6/13/2008

லக்கியாருக்கு உடனடி பதில்கள்! என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு இன்ஸ்டண்ட் கேள்விகள்!!

சற்று முன்புதான் லக்கியிடமிருந்து ஃபோன் வந்தது. கேள்விகளைக் கேட்கலாமா என கேட்க, கேளுங்கள் என்றேன். அவரிடமிருந்து வந்த கேள்விகள் எனது பதில்களுடன். அவர் என்னைக் கேட்ட கேள்விகள் இப்பதிவில்.

1. சார்! சமீபத்தில் 1950களில் இருந்து தீவிர திரைப்பட ரசிகராக இருக்கிறீர்கள்? ”அந்த மாதிரி பலான படம்” ஏதாவது பார்த்ததுண்டா? பார்த்திருந்தால் அது பற்றிய குறிப்புகள் ப்ளீஸ்...
பலான படங்களைக் காணும் வாய்ப்பு எனக்கு 40 வயதுக்கு மேலேதான் கிடைத்தது. அதற்கு முன்னாலேயே பலான புத்தகங்கள் படித்து விட்டதால், படங்களின் இம்பேக்ட் அதிகம் இல்லை. அம்மாதிரி படங்களின் கதையை ஒரு தபால் ஸ்டேம்புக்கு பின்னால் எழுதி விடலாம். இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு மேல் பார்த்தவுடன் வெறுப்பு வந்து விடும். அம்மாதிரி பார்த்த படங்களுள் நினைவில் இருப்பது Confessions of an American housewife. மகள் வீட்டுக்கு வந்த ஒரு தாயார் தன் மகளும் அவள் கணவனும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனைவி மாற்றும் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிகிறாள். பிறகு மாமியாருக்கும் மாப்பிள்ளைக்கும் லிங்க் ஏற்பட்டு சீரியசாக கதை போகிறது. தன் பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அந்தத் தாயார் வீட்டை விட்டு விலகி வேறு ஊருக்கு சென்று தனது பஜனையைத் தொடருகிறாள்.

2. துக்ளக் பத்திரிகையை சோ ராமசாமி திடீரென்று நிறுத்திவிட்டால் நீங்களும் பதிவு எழுதுவதை நிறுத்தி விடுவீர்களா?
ஏன் நிறுத்த வேண்டும்? டோண்டு ராகவனின் அஜெண்டாவே வேறு. அவன் தமிழ் எழுதுவதே அவனது மொழிபெயர்ப்பு வேலையில் அது அவனுக்கு உதவியாக இருக்கும் என்பதால்தான். இதன் மூலம் பல புது வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றனவே.

3. உங்களுக்கு பிடித்த நாடு இஸ்ரேல் என்று இஸ்ரேல் பிரதமருக்கே தெரியும். (சோவியத் ருஷ்யா தவிர்த்து) பிடிக்காத நாடு எது? ஏன்?
இக்கேள்விக்கு பதில் அளிக்க டோண்டுதான் வரவேண்டுமா என்ன? இஸ்ரேலின் நலனுக்கு எதிராக (இந்தியா தவிர) எந்த நாடு இருந்தாலும் அது அவனுக்கு பிடிக்காத நாடுதான். இந்தியா கண்டிப்பாக இஸ்ரேலின் விரோதி இல்லை. ஐ.டி.பி.எல்.லில் சேர்ந்ததே ஃபிரெஞ்சு துபாஷியாகத்தான். அங்கு அவன் கழித்த ஆண்டுகள் இனிமையானவை எல்லா விஷயத்திலும். அதாவது அல்ஜீரியாவுக்கு போக வேண்டும். அங்கு ஐ.டி.பி.எல்லுக்கு ஒரு ப்ராஜக்ட். போயும் போயும் இஸ்ரேலுக்கு விரோதி நாட்டுக்கு வேலை செய்ய வேண்டியுள்ளதே என்பதுதான் அவன் குமைந்ததுக்கு காரணம். நல்ல வேளையாக அல்ஜீரியா வேலை இல்லை என ஆயிற்று.

