குடும்பப் பாடல், பழைய நினைவுகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக வருவன தெய்வச் செயல்களால் நிகழ்த்தப்படும் அற்புதங்கள்.
சமீபத்தில் 1977-ல் வந்த "அமர், அக்பர், ஆண்டனி" என்ற ஹிந்தி படத்தில் கதாநாயகர்களின் பார்வையற்ற அம்மா (நிரூபா ராய்) (படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்னாலேயே அவர்களை பிரிந்து விடுகிறார்) சாயிபாபா கோயிலுக்குள் வர, பின்னால் துரத்தி வந்த வில்லன்களை (ஜீவன், ரஞ்சீத்) மரத்தின் கிளையிலிருந்து கீழே தொங்கிய பாம்பு ஒன்று தடுக்கிறது. உள்ளே கடைசி பிள்ளை ரிஷி கபூர் (இஸ்லாமியர் ஒருவர் அவரை இசுலாமியராக வளர்க்கிறார்) ஷிர்டி சாயிபாபாவுக்கு பாடலால் ஆராதனை செய்ய, சாயிபாபா சிலையின் கண்களிலிருந்து அருள் ஒளி ஸ்லோ மோஷனில் வந்து, அப்பெண்மணி பார்வை பெற்றபோது மகிழ்ந்து கைதட்டியவர்களுள் நானும் ஒருவன். இப்போது கூட அப்படம் டி.வி.யில் வரும்போது அக்காட்சிக்காக காத்திருப்பது என் வழக்கமே.
இந்த கடவுள் அற்புதங்கள் விஷயத்தில் நம் தமிழ்ப் படங்கள் மட்டும் பின்வாங்குமா என்ன? சமீபத்தில் 1969-ல் வந்த துணைவன் படத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத சௌகார் ஜானகி கணவனது திருப்திக்காக அவருடன் தங்கள் குழந்தை குணம் பெற வேண்டி அறுபடை வீடுகளுக்கும் யாத்திரை வருகிறார். எல்லா அற்புதங்களுக்கும் கட்டியம் கூறுவதுபோல அதுவரை கருப்பு வெள்ளையாக இருந்த படம் பளீரென கலரில் மாறியது கண்கொள்ளா காட்சி. மருதமலைக்கு வந்த இடத்தில் குழந்தைக்கு முன்னால் பாம்பு ஒன்று படமெடுத்து நிற்க, சௌகார் ஜானகி தன்னையும் மீறி முருகா குழந்தையைக் காப்பாற்று எனக் கதற, சற்று தூரத்தில் மரத்தின் மேலிருந்த மயில் ஒன்று ஜிவ்வென்று எழும்பி பறந்து நேராக வந்து பாம்பை கொத்திச் செல்ல, சௌகார் ஜானகியின் நாத்திக மனப்பான்மை தூள் தூளாகிறது. உடனேயே மருத மலையானே என்று துவங்கும் பாடல் கடைசியில் கிட்டத்தட்ட திருச்செந்தூரில் குழந்தை குணமடையும் போதுதான் நிற்கிறது. ஏ.வி.எம். ராஜன் உணர்ச்சி பொங்க நடித்ததை ஹிந்தியில் (படம்: மாலிக்) ராஜேஷ் கன்னா காப்பியடிக்க முயன்று படுதோல்வியடைந்து இருந்த பெயரையும் கெடுத்து கொண்டு போனார் என்பதை இங்கே போகிற போக்கில் காதில் போட்டுவிட்டு போகிறேன். எவ்வளவு முயன்றும் மயில் பாம்பை எடுத்து போகும் விஷ்வல் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.
இதெல்லாம் கூறும்போது சமீபத்தில் 1959-ல் சென்னையில் திரையிடப்பட்ட சிசில் பி. டிமில்லியின் "பத்து கட்டளைகள்"படத்தில் செங்கடலை மூஸா பிளக்கும் அந்த அற்புதத்தை காட்டாமல் போவானா இந்த தீவிர இஸ்ரேலிய ஆதரவாளன் டோண்டு ராகவன்?
அந்தக் காட்சிக்கும் அவனும் எல்லோருடனும் சேர்ந்து கைதட்டினான் என்பதைக் கூறவும் வேண்டுமோ? எகிப்து மன்னனின் படைகளை நெருப்பு சுவர் தடுக்கும் சீனை பார்த்தால் "அமர் அக்பர் ஆண்டனி" படத்தில் நான் மேலே குறிப்பிட்ட பாம்பு வரும் சீனின் இன்ஸ்பிரேஷன் எது என்பதை புரிந்து கொள்வதில் என்ன சிரமம்? ஆனால் இங்கு யாஹ்வே தனது நகைச்சுவை உணர்வையும் காட்டியுள்ளார். இஸ்ரவேலர்கள் பாதிக் கடலைக் கடக்கும்ப்போது வேண்டுமென்றே நெருப்புச் சுவரை விலக்கிக் கொள்ள கடல் மட்டும் அப்படியே பிளந்த நிலையில் நிற்க, அதில் எகிப்து படைகள் உள்ளே செல்ல, எல்லா படைகளும் உள்ளே வந்ததும் கடல் மூடிக் கொள்ள, தனித்திருந்த அரசன் மட்டும் தலையில் கைவைத்துக்கொள்ள என்று சீன் மேலே செல்கிறது.
அடுத்ததாக மாயாஜாலக் கதைகளின் முறை (முக்கியமாக விட்டலாச்சார்யா என்பதை கூறவும் வேண்டுமோ, வேண்டாம், வேண்டாம்). அவற்றை அடுத்தப் பதிவில் பார்ப்போமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
2 hours ago
3 comments:
டோண்டு அய்யா,
ஆமாங்கய்யா.இது போலவே அந்த காலத்துல(சமீபத்துல) வெளிவந்த மாயாபஜார் சினிமாவிலும் ஷோக்கான சீன்கள் வரும்;கிருஷ்ணரும்,கடோத்கஜனும், பல மாய லீலைகளை செய்வதா பிரமாதமா கை தட்டும் படியாக எடுத்திருப்பாங்க.
சினிமாவுல தெய்வச்செயல்களை காண்பிப்பதை விடுங்க.இந்த காலத்துல, நம்ம கழகக் கண்மணிகளின் தலைவர்களைப் பாருங்க.ஓவ்வொரு மூஞ்சியும் விட்டலாச்சார்யா சினிமாவுல வரும் பிசாசு மாறித் தான் இருப்பாங்க.செமத்தியா வில்லத்தனம் எல்லாம் செய்வாங்க.ஆனாக்க "ஏழையில் சிரிப்பில் இறவனைக் காண்போம்","எளியவர்களின் இதயத்தில் இடம் பெற்றவனே,செங்கோலோச்சுபவனே" என்றெல்லாம் எழுதி ஒவ்வொரு கழக மூஞ்சியையும் போட்டு போஸ்டர் ஒட்டி ஃபிலிம் காட்டுவதும் ஒரு வித மாயாஜாலம் தானே.அதுக்கும் கை தட்டும் உடன் பிறப்புக்கள் இருக்கின்றனவே.
பாலா
மாயா பஜார் அடுத்தப் பதிவில் முக்கியப் பங்கு வகிக்கும்.
மற்றப்படி இதெல்லாம் ஜாலியாக மொக்கை போட்டு தமாஷாக இருக்க வேண்டிய பதிவு. தலைவர்களின் முக லட்சணங்களைப் பற்றி எல்லாம் ஏன் பேச வேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சினிமா படத்தில் நடந்த தெய்வ செயலல் நடத்தப் படும் அற்புதத்தை விடுங்க ராகவன் ஜீ.
நம்ம கலைஞைர் அவ்ர்களின் 85 பிற்ந்த நாளை யொட்டி, அவரது துணைவியார் திருமதி தயாளு அம்மையார் உபயத்தில் கோபாலபுரம் கோவிலில் சிறப்பு அபிசேகங்களும்,ஆராதனைகளூம் நடந்ததாக செய்தி வந்ததே. கோவில் அறிவிப்பு பலகையை கூட படம் பிடித்து செய்தி வெளியிட்டிருந்தார்கள் .
மீண்டும் கண்ணதாசன் ஆர்த்த்மூள்ள இந்துமதம் அவர்து நண்பரால் ( please refer வனவாசம்)மீண்டும் புதிய செய்திகளூடன் புதிபிக்கப்பட்டாலும் படலாம்
எல்லாம் அவன் செயல்
அவனின்றி ஓர் அணுவும் அசையாது
சகலமும் பிரம்மம்
கடவுளை நம்பினார் கைவிடப் படார்
நம்பினார் கெடுவதில்லை இது நான்கு
மறை தீர்ப்பு.
Post a Comment