
வாழ்க பல்லாண்டு
வாழ்க! வாழ்கவே!

Anonymous said...

கீதையின் சாராம்சங்களை முன்னிறுத்தி ஒரு கேள்வி : கருமமே கண்ணானவன் பலன் எதிர்பாராமல் கடமையை செய்தல் இருக்க, தன் கடமை இதுதான், இன்னதுதான் என தெளிதல் எவ்வாறு? எப்படி ? கர்மயோகியாக தீர்மானித்தவன் தன் கர்மம் பற்றின தெளிவு பெறுதல் எப்படி ? for eg.(தந்தையாக இருந்தால்தானே, இருக்க தெளிந்தால்தானே தந்தையின் கடமை புலப்படும் ?)

-shivatma

இத்துப்போன ரீல் said...

//இருந்தாலும் இது தேவையா சார். தாக்கும் விமர்சகரின் மீது கூட தோழமைப் பண்பு பாராட்டும் நற் குணத்தொடு தாங்கள் இருக்கும் போது

கலைஞர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடங்கள் களை கட்டும் போது
விரும்பதாகத விமர்சனங்களை தவிர்த்தால் நலம்..//

தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் அனானி நண்பர் அவர்களே!...இருந்தாலும் சென்ற முறை ஒகேனக்கல் திட்டத்திற்காக நடிக,நடிகையர்.!:) நடத்திய உண்ணாவிரதத்தின் நேரடி ஒளிபரப்பின் மூலமாக அன்று மட்டும் சன் டிவியும்,கலைஞர் டிவியும் தலா மூன்று கோடிகள் வரை விளம்பரம் மூலம் லாபம் அடைந்து இருக்கிறார்கள்...இது தகவலுக்காக மட்டும். பிரச்சனை பண்ண அல்ல!..

நன்றியுடன்....

மாயவரத்தான் said...

டோண்டு சார்.. அப்படியே மேலே கருணாநிதி குறித்து ஆஹா ஓஹோவென்று ஒருவர் புகழ்ந்துள்ளது குறித்த உலக மகா ஜோக்கிற்கும் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

G.Ragavan said...

பி.ஜே.பியின் வெற்றி எந்த அளவிற்கு மனநிறைவாக இருக்கும் என்று யோசிக்கக் கூட முடியவில்லை. காவிரி விஷயத்தில் எல்லாக் கட்சிகளும் இரட்டை வேடம்தான். ஆனால் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை பி.ஜே.பியை மட்டுமே சாரும்.

அதுவுமில்லாமல் காங்கிரசும் சரி.. ஜனதாதளமும் சரி.. காவிரிப் பிரச்சனையில் என்னதான் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருந்தாலும் தமிழர்கள் பாதுகாப்பில் கவனமாகவே இருந்தார்கள். நாகப்பா வீரப்பனால் கொல்லப்பட்ட போதும் கூட ஊரில் பாதுகாப்பு இருந்தது. நடுவில் ஒருமுறை தமிழர் வீடுகள் மீது தாக்குதல் நடந்தது. அதுவும் பி.ஜே.பியால். ம்ம்ம்... நடக்கப் போவதை யார் அறிவார்!

கர்நாடக பி.ஜே.பி கொஞ்சமும் நம்பிக்கையில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன செய்கின்றார்கள் என்று!

Anonymous said...

// மாயவரத்தான்... said...
டோண்டு சார்.. அப்படியே மேலே கருணாநிதி குறித்து ஆஹா ஓஹோவென்று ஒருவர் புகழ்ந்துள்ளது குறித்த உலக மகா ஜோக்கிற்கும் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.//

2006 ப் பின் கலைஞர் கருணாநிதி அவ்ர்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த நாடே ஒத்துக் கொள்கிறது.(அரசியல் பிரமுகர்கள்,பத்திரிக்கைகள்.....)

தங்களுக்கு அது உலகமகா ஜோக்கா தெரிவது கண்டு வருந்துகிறது தமிழர் இனம்.

டோண்டு சார் கூட கலைஞரின் ஆற்றல் களை மிகவும் பாரட்டி,அவரது நிலைபாடுகளில் மாற்றம் வந்தால் ஆனந்தப் படுவேன் என்றுள்ளார்.

ஒரு சிறு சான்று.

மிகப் பெரிய எழுத்தாளர் பொது உடமை கருத்துத் சித்தாந்த ஜெயகாந்தனைவிட கழகத்தையும்,கலைஞரையும் விமர்ச்சித்தவர்
வேரு யாரும் இருப்பார்களா தெரியவில்லை.

தன்னை பழித்தவருக்கு கூட உயர் பட்டம் தந்து, உடல் நலக் குறைவு என்றதும் அனத்து உதவிகளையும் அவருக்குச் செய்து "பகைவனுக்கு அருளும் பண்பினையாவது" பாரட்டுங்க சார்.