4. சுஜாதாவின் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் உலகப் பிரபலம். அதுமாதிரி ஏதாவது சீக்ரெட் வெபன் வைத்திருக்கிறீர்களா? வைத்திருந்தால் அவிழ்த்து விடுங்களேன்.
அடர்ந்த காட்டின் நடுவில் சில ஆட்டிடையர்கள். அவர்களில் ஒருவனே நம்ம கதையின் கதாநாயகன். நல்ல கட்டுமஸ்தான வாலிபன். எல்லாம் இருந்தன பெண்கள் வாடையே இல்லாத இடம் அது. திடீரென அவனுக்கு காம வெறி தலைக்கேற அவன் திகைக்கிறான்.
அப்போது அவன் நண்பன் ஆலோசனை கூறுகிறான். அதாவது ஒரு கொழுத்த பெண் ஆட்டை பிடித்து கொள்வது என்பதே அது. இவனும் அவ்வாறு முயற்சிக்க, அவன் தேர்ந்தெடுத்த ஆடு ஒத்துழைக்க மறுத்து ஓடுகிறது. அதன் பின்னாலேயே அவன் ஓட, காட்டின் நடுவே ஒரு சிறு வெட்டவெளி. அங்கு ஒரு அழகிய பருவப்பெண்ணை நால்வர் சூழ்ந்து கொண்டு கற்பழிக்கும் முயற்சியில் உள்ளனர். நம் ஹீரோ அவர்கள் நால்வரையும் அடித்து உதைத்து துரத்துகிறான். இப்போது அப்பெண்ணுக்கு இவன் மேல் ஆசை. இவனும் நல்ல கட்டுமஸ்தாக இருக்கிறான் அல்லவா? இருப்பினும் பெண்ணல்லவா, ஓப்பனாக கேட்க இயலாதே, நாணிக் கோணிக் கொண்டே கூறுகிறாள், "நீங்கள் என்னை என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன் என்று". ஹீரோவுக்கு ஒரே சந்தோஷம். அந்த கொழுத்த ஆட்டை பிடித்து, அவளிடம், "சற்று நேரத்துக்கு இதன் கொம்புகளை பிடித்து கொள். ரொம்பவும் அசைந்து என்னைப் படுத்துகிறது" என்கிறான்.

சுடர் விளையாட்டு போல இந்த விளையாட்டையும் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டுமென்று லக்கியார் விரும்புவதால் நான் அடுத்த நான்கு கேள்விகளையும் கேட்க வேண்டியிருக்கிறது. கேள்வி கேட்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளாக பதில் பதிவு போட வேண்டுமாம். கேள்விகளுக்கு பதில் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும், சூடாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பதில் சொன்ன பதிவிலேயே இன்னொரு பதிவருக்கு சூடாக நாக்கை பிடுங்கிக் கொள்வதுபோல நான்கு கேள்விகளை கேட்கவேண்டும் என்பது மட்டுமே விதிமுறை. நான் கேட்க இருப்பது என் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவை. அவருக்கு எல்லாம் நாக்கை பிடுங்கிக் கொள்வதுபோல கேள்விகளை விளையாட்டுக்கு கூட கேட்க மனம் வராது. ஆகவே இன்ஸ்டண்ட் கேள்விகள் என்று மாற்றுகிறேன். பாலாவுக்கு நான் கேட்கும் கேள்விகள்:

1. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம், இந்த டோண்டு ராகவன் தான் வலைப்பூவுக்கு வந்ததே உங்களால்தான் என்று கூவிக் கூவி வருவதை நினைத்து உங்கள் ரியேக்‌ஷன்கள் என்ன?

2. ஸ்கூலில் இம்மாதிரி வாத்தியார்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளையாக இருந்திருக்கிறீர்கள் (உதாரணம் டி ராமானுஜம் அவர்கள்). இதனால் மற்றப் பசங்களின் பொறாமை மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்திருக்குமே, இதை எப்படி சமாளித்தீர்கள்?

3. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா இங்கிலாந்து (என்று நினைக்கிறேன்) கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, மேலே ஆடி மேட்சையும் ஜெயித்ததே. இதற்கு முன்னால் இரு முறை அவ்வாறு நடந்ததாகக் கேள்வி. அவற்றின் விவரங்கள் தர இயலுமா?

4. மனைவி/மகள்களின் பிறந்த நாளை மறந்து அசடு வழிந்தது உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

கிரி said...

//சென்று தனது பஜனையைத் தொடருகிறாள். //

நீங்க நிறைய பலான புத்தகம் படித்து இருக்கீங்கன்னு ஒத்துக்குறேன் :-))))))))))))))))

Anonymous said...

//சுஜாதாவின் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக//

somebody pls tell more about this joke.

லக்கிலுக் said...

//பலான படங்களைக் காணும் வாய்ப்பு எனக்கு 40 வயதுக்கு மேலேதான் கிடைத்தது. //

சான்ஸே இல்லை. கலக்கல் :-))))))

வால்பையன் said...

//பலான படங்களைக் காணும் வாய்ப்பு எனக்கு 40 வயதுக்கு மேலேதான் கிடைத்தது.//

டூ லேட்

வால்பையன்

வால்பையன் said...

//அம்மாதிரி படங்களின் கதையை ஒரு தபால் ஸ்டேம்புக்கு பின்னால் எழுதி விடலாம்.//

அப்படி சொல்ல முடியாது, சில படங்கள் தமிழ் படத்தை மிஞ்சும் அளவுக்கு இருக்கும்

வால்பையன்

வால்பையன் said...

//மாமியாருக்கும் மாப்பிள்ளைக்கும் லிங்க் ஏற்பட்டு சீரியசாக கதை போகிறது. //

போன பின்னூட்டத்திற்கு நீங்களே பதில் இங்கே சொல்லி விட்டீர்கள்

வால்பையன்

வால்பையன் said...

//தனது பஜனையைத் தொடருகிறாள். //

அப்பா இரண்டாம் பாகம் வந்துருக்குமே

வால்பையன்

வால்பையன் said...

//ஏன் நிறுத்த வேண்டும்? //

நாங்கெல்லாம் நல்ல இருக்க வேண்டாமா. அதுக்கு தான்

வால்பையன்

வால்பையன் said...

//இக்கேள்விக்கு பதில் அளிக்க டோண்டுதான் வரவேண்டுமா என்ன? //

வேறு யாரு இருக்காங்க? நீங்களே சொல்லிருங்க

வால்பையன்

வால்பையன் said...

//"சற்று நேரத்துக்கு இதன் கொம்புகளை பிடித்து கொள். ரொம்பவும் அசைந்து என்னைப் படுத்துகிறது" //

சிப்பு சிப்பா வருது

வால்பையன் said...

// பதில் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும், சூடாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.//

மத்ததெல்லாம் சரி அதென்ன சூடா?

வால்பையன்

வால்பையன் said...

//என் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவை. அவருக்கு எல்லாம் நாக்கை பிடுங்கிக் கொள்வதுபோல கேள்விகளை விளையாட்டுக்கு கூட கேட்க மனம் வராது. ஆகவே இன்ஸ்டண்ட் கேள்விகள் என்று மாற்றுகிறேன்.//

மண்டையை பிச்சிக்கிற மாதிரி கேள்விக்கு வாய்ப்பில்லையா ?

வால்பையன்

வால்பையன் said...

//சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம், இந்த டோண்டு ராகவன் தான் வலைப்பூவுக்கு வந்ததே உங்களால்தான் என்று கூவிக் கூவி வருவதை நினைத்து உங்கள் ரியேக்‌ஷன்கள் என்ன?//

எல்லாத்துக்கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டியது தான் வேறென்ன

வால்பையன்

வெண்ணை(VENNAI) said...

டோன்ண்டு சார் உண்மையிலேயே நீங்க ரொம்ம்ப நல்லவர் சார் ......அவ்வ்வ்வ்வ்வ்வ்

நல்ல கேள்வியா கேட்டதுக்காக :)

பலா அண்ணன் தப்பிச்சார் !!!!!

Unknown said...

மெக்ஸிகோ சலவைக்காரி joke-i Sujatha sir sollamalle kaalamagivittar. Veru yaravathu solluvirgala????

Bleachingpowder said...

//சற்று நேரத்துக்கு இதன் கொம்புகளை பிடித்து கொள். ரொம்பவும் அசைந்து என்னைப் படுத்துகிறது" என்கிறான்.//


இது ரொம்ம்ம்ப பழைய ஜோக் சார்..என்ன ஒட்டகத்த ஆடா மாத்தீங்க

Anonymous said...

1.தற்சமயநிலவரப் படி தமிழ‌கத்தில் லஞ்சம் லாவண்யம் கொடிகட்டி பறக்கும் துறைகளை வரிசை படுத்தவும்( வருமான அடிப்படையில்))

rto,talauk office,sub register office,pwd,local administration,high ways,taluk supply office,education dept,police dept,etc

2.நேர்மையற்ற தன்மைக்கு நமது மக்களூம் அதிகாரிகளூம் பழகி கொண்டார்கள் போல் உள்ளதே?


3.அரசியல் வாதிகளுக்கு ஏதிராக வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கு போல்

இந்த அதிகாரிகளை வளைக்க ஏதாவது வழிஉண்டா?

4.அழகிரி‍தயாநிதி கூட்டணி ‍மாறன் மக‌ன்களின் வியாபரத்தை ஒரு வழிபண்ணிவிடுவார்கள் போல்ருக்கிறதே?

"இது தான் தெய்வ தண்டனையா/"


முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்.

5.பா.மா.க.தலைவரின் ஆட்டம் ஓவர் போல் உள்ளதே

"‍‍‍........... தன் வாயால் கெடும்"



*** ரமணாஸ்திரம்






.

Anonymous said...

PILLAI ILLATHAVAN VEEDDDIL
OLDMAN THULLI THUlLI ........


N.B :
( DONDU SIR JUST FOR FUN, DON'T THINK OTHERWISE)

Anonymous said...

டோண்டு சார்!!!
எப்படியாவது இந்த விளையாட்டை இதோடு முடிக்கலாம்னு நினைச்சிடீங்களா? இதைவிட “interesting"ஆ பாலாவுக்கு கேள்வியே கேட்க முடியாது போங்க.. அய்யோ அய்யோ!!!!! எல்லாம் அந்த லக்கிலுக்கை சொல்லனும்..

Anonymous said...

1.what will be the fate of anbumanl ramadoss after one week?

2.on what grounds pmk leader dr.ramadoss has decided, to part with dmk in tamil nadu?

3.it seems admk is also not interested to have allaiance with this "kaariyakkaarrar"

4.it is learnt anbumani ramadoss

also become " nalla aruvadai mannaR"

using power in central?

5.pmk leader maruththuvar aiya innumoRu vaikOvaa (vai.Gopalasamy,mdmk) aavaaraa?

பரிசல்காரன் said...

//அவருக்கு எல்லாம் நாக்கை பிடுங்கிக் கொள்வதுபோல கேள்விகளை விளையாட்டுக்கு கூட கேட்க மனம் வராது. //

உங்கள் உணர்வுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!

enRenRum-anbudan.BALA said...

Will give my answers tomorrow, reached home very late today, from office !

dondu(#11168674346665545885) said...

பரவாயில்லை பாலா அவர்களே, அதுதான் 24 மணி நேரம் இருக்கிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ezhil arasu said...

1.சென்னை,மதுரை,திருச்சி,கோயம்பத்தூர்,சேலம்,திருப்பூர்,ஈரோடு மாநகராட்சிகளை போல் நகராட்சி பகுதிகளிலும் ஏன் சிறு கிராமங்களில் கூட காலிமனை விலை, வீட்டு வாடகை இவைகளின் அதீத உய‌ர்வு நடுத்திர மக்களை(lower middle class families - no software engineer sons) பிளாட் பார வாசிகளாய் மாற்றிவிடும் போல் இருக்கிறதே!

2இந்த விபரீத உயர்வுக்கு பாகிஸ்தானின் கள்ள் நோட்டு பணப் புழக்கம் ஒரு காரணம் என்பது உண்மையா?

3.நாடு பிடிக்க‌ மன்ன‌ர் ஆட்சிகால‌த்தில் ந‌ட‌ந்தது போல்,போலி ஆவ‌ன‌ம் த‌யாரித்து பிற‌ர் நில‌ங்களை விற்கும் போக்கு கூடுகிற‌தே?


4.துணை சார்ப‌திவாள‌ர் அதிகாரியின் சொந்த‌ சொத்துக் க‌ளை ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌வ்ர் அவ‌ர‌து அலுவ‌ல‌க‌த்தில் விற்க‌வ‌ந்தாவ‌து அதை த‌டுப்பாரா?(யார் சொத்தை யார் விற்றால் ஏன்ன‌ என‌து இன்ற‌ய‌ வ‌ருமான‌ம் குறைய‌க் கூடாது.ஒரு நாளைக்கு குறைந்த‌து ரூபாய் 500 முத‌ல் 1000 வ‌ரை கல்லாக் க‌ட்டிவிடுவ‌ர்.அதுவும் கூடிக் கொள்ளைய‌டி பின் ப‌ங்கு பிரி தத்துவ‌ம் வேறு.


5.ஆடாத‌ ஆட்ட‌ம் போடும் இந்த ஊழல் அதிகாரிக‌ளுக்கு ,ஆடி அட்ங்கும் வாழ்க்கயடா ‍ஆற‌டி ம‌ண்தான் சொந்த‌மெனும் க‌விய‌ரிசின் வ‌ரிக‌ள் புரியுமா?






enRenRum-anbudan.BALA said...

Dondu Sir,

My Answers for your Questions are here:

http://balaji_ammu.blogspot.com/2008/06/4_14.html

dondu(#11168674346665545885) said...

கலக்கல் பதில்கள் பாலா அவர்களே. நீங்கள் சொல்வதும் உண்மைதான், மகள்களின் பிறந்த நாளை மறக்க அவர்கள் விடமாட்டார்கள். மற்றப்படி உங்கள் மனைவி விஷயத்தில் அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மயிரிழையில் தப்பினீர்கள்.

சங்கர் என்ன பதில் சொல்கிறார் என்பதை பார்க்கும் ஆவலில் உள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சற்று நேரத்துக்கு இதன் கொம்புகளை பிடித்து கொள். ரொம்பவும் அசைந்து என்னைப் படுத்துகிறது" என்கிறான்.//



It is learnt that in japan some robots have been developed to behave a sensational sex partner.

புதுகை.அப்துல்லா said...

//பலான படங்களை காணும் வாய்ப்பு எனக்கு 40 வயதுக்கு மேல் தான் கிடைத்தது//

எல்லாம் சரி!இப்பவும் தொடருதா?

Anonymous said...

1.தசாவாதாரம் பார்த்தீர்களா? படம் எப்படி?

2.சுருக்கமான் தங்கள் விமர்சன்ம்?

3.நாத்தீக கருத்து ஒன்றும் இருப்பதா தெரியவில்லை ? பின் ஏன் அந்த களோபரம்?

4.நீதிமன்றச் செலவும் மட்டும் 5 கோடியாம்,தாங்குமா?

5.நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சிவிட்டாரா?


6.10 ல் எதில் க‌ம்ல் சூப்ப‌ர்?

7.உல‌க்நாய‌க‌ன் ப‌ட‌ம் த‌ம்ழ் திரை யுல‌கை உல‌க‌ த‌ர‌த்துக்கு கொண்டு செல்கிற‌து
த‌ங்க‌ள் க‌ருத்து?


8.வ‌ழக்க‌ம் போல் ஆடைக் குறைப்பு,ப‌ண்பாடு மிஞ்சும் ஆட‌ல்க‌ள் தூள் கிள‌ப்புதா?


9.இந்திய‌ன்,விருமான்டி,வ‌ருசையில் க‌ம‌லின் திரை வாழ்வில் ஒரு மைல் க‌ல்லா?


10.அடுத்து 21 ம் நூற்றாண்டின் சிவாஜி க‌ம்லின் .....மர்ம‌ யோகி க‌ம‌லை இன்னுமொரு " M .G . R 2 "ஆக‌ ஆக்குமா?

dondu(#11168674346665545885) said...

நான் ஏற்கனவே கூறியபடி பலான படங்கள் ஒன்றிட்ரண்டு பார்த்தவுடன் அலுத்து விடும். இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

///நான் ஏற்கனவே கூறியபடி பலான படங்கள் ஒன்றிட்ரண்டு பார்த்தவுடன் அலுத்து விடும். இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்///

if dondu sir see also, nothing will happen...no worry :) :) hehehe

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது