மதியம் ஒரு சிறுதூக்கம் போட்டுவிட்டு வந்தால் டி.வி.உள்ளூர் கேபிள் நெட்வொர்க்கில் ஒரு விஜய் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு காட்சி. விஜயின் மனக்கண்களுக்கு திடீர் என ஒரு காட்சி. அவர் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரரின் பெண் மாடியிலிருந்து கீழே விழுவது அவருக்கு தெரிகிறது. அப்பெண்ணை அவரால் காப்பாற்ற இயலவில்லை. ஆனால் தன் தந்தையும் அவர் ஊர்க்காரர்களும் போகும் பஸ் லெவல் கிராசிங்கில் மாட்டிக் கொள்ளும் காட்சி முன்கூட்டியே தெரிவது அவருக்கு மட்டும் தெரிவதால் அவரால் அப்பாவைக் காப்பாற்ற இயலுகிறது.
எனக்கும் ஏதோ பொறி தட்டியது. இம்மாதிரி ஒருபடம் வந்தது பற்றி படித்த ஞாபகம் வந்தது. சரி அம்மாதிரி நேரங்களில் நான் ரொம்ப கஷ்டப்படுவது இல்லை. காரணம், நம்ப லக்கிலுக் இருக்கும் தைரியம்தான். உடனே அவருக்கு ஃபோன் போட்டு இந்த கதை முடிச்சை சொல்லிக் கேட்டவுடனேயே அவர் படத்தின் பெயர் "அழகிய தமிழ்மகன்" எனக் கூறிவிட்டார்.
இண்டெர்வல்லுக்கு பிறகு சில சொதப்பல் காட்சிகள் வந்தன. நானும் சேனலை மாற்றிவிட்டு இப்படத்தைப் பற்றி லக்கிலுக் என்ன எழுதியுள்ளார் எனப் பார்க்க அவர் வலைப்பூவைத் திறந்து "அழகிய தமிழ்மகன்" என தேடுபெட்டியில் தட்டச்சு செய்து சர்ச் போட்டால் வந்தது "டோண்டு VS போலி டோண்டு கதைதான் அழகிய தமிழ்மகன்! :-(" என்னும் இப்பதிவு.
இதுதான் நிஜம். அதாவது இம்மாதிரி ஒரு கதையை எழுதினால் யாரும் நம்ப மாட்டார்கள். நானேகூட நம்ப மாட்டேன். ஆனால் நடந்ததென்னவோ அதுதான். லக்கிலுக்கின் இப்பதிவுக்கு பின்னூட்டமிட்டுவிட்டு மறுபடியும் ஃபோன் போட்டேன். கதையின் முடிவைக் கேட்டால் மனிதர் படத்தைப் பார்க்குமாறு அறிவுரை கூறினார். பார்த்தேன். பரவாயில்லை நன்றாகவே இருந்தது. முடிவு நம்பும்படியாக இல்லையெனினும் கவித்துவமாக இருந்தது. சாமியாராக நடிக்க முயன்றவன் கடைசியில் அவனையறியாது நல்லவனாக மாறுவது டால்ஸ்டாயின் கதைகளில் ஒன்று.
முதலில் இது எந்த எந்த படங்களின் காப்பி என்பதை பார்த்துவிடலாம். முதலில் நினைவுக்கு சமீபத்தில் அறுபதுகளில் வெளிவந்த எம்.ஜீ.ஆர். படம் "ஆசைமுகம்" என்ன, அதில் ராம்தாஸ் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் எம்.ஜீ.ஆர். போல முகத்தை மாற்றிக் கொள்வார். அதிலும் கதாநாயகன் தான் தினசரி செய்யும் செயல்களை டைரியில் குறித்துவைக்கும் பழக்கமுடையவர். இப்படத்தில் விஜயும் அவ்வாறே செய்கிறார்.
ஆங்கிலப்படம் "Eyes of Laura Mars" படத்திலும் இதே கதைமுடிச்சுதான், அதாவது நடக்கப்போகும் விஷயங்கள் முன்னாலேயே மனக்கண்கள் முன்னால் தெரிவது.
ஹிந்திப்படம் "Bhol Radha Bol" என்னும் ரிஷிகப்பூர் நடித்த படத்தின் கதையிலோ ஆள்மாறாட்ட முடிச்சு. அங்கும் ஒரு போலி ரிஷிகப்பூர். அப்படத்தில் வரும் இப்பாட்டோ தளபதி படத்தின் "ராக்கம்மா கையைத் தட்டு" மெட்டை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது. ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.
இப்பதிவின் நீதி யாது? யாரும் டைரி எழுதாதீங்கப்ப்பூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
5 hours ago
5 comments:
சனிக்கிழமை ராத்திரிதான் இணையத்துல இந்த படத்த பார்கலாம்னு இருந்தேன், அப்போனு பார்த்து ஒரு நண்பர் போன் பண்ணி ஒரு அரை மணிநேரம் பேசுனாரு. அவரு புண்ணியத்துல எனக்கு தூக்கம் வந்து போய் படுத்துட்டேன். அந்த நண்பர கூப்பிட்டு ஒரு ட்ரீட் குடுத்துரணும் சார். எவ்ளோ பெரிய இம்சையில இருந்து என்னைய காப்பாத்தியிருக்காருன்னு உங்க பதிவையும், லக்கி அண்ணா பதிவையும் படிச்சதுக்கு அப்றம்தான் புரியுது.
/
இப்பதிவின் நீதி யாது? யாரும் டைரி எழுதாதீங்கப்ப்பூ.
/
ஜூப்பரு!
எனக்குத்தான் எழுதவே தெரியாதே! நான் எப்படி டையரி எழுதமுடியும்? ஒவ்வொரு வருடமும் ஒரு புது டையரி வாங்குவேன். என் பெயரை மட்டும் எழுதி அப்படியே வைத்துக்கொள்வேன். பதிவு நன்றாக உள்ளது.
ஏங்க இப்பல்லாம் உங்க பதிவுல மொக்கை போட்டு பின்னூட்டம் வர்ரதே இல்லை ?
அழகிய தமிழ மனம் படம் விஜய்யின் வழக்கமான மசாலா லாஜிக் படம் தான்.. என்ன படம் கொஞ்சம் கடி.
தசாவாதரம் போன்ற உலக மகா அபத்த படங்களை உலக தரம் வாய்ந்த படம் என்று வெளியே சொல்லி கொண்டு மனதில் திட்டி கொள்வதை விட அழகிய தமிழ் மகன் எவ்வளவோ மேல்.
Post a Comment