அவரைப் பற்றிய எனது பதிவுகள்(பாரட்டுக்கள்)
கொஞ்சம் மிகையாய் தங்களுக்கு தோன்றினாலும்
தாங்களும் அதை ஏற்றுக் கொள்ளும் நாளும் வரும்.

திருவாருராரை மயாவரத்தார் புகழும் காலம் வராமலா போகும்.

ரம்மி said...

டோண்டு சார்,

பிஜெபி வெற்றி பெற்றதற்கு இத்தனை மகிழ்ச்சி அடைகிறீகளே, உண்மையாகவே பிஜேபி என்ற கட்சி காங்கிரசை விடவோ அல்லது வேறெந்த கட்சியை விடவோ எந்த அளவுக்கு பெட்டர் என்று நினைக்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை. பிஜேபி கட்சியில் உள்ள அரசியல்வாதிகள் மட்டும் என்ன தேவர்களா? அவர்களும் இந்த அரசியல் சாக்கடையில் விழுந்த மட்டைகள் தானே?

dondu(#11168674346665545885) said...

//பிஜேபி கட்சியில் உள்ள அரசியல்வாதிகள் மட்டும் என்ன தேவர்களா? அவர்களும் இந்த அரசியல் சாக்கடையில் விழுந்த மட்டைகள்தானே?//

தேசீய அளவில் உள்ள இரு கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. இவை வேவேறு மாழிலங்களில் பதவியில் இருப்பது ஜனநாயகத்துக்கு நன்மை பயக்கும். மாநிலக் கட்சிகள் ஒரேயடியாக ஆட்டம் போட விடுவது நாட்டுக்கு நல்லதல்ல. மத்தியில் இந்த இரு கட்சிகளும் ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்று இருப்பது நல்லது.

அந்த முறையில் இம்முறை பி.ஜே.பி. வெற்றி பெற்றது நல்லது. மேலும் நான் அதன் ஆதரவாளன். வேறு எப்படி ரியேக்ட் செய்வேன் என எதிர்ப்பார்த்தீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை பி.ஜே.பியை மட்டுமே சாரும்.//

இந்த போங்கெல்லாம் வேண்டாம், 1974-ல் பழைய காவிரி ஒப்பந்தம் காலாவதியானதிலிருந்து பிரச்சினையை அடுத, அடுத்த கட்டங்களுக்கு எடுத்து சென்றதில் கர்நாடக காங்கிரஸ், அவர்களிடம் கோட்டை விட்டதில் ஓவர்டைம் போட்டு வேலை பார்த்த திமுக மற்றும் அதிமுகவின் பங்களிப்பின் பெருமைகளை நீங்கள் மறைக்க நினைப்பதை நான் தீவிரமாக ஆட்சேபிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//திருவாருராரை மயாவரத்தார் புகழும் காலம் வராமலா போகும்//

அனானி நண்பரே..

____ காலத்திலே சங்கரா சங்கரா என்றானாம் என்றொரு சொலவடை எங்கள் பகுதியில் உண்டு.

அதை இங்கே உபயோகப்படுத்த விரும்பவில்லை.

என்ன தான் கூட்டி கழித்துப் பார்த்தாலும் எனக்கு + எதுவுமே தெரியவில்லை.

அதுவுமில்லாமல், நீங்கள் திருவாரூராரை மாயவரத்தார் புகழும் காலம் வராமல போகும் என்று கேட்டிருக்கிறீர்கள்.

ஒரே ஒரு பதில்...

பள்ளிப் பருவத்திலிருந்து போன தடவை கருணாநிதி ஆட்சி வந்த வரைக்கும் நான் தீவிர கருணாநிதி அபிமானி.

என்னை அறிந்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்.

கட்சியிலெல்லாம் இல்லாமலேயே ஊரில் சொந்த செலவில் கட்‍அவுட் எல்லாம் வைத்த அளவிற்கு இருந்தவன்.

இப்போது சமீப காலமாக தான் சுயரூபம் தெரிந்தது. தெளிந்து கொண்டேன்.

நீங்க எல்லாம் எப்போ தான் தெளிவீங்களோ?!

Anonymous said...

// மாயவரத்தான்... said...
//திருவாருராரை மயாவரத்தார் புகழும் காலம் வராமலா போகும்//

அனானி நண்பரே..

____ காலத்திலே சங்கரா சங்கரா என்றானாம் என்றொரு சொலவடை எங்கள் பகுதியில் உண்டு.

அதை இங்கே உபயோகப்படுத்த விரும்பவில்லை.

என்ன தான் கூட்டி கழித்துப் பார்த்தாலும் எனக்கு + எதுவுமே தெரியவில்லை.

அதுவுமில்லாமல், நீங்கள் திருவாரூராரை மாயவரத்தார் புகழும் காலம் வராமல போகும் என்று கேட்டிருக்கிறீர்கள்.

ஒரே ஒரு பதில்...

பள்ளிப் பருவத்திலிருந்து போன தடவை கருணாநிதி ஆட்சி வந்த வரைக்கும் நான் தீவிர கருணாநிதி அபிமானி.

