வஜ்ரா:
1. தி.மு.க வை தோற்றுவித்த அண்ணா காலத்திலிருந்து இன்று வரை எத்தனை பெண்கள் அந்தக் கட்சியிலிருந்து மந்திரி பதவி வகித்திருக்கிறார்கள்? (சொந்தக்காரர்கள், பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள் எல்லாம் சேர்த்து ஒரு கணக்கு சொல்லவும்).
பதில்: என் நினைவுக்கு வருபவர்கள் சத்தியவாணி முத்து, சுப்புலட்சுமி ஜெகதீசன், கீதா ஜீவன், பூங்கோதை போன்றவ்ர்கள் மட்டுமே. மற்றவர்களை பற்றி பின்னூட்டங்களில் பதிவர்கள் கூறலாம். அவர்களில் சத்தியவாணி முத்து அவர்கள் மட்டும் தனது சொந்த தகுதியிலேயே பதவிக்கு வந்தவர். மற்ற பேர் வாரிசு முறையில் வந்தவர்கள் என ஞாபகம்.
2. நானாவதி கமிஷன் ரிப்போர்ட் பற்றி?
பதில்: கோத்ரா விஷயம்தானே? லாலு அவர்கள் பீகார் தேர்தலுக்காக சம்பவம் நடந்த மூன்றாண்டுகள் கழித்து ஏற்பாடு செய்த கமிஷன் பிரயாணிகளே தங்களுக்கு தாங்களே தீ வைத்து கொண்டார்கள் என்ற ரேஞ்சுக்கு உளறியதை அது உளறல் என எடுத்து காட்டியுள்ளது நானாவதி கமிஷன். இங்கு பயணிகள் மட்டுமின்றி, உதவி ஸ்டேஷன் மாஸ்டர், ஸ்டேஷன் சூப்பரிண்டெண்டெண்ட், ரயில்வே பாதுகாப்பு போலீஸார் ஆகியோர் சதி நடந்ததை நானாவதி கமிஷனிடம் மட்டும் கூறவில்லை. சம்பவம் நடந்த உடனேயே கலெக்டரிடமும் கூறியுள்ளனர். அதாவது எல்லோரும் கலந்து பேசி பொய்யுரைத்தார்கள் எனக் கூற இயலாது என்று நானாவதி கமிஷன் கூறியுள்ளது. மேலே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
3. 64000 $ ஐ விட அதிக பணம் வேண்டாமா? மில்லியன் டாலர் கேள்வி என்பதுதானே புழக்கத்தில் உள்ள சொற்றொடர்? (அது என்ன "அதை எப்படி நிச்சயமாக தெரிந்து கொள்வது என்பதுதான் 64000 டாலருக்கான கேள்வி" என்று நீங்கள் கூறினீர்கள்).
பதில்: 64000 டாலர்கள் முதலில் கொடுத்தார்கள். ஐம்பதுகளில் இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் பிரபலம். இப்போது கோடீஸ்வரன் நிகழ்ச்சி போல இங்கும் கேள்விகள் வரிசையாகக் கேட்கப்படும். பரிசுத் தொகையும் அதிகரித்து கொண்டே வரும். கடைசி கேள்விக்கான தொகை 64000 டாலர்கள்.
Spider:
1. பல ஆண்டுகள் அரசு பணியில் இருந்துள்ளீர்கள், லஞ்சம் வாங்கிய அனுபவம் உண்டா..இல்லை எனில் லஞ்சம் மறுத்த அனுபவம் உண்டா?
பதில்: கடவுள் புண்ணியத்தில் அதை செய்யாதிருக்கும் மனவுறுதி இருந்தது. பணக்கஷ்டம் இல்லாததால் அதைச் செய்ய தூண்டுதலும் இல்லை. ஆகவே அந்த ஆஃபர்களை மறுக்க முடிந்தது.
2. லக்கிலுக் என்ற பதிவர் தன் பதிவில் பின்னோட்டம் இடுவபர்களை கழிந்து விட்டு செல்கிறார்கள் என்று சொல்கிறார், இது உங்கள் பார்வையில் சரியா தவறா?
பதில்: பதிலை கூறியது அவர். அவர் பார்வையில் அவருக்கு அது சரியாகவே பட்டுள்ளது. அதைப் பற்றி கூற நான் யார்?
3. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆறு வித்தியாசங்கள்?
பதில்: ஜனநாயக பாரம்பரியம், பத்திரிகை சுதந்திரம், பரவலான பொருளாதார முன்னேற்றங்கள், அதிகார பகிர்தலில் உள்ள சரி செய்தல்-சமன்பாட்டுடன் இருத்தல், வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றுதல், பழைய சரித்திரங்களை அவை சங்கடம் விளைவித்தாலும் அவற்றை திரிக்காமல் இருத்தல் ஆகிய விஷயங்களில் அமெரிக்காவின் கொடிதான் உயர்ந்து நிற்கிறது.
4. தற்போதைய குமுதம் விகடன் இதில் எது பெஸ்ட்?
பதில்: கேள்வியே தப்பு. இரண்டு விஷயங்களை ஒப்பிடும்போது எது பெட்டர் என்றுதான் கேட்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட விஷயங்களை ஒப்பிடும்போதுதான் பெஸ்டே வருகிறது. இப்போது கேள்விக்கு வருகிறேன். அட்டையை பிய்த்து விட்டால் பொருளடக்கம் விஷயத்தில் இரு பத்திரிகைகளுமே ஒன்று போலவே தோர்றம் அளிக்கின்றன. இதில் எது பெட்டர்? இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
5. சன் டிவி அழகரி சண்டையில் தங்கள் கருத்து என்ன?
பதில்: பணம் அளவுக்கு மீறி புழங்கும் குடும்பங்களில் இப்படித்தான் நடக்கும். எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி?
ரமணா:
1. அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை வைத்து ,பங்கு வர்த்தக சூதாடிகளை காப்பாற்ற அதிபர் புஸ் அவர்களின் நடவடிக்கை சரியா?
பதில்: சரியில்லைதான். இம்மாதிரியெல்லாம் செய்தால் பிறகு யாருமே தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்று கொள்ள மாட்டார்கள். அரசு வந்து காப்பாற்ற வேண்டும் என எதிர்ப்பார்க்க ஆரம்பிப்பார்கள்.
2. ஊரான் நெய்யே என் பொண்டாட்டி கையே என்பது இதுதானா?
பதில்: ஆம்.
3. சட்டத்தை மீறுவது பின் அதையே சட்டமாக்குவது இது தகுமா?
பதில்: சரியே இல்லை.
4.இப்படி இருக்கும் போது நமது பாரத நிதி அமைச்சர் மத்திய/மாநில/தனியார் தொழிலாளர்களின் ஆண்டு வைப்பு நிதியினை இந்த சூதாட்டத்திற்கு ஆட்படுத்துவது பலன் தருமா?
பதில்: கண்டிப்பாக அவ்வாறு செய்யக் கூடாது. இதில் அமெரிக்க உதாரணத்தை எடுக்கலாகாது.
5. இங்கும் (இந்தியாவில்) நிலம்/வீட்டின் விலை கடந்த 3 ஆண்டுகளில் செயற்கையாக 300 % வரை உயர்ந்துள்ளதே.இது நல்லதற்கா?
பதில்: அவரவர் கண்ணோட்டத்தில் அது மாறுபட்டு நிற்கும் என்பதுதான் உண்மை. அதாவது நீங்கள் வீட்டை வாங்க விரும்புகிறீர்களா அல்லது விற்க விரும்புகிறீர்களா என்பதை பார்த்துத்தான் பதிலளிக்க இயலும். தேவை குறைந்தால் விலை தானாகவே குறையும்.
6. தனியார்மயம்,தாராளமயம்,உலகயமயம் முழுத் தோல்வியை நோக்கி செல்வதாக இடதுகளின் கூற்று உண்மையாய் விடுமா?
பதில்: சந்தை பொருளாதாரத்தை சுதந்திரமாக விடாது அரசு நடுவில் தலையிட்டால் பிரச்சினை இன்னும் மோசமாகும். எது எப்படியாயினும் இடதுகளின் கோட்பாடு திவாலாகி பல ஆண்டுகளாகி விட்டன. சீனாவிலோ ரஷ்யாவிலோ கூட அவை திரும்ப வரும் வாய்ப்பில்லை.
7. எங்கே என்ன தப்பு நடந்தது விளக்கவும்?
பதில்: சுதந்திரப் பொருளாதாரத்தை வலியுறுத்திய அமெரிக்கா முக்கியமான விஷயங்களை மறந்ததே பிரச்சினைக்கு காரணம். சேமிப்புக்கு அடியோடு மங்களம் பாடி விட்டார்கள். அது இன்னொரு முக்கியக் காரணம். எதைக்கூற, எதை விட?
8. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி தீருமா?
பதில்: கண்டிப்பாக தீரும், பேனிக் ரியேக்ஷன் காட்டாது இருந்தால். ஆனால் அதைத்தான் செய்ய முனைந்துள்ளது அமெரிக்க அரசு என்பது கவலையளிக்கும் விஷயம்.
9. இந்தியாவை அது பாதிக்குமா?
பதில்: கண்டிப்பாக பாதிக்கும் என்பதுதான் கசப்பான உண்மை. அதை எப்படி சரி செய்வது என்பதற்குத்தான் தற்சமயம் முன்னுரிமை.
10. உங்கள் நிலையில் மாற்றம் உண்டா?
பதில்: தனியார் பொருளாதாரத்தை ஆதரிக்கும் எனது நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இப்போது பொருளாதாரம் மிகவும் வளர்ந்துள்ள நிலையில் தோல்விகளுக்கெல்லாம் முட்டுக்கொடுக்க அரசாலும் முடியாது. ஆகவே தனியார் முயற்சிகளால்தான் பொருளாதாரம் மீண்டும் முன்னேற வேண்டும்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
16 hours ago
14 comments:
//பதில்: என் நினைவுக்கு வருபவர்கள் சத்தியவாணி முத்து, சுப்புலட்சுமி ஜெகதீசன், கீதா ஜீவன், பூங்கோதை போன்றவ்ர்கள் மட்டுமே. மற்றவர்களை பற்றி பின்னூட்டங்களில் பதிவர்கள் //
வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி
இன்றைய அமைச்சர் தமிழரசி. Minister for Adi Dravidar Welfare
தற்போதும் அமைச்சராக உள்ள தமிழரசி,முந்தைய திமுக மந்திரி சபையில் ஜெனிஃப்ர் சந்திரன்
//எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி?//
கேள்விக்கு கேள்வி கேட்கும் மிகப்பெரிய (திறமையான ) அரசியல்வாதி ரேஞ்சுக்கு ஆகி விட்டீர்கள் !!!!!!
பாராட்டுக்கள் !
//சன் டிவி அழகரி சண்டையில் தங்கள் கருத்து என்ன?
பதில்: பணம் அளவுக்கு மீறி புழங்கும் குடும்பங்களில் இப்படித்தான் நடக்கும். எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி?//
டோண்டு அய்யா,
உங்கள் பதில் தவறானது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.இரண்டுமே எரிகிற கேவலமான கொள்ளிகள் தான் என்றாலும்,மதுரை கொள்ளி கண்ணகி(?) போல் கோபம் கொண்டு அநியாயத்துக்கு மதுரையை எரித்து உயிர் பலி கண்ட கீழ்த்தரமான,மிகவும் கேவலமான கொள்ளி என்பது தான் நிதர்சனமான உண்மை.அதை எப்படி மறந்தீர்கள்?சன் கொள்ளி, கொள்ளை அடித்த கொள்ளி மட்டுமே.உயிர்க் கொல்லி கொள்ளி அல்லவே.இது தான் நாட்டாமை தீர்ப்பாக இருக்க முடியும்.தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் அய்யா.
பாலா
ஆக மொத்தம் ஒரு 10-15 பெண்கள் தான் நல்ல நிலையில் இருக்கிறார்கள் தி.க வில். இவர்கள் தான் பெண் விடுதலைக்காகப் போராடுபவர்களா.... நல்ல கூத்து.
அமைச்சர் சற்குண பாண்டியன்
//அமைச்சர் சற்குண பாண்டியன்//
அரவிந்தன் அய்யா,
அடப் பாவி,அப்படிப் பாத்தா தி மு க வில கனிமொழியையும்,அஞ்சா நெஞ்சன் அழகிரியையும் தவிர்த்துப் பாத்தா அனைவருமே பெண்கள் தானே.
பாலா
Market economy cannot function properly without sufficient govt. oversight. Check and balances are needed in market economy.
Read my blog on libor rates. Capitalism cannot survivie without good restrictions
Just like communism cannot survive because of human faults unrestrained market economy cannot survive because of human greed, especially in areas where the entry barriers is enormous just like financial institutions.
Market economy could cleanse itslef out of this mess without govt. intervention but the cost would be the collapse of the whole world economy.
There is no link to saving rate of people and this collapse , its just pure greed .The corporations were giving away loans to people with no repaying capacity.
Thanks to the govt. bailout otherwise the whole world economy would have collapsed.
நானாவதி ரிப்போர்ட் பொதுவில் இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் அதைப் படித்து அதில் ஓட்டைகளைச் சுட்டி, தோலுரித்து அதில் உள்ள மதச்சார்பு நிலையைக் காட்டலாம் [சுட்டி]
உண்மைக்கும், ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் போராடும் டீஸ்டா மற்றும் அவரது கணவர் ஜாவெத் ஜோடி சுப்ரீம் கோர்ட்டில் இந்த ரிப்போர்ட்டை தடை செய்ய வேண்டும் என்று கேஸ் போட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Dear Dondu Sir,
I would like to wish Mr.Cho through your blog
A Very Happy Birthday, his 74th on this 5th of October! I Pray the Lord Ranganathar to give him sound health and be on his side to continue his great works!
மாவோயிஸத்தீவிரவாதி சபயசாச்சி பந்தா ஒரிஸ்ஸாவில் கிருத்தவத்திற்கு மதம் மாற்றுதலைத் தடுக்கும் விதத்தில் செயல்பட்டதால் சுவாமி லக்ஷ்மனாந்த் சரஸ்வதியை கொன்றதாகவும், ஒரிஸ்ஸாவில் மாவோயிசத்தீவிரவாதத்திற்கு அடிப்படை உதவி செய்வது கிருத்துவர்களே என்றும் கூறியுள்ளானே. இந்துக்கள் தான் மதக்கலவரத்திற்குக் காரணம் என்று சொல்லும் மதச்சார்ப்பற்ற இடது சாரிகள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்கள்?
[சுட்டி]
அன்புள்ள டோண்டு ஸார்,
'நற்றமிழ்' என்றால் என்ன?
தேவ்
5 ஆண்டுகள் முன் தமிழகம் கேரளத்திற்கு மின்சாரம் விற்றார்களாமே ?
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் மின்வாரியம் செய்ய என்ன தான் காரணம் ?
மின் வாரியம் தன் பணியைச் சரியாகச் செய்யாததால் மின்துறை ஊளியர்கள் அமைச்சர் முதல் பியூன் வரை அனைவருக்கும் ஒரு மாத சம்பளம் கட் செய்தால் என்ன ?
Post a Comment