என்னை அறிந்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்.

கட்சியிலெல்லாம் இல்லாமலேயே ஊரில் சொந்த செலவில் கட்‍அவுட் எல்லாம் வைத்த அளவிற்கு இருந்தவன்.

இப்போது சமீப காலமாக தான் சுயரூபம் தெரிந்தது. தெளிந்து கொண்டேன்.

நீங்க எல்லாம் எப்போ தான் தெளிவீங்களோ?!//

உங்களது சொந்த அனுபவம் எனக்குத் தெரியாது.உங்கள் பதிவுகளில் அதற்கு விளக்கம் இருக்கும் என எண்ணுகிரேன். அதை படித்து தெரிந்து கொள்கிறேன்.

உங்கள் மனக் காயங்களை காலம் மருந்த்திட்டு
ஆற்றி நற்செயல் புரியட்டும்.


தங்கள் வலைப்பூவை முழுவது படித்த பிறகு தொடர்பு கொள்கிறேன் பின்னூட்டம் வழியாக.

வணக்கங்களுடன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//////இப்போது சமீப காலமாக தான் சுயரூபம் தெரிந்தது. தெளிந்து கொண்டேன்.

நீங்க எல்லாம் எப்போ தான் தெளிவீங்களோ?!
////////

எந்த வகையில்,எதனால் தெரிந்தது என்று சொன்னால் அனைவரும் தெரிந்து கொள்வார்களே....

Anonymous said...

//அறிவன்#11802717200764379909 said...
//////இப்போது சமீப காலமாக தான் சுயரூபம் தெரிந்தது. தெளிந்து கொண்டேன்.

நீங்க எல்லாம் எப்போ தான் தெளிவீங்களோ?!
////////

எந்த வகையில்,எதனால் தெரிந்தது என்று சொன்னால் அனைவரும் தெரிந்து கொள்வார்களே....

May 31, 2008 10:00 AM


அறிவன் சார்கூட, நாங்களும்
அறிந்து கொள்வோம்

மாயவரத்தாரின் பதிலுக்கும் காத்த்ருக்கிறேன்.

மாயவரத்தான் said...

//எந்த வகையில்,எதனால் தெரிந்தது என்று சொன்னால் அனைவரும் தெரிந்து கொள்வார்களே....//

என்ன வெளயாடுறீங்களா?

கைப்புண்ணுக்கு எதுக்கு சார் கண்ணாடி?

ரம்மி said...

//அந்த முறையில் இம்முறை பி.ஜே.பி. வெற்றி பெற்றது நல்லது. மேலும் நான் அதன் ஆதரவாளன். வேறு எப்படி ரியேக்ட் செய்வேன் என எதிர்ப்பார்த்தீர்கள்?//

அப்படி என்றால் சரி. எனக்கு தனிப்பட்ட முறையில் பிஜேபிக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வித்யாசம் தெரிவதில்லை.

Anonymous said...

ராகவன் சார் தாங்களும் ,மயாவரத்தாரும் போட்ட பதிவுகளை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் படித்து விட்டார்கள் போலிருக்கிறது.

தேவகவுடாவின் ம.ஜ.தளத்தோடு கூட்டணி சேரததால் தான் தோல்வி என்றும்,
தமிழகத்தின் தேர்தல் கதாநாயகன் என்று சிவகங்கை புண்ணியவனால் பாராட்டப் பட்ட 2 ரூபாய்க்கு அர்சி,இலவச தொலைக்காட்சி,2 ஏக்கர் இலவச நிலம் ,இலவச கேஸ் உள்ளீட்ட தேர்தல் அறிக்கையின் வீச்சு கர்நாடகத்தில் எடுபடவில்லை, அன்னை சோனியாவை தான் முன்னிறித்த வேண்டும் ,இளய திலகம் ராகுலின் பிரபலம் கதைக்கு ஆகாது

அதனால் இனி வரும் தேர்தல் களில் மாநிலக் கட்சிகளோடு தான் கூட்டு, தனி ஆவர்த்தனம் கிடையவே கிடையாது.

திமுக+விஜயகாந்த்+சரத்குமார்+பலமுள்ள சாதிக் கட்சிகள் கூட்டணியை வெல்ல யாருள்ளார் என கணக்குகள் போடத் தொடங்கியுள்ளதால்

தமிழகத்தில் இரட்டை இலை+தாமரை+பம்பரம்+மாம்பழம்+மிதமுள்ள ஜாதிக் கட்சிகளின்

வெற்றி, உணவுப் பொருள்களின் விஷ விலை யேற்றம்,இலவச ஏமாற்றங்கள், சில ஜாதிகட்சிகளின் கோபதாபங்கள் இவைகளியும் தாண்டி

மீண்டும் கலைஞர் கைக்கே ஆட்சி அதிகாரம் போகும் போல்
தெரிகிறதே

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது